• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Lashmi Ravi

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
145
அத்தியாயம் – 15

பார்வைக்கும்,யோசனைக்கும் சுலபமாக இருக்கும் சில நிகழ்வுகள் அது செயல்வடிவம் பெறும்போது தான் அதன் சிரமங்கள் நமக்கு புரியும். நினைத்ததை முடித்து விட வேண்டும் என்ற ஒரு கோணத்தில் மட்டும் யோசித்து அவன் சாதித்துவிட்டான்......தாலி கழுத்தில் ஏறிவிட்டால் தன் வழிக்கு வந்து தானே ஆகவேண்டும் என்ற இறுமாப்பில் அவன் இருக்க ,அழிக்க முடியாத சில நினைவுகளை மனதில் சுமந்து கொண்டு கடமைக்காக இவனோடு வாழ்வதில் அர்த்தம் இல்லை என அவள் அறிவுக்கு தாமதமாக புரிய அதே சமயத்தில் அவனோடு சேர்ந்து வாழ்வது மிகவும் கடினம் அவள் மனதில் ஆழமாக பதிந்துவிட இதில் இருந்து தான் எப்படி வெளியே வருவது என்ற மன ஓட்டத்தில் அவள் இருக்க இப்படி வேறு வேறு எண்ணத்தில் பயணம் செய்யும் இரண்டு மனங்கள் ஒன்றாக சந்திக்கும்போது அங்கு மௌனம் மட்டுமே மொழியாக இருக்கும்.
இங்கும் அதே தான் நடந்து கொண்டு இருந்தது. முதல் இரவு அறைக்குள் புகழ் உள்ளே வரவும் அவள் கட்டிலில் கண்ணீருடன் கைகளை கூப்பி ஏதோ சொல்லி கொண்டு இருப்பதை பார்த்தவன் முதல் முறையாக தான் செய்த காரியத்தை நினைத்து அவன் மனம் அதிர்ந்தது..எப்போதும் சந்தோசமும் கண்களில் ஒரு துள்ளலுடனும் அவள் முகத்தை பார்த்து இருந்தவன் இப்போது அவை எல்லாம் மறைந்து வாடிய முகமும்,கண்ணீர் நிரம்பிய கண்களுமாக அவனாலே அவளை அப்படி பார்க்க முடியவில்லை.அவன் நினைவுகள் அந்த அழகான நாட்களை நோக்கி இழுத்து சென்றது.
சிறுவயதில் இருந்தே எப்போதும் துறுதுறுப்பாகவும் சற்று துடிப்புடன் இருப்பாள் பூரணி. மணியம்மைக்கு திருமணம் ஆகி வெகுநாட்களுக்கு பின்தான் பூரணி பிறந்தாள். புகழும் அவனது தந்தையும் மட்டுமே பிறந்த குழந்தையை பார்க்க சென்று இருந்தனர்.பேச்சியம்மாள் உடனான திருமணத்தில் ஏற்பட்ட மனவருத்தத்தில் மாணிக்கமும் அவரின் தாயும் புகழ் வீட்டாரிடம் பேசமாட்டார்கள்.
அதனால் குழந்தையை பார்க்க டவுன் ஆஸ்பத்திரிக்கு சென்றவர்கள் உள்ளே மணியம்மையின் மாமியார் இருக்க புகழின் தந்தை வெளியே நின்று கொண்டு புகழை மட்டும் உள்ளே அனுப்பினார். அப்போது புகழுக்கு எட்டு அல்லது ஒன்பது வயது இருக்கும்.கிராமத்தில் பேருந்து ஏறியதில் இருந்து இறங்கும் வரை “என்னப்பா விடியலிலே டவுனுக்கு கிளம்பிட்ட” என கேட்பவர்களுக்கு எல்லாம் “தங்கச்சிக்கு குழந்தை பிறந்திருக்கு” என புகழின் தந்தை மகிழ்ச்சியுடன் சொல்லவும் “ஓ புகழுக்கு பொண்டாட்டி வந்துட்டாளா” என கிராமத்து மனிதர்களான அவர்கள் கேலியாக பேச....... அவனுக்கு புரியவில்லை என்றாலும் பொண்டாட்டி என்ற வார்த்தை அவனுக்குள் வெட்கத்தை கொடுக்க அவன் நாணி கோண அவர்களோ அதற்கும் கேலி பேச அதே நினைப்போடு உள்ளே நுழைந்தவன் அப்போது குழந்தை அழுகும் சத்தம் கேட்கவும் தயங்கி தயங்கி அத்தையின் அருகில் வந்தான். அவனை கண்டதும் மாணிக்கத்தின் தாய் “வந்துட்டானுக சொந்தம் கொண்டாடிகிட்டு” என முனகியவாறு முகத்தை நொடிக்க ,மணியம்மையோ“புகழுஊஊ வாடா வா” என பிரசவத்தின் களைப்பிலும் அவள் முகத்தில் சந்தோசம் நிறைந்து இருக்க அவனை பாசத்தோடு அழைத்தவர் அருகில் அவரது மாமியார் முறைக்கவும் ...அந்த நேரம் பார்த்து ஒரு நர்ஸ் “டாக்டர் உங்களை கூப்பிட்றாங்க” என அவரது மாமியாரை அழைத்து கொண்டு சென்று விட மணியம்மையின் முகத்தில் நிம்மதி பரவியது.
மெதுவாக எழுந்து அமர்ந்த மணியம்மை “புகழு நீ எப்படி வந்த.......யார் வந்து இருக்கா?” என கண்கள் தமயனை தேட அவர் கேட்கவும்
“அப்பாகூட வந்தேன் அத்தை...வெளியே இருக்காங்க...என்னைமட்டும் போய் பார்த்திட்டு வான்னு சொன்னாங்க” என அவன் சொல்லவும் மணியம்மையின் முகம் வாடிவிட்டது.தெய்வமே வந்து முன்னாள் நின்றாலும் தான் பெற்ற பிள்ளையை தன் வீட்டினர் முதலில் பார்க்க வேண்டும் என்று தான் எந்த பொண்ணும் ஆசைபடுவாள். அதுவும் தாயும் தந்தையுமாக இருந்து வளர்த்து ஆளாக்கிய தனது தமையன் குழந்தையை பார்க்காமல் வெளியே நிற்பது அவள் மனதை வேதனை படுத்தியது.
அதற்குள் “அத்தை பாப்பாவ நான் பார்க்கட்டுமா” என அவன் கேட்கவும் “வாடா தங்கம்...உனக்கு இல்லாத உரிமையா” என அருகில் அவனை அமரவைத்து பிறந்து சில மணி நேரங்களே ஆன தொட்டிலில் இருக்கும் குழந்தை எடுத்து அவன் கையில் கொடுத்தார் மணியம்மை.
