• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Lashmi Ravi

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
145
அத்தியாயம் -28


பூரணியோ அப்படியே சிலை போல் நிற்க அதற்குள் மணியம்மை திரும்பி “வாப்பா” என வரவேற்றவர் அவனின் மனைவியையும் “வாம்மா” என சொல்லவும் பரண் மேல் இருந்து பாரி “வாங்க மச்சான்” என வரவேற்க பூரணியோ ஏதும் பேசாமல் நின்று கொண்டு இருந்தாள்.

அதற்குள் மணியம்மை “பூரணி நீ குளிச்சிட்டு வா போ” என சொல்லவும்
அழகனின் மனைவியோ பூரணியையே பார்த்து கொண்டிருக்க
உடனே மணியம்மை “அது வந்தும்மா....ராத்திரி எல்லாம் வாந்தி எடுத்திட்டே இருந்தா...... தூக்கமே இல்லை.... இப்பதான் தூங்கி எழுந்தா ...நீங்க வரதே அவளுக்கு தெரியாது ...அதான்” என அழகனின் மனைவியை பார்த்து சொன்னவர் “பூரணி நீ உள்ள போ” என அவளை அனுப்பிவிட்டு இவர்களை கூடத்திற்கு அழைத்து சென்றார்.
அறைக்குள் சென்ற பூரணி வெளியே வரவே இல்லை.....களைப்பாக இருக்கிறது என சொல்லி அறைக்குள்ளேயே இருந்து கொண்டாள்.அழகனின் மனைவி வந்து அவளிடம் பொதுப்படையாக சிறிது நேரம் பேச அதற்குள் அவளுக்கு இரண்டு முறை வாந்தி வர பின்னர் அவளும் சென்றுவிட்டாள்.
அழகனை பார்த்தபிறகு நினைவுகள் எங்கெங்கோ செல்ல சுருண்டு படுத்துவிட்டாள்.அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்கவும் “பாரி திறந்து தாண்டி இருக்கு.....அப்புறம் எனக்கு கொஞ்சம் வெந்தண்ணீ எடுத்திட்டு வா” என சொல்லிவிட்டு திரும்பி படுத்து கொண்டாள். சிறிது நேரத்தில் மீண்டும் கதவு திறக்க “கொண்டு வந்திட்டியா” என கேட்டபடி எழுந்தவள் அங்கு அழகனை பார்த்ததும்.. அதிர்ந்து அப்படியே அமர்ந்திருக்க
“ஏன் பூரணி நான் தண்ணீ கொண்டு வந்தா நீ குடிக்க மாட்டியா?” என அவள் முகத்தை பார்த்தவாறு கேட்கவும்
அவளோ சட்டென்று தலை குனிந்தவள் “அப்படி எல்லாம் இல்லைங்க மச்சான்” என வாய்க்குள் முனக

“என் மேல ரொம்ப கோபமா இருக்கியா...என் முகத்தை பார்த்து பேசகூட உனக்கு பிடிகலையில்ல “ என அவன் நேரிடியாக விஷயத்திற்கு வந்தான்.
உடனே அவள் “உங்க மேல எனக்கு என்ன கோபம்.....அப்படி எல்லாம் ஏதும் இல்லை” என சொல்லும்போதே அவள் குரலில் பிசிறு தட்ட
“இப்போ நான் என்ன சொன்னாலும் அது முடிஞ்சு போன விஷயத்துக்கு பூசி மொலுகிற மாதிரி இருக்கும்.....அதனால நான் அதை பத்தி ஏதும் பேசலை பூரணி” என அவன் சொல்லவும்
அவளோ சட்டேன்று நிமிர்ந்து அவன் முகம் பார்க்க அந்த கண்களில் தெரிந்த உணர்வை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.இப்போது அவன் தலை குனிந்தான்.
சிறிது நேரம் அமைதி நிலவ “ஊர்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா” என அவள் பேச்சை ஆரம்பிக்கவும்
“எங்க அப்பா செஞ்ச தப்புக்கு நான் மன்னிப்பு கேட்டுகிறேன் பூரணி.....இதுல என்னோட தப்பும் இருக்கு...அவர்கிட்ட நான் விபரம் சொல்லிட்டு ஊருக்கு போயிருந்திருக்கணும்.....அப்புறம் உன்கூட போன்ல நான் பேசி இருந்திருக்கணும் இந்த இரண்டும்” என அவன் பேசும்போதே “அப்புறங்க மச்சான் அரசி எல்லாம் நல்லா இருக்கங்களா? வெளிநாட்டுல இருந்து எங்களுக்கு என்ன வாங்கிட்டு வந்து இருக்கீங்க” என சிரித்துகொன்டே பேச்சை மாற்றவும்
அதை எதிர்பார்க்காத அழகன் பதில் சொல்லாமல் சிறிது நேரம் அவளையே உற்று நோக்கியவன் “நீ ரொம்ப மாறிட்ட பூரணி” என்றான்.
அவளோ “ உண்மைதானுங்க மச்சான்.......எல்லாரும் மாறும்போது நானும் மாறித்தானே ஆகணும்......காலத்தோட பள்ளிகூடத்துல இப்போ நானும் மாணவியா சேர்ந்திட்டேன்....படிப்பு தான் ஒழுங்கா படிக்கலை......காலம் சொல்லிகொடுக்கிற இந்த வாழ்க்கை பாடத்தையாவது இனி ஒழுங்கா படிக்கலாம்னு முடிவு பண்ணிடேனுங்க மச்சான்...அதான்...எப்படியும் இதுல பாஸ் பண்ணிருவேன்னு நினைக்கிறேன்” என அவள் உறுதியாக சொல்ல
அந்த வார்த்தைகளில் உள்ள உறுதி அவன் உள்ளத்தை தாக்க ஆனாலும் மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது என உணர்ந்தவன் “நீ கவலைபடாத பூரணி...இப்பவே நீ பாதி பாஸ் பண்ணிட்ட பூரணி..... நான் உங்க வீட்டுக்கு வந்தப்ப உன்ற மாமியார் உன்னை பத்தி எவ்ளோ பெருமையா சொன்னாங்க தெரியுமா என்றவன் அந்த நினைவுகள் நிழல் போல் வர.........திருமண அழைப்பிதழ் கொடுத்துவிட்டு பூரணியிடம் மன்னிப்பு கேட்கவே புகழ் வீட்டிற்கு வந்தான் அழகன். உள்ளே நுழைந்ததும் அங்கு யாருக்கும் அவனை தெரியாததால் தானே அறிமுகபடுத்தி கொள்ள உடனே பேச்சி “ஓ பூரணி அத்தை கோமதி பையனா நீ” என்றவர் உள்ள வாப்பா என வரவேற்றார். பின்னர் ஊர்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா என்றவர் ரொம்ப நாள் கழிச்சு பார்க்கிறேன்ல அதான்பா அடையாளம் தெரியலை” என சொல்லவும்
“பரவாயில்லைங்க பெரியம்மா......எனக்கும் புகழ் அண்ணாவை தான் தெரியும்... மத்தபடி உங்களை எல்லாம் இப்பதான் பார்க்கிறேன் என்றவன் கல்யாண பத்திரிகை வச்சிட்டு போலாம்னு வந்தேன் என்றவன் புகழ் அண்ணா இல்லைங்களா” என வாய் கேட்க கண்களோ வீட்டை நோட்டமிட்டது.
“அடடா தம்பி வயலுக்கு போயிருக்குபா....இனி பொழுது சாயதான் வரும்....பூரணியும் இப்பதான் சாப்பாடு எடுத்திட்டு போச்சு...... என வருதபட்டவர் இருப்பா என்ற சின்ன மவன் வந்த உடனே கூட்டிட்டு வர சொல்றேன்”என்றார்.
பின்னர் “அட இங்க பாரு நான்பாட்டுக்கு பேசிகிட்டே இருக்கேன்.....சாப்பாட்டு நேரத்துக்கு வந்திருக்க மருமக இன்னைக்கு மீன் குழம்பும் நண்டு வறுவலும் செஞ்சிருக்கா கொஞ்சம் சாப்பிடுப்பா” என அன்புடன் உபசரிக்கவும்

