• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வாழவும் ஆளவும் அவள் (ன்) 22

Aashmi S

Active member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
156
சமர் ஆதவனிடம் ஆதர்ஷினி ஏதோ செய்து விட்டதாக கோபமாக கூறி அவளை பார்க்க விரும்புவதாக கூறினான். ஆனால் அவன் திரும்பிப் பார்க்கும் நேரத்தில் அவனின் தம்பி தங்கைகள் அனைவரையும் அழைத்துக் கொண்டு அவன் தோட்டத்துக்கே வந்து கொண்டிருந்தாள் அவன் காதல் மனைவி.



அவளைப் பார்த்த சமர் இருந்த கோபத்தில் அப்படியே நேராக அவளிடம் சென்று "ஏன் டி உன்னால கொஞ்ச நேரம் கூட சும்மா இருக்க முடியாதா? ஏதாவது ஒரு பிரச்சினையை இழுத்து விட்டுக்கொண்டே இருப்பியா. எப்படி தான் உன்னை என்ன உன்னோட வீட்டில் வைத்து சமாளிச்சாங்க. எந்நேரமும் ஏதாவது ஒரு பிரச்சினையை விலை கொடுத்து வாங்கிக் கொண்டே இருக்க! ஏதாவது பிரச்சனை வந்தாலும் அமைதியாக கடந்து போக தெரியுதா வா என்று அந்த பிரச்சனைக்கு இன்னொரு பிரச்சினையை சேர்த்து கூட்டிட்டு வந்துட்டு தான் வருவியா?" என்று கடுப்புடன் கேட்டான்.



அவன் தன்னை திட்டுவதை பார்த்து சிறிது கூட அவள் அலட்டிக்கொள்ளவில்லை அதிலிருந்தே அவள் அதை செய்துள்ளா என்பது அங்கிருந்த அனைவருக்கும் புரிந்தது. ஆனால் அப்படி என்னதான் செய்தாள் என்பதுதான் யாருக்கும் புரியாத புதிராக இருந்தது.



"அண்ணா அண்ணி அப்படி என்னதான் செஞ்சாங்க எதுக்காக அண்ணி மேல இவ்வளவு கோவத்துல இருக்கீங்க? என்ன விஷயம் என்று சொல்லிவிட்டு கோபப்படுகிற வேலைய பாருங்க" என்று கேட்டாள் சரண்யா.



"உன்னோட அண்ணி என்ன செஞ்சானு அவளையே சொல்ல சொல்லு ஏற்கனவே இருக்கிற பிரச்சினை பத்தாதுன்னு புதுசா வேற பிரச்சினையை பெரிசாகி கொண்டு வந்து இருக்கா" என்று கடுகடுத்த முகத்துடன் கூறினான்.



நின்று நிதானமாக தன் கணவன் முகம் பார்த்தவள் பின்பு "இங்க பாரு நீ என்கிட்ட பேசற நேரமே நான் இந்த மாதிரி ஏதாவது ஒரு பிரச்சனை பண்ணிட்டு வந்தா தான், அதுக்காகவே நான் புதுசு புதுசா ஏதாவது பிரச்சனை பண்ணிக்கிட்டே தான் இருப்பேன். நான் பிரச்சனை பண்ண கூடாது அப்படின்னு நீ ஆசைப்பட்டா இந்த மாதிரி நேரத்தில் மட்டும் பேசாம எப்போவும் போல சகஜமாக என்கிட்ட பேசு. அதே மாதிரி இன்னைக்கு நான் பண்ண பிரச்சனை ஒன்னும் தப்பு கிடையாது. ஏன் நான் பண்ணதுனால உன்னோட ஆறுயிர் காதலி ரொம்ப பாதிக்கப்பட்டு போன் பண்ணி உன் கிட்ட புலம்பித் தள்ளிடாளா" என்று எதிர்கேள்வி கேட்டாள்.




ஆதர்ஷினி விஷாலிணிக்கு எதிராக ஏதோ ஒன்றை செய்துள்ளாள் ஆனால் அது என்னவென்று அறியும் ஆவல் தான் அங்கிருந்த அனைவருக்கும் வந்ததே தவிர அவள் செய்வதற்காக அவளைத் தண்டிக்க வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை.



