• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வாழவும் ஆளவும் அவள் (ன்) 18

Aashmi S

Active member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
156
சமர் வீட்டு வாசலில் பிரச்சனை பெரிதாக பிடித்துக் கொண்டிருக்க பேச்சுவாக்கில் ஆதர்ஷினி சமரை சாம்பார் என்று அழைத்ததை மற்றவர்கள் யோசிக்காமல் இருந்தாலும் பவானி மனதிற்குள் "அடியே ஆத்திச்சூடி செல்லப் பேரு வைக்கிறதுதான் வைக்கிற கொஞ்சமாவது நல்ல பேரா வைக்கிறியா? எப்ப பாரு திங்கிற பேயரையே வைக்கிற. எனக்கு பானிபூரி அண்ணனுக்கு சாம்பார் இன்னும் வேற யாருக்கு என்ன எல்லாம் வச்சு இருக்கியோ" என்று எண்ணி புலம்பிக் கொண்டிருந்தாள்.



அவளுக்கு இங்கே நடந்து கொண்டிருக்கும் பிரச்சனை எதுவும் பெரிதாக தெரியவில்லை காரணம் என்னவென்றால் நிச்சயம் இதை வைத்து அவள் தோழி ஏதாவது ஒரு திட்டத்தை தீட்டி இருப்பாள் என்பதை இத்தனை வருடம் ஒட்டி பிறந்தவள் போல் சுற்றிக் கொண்டிருந்த அவள் அறியாமல் இருப்பாளா என்ன அதனால் அவளும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.



அப்போதுதான் விஷாலினி அளவுக்கு அதிகமாகவே பேச ஆதர்ஷினி சென்று அவளை நன்கு அடித்து விட்டாள். பதிலுக்கு விசாலினி அவளை அடிக்க வர தன் மனைவியை தன் கைகளுக்குள் கொண்டுவந்த சமர் ஏய் என்று அவளை நோக்கி விரல் நீட்டி கர்ஜித்தான்.



அந்த ஒற்றை கர்ஜனையில் வீட்டில் இருந்த அனைவருக்கும் ஒரு நிமிடம் தூக்கி வாரிப்போட்டது. ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத அவனோ தன் மனதில் இருந்த அத்தனை கோபத்தையும் வெளிக்கொண்டுவர ஆரம்பித்தான்.

"


என்ன ரொம்ப ஓவரா பேசிட்டே போயிட்டு இருக்க என்ன பத்தி பேசின அப்படின்னு சொன்னா ஏதோ காலேஜ்ல ஒண்ணா படிச்சோம் கொஞ்ச நாள் நீ லவ் பண்ண மாதிரி நடிச்ச நானும் அதை உண்மை என்று நம்பி உன்னை காதலிச்ச காரணத்தினால் அமைதியா இருந்தேன். ஆனா என்னோட பொண்டாட்டி பத்தி பேசுறதுக்கு உனக்கு என்ன உரிமை இருக்கு? என் பொண்டாட்டியோட பண்பு குணங்கள் நடத்தை ஏதாவது உனக்கு தெரியுமா???



எந்த ஒரு பொண்ணா இருந்தாலும் தாலி கட்டிட்டா அவ புருஷன் கூட தான் வாழ்வா! அதுவும் காதலிச்ச பையனையே கல்யாணம் பண்ணா எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் அவன் கூடவே இருந்து அந்த பிரச்சனையை சமாளிக்க தான் பார்ப்பார்களே தவிர இப்படி ஒருத்தி வந்து சொன்ன உடனே வெளியில் போக நினைக்க மாட்டா! என் பொண்டாட்டி என் கூட வாழ்ந்தால் நடத்த கெட்டவளா? அதை நீ வந்து சொல்றியா?" என்று ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தமாகவும் நிதானமாகவும் கேட்டான்.