“இல்லைங்க பெரியம்மா...வரும்போது தான் மாமா வீட்டுல சாப்பிட்டு வந்தேன்....கல்யாண பத்திரிக்கை கொடுத்திட்டு போகலாம்னு தான் வந்தேன்” என்றான் .
“அதனால என்ன தம்பி வீட்டுக்கு வந்திட்டு சாப்பிடாம போனா எப்படி தம்பி இருங்க இலை அறுத்திட்டு வரேன்” என வேகமாக அவர் வெளியே செல்ல மறுக்க மனம் இல்லாமல் சாப்பிட அமர்ந்தான் அழகன்.உணவின் ருசி பூரணியின் நினைவை அதிக படுத்த ஏனோ மனம் லேசாக வலித்து.
“சாப்பாடு ரொம்ப நல்ல இருக்கு........பூரணி இந்த அளவுக்கு சமையல் வேலை எல்லாம் செய்யுதா” என அவன் ஆச்சிரியத்துடன் கேட்க
“என்னப்பா இப்படி சொல்லிட்ட...அதெல்லாம் நல்லா செய்வா..ஆரம்பத்துல கொஞ்சம் பிடிவாதம் குறும்பு தனம் இருந்தாலும் இப்போ எல்லாம் புரிஞ்சு நடந்துகிறா தம்பி......... பாவம் சின்ன பொண்ணுதானே..... திடீர்னு கண்ணாலாம் நடந்திடுச்சு... அதும் என்ன பண்ணும்....... சூட்டிகையான பொண்ணு......நாங்க குணமும் பண்பும் பொண்ணுகிட்ட இருந்தா போதும்னு நினைச்சோம்.............மத்தவங்க மாதிரி பணமும் பவுசும் படிப்பும் முக்கியம்னு நாங்க நினைக்கலை.......நாங்க நினச்ச மாதிரியே அமஞ்சிடுச்சு........பலாபழத்துல இருக்க சுவையோட அருமை மேல் இருக்க முள்ளை பார்த்து எடை போட கூடாது இல்லை...... என்ன தம்பி நான் சொல்றது சரிதானுங்களே” என சந்தடி சாக்கில் வார்த்தைகளால் அவனுக்கு சவுக்கடி கொடுக்க
“அம்மா அது வந்து...உங்களுக்கு” என அழகன் தயங்கும்போதே “எனக்கு எல்லாம் தெரியும் தம்பி........மகாலக்ஷ்மி எங்க வீட்டுக்கு வரணும்னு இருக்கும்போது அது யாரால மாத்த முடியும்” என அவர் அழுத்தமாக சொல்ல அதுவரை அழகன் நினைத்திருந்த எண்ணங்கள் எல்லாம் பொடிபொடியானது.

அப்போது பாண்டி வர அவனும் பூரணியை பற்றி பெருமையாக சொல்ல அழகனோ வேறு எதுவும் பேசவில்லை..”.எனக்கு நேரமாகிவிட்டது நான் கிளம்பறேன்” என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
நடந்தை சொன்னவன் “இப்போ உன்கிட்ட உண்மைய சொல்றேன் பூரணி. உன்னோட கண்ணாலம் விபரம் தெரிஞ்சதும் உடனே எங்க அப்பாகிட்ட கேட்டேன். உனக்கு உன் தங்கை வேணுமா? இல்லை அந்த பூரணி வேணுமா? நீயே முடிவு பண்ணிகன்னு சொல்லிட்டார்.எனக்கு என்ன முடிவு எடுக்கிறதுனே தெரியலை.....இங்க மாமாகிட்ட பேசறதுக்கும் பயம்.....உடனே கிளம்பி வந்து என் பொண்ணை கண்ணாலம் பண்ணுனு சொன்னாருனா அது எப்படி என்னால முடியும்......இங்க என் தங்கையும் எனக்கு முக்கியம்.சரி கொஞ்ச நாள் பொறுத்து இருப்போம்...யாரோ ஒருத்தர் இரங்கி வருவாங்கன்னு அமைதியா இருந்தேன்” என அவன் சொல்லவும்
பூரணியோ அவனை பார்த்த பார்வையில் அக்னி சுவாலை கொழுந்துவிட்டு எரிந்தது.
“புரியுது பூரணி....உன்னோட நிலமை எனக்கு புரியுது...ஆனா என் நிலமையில இருந்து யோசனை பண்ணி பாரு...... எனக்கு யாரு பக்கம் பேசறதுனே தெரியலை........அப்புறம் உனக்கு கண்ணாலம் முடிஞ்சிருச்சுனு சொன்னாங்க......ரொம்பவே கஷ்டமா இருந்திச்சு...எனக்காக நீ வெயிட் பண்ணலையேன்னு ரொம்ப வருத்தமா இருந்திச்சு.....அப்புறம் ஊருக்கு வந்தப்பதான் நடந்தது எல்லாம் சொன்னாங்க.....எங்க அப்பாமேலதான் தப்புன்னு புரிஞ்சுது....மாமாகிட்ட வந்து மன்னிப்பு கேட்டேன்.....அப்புறம் உன்னை தேடி உங்க வீட்டுக்கு வந்தேன்...அங்கு உன் புகுந்த வீட்ல உன்னை பத்தி சொன்னதை கேட்டதும் ரொம்ப சந்தோஷமா இருந்தது.எங்க வீட்டுக்கு நீ வந்திருந்தாகூட இந்த அளவுக்கு உன்னை எங்க அம்மா பெருமையா சொல்வாங்களானு எனக்கு தெரியாது.ஆனா உன் புகுந்தவீடே உன்னை மகாலட்சுமியா பார்க்கிறத நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.என்மனசில இருந்த சின்ன உறுத்தலும் மறைஞ்சிருச்சு....நீ கண்டிப்பா சந்தோஷமா இருப்பகிற நம்பிக்கையிலதான் நான் அங்கிருந்து வந்தேன்” என சொல்லி முடித்தவன் “ஆனா அன்னைக்கு கல்யாண மண்டபத்துல நீ என்னை பார்த்த உடனே அழுதுகிட்டு ஏதோ சொல்ல வந்த...அதுக்குள்ள புகழ் அண்ணா உன்னை கூட்டிட்டு போயிட்டார்.......என்ன பூரணி...என்ன நடந்திச்சு........உனக்கும் அண்ணாவுக்கும் இடையில ஏதாவது பிரச்சனயா?எனக்கு அப்போ இருந்து மனசு உலட்டலாவே இருக்கு...சொல்லு பூரணி...என்ன நடந்திச்சு” என அவன் கேட்கவும்
அவளோ அவனை நிமிர்ந்து நேருக்கு நேர் பார்க்க அந்த பார்வையே உன் பிரச்சனை வரும்போதே ஓடி ஒளிந்து கொண்டகோழை நீ...இப்போ என் பிரச்சனைக்கு தீர்வு சொல்ல வரீயா என்று கேட்பது போல் இருக்க அவள் பார்வையின் வேகத்தை தாங்க முடியாமல் தலை குனிந்தான் அழகன். பின்னர் அவள் “எங்க குடும்ப விஷயத்தில் மூணாவது மனுஷங்க தலையிடறத நான் விரும்பலைங்க மச்சான்” என சொல்லிவிட்டுஅருகில் இருக்கும் படுக்கையை சரி பண்ண அழகனோ உச்சந்தலையில் ஆணி அடித்தது போல் அதிர்ந்து போய் நின்றான்.
பூரணிக்கு ஏதோ பிரச்சனை.....உதவலாம் என்ற நோக்கத்தோடுதான் அவன் வந்தான்.ஆனால் நீ மூன்றாவது மனிதன்...உன் வேலையை நீ பார் என அவள் முகத்தில் அடித்தாற்போல் சொல்லவும் எதுவும் பேசாமல் அறையைவிட்டு வெளியேறினான்.
அவன் வெளியேறும் வரை அமைதியாக இருந்த பூரணி அவன் சென்றதும் கதவை தாளிட்டு விட்டு அருகில் இருக்கும் புத்தகங்களை,தலயணையை எடுத்து ஆத்திரம் தீரும்வரை அதை சுக்குநூறாக கிளித்தவள் மீண்டும் கதவு தட்டபடும் சத்தம் கேட்டுதான் சுய நினைவிற்கு வந்தாள். உள்ளே வந்த பாரி அவளது அறையின் கோலத்தை பார்த்து “என்னக்கா இது” என அதிர...”அவளோ நீ அம்மாகிட்ட சொல்லிடாத......நான் பார்த்துகிறேன்.....எனக்கு ஒரு டீ கொண்டுவா” என்றவள் பின்னர் தானே அதை சுத்தம் செய்தாள்.