“இன்னும் அவங்க அப்பாகூட குழந்தையை தொட்டு தூக்கலைடா....முகத்தை மட்டும் பார்த்திட்டு போன் பேச போய்ட்டார். நீ தான் முதல்ல என் பொண்ண கையில தொட்டு தூக்கி இருக்க “என சொல்லவும் முகத்தில் பெருமிதத்தோடு குனிந்து அந்த குழந்தையின் முகத்தை பார்த்தவன் மொட்டு போன்ற பெரிய கண்களுடன் லேசாக சிரித்தபடி விரல்கள் அசைத்தபடி அவன் கைகளில் பூங்குவியலாய் நிறைந்து இருந்தாள் அவனது இதயராணி.
அவன் கண்களை இமைக்காமல் அவளை ரசித்து கொண்டி இருக்க சில வினாடிகள் அமைதியாக இருந்தவள் பின்பு பிஞ்சு விரல்களை அசைத்தபடி அழுதபடி நெளிய
“என்ன அத்தை அழுகுறா “ என அவன் பயப்படவும்
மணியம்மியோ “குட்டிம்மா எதுக்கு அழுகிற ..... உன்ற மச்சான் வந்து இருக்கார் பாரு......புகழ் மச்சான் வந்து இருக்கான் பாருடா.....அவன் தான் உன்னை கையில வச்சிருக்கான் பாரு “ என கொஞ்சலாக சொல்லவும் அந்த பிஞ்சு மலர் அழுகையை நிறுத்தி மூடிய இமைகளை சற்று விரிக்க
“டேய்ய்ய்ய்ய் புகழு இவ்ளோ நேரம் நாங்க கூப்பிட்டோம்...கண்ணே திறக்கலை இப்ப பாரேன் உன் பேர் சொன்ன உடனே கண்ணை திறக்காறா...இப்பவே இவளுக்கு எல்லாம் தெரியுது பாரேன் “ என அவர் ஆச்சரியப்பட அப்போது அந்த நொடி புகழின் மனதில் தோன்றிய கர்வம் இப்பவும் அவன் முகத்தில் அந்த கர்வம் வந்து போனது.
அதற்கு பின்பு புகழின் தந்தை உள்ளே வந்து குழந்தையை பார்த்து விசாரித்துவிட்டு பேச்சியம்மாவிற்கும் பிரசவ நேரம் என்பதால் வர முடியவில்லை என சொல்லிவிட்டு புகழ் கையில் ஒரு தங்கசெயினை கொடுத்து பூரணியின் கழுத்தில் போட சொன்னார் . அதை இப்போது நினைக்கும்போதே நெஞ்சம் இனிக்க “அப்பவே நீ எனக்கு பொண்டாட்டி ஆகிட்டடி” என முனகியவன் மீண்டும் அந்த நினைவுகள் அவனை இழுக்க அதில் மூழ்கினான்.
அதற்கு பின் பாண்டி பிறந்தான்.ஆனால் மாணிக்கம் வீட்டில் இருந்து யாரும் வரவில்லை.பூர்ணிமா என பெயர் வைத்த போது தகவல் மட்டுமே வந்தது.அதற்கு பின்பு அவளை அதிகம் பார்க்க முடியவில்லை.
பின்னர் பள்ளியில் தான் அவளை பார்க்க முடிந்தது.அதுவும் பாண்டி வகுப்பில் அவள் இருந்ததால் அவளை பற்றி விபரங்கள் அவனுக்கு உடனுக்குடன் வந்து விடும்.. பள்ளிக்கு வந்தால் ஒரு பெரிய கும்பலை சேர்த்துக்கொண்டு மற்ற மாணவர்களை வம்பு இழுப்பதும், வீட்டுபாடம் எழுதாமல் வெளியில் நிற்பதும்,வாத்தியாரின் வண்டியில் காற்று பிடுங்கி விடுவதும் என அவளது ஜகதல பிரதாபங்களை பாண்டி ஒன்று விடாமல் புகழிடம் ஒப்பித்து விடுவான்.அப்போது தான் புகழ் அவனுக்கு மிட்டாய் வாங்கி கொடுப்பான். அதனால் பள்ளியில் பூரணியிடம் நட்புடன் இருந்து கொண்டு வீட்டிற்கு வந்ததும் அவளை பற்றி தன் அண்ணனிடம் போட்டு கொடுக்கும் வேலையை சிறப்பாக செய்து வந்தான் பாண்டி அதற்காகவே படிப்பைவிட அவளை கவனிப்பதிலே அவன் குறியாக இருந்தான்.புகழ் அப்போது டவுன் பள்ளிகூடத்தில் ஒன்பதாம் வகுப்பு படித்து கொண்டு இருந்தான்.
சில நேரங்களில் பள்ளியில் செய்யும் தப்புகளுக்கு வீட்டில் மணியம்மையிடம் நன்றாக அடிவாங்குவாள் பூரணி.
“ ஏண்டி மணி எந்த கருப்பு ஆடு போட்டு கொடுத்திச்சுனு தெரியலியே என்றவள் ஆம் ஒன்றாம் வகுப்பில் இருந்தே சாந்தி மணி இருவரும் அவளின் நெருங்கிய தோழிகள். “பள்ளிகூடத்துல நடக்கிறது வீட்டுக்கு எப்படி தெரியுது” என அவள் கேட்கவும் “எனக்கும் தெரியலை பூரணி....நீ நேத்து கணக்கு டீச்சர்கிட்ட வீட்டுபாடம் செய்யாம அடிவாங்கினது சாயந்திரத்துக்குள்ள எப்படி உங்க அம்மாவுக்கு தெரிஞ்சது. இதுல ஏதோ சதி இருக்கு கண்டுபிடிக்கணும்” என கண்களை உருட்டி சாந்தி சொல்ல “ஆமாம் சீக்கிரம் கண்டுபிடிக்கணும்” என மணியும் ஒத்து ஊத இப்படியாக இரண்டாம் வகுப்பு படிக்கும் மூன்று பெரியமனுசிகளும் யோசித்து கொண்டு இருந்தனர்.
இப்படியாக நாட்கள் ஓடின..... ஒரு நாள் தோழிகள் மூவரும் சாலையில் ஓடிபிடித்து விளையாடியபடி வர எதிரில் புகழ் அவன் நண்பன் செல்வத்துடன் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தான்.
அப்போது செல்வம் “பங்காளி அங்க பாரு உன் அத்தமக ரத்தினம்ஊரையே அளந்துகிட்டு நடந்து வருது” என சொல்லவும் புகழ் திரும்பி பார்க்க அங்கு பூரணி தோழிகளுடன் அடித்து பேசி விளையாண்டுகொன்டே வந்து கொண்டு இருந்தாள்.