அதற்கு விஷாலினி ஏதோ பேச வாய் திறக்க அதை கண்டு கொள்ளாதவன் "இங்க பாரு நான் பேசி பிடிக்கிற வரைக்கும் வாயை திறக்காத. நான் உன்னை காதலிச்சதுக்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா? நீ பாசம் காட்டுற மாதிரி நடிச்சது அந்த நடிப்பை உண்மை என்று நம்புனது என்னோட பெரிய முட்டாள்தனம். ஆனா உன்னோட நடிப்பையும் நம்பி நான் காதலிச்சதுக்கான உண்மையான காரணம் என்ன தெரியுமா? என்னோட வீட்டுல என் மேல எவ்வளவு பாசம் இருந்தாலும் அவங்களால அதை வெளியே காண்பிக்க முடியாது.

அப்படி அவங்க காண்பித்தா வீட்ல இருக்க ஒரு சிலர் அவங்கள வார்த்தையால ரொம்ப கஷ்டப்படுத்துவாங்க அவளை கஷ்டப் படுத்த முடியல அப்படின்னா என்ன கஷ்டப்படுத்துவாங்க. என்ன கஷ்டப்படுத்தினா கூட நான் தாங்கிப்பேன். ஆனா என்னால மத்தவங்க கஷ்டப்பட்டா நிச்சயமா என்னால தாங்கிக்க முடியாது. அதே மாதிரி எந்த ஒரு சூழ்நிலை வந்தாலும் என்னை விட்டுக் கொடுக்காமல் என் கூடவே என்னோட நண்பன் இருந்தான் தான், நான் இல்லைன்னு சொல்லவே இல்ல. ஆனா என்னைக்காவது ஒருநாள் அவனுக்கு ஒரு கல்யாணம் ஆகும் அப்படி ஆகும் போது அவனுக்கு வரப்போற பொண்டாட்டி என்ன புரிஞ்சுக்காம என் வீட்ல ஒரு சிலர் சொல்ற விஷயங்களை நம்பி வ என்னோட நண்பன என் கூட பேச கூடாதுன்னு சொன்னா நிச்சயமா அவனுக்கு கஷ்டமாக இருக்கும். அது கூடவே அவன் குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சனை வரும்.



ஆனா நான் ஒரு பொண்ண காதலிச்சா அவள எனக்கு மனைவியா கூட்டிட்டு வந்தா அந்த பொண்ணு கிட்ட பேச கூடாதுன்னு என்னோட தனிப்பட்ட விருப்பங்களை சொல்லக்கூடாது அப்படினியோ யாருமே சொல்ல மாட்டார்கள். ஏன்னா நான் அவள காதலிச்சவன் என்னை பத்தி எல்லாம் அவளுக்கு தெரிந்திருக்கும், என்னோட வருத்தங்கள் சந்தோஷங்கள் எல்லாத்தையுமே அவளோடதாகவும் நெனச்சு என் கூடவே இருந்த என்ன பார்த்துப்பா. இந்த காரணத்திற்காக மட்டும் தான் நீ காட்டிய பொய்யான காதல் அன்பு பாசம் அதை உண்மை என நம்பி உன்னை நான் காதலிச்சேன்.



அந்தக் காதலை நீ வேரோடு வெட்டி எடுத்து விட்டேன் காலேஜிலிருந்து இந்த ஊருக்கு வரும்போது மொத்தமாக என்னோட மனசுல உள்ள கஷ்டங்கள் எல்லாத்தையும் வெளிய விட்டு தான் நான் வந்தேன். ஆனா எனக்கே தெரியாம வந்து இறங்கின அன்னைக்கே இவளோட காதல் ப்ரொபோஸ்சல் எனக்கு வந்துச்சு. சின்ன பொண்ணு ஏதோ அறியாமல் பேசுறா அப்படின்னு நான் மனசுல நினைக்கிறதுகுள்ள அவளே இது எத்தனை வருஷமா மனசுக்குள்ள வச்சு யோசித்த விஷயம்ன்னு சொல்லிட்டு போயிட்டா.



அதற்குப் பிறகு தினந்தோறும் அவ என்ன பார்க்க வரும்போது எனக்குள்ளேயே ஒரு கேள்வி வரும். இவ தினமும் நம்மள பார்க்க வராளே யாருமே இவளை எதுவுமே சொல்லலியா? நம்மள பத்தி இந்த ஊர்ல நல்லவிதமாக பலபேர் பேசினாலும் மோசமாக பேசவும் ஆள் இருக்கு. அப்படி இருக்கும் போது யாருமே இவ கிட்ட நம்ம ராசி கெட்டது அதனால பழக கூடாது அப்படி எல்லாம் சொல்லி தடுத்து வைக்க கூட இல்லையா அப்படின்னு ஏகப்பட்ட கேள்விகள் எனக்குள் வந்து இருக்கு.



