• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வாழவும் ஆளவும் அவள் (ன்) 20

Aashmi S

Active member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
156
விசாலினி பேசிய கடைசி விவாதத்தை கண்டிப்பாக கூறியே ஆக வேண்டும் என்று அனைவரும் கேட்க அதைக் கூறினால் அனைவரும் எப்படி எடுத்துக் கொள்வார்களோ என்ற பயம் ஒரு புறம் இருந்தாலும், கூறாமல் அகலவும் இவர்கள் விட மாட்டார்கள் என்பதை அறிந்துகொண்ட சமர் தன் நண்பனின் கையை ஆறுதலாக பிடித்துக்கொண்டு கண்களை மூடி அன்று நடந்த அனைத்தையும் கூற ஆரம்பித்தான்.



அவன் ஆதரவாக ஆதவன் கையை பிடித்த போதே விஷயம் பெரிது என்பதை யோசித்து கொண்டவர்கள் அமைதியாக அவன் சொல்வதை கேட்க ஆயத்தமாயினர்.



"எப்போ அவ என்ன லவ் பண்றேன்னு சொன்னாளோ அப்ப இருந்து நானும் அவ மேல கொஞ்சம் அளவு கடந்த அன்பு வைக்க ஆரம்பிச்சேன். அது எல்லாத்துக்குமே காரணம் எனக்கே எனக்கு உரிமையா ஒருத்தர் கிட்ட அன்பு காட்ட முடியுது அப்படிங்கற சந்தோஷம்தான். நல்லாவே எங்க வாழ்க்கை போய்கிட்டு இருந்துச்சு என்னைக்குமே ஆதவன் என்ன விட்டு விலகினதும் கிடையாது அதுவே எனக்கு மிகப்பெரிய ஆறுதலா இருந்துச்சு. ஆனா நாங்க ரெண்டு பேருமே எதிர்பார்க்காம ஒரு ஒரு வாரம் விசாலினி காலேஜ் வராம இருந்தாள்.



அவ எதுக்கு வரல அப்படின்னு நாங்க ரெண்டு பேரும் யோசிச்சிட்டு விட்டுட்டோம் அதுக்குமேல எங்களால அவளோட வீட்டுக்கோ, வேற எங்கேயோ போய் அவளை பத்தி தெரிஞ்சுக்க தோனல. ஏன்னா அவ்வளவு நாள் எங்க கூட பழகின பிறகும் அவளுடைய குடும்பத்தை பற்றி ஒரு வார்த்தை கூட எங்க கிட்ட சொன்னது கிடையாது. அப்படி இருக்கும்போது அவருடைய குடும்ப என்னோட குடும்ப மாதிரி ரொம்ப ஸ்ட்ரிக்டாக கூட இருக்கலாம் அதனால அவளுக்கு பிரச்சினை வந்துவிடக் கூடாது அப்படி என்கிற ஒரே காரணத்துக்காக நாங்க ரெண்டு பேரும் அமைதியா இருந்தோம். ஆனால் ஒரு வாரம் கழிச்சு விஷாலினி வந்தா வந்தவ நேராக நாங்க ரெண்டு பேரும் இருக்கிற இடத்துக்கு வந்தாள்" என்று அந்த நாள் நினைவிற்கு சென்றான்.



விசாலினி வந்ததைப் பார்த்ததும் ஆதவன் சமர் இருவர் முகத்திலும் மகிழ்ச்சி வந்தது. ஆனால் அவளுடைய முகத்தில் ஏதோ ஒரு மாற்றம் தெரியவே எதற்காக இந்த மாற்றம் என்று யோசிக்க ஆரம்பித்தனர். ஆனாலும் பல நாள் கழித்து அவளை பார்ப்பது போல் எண்ணிக் கொண்டு அவளிடம் "என்ன ஆச்சு ஒரு வாரம் எதற்காக காலேஜ் வரல? ஏதாவது பிரச்சினையா? உனக்கு உடம்பு எதாவது சரியில்லையா? இல்ல ஊருக்கு ஏதாவது போய் இருந்தியா?" என்று கேட்டார்கள்.