“ஏன் பங்காளி உம அத்தை மகளுக்கு வாய் ரப்பர்லையா பண்ணிருக்கு.....நிறுத்தாம சலசலன்னு பேசிகிட்டே இருக்காளே ..வாயே வலிக்காதா” என சொல்லவும் புகழோ அவனை திரும்பி ஒரு முறை முறைத்தவன் பின்னர் வேகமாக முன்னே சென்று அவள் முன் நின்றான்.
திடீரென எதிரில் சைக்கிள் வந்து நிற்கவும் “ஏய்ய்ய்ய்யி” என கத்தி கொண்டே நிமிர்ந்த பூரணி ..புகழை பார்த்ததும் கோபத்துடன் “ஆளு வரது கண்ணனுக்கு தெரியலை...மேலேயே கொண்டு வந்து விட்ரிங்க” என வேகமாக கேட்டாள்.
அந்த சிறுவயதில் அவளது விடலைதனமான கோபமும்,ரோஷமும் அவனை ஈர்க்க...அவள் தலை ஆட்டி ஆட்டி பேசும்போது அதற்கு ஏற்றார் போல் நடனம் ஆடிய அவளது காதில் தோலாக்கும் , இரட்டை ஜடையும் அவனது மனதை கொள்ளை கொள்ள “ம்ம்ம்ம் ஏண்டி பூசணிக்காய் மாதிரி இருந்துகிட்டு ரோட்ல நடந்து போக சொன்னா நீ உருண்டு போய்கிட்டு இருக்க.....அப்புறம் எங்க சைக்கிள் எப்படி போகும்...உன் மேலதான் போகும்” என அவன் நக்கலாக சொன்னான்.
“இங்க பாருங்க மச்சான் இந்த கேலிபேச்சு எல்லாம் என்கிட்டே வேண்டாம்.எங்க அப்பத்தா உங்ககிட்ட பேசகூடாதுன்னு சொல்லி இருக்கு.....வம்பிளுக்காம வழிய விடுங்க” என பெரிய மனுசி போல் பேசவும்
“ம்ம்ம் அந்த கிழவிக்கும் வேற வேலை இல்லை.....ஏண்டி பூசணி அது சொன்னா நீ என்கிட்டே பேசமாட்டியா” என அவன் கோபமாக கேட்டான்.
“இங்க பாருங்க என் பேரு பூசணி இல்லை பூரணி” என அவள் ரோசமாக சொல்ல
அவனோ “அப்படியா யாரு என்ன சொன்னாலும் நீ எனக்கு பூசணிதான் .. அதும் குண்டு பூசணிதான்” என வாயை உப்பலாக வைத்து கொண்டு அவன் மீண்டும் மீண்டும் சொல்ல
“போடா கருவாயா” என அவள் வேகமாக சொன்னதும்
“என்னடி சொன்ன என்ன போடாவா என அதட்டிகொன்டே அவன் அருகில் வர பூரணியோ ஆமாண்டா அப்படிதான் சொல்வேன்...நீ மட்டும் என்னை பூசணி சொல்ற” என எதிர்த்து நின்று பதில் பேச
“ஏய் நான் உன் மச்சாண்டி...நான் அப்படிதான் சொல்வேன்” என அவன் உரிமையோடு சொன்னதும்
“நீ ஒன்னும் எனக்கு மச்சான் இல்லை..........அழகன் மச்சான் தான் எனக்கு மச்சானாம்... எங்க அப்பத்தா சொல்லுச்சு....நீங்க எல்லாம் கெட்டவங்க.....அவங்க தான் நல்லவங்கனு ...உன்னை எனக்கு பிடிக்கலை போடா என சொல்லிவிட்டு வாங்கடி போலாம்” என தோழிகளை இழுத்து கொண்டு வேகமாக ஓடிவிட்டாள் பூரணி.

எட்டு வயது பெண் சிறுபிள்ளைதனமாக சொல்லியது அவன் மனதில் வேர்போல் பதிந்து விட்டது. அவள் சொன்னதை கேட்டதும் புகழின் முகம் சுருங்கி விட்டது. வாடா போலாம் என இறுகிய முகத்துடன் செல்வத்தை அழைத்து கொண்டு வீட்டிற்கு வந்தான் .
 

Lashmi Ravi

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
145
இரண்டு நாள் கழித்து மணியம்மை பூரணியை அழைத்து “ஏண்டி ரோட்ல வரும்போது ஒழுங்கா நடந்து வரமாட்டியா.....உங்க அப்பத்தாபேச்சைகேட்டுகிட்டு புகழ் மச்சான்கிட்ட பேசமாட்டேனு சொன்னியாம்...அந்த அளவுக்கு பெரிய மனுசி ஆகிட்டியா நீ ......எங்க இருந்துடி கத்துகிட்ட இது எல்லாம்....இனி புகழ் மச்சானை மரியாதை இல்லாம பேசினேன்னு தெரிஞ்சுது பேசற வாய்க்கு சூடு வச்சிடுவேன் ஜாக்கிரதை” என மிரட்டவும் அவனால் தான் அம்மா திட்டுகிறாள் என மேலும் புகழின் மேல் அவளின் வெறுப்பு மேலும் அதிகமானது.
தன் தோழிகளிடம் அதை சொன்னவள் “நான் அவன்கிட்ட பேசினது எப்படி எங்க அம்மாவுக்கு தெரிஞ்சுதுனு தெரியலை என்றவள் அப்போ” என அவர்களை அவள் சந்தேகமாக பார்க்க
“ஏய் பூரணி நாங்க எல்லாம் சொல்லலை என்றவர்கள் அப்போ உன்ற மச்சான் தான் உங்க அம்மாகிட சொல்லி இருக்கணும். எனக்கும் இப்பதான் புரிது இந்த பாண்டி பையந்தான் நம்மள பத்தி அவங்க அண்ணாகிட்ட சொல்லி அது உங்க அம்மா காதுக்கு போகுது...அந்த கருப்பு ஆடு பாண்டி தான்” என சாந்தி சொல்லவும்
“ஆமாண்டி எனக்கும் இப்பதான் எல்லாம் புரியுது.....துரோகி கூட இருந்து குழி பறிக்கிறான் என்றவள் நாளைக்கு பள்ளிகூடத்துக்கு போய் அவனுக்கு இருக்கு கச்சேரி ” என்றாள் அவள்.
மறுநாள் பாண்டியை அழைத்து மிரட்டியவர்கள் “இங்க பாருடா ஏதாவது இங்கு நடக்கிறதா உங்க அண்ணாகிட்ட சொன்ன கோகிலா டீச்சரரோட பேனாவ எடுத்தது நீ தாணு சொல்லிடுவோம்...அப்புறம் நாங்க செஞ்ச எல்லாம் தப்பும் நீதான் செஞ்சேன்னு சொல்லிடுவோம் என மிரட்டவும் இல்லை பூரணி நான் சொல்லமாட்டேன் இனி...என்னை மாட்டி விட்றாத என அவன் கெஞ்ச சரி பொழச்சு போ” என அவனை விட்டு விட்டார்கள்.
