• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வாழவும் ஆளவும் அவள் (ன்) இறுதி அத்தியாயம்

Aashmi S

Active member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
156
ஆதவன் திருமணத்தை தாத்தாவும், தந்தையும், சித்தப்பாவும் முன்னின்று நடத்த வேண்டும் என்று சமர் வேண்டுதல் வைக்க. அவர்களோ அவன் கூறியதில் சன்னமாக அதிர்ந்து இருந்தனர். வீட்டில் உள்ள அனைவருமே அவர்களின் பதில் என்னவாக இருக்கும் என்ற கேள்வியோடு மட்டுமல்லாமல் ஆர்வத்தோடும் நின்றுகொண்டிருக்க யாரும் எதிர்பார்க்காத வகையில்




"ஐயா ராசா" என்று கதறிக் கொண்டு அவரை கட்டி அணைத்தார் தாத்தா. அவர் மட்டுமல்ல சமர் தந்தையும் முருகனும் கூட கண்களில் கண்ணீருடன் அவனை இறுக அணைத்துக் கொண்டனர்.




"உன்னால மட்டும் எப்படி இவ்வளவு பெரிய மனுஷனா நடந்துக்க முடியுது? நாங்க பண்ண தப்பு எவ்வளவு பெருசு உன்னோட வாழ்க்கையில நீ அனுபவிக்க வேண்டிய சின்ன சின்ன சந்தோஷத்தை கூட நாங்க அனுபவிக்கவிடாமல் பண்ணியிருக்கோம், அப்படி இருந்தும் எங்கள மன்னிச்சு எப்படி எங்ககிட்ட சகஜமா பழகுற?" என்று மனத்தாங்கலுடன் சமர் தந்தை கேட்க




"எப்பவுமே வெறுப்ப என் மனசுல வச்சுக்கிட்டு சுத்திக்கிட்டு இருந்தா அதனால ஒரு பிரயோஜனமும் கிடையாது. பகையை மறந்து வாழ ஆரம்பிச்சா உண்மையான சந்தோஷம் கிடைக்கும் அததான் நானும் பண்றேன். இந்த வீட்ல ஒருத்தர் முகத்தில் நிம்மதி இல்லாமல் இருந்தாலும் எல்லாரோட முகத்திலையும் அந்த நிம்மதியின்மை பிரதிபலிக்கும்! என்ன பொறுத்த வரைக்கும் என்னோட குடும்பத்துல எல்லாரும் சந்தோஷமா இருக்கணும், நீங்களும் எல்லாத்தையும் மறந்து விட்டு சகஜமா இருக்க பாருங்க" என்று பெரிய மனிதனாக அறிவுரை கூறினான்.




"நீ எல்லார்கிட்டயும் சகஜமா பேசி பழக்குறத மாதிரி எங்க கூடயும் சகஜமாய் இருந்தாலே நாங்களும் உன்கிட்ட சகஜமா பேசி பழக ஆரம்பித்து விடுவோம். ஏன்னா என்னதான் வயசுல உன்ன விட பெரியவர்களாக இருந்தாலும் எங்களுக்கு இருக்கிற குற்றவுணர்ச்சி உன்கிட்ட சகஜமா பேச விடாது. ஆனால் அதே சமயம் நீ எங்க கிட்ட பேசினா எங்களால உன் கிட்ட பேசாம இருக்க முடியாது" என்று தங்கள் தரப்பு சம்மதத்தை கூறினார்கள் அவர்கள்.




"சரி சொல்லுங்க நான் கேட்ட மாதிரி ஆதவன் கல்யாணத்தை முன்னின்று நடத்தி குடுப்பீங்களா மாட்டீங்களா?" என்று தான் கேட்க நினைத்த விஷயத்தில் மறுபடியும் காரியமாக இருக்க



"கண்டிப்பா எல்லாருமா சேர்ந்து சிறப்பா கல்யாணத்தை பண்ணிடலாம் நீ கவலையே படாத இந்த ஊரே மெச்சும் அளவுக்கு எவ்வளவு சிறப்பா பண்ண முடியுமோ அவ்வளவு சிறப்பா ஆதவன் கல்யாணத்தை பண்ணிடலாம்" என்று மகிழ்ச்சியாக கூறினார் தாத்தா.



