• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Lashmi Ravi

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
145
அத்தியாயம் -17

நிலவுக்கு காத்திருக்கும் வானம் போல அவன் வரவை எதிர்பார்த்துஇவள் அமர்ந்திருக்க ஆனால் அவனோ சாப்பிட்டு முடித்ததும் பாண்டியின் அறையை நோக்கி சென்றவன் அவனை சமாதானபடுத்தி விட்டு வெகுநேரம் கழித்து தான் வெளியே வந்தான்.
அதற்குள் பூரணியோ உட்கார்ந்து இருந்த நிலையிலேயே தூங்கிவிட்டாள். உள்ளே நுழைந்தவன் கட்டிலின் கீழே அமர்ந்தவாறு அவள் தூங்கி கொண்டு இருப்பதை பார்த்தவன் “நல்லவேலை இன்னைக்கு தப்பிச்சோம் தூங்கிட்டா “ என மனதிற்குள் நினைத்தபடி அவள் அருகில் சென்று அவளை தூக்குவதற்கு கைகளை கொண்டு செல்ல அவளோ சற்று நெளியவும் அப்படியே நின்றவன் “இப்போ ஏதாவது செஞ்சு கண்ணை திறந்தா அவ்ளோதான் ...இப்படியே தூங்கட்டும்” என சொல்லிகொண்டே தலையணை மட்டும் எடுத்து அருகில் வைத்து மெல்ல கீழே படுக்க வைத்தான்.
பின்னர் அவனும் உடைமாற்றி விட்டு தூங்கி கொண்டிருக்கும் மனைவியின் அருகில் அமர்ந்தவன் அவளது முகத்தை கண்ணெடுக்காமல் பார்த்து கொண்டே இருந்தான்.அவளது முகத்தின் ஒவ்வொரு பாகத்தையும் ரசித்து கொண்டே வந்தவன் .....”இங்க பாரு பச்சை குழந்தை மாதிரி முகத்தை வச்சுகிட்டு நேத்து எப்படி எல்லாம் பேசிட்டா ......பூசணிகுட்டி உனக்கு இவ்ளோ கோபம் வருமா?ம்ம்ம் கோபத்துல முகம் சிவக்குது..மூக்கு விடைக்குது என கொஞ்சலாக அவள் மூக்கை ஒற்றை விரலால் லேசாக வருடியபடி சொன்னவன் ....நான் வெளியே போகனுமா ? உனக்கு ரொம்ப கொழுப்புடி.......எங்க மாமன சோறு போட்டு வளர்க்க சொன்னா கொழுப்பா போட்டு வளர்த்து இருக்கான்.....அதான் வாய் இந்த அளவு நீளுது என சொல்லியபடியே அவள் இதழ்களுக்கு விரலை கொண்டு வந்தவன் இந்த வாய்க்கு சரியான பூட்டு ” என சொல்லி நிறுத்தியவன் அவள் இதழ் ஸ்பரிசத்தில் மனம் சற்று தடுமாற, மெதுவாக இதழிளில் விரல்களால் கோலமிட , அவளோ “ப்ச்” என்ற சத்தத்துடன் இதழ்களை சுளிக்க..அவன் உடலோ சிலிர்க்க “ ஐயோ கொல்றாளே” என முனகியவன் வேகமாக அங்கிருந்து விரலை நகர்த்தியவன் இருடி இதுக்கு சீக்கிரமாவே பூட்டு போட்றேன்” என கிறக்கமாக சொன்னவன்.........சட்டென்று அந்த மன நிலை மாறி முகத்தில் ஒரு இறுக்கம் தோன்ற “உன்னை ராணி மாதிரி வச்சுக்கணும் ,உன்னோட சுகம் துக்கம் எல்லாமுமா நான் மட்டுமே இருக்கணும்.....நீ கனவுலையும் நினைக்காத வாழ்க்கையை நான் உனக்கு கொடுக்கணும்னு நிறைய நினைச்சு இருந்தேன்டி ....ஆனா எல்லாத்தையும் உன்னோட அவசர புத்தியினால் சிதச்சிட்டியே......ஆசையா உன்னை அணைக்கவும் முடியாம அதே சமயத்துல வெறுக்கவும் முடியாம தவிக்கிறேன்டி.உன்னை பத்தி எனக்கு தெரியும் கண்ணம்மா.....நான் நேத்து கேட்டது உன்னை எந்த அளவுக்கு ரணபடுத்தி இருக்கும்னு...ஆனா நான் பட்ட வேதனையை விட நீ இப்போ படறது கடுகளவுதான் என தன் மனதில் உள்ளதை எல்லாம் அவளிடம் கொட்டி கொண்டு இருந்தவன்....சீக்கிரம் நீயும் நானும் ஒன்னு சேரனும் பூரணி என சொல்லியபடி அவள் கைகளை எடுத்து நெஞ்சில் வைத்தவன் அப்படியே சுவற்றில் சாய்ந்து கண் மூட சிறிது நேரத்தில் உறங்கியும் போனான்.
மறுநாள் காலை ஏதோ சத்தம் கேட்க விழிப்பு வர கண்களை திறந்து பார்த்த பூரணி இரவு விளக்கின் வெளிச்சத்தில் தான் கீழே படுத்து இருப்பது தெரிய, யோசித்தவள் பின்னர் புகழுக்காக காத்திருந்து அப்படியே உறங்கிவிட்டோம் போல இருக்கு...அச்சோ நிறிய பேசணும்னு இருந்தேன்...இன்னியோட இதுக்கெல்லாம் முடிவு கட்டணும்னு நினைச்சு இருந்தேன்....எப்படி இப்டி தூங்கினேன் என புலம்பி கொண்டே “அப்போ அந்த ஓரங்கொட்டான் மேல படுத்து இருக்கானா என்னை கீழ தள்ளிட்டு” என அந்த நேரத்திலும் புகழை கரித்து கொட்டி கொண்டே எழ முயற்சிக்க ஆனால் அவள் கைகள் நகர மறுத்தது.
