• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வண்ண மலரே (அத்தியாயம் 13)

Upparu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Apr 5, 2022
225
321
63
Hambantota, srilanka
மதிய நேரம் பழனிக்கு அழைப்பு விடுத்து அவருடன் உரையாடிக் கொண்டிருந்தாள் கௌதமி.

அவளின் கண்கள் காரணமே இன்றி அடிக்கடி கலங்கிக் கொண்டிருப்பதை, சோபாவில் கால் மடக்கி அமர்ந்து ஏதோவொரு ஃபைலைப் பார்த்துக் கொண்டிருந்த விஜய்யும் கவனித்துக் கொண்டு தான் இருந்தான். கண்கள் கலங்கும் போது, கூடவே அவளின் மூக்கு நுனியும், காதோரங்களும் குளிரில் சிவந்து போவதை போல் சிவப்பேறுவது அவனுக்கு ரசனையை கொடுத்தது.

மூக்கை உறிஞ்சியபடி, "ஐ மிஸ் யூ பப்பு.." என்றவளை ஆறுதல் படுத்துவோமா என சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே அழைப்பை துண்டித்து விட்டு புறங்கைகளால் கண்களை துடைத்து விட்டபடி அவனருகே வந்து தொப்பென அமர்ந்து கொண்டாள்.

கிறுக்கிக் கொண்டிருந்த ஃபைலைத் தூக்கி ஒரு ஓரமாக வைத்து விட்டு, "சாப்பிடலாம்" என அவளை உணவு மேஜைக்கு அழைத்துச் சென்றான்.

"பப்பு என்னை மிஸ் பண்ணவே இல்லையாம்.." என்று கூறும் போதே அழுதாள். அவளை என்ன சொல்லி ஆறுதல் படுத்துவதென்று புரியாமல், "உன்னைக் கலாய்க்க சொல்லி இருப்பாங்க?" என்றான். அவரவர்களின் பிரச்சனைகளைக் கூறி தன் முன் கண்ணீர் சொறியும் மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க முயற்சித்து இருக்கிறானே தவிர, அவர்களுக்கு ஆறுதல் கூறிய அனுபவமில்லை அவனுக்கு. கூட நன்றாய் தானே இருக்கிறது என நினைத்துக் கொண்டான்.

அவன் கூறியதைக் கேட்டதும் ஆமென்று தலை அசைத்தவள், "எனக்கு தெரியும், பப்பு என்னை ரொம்ப மிஸ் பண்ணுறாருனு. ஆனா அவர் எப்படி மிஸ் பண்ணவே இல்லைனு என்கிட்டே பொய் சொல்லலாம். அப்புறம் நான் கவலைப்படுவேன்னு அவருக்கே தெரியும் இல்லையா?" என்று அவனிடமே கேட்டான். பதில் சொல்லத் தெரியாமல் விழித்தவனுக்கு, அவள் ஒரு வளர்ந்த குழந்தை எனப் புரிந்தது.

சாப்பிடாமல் உணவுத் தட்டில் கோலம் வரைந்தபடி புலம்பிக் கொண்டிருந்தவளை பரிதாபத்துடன் ஏறிட்டவன், "சரி விடு. நான் உன் பப்புவுக்கு கால் பண்ணி, நீங்க எப்படி இப்டி சொல்லலாம்னு கேட்கறேன்மா.." என்றான். உன் நண்பனிடம் ஏன் அடித்தாய் என நான் கேட்கிறேன் என்று கூறி, அழும் குழந்தையை தேற்றும் தாயின் மனநிலையில் இருந்தான் அவன்.

கண்களை சிமிட்டி சிமிட்டி அவனைப் பார்த்தவள், "நிஜமாவே தான் சொல்லுறீங்களா?" என்று யோசனையுடன் கேட்டாள்.

அவன் வாய் திறந்து பதில் கூறும் முன்பே, "ஆனா வேணாம்ங்க. பப்பு ரொம்ப பாவம். நான் கவலைப்படக் கூடாதுன்னு பொய் சொல்லி இருப்பாரு. எனக்காவது பக்கத்துல நீங்க இருக்கீங்க இல்லையா? ஆனா அவருக்கு என்னைத் தவிர வேற யாருமே இல்லை. தனியா ரொம்ப பீல் பண்ணுவாரு.." என்றவள் உணவை கொஞ்சமாக வாயில் திணித்துக் கொண்டு, "எனக்கு சமைக்கக் கூட தெரியல" என சோகமாகக் கூறினாள்.

"ஏன் தெரியல?!" உணவை பிசைந்தபடி கேட்டான் விஜய். அவளின் குழந்தைத் தனமான முக பாவனைகளை ரசிப்பதற்கென்றே எதையாவது பேசிக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றியது அவனுக்கு. அவளின் உணவு நிரம்பிய உப்பிய கன்னங்கள் அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது.

"என் பப்பு நான் இன்னுமே குழந்தைனு சொல்லி என்னை எதையுமே பண்ண விட்டதில்லைங்க.. உனக்கு வேணுமானதை கேளு. நான் பண்ணிக் கொடுத்துடறேன்னு சொல்லுவாரு. அவரே சமைச்சு அவரே தான் ஊட்டி விடுவாரு.. என் ட்ரெஸ்ஸை கூட அவரே ஐயன் பண்ணி கொடுப்பாரு. சமையல் பண்ணவானு கேட்டா இந்த வீட்டுல உன்னை தவிர நான் மட்டும் தான் இருக்கேன்னு சொல்லி சிரிப்பாரு.."

நீ சமைப்பதை நான்தான் சுவைத்துப் பார்க்க வேண்டும். அதனால் வேண்டாம் எனக் கூறி இருக்கிறார் எனப் புரிந்தததும் சட்டென்று சிரித்தான் விஜய்.

