• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.
Joined
Jan 3, 2023
Messages
76
அத்தியாயம் - 1


"தமிழ்...."

"எந்திரி வேமா....."

"உன்னைத்தான் சொல்லிட்டே இருக்கேன் காதுல விழல...எந்திரி டி"

"இப்போ வந்தேன்னு வையி மூஞ்சிலயே மிதிப்பேன் மரியாதையா எந்திரி...."

இப்படி காலையிலே பலவித சுப்ரபாதங்கள் கேட்ட பின்னும் எழுந்திருக்காமல் இன்னும் தூங்கிக் கொண்டிருப்பவள் தான் தமிழினி. பொறுத்து பார்த்த அம்மா இவளை இப்படி விடக்கூடாது என்று எண்ணி பொங்கி எழுந்து விட்டார்.



"அய்யோ அம்மா என்னம்மா நீங்க இப்படி பண்ணிட்டீங்க" என்றவள் வேகமாக போர்வையை எடுத்து முகத்தை துடைத்தாள். குளிர் நீரின் ஸ்பரிசத்தால் உடல் நடுங்க ஆரம்பித்தது



"எத்தனை தடவை தான் டி உன்னை எழுப்புறது அதான் இப்படி பண்ணேன்."


"இதுலாம் ரொம்ப அநியாயம் சொல்லிட்டேன்"


"எதுடி அநியாயம் நீ பண்றதா? இல்லை நான் பண்றதா?"


"நான் என்ன பண்ணேன்"

"அதென்னடி பொட்டக் கழுதைக்கு இவ்வளவு நேரம் தூக்கம் கேக்குது."

"ஏன் ஆட்டக் கழுதைக்கு மட்டும் தான் தூக்கம் வருமா எங்களுக்கெல்லாம் அது வராதா..." நடுங்கிக் கொண்டே அவள் நக்கல் குரலில் கேட்டு வைக்க,

"அது என்ன ஆட்டக் கழுதை" என்றார் அம்மா வேகமாய்.


"ம்ம்..பொட்டக் கழுதையோட ஆப்போசிட்...."

"உன்னைலாம் திருத்த முடியாது.உன்னை கட்டிகிட்டு எவன் பாடுபட போறானோ..."

"என்னம்மா நீ... வீட்டு மாப்பிள்ளையை இப்படி மரியாதை இல்லாம பேசாத. அப்பறம் எனக்கு கோவம் வந்துரும்."

"வரும் வரும் வெளக்கமாத்தால இரண்டு போட்டா வரும்" என்று அவர் அதை கையில் எடுப்பதற்குள் அங்கிருந்து ஓடி விட்டாள் தமிழ்.



"என்ன பாக்யா மக ஓடிட்டாளா...காலைல அவகிட்ட வம்பிழுக்கலன்னா உனக்கு நல்லா இருக்காதே..." என்றபடி வந்தார் சிவநாதன்.


"மகளை சொல்லிட்டா போதுமே உடனே வரிஞ்சு கட்டிகிட்டு சண்டைக்கு வந்துருவீங்களே..."


"நான் போயி உன்கிட்ட சண்டைக்கு வருவேனா. எனக்கு அந்த தைரியம்லாம் இல்லம்மா தாயே" அவர் ஜகா வாங்கினார்.


"என்ன நக்கலா...அவ எந்திரிக்கிற நேரத்தை பாத்தீங்களா. இப்படி இருந்தா எப்படி...தேர்ட் இயர் படிக்க போறா... இன்னைக்கு ஹாஸ்டலுக்கு போகணும். அதுக்கு தேவையான திங்க்ஸ் கூட நான்தான் பேக் பண்ணித் தந்தேன். ஒருவேலையும் பாக்க மாட்றா. எல்லாம் நீங்க கொடுக்குற செல்லம். அட்லீஸ்ட் காலைல சீக்கிரமாவது எந்திரிக்கலாம்ல. எல்லாம் என் நேரம் தவமா தவம் இருந்து பெத்தேன் அது என்னடான்னா சொன்ன பேச்சு கேக்குறது இல்லை. இதெல்லாம் என்னைக்கு திருந்த போதோ" என்ற சொல்லிக் கொண்டே கிச்சனுக்குள் சென்றார்.