மாணிக்கத்திற்கும் புகழின் தந்தைக்கும் சிறிது மனவருத்தம் என்றாலும் வெளி இடங்களில் பார்த்தால் சிறிது கொள்வார்கள்.சிறியவர்களும் பெண்களும் பேசிகொள்வார்கள்..அதுபோல் ஒரு திருமணவிழாவில் பூரணி புகழோடு அதிகம் பாசத்தோடு பழகுவது பார்த்த மாணிக்கத்தின் தாய் தாங்கமுடியாமல் அந்த பிஞ்சு மனதில் குடும்ப பகையை மனதில் வைத்து அவர்களை பற்றி தவறாக சொல்லி பிஞ்சு மனதில் நஞ்சை கலந்தார்.அதனால் தான் குழந்தையில் பாசத்துடன் இருந்தவள் வளர வளர அவனை வெறுக்க ஆரம்பித்தாள்.
பூரணியை முதன் முதலில் தொட்டு தூக்கியபோது அவன் மனதில் ஏற்பட்ட அந்த கர்வம் பூரணியை பார்க்கும்போது எல்லாம் அந்த உரிமை உணர்வு வந்து விடும்.உன் பொண்டாட்டி என அவர்கள் சொன்ன வார்த்தை அவன் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.அதனால் மற்றவர்களோடு சாதரனமாக பேசுபவன் அவளிடம் மட்டும் உரிமையோடு அதிகாரமாக பேசுவான்.முதலில் அதை கண்டுகொள்ளாத பூரணி வயது அதிகமானதும் வித்தியாசம் புரிய தன்னை மட்டுமே அவன் திட்டுகிறான் என நினைத்தவள் அதற்காக அவனிடம் இருந்து ஒதுங்க ஆரம்பித்தாள்.குடும்ப பிரச்சனையும் அதுக்கு ஏதுவாக இருந்ததால் புகழால் எதுவும் செய்யமுடியவில்லை.
மேலும் பூரணி ஒதுங்க ஒதுங்க புகழுக்கு அவள் மேல் உள்ள அன்பு அதிகமாகியாதே தவிர குறையவில்லை.இப்படியாக சில வருடங்கள் சென்று கொண்டு இருக்க இந்த நேரத்தில் புகழின் தந்தை இறந்துவிட அதற்கு வந்த மணியம்மை அப்போது பூரணி பாரி இருவரும் உடன் அழைத்து வந்து இருந்தார்.அப்போது மீண்டும் பூரணி புகழ் உறவு கொஞ்சம் நெருங்கி வர அந்த நேரத்தில் மீண்டும் இரு குடும்பங்களுக்கு நடுவில் பிரச்சனை வர அவர்களிடம் இருந்த கொஞ்சநஞ்சம் பேச்சு வார்த்தையும் அறவே விட்டு போனது.
அவரவர் வேலைகளை அவரவர் பார்த்து கொண்டு இருந்தனர்.அப்போதும் பூரணியை பற்றி பாண்டியிடம் விசாரிப்பான் புகழ்.விவரம் தெரியாத போது எல்லாவற்றையும் சொன்ன பாண்டி பின்னர் நீ எதுக்கு அந்த வௌவால் கூட்டத்தை பத்தி கேட்கிற ஆம் பாண்டி பூரணியை அப்படிதான் கூப்பிடுவான். பாண்டியை மிரட்டி உருட்டி வைத்திருந்த பூரணி பெரிய வகுப்பு போனதும் பாண்டி அவளை மிரட்ட இவளும் விட்டு கொடுக்காமல் சண்டை போட சில நேரங்களில் குடும்ப சண்டையும் உள்ளே வந்து விடும்.இப்படியாக இருக்கும் நேரத்தில் பூரணியை பள்ளியை விட்டு நின்றதும் புகழ் வருத்தபட பாண்டியோ அனைவர்க்கும் இனிப்பு கொடுத்து சந்தோசபட்டான்.
அந்த நேரத்தில் அவள் பெரிய மனுசி ஆனதும் தாய் மாமன் சீர் முறைப்படி செய்யவேண்டும் அது ஊர் நடைமுறை என்பதால் அதற்கு மட்டும் புகழ் குடும்பத்தினர் அழைக்கப்பட்டனர்.வெகுநாட்களுக்கு பிறகு அப்போது தான் அவளை நேரில் பார்த்தான் புகழ்.
பாவாடை சட்டையில் இரட்டை ஜடை போட்டுகொண்டு சுட்டி தனமாக சுற்றி கொண்டு இருந்தவள் தாவணி உடுத்தி முகத்தில் பெண்மை நிறைய வெட்கத்துடன் அவள் தழைய தழைய நடந்து வந்து அமர்ந்தது அவன் மனதில் இன்றும் நிழலாடும்.அனைவரும் அருகில் இருந்ததால் அவளிடம் அவனால் பேசமுடியவில்லை.அவள் பிம்பத்தை அப்படியே மனதில் பதித்து கொண்டான்.பின்னர் அவளை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.ஆனால் அவ ஜகதாலப்ரதாபங்கள் இவன் காதிற்கு எப்படியாவது வந்து விடும்.சில நேரம் ரசிச்சு சிரிப்பான்.சில நேரம் கோபம் கோபமாக வரும்.மனதிற்குள்ளே அவளை திட்டி கொண்டு இருப்பான்.
ஒரு நாள் மாலை கருக்கலில் வெளியூரில் வேலையை முடித்துவிட்டு வெள்ளியம்பாலயம் வழியாக அவன் நடந்து வர அப்போது அவனது பள்ளி நண்பர்கள் எதிரில் வந்தனர்.பள்ளி நண்பர்களை வெகுநாட்களுக்கு பின் பார்ப்பதால் மகிழ்ச்சியுடன் நின்று பேசிக்கொண்டு இருந்தான்.அவர்கள் அனைவரும் கல்லூரியில் படித்து கொண்டு இருந்தனர்.இவன் விவசாயம் பார்த்து கொண்டு இருந்தான் .
அவர்களுடன் பழைய கதைகளை பேசி கொண்டு இருக்கும்போது ஏதோ பேச்சு குரல் கேட்க திரும்பி பார்த்த புகழ் அங்கு பூரணி சாந்தி மணி மூவரும் வந்து கொண்டு இருந்தனர்.இவர்கள் இருட்டில் நின்று இருந்ததால் அவர்களுக்கு தெரியவில்லை.