"ஏண்டி நான் உன்கிட்ட சாதரணமா பேசினும் என்கிற காரணத்திற்காக என்ன வேணா செய்வியா தேவையில்லாமல் எதுக்குடி அந்த பொண்ணோட வாழ்க்கையில விளையாடின? அது ஒரு பாவம் தானே அந்த பாவம் நம்மை வாட்டும் கொஞ்சம் கூட அது உனக்கு புரியலையா?" என்று கேட்டான்.



"டேய் இங்க பாரு நீ எவ்வளவு வேணாலும் நல்லவனாய் இரு அதுக்காக இவ்வளவு நல்லவனா இருக்காதே! நான் பெரிசா ஒன்னும் பண்ணல உன்னோட பழைய காதலிக்கு கல்யாணம் முடிவு பண்ணியிருக்காங்க கல்யாணமும் முடிவு பண்ணி இருந்த பிறகும் உன்னோட வாழ்க்கைல சந்தோஷமா இருக்க கூடாது அப்படி என்கிற ஒரே காரணத்துக்காக ஏதோ அவ பழைய காதலை புதுப்பிக்க வந்த மாதிரி நம்ம வீட்ல வந்து சண்டை போட்டு சீன் போட்டுட்டு போனா. நான் அதை எல்லாத்தையும் வீடியோ எடுத்து அவளோட வருங்கால புருஷனுக்கு அனுப்பி வச்சேன் அதனால பிரச்சனை வந்தா அவ தான் சமாளிக்கணும், இதனால பாவமும் கிடையாது எந்த பிரச்சினையும் கிடையாது. அது தான் நான் சொல்லிக் கொடுத்து இருக்கேன் உனக்கு உன் காலேஜ் படிக்கும்போது உண்மையா இல்ல கல்யாணம் பண்ணிட்டு போறவனுக்கு உண்மையா இல்ல அப்போ அவள கல்யாணம் பண்ணி என்னத்தை சாதிக்க போறான் அதனாலதான் இப்படி பண்ணேன்" என்று அசால்டாக கூறினாள்.



அவள் செய்த காரியம் அப்படியே தெரியவர மற்ற அனைவரும் அவளை ஓடி வந்து கட்டி அணைத்து செல்லம் கொஞ்ச நேரம் அதைப் பார்த்து இன்னும் கோபம் அடைந்தவன் "இப்படியே இவளை கொஞ்சிக் கொஞ்சி எல்லாத்தையும் பண்ணுங்க. கடைசில என்னென்ன புது பிரச்சனை வந்து நிற்க போகுதோ தெரியல இனிமே நான் உன்கிட்ட சாதராணமா பேச முயற்சி பண்றேன் ஆனால் எக்காரணம் கொண்டும் வேற எந்த பிரச்சனையும் இழுத்துக் கொண்டு வராத" என்று கண்டிப்புடன் கூறினான்.



"தேவை இருந்தால் நீங்களும் கொஞ்சம் நல்லாவே பேசுங்க அதுக்காக அண்ணியை பார்த்து பொறாமை படாதீங்க" என்று கூறிய நிலா அவளை இன்னும் இறுக்கமாக கட்டிக்கொண்டாள்.



"நாங்களா எந்த பிரச்சினைக்கும் போக மாட்டோம் ஆனால் எப்படி ஏன் இன்னும் ரெண்டு நாள்ல உன்னோட பழைய காதலி நம்ம வீட்டுல தங்க வருவா அப்படி வரும்போது அவள் வாயை வச்சுக்கிட்டு சும்மா இல்லாம ஏதாவது தப்பா பேசினா நிச்சயம் அதுக்கான தண்டனையை அனுபவிப்பா! உனக்கு என்ன பத்தி நல்லாவே தெரியும் அவ அமைதியா போனா நானும் அமைதியா போவேன் இல்ல அவ பிரச்சனை பண்ணா அவளுக்கு மேலே போய் நான் பிரச்சனை பண்ணி அவளை ஓட ஓட துரத்துவேன். ஆனா நீ என்னதான் முயற்சி பண்ணாலும் அவ அடங்கி போறவ கிடையாது. என்கிட்ட வாங்கி கட்டிகிட்டு தான் போவா அதனால நீ அமைதியா இருந்து எல்லாத்தையும் வேடிக்கை மட்டும் பாரு ஏதாவது குறுக்க வந்து அவளுக்கு சப்போர்ட் பண்ணி பேசினா உண்மையும் தொலைத்து விடுவேன்" என்று அழுத்தம் திருத்தமாக கூறி முடித்தாள்.