அவள் வேகமாக திரும்பி பார்க்க அங்கே அவள் தலைக்கு மேலே அவன் வயிற்று பகுதி இருக்க அரணாக சுருண்டு அவள் கைகளை பிடித்தபடி உறங்கி கொண்டு இருந்தான் புகழ்.சற்று நேரம் அவளுக்கு ஏதும் புரியவில்லை.....திருதிருவென முழித்தபடி அப்படியே பார்த்து கொண்டு இருந்தவள் அதற்குள் “ஆத்தா பால்காரன் வந்து இருக்கனுங்க “என்ற சத்தம் கேட்கவும் நேற்று பேச்சியமாள் சொன்ன வார்த்தை அவளுக்கு நியாபகம் வரவும் “அச்சோ இன்னைக்கு லேட்டா போனோம் அவ்ளோதான்” என நினைத்தபடி வேகமாக எழ முயன்றாள். அவளது கை அசைவில் விழித்து கொண்ட புகழும் என்னவென்று வேகமாக எழுந்து அமர்ந்தான்.
இருவரும் அருகருகே அமர்ந்திருக்க ஒருவரை ஒருவர் சிலவினாடிகள் பார்த்து கொண்டு இருக்க கலைந்த கேசமும்,மாசற்ற அவளது முகமும் அவனது மனதில் அச்சாக பதிந்தன.
“சித்த இருடா வாரேன்...இவன் ஒருதான் விடியகாத்தால ரவுசு போட்டுக்கிட்டு” என்ற பேச்சியம்மாவின் குரல் கேட்கவும் மோனநிலை களைந்த பூரணி அவனை முறைத்துகொண்டே “நீங்க என்ன நினைச்சுட்டு” என வேகமாக பேச ஆரம்பிக்க
“வேண்டாம் பூரணி....இப்போதுதான் தூங்கி எழுந்திரிச்சு இருக்கோம்.....எதா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம்.....ரொம்ப நாளைக்கு அப்புறம் என் மனசு ரொம்ப சந்தோசமா இருக்கு ....அதை கெடுத்திடாத ப்ளீஸ்” என அவள் பேசுவதற்கு முன் அவன் தடுத்துவிட அவளோ என்ன சொல்வது என தெரியாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.
பின்னர் புகழ் எழுந்து வயலுக்கு கிளம்ப தயராக பூரணியும் காலை கடன்களை முடித்து விட்டு தயாராக கூடத்திற்கு வந்தாள்.
தொழுவத்தில் பால்காரர்கள். பால் பீச்ச அதை பார்த்துக்கொண்டு நின்று இருந்தார் பேச்சியம்மாள். பத்து மாடுகளுக்கு மேல் இருப்பதால் நான்கைந்து பால்காரர்கலே வந்து பால் பீச்சி கொண்டு செல்வார்கள்.
அப்போது “ஏனுங்காத்தா மவனுக்கு கண்ணாலம் பண்ணிட்டிங்க......இனி இந்த வேலை எல்லாம் அவங்ககிட்ட கொடுத்திட்டு நீங்க அக்கடான்னு உட்காரவேண்டியாது தான....இன்னும் ஏன் நீங்களே எல்லாம் பார்த்துகிட்டு இருக்கீங்க ?” என்று பால் பீச்சிகொண்டே ஒருவர் கேட்க
“ம்ம்ம்ம் என்னடா பண்றது பெரியவனும் பொழுது விடிஞ்சதுல இருந்து பொழுது சாயதின்னியும் உழச்சு களைச்சு போய் வாரான்...... சின்னவன் இன்னும் விளையாட்டு புள்ளையாவே இருக்கான்......எனக்கு என்னடா வேலை ...குத்துகல்லாட்ட நல்லாதான இருக்கேன்...உடம்புல சத்து இருக்கறவரை வேலை செயனும்டா” என சொல்லிகொண்டே “டேய் காட்டமுத்து என்றபடி அவனருகில் சென்றவர் ஏண்டா இப்படிதான் பால் அளப்பியா ?...உலக்குல ஊத்தறது பாதி...உன் பாத்திரத்துல ஊத்தறது முக்கால்வாசி.....நீ முதல்ல எழுந்திரு..நான் அளக்கிறேன்” என அவர் சத்தம் போடவும்
“என்ன ஆத்தா நீங்க...ஏற்கனவே உங்க மாட்டு பால் தண்ணீ மாதிரி இருக்கு...அதான் சிந்த சிதற ஊத்தும்போது பாத்திரத்துல சிந்திடுது” எனஅவன் சமாளிக்கவும்
“ஏண்டா இருட்டு வீட்டுக்குள்ள போனாலும் திருட்டு கை நிக்காதுன்னு சொல்லுவாங்க......நீ எடை கட்டி பாலை ஊத்திபுட்டு எங்க வீட்டு பாலை குறை சொல்றியா? கேட்டு பாரு ஊருக்குள்ள போய் சொல்லி பாரு .....யாரும் நம்ப மாட்டங்க.... ...நீ என்கிட்ட சட்டம் பேசறியா” என ஆரம்பிக்கவும்
“என்னமா இந்நேரத்துல சத்தம்” என்றபடி அங்கு வந்தான் புகழ்.