இரவு அனைவரும் சென்றபின் தன் அறைக்கு உறங்க வந்தவள் ஏனோ அன்று என்றுமில்லாத அளவிற்கு புகழின் நினைவு அவளுக்கு வந்தது.அழகனின் பேச்சும் அதற்கு ஒரு காரணம்.தன் மீது கொண்ட காதலுக்காக புகழ் எந்த காரியத்தையும் செய்ய துணிந்தான்.அதே அழகனோ காலத்தின் மீது பழியை போட்டு நமக்கு எது கிடைக்கிறதோ அதை ஏற்றுகொள்ளலாம் என்று நினைத்து இருக்கிறான்.அதாவது சூழ்நிலைகள் எல்லாம் சாதகமாக இருந்தால் மட்டுமே அவன் திருமணத்திற்கு சம்மதம் சொல்லி இருப்பான்.ஆனால் புகழோ எந்த சூழ்நிலையும் தனக்கு சாதகமாக மாற்றிகொண்டான்.நீ அவனை வெறுக்கிற...அவன் காதலை சந்தேகபடர என அவள் மனம் அவளை சாட
நான் அவரை வெறுக்கலை....ஆனா அவனோட காதலைதான் என்னால ஏத்துக்க முடியலை......இப்பவும் அழகனை ஒரு நிமிஷத்துல மூணாவது மனுசன்னு சொன்ன என்னால எந்த காலத்திலயும் புகழ் மச்சானை அப்படி சொல்ல முடியாது. ஆனா நம்பிக்கை துரோகத்துல வந்த காதலை எப்படி ஏத்துக்க முடியும் என அவள் மீண்டும் முரண்டு பிடிக்க வாதத்திற்கு மருந்து உண்டு... பிடிவாதத்திற்கு மருந்து இல்லை. என்னமோ செய் உன்னை திருத்த முடியாது என சொல்லிவிட்டு மனம் அமைதியடைய அவளோ யோசனையுடனே கண்மூடினாள்.
ஒருவாரம் செல்ல ஒருநாள் பூரணி கோவிலுக்கு கிளம்ப உடன் பாரியும் வந்து இருந்தாள். இருவரும் சாமி கும்பிட்டு வெளியே வந்தவர்கள் திடீரென “அக்கா உனக்கும் புகழ் மச்சானுக்கும் ஏதும் சண்டையா?” என பாரி கேட்க
குழப்பமாக அவளை பார்த்த பூரணி “ஏண்டி...அதெல்லாம் ஏதும் இல்லை...யாரு சொன்னா” என கோபமாக கேட்க
“இல்லக்கா நான் உங்க வீட்டுக்கு வந்தப்ப மச்சான் அடிக்கு ஒருமுறை பூரணி..பூரணினு கூப்பிட்டுகிட்டே இருப்பாரு...இப்போ எப்படி ஒரு மாசமா வந்து பார்க்காமகூட இருக்காரு....அதான் கேட்கிறேன்” என்றாள்.
“அதெல்லாம் ஏதும் இல்லை....நல்லாத்தான் இருக்கோம்.....ஆமா நீ சாமிகிட்ட என்ன வேண்டுன....நல்ல மார்க் எடுக்கணும்னா” என அவள் சிரித்து கொண்டே பேச்சை மாற்றினாள் பூரணி.
உடனே பாரியோ “நம்ம நினைச்சது எல்லாம் எங்கக்கா நடக்குது” என சலிப்புடன் சொல்லவும்
“என்னடி இது கவிதை எழுதற,தத்துவம் பேசற... நானும் கேட்கனும்னு நினச்சேன்...நீ குளிக்க போறேன்னு எஸ்கேப் ஆகிட்ட...என்னடி விஷயம்... உண்மையா சொல்லு” என அவள் கேட்கவும்
இப்போது பாரி தடுமாற பூரணியோ அவளை துருவி கேட்கவும் “அக்கா உங்க வீட்டுக்கு வந்திட்டு திரும்ப வந்தேன்ல...அப்போ பஸ்ல எனக்கு தெரிஞ்ச ரெண்டு பொண்ணுங்களை பார்த்தேன்” என சொல்லி நிறுத்தவும்
“சரி அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்” என எரிச்சலாக கேட்டாள்பூரணி.......
அப்போ அப்போ” என அவள் இழுக்கவும்
“என்னடி அப்போ அப்போன்னு...விஷயத்துக்கு வா” என பூரணி முறைக்க
“நான் உள்ள போய் எனக்கு தெரிஞ்ச பொண்ணுகிட்ட உட்கார்ந்தனா... அப்போ அவ பக்கத்துல இருக்க பொண்ணு அங்க பாருடி அந்த பாண்டி பையன் இங்கும் வந்திட்டான்னு சொன்னா” என சொல்லிவிட்டு அவள் முகம் பார்க்க
“ஓ எந்த பாண்டி என சாதரணமாக கேட்டவள் பின்னர் எனதூஊஊ நம்ம லொடுக்கு பாண்டியா” என அதிரவும்
மச்சானை அப்படி எல்லாம் சொல்லாதக்கா” என அவள் முறைக்க