ஆனால் அவளோ இவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் "நான் காலேஜ் வராமல் இருந்ததற்கு முழு காரணமும் நீ மட்டும் தான் சமர்" என்று கூறியதுதான் தாமதம் அவ்வளவு நேரம் உட்கார்ந்து இருந்த சமர் ஆதவன் இருவரும் சடாரென்று எழுந்து நின்றனர். அவர்கள் இருவருக்கும் அவள் பேசும் தோரணையும் எதற்காக இப்படி பேசுகிறாள் என்ற விஷயம் துளியும் புரியவில்லை அந்த குழப்பத்தோடு அவள் முகத்தைப் பார்த்தனர்.



அவர்கள் இருவரது முகத்தையும் பார்த்தவள் "என்ன புரியலியா?" என்று கேட்டு விட்டு நேராக சமர் முன்பு நின்றாள். "நீ உன்னோட குடும்பத்தை விட்டு தனியா இருக்கியா? அதாவது உன்னோட வீட்ல எல்லாருமே உன்னை ஒதுக்கி வைத்து இருக்காங்களா? நீ பிறந்ததில் இருந்து இதுவரைக்கும் உன்னோட சொந்த வீட்ல பாசத்தை அனுபவிச்சதே கிடையாதா? ஊர்ல எவ்வளவோ பெரிய குடும்பமாக இருந்த பிறகும் உன்னோட வீட்ல இருக்க எல்லாருக்குமே நீ வேண்டாத பிள்ளையா?" என்று கேட்டாள்.



அவள் பேச பேச சமர் முகம் குழப்பத்திலிருந்து வேதனையை பிரதிபலிக்க ஆரம்பித்தது. ஆனால் அதை கண்டு கொள்ளாத விசாலினி கேட்க நினைத்ததை கேட்டு அவனை வேதனை அடையும் வேலையை செய்தாள். ஆனால் அவன் அமைதியாக இருக்க ஆதவன் பொங்கி விட்டான்.



"ஏய் என்ன ஓவரா பேசிகிட்டு இருக்க இவ்வளவு நாள் நீயும் உன்னுடைய குடும்பத்தை பத்தி சொன்னது கிடையாது. அதே மாதிரி அவனும் அவனோட குடும்பத்தை பற்றி சொன்னது இல்ல. அவனோட வாழ்க்கைல என்னவேனா நடந்து இருக்கலாம், அதைப்பற்றி பேசினா அவன் வேதனைப்படுகிறான் அப்படின்னு தெரிந்த பிறகும் எதுக்காக நீ அவன ரொம்ப வேதனை படுத்துகிட்டு இருக்க? இதுல நீ அவன காதலிக்கிறதா வேற சொல்லிக்கிட்டு இருந்த உனக்கு அசிங்கமா இல்ல" என்று கேட்டான்.



"நீ கொஞ்ச நேரம் சும்மா இரு. இது எனக்கும் அவனுக்கும் உள்ள தனிப்பட்ட விஷயம் இதுல நீ தலையிடாதே. ஒரு நண்பனா இருந்தாலும் உன்னுடைய லிமிட் பார்த்து அதுல இருக்க பழகு, தேவையில்லாமல் மூக்கை நுழைக்க கூடிய வேலை வேண்டாம்" என்று அவன் முகத்தில் அடித்தது மாதிரி பேச அதைக் கேட்டு சிறிது கோபம் அடைந்த சமர்



"எனக்காக என்னோட ஃப்ரெண்ட் பேசு தான் செய்வான் நீ எதுக்காக இப்போ இந்த கேள்வி எல்லாம் கேட்டுட்டு இருக்க? இதுநாள் வரைக்கும் நீயும் நானும் பழகும்போது நம்ம குடும்பத்தை பத்தி எதையுமே பேசினது கிடையாது. அப்படி இருக்கும்போது இன்னைக்கு நீ இவ்ளோ விஷயத்தை வந்து கேட்க வேண்டிய அவசியம் என்ன? அதுவும் இந்த ஒரு வாரம் நீ வராமல் இருந்ததற்கு நான்தான் காரணம்னு சொல்ற, எதுக்குன்னு கேட்டா இதெல்லாம் கேட்குற இதுக்கு அர்த்தம் தான் என்ன தெளிவா சொல்லு" என்று கேட்டான்.