எப்பொழுதும் ஒரு ஓரத்தில் இருக்கும் சோகம் கூட அவ்வீட்டில் உள்ள அனைவரின் முகத்திலிருந்து மறைந்து போயிருந்தது. தற்போது நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளை கண்டு அதன்பிறகு என்னவோ அங்கு நிறைந்திருந்தது மகிழ்ச்சியும் சந்தோஷமும் மட்டுமே.



எப்பொழுது உறவின் பலம் ஒற்றுமையும் அதிகமாக இருக்கின்றதோ அப்பொழுது எந்த பிரச்சனை வந்தாலும் அது பெரிதாகத் தெரியாமல் சிறிதாகவே தெரியும் என்பதற்கிணங்க, வாழ்க்கையில் பிரச்சனை வராமல் இல்லை ஆனால் வந்த பிரச்சனையும் பனிபோல் விலகி செல்ல அனைவரும் மகிழ்ச்சியாகவே நாட்களை கடத்திக் கொண்டு இருந்தனர்.



வழக்கம்போல அனைவரும் சமர் தோட்டத்தில் ஒன்று கூடி இருக்க, அருள் தன் மனைவி கார்த்திகா அருகில் அமர்ந்து அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.



"என்னடா ஏதாவது என்கிட்ட சொல்லனுமா ரொம்ப நேரமா என்னோட முகத்தையே பார்த்துகிட்டு இருக்கிற மாதிரி இருக்கு எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லு"



"இல்ல கார்த்தி என்னோட அண்ணனுக்காக உன்னோட அக்காகாவும் யோசிச்சி நான் உன்ன கஷ்டப்படுத்திட்டு இருக்கேனா?" என்று தயக்கமாகவே கேட்டான்.



"நீ எதை நினைச்சு இப்படி என்கிட்ட கேட்கிற அப்படின்னு எனக்கு தெளிவாகப் புரியுது உனக்கும் எனக்கும் கல்யாணம் நடந்ததற்கு முக்கிய காரணமே அக்காவும் மாமாவும் தான்! அப்படி மட்டும் உனக்கு கல்யாணம் ஆகாம மாமாக்கு கல்யாணம் பண்ணி இருக்கலாம் அப்படின்னு ஒரு சின்ன விஷயம் கிடைச்சு இருந்தா கூட நம்மளோட கல்யாணம் இன்னும் ஒரு வருஷம் இல்ல ரெண்டு வருஷம் கழிச்சு தான் நடந்து இருக்கும். ஆனா வேற வழி இல்லாம தான் நம்ம ரெண்டு பேரு கல்யாணத்தை ஒரே நேரத்துல வெச்சாங்க. அது உனக்கும் தெரியும் இந்த ஒரு வருஷமும் ரெண்டு வருஷமும் நமக்குள்ள ஒரு புரிதல் வந்திருக்குமா இந்த அளவுக்கு நாம ஒருத்தருக்கு ஒருத்தர் காதலிச்சு இருப்போமா அப்படின்னு எனக்கு தெரியல. இவ்வளவு நாள் நாம காதலிச்சதைவிட நீயும் நானும் கல்யாணம் பண்ணி அதுக்கு அப்புறமா தான் நாம ரொம்பவே காதலித்துகிட்டு இருக்கோம் அதனால என்னை நீ எங்கேயுமே கஷ்டபடுத்தல! என்ன கஷ்டப்படுத்துற அப்படின்னு நீ நினைக்கவே கூடாது நான் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்" என்று கூறி அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள்.




தன் மனைவியின் புரிதலில் அன்பில் நிறைவாக புன்னகை புரிந்தவன், அவளுடைய நெற்றியில் இதழ் பதித்து தன்னோடு அணைத்துக் கொண்டான்.



ஒருபக்கம் இவர்கள் இப்படி தன்னை மறந்து காதலில் இருக்க மறு பக்கமோ ஆதர்ஷினி மடியில் படுத்துக் கொண்டு ,அவளிடம் புன்னகையோடு கதையை பேசிக்கொண்டும், அவளுடைய சேலை வழியே தெரிந்த இடுப்பில் கூச்சங்கள் கொடுத்துக் கொண்டும், அவளுடைய செய்கைகளை ரசித்து கொண்டும் இருந்தான் சமர்.