ஆனால் இது எதுவுமே எனக்கு தெரியாது பிரச்சனை இல்ல அப்படின்னு எங்க வீட்ல ஏன் என்னோட பிறப்புக்கு காரணமாயிருந்தவர் பார்த்தாலும் சரி, இல்ல அவரோட அப்பா பார்த்தாலும் சரி இவ தைரியமா என் கிட்ட நின்னு பேசிட்டு தான் போவா. அந்த நேரமெல்லாம் என்ன அறியாமை இவளோட காதலுக்கு என்னோட மனசு ஏங்க ஆரம்பித்தது.



என்ன தான் மனசு சில சமயம் ஏங்கினாலும் ஒரு தடவை பட்ட அடி மறு தடவை பட கூடாது அப்படி என்கிற காரணத்துக்காகவே நான் ஒதுங்கி ஒதுங்கி போனேன். ஆனா அது எதுக்குமே நீ என் கிட்ட காட்டினா பொய்யான காதலோ பொய்யான அன்பு காரணம் கிடையாது. என்னால இவர கஷ்டப்படக்கூடாது அப்படிங்கிற ஒரே காரணத்துக்காக மட்டும்தான் ஒதுங்கிப்போனேன். அதுக்காகவே நான் இவளை எவ்வளவோ கஷ்டப்படுத்தி இருக்கேன், அப்படி கஷ்டப்படுத்தும் போது இவ ஒரு நிமிஷம் மனசு கலங்கும் போதும் என்னோட மனசுக்கு அவ்வளவு கஷ்டமா இருக்கும், ஆனாலும் அதையும் கடந்து போகணும்னு தாங்கிட்டும் அகன்று இருக்கேன்.



உண்மையான பரிசுத்தமான காதலுக்கு சொந்தக்காரி என்னோட பொண்டாட்டி அவளோட காதல நீ அசிங்கமா கொச்சைப்படுத்தி பேசுவது என்னால என்னைக்குமே தாங்கிக்க முடியாது. என்ன என்ன வேணா பேசு உன்னை காதலிச்சேன் அப்படிங்கற ஒரே பாவத்துக்காக அந்த அசிங்கத்தை நானே வாங்கிக்கறேன் ஏன்னா உன்னை காதலிச்சது ஒரு அசிங்கம் தானே அதை விட இது பெரிய அசிங்கம் கிடையாது.



ஆனா என்னோட பொண்டாட்டி பத்தி தப்பா பேசினா அவங்கள உண்டு இல்லை என ஆகிவிடுவேன். அவ்வளவுதான் வெட்டி கூராக்கி என்னோட தோட்டத்திலேயே போட்டுட்டு போய்கிட்டே இருப்பேன். அமைதியா இருந்தா எங்களுக்கெல்லாம் கோபம் வராதுன்னு கிடையாது. சாது மிரண்டால் காடு கொள்ளாது அதை நியாபகம் வச்சுக்கோ! அமைதியா இருக்கிறவங்க எல்லாரும் எப்பவுமே அமைதியாக இருப்பாங்க அப்படின்னு சொல்ல முடியாது. எதுக்கு வந்தியோ அதை சொல்லிட்டு கிளம்பி போய்கிட்டே இரு. தேவையில்லாம என் பொண்டாட்டி பத்தி பேசுறதே இல்லை எதுவும் வெச்சுகாதே என்று ஆக்ரோஷமாக கூறி முடித்தான்.



அவன் பேசப் பேச அவனுக்கு ஆதர்ஷினி மேலிருக்கும் காதலும் அவன் பாசத்திற்காக ஏங்கிய நிகழ்வும் அனைவருக்கும் தெள்ளத் தெளிவாக புரிந்தது. ஆனால் அவன் இவ்வளவு பேசுவானா என்ற ரீதியில் வாய்பிளந்து தான் பார்த்திருந்தனர்.