இகழ்ச்சியாக புன்னகை செய்த விசாலினி இருவரையும் பார்த்து கைகட்டி நின்றாள். அவள் புன்னகை மற்றும் அவள் நின்ற தோரணையே இன்னும் பல பேசி கஷ்டப்படுத்த போகிறாள் என்பதை இருவருக்கும் உணர்த்தியது. ஆனால் எதுவாக இருந்தாலும் இன்றோடு முடித்துவிடலாம் என்ற எண்ணத்தில்தான் ஆண்கள் இருவரும் நின்றனர்.

"


நான் இந்த காலேஜுக்கு வந்த புதுசுல அமைதியாக இருந்த காரணம் என்ன தெரியுமா? என்னோட வீட்டை விட்டு பிரிந்து வந்த காரணம் என்னால இப்படி என்னோட வீட்டுல யாருமே இல்லாத இடத்துல வாழவே முடியாது. அதனால தான் நான் ரொம்பவே தனியா பீல் பண்ணி இங்க வந்து எல்லார் கூடவும் பேச கஷ்டப்பட்டு ஒதுங்கியே இருந்தேன். என்ன மாதிரி தான் நீங்களும் இருக்கீங்க அப்படின்னு தான் முதல்ல நினைச்சேன், ஆனா நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கிறதை பார்த்து நமக்கு இப்படி ஒரு பிரிண்ட் வரலியே அப்படின்னு யோசிச்ச நாள் நிறைய இருக்கு. ஆனால் நீங்களே என்கிட்ட வந்து பேசும் போது முதல்ல பயம் தான் வந்துச்சு. ஆனா நாளாக நாளாக அப்படியே நம்பிக்கையா மாறி போச்சு. அந்த காரணத்தினால் தான் நான் உங்க கூட பிரண்டா பழக ஆரம்பிச்சேன்.



ஆனால் நாளாக நாளாக எனக்கு உன்மேல வந்த காதலுக்கு காரணம் என்ன தெரியுமா? நீ காட்டிய அன்பு அக்கறை இதே மாதிரி தான் என்னோட குடும்பத்திலையும் காட்டுவாங்க. நீ ஏன் இப்படி அக்கறையாய் இருக்க அப்படின்னு சொன்னா உன் குடும்பத்தில் உள்ள எல்லாரும் எங்கிட்ட எவ்வளவு பாசமா இருப்பாங்க அப்படி என்கிற நம்பிக்கையில் தான் உன்கிட்ட வந்து காதல் சொன்னேன். ஆனா உன் குடும்பத்தில் எல்லாருமே உன்னை ஒதுக்கி வச்சி இருக்காங்க அபப்டீன்னா நீ எப்படிப்பட்ட ஆளா இருப்ப? வீட்ல ஒருத்தருக்கு நம்மளை பிடிக்காமல் இருக்கலாம் அது ஒவ்வொருத்தங்க குணங்களை பொறுத்து மாறி இருக்கும். அப்படி இருக்கும் போது அந்த ஒருத்தன நாம கடந்து வந்து விடலாம். ஆனால் உன்னுடைய வீட்டில் அத்தனை பேர் இருந்த பிறகும் யாருமே உனக்கு சப்போர்ட் பண்ணாம உன்னை விட்டு ஒதுங்கி இருக்காங்க, அப்படின்னு சொன்னா கண்டிப்பா நான் உன்னை கல்யாணம் பண்ணிட்டு வந்தாலும் என்னையும் ஒதுக்கி தான் வைப்பாங்க.



என்னால எல்லாம் யாரும் இல்லாத அனாதை வாழ்க்கை வாழ முடியாது மொத்தமா எல்லாரூம் சேர்ந்து இருக்கிற கூட்டுக்குடும்ப வாழ்க்கை தான் எனக்கு வேணும். உன்ன மாதிரி ஒன்டி கட்டையா என்னால இருக்க முடியாது. அதே மாதிரி உன்னோட வீட்ல உன்ன பிடிக்கல அப்படி என்கிற காரணத்துக்காக என்ன வேணா பேசுவாங்க. அதே பேச்சு என்னையும் பேசுவாங்க, அதெல்லாம் என்னால கேட்டுக்கிட்டு இருக்க முடியாது. உண்மையாவே உன் மேல தப்பு இல்ல அப்படின்னு சொன்னா நீ அதை நிரூபித்து இருக்கணும் நிரூபிக்காமல் இவ்வளவு நாள் நீ சும்மா தானே இருந்த அப்பா உனக்கே புரிய ஆரம்பிச்சிருச்சு உன் மேல தப்பு இருக்கிறது அப்படித்தானே?