“இல்ல தம்பி இவன் பால் அளக்கிறது சரியில்லை...முதல்ல இவனை நிப்பாட்டு ” என அவன் மேல குற்ற பத்திரிக்கை வாசிக்க
“விடுங்கம்மா புள்ள குட்டிக்காரர்....பொழச்சுட்டு போறார் ....என்ன அண்ணே...எதா இருந்தாலும் கேட்டு வாங்கிக்குங்க ......ஏமாத்த கூடாது என்றவன் சரி நான் பார்த்துகிறேன்.....நீங்க உள்ள போங்க” .என்றான் புகழ்.
“இப்படியே விட்டு தான் இவங்க நல்லா தொக்கு கண்டுகிட்டாங்க....எல்லாரும் லிட்டர் நாப்பது சொன்னா நீ முப்பது சொல்ற....அதான் இவனுக இந்த வேலை பண்றானுக” என அவர் முனகவும்
அதற்குள் சத்தம் கேட்டு பூரணியும் அங்கு வந்து நின்றாள்.
அவள் வந்ததும் பால் பீச்சுபவர்கள் அதை விடுத்து அவளை பார்க்க
அப்போது “இவங்க தான் தம்பி சம்சாரங்களா” என்று ஒருவர் கேட்கவும்
“ஆமாம் அண்ணே...பேரு பூரணி” என புகழ் அறிமுகபடுத்தினான்.
“நீங்கதான தம்பி கண்ணாலத்துக்கு எங்களுக்கு எல்லாம் சொல்லவே இல்லை..... அதான் கேட்டோம் “ என அவர் சொல்லவும்
“இல்லண்ணே நாளு ரொம்ப கம்மியா இருந்திச்சு அதான் யாருக்கும் சொல்ல முடியலை என சமாளித்தவன் இனி இங்க தான் இருக்க போறா” என சொல்லிவிட்டு “அப்புறம் அந்த செவலக்காளை ரெண்டு நாலா சரியில்லை.....கொஞ்சம் நோவு மாதிரி தெரியுது......உங்களுக்கு அனுபவம் இருக்குல...பார்த்து சொல்லிட்டு போங்கண்ணே...ஏதாவது பிரச்சனைனா வைத்தியர வந்து பார்க்க சொல்லலாம்” என பேச்சை மாற்றினான் புகழ்.
அவர்கள் பேசிக்கொண்டு இருக்க இங்கு காத்தமுத்து பேச்சியம்மாவிடம் “அப்புறம் என்னாத்தா மருமக வந்துட்டாப்டி...இனி உங்களுக்கு வேலையே இல்லை...நிம்மதியா இருக்கலாம்....இருக்கிற இடத்துக்கே எல்லாம் வந்திடும் “ என சிரித்து கொண்டே கிண்டலாக சொல்லவும்
“ம்ம்ம்ம் வித்தாரக்கள்ளிவிறகு ஒடிக்கப்போனாளாம் கத்தாழ முள்ளு கொத்தோடஏறுச்சாம்” என தனது இழுவையை ஆரம்பித்தவர் “போடா பொழப்பத்தவனே...அழுது அழுது பெத்தாலும் அவங்க அவங்க தான் பெக்கணும்...செத்தாலும் பொழச்சாலும் நம்ம வேலையை நம்ம தான் செய்யணும்...... பேச வந்திட்டான் பேச்சு...வந்த சோலிய முடிச்சுட்டு முதல்ல கிளம்பு ” என முகத்தை சுளித்து கொண்டு வெடுக்கென சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றார் பேச்சியம்மாள் ..
இங்கு பூரணியோ ஏதும் பேசாமல் அப்படியே நிற்க
அந்த பால்காரர்களோ அவளையும் புகழையும் மாறி மாறி பார்க்க
புகழோ அதை கண்டுகொள்ளாமல் “சரி அண்ணே நீங்க முடிச்சு பூரணிகிட்ட கணக்கு கொடுத்திட்டு கிளம்புங்க ...எனக்கு வயல்ல கொஞ்சம் வேலை இருக்கு” என்றபடி அங்கிருந்து நகர்ந்தவன் சற்று தூரம் சென்று மீண்டும் திரும்பி வந்து “ஆமா நீ டீ குடிப்பியா ...நம்ம வீட்ல அது மட்டும் தான் இருக்கு வேற ஏதும் இல்லை....பூஸ்ட், ஹோர்லிக்ஸ் அந்த மாதிரி வேணும்னா சொல்லு வரும்போது வாங்கியாறேன்” என பூரணியிடம் அக்கறையாக கேட்கவும்
ஏற்கனவே இவர்களுக்கு முன்னால் பேச்சியம்மாள் பேசியதில் அவள் கடுப்புடன் இருக்க அதற்கு ஏற்றார் போல புகழும் அதற்கு மறுப்பு சொல்லாமல் இருந்துவிட்டு இப்போது இப்படி கேட்டதும் “ம்ம்ம்ம் பூச்சி மருந்து வேணும்...அதை வாங்கிட்டு வாங்க” என்று கோபமாக சொன்னாள்.
முதலில் புரியாமல் தலை ஆட்டிய புகழ் பின்னர் “எனதூஊஊஊஉ” என்றபடி அவளை பார்க்க
அவளோ அவனை முறைத்தபடி திரும்பி வீட்டிற்குள் சென்றாள்.
“ஆஹா இப்பவே ஆரம்பிச்சுட்டாளா....டேய் புகழ் உன் நிலமை ரொம்ப திண்டாட்டம் தான் ” என மனசுக்குள் சொல்லி கொண்டவன் பேச்சியம்மாள் பேசியது புகழுக்கும் சற்று மனவருத்தம் தான்.ஆனால் அவன் வந்த நாளே பூரணியை சமாளிக்க அவர்தான் சரியான ஆள் என்று முடிவு செய்து இருந்தான்.அதனால் தான் அவன் பூரணி முன்னால் அவரை ஏதும் சொல்லவில்லை.ஆனால் இதைப் பற்றி அம்மாவிடம் பேசவேண்டும் என்று தான் நினைத்து கொண்டு இருந்தான்.