சமர் பேசப்பேச கோபத்தில் கொதித்து கொண்டிருந்த விஷாலினி எப்போது அவளை காதலித்தது அசிங்கம் என்று கூறினாலும் அதில் கொந்தளித்து விட்டாள். ஆனால் அவளை பேச விடாதபடி அவர் பேசிக்கொண்டிருக்க அமைதி காத்தவள் இப்போது பேச ஆரம்பித்தாள்.



"நீ ஒன்றும் யோக்கியன் கிடையாது உன் குடும்பத்தில் உள்ள எல்லாரும் நல்லவங்களும் கிடையாது. உன்கிட்ட நான் காட்டின பாசம் மொத்தமாகவே பொய்யும் கிடையாது உண்மையும் கிடையாது. சில நேரம் என்னை அறியாமலேயே உன் மேல எனக்கு பாசம் வந்து இருக்கு ,ஆனா அதை மொத்தமா அழிச்சுட்டு போனது உன்னோட வீட்ல இருக்கிற ஒருத்தர் தான். அவங்க வந்து உன்ன பத்தின ஒரு சில விஷயங்கள் சொல்ல சொல்ல எனக்கு என்னோட வாழ்க்கையை நினைத்து பயம் வர ஆரம்பிச்சது. அதனாலதான் உன்னை விட்டு நான் ஒதுங்கிப் போனேன் இதுல எதுவும் எனக்கு தப்பா தெரியலையே! அதுதான் இப்போ உன்ன பத்தி தெரிஞ்சு உன்னை தேடியே வந்துட்டேன்" என்று அசால்டாக கூறி நின்றாள்.



அவளை ஒரு அற்பமான பார்வை பார்த்துவிட்டு சமர் திரும்பிவிட அவனது தம்பி தங்கைகள் அனைவரும் விசாலினியை சுற்றி வட்டம் இட்டனர்.



"ஏன்டா தம்பி இவங்க பேசுறத பாத்தா லூசு மாதிரி தெரியல நம்ம அண்ணி கூட தான் அண்ணன பல வருஷமா காதலிச்சாங்க. நம்மளோட அப்பா தாத்தா யாராவது போய் அண்ணி வீட்ல இல்ல அண்ணி கிட்டேயே நேரடியா பேசாமல் இருந்து இருப்பாங்க? ஒருத்தருக்கு தெரியாம ஒருத்தர் நிச்சயமா போயிருப்பாங்க தானே !அப்படி இருந்தும் அண்ணி நேரடியா அவங்களுக்கு பதிலடி கொடுத்து இருப்பாங்க இல்லனா நீ யாரு அப்படிங்கிற என்கிற மாதிரி போயிருப்பாங்க. இவங்கள மாதிரி காதல் வேணானு விட்டுட்டு போகல தானே" என்று தன் அருகில் நின்றுகொண்டிருந்த கணேஷிடம் கேட்டான் அருள்.



"அட நீ வேற அண்ணா இப்ப அவங்க பழைய காதலை புதுப்பிக்க வந்திருக்காங்க. அதுவும் நம்ம வீட்ல இருக்கிற யாராவது ஒருத்தர் சொல்லி தான் வந்து இருப்பாங்க. அவங்க காதல் பிரிந்த நம்ம வீட்டுல உள்ளவங்க தான் காரணம் இப்போ அவங்க செஞ்ச தப்ப சரி செய்ய மறுபடியும் சேர்த்து வைக்கப் போறாங்களாம் ,அவங்க தூது சொல்ல இவங்க வந்து அசிங்கப்பட்டு நிற்கிறார்கள்" என்று ஆளுக்கு முன்பு சரண் பதில் கூறினான்.



"இவங்க வீட்ல எல்லாம் அப்பா அம்மா எப்படி இவர்களை இப்படி விட்டுட்டு சும்மா இருக்காங்க. இதுல இவங்களுக்கு கல்யாணம் ஆகப் போகுதுன்னு கூட ஒரு நியூஸ் வந்ததா ஆதவன் அண்ணா சொல்லுச்சு. அப்படிப் பார்க்கும்போது இவங்க எல்லாம்" என்று இழுத்து நிறுத்தினான் கணேஷ்.