“என்னடி எல்லாமே ரெடியா இருக்கா என பூரணி கேட்டதும் ரொம்ப இருட்டு ஆகிடுச்சு பூரணி....வேண்டாம் வீட்டிற்கு போய்டலாம்......நாளைக்கு வந்து பார்த்துகலாம்” என மணி புலம்பவும்
“சும்மா இருடி...இன்னைக்குதான் எங்க வீட்ல யாரும் இல்லை....எவ்ளோ கஷ்டப்பட்டு அந்த குட்டச்சிய ஏமாத்திட்டு வந்து இருக்கேன்...இவ எல்லாமே கெடுத்திடுவா போல இருக்கே என்றபடி அருகில் வந்தவள் எத்தனை நாள் எனக்கு கொடுக்காம ஏமாத்திகிட்டு இருந்தா.....இன்னைக்கு வைக்கிறேன் பாரு ஆப்பு...யாருகிட்ட இந்த பூரணிகிட்டியா உன் திமிர காட்ற.....நான் எல்லாம் எலிக்கே எட்டு முழம் வேஷ்டி கட்டி விட்ற ஆளு......நீ என்கிட்டே சவால் விடறியா” என மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்க அவள் டயலாக் பேச
சாந்தியோ “இப்போ எதுக்கு நீ இந்த சிம்பு சிம்பிகிட்டு இருக்க....வந்த வேலையை முடிச்சுட்டு கிளம்பலாம்,,,,,,,ரொம்ப இருட்டாகிடுசுனா என்னை தேடுவாங்க....சீக்கிரம் ஆகவேண்டிய வேலையை பாரு” என அவளும் அவசரபடுத்தினாள்.
சரிடி நீயும் ஆரம்பிச்சுடாத என்றபடி ஒரே தாவலில் மரத்தின் முதல் கிளையில் பூரணி ஏறி அமர அவள் ஏறிய லாவகத்தில ஒரு நிமிடம் புகழே அசந்து விட்டான் என்றால் மற்றவர்கள் கேட்கவா வேண்டும்.....அவனது நண்பர்களும் ஆஅஎன வாய் பிளந்தபடி பார்த்து கொண்டு நின்றனர்.
இவளோ முதல் கிளையில் நின்று கொண்டு சுற்றும் முற்றும் பார்க்க லேசான இருட்டாக இருந்தால் புகழ் நின்றது தெரியவில்லை.”நல்லவேளை யாரும் பார்க்கலை “ என்றபடி கட்டியிருந்த பாவாடையை மேலே தூக்கி சொருக வாழத்தண்டு போன்ற அவளது கால்கள் அந்த இருட்டிலும் மின்னின......மேலும் ஒரு கிளையில் அவள் ஏறி பக்கத்தில் இருக்கும் மதிற்சுவற்றில் கால் வைத்தாள்.
அதற்குள் கீழே இருந்து இருவரும் “என்னடி பண்ற உள்ள குதிக்க போறியா...வேண்டாண்டி” என கத்த
அவளோ “நான் பார்த்துக்கிறேன்...நீங்க கொஞ்சம் டார்ச் லைட் மேலே தூக்கி பிடிங்க” என்றாள்.
அவர்கள் தூக்கி பிடிக்க பூரணி கால்கள் நன்றாக தெரிந்தன......அருகில் யாரும் இல்லை என மூவரும் நினைத்து கொண்டு இருந்ததால் அதை பற்றி அவர்கள் பெரியதாக எடுத்து கொள்ளவில்லை.
ஆனால் புகளின் நண்பர்களோ குரலில் விஷமத்துடன் “டேய் மாப்பிள்ளை யாருடா இந்த ஜான்சி ராணி ....இப்படி மரம் எருது....நாட்டுகட்டைனு கேள்விபட்டுருக்கேன்....ஆனா இப்பதாண்டா பார்க்கிறேன்.....என்னம்மா ஜம்ப் பண்ணுது” என சொல்லவும் புகழுக்கோ சுறு சுறுவென கோபம் ஏற
அதற்குள் இன்னொருவனோ “கிராமத்துல இப்படி ஒரு அழகு தேவதையா.......சூப்பர்” என சிலாகிக்க
புகழோ கோபத்தை அடக்கி கொண்டு “டேய் வாங்கடா போலாம்...கிராமத்துகுள்ள இப்படி பேசறது தப்பு” என அவர்களை நகர்த்த முயற்சிக்க
“இருடா மாப்பிள்ளை.......காலே இவ்ளோ அழகா இருக்கே அப்போ மத்தது” என அவன் சொல்லி முடிக்கும் முன் அவன் முகத்தில் புகழின் கை பதிந்தது.
“டேய் இப்போ எதுக்கு இவனை அடிக்கிற....உண்மையதான சொன்னான்......என்ன பெரிய கிராமம் ....இப்போ மணி ஏழு...இந்நேரத்துல இந்த பொண்ணு இப்படி சுவரு ஏறி குதிக்கிறானா அப்போ அவ எப்படி பட்டவளா இருக்கணும் ...ஒரு வேலை அந்த மாதிரி பொண்ணா...அடச்சே இப்ப பொண்ணுங்க எல்லாம் இப்படி அலையை ஆரம்பிசுட்டங்கலா” என அவன் சொல்லி முடிக்கும் முன் டேயிஈஈ என கத்திகொண்டே அவனை பிடித்து தள்ளி அவன் முகத்தில் இரண்டு குத்து விழ
அதற்குள் மற்ற நண்பர்கள் நடுவில் புகுந்து “டேய் விடுங்கடா என தடுத்தவர்கள் ........ஏண்டா ரொம்ப நாள் கழிச்சு உன்னை பார்க்கிரோம்னு நின்னு பேசுனா யாரோ ஒருத்திக்காக எங்களையே அடிச்சிட்டிலே” என அவனுடன் சண்டை போட்டு கொண்டு இருக்க
தனது வேலையை முடித்துவிட்டு கீழே இறங்கிய பூரணி...”ஹப்பா என்னோட ரொம்ப நாள் ஆசை இப்பதான் நிறைவேறுச்சு ...நாளைக்கு காலையில கம்மா கரையில அவளுக்கு இருக்கு பாரு கச்சேரி......என்னமோ இவ வீட்ல மட்டும் தான் அடுக்கு மல்லி இருக்கு....யாருக்கும் கொடுக்க மாட்டேனு என்ன சீன போட்டா....இப்போ பாரு அவ வீட்லே வந்து அவங்க செடியில இருந்தே எல்லா பூவும் பறிச்சுட்டேன்...காலையில எழுந்து பார்க்கும்போது செடியில ஒரு பூ இருக்காது...பாவம் ஏமாந்து நிக்கபோறா....பூரணினா கொக்கானா “ என அவள் சொல்லி சிரிக்க
“ஏண்டி பூரணி இப்படிதான் நீ பூ பைத்தியமா இருப்பியா......அப்படியே இருந்தாலும் பகல்ல வந்து இருக்கலாம்ல” என மணி கேட்கவும்
“இதை நீயும் பலமுறை கேட்டாச்சு நானும் பதில் சொல்லிட்டேன்......பகல்ல அவங்க வீட்ல ஆள் இருப்பாங்க...பறிக்க விடமாட்டங்க...அதான் இந்த நேரத்துல எல்லாரும் டிவி முன்னாடி உட்கார்ந்து இருப்பாங்க....நம்மை கவனிக்க மாட்டாங்க அதான் வந்தேன் போதுமா..... என பெருமை பொங்க சொல்லிகொண்டே நடந்தவள் சட்டென்று நின்று என்னடி ஏதோ பேச்சு சத்தம் கேட்குது” என்றாள்.