அதற்குள் பால்காரர்கள் கிளம்பவும் அவர்களுக்கு கணக்கை பார்த்து கொடுத்துவிட்டு அவனும் வயலுக்கு புறப்பட்டான்.
இங்கு பூரணியோ வீட்டிற்குள் சென்றவள் என்ன வேலை பார்ப்பது என தெரியாமல் முழித்து கொண்டு நிற்க
அவளை பார்த்ததும் “ இப்படி வெறுமனே நின்னுகிட்டு இருந்தா எப்படி.... முதல்ல போய் குளிச்சுட்டு வாசலை மொழுவி கோலத்தை போடு , புதுசா வாங்கி இருக்க சீமை மாட்டுக்கு தீவணத்தை போட்டு தண்ணிய காட்டு.... அப்படியே கிழக்காலே நல்ல தண்ணீ கிணறு இருக்கு....போய் நாளு குடம் எடுத்திட்டு வந்தீனா உலைய பத்தவைக்கலாம்....அதை விட்டுபுட்டு இப்படி நின்னா எல்லாம் நம்ம கையை தேடி வருமா என்ன ?” என படபட வென பேச்சியம்மாள் அவருடைய பாணியில் வேலையை சொல்லவும்
பாதி புரிந்தும் புரியாத நிலையில் சரி என்றபடி தலை ஆட்டிகொண்டே அவர் சொன்ன வேலையை செய்ய சென்றவள் புது இடம், புது வேலை கொஞ்சம் தடுமாறி போனாள் பூரணி.அவர்கள் வீட்டில் இந்த வேலை எல்லாம் மணியம்மை பார்த்து கொள்வார்.பூரணிக்கு துணி துவைக்கும் வேலை மற்றும் வீடு துடைக்கும் வேலை மட்டும்தான் இருக்கும். அதற்கும் மாணிக்கம் திட்டுவார்.சின்ன பொண்ண ஏன் சிரமபடுத்திறனு சொல்லுவார் .....அதனால் இந்த வேலைகளை பார்த்து இருக்காளே தவிர செய்தது இல்லை.இங்கு செய்வதற்குள் அவள் களைத்து போனாள்.
மாட்டு தொழுவத்திற்கு சென்று மாட்டுக்கு தண்ணீ காட்ட இழுத்து கட்ட, புது மாடு இவளை பார்த்ததும் கொஞ்சம் மிரள இவளோ “ஏய் எதுக்கு இப்படி மிரள்ற....இந்த வீட்டு ஆளுங்கள விட நான் நல்லா பார்த்துக்குவேன்”...என அதனுடன் அவள் பேச்சுவார்த்தை நடத்த....ஆனால் அதுவோ அது புரியாமல் “ ம்ம்ம்மம்மா....ம்ம்ம்மம்ம்ம்மா “ என சத்தம் போடவும் “ஏய் இங்க பாரு......இப்ப எதுக்கு கத்தி ஊற கூட்ற...ஏற்கனவே அந்த அம்மா சாமி ஆட்டம் ஆடும்...இதுல நீ வேற இப்படி கத்தினா அப்புறம் வந்து பேயாட்டம் ஆடும் சொல்லிட்டேன்.... கத்தாம நான் சொல்றத கேளு....” என பேசிகொண்டே அதை இழுத்து கட்ட முயற்சிக்க
அது போடும் சத்தத்தில் “ என்னமா பண்றிங்க ..ஏன் மாடு இப்படி கத்திகிட்டு இருக்கு” என்றபடி தூக்கம் கலைந்த எரிச்சலில் தொழுவத்திற்கு வந்தான் பாண்டி.
அவனை கண்டதும் பூரணி மாட்டை விட்டு விட்டு அப்படியே நின்றாள். ,அதற்குள் மாடு மேலும் கத்த அவனோ முகத்தை சுளித்தபடி “என்ன பண்ணிக்கிட்டு இருக்க என சொல்லிவிட்டு இருக்கீங்க என்றவன் எதுக்கு இப்போ மாட்டோட மல்லு கட்டிக்கிட்டு இருக்கீங்க ......அந்த கயிற கொஞ்சம் லூசா விடுங்க...இப்படி பிடிச்சு இழுத்தா கத்தாம என்ன பண்ணும்...இது கூட தெரியாதா” என அருகில் வந்து கயிறை வாங்கியவன் அதை லாவகமாக பிடிச்சு கட்டினான்.
அவளோ முகத்தை உர்ரென்று வைத்து கொண்டு “தெரிஞ்சா ஏன் இப்படி பண்றோம்...பெருசா சொல்ல வந்துட்டான்...இவன் என்னமோ மாடு கட்றதுல மாஸ்டர் டிகிரி வாங்கின மாதிரி பேசறான்” என அவள் வாய்க்குள் முனக
மாட்டை கட்டிவிட்டு நிமிர்ந்தவன் அவள் வாய் முனுமுனுப்பதை பார்த்ததும் “இங்க பாருங்க .....இந்த வேலை எல்லாம் தெரிஞ்சா செய்ங்க ...இல்லை செய்ய தெரிஞ்சவங்களை கூப்பிட்டு செய்ய சொல்லுங்க.....புது மாடு கட்றது கொஞ்சம் சிரமம் புரிஞ்சுதா என அதிகார தோரணையில் சொன்னவன்......உங்களுக்கு இதெல்லாம் எங்க தெரிய போகுது ...சைக்கில்ல காத்து பிடுங்றது,அடுத்தவன் பொருள எப்படி ஆட்டைய போடறது அதெல்லாம் தான தெரியும் ” என நக்கலாக சொல்லிவிட்டு நகர அப்போது என்று மருது வரவும் பூரணிக்கு வெட்கமாக போய்விட்டது.
