• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வாழவும் ஆளவும் அவள்(ன்) 24

Aashmi S

Active member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
156
வந்த முதல் நாளிலேயே விசாலினியின் எவ்வளவு வைத்து செய்ய முடியுமோ அந்த அளவுக்கு அவ்வீட்டில் உள்ள பெண்கள் வைத்து செய்து விட்டனர். ஆனால் யாரும் கேள்வி கேட்க முடியாதபடி அனைத்து வேலைகளையும் செய்தனர்.



அன்றிரவு மிகுந்த அசதியில் தூங்க சென்ற விஷாலினி "நான் இந்த வீட்ல உள்ள எல்லாரையும் கஷ்டப்பட வைக்கணும் அப்படிங்கிற எண்ணத்தோட வந்தால் இவங்க எல்லாரும் ஏங்கிட்ட பாசமா பேசுற மாதிரியே பேசி என்ன ரொம்ப கஷ்டப்படுத்துறாங்க என்னோட பொறுமைக்கும் ஒரு அளவு தான் எல்லை இருக்கு அந்த எல்லை தாண்டினால் இவங்க எல்லாரும் கதறி அழ தான் போறாங்க" என்று கருவிக்கொண்டு தூங்க ஆரம்பித்தாள்.



மறுநாள் காலை விஷாலினி சீக்கிரமே எழுந்து விட்டாள் ஏனோ ஆதர்ஷினி கார்த்திகா இருவரும் கீழ வரும் நேரத்திற்கே எழுந்து அவள் வெளியே வர என்றும் இல்லாத அதிசயமாக அவ்வீட்டில் உள்ள வானரங்கள் அனைத்துமே எழுந்திருந்தது.



நேற்று அவள் செய்ததை அறிந்து வைத்திருந்த வாண்டுகள் இன்று அவளுக்கு அதை செய்ய நினைத்து சரண் அவள் வரும் வழியில் தடுக்கி விழும் படி ஒரு கட்டையை போட்டிருந்தான். முதலில் கவனிக்காமல் வந்தவள் அது தடுக்கி விழ போகும் நேரத்தில் தான் 'அட லூசு குடும்பம் நான் நேத்து நான் செஞ்சது இன்னைக்கு எனக்கு செஞ்சு இருக்கீங்களா' என்று எண்ணிக்கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தாள். அப்போது அவ்வழியாக சமர் வர அவனை வைத்தே இவர்கள் அனைவரையும் அழ வைக்க திட்டம் தீட்டினாள்.



ஆனால் முதலில் கவனிக்காமல் வந்து கொண்டிருந்த சமர் அவளருகில் நெருங்கி வரும்போது அவளை கவனித்துவிட்டு அவனின் அந்த பக்கம் வந்த ஆதர்ஷினியை இழுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டான். அவன் தான் வருகிறான் என்று நினைத்து யார் எனப் பார்க்காமல் தடுக்கி வந்தவர் மேலே விழுந்தவள் அவள் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைத்தாள்.



நடக்கும் கூத்தை வாண்டுகள் அனைவரும் வாய் பிளந்து பார்க்க யார் என்று அறியாமல் அனைவரையும் கெத்தாக பார்த்தவள் பாட்டியின் "அடி சக்காளத்தி பாதகத்தி" என்ற அலறலில் தான் யார் மேலே விழுந்து இருக்கிறோம் என்று ஒழுங்காக பார்த்தாள். அந்தோ பரிதாபம் அவள் விழுந்திருந்தது சமர் மேலே அல்ல அவ்வீட்டின் மூத்த குடிமகனாக தாத்தாவின் மீது உடனே அவசரமாக எழுந்து உட்கார்ந்தாள்.