சரி நான் ஆவது சில நேரம் குடும்ப பாசம் பற்றி எல்லாம் பேசி இருக்கேன். ஆனா நீ அதை பத்தி பேசினது கூட கிடையாது. அப்படி உன் மேல தப்பு இல்ல வீட்ல எல்லாரும் உன்னை வெறுக்க காரணம் இருக்கு அப்படிங்கற விஷயத்தையோ நீ அன்புக்காக ஏங்குற அப்படிங்கிற விஷயத்தையும் என்கிட்ட நேரடியா சொல்லி இருக்கலாம் தானே? நீ ஏங்கிறதை பார்க்கும்போது ஏதோ சின்னப்பிள்ளை நடக்காத ஒரு சில விஷயங்களுக்கு என்கிற மாதிரி இருக்கும் அதுக்காக தான் நான் உன்னை கூடுதலாக கவனித்து கொண்டேன் ஆனால் பார்க்கப் போனால் நீ மொத்தமாகவே வீட்டை விட்டு ஒதுங்கி இருக்க எத்தனையோ வாய்ப்புகள் கிடைத்திருக்கும் தானே அந்த நேரத்துல நீ எல்லா விஷயத்தையும் சொல்லி இருக்கலாம் தானே?



இப்போ நான் கேட்கல அப்படின்னு சொன்னா நீ சொல்லி இருக்கவே மாட்டே இவ்வளவு நாள் என்னை ஏமாத்திட்டு இருந்த மாதிரி இனியும் ஏமாத்திட்ட இருந்து இருப்பே! நீ எல்லாம் என்ன ஜென்மம்? உன்ன போய் நான் காதலிச்சேன் பாரு என் புத்தியை செருப்பால அடிக்கணும். இனிமே என்னோட மூஞ்சில கூட முழிச்சிடாத! எக்காரணம் கொண்டும் என் முன்னாடி வந்து பேசவும் செஞ்சுராதே! முடிஞ்சா இந்த காலேஜ் விட்டு கிளம்பி போயரு. நானாச்சு நிம்மதியா படிச்சு முடிச்சுட்டு போவேன் இல்ல உன்னோட முகத்தை பார்த்து எனக்கு ஏதாவது ஆனாலும் ஆகிடும் அப்புறமா என்னோட படிப்பு அம்போன்னு போக போகுது" என்று கூறி விட்டு நிற்காமல் சென்று விட்டாள்.



அவள் முதலில் பேசியது கூட ஆண்மகன்கள் இருவருக்கும் பெரிதாக தெரியவில்லை. ஆனால் அவள் பேசிய கடைசி வார்த்தையில் இருவருமே உடைந்து தான் போயினர். சமர் உடன் இருந்தால் அவளுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று அவள் கூறியது முற்றிலும் உடைந்து போனான் சமர். இதுவரை வீட்டிலுள்ளவர்கள் மட்டுமே கூறிக் கொண்டிருந்த விஷயத்தை வெளி ஆள் ஒருவர் கூறும் போது அவனுக்கு மிகவும் அதிகமாகவே வலித்தது. அவனின் வலியை புரிந்து கொண்ட ஆதவன் அவனை அணைத்துக் கொண்டான்.



விஷாலினி கூறி சென்றது சமர் காதுகளில் எதிரொலிக்க ஆதவனை தள்ளி நிறுத்தவே முடிவு செய்தான். ஆனால் பிறந்தது முதல் உடன் வளர்ந்தவனை அவ்வளவு சீக்கிரம் விலக்க முடியுமா என்ன அவ்வளவு எளிதில் அவனை சமர் விலக்கி வைக்க முடியவில்லை அதனால் அவனை கட்டிக்கொண்டு கதறிக் கொண்டிருந்தான்.