அதற்கு மேல் அவளிடம் வாதாட தெம்பு இல்லாமல் தலையில் கை வைத்து அப்படியே அமர்ந்து விட்டான். ஏனென்றால் அவனுக்கு தான் தெரியுமே நிச்சயமாக வரப்போகும் அவளும் அமைதியாக இருப்பவள் கிடையாது. அவள் ஒன்று செய்தால் அதற்கு பத்தாக திருப்பி கொடுப்பவள் தான் இவள் இவளுக்கு வீட்டில் உள்ள 70% பேர் துணையிருக்க அனைவரும் சேர்ந்து அல்லவா அனைத்தையும் செய்வார்கள் என்ற எண்ணம் தான் அவன் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் அதை கண்டுகொள்ள தான் அங்கு யாரும் இல்லை.



தன் நண்பனின் நிலையைப் பார்த்து சிரித்த ஆதவன் வந்து அவன் தோளோடு அனைத்துக் கொள்ள அவனை ஏர்யெடுத்து பார்த்து "மச்சான் கண்டிப்பா அந்த விசாலினி சும்மா இருக்கமாட்டா அவளோடது வாய் கிடையாது அவ நாக்கு தேள் கொடுக்கு அவ்வளவு பேச்சு பேசுவா அவளுக்கு கல்யாணம் ஆன பிறகும் என்னோட வாழ்க்கையில சந்தோஷம் இருக்கக்கூடாது என்று நினைக்கிறா இவ கல்யாணத்தையே நிப்பாட்டி வெச்சு இருக்கா அப்படி என்கிற விஷயம் தெரிஞ்ச பிறகு என்ன பேச்சு பேசுவா கொஞ்சம் கூட அதை பற்றி யோசிக்காமல் எப்படி உன்னால சிரிக்க முடியுது என்ன நடக்கப்போகுது நினைச்சாலே ஒரு பக்கம் பயமாவும் கோவமா வருது" என்று ஆற்றாமையில் கூறினான்.



"இல்லை மச்சான் எதுக்காக நீ இவ்வளவு கவலைப் படுற விசாலினி எப்படி பேசுவா அப்படிங்கற விஷயமும் நமக்கு தெரியும் அதுக்கு உன்னோட பொண்டாட்டி எந்த மாதிரி பதிலடி கொடுப்பா அப்படி என்கிற விஷயமும் நமக்கு தெரியும். யாருமே பெருசா அவளுக்கு உதவி செய்யாமல் இருந்த பிறகு அவ உன்னோட விஷயத்திலிருந்து மாறவே இல்ல. இப்போ அவளுக்கு உதவி செய்ய எத்தனையோ பேர் இருக்காங்க. அது மட்டுமா நீ அந்த இடத்துல இருந்தா அவ மேலே யாருமே கை வைக்க முடியாது அந்த விஷயம் உன்னோட குடும்பத்தில் உள்ள எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு. அப்புறம் எதுக்காக நீ இவ்வளவு வருத்தப்பட்டுக் கொண்டிருக்க? வருத்தப்படாத எந்த பிரச்சனையும் வராது பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்க அவங்களை அப்படியே விட்டுவிட்டு இருந்தால் அவர்களுக்கு தைரியம் கூடிக்கொண்டே தான் போகும் இன்னும் பெரிய பெரிய பிரச்சனை பண்ணிக்கிட்டே தான் இருப்பாங்க. அதே நாம எதிர்த்து நின்னு கேள்வி கேட்டா அவங்க அடங்க தான் செய்வாங்க உன்னோட வாழ்க்கையில இவ்வளவு பிரச்சனைகள் வர யாரெல்லாம் முக்கியமான காரணமும் அவங்க எல்லாரையும் அவர் கண்டு பிடிச்சிட்டா. அதே மாதிரி அவங்க இப்படி எல்லாம் பண்ணதுக்கு என்ன காரணம் அப்பிடின்னும் கண்டுபிடிச்சுட்டா இனி எல்லாத்தையும் வெளியே சொல்லி அவங்களை என்ன ஆகப்போறானு தெரியாது. நீ அவகிட்ட சகஜமாக பேசி பழகி நீ அவகிட்ட சகஜமாக இருந்தாலே கோவம் கொஞ்சம் கம்மியாக நீ ஒதுங்கிப் போக போக என்னோட புருஷன் நிலைமை இப்படி இருக்க அப்படின்னு யோசிச்சு யோசிச்சு அவ இன்னும் கோபமாகி அவங்கள வச்சு செய்வா. அதனால கொஞ்சம் யோசிச்சு பாரு எல்லாம் உனக்கே தெளிவாக புரியும் கவலையே படாம நிம்மதியா இரு" என்று தன்னுடைய நண்பனுக்கு அறிவுரை கூறினான்.