அனைவரும் என்னானதோ ஏதானதோ என்று கீழே ஓடி வர தன்னுடைய முதுகெலும்பை பிடித்துக் கொண்டு மெதுவாக எழுந்து நின்றார் தாத்தா. விசாலினி திருட்டு முழி முழித்து நிற்க பாட்டி அவளைப்பார்த்து "ஏண்டி ஊரு உலகத்துல உனக்கு வேற ஆளே கிடைக்காமாலா என்னோட புருஷன் கன்னத்துல முத்தம் கொடுக்குற? இந்த அநியாயத்தை நான் எங்க போய் சொல்லுவேன் யார்கிட்ட போய் முக்கியமாக நீ இந்த வீட்டுக்கு வந்து என் புருஷனை கைக்குள்ள போடவா இந்த வேலை எல்லாம் பார்த்துட்டு இருக்க? உன்ன இந்த வீட்டுக்குள்ள விட்டவர்களை முதல்ல வீட்டை விட்டு துரத்தி அடிக்கனும், என்ன காரியம் செய்து இருக்கா? இதுல இந்த மனுசன் வேற அவ கொடுத்த முத்தத்தை வாங்கிட்டு ஹாயா படுத்து இருக்கிறார்" என்று தலையில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைக்க




அதுவரை என்ன நடந்தது என்று அறியாமல் நின்று கொண்டிருந்த மற்றவர்களுக்கு விஷயம் தெளிவாக புரிய வந்தது. ஆனாலும் நடந்ததை பார்க்கவில்லையே என்ற ஏக்கம் அவள் முகத்தில் தெரிய நடந்த அனைத்தையும் வீடியோ எடுத்து வைத்திருந்த கணேஷ் தன் தாய்மாருக்கு காண்பித்தான். அதை பார்த்தவர்களுக்கு தங்களை மீறி சிரிப்பு வந்தது இருந்தாலும் தங்கள் மாமியார் ஏதாவது கூறுவார் என்று எண்ணி அடக்கிக் கொண்டனர்.



ஆனால் சமரால் நடக்கும் கூத்தை பார்த்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை அதனால் தன் கைகளில் இருந்த தன் மனைவியின் கழுத்து வளைவில் முகத்தை மறைத்தவன் குலுங்கி குலுங்கி சிரித்துக்கொண்டிருந்தான். அவன் சிரிப்பது அங்குள்ள அனைவருக்கும் மிகவும் நன்றாகவே தெரிந்தது.




இதனால் கோபமடைந்த பாட்டி நேராக அவனிடம் வந்து "உன்னால தானே இவ இந்த வீட்டுக்குள்ள வந்தா இவ இந்த வீட்டுக்குள்ள வந்த காரணத்தினால் தான் இவ்வளவு பிரச்சனை. என் புருஷன் மேல கை வைக்க ஆசைப்படுகிறா இது எல்லாத்துக்கும் நீதான் காரணம்" என்று கோபத்தில் கொந்தளிக்க




அவரை நேர்பார்வை பார்த்தவன் "நேத்து அவ இந்த வீட்டுக்கு வந்த விஷயமே எனக்கு தெரியாது. எனக்கு மட்டும் இல்ல என்னோட பொண்டாட்டி தம்பிக்கு அம்மாக்கு சித்திக்கு தங்கச்சி யாருக்குமே தெரியாது. ஆனா அவ எல்லாரும் எழுந்து வர்றதுக்கு முன்னாடியே இந்த வீட்ல இருந்தா அப்படி அவளை இந்த வீட்டுக்குள்ள விட்டது யாரு? அத நீங்களே கண்டுபிடிங்க தேவையில்லாம என் மேல குறை சொல்ல வராதீங்க" என்று கூறியவன் நேராக தன் மனைவியை பார்த்து "எனக்கு தோட்டத்தில வேலை இருக்கு நான் கிளம்புறேன்" என்று கூறிவிட்டு சென்று விட்டான்.