கோபத்துடன் அவன் பக்கம் திரும்பி “ டேய் லொடுக்கு பாண்டி என்னை கண்டா பயந்து நடுங்கிட்டு இருந்த...இப்போ எனக்கே நீ சொல்லி தறியா...எனக்குள்ள இருக்க சிங்கத்தை தட்டி எழுப்பிட்ட.......இருடா உனக்கு வைக்கிறேன் ஆப்பு” என மனதிற்குள் சூளுரைத்து கொண்டே வீட்டிற்குள் சென்றாள்.
அவள் நுழையவும் அங்கு பேச்சியம்மாள் “ஏன்டா சின்னவனே நான் அம்புட்டு சொன்னேன் காது கொடுத்து கேட்கலை...இப்போ உங்க அண்ணன் சொன்ன உடனே துரை சமாதானம் ஆகிட்டாறாக்கும்” என அவன் கையில் டீயை கொடுத்தவாறு அவர் கேட்கவும்

பாண்டியோ “அதெல்லாம் ஒன்னும்மில்லை.....அண்ணனோட இளகின மனச எல்லாரும் பயன்படுத்துகிட்டாங்க...பாவம் அண்ணன் ....ஆனாலும் நான் அந்த ஆளு கூட பேசமாட்டேன் சொல்லிபுட்டேன்” என சொல்லவும் யாருக்குமே இதுல விருப்பம் இல்லதாண்டா...ஆனா சூழ்நிலை வேற வழி இல்லை என பேச்சியம்மாவும் தகுமானம் சொல்ல ...என்னம்மா சூழ்நிலை நீயும் அண்ணனை மாதிரியே பேசற...அந்த ஆளு உங்களை நல்லா ஏமாத்தி இருக்கான்..... என சொல்லிகொண்டே டீ குடித்துவிட்டு எழுந்தவன் வாயிற்படியில் பூரணியை பார்த்ததும் முகத்தை திருப்பி கொண்டு வேகமாக தன் அறைக்குள் சென்று விட்டான்.
 

Lashmi Ravi

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
145
அதுவரை எதையும் நினைக்காமல் வேலை செய்து கொண்டு இருந்தவள் அவன் தன் பிறந்த வீட்டை பற்றி பேசியது மனதிற்கு கஷ்டமாக இருக்க வேகமாக அறைக்குள் சென்றவள் அங்கு தலையணை எடுத்து மடியில் வைத்து கொண்டு “என்னமோ இவங்க அண்ணன் ரொம்ப நல்லவனாட்டவும் நாங்க தான் ஏமாத்தி கண்ணாலம் பண்ணிட்ட மாதிரியும் பேசறான்.இவன் குடும்பம்தான் பிராடு ...எங்க அப்பத்தா அப்பவும் சொல்லுச்சு....இது ஒரு பிராடு குடும்பம்னு...எல்லாம் என்னாலதான்..... என சொல்லி புலம்பி கொண்டு இருந்தவள் அதன் பின் அறையை விட்டு வெளியே வரவில்லை.அதற்குள்ளேயே முடங்கி கொண்டாள்.
சிறிது நேரத்தில் “அத்தை...அத்தை என்ன பண்றிங்க” என்றபடி வந்தாள் கனகா.
“ம்ம்ம்ம் வாடியம்மா......இந்நேரத்துல எங்க இந்த பக்கம்....ஏன் உன் மாமியார் ஊர்ல இல்லயா” என திண்ணையில் உட்கார்ந்து அரிசி புடைத்து கொண்டே அவர் கேட்கவும்
“அவங்க இன்னைக்கு களைபுடுங்கிற வேலை இருக்குனு வெள்ளனே வயலுக்கு போய்ட்டாங்க.....இன்னைக்கு ரேசன் கடையில சீனி போடறாங்களாம்...அதான் சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்” என்றவள் எங்க புது பொண்ணு வெளியிலே காணோம்....உள்ள வேலையா இருக்காளா” என கேட்கவும்
“ஏண்டி இப்பதான் வேலை எல்லாம் முடிச்சு வந்து அக்கடான்னு உக்காரேன்..... சொல்லுவார கண்டா விலகி போ சுடுகாட்ட கண்டா தூர போனு நானே பேசாம இருந்தாலும் என் வாயை பிடுங்கிறதுக்குனே கிளம்பி வரீங்களா” என்று அவரது இழுவையை ஆரம்பிக்கவும்
கனகமோ ஒரு பேச்சுக்கு கேட்டா இது என்ன இந்த அத்தை இந்த இழுவை இழுக்குது ...பாவம் அந்த புள்ள என மனதில் நினைத்த படி “நீங்க ஏன் செய்யறிங்க....அதான் என் தங்கச்சி வந்திட்டால்ல ....அவ எல்லா வேலையும் செய்யறா ,,,,நீங்க சிவனேன்னு திண்ணையில உட்கார வேண்டியது தான” என்று அவள் சமாளிக்க
“உன் தங்கச்சிதான...உன்னை மாதிரி தானே இருப்பா.....காலையில கொஞ்சம் வேலை சொன்னேன்......செஞ்சுட்டு அந்த ரூமுக்குள்ள போனவதான் இன்னும் வெளியே வரலை... அங்க அப்படி என்னதா இருக்கோ தெரியலை ...போ நீயே போய் கேளு ...... எனக்கு சோலி இருக்குது...உன்கூட பேச எல்லாம் நேரமில்லை” என்றபடி தன் வேலையை தொடர்ந்தார் பேச்சியம்மாள்.
