#வைகைதளம்
#சித்திரை_மை_திருவிழா_2022
#completednovelreviews
கதை பெயர் : வண்ணமலரே வாசம் தருவாயா ?
ஆசிரியர் : உப்பாறு
சூழ்நிலையின் சூழ்ச்சியால் இறுகிபோன நாயகனை தன் குழந்தைதனத்தால் மீட்கும் நாயகியின் கதை.
நாயகன் : விஜய்ஆதித்யன்
நாயகி : கௌதமி இனியாள்
விஜய் - இவனின் அறிமுகத்திலே தனிமையில் வெறுமையாய் இறுகி நிற்பவனின் சோகம் ஏன் என்ற கேள்வி நம்முள்ளும் எழுகிறது . அதன் காரணம் அறிந்து கலங்கினாலும் ஒருவர் மற்றவருக்கு பேச வாய்ப்பளித்திருந்தாலே இவனின் இத்துயரத்திற்க்கு இடமில்லாமல் போயிருக்கலாம் என தோன்றியது. இவனின் கார்த்திக்கின் மேலான பாசமும் , இனியா மேலான அன்பும் அழகாய் இருந்தது.
இனியா - வளர்ந்த குழந்தையே தான் . சில நேரம் இப்படி எல்லாம் குழந்தையா இருப்பாங்களா என சந்தேகம் வந்தாலும் அவள் தந்தை அவளை வளர்த்தவிதம் அப்படி என்பதால் அதை நாம் ஏற்றுகொள்ளதான் வேண்டியுள்ளது . இவள் வரும் இடங்களில் விஜயை போலவே நம்மிடமும் ஓர் புன்னகை உதயமாகிறது.
பழனி - அண்ணன் மகளை தன் பிள்ளையாய் பார்த்தது மட்டுமின்றி அதை அவளிடமும் சொல்லியே வளர்த்தது அருமை . இனியாவுடன் இணைந்து இவர் செய்யும் செயல்கள் எல்லாம் ரசனையானவை தான் .இருவரின் பாசமும் அலாதியாய் இருந்தது.
கார்த்தி - இவன் விஷயத்துல நான் உங்க மேல கோவமா இருக்கேன் ஆசிரியரே ..என்னவோ கொஞ்சுண்டு வந்தாலும் இவனை பிடிச்சிடுச்சி . ஆனா இடியட் அழவைச்சுட்டான் .
செல்வநாயகமும் யமுனாவும் பிள்ளை பாசத்துக்காக ஏங்குற பெற்றோர் , இவர்கள் செய்த ஒரே தவறு அவனிடம் உண்மையை மறைத்தது தான் . இறுதியாய் இவர்களை விஜய் புரிஞ்சிக்கிட்டானா ?அவங்க மறைச்ச விஷயம் என்னனு ?கதையில தெரிஞ்சிக்கோங்க டியர்ஸ்..
ஆதர்யா - சாதுர்யா , வர்ஷினி -கௌஷிக் என அனைவரும் அவரவர் இடத்தை சிறப்பாய் நிரப்பினர் .
அருமையான கதை , எதிர்பாரா திருப்பங்கள் , தெளிவான எழுத்து அதற்க்கு ஆசிரியருக்கு பாராட்டுகள் . ஆனால் கதையின் ஆரம்பம் வேறுபோல் சென்று இறுதியில் வேறாய் முடிந்ததோ என்பது என் எண்ணம் . வில்லனும் அதற்கான காரணமும் ஏனோ இடைசொறுகலாய் தோன்றியது . இறுதியில் இனியா செய்தவையும் கதைபோக்கில் ஒன்றாதவாறு தோன்றியது . (என் எண்ணம் மட்டுமே )
தந்தை-மகள் பாசம் , தாயன்பு , சகோதரபாசம் , நட்பு , காதல் , துரோகம் என அனைத்து உணர்வுகளையும் உள்ளடக்கிய அருமையான கதை போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள் ஆசிரியரே ..