"என்னப்பா அம்மா என்ன சொல்றாங்க என்னைய பத்தி" அவர் அந்தப்பக்கம் போனதும் அவள் வந்து அமர,


"உங்க அம்மாவை டென்சன் பண்ணலன்னா உனக்கும் தூக்கம் வராது இல்லை குட்டியம்மா...." என்றார் அப்பா.


"பின்ன என்னப்பா காலைல எவ்வளவு சீக்கிரமா எழுப்பி விடுறாங்க இது தப்புல்ல" அவள் சொன்ன மறுநிமிடம்,


"என்னடி சொல்ற அங்க. சீக்கிரமா எழுப்பி விட்டேனா மணி என்னன்னு பாருடி" என்ற அம்மாவின் குரலில்...


"9 மணிதான ஆகுது...சரி சரி சாப்பாடு போடுங்க" என்றாள் வேகமாக.


"வந்து எடுத்துட்டு போ"


"இன்னைக்கு ரொம்ப அநியாயம் பண்றீங்க மா சொல்லிட்டேன்..."


"இனிமே எல்லாம் அப்படித்தான்..."


"ஓவரா தமிழ்படம் பாக்குறீங்க அம்மா...இது நல்லதுக்கு இல்லை"


"இப்போ சாப்பாடு வேணுமா வேணாமா"


"வர்றேன் வந்து நானே எடுத்துக்கிறேன்" என்றவள் முணுமுணுத்துக் கொண்டே கிச்சனுக்குள் வந்து அம்மா சமைத்ததை எடுத்து கொண்டு வெளியே சென்று அப்பாவுக்கு வைத்து விட்டு அவளும் சாப்பிட தொடங்கினாள்.


அதன்பிறகு அவள் கிளம்பும் நேரமும் வந்தது. கிளம்பியவள் தன் அன்னையை கட்டிக் கொண்டு "போயிட்டு வர்றேன் மா" என்றாள்.


"பாத்து போயிட்டு வாடா அம்மு...."என்று அவளை வழியனுப்பி வைத்தார். அப்பாவின் வண்டியில் ஏறி பஸ் ஸ்டாண்டிற்கு வந்தவளது விழிகள் அந்த வழியின் மீதே நீண்ட நேரம் நிலைத்து இருந்தது.



அப்பா கேட்பதற்கு எல்லாம் ஏதோ ஒரு பதிலை சொன்னவளின் கவனம் அவரிடத்தில் இல்லை. கடைசியில் பஸ் வரவும் அவள் ஏறினாள். அப்பவும் திரும்பி வழியைப் பார்க்க அவளின் எதிர்ப்பார்ப்பு பொய்யாய் போனதே மிச்சம். அப்பாவிடம் கையசைத்து விட்டு இருக்கையில் அமர்ந்தவள் முயன்று தன் கவனத்தை வெளியில் செலுத்தினாள்.



தனது கல்லூரி வந்ததும் இறங்கியவள் நேராக விடுதியினுள் நுழைந்து தனது அறைக்குச் சென்றாள். மற்ற தோழிகள் அனைவரும் காலையில் தான் வருவார்கள். அதனால் கொண்டு வந்திருந்ததை சாப்பிட்டு விட்டு படுத்து விட்டாள். உறக்கம் மட்டும் வராமல் அடம்பிடித்துக் கொண்டிருந்தது. சிறிது நேரம் மொபைலை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தாள். அப்பறம் அதில் பாட்டை போட்டு விட்டு அருகில் வைத்து விட்டு படுத்து விட்டாள்.



இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூவைத்
தொட்டிலில் கட்டிவைத்தேன்.
அதில் பட்டுத் துகிலுடன் அன்ன சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன்
நான் ஆராரோ என்று தாலாட்ட..
இன்னும் யாராரோ வந்து பாராட்ட...

அந்த குரலும் இசையும் அவளைத் தாலாட்ட.. அதன் பின் எப்போது உறங்கினாளோ தெரியாது.



மறுநாள் காலை....