முட்டைக் கண்களை உருட்டி உருட்டி அவனைப் பார்த்தவள், "நீங்க சாப்பிடவே தேவையில்லை. நான் கார்த்திக்கு கொடுப்பேன்னு சொல்லி கஷ்டபட்டு எதையாவது பண்ணி கார்த்தி கைல கொடுப்பேன். என்னால இந்த கண்ராவியை சாப்பிட முடியாது. கலியாணம் பண்ணதுக்கு அப்பறம் எங்க அண்ணாவுக்கு கொடுன்னு.." மேலே கூறாமல் வேகமாக வாயில் கை வைத்து மூடிக் கொண்டு 'விட்டால் நீயே உளறி இருப்பாய்' என தன்னை திட்டிக் கொண்டாள்.

விஜய் நெற்றி சுருங்க அவளைப் பார்த்தான். அவள் ஏதோவொன்றை கூற வந்து விட்டு பாதியிலே நிறுத்தி விட்டதும் அவனுக்கு ஏதோ போலாகியது. அவள் கூறியதை மீண்டும் யாபகமூட்டிப் பார்த்தான்.

குற்றவாளியையோ, எதிர் தரப்பினரையோ விசாரணை செய்யும் போது அவனிடம் இருக்கும் நிதானம், இவளிடம் பேசும் போது மட்டும் இருக்கவில்லை. ரசனை.. ரசனை.. ரசனை.. ரசனையுடன் அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு அவள் கூற வந்து நிறுத்தியது எந்த இடத்தில் என்பது புரியவே இல்லை.

திருதிருவென விழித்து, வாயிலிருந்த சாப்பாட்டைக் கூட விழுங்காமல் நின்றிருந்தவளுக்கு திடீரென்று விக்க ஆரம்பித்து விட்டது.

"ஹேய் பார்த்தும்மா.." தன்னையறியாமலே பதறி குவளையில் தண்ணீர் நிரப்பி அவளிடம் நீட்டினான் விஜய்.

அதை மடமடவென அருந்தி முடித்தவள், "அர்ஜன்ட்! இதோ வந்திடறேன்.." என்று கூறி விட்டு அங்கிருந்து ஓடி விட, விடயத்தை அவ்வளவு பெரிதாகக் கண்டு கொள்ளாமல் அத்துடனே விட்டு விட்டான் விஜய். ஆனால் உள்ளுக்குள் ஏதோவொன்று பிராண்டியது.

மாலை மங்கி மெது மெதுவாக இருட்டு அடர்ந்து கொண்டிருந்த இரவு நேரமது!

தூங்கா நகரமெனப் பெயர் பெற்ற மதுரை மாநகரில், தெருக்களில் மக்கள் கூட்டம் ஜாம்மென நிரம்பி வழிந்தது. தெரு விளக்குகள் இரவு நெருங்கி விட்ட தகவலை மக்களுக்கு தெரிவிக்காமல் வெளிச்சத்தை வாரி இறைத்துக் கொண்டிருந்தன.

"இந்த நேரத்துல கூட வீட்டுல வேலை எல்லாம் ரோடுல சுத்திட்டு என்னத்த பண்ணி தொலைக்கிறாங்களோ.." டிராபிக்கில் சிக்கிக் கொண்ட கடுப்பில் முனகினாள் வர்ஷினி.

'நீ எதைப் பண்ணித் தொலைக்கிறியோ அதைத் தான் அவங்களும் பண்ணி தொலைக்கிறாங்களா இருக்கும்..' நேரம் காலம் தெரியாமல் கடுப்பை ஏற்றி விட்ட மனசாட்சியை இரண்டு தட்டு தட்டி அடக்கியவள், தான் செலுத்தி வந்திருந்த தந்தையின் ராயல் என்ஃபீல்டை ஒரு ஓரமாக நிறுத்தினாள்.

அது முருகர் கோவில் தெருவோரம். கோவில் பூட்டியிருந்த படியால் தான் தெருவின் ஓரத்திலாவது பைக்கை நிறுத்த ஒரு சிறிய இடம் கிடைத்திருக்கிறது அவளுக்கு!

இதே கோவில் திறந்திருக்கும் காலை நேரங்கள் என்றால் திருவிழா போல் மக்கள் முட்டி மோதிக் கொண்டிருப்பார்கள் என நினைத்துக் கொண்டு பார்வையை சுழற்றியவள், மூடியிருந்த கோவிலை இடுப்பில் கையூன்றி பார்த்திருந்த ஒருவனைக் கண்டாள். அவன் திரும்பி இருந்த படியால் அவனின் முதுகுப் புறம் மட்டும் தான் தெரிந்தது அவளுக்கு.

ஆனாலும் அது யாராக இருக்கும் என அவளால் அனுமானிக்க முடிந்தது. அவன் நின்றிருந்த தோற்றமும், அவனின் பின்தலை முடியும் அவளின் அனுமானத்தை உறுதிப் படுத்தி விடவே, இதழ் வளைத்து புன்னகைத்துக் கொணண்டு அவனை நோக்கி நடந்தாள்.

"ஹேய் ஹலோ.." என அவனைப் பின்னிருந்து அழைத்துப் பார்த்தவள் அவனிடமிருந்து பதில் வராமல் போனதும், "யாரையாவது இழுத்துட்டு வந்து கட்டாயத் தாலி கட்டலாம்னு முடிவு பண்றியோ.. அதான் இப்டி நின்னு மூடி இருக்கிற கோவிலையே உத்து உத்து பார்த்துட்டு இருக்க.." அவனின் காதில் விழும்படியாக சற்று சத்தமாகவே கேட்டாள்.