மற்றொரு பக்கம் ஆதவன் பவானி இருவரும் ஒரு மரத்தடியில் அமர்ந்து இருந்தனர். பவானி ஆதவன் தோள் சாய்ந்து "உண்மையாவே இந்த மாதிரி எல்லாம் நான் உங்களை காதலிப்பேன் அப்படின்னு நினைச்சுக் கூட பார்த்தது கிடையாது. உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அது அறியாப் பருவத்தில் இருந்தே இருந்த பிடித்தம் அதுக்கான காரணம் என்னன்னு கேட்டா இப்ப வரைக்கும் எனக்கு தெரியாது. ஆனால் உங்க தங்கச்சி விஷயத்துலயும் சமர் அண்ணா விஷயத்துலயும் நீங்க பண்ணது எல்லாம் பார்க்கும்போது உங்க மேல ஒரு ஈர்ப்பு இறக்கும் எல்லாமே வந்துச்சு. ஆனா இந்த இறக்கம்தான் என்ன உங்க கிட்ட நெருங்க விடாமல் பார்த்துக்கிச்சு. காதல் வந்து எதிர்பார்ப்பு இல்லாமல் வரணும் அத விட்டுட்டு இப்படி ஒரு இரக்கத்தினால் வரக்கூடாதுனு அமைதியாய் இருந்தேன்.




ஆனால் என்னுடைய ஆள் மனசுல உங்க மேல காதல் தான் இருக்கு அந்த காதல்னால வந்த இரக்கம்தான் இது அப்படி என்கிற விஷயத்தை உங்க தங்கச்சியை கண்டுபிடிச்சு, இப்போ நம்மளோட கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்து நிப்பாட்டி இருக்கா. உண்மையாவே இப்படி ஒரு பிரெண்டு கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும் நீங்க என்னோட கணவரா கிடைக்க நான் என்ன பாக்கியம் செய்தேன் இன்னைக்கு வரைக்கும் எனக்கு புரியல" என்று அமைதியாகவும் ஆத்மார்த்தமாக கூறினாள்.



ஆதவன் எதுவும் கூறாமல் அவள் உச்சந்தலையில் ஒரு முத்தம் வைத்தான். அதுவே அவளுக்கு அனைத்தும் உணர்த்துவதாக இருக்க அவளும் அமைதியாக புன்னகைத்துக் கொண்டாள்.



இந்த மூன்று ஜோடிகளையும் பார்த்த மற்றவர்கள் மூன்று ஜோடிகளும் இழுத்துக் கொண்டு வந்து ஒன்றாக நிற்க வைத்தனர்.



"உங்களுக்கு என்னடா பிரச்சனை எதுக்காக எங்க மூனு ஜோடியும் ஒன்றுபோல இழுத்துக்கொண்டு இங்க நிக்க வச்சு பாத்துகிட்டே இருக்கீங்க" என்று அருள் கேட்க



"அண்ணா காதல் அப்படி என்றால் என்ன? யாருக்கு வேணா யார் மேல வேணா காதல் வரலாமா? உண்மையாவே ஒருத்தர நம்ம காதலிக்க ஆரம்பிச்சுட்டோமா அப்படி என்கிற விஷயத்தை எப்படி கண்டுபிடிக்க? நீங்க மூணு பேருமே மூன்று விதமாக காதல் பண்றீங்க, அந்த வித்தியாசம் எங்களுக்கே தெரியுது ஆனா உண்மையிலேயே காதல் அப்படினா என்ன?" என்று சரண் குழப்பமாக கேட்க



"இப்போ எதுக்கு உனக்கு இந்த விளக்கமெல்லாம் ஒழுங்கா படிக்கிற வேலைய மட்டும் பாரு, உனக்கு புரிய வைக்க வேண்டிய நேரத்துல நான் கண்டிப்பா புரியவைப்பேன்" என்று கார்த்திகா கூற



"இல்ல கார்த்தி இதுதான் அவனா புரிஞ்சுக்கவே வேண்டிய வயசு, இந்த வயசுல தடுமாற்றத்தை அதிகமாக கொடுக்கும் இந்த வயசுல தடுமாற்றம் வராம இருக்கனும் அப்படின்னு சொன்னா இப்ப இவன் கேக்குற கேள்விக்கு நாம விளக்கம் கொடுக்கிறதுல எந்தவித தப்பும் கிடையாது. நீ அமைதியா இரு நாங்க பாத்துக்குறோம்" என்று ஆதர்ஷினி கூறினாள்.