“இது என்னடி இது...அவன சொன்னா நீ ஏன் இந்த திருப்பு திருப்பற என்றவள் சரி சொல்லு சொல்லு அப்புறம்” என கதை கேட்கும் ஆவலில் அவளும் கேட்க
“அதுக்குள்ள பஸ் கிளம்பிடுச்சுக்கா......அப்போ அவங்க அவரை உங்களுக்கு தெரியுமான்னு கேட்டாங்க...நான் தலைஆட்டினேன்.....உடனே பக்கத்துல இருந்த பொண்ணு “இங்க பாருங்க அவர்கிட்ட சொல்லிவைங்க........என்னோட தோழிய ரொம்ப தொல்லை பண்றார்......எங்க போனாலும் பின்னாடியே வரார்......இதெல்லாம் சரியில்லை.....அப்புறம் நாங்க ஏதாவது செஞ்சோம்னா அசிங்கமா போய்டும்ன்னு சொல்லுச்சுங்க...எனக்கு ஒன்னும் புரியலை...என்ன பன்றாருன்னு கேட்டேன்....அவரு பொன்மலரை லவ் பண்றாராம்...ரொம்ப டார்ச்சர் கொடுக்கிறார்னு அந்த பொண்ணு பொரிஞ்சு தள்ளிடுச்சு” என சோகமாக சொல்லி முடித்தவள் .
“அப்படியா அட பக்கி இந்த ரண்டு கால் பூனை இந்த வேலை எல்லாம் செய்யுதா......அமுக்கநாட்ட இருந்திட்டு என்ன வேலை பண்ணிருக்கான் பாரு...எத்தன முறை பிரியாணி செஞ்சு கொடுத்திருப்பேன்.....என்கிட்டே சொல்லவே இல்ல பாரு” என பூரணி அதற்கு மேல் பொரிந்து தள்ள பாரியோ தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டாள்.
பேசி முடித்துவிட்டு தங்கையை பார்த்தவள் “ஏண்டி பொண்ணு எப்படி ரொம்ப படிச்ச பொண்ணோ...என்னை விட அழகா இருப்பாளோ” என பெண்களுக்கே உரிய பொறமை குணம் சற்று தலைதூக்க அவள் கேள்வி கேட்க பாரியோ பற்களை கடித்தவாரே அது ரொம்ப முக்கியம் என அவளை முறைத்தாள்.
“ஏண்டி முறைக்கிற......சரி சரி உனக்கு அந்த பொண்ண எப்படி தெரியும்....” என கேட்கவும்
“இங்க நம்ம தோட்டத்துக்கு வேலைக்கு வந்து இருக்குதுக்கா.....அதுவும் பன்னிரண்டாவது தான் படிக்குது.....பஸ்ல பார்த்தா பேசும்.......அம்மாவுக்கு அந்த பொண்ண ரொம்ப பிடிக்கும்” என அவள் சொல்லவும்

“என்னடி சொல்ற...நம்ம தோட்டத்துக்கு வேளைக்கு வந்து இருக்குனா” என பூரணி இழுக்க

“ஆமாக்கா ஏழ்மையான குடும்பம்தான்...ஆனா நல்லா படிக்கும்” என்றாள்.
 

Lashmi Ravi

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
145
“சரி சரி சும்மா படிக்கும் படிக்கும்னே சொல்லாத.....” என எரிச்சலுடன் சொன்னாள் பூரணி.
“அதுமட்டுமில்லக்கா அந்த பொண்ணு என சொல்லி அவளிடம் மெதுவாக விஷயத்தை சொன்னதும் பூரணி அதிர்ச்சியின் உச்சிக்கே சென்று விட்டாள்.என்னடி சொல்ற......நீ சொல்றது நிசம்தானா...இது பாண்டிக்கு தெரியுமா?” என அவள் அதிர்ச்சி மாறாமல் கேட்க
“அது பத்தி எனக்கு தெரியாதுக்கா....ஆனா எனக்கு அம்மாவுக்கு எல்லாம் தெரியும்” என அவள் சொல்லவும்
“இதுக்கு கண்டிப்பா அத்தை ஒத்துக்க மாட்டாங்களே” என்றாள் பூரணி.
“அந்த நம்பிக்கையிலதான்க்கா நான் இருக்கேன்...இருந்தாலும் மச்சான் மனசில இன்னொரு பொண்ண நினச்சிருகாருன்கிறத என்னால ஜீரணிக்க முடியலை” என பேச்சிவாக்கில் அவள் உளறிவிட இப்போது பூரணிக்கு தலை சுற்றுவது போல் இருந்தது.
அவள் பாரியையே பார்த்து கொண்டிருக்க
பேசிகொண்டே நிமிர்ந்த பாரி தமக்கையின் முக பாவனையை கவனித்தவள் “என்னக்கா என்னை அப்படி உத்து பார்க்கிற” என கேட்கவும்