“ஐயோ போச்சு நம்மல கண்டு பிடிச்சுட்டாங்ககளா ... நாங்க எல்லாம் இல்லிங்க....நாங்க சும்மா சுத்திபார்க்க வந்தோமுங்க” என மணி பயத்தில் சத்தமாக உளற
“ஐயோஓஒ இந்த கொசுவ முதல்ல அடிச்சு துரத்துடி என கோபமாக சொன்ன பூரணி இவளே நம்ம காட்டி கொடுத்ருவா போல இருக்கே என்றவள் இல்லடி அங்க இருந்து சத்தம் வருது” என்றபடி அந்த திசை நோக்கி நடந்தாள்.
அதற்குள் சாந்தி “ரொம்ப நேரமாகிச்சு ...வா போகலாம்” என சொல்லவும்
“இருடி என்னனு பார்த்திட்டு போலாம்” என சத்தம் வரும் திசை நோக்கி நடந்தனர் மூவரும்.அங்கு ஐந்து ஆண்கள் நின்று கொண்டு இருக்க மனதிற்குள் சற்று பயம் இருந்தாலும் வெளியில் காட்டி கொள்ளாமல் “யாரு அது” என்றபடி அருகில் சென்றால் பூரணி.

அருகில் சென்றவள் அங்கு புகழ் மற்று சிலர் நிற்பதை பார்த்தவள் “அட நீதானா ...நான் கூட வேற யாரோன்னு பயந்துட்டேன்.....இந்த புள்ள பூச்சி தாண்டி நிக்குது பயபடாம வாங்க” என சாதரணமாக சொல்லிவிட்டு அவள் அசால்ட்டாக நடையை கட்ட
ஏற்கனவே அவர்கள் பேசியதில் கோபத்தில் இருந்தவன் அவளின் உதாசீனம்மேலும் அவனை வெறி ஏத்த அவளை முறைக்க
அதற்குள் சுற்றி இருந்த நண்பர்கள் அவனை பார்த்து கேலியாக சிரித்தவாறே “டேய் புள்ள பூச்சியாண்டா நீ ..... நீ அவங்களுக்கு சப்போர்ட் பண்ணி எங்களை அடிக்கிற ஹஹஹஹா என கிண்டலாக சிரித்தவர்கள் ஏனுங்க நீங்க சொன்னா அது சரியாதான் இருக்குமுங்க” என பூரணியை பார்த்து சொல்ல
அதற்குள் சாந்தியும் மணியும் “வாடி போலாம் .....ஏற்கனவே ரொம்ப நேரமாகிடுச்சு” என அவளை இழுக்க
அப்போதே கிளம்பி இருந்தால் அதற்கு பின் வந்த நிகழ்வுகளை அவள் தவிர்த்து இருக்கலாம்.ஆனால் சில நேரங்களில் நம்மை மீறி காலம் நமது செயலை நிர்ணயிக்கிறது.இப்போதும் அது தான் நடந்தது.
பூரணியும் புகழுக்கும் நடுவே ஒரு பனிப்போர் எப்போதும் இருந்து கொண்டே இருந்தது.அது போர் என அவள் நினைக்க அவனோ அதை பனிமூட்டமாக நினைத்து பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.காலநேரம் வரும்போது பனிமூட்டம் களைந்து தன் அன்பு அவளுக்கு புரியும் என அவன் நினைத்து கொண்டு இருக்க அனால் காலம் செல்ல செல்ல அவள் மனதில் அவன் மீது வெறுப்பு வளர்ந்ததே தவிர அன்பு மலரவே இல்லை.அதை அறியும் மனநிலையிலும் புகழ் இல்லை.
இப்போதும் அவளுக்காக அவன் பேசிக்கொண்டு இருக்க அவளோ மற்றவர்கள் முன்பு அவனை அவமானபடுத்தி கொண்டு இருந்தாள்.அவர்கள் பேசியதும் நகர்ந்தவள் நின்று அவர்களின் அருகில் வந்தாள்.
அந்த கும்பலில் ஒருவன் “ஏனுங்க இப்போ அந்த மரத்துல ஏறி குதிச்சிங்கலே இது அடிக்கடி நடக்கிறதா” என அவளை ஒரு மாதிரி மேலும் கீழும் பார்த்துகொன்டே நக்கலாக கேட்கவும்
அவர்கள் பேச்சின் உள் அர்த்தத்தை அறியாமல் அவளோ “அச்சச்சோ நீங்க பார்த்துடிங்களா என திருதிருவென முழித்தவள் அது வந்து..போய்” என தடுமாற
“பரவாயில்லைங்க ....உங்க தைரியத்தை பார்த்து எங்களுக்கு புல்லரிச்சு போய்டுச்சு” என அவர்கள் அவளை இரட்டை அர்த்தத்தில் புகல அது தெரியாமல் அவள் மகிழ்ச்சியில் சிரித்து கொண்டே நின்றாள்.
புகழோ கோபத்தின் கொதி நிலையில் இருந்தவன் “ஏய் நீ முதல்ல இங்கிருந்து கிளம்பு” என அதட்டும் குரலில் சொல்லவும்
அதற்குள் அவன் நண்பர்கள் “ஏண்டா மிரட்ற ...பாவம் சின்ன பொண்ணு” .........என அவளுக்கு சார்பாக பேச
உடனே பூரணிக்கு சந்தோசத்தில் தலை கால் புரியாமல் “அது அப்படிதான் உலரும்...நீங்க கண்டுக்காதீங்க”.... என அவர்கள் சார்பாக பேசினாள்.
அதற்குள் மணி “பூரணி வா போகலாம் நேரமாச்சு....எங்க ஆத்தா என்னை தேடிட்டு வந்திடும்” என அவசரப்படவும்
“பூரணி அவங்க கூப்பிட்ராங்கள நீ முதல்ல இங்கிருந்து கிளம்பு”...என கோபத்துடன் அவன் பற்களை கடித்து கொண்டே சொல்ல
அவனது கோபம் அவளை மேலும் உற்சாகபடுத்த
.” நான் போவேன்...இல்ல இங்கே இருப்பேன்...நீங்க யாரு அத கேட்க என திமிராக பேசியவள் நீங்க எல்லாம் ஏன் இங்க நின்னுகிட்டு இருக்கேங்க.... எங்க போகணும்” என அவர்களிடம் நிண்டு பேசி அவனை எரிச்சல் படுத்தி கொண்டு இருந்தாள்.