"


காதல் அப்படிங்கறது ஒரு உணர்வு மட்டும் கிடையாதுடா! அதாவது யாருனே தெரியாத ஒருத்தர் மேல நமக்கு பாசம் வரும்! அந்தப் பாசம் எந்தவகையில் வருது அப்படின்னு சொல்லிட்டு உன்னோட மனசு கிட்ட நீயே கேட்டா எனக்கு பதில் கிடைக்கும். ஏன் தெரியுமா? எந்த வித வித சம்பந்தமும் இல்லாத அவங்க மேல நமக்கு பாசம் வரும்போது அந்த பாசம் சகோதர பாசம் ஆகவும் இருக்கலாம்! பிரெண்ட்ஷிப் சார்ந்த பாசமாகவும் இருக்கலாம்! காதல் சார்ந்த பாசமாகவும் இருக்கலாம்! இத முதல்ல கண்டுபிடிக்க பார். பிரெண்ட்ஷிப் அப்படிங்கிற விஷயம் உனக்கு எப்பவுமே வாழ்க்கை முழுக்க வரக்கூடியது, அதுல ஒளிவுமறைவு இருக்கப் போறது கிடையாது.

ஆனாலும் காதல் அப்படின்னு வரும்போது ஒரு சின்ன கள்ளத்தனம் வரும், ஃப்ரெண்ட்ஸ்கிட்டயும் மறைக்க பார்த்த அதே சமயம் அந்த பொண்ணு இல்லாம இருக்க முடியாது. இது ஒரு விஷயம் அதே மாதிரி காதல் வந்ததா கள்ளத்தனம் வருமே தவிர தவறு செய்யனும் அப்படிங்கிற எண்ணம் வராது. இப்போ உள்ள நிறைய பேருக்கு காதல் அப்படிங்கற விஷயமே ரொம்பவே மோசமான எடுத்துக்காட்டாக அமைஞ்சிருக்கு, காதலில் ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுக்கிற விஷயம் அதிகமாக இருக்குமே தவிர ஒருத்தர ஒருத்தர் உபயோகப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கவே செய்யாது.


ஒரு பிரச்சனை வரும் போது எப்படி நம்ம அப்பாக்கு பிரச்சனை வந்தா அம்மா துடிப்பாங்களோ, அதே மாதிரி தான் நமக்கு பிரச்சனை வரும் போது நம்முடைய காதலியோ காதலனோ துடிப்பாங்க. அந்த துடிப்புல்ல ஒரு உண்மை தெரியும்! அதே மாதிரி உண்மையாவே நீ காதலிச்சு இருந்தா அவங்க கண்ணை பார்த்து மட்டும் தான் உனக்கு பேச தோணும். கண்ண பார்க்கும்போதும் ஒரு சின்ன தடுமாற்றம் வருமே தவிர உனக்கு வேற எங்கேயும் பார்க்க தோணாது. அந்த தடுமாற்றத்திற்கு வரக்கூடிய முக்கிய காரணமும் உன்னால அவங்கள பாக்க முடியல அப்படிங்கிற ஒரு சின்ன வெட்கமும், நாணமும் தான். பொண்ணுங்களுக்கு மட்டும் தான் இருக்குன்னு கிடையாது உனக்கும் இருக்கும்!

நாங்க மூணு பேரும் பண்றது மூன்று விதமாக இருக்கேன்னு சொல்ற இல்ல, என்னோட வாழ்க்கையை எடுத்து பாரு எனக்கு எதுவுமே கிடைக்காமல் இருந்த பிறகும் நான் எவ்வளவு ஒதுங்கிட்டு நான் போனாலும், நீதான் என்னோட வாழ்க்கை அப்படின்னு அடம் புடிச்சு என்னோட வாழ்க்கையை மாத்தி இருக்கா! உன்னோட அண்ணி. அதே மாதிரி என் மேல வச்ச பாசத்துக்காக என்ன எல்லாத் திருட்டுதனம் அருள் பண்ணான் அப்படிங்கிற விஷயம் உனக்கு தெரியும்! அதே மாதிரி தன்னோட வாழ்க்கைதான் முக்கியம் அப்படின்னு எடுத்துக்காம தன்னோட அக்கா வாழ்க்கையும் முக்கியம், அக்கா காதலும் முக்கியம் அப்படின்னு சொல்லி எங்களுக்காக அவன் கூடவே நின்னு போராடின கார்த்திகா காதல் தனி பெருமை! அதான் எல்லாரும் சுயநலமா யோசிக்கும் போது இந்த காதல்ல சுயநலம் சுத்தமா இல்ல ஆனா ஒருத்தர் மேல ஒருத்தர் வச்சிருக்க அன்போடு ஆழம் ரொம்பவே பெருசு!