அதுவரை விளயாட்டு தனமாக பேசிகொண்டிருந்த பூரணி முகம் சட்டேன்று இறுக “நீ பாண்டிய விரும்பறியா பாரி” என அவள் கேட்கவும்
பாரியோ அதிர்வுடன் அவளை பார்த்தவள் “அக்கா அது வந்து ...வந்து” என தயங்கவும்
பூரணியோ கண்களை இறுக மூடி தன்னை ஒரு நிமிடம் நிலைபடுத்தி கொண்டு பின்னர் அவளிடம் திரும்பி “இங்க பாரு பாரி மனசில தேவை இல்லாத விஷயங்களை கற்பனை பண்ணிக்கிட்டு பின்னாடி கஷ்டபடாத” என கோபமாகவும் அழுத்தமாகவும் சொன்னாள் .
“கற்பனை எல்லாம் இல்லக்கா...பாண்டி மச்சானை பிடிக்கும் எனக்கு” என அவள் வாய்க்குள் முனக
“ஏண்டி...ஏண்டி இப்படி பண்றிங்க...இது என்ன நம்ம குடும்ப சாபமா....நம்ம ஒருத்தரை நல்லவன்னு நம்பி மனசில ஆசைய வளர்த்துகிட்டு அப்புறம் அது நிறைவேரவில்லைன்னு அதுக்காக வேதனை பட்டுகிட்டு ஏன் பாரி ஏன் என படபடவென அவள் பேச அவளது கைகால்கள் எல்லாம் சற்று நடுங்க பாரியோ பயத்துடன் அவள் முகம் பார்த்தவள் அக்கா என்னாச்சுக்கா...ஏனக்கா இப்படி கோபபடுறிங்க என பதறவும்
அதிர்ந்து அவள் முகத்தை பார்த்த பூரணி பின்னர் மெதுவாக இங்க பாரு பாரி நீ ரொம்ப சின்ன பொண்ணு.....உன்னை சொல்லி குத்தமில்லை......உன் வயசு அப்படி...பார்க்கிறது எல்லாம் பச்சையாவே தெரியும்........ ஆனா புரிஞ்சுக்கடி.........நீ நினைக்கிற மாதிரி இல்லடி இந்த வாழ்க்கை....வெளி தோற்றத்தை கண்டு ஏமாந்திடாத...........சினிமால காட்ற மாதிரி காதலிச்சு கண்ணாலம் பண்ணி சந்தோஷமா வாழ்றது எல்லாம் கொஞ்ச பேர்தான்.....தேவையில்லாம மனசில கற்பனைகோட்டை கட்டாத பாரி......எனக்கு தெரிஞ்சு பாண்டியோட குணத்துக்கும் உன்னோட குணத்துக்கும் ஒத்து போகாது புள்ள.......அதான் சொல்றேன்........ இப்போ ஹீரோவா தெரியறவன் பிறவு சண்டைகாரனா தெரிவான்.....இது ஒத்து வராது.....நீ ஜாதிமல்லினா அவன் ஆவாரம்பூ...இரண்டுமே பூதான் ஆனா குணம் வேற பாரி புரிஞ்சுக்கோ”என அவள் நிதர்சனத்தை சொல்லவும்
“அதெல்லாம் பரவாயில்லைக்கா....நான் சமாளிச்சுக்குவேன்....... நீ பயப்படாத” என அவள் உறுதியாக சொல்ல
அவளின் பதிலில் ஆடிப்போன பூரணி “என் தங்கைதானே....வேறு எப்படி இருப்பா.......நான் செய்த தப்பத்தான் அவளும் செய்யறா? எனக்கு இதே மாதிரி இவ சொல்லும்போது அதெல்லாம் நான் பார்துகுவேன்னு சொன்னேனேன்.....இப்போ இவளும் அதையே சொல்றா.....ஆனா என் நிலைமை இவளுக்கு வர கூடாது என மனதில் நினைத்தவள் சரி பாரி...உனக்கு இப்போ பதினேழு வயசுதான் ஆகுது.....நீ டாக்டர்க்கு படிக்கணும்...அதுக்கு இன்னும் ஐந்து வருஷம்.....படிப்பை முடிச்சிட்டு வா.....அதற்கு பிறகு பேசிக்கலாம்” .... என அவள் வேறுமாதிரி அவளிடம் பேசி புரியவைக்க முயற்சி செய்தாள்.
“எப்போ வந்தாலும் இதே முடிவு தான்க்கா” என உடனடி பதிலை சொல்லி அவள் தங்கை நான் உன் ரத்தம் என்பதை உணர்த்த
பூரணிக்கோ சுருசுருவென கோபம் தலைக்கு ஏற “இப்போ உனக்கு படிப்பு தான் முக்கியம் பாரி” என பல்லை கடித்துக்கொண்டு சொன்னவள் ....... பின்னர் அவளிடம் தன்மையாக “நான் செஞ்ச தப்பை நீ செய்யாத...நல்லா படி.....அதுக்கப்றம் உன் வாழ்கையை பத்தின ஒரு முடிவுக்கு வா......அப்படி இல்லைனா என்னை மாதிரி எடுப்பார் கைபிள்ளையாதான் நீ இருப்ப.......அழகன் மச்சான் சொன்னாருன்னு அவரை விரும்பி,அப்புறம் அப்பாவுக்காக புகழ் மச்சானை கண்ணாலம் பண்ணி இப்போ ஊருக்காக மனசில இருக்கிற வேதனையை கூட வெளியே சொல்ல முடியாம நான் படற இந்த வேதனை உனக்கு வேண்டாம் பாரி.... நீ நல்லா படி.... உலகத்தை நல்லா தெரிஞ்சுகிட்டு அப்புறம் உனக்கு பிடிச்ச வாழக்கைய தேர்ந்தெடு”......என அவள் சொல்ல அவள் அடக்க முயன்றும் அவளையும் மீறி கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது.
அதுவரை தமக்கையுடன் எதிர்பேச்சு பேசிக்கொண்டு இருந்தவள் அவள் கண்களில் கண்ணீரை பார்த்ததும் வேகமாக அதை துடைத்தபடி அக்கா நீ சொன்னா நான் கேட்டுகிறேன்....அதுக்கு ஏன் அழுகுர....நீ அழுகாதக்கா...உன் மனசில என்ன குறை...என்கிட்டே சொல்லவும் மாட்டேன்கிற....உனக்கு நாங்க எல்லாம் இருக்கோமக்கா ......புகழ் மச்சானும் ரொம்ப நல்லவர்தான்க்கா........உனக்கு கடவுள் நல்ல வாழ்க்கையதான் கொடுத்திருக்கார்”........ என அவளை சமாதானபடுத்தியவள் “சரிக்கா நீ சொன்ன மாதிரி நான் நல்லா படிக்கிறேன்...டாக்டர் ஆகிட்டு அப்புறம் இத பத்தி பேசலாம்....இப்போ நீ அழ கூடாது சரியா” சாதரனமாக பேசி அவள் கண்களை துடைத்து விட
அதற்குள் சுதாரித்து கொண்ட பூரணி அவள் தலையை செல்லமாக ஆட்டியவள் “நீ ரொம்ப புத்திசாலி பொண்ணு பாரி.......எந்த விஷயத்தையும் சீக்கிரம் புரிஞ்சுக்கிற....நீ பெரிய ஆளா வருவடி” என மனதார அவளை பாராட்ட
“எல்லாம் என் அக்காவோட சேர்ந்து தான்...நீயும் அப்டிதான்க்கா...படிப்பு வேணா உன்கிட்ட இல்லாம போகலாம்......ஆனா உனக்குன்னு ஏதும் நினைக்காம அப்பா அம்மா குடும்பம் அப்டின்னு யோசிக்கிற பாரு எனக்கு அது எல்லாம் வராதுக்கா...உன்னால மட்டும்தான் இப்படி எல்லாம் இருக்க முடியும்” என பதிலுக்கு தனது அக்காவை மெச்சிய பாரி சரிக்கா ரொம்ப நேரமாகிடுச்சு..கிளம்பலாம்” என சொல்லிகொண்டே இருவரும் வீட்டை நோக்கி நடந்தனர்.
வீட்டின் முன்வாசலில் தனது காலனியை விட்ட பூரணி அருகில் இருக்கும் புதிய காலனியை பார்த்ததும் வியப்பும் அதிர்ச்சியுமாக வீட்டிற்குள் நுழைய அங்கு கூடத்தின் மத்தியில் பேச்சியம்மா அமர்ந்திருந்தார். எதிரில் இருக்கும் தூணில் சாய்ந்து நின்றபடி மணியம்மை நின்று இருந்தார்.
“என்ன நங்கை நீங்க வந்ததில் இருந்து ஏதும் சாப்பிடாம இருக்கீங்க...... கொஞ்சம் மோராவது குடிக்லாமல....இந்த புள்ளைங்க எப்பவும் சீக்கிரம் வந்திடுங்க...இன்னைக்கு இன்னும் காணோம்....இன்னும் இப்படி இருந்தா எப்படி?”என மணியம்மை புலம்பி கொண்டு இருக்க
“விடு மணி......நாள் முழுசும் வீட்டுக்குள்ள இருக்க புள்ளைங்க கொஞ்சம் காலரா நடந்திட்டு வரட்டுமே......டாக்டர்கிட்ட போனீங்களா...என்ன சொன்னாங்க....” என பேச்சியம்மா மருமகளின் உடல் நிலை பற்றி விசாரிக்க
“போனவாரம் தான் போயிட்டு வந்தோம் நங்கை......நல்லா இருக்கு....சத்து தான் குறைவா இருக்கு......கவுச்சி மீனு எல்லாம் கொடுங்க........வாந்தி நிற்கிறதுக்கு மாத்திரை கொடுத்து இருக்காங்க” என விளக்கம் சொன்னார் மணியம்மை.
அதற்குள் பூரணி “வாங்க அத்தை என்ற படி உள்ளே வரவும் பேச்சியோ “வரேன் பூரணி” என ஒரு வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு திரும்ப, உள்ளே வந்த பாரி “வாங்க அத்தை.....புகழ் மச்சான் பாண்டி மச்சான் எல்லாம் எப்படி இருக்காங்க?” என அனைவரயும் விசாரிக்கவும் “எல்லாரும் நல்லா இருக்காங்க....நீ பரீட்சை நல்லா எழுதிருக்கியா” என அவர் விசாரிக்க அதற்குள் பூரணி அத்தை ஏதாவது சாப்பிடிங்கலா என கேட்க அவரோ அவளை கண்டுகொள்ளாமல் பாரியிடமும் மணியம்மையிடமும் மட்டுமே பேசிக்கொண்டு இருந்தார்.
அவரது ஒதுக்கத்தில் இருந்தே அவர் தன் மேல் கோபமாக இருக்கிறார் என அவளுக்கு புரிய அமைதியாக நின்று கொண்டு இருந்தாள்.
அப்போது மணியம்மையை யாரோ அழைக்க பாரியும் அவரும் சென்றுவிட அங்கு பேச்சியும் பூரணி மட்டுமே நின்று கொண்டு இருந்தனர்.
பேச்சியம்மாள் அமைதியாக இருக்க “ஏன் அத்தை என் மேல ஏதாவது கோபமா?” என பூரணி தான் முதலில் ஆரம்பித்தாள்.