இப்படி நாட்கள் செல்ல சமர் ஒருவித விரக்தி மன நிலையிலேயே இருந்து கொண்டிருந்தான். இதனால் அவனுடைய படிப்பு பாதிக்கப்படும் என்பதை உணர்ந்த ஆதவன் கொஞ்சம் கொஞ்சமாக நிகழ்காலத்தை உணர்த்தி அவனை சகஜம் ஆக்கினான். ஆனாலும் பழையபடி அவனை கொண்டு வரமுடியவில்லை இவ்வளவு வந்ததே பெரிய விஷயம் என்று எண்ணிய ஆதவனும் அவனை மேற்கொண்டு வற்புறுத்தாமல் விட்டு விட்டான்.



இதுதான் நடந்தது என்று கூறி முடித்து யாருடைய கண்களையும் பார்க்காமல் தன் நண்பனின் தோளில் சாய்ந்து கொண்டான்.



அனைவரும் என்ன கூறுவது என்று தெரியாமல் நின்றுகொண்டிருக்க ஆதர்ஷினி எதுவும் பேசாமல் அமைதியாக ஒரு ஓரத்தில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தாள். சமர் தம்பி தங்கைகள் அனைவரும் ஓடிவந்து அவனை அணைத்துக்கொள்ள அவனும் அவர்களை அணைத்துக் கொண்டான். இது எதற்கும் அவர்கள் காரணம் இல்லையே அதுவும் அவனுக்கு தெரியுமே அதனால் அவன் தன் தம்பி தங்கைகள் இடம் எதுவும் கூறாமல் அவர்களை பாசமாக அணைத்துக் கொண்டான்.



அப்போதுதான் இதில் எதிலும் கலந்து கொள்ளாமல் தனியா அமர்ந்திருக்கும் தன்னுடைய மனைவியை பார்த்தான் 'ஐயோ இவ ரொம்ப பீல் பண்றாராளா அப்படி பீல் பண்ற டைப் கிடையாதே! ஏற்கனவே இந்த விஷயம் அவளுக்கு தெரிஞ்சு இருக்குமே' என்று எண்ணிக் கொண்டிருக்க அவளோ தீவிர சிந்தனையில் இருந்தாள்.



திடீரென்று அருள் என்று அவள் சத்தமாக அழைக்க அருள் மட்டுமல்லாமல் அனைவரும் அவள் முகத்தை பார்த்தனர். இவ்வளவு நேரம் சிந்தனைக்கு பிறகு அவள் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை வந்திருக்க ஏதோ ஒரு திட்டத்தை சிறப்பாக தீட்டிவிட்டால் என்பதை அனைவரும் உணர்ந்து கொண்டனர். அதனால் எவ்வளவு நேரம் இருந்த இருக்கம் மாறி சகஜமாக அவளிடம் ஓடிச் சென்றனர்.



சமர் மனது முழுவதும் வேதனையில் நிரம்பி இருந்த போதும் தற்போது இவர்கள் அனைவரும் சேர்ந்து போடும் வட்டமேஜை மாநாடு பார்க்கும் போது மனதிற்குள் திக் என்று தான் இருந்தது.



'ஐயே அது நடந்தது நடந்து முடிஞ்சு எவ்வளவு நாள் ஆச்சு. இவளுக்கு வேற நம்ம கஷ்டப்பட்டால் சுத்தமா பிடிக்காதே! இவ இப்பவே சண்டை போட்டா கூட கொஞ்சமாச்சும் சமாதான ஆகிட்டா அப்படின்னு நம்மளும் நிம்மதியா இருக்கலாம். ஆனால் அமைதியா இருந்து எல்லாரையும் சேர்த்து வச்சி பிளான் போடறதா பார்த்தாலே இது எல்லாத்துக்கும் காரணம் இந்த வீட்ல இருக்க யாருன்னு கண்டு பிடிச்சுட்டா போலயே! இனி அவர்களை என்ன என்ன பண்ணப் போறாளோ தெரிய மாட்டேங்குது. இவளை கல்யாணம் பண்ணாலும் பண்ணேன் பண்ணதுல இருந்தே நான் புலம்பிக்கிட்டே தான் இருக்கேன். இப்ப இவ கிட்ட போய் நாம கேள்வி கேட்க முடியாது. நான் உன்கிட்ட வந்து ஏதாவது சொன்னேனா நீ எதுக்கு வந்து இப்ப கேள்வி கேட்கிற அப்படீன்னு அதுக்கும் பதில் கேள்வி கேட்டு சாவடிப்பாளே! ஏன் கடவுளே என்ன சோதிக்கவே இவ ஒருத்திய இந்த உலகத்துல பிறக்க வச்சியா?' என்று எண்ணி கடவுளிடம் குமுறி கொண்டிருந்தான்.