"ஏய் தமிழ் எந்திரி டி"

"அம்மா இன்னும் கொஞ்ச நேரம் மா"

"ஏய் முட்டைக்கண்ணி நல்லா கண்ண தொறந்து பாருடி"

"ஓ... பப்பி டார்லிங் நீயாடி இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறேன்"


"தூங்குமா நல்லா தூங்கு மணி என்னன்னு தெரியுமா"


"அதையும் நீயே சொல்லிடு" தூக்கக் கலக்கத்திலே துக்கக் குரலில் அவள் சொல்ல..

"8 மணி...இன்னைக்கு வேமாவே காலேஜ் போகனும் ஞாபகம் இருக்கா" என்றாள் பப்பி. அவளின் தோழி.



"அடிப்பாவி 8 மணியாகிடுச்சா! நான் போய் குளிச்சுட்டு வந்துடுறேன் இரு" என்றவள் வேகமாக சென்று குளித்துவிட்டு வந்தாள்.



தமிழ் கிளம்பி வந்ததும் இருவரும் சாப்பிட சென்றனர். சாப்பிட்டு முடித்துவிட்டு காலேஜ்க்கு கிளம்பினர்.



"என்னடி தமிழ் கண்ணெல்லாம் சிவப்பா இருக்கு. நைட்டு சரியா தூங்கலயா...."


"ம்ப்ச்ச் ஏதேதோ ஞாபகங்கள் அதை விடுடி" உடனே அந்த பேச்சை துண்டித்தாள்.

"சரி சரி வா கோவிலுக்கு போலாம்...."

"கோவிலுக்கு எதுக்கு பப்பி போற?" தமிழினி விஷமத்துடன் கேட்க,

"இதென்ன கேள்வி எரும சாமி கும்பிட தான்" என்றாள் அவளும்.

"சாமிதான் உன் பக்கத்துலயே இருக்கே டார்லிங். என்னையே கும்பிட்டுக்கோ...நான் உன்னை ஆசிர்வதிக்கிறேன்."


"நீ இப்போ வாயைக் குறைச்சா நல்லா இருக்கும்."


"அது முடியாதே..."


"எப்படி டி இப்படி கூசாம பொய் பேசுற"


"பொய்யா பேசுறேன் அதுவும் நானா.போடி போ உனக்கு தான் உண்மையை ஏத்துக்க மனசு வரமாட்டேங்குது. சரி நீ போயி கும்பிட்டு வா. நான் வெயிட் பண்றேன்."


"நீயும் வா"

"நான் வல்ல போடி" எனவும் சரி என்று பப்பி கோவிலுக்கு சென்றாள். திரும்பி வந்தவள் தமிழ் அருகே பிரியா நிற்கவும் வேகமாக வந்தாள். இருவருக்கும் திருநீறு பூசிவிட்டவள்
"பிரியா எப்போடி வந்த" என்றாள்.


"இப்போத்தான் பப்பி. தமிழ் டார்லிங் நான் கிளாஸ் போறேன் ஈவினிங் ஹாஸ்டல்ல பாக்கலாம். உன்கிட்ட நிறைய பேசணும். மிஸ் யூ சோ மச் டியர்...."


"மீ டு மிஸ் யூ டார்லிங். பேசாம நீயும் என் கூடவே படிச்சுருக்கலாம். வேற டிபார்ட்மெண்ட் ஏன் போன? இப்ப பாரு இனி உன்கூட பேசுறதுக்கு சாயங்காலம் வரைக்கும் வெயிட் பண்ணனும்." என்று தமிழ் சோகமாக சொல்லவும்,

"அப்பா சாமி முடியல என்னா ஆக்டிங்" என்றாள் பப்பி தலையில் அடித்துக் கொண்டு.


"அவ கிடக்கா லூசு. நீ போடா தங்கக் குட்டி. நாம ஈவினிங் பேசலாம்...நாம மட்டும் பேசுவோம்." என்று தமிழ் சொன்னதும் பிரியா இருவரிடமும் பாய் சொல்லிவிட்டு அவளது கிளாசுக்கு சென்றாள்.