நண்பன் கூற்றில் உள்ள உண்மை தன்மை புரிய அமைதியாக அவன் கூறியதை ஏற்றுக் கொண்டு பிற வேலைகளை பார்க்க ஆரம்பித்து விட்டான் சமர்.



அதன்பிறகு நேரங்கள் அப்படியே செல்ல அனைவரும் வீட்டிற்கு திரும்பினார்கள். சமர் மனதில் தன் மனைவியுடன் சகஜமாக பேச வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் 'இவ கிட்ட நான் சகஜமா பேச ஆரம்பிச்சா இவர் என்கிட்ட கேள்வி கேட்டு கொண்றுருவா அதுக்குகாகவே பேசாம இருக்க வேண்டியதா இருக்கு கொஞ்சமாச்சும் புருஷன் அப்படிங்கற மரியாதை தருவாளா நிச்சயமாக கிடையாது. அவர் என்ன நினைக்கிறாளோ அதை சொல்லிட்டு போய்க்கிட்டே இருப்பா. என்ன இருந்தாலும் எவ்வளவு வருஷம் காதல் நாமளும் அதை யோசித்து அமைதியா தான் போகணும் இது எல்லாத்துக்கும் பயந்தே மொத்தமா அமைதியா இருந்ததுக்கு எல்லாம் போல ஒருநாள் மொத்தமா சேர்த்து வைத்துக்கொண்டு வாங்கிக்கலாம்' என்று தன் போக்கில் எண்ணிக்கொண்டு அமைதியாக தூங்க ஆரம்பித்து விட்டான்.



அவனைப் பார்த்த ஆதர்ஷினி "ஆக மொத்தம் நீ திருந்த மாட்ட பாருடா உன்னை என்கிட்ட பேச வைக்க நான் என்ன எல்லாம் பண்ண போறேன் பாரு எத்தனை நாள் என் அலய விட்டு இருப்பே இதற்கெல்லாம் சேர்த்து வைத்த அனுபவிப்படா என் செல்ல புருஷா" என்று வாய்விட்டே கூறி அவள் நெற்றியில் இதழ் பதித்து விட்டு தூங்க ஆரம்பித்தாள்.



அதுவரை தூங்காமல் விழித்திருந்த அவன் இவள் தினமும் இவ்வாறுதான் செய்துவிட்டு தூங்குகிறாள் என்ற எண்ணத்தில் மெல்லிய புன்னகையோடு தூங்க ஆரம்பித்தான்.