“பணம் பத்தா இருக்கணும்...பொண்ணு முத்தா இருக்கணும்...முறையும் அத்தை மகளா இருந்தா நல்லதுன்னு ஊர்ல எல்லாம் சொல்வாங்க......எல்லாமே அப்படி அமைஞ்சும் நிம்மதி இல்லாம இருக்கோம்....நான் எதுக்கு தாயீ உன்மேல கோப படறேன்.....இந்த கிழவி கோபப்பட்டு என்ன ஆகப்போகுது.......இந்த மாதிரி ஒரு சென்மம் இருக்கிறதை யாரும் நினைக்கவே இல்லையே......கண்ணாலத்தை முடிச்சுட்டு வெள்ளனே வந்திட்றேன் அத்தைன்னு சொல்லிட்டு வந்தவ சொல்லாம் கொள்ளாம அவங்க அப்பன் வீட்ல வந்து உட்கார்ந்து இருக்கா.......வீட்ல ஒருத்திகிட்ட சொல்லிட்டு வந்தமே...அவ நம்மளை பார்த்துகிட்டு இருப்பாளேனு கொஞ்சமாவது நெஞ்சுல கருக்கடை இருந்தா இப்படி பண்ணுவாளா....ம்ம்ம்ம் யாரை சொல்றது....கட்டிக்கிட்டு வந்தவளுக்கு போட்டியா பெத்தவ எப்படி இருக்கானு கூட பார்க்காம என் வயத்துல உதிச்ச முத்தும் வயலே கதின்னு கிடக்கிறான்.........இதெல்லாம் நான் அனுபவிக்கனும்னு இருக்கும்போது நான் என்ன பண்ண முடியும் சொல்லு என பேச்சியின் பேச்சில் ஆத்திரமும் ஆற்றாமையும் ஒருங்கே வர பூரணியோ என்ன பதில் சொல்வது என தெரியாமல் திகைத்து நின்றாள்.
“நொம்ப நேரம் ஒரே இடத்தில நின்னுகிட்டே இருக்காத..... அப்படியே நடந்து கொடு.....இல்லைனா காலு விருத்துக்கும்” என அவர் சொல்லவும்
அத்தைஆஆஅ என அழுதுகொண்டே வேகமாக அவர் அருகில் வந்து அவர் மடியில் தலைவைத்தவள் “என்னை மன்னிச்சிடுங்க அத்தை.......உங்ககிட்ட சொல்லாம வந்தது என் தப்பு தான்...மன்னிச்சுக்குங்க” என சொல்லி அழ
“சின்ன புள்ளைங்க வெள்ளாமை வீடு வந்து சேராதுன்னு சொல்வாங்க.....ஆனா நான் உங்களை நம்பினேன்.....அதுக்கு நல்ல பலன்......நான் உன்னை என் வீட்டு மருமகளா பார்க்கலை மகளா பார்த்தேன்....ஆனா நீ சொல்லாம இங்க வந்து மருமகள்தான்னு நிருபிச்சுட்ட தாயீ......ரொம்ப சந்தோஷமா இருக்கு.......சோத்துக்கு வழியில்லாம கஷ்டபட்டப்போ கூட ரோஷத்தை விட்டு கொடுக்காம வாழ்ந்தோம்...ஆனா இப்போ எல்லாத்தியும் விட்டுட்டு இந்த வீட்டு வாசப்படி மிதிச்சிருக்கேன்.....வரும்போது பாண்டிக்கும் எனக்கும் சண்டை...... நான் இங்க போகக்கூடாதுன்னு..... அவங்களுக்கே அவங்க பொண்ணு வாழ்கையில அக்கறை இல்லை.. நீங்க ஏன் போறிங்கன்னு சத்தம் போட்டான்.நான் என்ன தெரியுமா சொல்லிட்டு வந்தேன்......கழுத்துல தாலி ஏற மட்டும்தாண்டா அவ அந்த வீட்டு பொண்ணு.....என்னைக்கு உங்க அண்ணன் மூணு முடிச்சு போட்டானோ அப்பவே அவ இந்த வீட்டு பொண்ணுடா.....என் வீட்டு பொண்ணு அந்த வீட்ல ரொம்ப நாள் இருக்கிறது நமக்குதான் கேவலம்......நான் நம்மவீட்டு பொண்ணத்தான் கூட்டிட்டு வர போறேன்னு சொல்லிட்டு வந்தேன்..... என அவர் சொல்லி முடிக்கவும் பூரணியோ குலுங்கி குலுங்கி அழுதவள் என்னை மன்னிச்சுடுங்க அத்தை...தெரியாம பண்ணிட்டேன்...... இந்த மாதிரி நான் யோசிக்கவே இல்லை”.....என கதறவும் சத்தம் கேட்டு மணியம்மை பாரி அனைவரும் உள்ளே வந்தவர்கள் “என்னாச்சு பூரணி என மணியம்மை” பதற உடனே வேகமாக எழுந்த பூரணி “அம்மா நான் எங்க வீட்டுக்கு போறேன்” என சொல்லிவிட்டு வேகமாக கிளம்பினாள்.
“என்னாச்சு நங்கை” என மணியம்மை பதறவும்
“ஒண்ணுமில்லை மணியம்மை...என்ற மருமகள நான் கூட்டிட்டு போலாம்ல” என அவர் ஒரு மாதிரியான குரலில் கேட்கவும்
“என்ன நங்கை இப்படி கேட்கிறிங்க.....சந்தோஷமா கூட்டிட்டு போங்க.....ஆனா உடனே எப்படி....சாப்பிட்டு அப்புறம் போலாம்” என்றார்.
அதற்குள் பாரி பூரணியின் பின்னால் சென்றவள் “என்னக்கா உடனே கிளம்பற...அப்பா வேற டவுனுக்கு போயிருக்காரு....அவர் வந்திடட்டும்” என சொல்லவும்
பூரணியோ நான் உடனே போகணும் பாரி......உனக்கு அத்தை பத்தி தெரியும்தானே....அவங்க இங்க வந்ததே எனக்கு ஆச்சிரியம்......சத்தியம்மா நான் இதை எதிர்பார்க்கலை.....அதைவிட அவங்க பேசினதும் நியாயம்தான்....அவங்ககிட்ட சொல்லாம வந்தது தப்பு.....எனக்காக அவங்க இவ்ளோ தூரம் வந்து இருக்காங்க....அதுக்கு நான் மதிப்பு கொடுக்கணும்...சரி நான் கிளம்பறேன்.....நீ ரிசல்ட் வந்த பிறகு போன் பண்ணு” என வேகமாக சொல்லி கொண்டே நகர
“சரிக்கா உடம்பை பத்திரமா பார்த்துக்குங்க...அப்புறம் புகழ் மச்சானை விசாரிச்சதா சொல்லுங்க அப்படியே பாண்டி மச்சானையும் “ என சொல்லும்போதே அவளுக்கு சிரிப்பு வர
அந்த நிலையிலும் பூரணி அவளை திரும்பி முறைக்க
“சும்மா லுலுலுக்கா” என முகத்தை அவள் சுருக்கி காட்டவும் “பிச்சிடுவேண்டி” என ஒற்றை விரல் காட்டி மிரட்டிய பூரணி “ஒழுங்கா படி” என சொல்லிவிட்டு பேச்சியுடன் கிளம்பினாள்..
மணியம்மையும் எவ்ளோ சொல்லி பார்த்தும் பூரணி நிற்கவில்லை.....அப்பாவை எங்க வீட்டிற்கு வர சொல்லுங்க என சொல்லிவிட்டு வெளியே வர பேருந்தில் எப்படி செல்வது கார் அனுப்புகிறேன் என மணியம்மை சொல்லவும் அதற்கும் மறுத்துவிட்டனர். பேருந்தில் வரும் வழியில் அனைவரையும் பற்றி விசாரித்தவள் புகழை பற்றி பேச்சே எடுக்கவில்லை.
வீட்டிற்கு வந்ததும் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து செல்ல சேதி கேட்டதும் கனகா ஓடிவந்து அவளை அனைத்து கொண்டாள். பின்னர் சிறிது நேரத்தில் அருகில் இருப்பவர்கள் எல்லாம் வந்து அவள் உண்டாகி இருப்பதை விசாரித்து விட்டு செல்ல “சரி சரி எல்லாரும் கிளம்புங்க....என்ற மருமக கொஞ்ச நேரம் தூங்கட்டும்” என அனைவரையும் அனுப்பிய பேச்சி “உனக்கு என்ன வேணும் பூரணி சொல்லு செஞ்சு தாரேன்” என கேட்கவும் “இட்லி போதுங்கத்தை” என்றாள் அவள் .