இவளின் குரலில் பற்களை அரைத்தபடி திரும்பியவன் அங்கு நின்றிருந்த வர்ஷினியை கண்டு, "ஐயோ.." என்று அலறினான்.

அவனின் அலறலில் அதிர்ந்த வர்ஷினி இரண்டடி தள்ளி நின்று அவனை முறைக்க,

"நீ.. சாரி.. நீங்க இங்க என்ன பண்ணுறீங்க மேடம்?" என்று கேட்டான் வரவழைக்கப்பட்ட புன்னகையுடன்.

"இவ்ளோ மரியாதை வேணாம் கௌஷிக் சார். இந்த மதிப்பு மரியாதை.. இதையெல்லாம் நான் மத்தவங்க கிட்டருந்து எதிர் பார்க்கவே மாட்டேன்.." இல்லாத கோலரை தூக்கி விட்டபடி கூறியவளை, "ஓஹோ.." என கேலியுடன் உச்சுக் கொட்டியபடி கேட்டுக் கொண்டிருந்தான் கௌஷிக். மதுரை போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ அவன்.

"நீ இந்த இடத்துல இருப்பனு எதிர்பார்க்கல. ஆனா உன்னைப் பார்த்ததும் அப்டியே விட்டுட்டு போகவும் மனசு வரல.."

அவளை முறைத்துப் பார்த்த கௌஷிக், "என் ஒர்க்கை பண்ண விடு வர்ஷா.. இங்கிருந்து போ. உன்கிட்ட வம்பு பண்ணிட்டு இருக்க நேரமில்லை இருக்கு. விஜய் சார் என்னை நம்பி பெரிய பொறுப்பா ஒப்படைச்சு இருக்காரு." என்று கூற,

"போறேன் போறேன்.. நான் என்ன இங்கயே தங்கிடவா வந்திருக்கேன்? போக தான் போறேன்.." என்றவள் அவனின் கடுப்பை கிளறி விடுவதற்காக அவனின் கன்னத்தை வலிக்கும் படியாக கிள்ளி விட்டு நகர்ந்து விட்டாள்.

அவள் தொட்ட கன்னத்தை அழுத்தமாக துடைத்து விட்டவன் போகும் அவளை முறைத்துப் பார்த்தான்.

இருவருக்கும் எந்த சந்தர்ப்பத்திலுமே ஒத்துப் போனதாய் சரித்திரமே இல்லை. காணும் நேரங்களில் எல்லாம் சிலிர்த்து, வாயாலே வாட்போர், வில் போரை நிகர்த்தி விடுவார்கள். அவளுக்கு இவனைக் காணும் போது, கலாய்த்து கடுப்பேற்றலாமே என படு குஷியாகி விடும். இவனுக்கு அவளைக் கண்டாலே, ஐயோ இவளா என பி.பி எகிறி அதிகரித்து விடும்.. இரண்டும் இரு துருவங்கள்.

இங்கே, தூக்கம் வராமல் கட்டிலில் அங்குமிங்கும் புரண்டு கொண்டிருந்தாள் கௌதமி. தூக்கத்தில் கண்கள் சொக்கியது. ஆனால் தூங்க முடியவில்லை. கண்களை மூடினாலே கார்த்திக்கின் முகமும், பழனியின் வாடிய முகமும் தான் தெரிந்தது.

கையை நீட்டி ஸ்வீட்சைத் தட்டி விட்ட விஜய், "என்னாச்சுமா?" என்று கேட்டான் மென்மையாய்..

அவள் கட்டிலில் அங்குமிங்கும் என உருளும் போது அவனின் தூக்கமும் மொத்தமாய் தொலைந்து போய் விட்டது. ஆனால் கோபப்படத் தான் தோன்றவில்லை. திருமணமாகிய நாளில் இருந்து இதே தான் அவளின் நிலை.. அப்போது காரணம் என்னவென கேட்கத் தயங்கினான். ஆனால் இப்போது கேட்க வேண்டுமென நினைத்தான். அவ்வளவு தான் வித்தியாசம்!

"தூங்க முடியல.." என்றவள் இதழ் பிதுக்கி அழ தயார் ஆகுவது தெரிந்தது.

"ஏன் என்னாச்சு?"

"எனக்கு தூங்க முடியல.. கார்த்தி கனவுலயும் வந்து என்கிட்டே நிறைய சண்டை போடறான். என் ஸ்னாக்ஸை எல்லாம் பறிச்சு எனக்கு காட்டி காட்டி தனியாவே சாப்பிடறான். என் தலைல வேற நங்கு நங்குனு கொட்டறான்.." கண்களில் கண்ணீர் வழிய கூறியவள், "ஆனா காலைல எழுந்ததும் அவனைத் தேடுனா அவன் என் பக்கத்துலயும் இல்ல.. இந்த உலகத்துலயும் இல்ல.." என்றாள். அடக்கி வைக்க முடியாத அளவுக்கு விம்மல் வெடித்தது அவளின் குரலில்..

"ப்ளீஸ் ரிலாக்ஸ் இனியா.. ப்ளீஸ் டோன்ட் க்ரை!" என்றவன் அவளை நெருங்கி, தன்னோடு அணைத்துக் கொண்டான். அவளின் கண்ணீர் அவனுள் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி விடும் போல் இருந்தது.

