• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வாழவும் ஆளவும் அவள்(ன்) 23

Aashmi S

Active member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
156
தன்னுடைய திருமணம் நின்று போன கோவத்தில் மிகவும் வெறுப்பாக சமர் வீட்டிற்கு கிளம்பி வந்தாள் விசாலினி.



சமர் நினைத்தது போல் விஷாலினி அவ்வளவு நல்லவன் இல்லை வசதி வாய்ப்பு சொகுசான வாழ்க்கை கட்டுப்பாடில்லாத குடும்பம் என அனைத்தும் வேண்டும் என்று ஆசைப்பட்டவள், அவளுடைய ஆசைக்கு ஏற்பவே இந்த வரன் அமைந்து விட மிகவும் சந்தோஷமாகவே தன்னுடைய திருமண நாளை எண்ணிக் கொண்டிருந்தாள். ஆனால் சமர் சந்தோஷமாக இருப்பது பொறுக்காமல் அவளை அவன் வாழ்வில் கலக்கம் செய்ய கூப்பிட அவளும் அவன் மகிழ்ச்சியான வாழ்வு வாழ்வதை அறிந்து அவனை கஷ்டப்படுத்தவே கிளம்பி வந்தாள். ஆனால் அந்தோ பரிதாபம் அது அவளுக்கே ரிபீட் அடித்து விட்டது.



அப்போதாவது அவள் சமர் பின்னணியில் இருக்கும் அனைவரின் பாசத்தையும் புரிந்து அமைதியாக ஒதுங்கி இருக்க வேண்டும் ஆனால் மனதில் வக்கிரமான எண்ணம் கொண்டவர்களுக்கு இது போன்ற நல்ல எண்ணங்கள் வராது தானே!!! அதனால் அவளும் மறுபடி இவர்களிடம் மாட்டிக்கொண்டு முழிக்க கிளம்பி வந்து விட்டாள்.



அதிகாலையிலேயே வீட்டிற்கு வந்த விசாலினி புன்னகை முகத்தோடு வரவேற்றது அவ்வீட்டில் உள்ள ஒரு உருவம். அவளும் பதிலுக்கு சிறு புன்னகை சிந்தி விட்டு வீட்டிற்குள் வந்து விட்டாள்.




"விசா நீ போய் ரூம்ல கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு நீ வந்தது இந்த வீட்ல இருக்க யாருக்குமே தெரியாது. எல்லாரும் உன் முகத்தை பார்க்கும் போது அவங்க எல்லாருடைய முகத்தையும் பாக்கணும் அவ்வளவு அழகா இருக்கும் எல்லாருடைய முகமும் உன்ன பார்த்து அதிர்ச்சி அடைகிறத பார்க்கும்போது" என்று வன்மமாக சிரித்துக்கொண்டே கூற அதற்கு அவளோ



"நீங்க வேணும்னா பாருங்க இந்த ஒரு வாரத்துல உங்க வீட்டுல பாதி பேரை நான் அழ வைக்கல என்னோட பெயர் விஷாலினி இல்ல இன்னைக்கே என்னோட வேலையை ஆரம்பிக்க போறேன் நீங்க இனி நிம்மதியா இருங்க. உங்களை மீறி எதுவுமே இந்த வீட்ல நடக்காது நான் உன் கொஞ்ச நேரம் நீங்க சொல்ற மாதிரி போய் தூங்கி எழுந்து வர்றேன்" என்று கூறி சென்றுவிட்டாள்.



ஆனால் தூங்குவதற்கு சென்றவளுக்கு சுத்தமாக தூக்கம் வராமல் இருக்க சிறிது நேரத்தில் ஆதர்ஷினி எழுந்து வந்த சலசலப்புக் கேட்டு "நீ இப்பவே எழுந்துடுவியா இருடி நீ கீழே போயி இன்னைக்கு விழுந்து வாரி வைக்கிறத இந்த குடும்பமே வந்து பார்க்கட்டும்" என்று கூறிக்கொண்டே அவசரமாக கீழே சென்று அவள் சரியாக ஆதர்ஷினி செல்லும் திசையில் ஏதோ ஒன்று தடிக்கி விழும்படி வைத்துவிட்டாள்.