“சரி நீ போய் ஓய்வு எடு” என சொல்லிவிட்டு அவர் உள்ளே செல்ல தனது அறைக்கு வந்தவள் அப்போது தான் புகழுக்கும் தனக்குமான போராட்டம் அவள் முன்னால் வர “கடவுளே அத்தை சொன்னதும் ஒரு வேகத்தில புறப்பட்டு வந்திட்டேன்...ஆனா எப்படி நான் மறுபடியும் இவர்கூட சேர்ந்து” என நினைக்கும்போதே அவள் நெஞ்சம் கலங்கி நின்றாள்.
அப்போது “என்ன பூரணி உள்ள போகாம அப்படியே நிக்கிறஎன்றபடி பேச்சியம்மாள் அங்கு வர
அவளோ “ம்ம்ம் அத்தை அது வந்து வந்து” என பேச்சு வர மறுக்க கண்ணீர் மட்டும் வந்து கொண்டிருந்தது.அவள் அருகில் வந்து நின்றவர் “இங்க பாரு பூரணி சண்டை இல்லாத புருசன் பொண்டாட்டி யாரும் கிடையாது......பேச்சால் தீர்க்க முடியாத பிரச்சன ஏதும் இல்லை......அதே நேரத்துல தப்பு செய்யாத மனுசங்களும் கிடையாது.....எதா இருந்தாலும் பேசி உங்களுக்குள்ள சரி பண்ணிக்க பாருங்க...இனி இந்த மாதிரி மறுபடியும் ஒரு நிலைமை வந்தா இதே மாதிரி வருவேன்னு மட்டும் நினச்சிடாத....அப்புறம் நீ என்னோட இன்னொரு முகத்தை பார்க்க வேண்டியதா இருக்கும்” என அனுபவஸ்தராக ஆறுதலும் சொல்லி அதே நேரத்தில் ஒரு மிரட்டலோடு முடித்தவர் “சீக்கிரம் போய் படு” என்றவர் ஆனால் அவள் உள்ளே சென்று படுக்கும் வரை இருந்து பார்த்துவிட்டே சென்றார்..


“அண்ணே அந்த பக்கம் இன்னும் கொஞ்சம் ஆழ உலுங்க......அப்பத்தான் நம்ம விதை போடறதுக்கு சரியா ஆகும்.....சீக்கிரம் வேலை முடிங்க ...... நாளைக்கு வேற வேலை நிறையா இருக்கு என்றவன் சுப்பு சித்தப்பா அந்த குப்பை சாணத்தை எடுத்து கொஞ்சம் மண்ணுல தூவுங்க...உழும்போது இன்னும் ஆழ போச்சுனா நல்லதுதான.... அப்புறம் அண்ணே கிழக்கு கடைசிவரைக்கும் விட்டு வண்டிய திருப்பங்கன்னே” என ட்ராக்டர் மூலம் நிலத்தை மற்றவர்கள் உழ அதை சீர் படுத்தி கொண்டிருந்தான் புகழ்.


அப்போது “என்ன புகழு உன்ற சம்சாரத்துக்கு உடம்பு சரியாகிடுச்சா உன்ற அம்மாவும் சம்சாரமும் பஸ்ல இறங்கி ஊருக்குள்ள போறத பார்த்தேன்” என வழியில் போகும் ஒருவர் இரங்கி விசாரித்துவிட்டு போக “என்னது பூரணி வந்திட்டாளா!!!!” என ஆச்சரியத்துடன் அவன் கேட்க


“அட உனக்கே தெரியாதா....என்ன ஆம்பளப்பா நீ......இப்பதான் பார்த்திட்டு வரேன்.....இந்நேரத்துகு வூட்டுக்கு போருப்பாங்க..போய் பாரு போ” என அவர் சொல்லிவிட்டு செல்ல அடுத்த பத்தாவது நிமிடத்தில் புகழ் வீட்டில் இருந்தான். வேகமாக வீட்டிற்குள் சென்றவன் தனது அறைகதவு திறந்து இருக்க “என் பூரணி வந்திட்டா” என மனதிற்குள் சந்தோஷ கூக்குரல் இட வேகமாக நாலெட்டு எடுத்து வைத்தவன் “நம்பிக்கை துரோகம் பண்ணிட்டிங்களே மச்சான் .....உங்களை எந்த காலத்திலும் மன்னிக்க மாட்டேன்” என பூரணியின் வார்த்தை அசரீரியாக ஒலிக்க அதுவரை இருந்த உற்சாகம் எல்லாம் சட்டென்று வடிய மனதில் ஒருவிதமான தயக்கத்துடன் உள்ளே நுழைந்தான் புகழ்.


அவள் அருகில் சென்று தூங்கும் தன் மனைவியை கண்களாலே ரசித்தவன் கண்களின் அருகில் இருக்கும் முடியை ஒதுக்கிவிட்டவாறு பூரணி இந்த மச்சான் மேல உனக்கு கோபம் இல்லைதான...எனக்கு தெரியும் பூரணி......நீ என்னை புரிஞ்சுக்குவ......அந்த நம்பிக்கையிலதான் காத்துகிட்டு இருந்தேன்.......வேறவழி இல்லாம அப்படி செஞ்சேண்டி...மத்தபடி உன்ற மச்சான் எந்த தவறும் செய்யாதவண்டி...நம்புடி” என அவளிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டான் அவள் மாணாளன்.ஆனால் அவளோ நல்ல உறக்கதில் இருந்தாள்.