"நீ இப்டியே அழுதா கார்த்தி ரொம்ப வருத்த படுவான். உன் சந்தோசத்தைத் தான் அவன் யோசிச்சான். ஆனா பாரு. நீ அழுது அவனையும் வருத்தப் படுத்துற.. கண்ணை மூடிட்டு தூங்கு. கண்டிப்பா இன்னைக்கு கனவு மொத்தமா ஏஞ்சல்ஸ் தான் வருவாங்க.. உனக்கு ரொம்ப புடிச்ச யாராவது வந்து கனவுலயும் நீ சிரிக்க போற" என்றான். தான் கூறியது சற்று அதிகப்படியாய் தான் உள்ளது எனத் தோன்றியது அவனுக்கு.

ஒரு காலத்தில் நீ இப்படியெல்லாம் ஒரு பெண்ணை ஆறுதல் படுத்தப் போகிறாய் என யாராவது கூறியிருந்தால் ஹைபை போட்டுக் கொண்டு சிரித்திருப்பான். ஆனால் இப்போது அதுதான் நடந்து கொண்டிருக்கிறது என நினைக்கும் போது அவனுக்கே சிரிப்பு வந்தது.

அழுகையை உள்ளிழுத்துக் கொண்டு விம்மினாள் கௌதமி. அவன் இறக்காமல் இருந்திருக்கலாம். அவனை தன்னுடன் நிற்க விடாமல் அவரிடம் அழைத்துக் கொண்டாரே என நினைக்கும் போது கடவுளின் மேலும் கோபம் கோபமாய் வந்தது அவளுக்கு.

அவளின் தோளை சுற்றி அணைத்திருந்த கையை மேலும் இறுக்கியவன் அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டு மற்றொரு கரத்தால் அவளின் அவிழ்த்திருந்த கூந்தலை தாயன்புடன் வருடிக் கொடுத்தான்.

இது வரை தாயன்பை, அவளின் அரவணைப்பை உணர்ந்திராதவள் தன்னவனின் இறுகிய அணைப்பில் தன்னையறியாமலே கண்ணுறங்கிப் போனாள். அவனின் அணைப்பில் தாயன்பை ஒத்த அன்பை உணர்ந்தாள் போலும்!

அன்றிரவு, அவளின் கனவு மொத்தத்திலும் அவளது மனம் கொய்தவன் தான் நிறைந்திருந்தான். தூக்கத்திலும் தன்னை அறியாமல் அடிக்கடி வெட்கப் புன்னகை சிந்தி, அவனின் பரந்த நெஞ்சுக்குள்ளே மேலும் ஒன்றிக் கொண்டாள் கௌதமி இனியாள்.

தொடரும்.
 
Ramya(minion)

Vaigai - Avid Readers (Novel Explorer)
Sep 27, 2021
405
190
63
India
ஏன்மா இனியா போலீஸ்காரனையே இப்படி முழிக்க வைக்கிறியேமா😤😤😂😂😂இனியா சொல்ல வந்ததை முழுசா சொல்லி முடிச்சிருக்கலாம்

ஹாஹா கௌசிக்,வர்ஷா செம்ம்மம காம்பினேஷன்மா😂😂🥰🥰🥰

இனியாவோட ஆக்டிவிட்டிஸ்லாம் குழந்தைதனம்தான்.விரைப்பா,பிரச்சனைகளை தீர்க்க, பிரச்சினையை தேடி போற போலீஸ்காருக்கு இப்டி ஃபேர் கிடைச்சாதான் அவங்க லைப்லயும் எண்டர்டெயின்மெண்ட் கிடைக்கும்😘❣️❣️

விஜய் சாருக்கும் காதல் ஆன் தி வே போல🤪🤪😋
 
  • Like
Reactions: Upparu

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,769
536
113
45
Ariyalur
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️அடடடட இந்த விஜயின் இனியா கொஞ்சம் விட்டிருந்தா கார்த்திக் பத்தி பேசுறப்ப உளறிக்கொட்ட இருந்தாளே 😄😄😄😄😄இருந்தாலும் ஒருநாள் இல்லாட்டி ஒருநாள் கட்டாயம் உளறி விஜய் கிட்ட பெரிய டோஸ் வாங்க போறா 🙄🙄🙄🙄🙄🙄

அட வர்ஷா பிள்ளைக்கு கௌஷிக் ஜோடியாக போறானா, ஆனா ஆனா அவள கண்டாலே பயபுள்ள ஷாக் ஆகுறானே 😀😀😀😀😀😀😀
 
  • Like
Reactions: Upparu

Upparu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Apr 5, 2022
225
321
63
Hambantota, srilanka
ஏன்மா இனியா போலீஸ்காரனையே இப்படி முழிக்க வைக்கிறியேமா😤😤😂😂😂இனியா சொல்ல வந்ததை முழுசா சொல்லி முடிச்சிருக்கலாம்

ஹாஹா கௌசிக்,வர்ஷா செம்ம்மம காம்பினேஷன்மா😂😂🥰🥰🥰

இனியாவோட ஆக்டிவிட்டிஸ்லாம் குழந்தைதனம்தான்.விரைப்பா,பிரச்சனைகளை தீர்க்க, பிரச்சினையை தேடி போற போலீஸ்காருக்கு இப்டி ஃபேர் கிடைச்சாதான் அவங்க லைப்லயும் எண்டர்டெயின்மெண்ட் கிடைக்கும்😘❣️❣️

விஜய் சாருக்கும் காதல் ஆன் தி வே போல🤪🤪😋
😍😍😜 நன்றி சகி..
 