அவனுடைய மன ஓட்டத்தை அவனுடைய முகமே பிரதிபலிக்க அதை கண்டும் காணாமலும் தன்னுடைய திட்டத்தை மிக அழகாக தன் வீட்டிலுள்ள செல்ல வாண்டுகளுக்கு கூறி முடித்திருந்தாள் ஆதர்ஷினி.

அதை கேட்டவர்களும் மிகவும் இன்பமான மனநிலையில் இருந்தனர். சிறிது நேரத்தில் கூட்டம் கலைந்து போக சமரைப்பார்த்து "மச்சான் வரியா நாம தோட்டத்துக்கு போவோம் இனி இங்க இருந்தாலும் எங்க இருக்குற யாருமே நம்மள மதிக்க மாட்டாங்க. அவங்க எல்லாரும் வேற ஏதோ ஒரு மாஸ்டர் பிளான் போட்டு அதுல இறங்கிட்டாங்க" என்று கூறினான்.
"சரி மச்சான் வா நாம நம்மளோட வேலையாவது போய் பார்ப்போம்" என்று கூறி அவர்கள் இருவரும் அங்கிருந்து அகன்றனர்.

இங்கு பெரியவர்கள் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர். தங்கள் வீட்டில் உள்ளவர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை உணராத சமரின் தந்தை பொதுவாக "எண்ணமோ இவனை எல்லாரும் தலையில தூக்கி வச்சு ஆடுறாங்க ஆனால் ஒரு பொண்ணு
தன் கிட்ட உண்மையா இல்லை பொய்யா பழகுதான்னு கூட வித்தியாசம் தெரியாமல் ஏமாந்து போய் வந்த இருக்கான் இவனெல்லாம் என்ன சொல்ல? இதுல இவன் தனியா விவசாயம் வேற பண்றான் ஒவ்வொரு இடத்துக்கும் போய் எப்படி அந்த விவசாயத்தை இவனால சரியா செய்ய முடியும் பொருள்களை எப்படி கரெக்டா ஏற்றுமதி செய்து அதற்கான பணத்தை வாங்க முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.

அவர் பேசியதைக் கேட்டு செல்வராஜ் கொந்தளித்துப் போய் பதில் பேச வர யாரும் எதிர்பாராத விதமாக புனிதா அவர் பேச்சுக்கு பதில் பேசி அவரை மிரள வைத்தார்.

அவருடைய பதிலை யாருமே எதிர்ப்பார்க்காமல் சிலையாக நின்று கொண்டிருக்க செல்வராஜ் மட்டுமே இப்போதாவது பேசினார்களே என்ற ஆனந்தத்தில் மகிழ்ந்திருந்தார். இதே மகிழ்ச்சியோடு அவர் அறைக்கு சென்று விட மற்றவர்களும் அவரவர் அறைக்கு தஞ்சமடைந்தனர்.

நடந்த கூத்தை சிறியவர்கள் பார்த்தாலும் கண்டும் காணாதது போல் இருந்து விட்டனர். ஆனால் மறுநாள் காலையில் அவ்வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் எழுந்தது பரிபூரணம் பாட்டியின் அலறல் சத்தத்தில் தான். என்னானதோ ஏதானதோ என்று பெரியவர்கள் பாய்ந்து ஓட சிறியவர்கள் மிகவும் உற்சாகமாக சென்றனர். அதிலிருந்தே அவர்கள்தான் ஏதோ செய்துள்ளனர் என்பதை பெண்கள் புரிந்து கொண்டு தங்களுக்குள் புன்னகைத்துக் கொண்டனர்.

அப்படி என்ன புனிதா பதிலடி கொடுத்தார் என்பதையும் அதன் பிறகு என்ன நடந்தது என்பதையும் அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் தங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தோழி என்னுடைய பதிவுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.
 
Top