“நாங்க நாங்க” என அவர்கள் தடுமாற
புகழின் கோபமான முகத்தை பார்த்து கொண்டே “நான் வேணா உங்களுக்கு உதவி பண்றேன்...எங்க போகணும்னு சொல்லுங்க”என கேட்டாள்.
அதற்குள் ஒருவன் “உங்களோட வரதுனா எங்க வேணாலும் போகலாமுங்க” என வழிந்து கொண்டே சொல்லவும்
அவளோ “என்னது” என்றவாறு முகத்தை சுளிக்கவும்
“இல்லைங்க ஊருக்குள்ள போகணும்.....அதான்” என ஒருவன் இடையில் புகுந்து சமாளிக்கவும்
“அப்படியா வாங்க நான் கூட்டிட்டு போறேன்” என சொன்னாள்.
புகழோ அதற்கு மேல் பொறுமை இல்லாமல் “ஏய் உனக்கு அறிவு இல்லை...எத்தனை முறை சொல்றது...முதல்ல இங்கிருந்து கிளம்புடி” என பூரணியை பார்த்து நடந்ததை சொல்ல முடியாமல் அதட்டும் குரலில் அவளை விரட்டவும்
அதுவரை கிண்டலும் கேலியுமாக பேசி கொண்டு இருந்த பூரணி “என்னது டீயா என கோபத்துடன் கேட்டவள் நான் போகமாட்டேன்....இங்க தான் இருப்பேன்....உன்னால என்ன பண்ண முடியும்” என கோபத்தில் என்ன செய்கிறோம் என் தெரியாமல் அவர்களில் ஒருவன் அருகில் சென்று நின்றாள்.
அதுவரை மட்டும் தான் அவள் நினைவில் இருந்தது.அதற்கு பின்பு பளார் பளார் என்ற சத்தம் மட்டுமே கேட்க வேறு எதுவும் அவள் மூலையில் ஏறவில்லை.சில வினாடிகள் தலை சுற்றி அப்படியே நிற்க அவள் கைகளை முறித்து விடுபவன் போல கெட்டியாக பிடித்து கொண்டு அவள் எதிரில் நின்றவன் அவங்க ஊரு கருப்பண்ணன் சாமி போல் கண்கள் சிவக்க, முகம் முழுவது கோபத்தில் கொதித்து கொண்டு இருக்க கையில் கிடைத்த தென்னை மட்டையை எடுத்து மீண்டும் “என்னடி சொன்ன...என்னடி சொன்ன..நீ போவியா...இப்படி அடங்காம திரியாதனு எத்தன முறை சொன்னேன் “ என ஆத்திரத்தில் அவளை விலாச இதை சற்றும் எதிர்பார்க்காத பூரணி முதல் அடியில் துள்ளி குதித்தவள் அவனது ஆக்ரோசத்தை பார்த்து அப்படியே சிலை போல் நின்றாள். ஒரு நிமிடம் என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை.இதை யாரும் எதிர்பார்க்கவும் இல்லை ... சில வினாடிகளுக்கு பிறகு முதலில் அதிர்ச்சியில் இருந்து மீண்டது சாந்தி தான்.“ஐயோ விடுங்க அண்ணா ..விடுங்க” என்றவாறு அவனை பிடித்து நிறுத்த அதற்குள் நண்பர்கள் அனைவரும் அவனை பிடித்து அடக்க ஆனால் அதற்கும் அடங்காமல் கோபத்தில் திமிறி கொண்டு இருந்தான்.
சில நொடிகளில் எல்லாம் நடந்து முடிந்து விட அனைவரும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவே வெகுநேரமாமனது.அவனது நண்பர்கள் திகில் அடித்தாற் போல் நின்று கொண்டு இருந்தனர்.
சிறிது நேரத்தில் கோபம் தணிந்து நண்பர்களிடம் இருந்து தன்னை விடுவித்து கொண்டு கல் போல் சம்ஞ்சிருந்த பூரணியின் அருகில் வந்தவன் அவள் கைகளில் எல்லாம் தென்னை மட்டையின் வேகம் சாரி சாரியாக இருக்க,முகம் எல்லாம் பழுத்து சிவந்து இருக்க அசையாமல் அப்படியே நின்று இருந்தாள் பூரணி..
அதை பார்த்ததும் கோபம் எல்லாம் மறைந்து வேதனை அதிகமாக “ஐயோ பூரணி ரொம்ப வலிக்குதா” என்றபடி அவன் அவளை நெருங்க
அவனது அருகாமையை உணர்ந்தவள் சட்டென்று வேகமாக பின்னே நகர்ந்து அவனை நிமிர்ந்து பார்க்க அவள் கண்களில் தெரிந்த அக்னியில் அவன் பொசுங்கிவிட்டான்.
அப்படி பார்க்காத பூரணி என அவன் ஆரம்பிக்கும் முன் “டேய் என்னை அடிச்சுட்டிலே.....இத்தனை பேருக்கு முன்னாடி என்னை அடிச்சு அவமானபடுத்திடிலே....... குடும்பத்துல இருக்க பகையை என்னை அடிச்சு தீர்த்துகிட்ட .........இனி நான் செத்தாலும் உன் முகத்தில் முழிக்க மாட்டேன்....நான் நினச்சா இப்பவே எங்க அப்பாகிட்ட சொல்லி உன்னை இங்கே பழிவாங்க முடியும்.ஆனா நான் அப்படி செய்யமாட்டேன்.....போடா என்றவள் அதற்கு மேல் அவளால் அங்கு நிற்க முடியவில்லை ஆத்திரமும் அழுகையுமாய் .திரும்பி நடக்கும்போது அவள் தடுமாற
பார்த்து பூரணி என அவன் வேகமாக அருகில் வர
அவள் திரும்பி அவனை முறைத்தவேகம் அவனை அப்படியே நிற்க வைத்தது.
புகழுக்கும் அவள் எதற்கு சுவர் ஏறினாள் என்று தெரியாது.ஆனால் நண்பர்கள் கேலி செய்யவும் அவனது கோபம் தலைக்கு ஏற அதே நேரத்தில் நீ யார் என்னை கேட்க என அவள் திமிராக பதில் சொல்லவும் அவனது முன்கோபம் முந்திக்கொள்ள பூரணி பலியாடுயானாள்.