எப்பொழுதும் அக்கா-தங்கை இருவரும் சேர்ந்தே எழுந்து வருவர் ஆனால் இன்றோ கார்த்திகா தூக்கத்தில் இருப்பதை கவனித்து அவளை தொந்தரவு செய்யாமல் தனியே வந்தவள், அந்த பொருள் தடுக்கி விழ போனாள் நல்ல நேரமுமோ கெட்ட நேரமுமோ இன்று காலையிலேயே தோட்டத்தில் வேலை இருந்த காரணத்தினால் அவள் தடுமாறிப் போய் சுதாரித்து நிற்பதை கண்டு 'இவ என்ன காலையிலேயே சர்க்கஸ் வேலை பார்த்துட்டு இருக்கா' என்று எண்ணிக் கொண்டே அவள் அருகில் வந்தான்.



"என்ன ஆச்சுடி தூக்கம் இன்னும் கலையவில்லனா போய் தூங்கு இந்த வீட்ல நீ தூங்குனா உன்னை யார் என்ன சொல்ல போறாங்க எதுக்கு நடுவீட்டில் டான்ஸ் ஆடிகிட்டு இருக்க" என்று அவன் சகஜமாக கேட்க தான் விழ விடாமல் அவன் பிடித்து விடுவான் என்று எண்ணிய ஆதர்ஷினி முகத்தில் கோபம் கொப்பளிக்க ஆரம்பித்தது. அதன் விளைவாக அதற்கு மேல் பேலன்ஸ் செய்ய முடியாமல் அவள் சுருண்டு அவனைக் கீழே தள்ளி அவன் மேலே விழுந்தாள்.



விழுந்த வேகத்தில் ஆதர்ஷினி இதழ் அழுத்தமாக அவள் கணவன் கண்ணத்தில் பதிந்தது சமர் இதை முற்றிலும் எதிர்பார்க்காததால் அதிர்ச்சியில் உறைந்து விட, அவளுக்குமே இது எதிர்பாராத நிகழ்வு தான் அதனால் தயக்கமாக அவன் முகம் பார்க்க, அப்போதுதான் அதிர்ச்சியிலிருந்து அவள் முகத்தை பார்த்தவன் தன்னையறியாமல் அவள் நெற்றியில் அழுத்தமாக முத்திரை பதித்தான். அதில் அவள் விழி விரித்து விழிகள் படபடக்க அதை கண்டு கொண்டவன், படபடத்துக் கொண்டிருக்கும் அவள் விழி இமைகளில் முத்திரை பதித்தவன், அடுத்து அவளுடைய இரு கன்னங்களிலும் அடுத்தடுத்து முத்தம் பதித்தான்.



சொல்ல முடியாத உணர்ச்சி பெருக்கில் இருவரும் இருக்க அடுத்ததாக அவளுடைய இதழ்களை நோக்கி குனிந்தவனை "டேய் அண்ணா பையா" என்ற சத்தம் நினைவுக்கு கொண்டு வந்தது.



சுதாரித்த இருவரும் எழுந்து நிற்க வேகமாக சமர் அருகில் வந்த அருள் "டே அண்ணா பையா நீ என்ன வேலை பார்த்துகிட்டு இருக்கே! ஐயோ எனக்கு அநியாயம் பண்றாங்களே இந்த அண்ணா பையா ஒண்ணுமே பண்ண மாட்டான் அம்மாஞ்சி அப்படினு நெனச்சுட்டு தானே நானும் அமைதியா இருந்தேன். ஆனால் இவன் நடு வீட்டிலேயே இந்த ரொமான்ஸ் பண்றான் அப்படின்னு சொன்னா ரூம்ல என்னென்ன பண்ணான். போச்சு போச்சு எல்லாரும் எனக்கு அநியாயம் பண்றாங்க" என்று கத்தி கத்தி கதறி கதறி அவன் சத்தமிட அவன் சத்தத்தில் அனைவரும் அங்கே கூடிவிட்டனர்.



வந்தவர்களுக்கு நடந்தது எதுவும் தெரியாமல் இருக்க இவன் அநியாயம் செய்து விட்டான் என்ற வார்த்தையை மட்டும் பிடித்துக் கொண்டு பாட்டி அருள் அருகில் வந்து "நான் தான் அப்பவே சொன்னேன்ல இவனால உனக்கு அவ்வளவு நல்லது எல்லாம் நடக்காது ஒழுங்கு மரியாதையா அவனை விட்டு ஒதுங்கி இரு என்று சொல்லும்போது எல்லாம் கேட்காம இப்போ அநியாயம் பண்ணிட்டு இருக்கான்னு சொல்ற அப்படி என்ன அநியாயம் பண்ணான் சொல்லு அவனை உண்டு இல்லைனு ஆக்கிடுவேன்" என்று கூற சமர் முகத்தில் கடுப்பு வராமல் எங்கே தன்னுடைய தம்பி நடந்ததை கூறி விடுவானோ என்ற பதட்டம் தான் வந்தது.