"ஐயோ அண்ணன் உங்களை உங்களுக்கு சுத்தமா புரியலையா இப்ப அவங்க வந்து இருக்கிறது அவங்க காதலை புதுப்பிக்க இல்ல. கொஞ்ச நாள் இங்க இருந்து நம்ம அண்ணன மறுபடியும் கஷ்டப்படுத்திய அளவுக்கு அண்ணியவும் கஷ்டப்படுத்தி அவங்க ரெண்டு பேரையும் இந்த வீட்டை விட்டு மறுபடியும் தோட்டத்து வீட்டுக்கு அனுப்பி வைக்க பிளான் பண்ணி வந்து இருக்காங்க. அதனாலதான் அவங்க அண்ணனை மட்டும் இல்ல அண்ணியையும் கேவலமா பேசினாங்க" என்று ஒரு சேரக் கூறினார்கள் நிலா மற்றும் சரண்யா.



இவங்கள எல்லாம் என்ன பண்றது என்று அனைவரும் ஒருசேர கூறி நாடியில் கை வைத்து நின்று கொண்டிருந்த நேரத்தில் யாரும் எதிர்பாராத விதமாக ஆதர்ஷினி எங்கோ சென்றாள்.



அதை மற்றவர்கள் கவனித்தார்களோ இல்லியோ அவளுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த பவானி புனிதா ராதிகா விஜயா ஆதவன் அனைவரும் அவள் ஏதோ வில்லங்கம் செய்யப்போகிறாள் என்பதை கண்டு கொண்டனர்.



ஆதர்ஷினி கையில் எதையோ கொண்டு வருவதை பார்த்து சமர் தம்பி தங்கைகள் ஒதுங்கிக்கொள்ள வேகமாக வந்தவள், தன் கையில் இருந்த வாழியை மொத்தமாக விசாலினி தலையில் கொட்டினாள். அவள் அருகில் வரும்போதே எதைக் கொண்டு வந்தாள் என்பதை உணர்ந்த கார்த்திகா தன் அக்காவைப் பற்றி அவள் பேசிய கோபத்தில் இருந்த காரணத்தினால் ஓடி சென்று அருகில் இருந்த கோலப் பொடியை எடுத்து வந்தாள். ஆதர்ஷினி கையில் கொண்டு வந்தது சாணி கரைசல் ஏற்கனவே இதை எதிர்பார்க்காத விஷாலினி நாத்தம் மற்றும் அவளின் இச்செயலால் அதிர்ந்து நிற்க அதற்குள் கார்த்திகா தன் கையில் கொண்டு வந்த மொத்த கோல பொடியையும் அவள் தலையில் கொட்டி விட்டாள்.



இரு பெண்களின் செயலால் அனைவரும் சத்தமாக சிரிக்க ஆரம்பித்துவிட்டனர். சமர் ஒரு நிமிடம் இருவரையும் மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். மனதிற்குள் 'அக்கா தங்கச்சிங்க ரெண்டு பேரும் திருந்தவே திருந்தாது என்ன வேலை பார்த்து வச்சி இருக்காங்க பாரு இதுக்கு வேற அந்த பிசாசு என்ன ஆட்டம் ஆட போகுதோ தெரியலையே' என்று எண்ணிக் கொண்டிருக்க அந்நேரம் பவானி "ஏண்டி நீ ரெண்டு பேரும் ப்ளான் பண்ணி செஞ்சா என்னையும் கூட்டு சேர்த்து பண்ணனும் தானே! நீங்க ரெண்டு பேர் மட்டும் தனியாக பண்றீங்க இப்ப எனக்கு ஏதாவது குடு நான் இவ தலையில் கொட்டணும்" என்று போர்க்கொடி தூக்க ஆரம்பித்தாள்.



"ஐயோ பானிபூரி இந்த ரெண்டு காம்பினேஷன் தானே நல்லா இருக்கும் இதுக்கு மேல அலங்கரிச்சா அசிங்கமா மாறிடும். அதனால எப்படியும் இன்னைக்கு போய்ட்டு திரும்ப எப்பவாவது நம்மகிட்ட ஆடுவதற்கு வருவா அன்னைக்கு இதைவிட சிறப்பாக வந்துவிடலாம் நீ கவலையே படாதே! இந்த முறை இது வெறும் கிருமித் தொல்லை மாதிரி தெரிஞ்சது அதனால வீட்டோட கிருமிநாசினி யார் எல்லாம் சொல்ற சாணி கரைசலை வச்சி இவளுக்கு அபிஷேகம் பண்ணினேன். ஆனா அடுத்த தடவ வரும்போது இது கிரிமியா இல்லாம பெரிய வைரசா தான வரும் அப்ப நாம இதை விட பெருசா செய்யலாம்" என்று தன் தோழியை தட்டிக் கொடுத்தாள்.