  • Like
Reactions: Ramya(minion)

Upparu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Apr 5, 2022
225
321
63
Hambantota, srilanka
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️அடடடட இந்த விஜயின் இனியா கொஞ்சம் விட்டிருந்தா கார்த்திக் பத்தி பேசுறப்ப உளறிக்கொட்ட இருந்தாளே 😄😄😄😄😄இருந்தாலும் ஒருநாள் இல்லாட்டி ஒருநாள் கட்டாயம் உளறி விஜய் கிட்ட பெரிய டோஸ் வாங்க போறா 🙄🙄🙄🙄🙄🙄

அட வர்ஷா பிள்ளைக்கு கௌஷிக் ஜோடியாக போறானா, ஆனா ஆனா அவள கண்டாலே பயபுள்ள ஷாக் ஆகுறானே 😀😀😀😀😀😀😀
😂😂😂
நன்றி சகி ❤️😍😍
 
Sri pavithra

Vaigai - Avid Readers (Novel Explorer)
Apr 17, 2022
32
21
8
Chennai, india
மதிய நேரம் பழனிக்கு அழைப்பு விடுத்து அவருடன் உரையாடிக் கொண்டிருந்தாள் கௌதமி.

அவளின் கண்கள் காரணமே இன்றி அடிக்கடி கலங்கிக் கொண்டிருப்பதை, சோபாவில் கால் மடக்கி அமர்ந்து ஏதோவொரு ஃபைலைப் பார்த்துக் கொண்டிருந்த விஜய்யும் கவனித்துக் கொண்டு தான் இருந்தான். கண்கள் கலங்கும் போது, கூடவே அவளின் மூக்கு நுனியும், காதோரங்களும் குளிரில் சிவந்து போவதை போல் சிவப்பேறுவது அவனுக்கு ரசனையை கொடுத்தது.

மூக்கை உறிஞ்சியபடி, "ஐ மிஸ் யூ பப்பு.." என்றவளை ஆறுதல் படுத்துவோமா என சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே அழைப்பை துண்டித்து விட்டு புறங்கைகளால் கண்களை துடைத்து விட்டபடி அவனருகே வந்து தொப்பென அமர்ந்து கொண்டாள்.

கிறுக்கிக் கொண்டிருந்த ஃபைலைத் தூக்கி ஒரு ஓரமாக வைத்து விட்டு, "சாப்பிடலாம்" என அவளை உணவு மேஜைக்கு அழைத்துச் சென்றான்.

"பப்பு என்னை மிஸ் பண்ணவே இல்லையாம்.." என்று கூறும் போதே அழுதாள். அவளை என்ன சொல்லி ஆறுதல் படுத்துவதென்று புரியாமல், "உன்னைக் கலாய்க்க சொல்லி இருப்பாங்க?" என்றான். அவரவர்களின் பிரச்சனைகளைக் கூறி தன் முன் கண்ணீர் சொறியும் மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க முயற்சித்து இருக்கிறானே தவிர, அவர்களுக்கு ஆறுதல் கூறிய அனுபவமில்லை அவனுக்கு. கூட நன்றாய் தானே இருக்கிறது என நினைத்துக் கொண்டான்.

அவன் கூறியதைக் கேட்டதும் ஆமென்று தலை அசைத்தவள், "எனக்கு தெரியும், பப்பு என்னை ரொம்ப மிஸ் பண்ணுறாருனு. ஆனா அவர் எப்படி மிஸ் பண்ணவே இல்லைனு என்கிட்டே பொய் சொல்லலாம். அப்புறம் நான் கவலைப்படுவேன்னு அவருக்கே தெரியும் இல்லையா?" என்று அவனிடமே கேட்டான். பதில் சொல்லத் தெரியாமல் விழித்தவனுக்கு, அவள் ஒரு வளர்ந்த குழந்தை எனப் புரிந்தது.

சாப்பிடாமல் உணவுத் தட்டில் கோலம் வரைந்தபடி புலம்பிக் கொண்டிருந்தவளை பரிதாபத்துடன் ஏறிட்டவன், "சரி விடு. நான் உன் பப்புவுக்கு கால் பண்ணி, நீங்க எப்படி இப்டி சொல்லலாம்னு கேட்கறேன்மா.." என்றான். உன் நண்பனிடம் ஏன் அடித்தாய் என நான் கேட்கிறேன் என்று கூறி, அழும் குழந்தையை தேற்றும் தாயின் மனநிலையில் இருந்தான் அவன்.

கண்களை சிமிட்டி சிமிட்டி அவனைப் பார்த்தவள், "நிஜமாவே தான் சொல்லுறீங்களா?" என்று யோசனையுடன் கேட்டாள்.

அவன் வாய் திறந்து பதில் கூறும் முன்பே, "ஆனா வேணாம்ங்க. பப்பு ரொம்ப பாவம். நான் கவலைப்படக் கூடாதுன்னு பொய் சொல்லி இருப்பாரு. எனக்காவது பக்கத்துல நீங்க இருக்கீங்க இல்லையா? ஆனா அவருக்கு என்னைத் தவிர வேற யாருமே இல்லை. தனியா ரொம்ப பீல் பண்ணுவாரு.." என்றவள் உணவை கொஞ்சமாக வாயில் திணித்துக் கொண்டு, "எனக்கு சமைக்கக் கூட தெரியல" என சோகமாகக் கூறினாள்.

"ஏன் தெரியல?!" உணவை பிசைந்தபடி கேட்டான் விஜய். அவளின் குழந்தைத் தனமான முக பாவனைகளை ரசிப்பதற்கென்றே எதையாவது பேசிக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றியது அவனுக்கு. அவளின் உணவு நிரம்பிய உப்பிய கன்னங்கள் அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது.

"என் பப்பு நான் இன்னுமே குழந்தைனு சொல்லி என்னை எதையுமே பண்ண விட்டதில்லைங்க.. உனக்கு வேணுமானதை கேளு. நான் பண்ணிக் கொடுத்துடறேன்னு சொல்லுவாரு. அவரே சமைச்சு அவரே தான் ஊட்டி விடுவாரு.. என் ட்ரெஸ்ஸை கூட அவரே ஐயன் பண்ணி கொடுப்பாரு. சமையல் பண்ணவானு கேட்டா இந்த வீட்டுல உன்னை தவிர நான் மட்டும் தான் இருக்கேன்னு சொல்லி சிரிப்பாரு.."