இவர்கள் அனைவரும் இவ்வாறு எந்தவித யோசனையும் இல்லாமல் தூங்க அதே வீட்டில் இன்னொரு இடத்திலும் "எல்லா விஷயத்தையும் எவ்வளவு பிளான் பண்ணி பண்ணி சின்ன வயசுல இருந்தே இவனை எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த வீட்டை விட்டு ஒதுக்கி வைத்து எல்லாத்துக்கும் இவங்களோட மூடநம்பிக்கை எவ்வளவு சுலபமா இருந்துச்சு. இன்னைக்கு வந்தவ என்ன மொத்தமா பிளான் எல்லா விஷயத்தையும் வெட்டவெளிச்சமாக கொண்டு வந்து விடுவா போல இங்க இருந்து நிம்மதி இல்லாம இருந்தவன் காலேஜ் போய் சந்தோஷமாய் இருந்தா எனக்கு நல்லாவா இருக்கும் அதுக்காக தான் பிளான் பண்ணி விசாவ அங்க அனுப்பி வச்சேன். நான் நினைச்ச மாதிரியே எல்லாம் நடந்தது அங்க இருந்த வரும்போதும் ரொம்ப கஷ்டப்பட்டு நான் வந்தான். இப்போ அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய இருந்ததையும் இவன் பொண்டாட்டி கெடுத்து விட்டுட்டா ஒரு சின்ன பொண்ணு கிட்ட போய் நான் தோத்துப் போறதா நிச்சயமாக கிடையாது. இத்தனை வருஷம் என் மேல துளி அளவு கூட சந்தேகம் வராத மாதிரி அவ்வளவு பக்காவா நடித்து இருக்கேன். இனி மட்டும் சும்மாவா இருப்பேன்" என்று சத்தமாக பேசி சிரித்துக் கொண்டிருந்தது.



அந்த உருவம் பேசியது அனைத்தையும் அவ்வழியாக சென்ற கார்த்திகா கேட்டுவிட அவள் மனதில் 'சிரி சிரி எவ்வளவு நாள் சிரிக்க முடியுமோ சரி இந்த சிரிப்பு எல்லாத்துக்கும் கூடிய சீக்கிரம் ஆப்பு வைக்க என்னோட அக்கா முடிவு பண்ணிட்டா கொஞ்சம் கொஞ்சமா உன்னோட முகத்தை வெளியே கொண்டு வந்து இந்த வீட்டில் உள்ள எல்லாரையும் வச்சு உன்னை இந்த வீட்டை விட்டுத் துரத்த வைக்கிறாரா இல்லையான்னு பாரு என்னோட மாமா எவ்வளவு கஷ்டத்தை கொடுத்து இருப்ப எல்லா கஷ்டத்தையும் நீயே அனுபவிக்கப் போற' என்று எண்ணிக்கொண்டு கடந்து சென்றாள்.



இப்படி அந்த நாள் கடந்து விட மறுநாள் காலையில் பாட்டி ஆதர்ஷினி கார்த்திகா இருவரையும் பார்த்து "உங்க ரெண்டு பேரையும் உங்க வீட்ல எப்படி வளத்தாங்க கொஞ்சம் கூட பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கணும்னு சொல்லி கொடுக்கவே இல்லையா? உங்க இஷ்டத்துக்கு ஆடிக்கிட்டே இருக்கீங்க உங்க வீட்ல உள்ள எல்லாரையும் கூப்டு வச்சி என்ன ஏது என சத்தம் போட்டால் தான் உங்களுக்கெல்லாம் புத்தி வரும் என்ன பிள்ளைகளோ நீங்க " என்று முகத்தை சுளித்தபடி கூற



"கிழவி ஏற்கெனவே இந்த வார்த்தையை எல்லாம் உன்னோட மாமனார் மாமியாரும் உன்ன பத்தி சொல்லி இருக்கணும் அப்ப அவங்க சொல்லாம விட்ட காரணத்தினால் தான் நீ இப்படி வளர்ந்து போய் இருக்க எங்க அப்பா அம்மாவை கூப்பிட்டு ஏதாவது சொன்ன மறுநாள் சோத்துல பேதி மாத்திரை கலந்து தந்திடுவேன்" என்று காட்டமாக கார்த்திகா கூற