இவர்களின் இந்த பேச்சுவார்த்தை கேட்ட சமர் ஆதவன் இருவரும் தலையில் அடித்துக் கொள்ள மற்றவர்கள் எங்களுக்கு எங்களுக்கு என்று ஆரவாரம் செய்தனர்.



"டேய் அடங்குங்கடா எப்படியும் அடுத்த தடவ வரும்போது எல்லாத்தையும் ரெடியா வச்சுப்போம். என்னைக்கு வந்தாலும் சிறப்பா பதிலடி கொடுக்கலாம். இப்ப எப்படியும் இனி எதுவுமே பேச முடியாது அந்த நறுமணத்தில் அவளாலேயே மூச்சுவிட முடியாது அதனால எப்படியும் அவ இப்ப கெளம்பி போய் விடுவா மீதி எல்லாத்தையும் இன்னொரு நாள் பாத்துக்கலாம். ஏன்னா நமக்கு தான் விஷயம் முழுசா தெரியாதே அவர் கிளம்பி போன பிறகு உன்னோட அண்ணன்கிட்ட அவன் காதல் கதையை கேட்கலாம். இந்த அளவுக்கு ஒருத்தி வந்து ஆதாரம் காட்டிப் பேசும் போதும் உன்னோட அண்ணே அமைதியா நிற்கிறான் அப்படின்னு சொன்னா அது என்ன விஷயமாக இருக்கும் அப்படின்னு நம்ம எல்லாரும் குடும்பமாக உட்கார்ந்து கேட்டு தெரிஞ்சுப்போமே சரியா" என்று பொதுவாக ஆரம்பித்தவள் இறுதியாக தன் கணவனைப் பார்த்து நிறுத்தினாள்.



இப்போது அனைவரும் சிரிப்பை நிறுத்தி விட்டு தங்கள் அண்ணனையும் ஆதவன் அண்ணனையும் கேள்வியாக பார்க்க அவர்கள் இருவரும்தான் விழிபிதுங்கி நின்றனர்.



இதில் சமர் மனதில் "ஐயோ பேசுற போளல நாம இவள காதலிக்கிற விஷயத்தையும் சேர்த்தே சொல்லிட்டோம். அதை பத்தியும் கேள்வி மேல கேள்வி கேட்டு சாவடிப்பாளே எப்படி தான் சமாளிக்க போறேன்னு தெரியலையே" என்று எண்ணி தனக்குள் புலம்பிக் கொண்டிருந்தான்.



இவர்கள் அனைவரையும் கொலைவெறியில் பார்த்த விஷாலினி அந்த வீட்டில் இருந்த யாரோ ஒருவரை அதே கோபத்தோடு பார்க்க அவர்கள் கண்கள் அவளுக்கு ஏதோ செய்தி சொல்ல, அதை புரிந்து கொண்டவள் போல் தலையசைத்துவிட்டு அனைவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு அதே நறுமணத்தோடு கிளம்பி சென்று விட்டாள்.



இவர்களின் பார்வை பரிமாற்றத்தை இம்முறை ஆதர்ஷினி மட்டுமல்லாமல் சமர் கூட கவனித்து விட்டான் மனதில் எண்ணங்கள் தோன்ற அதைப்பற்றி யோசிக்க ஆரம்பித்தவனை கலைத்தது அவனுடைய தம்பி தங்கைகளின் சத்தம்.



இவர்கள் விட மாட்டார்கள் என்பதை அறிந்தவன் தன் நண்பன் துணை கொண்டு தனது கல்லூரி கால காதல் கதையை கூற ஆரம்பித்தான்.



அதைப் பற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் தங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தோழி என்னுடைய பதிவுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.
 
Top