நீ சமைப்பதை நான்தான் சுவைத்துப் பார்க்க வேண்டும். அதனால் வேண்டாம் எனக் கூறி இருக்கிறார் எனப் புரிந்தததும் சட்டென்று சிரித்தான் விஜய்.

முட்டைக் கண்களை உருட்டி உருட்டி அவனைப் பார்த்தவள், "நீங்க சாப்பிடவே தேவையில்லை. நான் கார்த்திக்கு கொடுப்பேன்னு சொல்லி கஷ்டபட்டு எதையாவது பண்ணி கார்த்தி கைல கொடுப்பேன். என்னால இந்த கண்ராவியை சாப்பிட முடியாது. கலியாணம் பண்ணதுக்கு அப்பறம் எங்க அண்ணாவுக்கு கொடுன்னு.." மேலே கூறாமல் வேகமாக வாயில் கை வைத்து மூடிக் கொண்டு 'விட்டால் நீயே உளறி இருப்பாய்' என தன்னை திட்டிக் கொண்டாள்.

விஜய் நெற்றி சுருங்க அவளைப் பார்த்தான். அவள் ஏதோவொன்றை கூற வந்து விட்டு பாதியிலே நிறுத்தி விட்டதும் அவனுக்கு ஏதோ போலாகியது. அவள் கூறியதை மீண்டும் யாபகமூட்டிப் பார்த்தான்.

குற்றவாளியையோ, எதிர் தரப்பினரையோ விசாரணை செய்யும் போது அவனிடம் இருக்கும் நிதானம், இவளிடம் பேசும் போது மட்டும் இருக்கவில்லை. ரசனை.. ரசனை.. ரசனை.. ரசனையுடன் அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு அவள் கூற வந்து நிறுத்தியது எந்த இடத்தில் என்பது புரியவே இல்லை.

திருதிருவென விழித்து, வாயிலிருந்த சாப்பாட்டைக் கூட விழுங்காமல் நின்றிருந்தவளுக்கு திடீரென்று விக்க ஆரம்பித்து விட்டது.

"ஹேய் பார்த்தும்மா.." தன்னையறியாமலே பதறி குவளையில் தண்ணீர் நிரப்பி அவளிடம் நீட்டினான் விஜய்.

அதை மடமடவென அருந்தி முடித்தவள், "அர்ஜன்ட்! இதோ வந்திடறேன்.." என்று கூறி விட்டு அங்கிருந்து ஓடி விட, விடயத்தை அவ்வளவு பெரிதாகக் கண்டு கொள்ளாமல் அத்துடனே விட்டு விட்டான் விஜய். ஆனால் உள்ளுக்குள் ஏதோவொன்று பிராண்டியது.

மாலை மங்கி மெது மெதுவாக இருட்டு அடர்ந்து கொண்டிருந்த இரவு நேரமது!

தூங்கா நகரமெனப் பெயர் பெற்ற மதுரை மாநகரில், தெருக்களில் மக்கள் கூட்டம் ஜாம்மென நிரம்பி வழிந்தது. தெரு விளக்குகள் இரவு நெருங்கி விட்ட தகவலை மக்களுக்கு தெரிவிக்காமல் வெளிச்சத்தை வாரி இறைத்துக் கொண்டிருந்தன.

"இந்த நேரத்துல கூட வீட்டுல வேலை எல்லாம் ரோடுல சுத்திட்டு என்னத்த பண்ணி தொலைக்கிறாங்களோ.." டிராபிக்கில் சிக்கிக் கொண்ட கடுப்பில் முனகினாள் வர்ஷினி.

'நீ எதைப் பண்ணித் தொலைக்கிறியோ அதைத் தான் அவங்களும் பண்ணி தொலைக்கிறாங்களா இருக்கும்..' நேரம் காலம் தெரியாமல் கடுப்பை ஏற்றி விட்ட மனசாட்சியை இரண்டு தட்டு தட்டி அடக்கியவள், தான் செலுத்தி வந்திருந்த தந்தையின் ராயல் என்ஃபீல்டை ஒரு ஓரமாக நிறுத்தினாள்.

அது முருகர் கோவில் தெருவோரம். கோவில் பூட்டியிருந்த படியால் தான் தெருவின் ஓரத்திலாவது பைக்கை நிறுத்த ஒரு சிறிய இடம் கிடைத்திருக்கிறது அவளுக்கு!

இதே கோவில் திறந்திருக்கும் காலை நேரங்கள் என்றால் திருவிழா போல் மக்கள் முட்டி மோதிக் கொண்டிருப்பார்கள் என நினைத்துக் கொண்டு பார்வையை சுழற்றியவள், மூடியிருந்த கோவிலை இடுப்பில் கையூன்றி பார்த்திருந்த ஒருவனைக் கண்டாள். அவன் திரும்பி இருந்த படியால் அவனின் முதுகுப் புறம் மட்டும் தான் தெரிந்தது அவளுக்கு.

ஆனாலும் அது யாராக இருக்கும் என அவளால் அனுமானிக்க முடிந்தது. அவன் நின்றிருந்த தோற்றமும், அவனின் பின்தலை முடியும் அவளின் அனுமானத்தை உறுதிப் படுத்தி விடவே, இதழ் வளைத்து புன்னகைத்துக் கொணண்டு அவனை நோக்கி நடந்தாள்.