“ரொம்ப இளைச்சு போய்ட்ட பூரணி” என சொல்லிகொண்டே அவள் கைகளை நீவிவிட அவளோ சற்று அசையவும் வேகமாக கைகளை எடுத்தவன் “பூரணி ..பூரணி” என சத்தமாக சொல்ல முயன்றும் வார்த்தைகள் காற்றாக வெளியே வர ஏனோ அவள் உறக்கத்தை கலைக்க மனம் இல்லாமல் வெளியே வந்தான்.உறக்கத்தை கலைக்க மனம் வரலியா இல்லை எங்கே அவள் விழித்தால் அவளை எப்படி எதிர்கொள்வது என்ற பயமா என அவன் மனம் அவனை கேள்வி கேட்க அவனோ பதில் சொல்ல முடியாமல் தவித்து போனான்.

பின்னர் நேராக பேச்சியம்மாவை தேடி சென்றான். அவர் தொழுவத்தில் வேலை செய்து கொண்டிருக்க அவரின் அருகில் போய் நின்றான்.அரவம் கேட்டு திரும்பி பார்த்த பேச்சி புகழை பார்த்ததும் “தம்பி புகழு..வா...வா அட இன்னிக்கு மருதுகிட்ட சாப்பாடு கொடுத்து விட்டனே” என அவர் எப்போதும் போல் சாதரனமாக பேச அவனோ “என்னை மன்னிச்சுடுங்கம்மா” என கேட்கும்போதே அவன் குரல் பிசிற

அவரோ அவனை சிலவினாடிகள் உற்று பார்த்தவர் “உன்னை மன்னிக்கிரதுக்கு நான் யாருப்பா? நீங்க எல்லாம் பெரிய மனசனாகிட்டிங்க......உங்களுக்கு தான் எல்லாமே தெரியும்...நாங்க எல்லாம் எதுமே தெரியாத பட்டிக்காடு” என அவர் கோபமாக சொல்லவும்

“ஐயோ அம்மா சத்தியமா நான் அப்படி நினைக்கலை” என பதறியவன் “அது வந்தும்மா என நடந்ததை சொல்ல நினைத்தவன் ஏனோ சொல்லாமல் ...... உடம்பு சரியில்லை அப்டினுதான்” என இழுத்துகொண்டே நிற்க


பேச்சியோ அவனையே பார்த்துகொண்டு இருக்க

பின்னர் “என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லி இருந்தா நானே போய் அழைச்சிட்டு வந்து இருப்பேன்லம்மா...நீங்க ஏன் அங்க போனீங்க” என அவன் பேச்சை மாற்றியதும் இந்த விஷயத்துல புருஷனும் பொண்டாட்டியும் ஒரே மாதிரி இருங்க....அவளும் அப்டிதான் என்ன நடந்திச்சுன்னு பஸ்ல வரும்போது கேட்டா வாய் திறக்கலை...இவனும் மழுப்பறான்.....நல்லா சோடி சேர்ந்தாங்க” என மனதிற்குள் நினைத்து கொண்டார் பேச்சி.

.

“அம்மாஆஅ” என மீண்டும் அவன் அழைக்க “ம்ம்ம் என்னப்பா” என அவர் மறுபடியும் கேட்கவும்

“நீங்க எதுக்குமா அங்க போனீங்க....மாமா இருந்தாரா ? என்னாலதான் உங்களுக்கு சிரமம்....இதனை வருஷத்துக்கு அப்புறம் அங்க போக வேண்டியதா போய்டுச்சு” என அவன் வருத்தத்துடன் கேட்கவும்

பேச்சியோ அவன் எதை நினைத்து பேசுகிறான் என புரியவும் “இங்க பாரு புகழு......நம்மவீட்டு பொண்ணு அங்க இருக்கும்போது நம்ம ரோஷத்தை பார்க்க முடியுமா? அதெல்லாம் விடு உன் பொண்டாட்டி உள்ள தான் படுத்திருக்கா ...போய் பாரு” என என்றார்.

“ம்ம் பார்த்திட்டு தான் வந்தேன்மா.....நல்லா தூங்கறா” என்றான் புகழ்.

உடனே பேச்சி “இங்க பாரு புகழு அவ இப்படி எல்லாம் நடக்கிறது இதுதான் கடைசியா இருக்கணும்....பிரச்சனை வந்த உடனே பொண்டாட்டிய அப்பன் வீட்டுக்கு அனுப்பறது ஒரு நல்ல ஆண்பிள்ளைக்கு அழகில்லை...அம்புட்டுதான் சொல்லுவேன்”.... என அவர் சொல்லும்போதே


“நான் போகசொல்லலைம்மா ..அவ தான்” என அவன் வேகமாக இடைமறிக்க

“அவ சொன்னாலும் நீ அவளுக்கு புத்திமதி சொல்லி நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்து இருக்கணும்....அத விட்டு அவ பொறந்த வீட்ல கொண்டு போய்விட்டு இங்க வந்து நீ ஊமையா இருக்கிறதால எந்த பிரயோசனமும் இல்லை....ஒரு ஆண் பிள்ளையோட தகுதி அவன் வேலை பார்க்கிறது மட்டும் இல்லை...அவன் குடும்பத்தை சந்தோஷமா வச்சுகிறதுளையும் தான் இருக்கு......அதை புரிஞ்சு நடந்துக்கோ” என அவர் அழுத்தமாக சொல்ல தலை குனிந்தபடி கேட்டுகொண்டே நின்றான் புகழ்.

“சரி சரி பொழுது சாஞ்சிருச்சு....எல்லாரும் வேலை முடிச்சு கிளம்பற நேரம் ....நீ வயலுக்கு போயிட்டு வந்திடு” என அவர் சொல்லவும் “சரிம்மா” என்றபடி அங்கிருந்து நகர்ந்தவன் “இங்க பேச்சு வாங்கியாச்சு...இனி அவ கண்ணுமுழிச்சா” என நினைக்கும்போதே அவன் உடல் சிலிர்க்க “ஆனாலும் புகழு உனக்கு சனி சட்டைபைகுல்லே இருக்குடா” என சொல்லிகொண்டே நடந்தான்..



கணவன் என்னும் அழகிய புத்தகத்தை
அலங்கரிக்கும் மயிலிறகு தான்
மனைவி என்பவள்.
அன்பை அள்ளி கொடுத்து
பாசத்தை பகிர்ந்து
நேசத்தை நெஞ்சில் நிறைத்து
வம்சத்தை வளரவைத்து
குடும்பத்தை கோவிலாக
மாற்றுபவள் மனைவி மட்டுமே!!!!
சிறு சிறு ஊடலும் காதலை
வலுபடுத்துமே தவிர அதை வதைக்காது.
சினத்தை தவிர்த்து சிந்தித்து பார்த்தால்
நெஞ்சில் நிறைந்தவனின் நேசம்
நிச்சயம் அவளுக்கு புலப்படும்!!!!!!!.


உண்மைதானே தோழிகளே
 

Mohanapriya

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
4
சூப்பர் ❤️😍👏
எப்போ பூரணி புரிஞ்சுக்குவா🤔
வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் யூடி
 

LAmmu

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 6, 2021
Messages
13
Super
 
Top