“பூரணி ...,,ஏய் புள்ள பூரணி ” என்றபடி அறையின் முன் சென்று கதவை தட்டினாள் கனகா.
சத்தம் கேட்டதும் “இருக்கிற தொல்லை பத்தாதுன்னு இது வேற” என சலித்தபடி பூரணி வந்து கதவை திறக்க அவளை இடித்து கொண்டு உள்ளே வந்தாள் கனகா. “என்ன பூரணி வெளியே வரவே மாட்டேன்கிற....நானும் நேத்து நீ வருவேன்னு பார்த்து கிட்டே இருந்தேன்...உன்னை காணோம்...அதான் இப்ப பார்த்திட்டு போலாம்னு வந்தேன்...அப்புறம் நேத்து ராத்திரி எல்லாம் எப்படி...ம்ம்ம் ...ம்ம்ம்” என ஒரு மாதிரி சொல்லி சிரிக்க
பூரணியோ கடுப்பாகி போனவள் “இங்க பாருங்க அக்கா ...எனக்கு பேச நேரமில்லை வேலை இருக்கு” என சொல்லி கொண்டே அவள் நகர முற்ப்பட
“சரி...சரி நான் ஏதும் கேட்கலை என அவளை பிடித்து நிறுத்தியவள் பூரணி உங்கிட்ட ஒன்னுகேட்ட தப்பா நினைச்சுக்க மாட்டியே...அது என்னமோ தெரியலை புள்ள உன்னை பார்த்த உடனே எனக்கு பிடிச்சு போச்சு....எனக்கும் நாளு தங்கச்சிங்க இருக்காங்க ...அதனால எங்க அப்பன் எனக்கு சீக்கிரமா கண்ணாலத்தை பண்ணிட்டாரு..... பதினஞ்சு வயசுலே கண்ணாலம் .... சொல்ல போனா உன்னை விட ஒன்னு ரண்டு வயசுதான் அதிகம் இருக்கும் எனக்கும்........கண்ணாலம் பண்ணிட்டு வரும்போது நானும் உன்னை மாதிரிதான் ஒன்னுமே தெரியாம வந்தேன்.....இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் கத்துகிட்டு இருக்கேன்....” என சொல்லி கொண்டு இருக்கும்போதே
“ஆமாண்டி ஒன்னுமே தெரியாதவதான் நாளு வருசத்துல மூணு புள்ள பெத்தியாக்கும்” என கேட்டுகொண்டே அறையின் முன் நின்ற பேச்சியம்மாள் “சரி சரி கொஞ்ச நேரம் இவளோட பேசிட்டு இரு...அங்க மாறாயி பேத்திக்கு ஏதோ வயித்து கடுப்பு நீவனும்னு சொன்னாங்க...எண்ணெய் போட்டு நீவிட்டு வரேன் என்றவர் அப்பறம் அங்க அடுப்புல பாசிபருப்பு பாயசம் வச்சு வச்சிருக்கேன்.....ரண்டு பேரும் சாப்பிடுங்க...அதுக்குள்ள நான் வந்திடறேன்” என சொல்லிவிட்டு சென்றார்.
“நீங்க போங்க நான் பார்த்துகிறேன் என கனகா சந்தோசமாக சொல்லி கொண்டே பூரணியை பார்க்க அவளோ எங்கோ பார்த்த படி அமர்ந்திருந்தாள்.சில வினாடிகள் அவள் முகத்தையே பார்த்த கனகா பின்னர் மெதுவாக அவள் தோளில் கை வைத்து ...”ஏம்புள்ள முகம் வாடி போய்கிடக்கு......அத்தை ஏதாவது திட்னாங்கலா” என கேட்கவும்
சட்டென்று முகத்தை மாற்றி கொண்ட பூரணி....”இல்ல..இல்ல அப்படி எல்லாம் இல்லை ...அவங்க ஏதும் சொல்லலை.....எனக்கு தான் ...அது வந்து என தடுமாறியவள் கொஞ்சம் தலைவலி அதான்” என சமாளிக்க .