"ஹேய் ஹலோ.." என அவனைப் பின்னிருந்து அழைத்துப் பார்த்தவள் அவனிடமிருந்து பதில் வராமல் போனதும், "யாரையாவது இழுத்துட்டு வந்து கட்டாயத் தாலி கட்டலாம்னு முடிவு பண்றியோ.. அதான் இப்டி நின்னு மூடி இருக்கிற கோவிலையே உத்து உத்து பார்த்துட்டு இருக்க.." அவனின் காதில் விழும்படியாக சற்று சத்தமாகவே கேட்டாள்.

இவளின் குரலில் பற்களை அரைத்தபடி திரும்பியவன் அங்கு நின்றிருந்த வர்ஷினியை கண்டு, "ஐயோ.." என்று அலறினான்.

அவனின் அலறலில் அதிர்ந்த வர்ஷினி இரண்டடி தள்ளி நின்று அவனை முறைக்க,

"நீ.. சாரி.. நீங்க இங்க என்ன பண்ணுறீங்க மேடம்?" என்று கேட்டான் வரவழைக்கப்பட்ட புன்னகையுடன்.

"இவ்ளோ மரியாதை வேணாம் கௌஷிக் சார். இந்த மதிப்பு மரியாதை.. இதையெல்லாம் நான் மத்தவங்க கிட்டருந்து எதிர் பார்க்கவே மாட்டேன்.." இல்லாத கோலரை தூக்கி விட்டபடி கூறியவளை, "ஓஹோ.." என கேலியுடன் உச்சுக் கொட்டியபடி கேட்டுக் கொண்டிருந்தான் கௌஷிக். மதுரை போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ அவன்.

"நீ இந்த இடத்துல இருப்பனு எதிர்பார்க்கல. ஆனா உன்னைப் பார்த்ததும் அப்டியே விட்டுட்டு போகவும் மனசு வரல.."

அவளை முறைத்துப் பார்த்த கௌஷிக், "என் ஒர்க்கை பண்ண விடு வர்ஷா.. இங்கிருந்து போ. உன்கிட்ட வம்பு பண்ணிட்டு இருக்க நேரமில்லை இருக்கு. விஜய் சார் என்னை நம்பி பெரிய பொறுப்பா ஒப்படைச்சு இருக்காரு." என்று கூற,

"போறேன் போறேன்.. நான் என்ன இங்கயே தங்கிடவா வந்திருக்கேன்? போக தான் போறேன்.." என்றவள் அவனின் கடுப்பை கிளறி விடுவதற்காக அவனின் கன்னத்தை வலிக்கும் படியாக கிள்ளி விட்டு நகர்ந்து விட்டாள்.

அவள் தொட்ட கன்னத்தை அழுத்தமாக துடைத்து விட்டவன் போகும் அவளை முறைத்துப் பார்த்தான்.

இருவருக்கும் எந்த சந்தர்ப்பத்திலுமே ஒத்துப் போனதாய் சரித்திரமே இல்லை. காணும் நேரங்களில் எல்லாம் சிலிர்த்து, வாயாலே வாட்போர், வில் போரை நிகர்த்தி விடுவார்கள். அவளுக்கு இவனைக் காணும் போது, கலாய்த்து கடுப்பேற்றலாமே என படு குஷியாகி விடும். இவனுக்கு அவளைக் கண்டாலே, ஐயோ இவளா என பி.பி எகிறி அதிகரித்து விடும்.. இரண்டும் இரு துருவங்கள்.

இங்கே, தூக்கம் வராமல் கட்டிலில் அங்குமிங்கும் புரண்டு கொண்டிருந்தாள் கௌதமி. தூக்கத்தில் கண்கள் சொக்கியது. ஆனால் தூங்க முடியவில்லை. கண்களை மூடினாலே கார்த்திக்கின் முகமும், பழனியின் வாடிய முகமும் தான் தெரிந்தது.

கையை நீட்டி ஸ்வீட்சைத் தட்டி விட்ட விஜய், "என்னாச்சுமா?" என்று கேட்டான் மென்மையாய்..

அவள் கட்டிலில் அங்குமிங்கும் என உருளும் போது அவனின் தூக்கமும் மொத்தமாய் தொலைந்து போய் விட்டது. ஆனால் கோபப்படத் தான் தோன்றவில்லை. திருமணமாகிய நாளில் இருந்து இதே தான் அவளின் நிலை.. அப்போது காரணம் என்னவென கேட்கத் தயங்கினான். ஆனால் இப்போது கேட்க வேண்டுமென நினைத்தான். அவ்வளவு தான் வித்தியாசம்!

"தூங்க முடியல.." என்றவள் இதழ் பிதுக்கி அழ தயார் ஆகுவது தெரிந்தது.

"ஏன் என்னாச்சு?"

"எனக்கு தூங்க முடியல.. கார்த்தி கனவுலயும் வந்து என்கிட்டே நிறைய சண்டை போடறான். என் ஸ்னாக்ஸை எல்லாம் பறிச்சு எனக்கு காட்டி காட்டி தனியாவே சாப்பிடறான். என் தலைல வேற நங்கு நங்குனு கொட்டறான்.." கண்களில் கண்ணீர் வழிய கூறியவள், "ஆனா காலைல எழுந்ததும் அவனைத் தேடுனா அவன் என் பக்கத்துலயும் இல்ல.. இந்த உலகத்துலயும் இல்ல.." என்றாள். அடக்கி வைக்க முடியாத அளவுக்கு விம்மல் வெடித்தது அவளின் குரலில்..

"ப்ளீஸ் ரிலாக்ஸ் இனியா.. ப்ளீஸ் டோன்ட் க்ரை!" என்றவன் அவளை நெருங்கி, தன்னோடு அணைத்துக் கொண்டான். அவளின் கண்ணீர் அவனுள் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி விடும் போல் இருந்தது.