அவள் போனதும் பப்பி எதுவும் பேசாமல் அமைதியாக வரவும் "என்னாச்சு டார்லிங்? Why this silent" என்றாள் தமிழ்.


"ம்ம்ம் வேண்டுதல்"


"நல்ல வேண்டுதல் இதையே ஒவ்வொருத்தரும் பாலோ பண்ணா நல்லா இருக்கும்ல"


"அதுக்கு மொத நீ அதை பாலோ பண்ணனும். வந்துட்டா பெருசா பேச"


"கோச்சுக்கிட்டயா பப்பி டார்லிங்"


"டார்லிங்னு சொன்ன மூஞ்ச பேத்துருவேன். இப்பத்தான் நான் டார்லிங்னு உனக்கு தெரியுதா. இதுக்கு முன்னாடி இந்த வாயி எங்க போயிருந்துச்சு. இனி அவகிட்டயே பேசிக்கோ. என்கிட்ட பேசக் கூடாது."


"அய்யோ டார்லிங் உன்கிட்ட பேசாம நான் எப்படி இருப்பேன்"

"எப்படியோ இரு. எனக்கென்ன..." மாறி மாறி இருவரும் சண்டையிட்டுக் கொண்டிருக்க,


"அய்யோ ஆரம்பிச்சுட்டீங்களா இரண்டு பேரும். உங்களுக்கு வேற வேலையே இல்லையா" என்ற கோரஸ் குரலில் இருவரும் திரும்பி பார்த்தனர் ஆனந்தமாக.


அங்க மற்ற இரு தோழிகள் பரமேஸ்வரி (பரமி), ஜெயந்தி நின்றிருந்தனர்.


அவர்கள் அனைவரும் இணைந்து அரட்டை அடித்தபடி தங்களுடைய கிளாசுக்கு சென்றனர்.

மூன்றாம் வருடத்தின் முதல் நாள் வகுப்பு.... எப்போதும் போல் மகிழ்ச்சியுடனே சென்றது.



கல்லூரி வாழ்க்கை என்பது உண்மையிலேயே சந்தோசத்தின் பிறப்பிடம். எங்கேயோ இருந்து வந்தவர்கள் சொந்தங்களாய் மாறுவது விந்தையிலும் விந்தை...



காலேஜ் முடிந்ததும் நால்வரும் விடுதியை நோக்கி நடக்க ஆரம்பிக்க அப்போது தமிழின் கண்களை இருகரங்கள் மென்மையாக மூடியது.



கைகளை தொட்டுப்பார்த்தவள் வேகமாக "ஏய் மங்க் எப்போ வந்த" என்றாள்.


"போடி கண்டுபிடிச்சுட்ட...." என்றாள் சலிப்பாக மங்களாம்பிகை.


"என்ன டார்லிங் உன்னை எனக்குத் தெரியாதா..." அவளுடன் சுவாரஸ்யமாக பேசத் தொடங்கிவிட்டாள் அவள்.



பப்பியோ உடனே "ஆரம்பிச்சுட்டா டார்லிங் போடுறத இனி நிப்பாட்ட மாட்டா" என சலிப்பாய் உரைக்க,


"பப்பிக்கு பொறாமைடா மங்க்.ஆமா இன்னைக்கு வீட்ல இருந்து என்ன கொண்டு வந்த." என்றாள் தமிழ்.


"சிக்கன் கொழம்பு டி"


"குட். ஐ லைக் இட்...அண்ட் ஐ லவ் யூ டார்லிங்"


"தெரியுமே நீ இப்படித்தான் சொல்லுவன்னு" என்றாள் பரமி வேகமாய்.


"சரி வாங்க மொத ரூம்முக்கு போலாம். பிரியா டார்லிங்க வேற இன்னும் காணோம்" என்னும் போதே தூரத்தில் அவள் வருவது தெரிந்தது.


ஆறு பேரும் சேர்ந்து அந்த அறையே அதிர அதிர பேசி சிரித்துக் கொண்டு இருந்தனர். இத்தனை நாள் லீவில் நடந்ததை பற்றி பேசிக் கொண்டு இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.