ஆதவன் பவானி காதல் வேறுவிதம் மனசுக்குள்ள ஆசை இருந்தாலும் எங்க ரெண்டு பேரையும் நினைச்சி ஏங்கிகிட்டு அவங்க காதல அவங்க சொல்லிக்கொண்டது கிடையாது. இதுல உன்னோட அண்ணி அவ காதல மட்டும் சேர்த்து வைக்காமல் தன்னோட அண்ணனுக்கும் பிரெண்டும் கொண்டிருந்த காதலை தெரிஞ்சுகிட்ட அவங்க காதலையும் சேர்த்து வெச்சு இருக்கா! எங்களோட வாழ்க்கை நல்லா போக ஆரம்பிச்சது தெரிந்த பிறகுதான் ஒருத்தருக்கு ஒருத்தர் காதலையும் சொல்லிக்கிட்டாங்க. அதேசமயம் மனசு விட்டு பேசவும் செய்கிறார்கள். ஆனால் அதில் அவனுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது கிடையாது. ஆனாலும் எனக்கு நீதான் உனக்கு நான் தான் அப்படிங்கிற உள்ள ஆத்மார்த்தமான அன்பு அவங்களுக்குள்ள இருந்த காரணத்தினால் அவர்கள் சேர்ந்து இருக்காங்க.


இந்த மாதிரி ஒரு ஆத்மார்த்தமான அன்பு உனக்கு யார் மேலயாவது வந்தால் முதல்ல உன்னை நீயே சுயபரிசோதனை பண்ணு! அதுக்கு அப்புறமா அந்த பொண்ணு கிட்ட போய் சொல்லு ஆனால் அந்த பொண்ணு உன்ன வேணான்னு சொன்னா நீ உன்னோட பக்கமிருந்து புரியவைக்க முயற்சி பண்ணு.! என்னோட காதல் விஷயத்துல எனக்கு வேணாம்னு வாய் மட்டும் தான் சொன்னதே தவிர மனசு வேணும்ன்னு சொல்லிச்சு. அந்த விஷயத்தை உன்னோட அண்ணி கண்டு பிடிச்சுட்டா, அதனாலே அவ வந்து விடாமல் போராடினாள். ஆனா உனக்கு ஒரு பொண்ணு மேல காதல் வரும் போது அந்த பொண்ணுக்கு உண்மையாவே மனசார பிடிக்காமல் இருந்தால் அந்த பொண்ண எக்காரணம் கொண்டும் தொந்தரவு பண்ணாத! நீ தொந்தரவு பண்ணும் போது அந்த பொண்ணுக்கு அது வேறு விதமான சிக்கல்கள் நிறைய கொடுக்கும். அதே மாதிரி நாங்க எல்லாருமே உனக்கு அண்ணனாக இருந்தாலும் எப்போவுமே உங்களுக்கு ஒரு நல்ல பிரண்டா எப்போ உங்க வாழ்க்கையில இந்த மாதிரி ஒரு தடுமாற்றம் வருதோ தயங்காம எங்க கிட்ட வந்து சொல்லுங்க. நாங்க கண்டிப்பா அதற்கு ஒரு தீர்வு சொல்லுவோம்" என்று கூறி முடித்தான் சமர்.