தன் அண்ணனை ஓர விழியால் பார்த்துக்கொண்டு "அதுவா பாட்டி" என்று ஆரம்பித்த உடன் பாய்ந்து சென்று அவனுடைய வாயை இறுக்க மூடி அவன் சத்தமாக பாட்டியைப் பார்த்து "எனக்கும் என் தம்பிக்கும் ஆயிரம் இருக்கும் குறைந்தது 500 ஆவது இருக்கும் அதில் தலையிட உங்களுக்கு உரிமை இல்லை. எங்களுக்கு உள்ள பிரச்சனையை நாங்களே பார்த்துக்கொள்வோம் வீனா உங்களோட பஞ்சாயத்து எங்களுக்குள்ள வர வேண்டிய அவசியம் கிடையாது" என்று கூறி அவன் தன் தம்பியை பார்த்து "டேய் வாடா என்னோட தோட்டத்துல புதுசா நிறைய பழம் காய்ச்சி இருக்கு உனக்கு சாப்பிட தரேன்" என்று இழுக்காத குறையாக இழுத்துச் சென்று விட்டான்.



சமரின் பேச்சு அங்கிருந்த பலருக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் போகும்போது அருள் அனைவரையும் பார்த்து கண்ணடித்துவிட்டு செல்ல வேறு ஏதோ ஒன்று நடந்திருக்கிறது என்று நினைத்து புன்னகை முகமாக தங்கள் வேலையை பார்க்க சென்றனர். ஆனால் சிறியவர்களும் பெண்களும் ஒரு நிமிடம் தயங்க மற்றவர்கள் சென்றவுடன் கார்த்திகா நடந்த அனைத்தையும் கூறிவிட்டாள். அவளுக்கு எப்படித் தெரியும் என்று ஆதர்ஷினி பார்க்க அவளோ கண்சிமிட்டி தாங்கள் எப்போது வந்தோம் என்ற விஷயத்தையும் எதற்காக அருள் இப்படி செய்தான் எந்த விஷயத்தையும் கூறினாள்



கார்த்திகாவை பார்த்துவிட்டு ஆதர்ஷினி வெளியே வரவும் அவர்கள் இருவருக்குமே முழிப்பு வந்துவிட்டது, அதனால் அவர்களும் எழுந்து பின்னே வந்தனர். அப்போது தான் இங்கு நடந்து கொண்டிருக்கும் காட்சியை பார்த்து புன்னகை முகத்தோடு நின்று கொண்டிருந்தனர். அடுத்து நடக்கப் போகும் விஷயம் தெரிந்து கொண்ட அருள் ஆர்வமாக தான் தன்னுடைய அண்ணனை பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் எதற்காக அங்கே கோவமாக நின்று கொண்டிருந்த ஷாலினியை பார்த்தவன் இவள் முன்னே தன் அண்ணனின் காதல் வெளியே வர வேண்டுமா என்று எண்ணிக் கொண்டு அவர்களை சுயநினைவு அடைய செய்திருந்தான்.



அப்போதுதான் அங்கே கொலைவெறியில் நின்றுகொண்டிருந்த விஷாலினி பார்த்து நக்கலாக சிரித்த அனைவரும் புன்னகை முகத்தோடு தங்களுடைய வேலைகளை கவனிக்க சென்றனர்.



விஷாலினி முகத்தைப் பார்த்தவுடன் அனைவர் முகத்திலும் ஒரு உற்சாகம் வந்ததை அவள் கவனிக்கத் தவறியது அவளுக்கு பெரிய சோதனையாக மாறியதை அவள் பின்புதான் உணர்ந்து போனாள். எப்படியும் அனைவரும் தன்னை கஷ்டப்படுத்த ஏதாவது செய்வார்கள் என்று அவள் எண்ணிக் கொண்டிருக்க அதை வைத்தே அவளை கஷ்டப் படுத்த வேண்டும் என்று முடிவு செய்திருந்தாள்.



ஆனால் காலை உணவுக்கு வந்தவளை "இத வச்சுக்கம்மா அதை வச்சுகம்மா இத சாப்பிடுங்க அத சாப்பிடுங்க" என்று விழுந்து விழுந்து கவனிக்க அவளுக்கே ஆச்சரியமாக போனது.