அவன் சென்றதும் தான் தாமதம் ஆதர்ஷினி நேராக பாட்டியை பார்த்து "நீங்க அவனோட சந்தோஷத்தை அளிக்க தானே பார்த்தீங்க! இப்போ உங்களோட சந்தோஷம்தான் கேள்விக்குறியா இருக்கு! இனிமே இவ இந்த வீட்ல இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் நீங்க நடந்ததை நினைச்சுட்டு தான் இருப்பீங்க. வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு தான் இருப்பீங்க, அந்த விஷயம் எனக்கு நல்லாவே தெரியும். ஆனா என் புருஷன் சொல்லிட்டு போறதுல ஒரு பாயிண்ட் இருக்கு இவ இந்த வீட்டுக்குள்ள வந்த விஷயம் எங்கள்ல நிறைய பேருக்கு தெரியாது. எங்களுக்கே ஆச்சரியம் ஏன் தெரியுமா நாங்க காலையில பத்து மணிக்கு மேல தான் வருவா அப்படின்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா இத காலையில எல்லாரும் எழும்பறதுக்கு முன்னாடி இந்த வீட்டில் வந்து இருந்தா அதுவும் எல்லாரும் தூங்கிக் கொண்டிருக்கும் போது இவனுக்காக காத்திருந்த அந்த ஜீவன் யாரு? அவ்வளவு காலைல எழுந்து காத்திருந்து கதவை திறந்து விட்டுஅந்த நல்ல உள்ளம் யாரு? அந்த நல் உள்ளத்தைக் கண்டு பிடிச்சு இந்த வீட்டை விட்டு வெளியே அனுப்புங்கள். ஏன்னா நீங்கதான சொன்னீங்க இவ வர்றதுக்கு யாரு காரணமாய் இருந்தவர்களை வீட்ட விட்டு அனுப்ப போறேன்னு அதை நல்லா ஞாபகம் வச்சு பண்ணுங்க ஆனா இனி என்னோட புருஷன் பக்கம் வந்தா நான் வேற ஏதாவது பண்ணுவேன்" என்று கூறிவிட்டு நிற்காமல் மற்ற வேலைகளை பார்க்க சென்றுவிட்டாள்.



கூறிவிட்டு அவள் சென்று விட அங்கிருந்த அனைவருக்கும் அவள் கேட்ட கேள்விதான் மனதில் எழுந்தது உண்மையில் வீட்டுக்குள்ள தொறந்து விட்டிருப்பா என்று ஒருவருக்கொருவர் முகம் பார்த்துக் கொள்ள யாராக இருக்கும் என்ற உறுதியான தகவல் தான் யாருக்கும் தெரியவில்லை. அதனால் கத்தரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும் என்று எண்ணிக் கொண்டு அவர்களின் வேலையை பார்க்க கிளம்பி சென்றனர்.



விசாலினி பாட்டியை பாவமாக பார்க்க அவரோ அவளை உக்கிரமாக முறைத்து விட்டு சென்றுவிட்டார். விஷாலினி தான் போட்டு வந்து திட்டம் அனைத்தும் தவிடு பொடியாகி போவதை நினைத்து கடும் கோபம் அடைந்தாள். அவருடைய கோபத்திற்கு காரணம் 'சமர் தன் மனைவியை கைகளுக்குள் கொண்டுவந்து தப்பித்தது தான் அவ்வளவு சீக்கிரம் உன்னோட பொண்டாட்டி மேல காதல் ஆயிட்டா உன்னோட காதல் தான் உன்னோட ப்ளஸ் பாயிண்ட் அதை எப்படியாவது உன்கிட்ட இருந்து பிரிக்க போறேன் பாரு' என்று எண்ணிக்கொண்டே குறுக்கும் நெடுக்கும் தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் நடந்து கொண்டிருந்தாள்.



அதேநேரம் ஆதர்ஷினி சமையலறையில் காலையில் நடந்ததை பற்றி தான் யோசித்துக் கொண்டிருந்தாள். அவன் நினைத்திருந்தால் ஒரு மனிதாபிமான அடிப்படையில் விஷாலினி கையைப்பிடித்து உதவி இருக்கலாம் ஆனால் பாதுகாப்பாக அவளை பிடித்ததே அவளுக்கு பெரிய பரிசாக இருந்தது. ஆனால் அவனுக்குள் இருக்கும் தயக்கம் எப்போதுதான் முழுமையாக விடுவோம் என்று எண்ணி ஒரு பெருமூச்சு விட்டாள்.