ஆதர்ஷினி சிறிதுகூட அலட்டிக்கொள்ளாமல் "இங்க பாரு இந்த பொண்ண தான் கல்யாணம் பண்ணுவேன் அப்படின்னு அடம் புடிச்சு கல்யாணம் பண்ணது உன்னோட பேரன் நாங்க எப்படி இருந்தாலும் கல்யாணம் பண்ணி வைத்தது நீங்கதான். நாங்களா தேடி வந்து உங்க வீட்டு வாசலுக்கு மாப்பிள்ளை கேட்க வந்தோம் இல்ல தானே நீங்க தான் எங்க வீட்டு வாசலுக்கு வந்தீங்க அதனால நாங்க என்ன பண்ணாலும் விட்டு கொடுத்து தான் போகணும் நீ இவ்வளவு வருஷம் பண்ணின அழிச்சாட்டியங்கள் எல்லாத்தையும் இந்த வீட்டிலுள்ள எல்லாரும் பொறுத்து தானே போயிருக்காங்க. அப்படி இருக்கும்போது உனக்கு என்ன வந்துச்சு நாங்க ரெண்டு பேரும் இப்படி தான் இருப்போம் எங்கள மாதிரி தான் இந்த வீட்டில் உள்ள மற்ற பிள்ளைகளையும் வளர்த்திடுவோம் முடிஞ்சா சமாளி இல்லியா அமைதியா வயசானாலும் ஒரு ஓரத்தில் ஒதுங்கி இரு இந்த வயசுல வில்லி மாதிரி ப்ளான் போட தெரியுது இல்ல கொஞ்சம் ஒதுங்கி இருக்கவும் தெரியணும்" என்று கூறிவிட்டு தன் தங்கையை இழுத்துக் கொண்டு சென்று விட்டாள்.




அங்கு நின்ற மற்ற இளவட்டங்கள் அனைவரும் "இந்த பாட்டிக்கு வேற வேலையே இல்லாமல் இருக்க காரணத்தினால்தான் எப்ப பாரு அண்ணி ரெண்டு பேரையும் குறை சொல்லிகிட்டே இருக்காங்க இந்த அம்மா எல்லாம் சேர்ந்து இவங்களுக்கும் கொஞ்சம் வேலை கொடுத்தா இவங்க வாய் திறக்க போகுது அமைதியாக ஒரு ஓரத்தில் உட்கார போறாங்க. இது எதுவுமே இந்த வீட்டு பொம்பளைகளுக்கு தெரியவே மாட்டேங்குது" என்று சத்தமாகவே முணுமுணுத்துக் கொண்டு சென்றனர்.

அந்த


நாள் வேறு எந்த பிரச்சனையும் இல்லாமல் அப்படியே முடிந்துவிட மறுநாள் காலையில் பிரச்சனையில் திருவுருவமாக வந்து நின்றாள் விசாலினி. அனைவரும் காலையில் எழுவதற்கு முன்பே அவள் வந்த காரணத்தினால் அவளின் வருகையை அவ்வீட்டில் உள்ள ஒரு சிலரை தவிர யாரும் அறிந்திருக்கவில்லை.



அவளோ மனதில் வன்மம் கொண்டு வந்தவள் காலையிலேயே ஆதர்ஷினியை ஏதாவது செய்யவேண்டும் என்ற தீர்மானத்தோடு ஒரு வேலையில் இறங்க அதுவோ ஆதர்ஷினி சாதகமாக முடிந்தது. அதைப் பார்த்து இன்னும் கொதித்துப் போனாள் அதனால் அனைவர் முன்பும் தன்னுடைய வருகையை நிலைநாட்டினாள்.



ஆனால் அந்தோ பரிதாபம் அவளின் வருகையை அங்குள்ள அனைவரும் மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்தனர் என்ற விஷயம் அவளுக்கு அப்போது வரை தெரிந்திருக்க வில்லை. அதனால் அனைவரின் மூலமாகவும் படாதபாடு பட ஆரம்பித்தாள் விஷாலினி. அவள் படும் கஷ்டங்கள் அனைத்தையும் பார்த்து தன்னை அறியாமல் சிரிக்க ஆரம்பித்திருந்தான் சமர்




அது என்ன என்பதனை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் தங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தோழி என்னுடைய பதிவுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்
 
Top