அவன் கூறியதைக் கேட்ட அனைவரும் ஓடி சென்று அவனை அணைத்துக் கொண்டனர். காதல் என்று கூறினால் அது ஏதோ தீண்டத் தகாத விஷயம் போல் தான் பலர் கூறுகின்றனர். ஏன் காதலித்து திருமணம் செய்தவர்கள் கூட தங்களுடைய பிள்ளைகள், தங்களுடைய தம்பி தங்கைகள் காதலித்தால் அதற்கு எதிர்ப்பு காட்ட நான் முனைவார்கள். காரணம் கேட்டால் அவர்கள் காலத்தில் கஷ்ட்டப்பட்டதாக ஒரு கதையும் கூறுவார்கள். ஆனால் இங்கோ உனக்கு இப்போது என்ன பிரச்சனை வந்தாலும் நாங்கள் இருக்கிறோம் எங்கள் முன்வந்து உன் மனதில் இருப்பதை கூறு நாங்கள் உனக்கு சரியான பாதையை அமைத்துத் தருகிறோம், என்று அவர் கூறியதை கேட்டு உள்ளம் நெகிழ்ந்து போன அவன் தம்பி தங்கைகள் அவனை ஆரவாரமாக அணைத்துக் கொண்டனர்.




அவனும் புன்னகையோடு அவர்கள் அனைவரையும் அணைத்துக்கொள்ள அங்கே ஒரு அமைதியான பாசமான சூழ்நிலை உருவாகியது. அதன் பின் வந்த நாட்களில் அனைவருக்கும் மிகவும் உற்சாகமானது மகிழ்ச்சியானதுமாகவே அமைந்தது.

ஆதவன் பவானி திருமணத்திற்கு அனைவரும் தங்களுடைய முழு ஒத்துழைப்பையும் கொடுத்தனர். இதுநாள் வரை சமர் வீட்டிலிருந்த எனக்கு தெரியல ஒரு இறுக்கம் தளர்ந்து தாத்தா சமர் தந்தை முருகன் சித்தப்பா என அனைவருமே முழுமனதோடு அனைத்து வேலைகளிலும் ஈடுபட்ட காரணத்தினால் தங்கள் மனதில் இருந்த சோர்வு, வருத்தம் நீங்கி மகிழ்ச்சியாக வலம் வந்தனர்.

திருமண வேலைகள் படுஜோராக நடக்க ஆரம்பித்தது. ஒருபக்கம் வேலைகள் நடந்து கொண்டிருக்க மறுபக்கம் கார்த்திகா, ஆதர்ஷினி, நிலா சரண்யா என அனைவரும் ஒன்று சேர்ந்து பவானியை கலாய்த்துக் கொண்டிருந்தனர்.

"அடியே பானி பூரி நாளையிலிருந்து நாங்கள் எல்லாம் உன்னோட கண்ணுக்கு தெரிவோமா மாட்டோமா? இப்பவே பாதி நேரம் எங்களை உன்னோட கண்ணுக்கு தெரிய மாட்டேங்குது, ஆதவன் அண்ணா மட்டும்தான் கண்ணுக்குத் தெரிகிறார். போகப்போக நாங்கல்லாம் யாரு அப்படின்னு கேப்ப போல அந்த மாதிரி கேள்வி எல்லாம் கேக்கணும்னு கனவுல கூட நினைக்காத நாத்தனார் கொடுமை நான் என்னன்னு உனக்கு நாங்கள் காட்டுவோம்" என்று சிரிப்புடன் ஆதர்ஷினி மிரட்ட


"ஆமா நாத்தனாரா இல்லாத போதே நாத்தனார் கொடுமை பண்ற மாதிரிதான் கூடவே இருந்து எல்லா விஷயத்தையும் பண்ண, அப்போ ஒரு நல்ல பிரண்டா போயிட்ட இப்போ புதுசா நாத்தனார் பதவி வேற உனக்கு கிடைச்சிருக்கு, இனி சும்மாவா விடுவ? ஆனா முதல்ல அதுக்கு நான் உனக்கு கண்ணுக்கு தெரியனும்மா உனக்கு என்னோட அண்ணா மட்டும்தான் கண்ணுக்கு தெரியும்,! வேற யாருமே கண்ணுக்கு தெரிய மாட்டாங்க. இந்த வந்து நிலா சரண்யா கூட என்ன பார்க்கும் நான் ஒரு மனசு உண்டுன்னு தேடும் அப்படின்னா நான் நம்புவேன். ஆனா உங்க அக்கா தங்கச்சி இரண்டு பேரையும் நம்பவே மாட்டேன்" என்று சளைக்காமல் பதில் அளித்தாள்.