சமர் தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டே தன் நண்பனிடம் "மச்சான் என்னோட பெரிய பலம் என்னோட பொண்டாட்டி தான் அப்படினு தோணுது டா ஆனாலும் அவ கிட்ட சகஜமாக பேச எனக்கு தயக்கமா தான் இருக்கு. நான் போய் பேசினால் நிச்சயமாக அவன் நிறைய கேள்வி கேட்பா அது என்னோட நல்லதுக்கா தானே இருந்தாலும் என்னால அவ கிட்ட பதில் சொல்ல முடியும்னு நம்பிக்கை இல்ல. அதனாலேயே அவளை விட்டு ஒதுங்கி போறேன். ஆனா எனக்கு ஒரு பாதுகாப்பு தேவைப்பட்டாலோ இல்ல தைரியமா எதுத்து நிக்க ஆசை வந்தாலும் அந்த நேரம் என்னோட பொண்டாட்டி என் பக்கம் இருக்கணும் அதான் என்னோட மனசு சொல்லிக்கிட்டே இருக்கு. அவளுக்கு ஏதாவது ஒண்ணுன்னா என்னால தாங்கவே முடியல யாராவது அவளை ஏதாவது சொன்னாலும் அவங்க எல்லாரையும் கொன்னு போடுற அளவுக்கு வெறி வருது இதுக்கு என்ன வேண்டா பண்றது" என்று கேட்டான்.



காலையில் நடந்த விஷயம் அனைத்தும் ஏற்கனவே அறிந்திருந்த காரணத்தினால் அமைதியாக "உன்னோட எல்லா கேள்விக்கும் விடை உன்னோட பொண்டாட்டி தான் யார்கிட்ட வேணும்னா ஒளிவுமறைவு இருக்கலாம் ஆனால் டாக்டர்கிட்ட வக்கீல் கிட்ட இவங்க எல்லாரும் விட மேலான நம்மளுடைய சரிபாதியா வர்ற நம்ம பொண்டாட்டி கிட்ட ஒளிவுமறைவு இருக்கணும்னு அவசியமே கிடையாது. தாராளமா உன்னோட மனசுல இருக்கிற விஷயம் எல்லாத்தையும் ஆவ கிட்ட சொல்லு அவ நிச்சயமா உன்னோட மனசு புரிஞ்சுகிட்டு தெளிவா உனக்கான பதில் சொல்லுவா. தேவை இல்லாம ரொம்ப யோசிச்சு குழப்பிக்காத உனக்கே புரிய ஆரம்பித்து இருக்கும்னு நினைக்கிறேன், முன்னாடியே விட நீ இப்போ ரொம்பவே மாறி இருக்க சகஜமான வாழ்க்கையும் வாழ ஆரம்பிச்சிருக்க இதே மாதிரி நீ நீயாகவே இரு யார் என்ன சொன்னாலும் எதுக்காக நொருங்கி போகாம உன் மேல தப்பு இல்ல அப்படி என்கிற நிலைமை வரும்போது தைரியமாக அவங்களை எதிர்த்து நில். உனக்கு துணையா நாங்க எல்லாரும் எப்பவுமே இருப்பேன்" என்று அவனை தோளோடு அணைத்துக் கொண்டான்.




ஏதோ இருந்த குழப்பங்கள் அத்தனைக்கும் தீர்வு கிடைத்தது போல் மிகவும் மகிழ்ச்சி அடைந்த சமஸ்தானம் புன்னகைத்துக் கொண்டான். அதன்பிறகு ஆதவன் சமர் இருவரும் தங்கள் தோட்டத்தில் விளைந்த காய்கறி பழங்களை டவுனில் கொண்டு சேர்க்கவும் வேலை இருந்ததால் அதில் பிஸியாகி போயினர்.




வீட்டில் மதியம் விஷாலினி சாப்பிட வராமல் இருக்க அவளை என்று அழைப்பதற்கு அங்கு யாரும் இருக்கவில்லை காலையில் நடந்து முடிந்த நிகழ்வின்போது தன்னுடைய அறைக்கு சென்றவள் அதன் பிறகு வெளியே எட்டிப் பார்க்கவே இல்லை. பெண்களுக்கு எப்பொழுதும் அவள் ஒரு பொருட்டாக தெரியாத காரணத்தினால் அவள் சாப்பிடால் எதையும் யாரும் கருத்தில் கொள்ளவில்லை யார்தான் அவள் சாப்பிடாமல் இருக்கா என்று அவளை அழைக்கிறார்கள் என்பதற்காகவே பெண்கள் அமைதியாக இருந்து கொண்டனர். ஆதர்ஷினி கார்த்திகா இருவருக்கும் அந்த ஆள் யார் என்று ஏற்கனவே தெரிந்திருந்தாலும் தெரியாதது போலவே நடந்து கொண்டனர்.