கல்லூரி ஆரம்பித்த முதல் இரண்டு நாட்களுக்கு மட்டும் ஸ்டடி இல்லை என்பததால் ஹாஸ்டலே திருவிழா போல் கொண்டாட்டத்துடன் இருந்தது. பெல் அடித்ததும் தட்டை எடுத்துக் கொண்டு மெஸ்ஸூக்கு சென்றனர்.


சிக்கன் குழம்பின் பெரும்பகுதி தமிழின் தட்டிலேயே இருந்தது. அனைவரும் சேர்ந்து சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் வெளியே நடந்து கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் மற்ற நால்வரும் தூக்கம் வருவதாக சொல்ல தமிழும் ஜெய்யும் சிறிது நேரம் கழித்து வருவதாக சொல்லி விட்டு அங்கேயே உலாத்திக் கொண்டிருந்தனர்.


அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஜெயந்தியிடம் "என்ன ஜெய் என்கிட்ட ஏதாவது கேக்கனுமா" என்றாள் தமிழ்.


"இது தெரிஞ்ச உனக்கு நான் என்ன கேக்க போறேன்னும் தெரிஞ்சுருக்குமே"


"தெரியலை"


"நிசமாவே தெரியலையா? நல்லா நடிக்குற. ஆனா இத நம்புறதுக்கு நான் ஒன்னும் பப்பி இல்லை."


"அப்போ பப்பி ஒரு அப்பாவியா...அடப்பாவி. இரு பப்பி கிட்ட போட்டுத் தர்றேன்"


"பேச்சை மாத்தாத"


"சரி ஜெய் உனக்கு என்ன கேக்கனுமோ அத கேளு"


"நீ உன்னோட முடிவை மாத்திக்கிட்டயா"


"மாத்திருவேன்னு நீ நினைக்கிறயா"


"மாத்திக்கனும்னு தான் நான் நினைக்கிறேன்"


"அப்படி நினைச்சா அதுக்கு நான் பொறுப்பில்ல ஜெய்"


"இப்படி பேசுனா எப்படி தமிழ்"


"நீ வேற கடுப்ப கிளப்பாத ஜெய். நானே அதை நினைச்சு செம காண்டுல இருக்கேன்"


"அதான் நானும் சொல்றேன் இது உனக்கு தேவையா"


"இதுக்கு என்ன பதில் சொல்வேன்னு தெரிஞ்சும் நீ இப்படி கேட்டா நான் என்ன பண்றது"


"எனக்கு நீ கஷ்டப்படக் கூடாது. நானும் காலையில இருந்து பாக்குறேன் நீ எல்லார்கிட்டயும் சிரிச்சு பேசினாலும் உன் கண்ணுல அந்த சிரிப்பு இல்லை. நீ சந்தோசமா இருக்குறது தான் எனக்கு வேணும் தமிழ். அதுக்காக தான் நான் உன்கிட்ட இவ்வளவு தூரம் பேசிறேன் டா."


"ஏய் என்ன...இப்படி எல்லாம் பேசி என்ன அழ வைக்க பாக்குறயா..." என்று சொல்வதற்குள் கண் கலங்க ஆரம்பித்து விட்டது தமிழிற்கு.


"சரி விடு இனி நான் இது பத்தி பேசல. வா போயி தூங்கலாம். ஓகேவா..."


"ஓகே பேபி" இருவரும் அறைக்குச் சென்றனர். அங்கு நால்வரும் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தனர். இவர்களும் அவர்களின் கட்டிலில் படுத்து உறங்க ஆரம்பித்தனர்.


ஆனால் உறக்கம் என்பது இரு விழிகளுக்கு மட்டும் சொந்தமில்லாதது போல் ஒதுங்கியே இருந்தது. உனக்கும் கூட என்கிட்ட வர மனசு இல்லல என்று புலம்பியவள் விடியலுக்காக காத்திருக்க தொடங்கினாள்.



நிறங்கள் மாறும்...
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,971
அருமையான கல்லூரி கலாட்டா 😃😃😃😃😃😃😃😃😃தமிழுக்கு என்ன பிரச்னை 🤔🤔🤔🤔🤔
 
Top