"ஐயோ இப்படி எல்லாம் சொல்லலாமா நாங்க என்னைக்கு உங்கள மறந்தோம்" என்று கார்த்திகா அவளே அழுத்திப் பிடிக்க மற்றவர்களும் அதுபோலவே அவளைக்கட்டி பிடிக்கிறேன் என்று ஒரு அழுத்து அழுத்தி விட்டனர்.


அதில் பதறிய பவானி "போதும்டி தெய்வங்களா தெரியாத்தனமா உங்களை கலாய்ச்சேன், இனி மேல் தப்பித்தவறி கூட இந்த மாதிரி வாயை திறக்கவே மாட்டேன்" என்று சரணாகதி அடைந்து விட அங்கே மொத்தமாக அவர்களின் சிரிப்பு சத்தம் தான் நிறைந்திருந்தது.

அப்படியும் இப்படியுமாக திருமணநாள் வந்துவிட பெண்கள் அனைவருமே பட்டு சேலையில் அம்சமாக அழகு தேவதைகளாக கிளம்பி வந்தனர். அவர்களைப் பார்த்த அவர்களின் கணவர்களின் மனது தான் ஒரு நிமிடம் நின்று துடித்தது. கண்களை அவர்களை விட்டு விலக இயலாமல் அவர்களையே பார்த்துக் கொண்டிருக்க அதைக்கண்ட பெண்களும் நாணத்தில் தலை குனிந்து கொண்டனர்.

சரியான முகூர்த்த நேரத்தில் ஆதவன் பவானி கழுத்தில் மூன்று முடிச்சு அவளை தன் மனைவியாக்கிக் கொண்டான். அனைவரும் தங்களை பார்க்கிறார்கள் என்ற எண்ணம் சிறிது கூட இல்லாமல் அவள் நெற்றியில் இதழ் பதித்து தன்னுடைய அன்பையும் அவளுக்கு மறுமுறை உணர்த்தினான். அதே புன்னகையுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள் அங்கு நின்று கொண்டிருந்த பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவர் முகத்திலும் மெல்லிய புன்னகை மட்டுமே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர்.


அதன்பிறகு விருந்தினரை கவனிப்பது என நேரம் கடக்க இரண்டு குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று கூடி இருந்த நேரத்தில் சமர் கைகளை பிடித்து இழுத்து வந்த ஆதர்ஷினி அனைவரின் முன்பாக அவனை நிறுத்தினாள். எதற்காக இப்படி செய்கிறாள் என்று புரியாமல் அனைவரும் குழம்பி தான் இருந்தனர். ஏன் சமர்க்கு கூட அவள் எதற்காக இவ்வாறு செய்கிறார் என்ற விஷயம் தெரிந்திருக்கவில்லை.


அனைவரையும் ஒரு நிமிடம் பார்த்தவள் திரும்பி தன் கணவன் முகத்தை பார்த்து "எப்படி உன்னோட குடும்பத்தில் உள்ள எல்லாரையும் உன் கூட சேர்த்து வச்சு உனக்கு ஒரு முழுமையான குடும்பத்தை கொடுத்தேனோ, அதே மாதிரி இன்னொரு முழுமையான சந்தோஷத்தை நான் உனக்கு கொடுக்க போறேன். இதுநாள் வரைக்கும் உன்னோட குடும்பம் அப்படின்னு நினைச்சிட்டு இருந்த உன்னோட அப்பா, அம்மா, சித்தப்பா, பெரியப்பா, தாத்தா, பாட்டி, தம்பி, தங்கச்சி, பொண்டாட்டி தம்பி பொண்டாட்டி இப்படி இருந்த அவங்களோட இனி உன்னோட குழந்தையும் சேர போகுது! இந்த சந்தோஷம் உன்னோட மனசுல விட்டாம இருக்கணும் இதே சந்தோஷத்தில் தான் உன்கிட்ட இந்த விஷயத்தை சொல்லணும்னு முடிவு பண்ணி இப்போ எல்லார் முன்னாடியும் இந்த விஷயத்தை சொல்றேன். இனி உன்னோட பொறுப்புகள் ஜாஸ்தி ஒரு அப்பாவா உன்னோட குழந்தைய எந்த அளவுக்கு நீ பார்க்கணும்னு உனக்கு தெரியும்! உனக்கு கிடைக்காமல் விட்ட விஷயங்கள் எல்லாத்தையுமே உன் பிள்ளைக்கு கொடுத்த நீ முழுமையான சந்தோஷத்தை அனுபவி" என்று கூறி அவன் கைகளை எடுத்து தன் வயிற்றில் வைத்தவள் அவன் நெற்றியில் அழுத்தமாக முத்தம் வைத்தாள்.