“ஏண்டா புகழ் நாங்க ஏதோ விளையாட்டுக்கு அப்படி சொன்னோம்...நீ இப்படி பண்ணிட்டியே” என அவனது நண்பர்கள் எல்லாம் முடிந்த பின் நல்லவர்களாக பேசவும் அவர்களை நிமிர்ந்து பார்த்து முறைத்தவன் பின்னர் ஏதும் பேசாமல் நடந்தான்.
“ஏண்டா புகழ் நாங்க ஏதோ விளையாட்டுக்கு அப்படி சொன்னோம்...நீ இப்படி பண்ணிட்டியே” என அவனது நண்பர்கள் எல்லாம் முடிந்த பின் நல்லவர்களாக பேசவும் அவர்களை நிமிர்ந்து பார்த்து முறைத்தவன் பின்னர் ஏதும் பேசாமல் நடந்தான்..இரவு முழுவதும் பூரணியின் முகமே அவன் முன் வந்து அவனை சித்ரவதை செய்ய அவனும் அடிக்க வேண்டும் என நினைக்கவில்லை. தனக்கு உரிமையானவள் தன்னை அவமதித்து வேறு ஒருவன் அருகில் சென்று நின்றதும் அவனால் தாங்கி கொள்ளமுடியவில்லை. அதனால தான் தன் நிலை மீறி அப்படி அவன் நடந்து கொண்டான். ஐயோ எப்படி வலித்திருக்கும் ...ஆனால் அதை தாங்க கொண்டு அப்படியே நிற்கிறாள் என்றால் அந்த அளவு என் மீது வெறுப்பா அவளுக்கு நினைக்க நினைக்க அவன் நெஞ்சே வெடித்து விடும் போல் இருந்தது.
மறுநாள் அவள் எப்போதும் துணி துவைக்க வரும் ஆற்று ஓரத்தில் அவன் காத்திருக்க ஆனால் பூரணி வரவில்லை.அவனும் இரண்டு மூன்று நாட்கள் பார்த்தவன் பின்னர் அவளது தோழி மணியின் வீட்டிற்கு சென்று அவளை பற்றி கேட்க “அவளுக்கு காய்ச்சல் அண்ணா என்றவள் ஆனாலும் நீங்க அன்னைக்கு அப்படி நடந்துகிட்டது ரொம்ப தப்பு.பூரணிக்கு மல்லிகைபூ அப்படினா உயிரு.இந்த காமாட்சி புள்ள அவங்க வீட்ல மட்டும் தான் அடுக்கு மல்லிகை பூ இருக்குன்னு சொல்லி பூரணியை கடுபேத்திகிட்டு இருந்தா..... அதுக்காக தான் அன்னைக்கு அவளுக்கு தெரியாம பறிச்சு அவகிட்ட காட்டனும் அப்டின்னு சொல்லி அந்த நேரத்துல அங்க வந்தோம்.நீங்க என்னடானா தப்பா நினச்சு இப்படி பண்ணிட்டிங்க என அவள் ஆதங்கபடவும்
“இல்லை இல்லை மணி...நான் அவளை தப்பா நினைக்கலை என்றவன் என் கூட இருக்கிறவங்க” என ஆரம்பித்து அந்த வார்த்தையை சொல்ல விரும்பாமல் அது தெரிந்தால் அவள் வேதனை படுவாள் என நினைத்து “ விடு மணி....ஏதோ நடந்திடுச்சு...நான் பூரணியை பார்த்து மன்னிப்பு கேட்கணும்” என்றான்.
அன்றே அவன் அதை சொல்லி இருந்தால் இன்று அவள் இந்த அளவு புகழை அவள் வெறுத்திருக்க மாட்டாள். அவளது நன்மைக்காக அவன் செய்யும் ஒவொவ்று செயலும் பூரணியின் மனதில் ரணத்தை தான் ஏற்படுத்தியது..இது தான் விதி வழி நடப்பது என்பதா ?
மணியோ “அச்சோ அண்ணா கெட்டுது போங்க......ஏற்கனவே அவ உடம்புல இருக்க காயத்தை பார்த்து வீட்ல ஏகப்பட்ட கேள்வி...மரம் ஏறி சறிசுடுச்சு அப்டின்னு சொல்லி இருக்கா.....நீங்க அவ முன்னாடி போய் சொல்லி வேற ஏதாவது பிரச்சனை ஆகிடுச்சுனா வேண்டாம் விட்ருங்க” என சொல்ல அதற்கு மேல் ஏதும் செய்யமுடியாமல் திரும்பிவிட்டான் புகழ்.
வரும் வழியில் எல்லாம் யோசித்து கொண்டு வந்தவன் தன் தாயிடம் சென்று அம்மா அந்த ஊரு ஓரத்துல இருக்க இடத்துல நான் மல்லிகை தோட்டம் போடலாம்னு இருக்கேன் என சொல்லிவிட்டு அதற்கான வேளையில் இறங்கினான்.
கட்டாந்தரையாக இருந்த இடத்தை நந்தவனமாக மாற்றி அதில் முதலில் பூத்து பூக்களை தோழிகளிடம் கொடுத்து பூரணியிடம் கொடுக்க அவளோ அதை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.உனக்காகத்தான் பூரணி அந்த தோட்டமே என அவள் தோழிகள் சொன்னதில் இருந்து அந்த பக்கம் செல்வதை கூட நிறுத்திவிட்டாள்.
மல்லிகையின் மனம் போல் புகழின் இதயத்தில் அவள் நிரம்பி இருக்க ஆனால் பூரணியின் மனதில் புகழின் பிம்பம் மெல்ல மறைந்து கொண்டு இருந்ததை அவன் அறியவில்லை.
அதன் விளைவு இப்போது இந்த திருமணத்தில் இருவரும் இரு துருவங்களாக நிற்கின்றனர்.


நிலவுக்கு போட்டியாக
மண்ணில் தோன்றிய
அழகிய விடிவெள்ளி நீயடி !
உன் முதல் பார்வையின்
முகவரி எப்போது நானானானோ
அப்போதே என் வாழ்வின்
உயிர் துடிப்பு நீயாகிவிட்டாய்!
மலரின் மனமும் பாலின் மென்மையும்
ஒருங்கே பெற்ற என் உயிரோவியமே !
உன் அருகில் இருக்கும் ஒவொவொரு நொடியும்
நான் மீண்டும் மீண்டும் பிறக்கிறேனடி!
மலர்குவியலாய் என் கைகளில் தவழ்ந்தவள்
இன்று என் அருகே மனையாளாக நிற்கிறாள்.
காலம் செய்த சதியால் வெறுப்பை என் மீது நீ உமிழ

நானோ அளவற்ற காதலை உன் மீது பொழிய

உனது அக்னி தணலை

எனது அன்பு என்னும் அஸ்திரம்

அணைத்துவிடும் என்று காத்திருக்கிறேனடி!!!!!!!!!
 
Top