கனகாவோ “இங்க பாரு புள்ள நீ என்ன நினைச்சாலும் சரி...நான் உன்ன என் கூட பிறந்த பிறப்பாதான் நினைக்கிறேன்...அந்த உரிமையில சொல்றேன்......பொண்ணா பிறந்திட்டா எல்லாருக்கும் இதான் புள்ள நிலமை...பிறந்த வீடு கொஞ்ச காலத்துக்குத்தான்...அப்புறம் நமக்கு எல்லாம் வாக்கபட்டு வந்த வீடுதான் .....முதல்ல கஷ்டமாதான் இருக்கும்.....ஆனா போக போக பழகிடும்...மனச தேத்திக்கபுள்ள......உன் மாமியாருதான் வாய் கடுசு....... ஆனா புகழு தம்பி ரொம்ப நல்லவரு.....ஆள் தான் பார்க்க கருப்பண்ண சாமி மாதிரி வாட்ட சாட்டமா முரட்டு ஆளா இருக்கும் ஆனா பழக தங்கமான குணம்னு என்ற மாமா அடிகடி சொல்லுவாரு......சின்ன வயசிலயே இவ்ளோ பொறுப்பா இருக்க ஆளு ஊருக்குள்ளே புகழு மட்டும்தான்.இந்த குடும்பமே புகழுனால தான் தலையெடுத்து நிக்குது அப்டின்னு சொல்லுவாரு”.....என அவளின் மனநிலைமை புரியாமல் புகழின் பெருமையை சொல்லி கொண்டு இருக்க பூரணியோ என்ன பேசுவது என தெரியாமல் “அப்புறம் அக்கா உங்க வீடு எங்க இருக்கு” என பேச்சை மாற்றவும்
“அட உனக்கு தெரியாதா.......இந்தா உன்ற வீட்டுக்கு ஒட்டுன மதிலு எங்களுது.எங்க மாமனாரும் உங்க மாமனாரும் சேர்ந்து இடம் வாங்கி பிரிச்சுகிட்டாங்க என சொன்னவள், அப்புறம் இங்க வா இந்த பக்கம் நம்ம முத்தம்மா வீடு...அந்த பக்கம் கருப்பாயி அண்ணி வீடு நமக்கு பங்காளி முறைதான்” என சில மணி நேரத்திற்குள் அந்த ஊரை பற்றி பல விஷியங்களை கனகா சொல்ல மனதில் இருந்த எண்ணங்கள் எல்லாம் மறந்து அவளுடன் பேச்சில் ஐக்கியமானால் பூரணி. சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தவர்கள் “சரி பூரணி என்ற மாமியார் வரதுக்குள்ள நான் சோறு பொங்கலைனா அப்புறம் சட்டில என்னைய போட்டு எங்க மாமியார் தாளிச்சிடும் ...நான் வாரேன் ” என வேகவேகமாக கிளம்ப
“ஓ உங்க மாமியாரும் இப்டிதானா என பூரணி கேட்கவும்
“மாமியாருனாவே பெரும்பாலும் இப்படிதான் பூரணி......ஆனா என்ற மாமா என் மேல உசிரே வச்சிருக்கார்... எனக்கும் எங்க மாமனா உசிரு ....அவருக்காக எதுவும் தாங்கிகலாம்” என அவள் வெட்கத்துடன் சிரித்து கொண்டே சிறுபிள்ளை போல் சொல்லவும் அவளின் வெள்ளேந்தியான மனதை கண்டு வியந்து நின்றாள் பூரணி.
கனகா கிளம்ப வீட்டிற்குள் வந்த பூரணிக்கு மனசு லேசாக இருப்பது போல் தோன்றியது. படபடவென பேசினாலும் கனகாவின் கள்ளம் கபடமில்லாத அன்பு அவளுக்கு பிடித்து இருந்தது. ,ஏனோ இந்த நேரத்தில் சாந்தி, மணி இருவரின் நினைவும் அவளுக்கு வர “இந்த புள்ளைங்கதான் என்னை மறந்திடுச்சுங்க....போங்கடி எனக்கு இங்க ஒரு கூட்டாளி கிடைச்சுட்டாங்க” என தனக்கு தானே சொல்லி கொண்டவள் அழகன் மச்சானை பத்தி கேட்டு வரேன்னு போனவங்க ஏன் வரலை என அப்போது தான் அழகன் நினைப்பு வந்தது. “அச்சோ அழகன் மச்சான நம்ம மறந்தே போய்டோம்......எங்க நினைக்க விட்டுதுங்க இதுங்க” என பொருமியவள் ஆம் அதும் உண்மைதான்..... பேச்சியம்மாவின் பேச்சை கேட்டாலே அவள் உடல் நடுங்கும்...அதை பற்றிய சில மணி நேரம் புலம்ப அதற்குள் புகழ் பற்றிய பேச்சு வந்தால் அவனை பற்றி திட்டி கொண்டு இருக்க மேலும் பாண்டி கண்ணில தட்டு படாமல் மறைந்து நடக்க, போக வர என அவள் நினைவு முழுவதும் புகழ், பேச்சியம்மாள்,பாண்டி மூவருமே நிறைந்து இருந்தனர் ...அழகனின் நினைவு வரவும் “கண்ணாலம் முடிஞ்சது மச்சானுக்கு தெரியுமா தெரியாதா?” என நினைவுகள் அங்க செல்ல யோசித்து கொண்டே நடுக்கூடத்தில் அவள் நின்று இருக்க
அப்போது வீட்டிற்குள் நுழைந்த புகழ் அவள் நடுக்கூடத்தில் நிற்பதை பார்த்தவன் “என்னாச்சு எதுக்கு இப்படி நிக்கிறா...அம்முணிக்கு அறைக்குல்ல இருந்து வெளிய வர அளவுக்கு தைரியம் வந்திடுச்சா...டேய் புகழ் நீ நினைச்சுது சீக்கிரம் நடக்க போகுதுடா “ என நினைத்து கொண்டே மனதில் மகிழ்ச்சியுடன் அருகில் வந்தவன் “என்ன பூரணி எத பிடிக்க இவ்ளோ யோசனை...அதும் நடுகூடத்துல நின்னுகிட்டு” என கேட்டதும்
அவளோ அதே மனநிலையில் “இல்ல அழகன் மச்சானுக்கு கண்ணாலம்” என சொல்லி கொண்டே திரும்பியவள் புகழின் சிரித்த முகம் பார்த்ததும்அவனை அங்கு எதிர்பார்க்காததால் திகைத்து நின்றாள்.
.புகழோ அவள் சொன்னதை கேட்டதும் முகம் மாறிவிட அருகில் நின்றவன் வேகமாக திரும்பி அறைக்குள் சென்று வினாடிக்குள் உடை மாற்றி கொண்டு வெளியே வந்தவன் “அம்மா அம்மா” என சத்தமாக அழைக்கவும்
“அத்தை வெளியே போய் இருக்காங்க” என பூரணி மெல்லிய குரலில் சொல்ல அவனோ அவள் பக்கம் திரும்பாமல் வேகமாக வெளியே சென்றவன் “டேய் மருது நான் ஈரோடு வரைக்கும் போயிட்டு வரேன்....அம்மா வந்தா சொல்லிடு” என இல்லாத மருதிடம் தகவல் சொல்லிவிட்டு வண்டி எடுக்க பூரணியோ அவன் செயல்கள் எதுவும் புரியாமல் நின்று கொண்டு இருந்தாள்.