ஆனால் அவளைப் பார்த்து கார்த்திகா ஆதர்ஷினி நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருப்பதை சில நிமிடங்களுக்குப் பிறகு கண்டவள் மனதில் 'எதுக்காக இந்த ரெண்டு லூசும் சிரிச்சுகிட்டே இருக்கு இவங்க ரெண்டு பேரும் சிரிக்கறத பார்த்தால் ஏதோ வில்லங்கம் இருக்கும் போலயே' என்று யோசித்தபடியே குனிந்து தன் தட்டை பார்த்தவள் அரண்டு போனாள். ஏனென்றால் எப்பொழுதும் உணவு விஷயத்தில் மிகவும் கட்டுப்பாடு இருப்பவள் தட்டில் சாப்பாடு நிரம்பி வழிந்தது.



'ஐயோ இந்த குடும்பம் என்ன இப்படி பண்ணிடுச்சு இவ்வளவு சாப்பாட எப்படி சாப்பிட முடியும். லூசு மாதிரி பாசம் காட்டுறேன்னு இப்படி எல்லாத்தையும் அள்ளி அள்ளி வச்சு இருக்காங்க இதுல பாதி கூட நான் சாப்பிட மாட்டேன்' என்று மனதில் புலம்பிக் கொண்டே வெளியே அதை சொல்ல வாய் எடுத்தாள்.



அவள் சொல்ல வருவதை புரிந்து கொண்ட கார்த்திகா "அக்கா நம்ம வீட்டுல சாப்பாடு வேஸ்ட் பண்றது யாருக்கும் பிடிக்காது தானே! யாராவது தட்டில் வைத்தத சாப்பிடாம எழும்பி போனா அவங்களுக்கு பனிஷ்மெண்ட் என்னவாய் இருக்கும் இந்த வீட்டை முழுக்க கழுவி துடைத்து சுத்தம் பண்ணுவதா தானே இருக்கும்" என்று விஷாலினிமேல் ஒரு கண்ணை வைத்துக் கொண்டே கேட்டாள்.



"ஆமா கார்த்தி ஓன்னு சாப்பாடு வைக்கும் போதே இவ்வளவு சாப்பாடு என்னால சாப்பிட முடியாது அப்படின்னு சொல்லி தடுத்து நிறுத்தியிருக்கலாம். சும்மா வைக்கும்போது பார்த்துட்டு இருந்தா எல்லாத்தையும் சாப்பிட்டு தான் ஆகணும். சாப்பிடாமல் போனால் இந்த வீட்டை மட்டும் என்ன முன்னே இருக்க தோட்டத்தை எல்லாத்தையும் சேர்த்து சுத்தம் பண்ணனும் சரி இப்ப யாரு சாப்பிடாம இருக்க போறா" என்று ஒன்றுமே தெரியாதது போல் கேள்வி கேட்டாள்.



அவர்கள் கூறிய தண்டனையில் ஒரு நிமிடம் விஷாலினி அதிர்ந்து விட்டாள். ஏனென்றால் அவ்வளவு பெரிய வீடாக இருந்தது இதில் தோட்டமும் சேர்த்து சுத்தம் செய்ய வேண்டுமானால் தன்நிலை நொந்து போல் ஆகிவிடும் என்று எண்ணி அச்சபபட்டு அவ்வளவு உணவையும் சாப்பிட ஆரம்பித்தாள் அங்குள்ள மற்ற பெண்களுக்கு பெரிய அதிசயமாக இருந்தது. ஆனால் ஆதர்ஷினி நினைத்ததை செய்வாள் என்பதை முதலில் வரும்போதே அவள் அறிந்திருந்த காரணத்தினால் மனதில் அவர்கள் இருவரையும் திட்டிக்கொண்டே சாப்பிட்டு முடித்தாள்.



அவள் சாப்பிட ஆரம்பிக்கும் போதுதான் சமர் அங்கு வந்தான் அவர் முகத்தில் ஒரு ஆச்சரியமும் அதிர்ச்சியும் வந்தது. ஏன் என்றால் கல்லூரி படிக்கும்போது கூடுதலாக ஒரு வடை வைத்தாலே அந்த கோபம் வரும் அவளுக்கு, ஆனால் இப்போது வேறு வழியில்லாமல் சாப்பிடும் அவளை எண்ணி சிறிதும் மனம் இறங்கவில்லை அதற்கு மாறாக தன் மனைவியும் தன் மச்சினிச்சியும் செய்த செயல் கண்டு புன்னகையே வந்தது.