இப்படி ஒரு இன்ப செய்தி கிடைக்கும் என்று எதிர்பாராத அனைவரும் இன்பத்தில் திக்குமுக்காடிப் போயினர். சமர் நிலை சொல்லவே வேண்டாம் மிகவும் ஆனந்தத்தில் இருந்தவன் அனைவரும் இருப்பதை மறந்து அவளை இறுக அணைத்து கொண்டான். சிறிது நேரம் கழித்து ஆசுவாசமாக உணர்ந்தவன், அவள் நெற்றியில் இதழ் பதித்து "நீ சொன்னத விட அதிகமாகவே நான் செய்வேன் ஆனா வெறும் அன்பு மட்டுமே காட்டமாட்டேன், கண்டிப்பையும், நிலைமையை எடுத்து சொல்ற விதத்தையும், எப்படி எல்லாம் எல்லாரையும் பார்த்துக்கணும் அப்படிங்கிற விஷயத்தையும் சேர்த்தே சொல்லுவேன். எப்படி நான் இந்த வீட்டிற்கு மூத்த பிள்ளையாக இருந்து இவங்க எல்லாரையும் ஒதுக்கினாலும் என்னோட தம்பி தங்கைகளுக்கு நாம் நல்ல அண்ணனாக இருந்தேனோ! அதே மாதிரி என்னோட பிள்ளையும் அவளுடைய தம்பி தங்கச்சிகளுக்கு ஒரு நல்ல அண்ணனாவோ அக்காவோ இருக்க பைப்பை என்று கூறி அவள் நெற்றி கன்னத்தில் முத்தம் வைத்தான்.


அதன்பிறகு அனைவருக்கும் இனிப்பு கொடுத்து இந்த சந்தோஷமான செய்தியை கொண்டாடினார்கள். கூடியிருந்த அனைவரின் முகத்திலும் ஒரு சிரிப்பு இருந்தது ராதிகா கூட எப்போது சமர் முருகனிடம் சகஜமாக பேச ஆரம்பித்திருந்தானோ அப்போது இருந்து கொஞ்சம் கொஞ்சம் பேச ஆரம்பித்திருந்தார். அவர் மட்டுமல்ல அவர் குழந்தைகள் சரண் சரண்யாவும் முன்பு போல் இல்லாமல் சிறிதாக தங்கள் தங்கள் தந்தையிடம் பேசத் தொடங்கி இருந்தனர். கண்டிப்பாக அவர்களையும் பழைய மாதிரி மாற்றி நிறைவான குடும்பமாக செய்யும், இதுபோலவே தன் வாழ்வில் இழந்த அனைத்தையும் சமர் திரும்பப் பெற்று மகிழ்ச்சியான நிலையில் வாழ்வான் இனி அருள் கார்த்திகா எந்தவிதக் கவலையும் இல்லாமல் தங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்து, தங்கள் வாழ்வை முழுமையாக மாற்றுவார்கள் இவை அனைத்தையும் கடவுள் நிச்சயமாக இவர்களுக்கு வழங்குவார் மன நிறைவுடன் வேண்டிக்கொண்டு வாழ்த்தி விடை பெறுவோம்.
சுபம்.

ஒரு வழியா கதைய முடிச்சுட்டேன் இந்த கதையில் உங்களுக்கு பிடித்தது பிடிக்காதது எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லுங்க முடிஞ்ச அளவுக்கு கதைய நல்லாவே கொண்டுபோய் முடிச்சிருக்கேன் அப்படின்னு நம்பரை இதுல ஏதாவது உங்களுக்கு குறை இருந்தால் தயங்காமல் என்கிட்ட வந்து சொல்லுங்க நீங்க கமெண்ட்ல சொல்ல முடியாத அவங்க தனியா இன்பாக்ஸ் வந்து கூட சொல்லுங்க உங்க எல்லாருடைய கருத்துக்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தோழி என்னோட பதிவுகளை ஏதாவது பிள்ளைகள் இருந்தா மன்னிச்சிடுங்க .
நன்றி.
 
Top