புகழுக்கு ஈரோட்டில் கொஞ்சம் வேலை இருப்பதால் வீட்டிற்கு சென்று சாப்பிட்டு உடை மாற்றிவிட்டு செல்லலாம் என்று நினைத்து தான் வந்தான். மகிழ்ச்சியுடன் அவள் அருகில் வந்தவன் அவளது பதிலை கேட்டதும் முகம் மாறிவிட்டது.
அனால் பூரணியோ இதை உணராமல் இவன் எதுக்கு வந்தான்....இப்போ எதுக்கு இவ்ளோ கோபமா போறான் என அவள் குழப்பிக்கொண்டு இருக்க அவள் சொன்ன பதிலே காரணம் என்பதை பாவம் அறியவில்லை..ஏனெனில் அவனை அவள் எதிர்பார்க்கவில்லை...அந்த அதிர்ச்சியில் இருந்தவள் அவன் கேட்டதும் மனதில் நினைத்து கொண்டு இருந்த வார்த்தை வெளியே வந்து விட்டது.அது என்ன என்பதை கூட அவள் உணரவில்லை.அதற்குள் அவன் வேகமாக உள்ளே செல்லவும் கவனம் அவன் பக்கம் திரும்பிவிட்டது.அதனால் அவனது செயலுக்கான காரணம் புரியாமல் “இவன் எப்பவும் இப்படிதான் ...ஓரங்கொட்டான்......”என திட்டிகொண்டே அறைக்குள் சென்றாள்.
வீட்டிற்கு வந்த பேச்சியம்மாள் சமையல் அறைக்குள் நுழைந்ததும் “ஆகாத மாமியா கை பட்டா குத்தம் ,கால் பட்டா குத்தம்னு பழமொழி சொன்னது சரியாதான் இருக்கு......புதுசா கண்ணாலம் ஆன பொண்ணுன்னு பாயசம் செஞ்சு வச்சா அதை தொட்டு கூட பார்க்கலை” என பேசவும் தான் அவர் சொல்லி சென்ற பாயசம் பூரணிக்கு நினைவு வர “அச்சோ சொல்லிட்டு போனாங்க ....நம்ம அக்காகூட பேசிகிட்டே மறந்திட்டமே” என நினைத்தவள் மெதுவாக சமையல் அறையில் வந்து நின்றவள் ..”அது வந்து பேசிட்டு இருந்தோம் அப்படியே” என வார்த்தைகளை இழுத்து சொல்லவும் ஏனோ பேச்சியம்மாவின் கோபம் குறைந்து “சரி இந்தா இப்போ குடி “ என அவர் ஊற்றி கொடுக்கவும் அவள் வாங்கி கொண்டு அங்கிருந்து நகர
அதற்குள் அவர் “மருது வந்து பெரியவனுக்கு சாப்பாடு எடுத்திட்டு போனானா” என அவர் கேட்கவும் அவளோ “இல்லை எதோ ஈரோட்ல வேலை இருக்குன்னு சொல்லிட்டு கிளம்பிட்டார்” என அவள் பதில் சொன்னாள்.
“அப்படியா வீட்டுக்கு வந்திட்டு தான் போனானா....அப்டினா சாப்பிட தான் வந்திருப்பான்...... அவன் பசி வேற தாங்க மாட்டானே......நான் தான் எல்லாமே செஞ்சு வச்சிட்டனே...இவனுக்கு அதுக்குள்ள என்ன அவசரம்.....நீ எதுக்கு சாப்பிடாம போக விட்ட” என அவர் படபடவென பேசவும்
அப்போதுதான் அவன் சாபிடாமல் சென்றது அவளுக்கு உரைக்க
“இல்ல அத்தை ..நான் வந்து” என அவள் தடுமாறவும்
“அவன் எப்பவும் இப்படிதான்....வேலைன்னு வந்திட்டா சாப்பாட்ட மறந்திடுவான்.எப்ப வருவான்னு தெரியலை...வெளியில சாப்பிட்றானோ இல்லயோ ....வந்தவன் ஒரு வாய் சாப்பிட்டுபுட்டு போக எவ்ளோ நேரம் ஆயிடபோகுது.......இப்படி வெறும் வயத்தோட போயிருக்கானே என பெத்த மனம் புலம்பவும் ஏனோ முதன் முதலாக பூரணிக்கு மனதில் லேசான குற்ற உணர்ச்சி எழுந்தது.

ஆலமரத்தின் அழகான கூட்டிற்குள்
புது வரவாய் ஒரு வண்ண பறவை !
தன் இனம் தான் என்றாலும்
ஏனோ ஒன்ற முடியாமல் மனம்
தடுமாறி நிற்கின்றது அந்த பறவை .
எதார்த்தங்கள் புரிந்தாலும்
ஏற்றுகொள்ள சிறு தயக்கம் !
சோடி பறவையோ தனது நேசத்தை
மோசம் செய்ததாக எண்ணி
அதனுடன் ஊடல் கொள்ள....
உண்மை அன்புகள் ஊமையாய் ஓய்வெடுக்க
கானல் நீராய் கோபம் கண்ணை மறைக்க
பேசி தீர்க்க வேண்டியதை
மனதினுள்ளே பொருமி தீர்த்தால்
காலம் கரையுமே தவிர
நேசம் வெளிபடாது !

அதை இவர்கள் உணர்வார்களா ????????????????
 
Top