அதே புன்னகையோடு அவன் சாப்பிட்ட செல்ல அவருடன் வந்த அருள் தான் கொண்டு வந்த பழங்களை தன் தம்பி தங்கைகளுக்கு கொடுத்தான் அவர்களின் அதை வாங்கிக்கொண்டு சமர் கன்னத்தில் முத்தம் வைத்து ஓடிவிட்டனர்.

அவன் புன்னகையுடன் அதை ஏற்றுக்கொண்டு விசாலினி பெரிதாக கண்டு கொள்ளாமல் தன்னுடைய பிற வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.

நன்றாக சாப்பிட்டுவிட்டு தூங்கலாம் என்று அறைக்கு சென்ற விஷாலினியை தேடிவந்த புனிதா "என்னமா தனியா வந்து ரும்ல அடைந்திருக்க எல்லார் கூடவும் சேர்ந்த இருந்தா தானே நல்லா இருக்கும். இப்படி தனியா இருந்து என்னத்தை சாதிக்க போற? எல்லாரும் சேர்ந்து உட்கார்ந்து எல்லாரும் சேர்ந்து மதியம் சமையல் செய்ய போறோம் நீயும் எங்க கூட வந்து பேசிகிட்டு இரு கூடவே சின்ன சின்ன உதவி ஏதாவது செஞ்சா நேரம் அப்படியே சரியா போயிடும்" என்று அவளை பேசவிடாமல் இழுத்து சென்றார்.

சமையலறையில் ஏற்கெனவே அவளுக்காக வெங்காயம் தயாராக இருந்தது. இந்த சூழ்ச்சி தெரியாமல் அவர் இழுத்த இழுப்பிற்கு சென்றவள் ஏதாவது செய்து இவர்களில் கஷ்டப்படுத்தலாம் என்று எண்ணி வாய் திறந்த நேரம் ராதிகா அவள் முன்பு வந்தார் "இந்தாம்மா இந்த வெங்காயத்தை நறுக்கிட்டே பேசு வேலையும் முடியும் தானே" என்று அவள் கையில் திணித்து விட்டு சென்றுவிட்டார்.




'சை இங்க உள்ளவங்க எல்லாம் லூசா இருக்கு நெனச்சாலே கோவம் கோவமா வருது ஆனாலும் இவங்க எல்லாரையும் கஷ்டப்பட வைக்கணும்னா இந்த இடத்தில நாம இருந்தே ஆகணும்' என்று மனதில் கறுவிக் கொண்டே வெங்காயத்தை நடக்க ஆரம்பித்தாள். இதுவரை வெங்காயம் நறுக்கி பழக்கமில்லாதவளுக்கு கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக கொட்ட ஆரம்பித்தது. யாரை கண்ணீர்விட வைக்க வேண்டும் என்று எண்ணி வந்தாளோ அவர்கள் அனைவரின் மூலமாகவே அவள் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள். இதைப்பார்த்து ஆதர்ஷினி கார்த்திகா இருவரும் நமட்டு சிரிப்பு சிரித்து கொண்டனர். எப்படியோ கஷ்டப்பட்டு வெங்காயத்தை நறுக்கி கொடுத்தவள் "எனக்கு குளிக்க நேரம் ஆகுது நான் போய் குளிச்சுட்டு வந்துடறேன்" என்று யாருடைய பதிலையும் எதிர்பார்க்காமல் அவளுடைய அறைக்கு சென்றுவிட்டாள்.



இதுபோலவே பெண்கள் தாங்கள் செய்யும் ஒவ்வொரு வேலையிலும் அவளை இழுத்து இழுத்து விட்டனர். மாலையில் வீட்டின் முன்புறம் சுத்தம் செய்யச் சென்றவர்கள் அவளையும் இழுத்து சென்று அவள் முதுகெலும்பு வலிக்கும் வரை கூட்டிப் பெருக்க விட்டு விட்டனர்.



எப்பொழுதும் போலவே அவளை தனியாக இருக்க விடாமல் தங்களுடன் சேர்த்துக் கொள்ளப் போகிறோம் என்ற ரீதியில் தான் அழைத்து செல்வார்கள். ஆனால் எவ்வளவு தூரத்துக்கு அவளை வேலை வாங்கிய கஷ்டப் படுத்த முடியுமோ அவ்வளவு கஷ்டப்படுத்த சாப்பிடும் நேரங்களில் அவளுக்கு அதே நிலைதான் நீடித்தது. அளவுக்கதிகமான சாப்பாடு கொடுத்து அதை கரைக்கவும் செய்துகொண்டிருந்தனர்.