"நீ இப்டியே அழுதா கார்த்தி ரொம்ப வருத்த படுவான். உன் சந்தோசத்தைத் தான் அவன் யோசிச்சான். ஆனா பாரு. நீ அழுது அவனையும் வருத்தப் படுத்துற.. கண்ணை மூடிட்டு தூங்கு. கண்டிப்பா இன்னைக்கு கனவு மொத்தமா ஏஞ்சல்ஸ் தான் வருவாங்க.. உனக்கு ரொம்ப புடிச்ச யாராவது வந்து கனவுலயும் நீ சிரிக்க போற" என்றான். தான் கூறியது சற்று அதிகப்படியாய் தான் உள்ளது எனத் தோன்றியது அவனுக்கு.

ஒரு காலத்தில் நீ இப்படியெல்லாம் ஒரு பெண்ணை ஆறுதல் படுத்தப் போகிறாய் என யாராவது கூறியிருந்தால் ஹைபை போட்டுக் கொண்டு சிரித்திருப்பான். ஆனால் இப்போது அதுதான் நடந்து கொண்டிருக்கிறது என நினைக்கும் போது அவனுக்கே சிரிப்பு வந்தது.

அழுகையை உள்ளிழுத்துக் கொண்டு விம்மினாள் கௌதமி. அவன் இறக்காமல் இருந்திருக்கலாம். அவனை தன்னுடன் நிற்க விடாமல் அவரிடம் அழைத்துக் கொண்டாரே என நினைக்கும் போது கடவுளின் மேலும் கோபம் கோபமாய் வந்தது அவளுக்கு.

அவளின் தோளை சுற்றி அணைத்திருந்த கையை மேலும் இறுக்கியவன் அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டு மற்றொரு கரத்தால் அவளின் அவிழ்த்திருந்த கூந்தலை தாயன்புடன் வருடிக் கொடுத்தான்.

இது வரை தாயன்பை, அவளின் அரவணைப்பை உணர்ந்திராதவள் தன்னவனின் இறுகிய அணைப்பில் தன்னையறியாமலே கண்ணுறங்கிப் போனாள். அவனின் அணைப்பில் தாயன்பை ஒத்த அன்பை உணர்ந்தாள் போலும்!

அன்றிரவு, அவளின் கனவு மொத்தத்திலும் அவளது மனம் கொய்தவன் தான் நிறைந்திருந்தான். தூக்கத்திலும் தன்னை அறியாமல் அடிக்கடி வெட்கப் புன்னகை சிந்தி, அவனின் பரந்த நெஞ்சுக்குள்ளே மேலும் ஒன்றிக் கொண்டாள் கௌதமி இனியாள்.

தொடரும்.
Kawshik varshini than paira? Nalla than irukku 😂😂😂😂😂 kalyanam panna apromum kuda adichu kuthindu sethu kittuthu poidama irukkanunnu ipove en manasu sirikka start pannucu 😂😂😂😂
Police karanukku indha nilamaya kadavule 😂😂😂❤❤❤
Arumai saki💓💓💓
 
  • Like
Reactions: Upparu

Shimoni

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 17, 2022
180
111
43
Germany
இந்த உளறல் என்று முழுதாய் பப்லுக்கு தெரிய வருமோ 😜😜😜

வர்ஷினிக்கும் ஜோடி ரெடி போல 🤣🤣🤣

தன்னவன் நெஞ்சில் சுகமாய் தலை சாய்த்தவள் கனவிலும் மன்னவன் முகமன்றோ 😍😍😍😍
 
  • Like
Reactions: Upparu

Shayini Hamsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
83
73
18
Sri Lanka 🇱🇰
ஹவ் கியூட்.வர்ஷினி ஜோடி கெளசிக் போல🥰😍

விஜய்.. நீ தெரிஞ்சிக்க வேண்டியது நிறைய இருக்கு
 
  • Like
Reactions: Upparu

Upparu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Apr 5, 2022
225
321
63
Hambantota, srilanka
ஹவ் கியூட்.வர்ஷினி ஜோடி கெளசிக் போல🥰😍

விஜய்.. நீ தெரிஞ்சிக்க வேண்டியது நிறைய இருக்கு
போக போக தெரிஞ்சிப்பான்னு நம்புவோம் 😜😜
 
Upparu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Apr 5, 2022
225
321
63
Hambantota, srilanka
இந்த உளறல் என்று முழுதாய் பப்லுக்கு தெரிய வருமோ 😜😜😜

வர்ஷினிக்கும் ஜோடி ரெடி போல 🤣🤣🤣

தன்னவன் நெஞ்சில் சுகமாய் தலை சாய்த்தவள் கனவிலும் மன்னவன் முகமன்றோ 😍😍😍😍
💙😍
 
  • Love
Reactions: Shimoni

Priyakutty

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 28, 2022
112
54
28
Salem
அவர் அவங்கள நல்லா பாத்துக்கறார் ல... 🥰🥰

அவர் ம்மா னு கூப்பிடறது... 😍

கௌஷிக்... வர்ஷி க்கு pair அஹ்... ❤

நைஸ் எபி dr... 💞
 
  • Like
Reactions: Upparu

Upparu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Apr 5, 2022
225
321
63
Hambantota, srilanka
அவர் அவங்கள நல்லா பாத்துக்கறார் ல... 🥰🥰

அவர் ம்மா னு கூப்பிடறது... 😍

கௌஷிக்... வர்ஷி க்கு pair அஹ்... ❤

நைஸ் எபி dr... 💞
aama ama saki... thanks sagiiiii..... ❣️ :love: :love: :love:
 
  • Love
Reactions: Priyakutty