பெண்கள் செய்யும் சேட்டையை வீட்டில் உள்ள அனைவரும் கவனித்துக் கொண்டிருந்தாலும் யாராலும் எதுவும் பேச முடியவில்லை ஏனென்றால் பெண்களின் பாசமான பேச்சு அவ்வாறு தான் இருந்தது. அதையும் மீறி கேட்டால் வேறு ஏதாவது பிரச்சனை வந்து விடும் என்று நினைத்து அமைதி காத்தனர்.



முடிந்தவரையில் அவளை கிண்டலும் நக்கலும் செய்தனர் அதை ஒருமுறை முருகன் "உங்களுக்கு கொஞ்சம் கூட வயதில் பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்கணும் தோணலையா? இப்படி பண்ணிட்டு இருக்கீங்க சேர்க்க சரி இல்லாம இருந்தா இப்படி தான் இருக்கும் .ஸ்கூல் காலேஜ் எல்லாத்துலயும் ஒழுங்கான பிள்ளைகளா தான் நடந்துக்கிறாங்க. ஆனால் வீட்ல வந்தா மட்டும் இப்படி பண்றீங்க கொஞ்சம் கூட உங்களுக்கு வளர்ற புள்ள அப்படிங்கிற எண்ணமே இல்லையா இனி இப்படி ஏதாவது பண்ணி பாருங்க அப்புறம் இருக்கு உங்களுக்கு" என்று அவர் கூற அதற்கு கணேஷ்




"சித்தப்பா நாங்க எல்லாரும் ஸ்கூல் காலேஜ் படிக்கிற பிள்ளைங்க தான் அதேமாதிரி வீட்டுக்கு வந்திருக்க விஷாலினி அக்காவும் எங்களை விட கொஞ்சம் வயசு தான் பெரியவங்க .ஏன் கார்த்திகா அண்ணி ஆதர்ஷினி அண்ணி ரெண்டு பேரையும் நாங்கள் கிண்டல் பண்ணும் போது நீங்க ஒண்ணுமே சொன்னது கிடையாது. அதே மாதிரிதான் அவங்களும் இல்ல அவங்க ரொம்ப பெரியவங்க அப்படின்னு சொன்னா நாங்களும் மரியாதையா பேச முயற்சி பண்றோம். எங்கள மாதிரி கல்யாணமாகாத சின்னப் புள்ள அப்படி நினைத்துதான் நாங்களும் கொஞ்சம் கிண்டலா நக்கலா பேசிட்டோம் அத அவங்களே ஜாலியா தான் எடுத்து இருப்பார்கள் நீங்க தான் பிரச்சனையே பெருசா இருக்கிற மாதிரி இருக்கு" என்று பதில் கூறினான்.



அவரால் அவனுக்கு எதிர்த்து பேச முடியாமல் போக விசாலினி எங்கே இதற்கு மேல் தான் பேசாமல் இருந்தால் தன்னை வயசான லிஸ்டில் சேர்த்து விடுவார்கள் என்று எண்ணி "ஐயோ அங்கிள் எனக்காக நீங்க பேசி இருக்கலாம் ஆனா கோச்சுக்காதீங்க சின்ன பிள்ளைங்க தானே நாங்க எல்லாரும் ஜாலியா தான் பேசிகிட்டு இருக்கோம். இதெல்லாம் பெரிய விஷயமே கிடையாது எனக்கு உ இவங்க கூட ஜாலியா பேசுறதெல்லாம் சந்தோஷமா தான் இருக்கு" என்று வெளியில் சிரித்துக் கொண்டு உள்ளே அழுது கொண்டே கூறினாள்.


அவளின் பதட்டமான முகத்தைப் பார்த்து பெரியவர்களும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர். இப்படியே நடக்க மறுநாள் காலையில் விஷாலினி செய்த ஒரு செயலில் பாட்டி தலையில் அடித்துக்கொண்டு நடு ஹாலில் அழுதுகொண்டிருந்தார் மற்றவர்களோ அங்கு நடக்கும் கூத்தை பார்த்து தங்களுக்குள் சிரித்துக் கொண்டிருந்தனர்


அப்படி என்ன நடந்தது என்பதனை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் தங்களுடைய கருத்துக்கள் அனைத்தையும் ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தோழி என்னுடைய பதிவுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.
 
Top