இதோ மதிய வேளையும் வந்துவிட அவளை இன்னும் காணவில்லை சமருக்கு வேலை அதிகம் இருந்த காரணத்தினால் ஆதவன் வீட்டிலிருந்தே இரு நேரத்திற்கும் சாப்பாடு சென்றுவிட்டது என்ற விஷயம் கார்த்திக் மூலமாக தெரிய வந்திருந்தது, அதனால் பெண்கள் பெரிதாக கண்டு கொள்ளாமல் தாங்களும் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர்.




தாத்தா சும்மா இருக்காமல் "புதுசா வந்த பொண்ணு காலையிலயும் சாப்பிட வந்த மாதிரி இல்ல இப்பவும் சாப்பிட வந்த மாதிரி இல்ல அந்த பொண்ண சாப்பிட கூப்பிட வில்லையா" என்று வாய்விட்டு கேட்டுவிட



"ஏன் அந்த குமரி காலைல குடுத்த முத்தம் போதாதே இப்போது எல்லார் முன்னாடியும் உங்க கூட உட்கார்ந்து சாப்பிட வேற செய்யணுமா அதுக்காக தான ஆசைப்படுகிறீர்கள்? அவளுக்கு வயிறு பசிச்சா சாப்பிட போறா இல்ல பசிக்கல னா சாப்பிடாம ரூம்ல உட்கார்ந்து இருக்க போறா உங்களுக்கு என்ன வந்துச்சு" என்று பாட்டி எண்ணையில் போட்ட கடுகாக பொரிய அவரோ இதற்கு மேல் பேசினால் தன்மானம் போய்விடும் என்று எண்ணி அமைதி காத்தார்.




அங்கு அமர்ந்திருந்த மற்றவர்கள் தங்களுக்கு வந்த சிரிப்பை அடக்கி கொண்டு சாப்பிட்டு எழுந்தனர். விஷாலினி மேல் அக்கறை கொண்ட அந்த உருவம் யார் கண்ணிலும் படாமல் மெதுவாக சாப்பாடு எடுத்துக்கொண்டு அவளுடைய அறைக்கு சென்றது.




"என்ன மன்னிச்சிடு விஷமா எல்லார் முன்னாடியும் உனக்கு சப்போர்ட் பண்ணி பேச முடியல நான் உனக்கு சப்போர்ட் பண்ணி பேசினா என்ன பத்தி இங்க இருக்க எல்லாருக்கும் தெரிஞ்சிடும், அதுமட்டுமில்லாம உன்னையும் ரொம்ப கேவலமா பேச ஆரம்பிச்சுடுவாங்க. இந்த ஒரே காரணத்திற்காக தான் அமைதியா போக வேண்டியதா இருக்கு" என்று சமாதானமாக கூற





"பச் என்ன அங்கிள் நீங்க இப்போ எனக்கு பசிக்கும் அப்படின்னு எனக்காக யாருக்கும் தெரியாமல் சாப்பாடு எடுத்துட்டு வந்து இருக்கீங்க உங்க பாசத்தை மேல எந்த குறையும் கிடையாது. உங்க வீட்ல உள்ள எல்லாருமே அவங்களுக்கு சப்போர்ட் பண்றாங்க அதுமட்டுமில்லாம வீட்ல உள்ள அருந்தவாலு எல்லாம் ஒன்று சேர்ந்து பாட்டிக்கும் எனக்கும் சண்டை வர வச்சிடுச்சு, அதனால இனி பாட்டையும் உதவி கேட்க முடியாது. ரொம்ப நாள் இந்த வீட்ல நான் தங்கவும் முடியாது. அதனால இன்னைக்கு சாயங்காலமே நேரடியாக கிட்ட பேச போறேன். நான் பேச பேச நிச்சயமா அவன் காலேஜ்ல நடந்த விஷயம் எல்லாம் ஞாபகம் வந்து கதற தான் போறான். அவன் கதறுவதை பார்த்து இந்த வீட்டில் உள்ள நிறைய பேருக்கு அது தான் போறாங்க. நிச்சயமா நான் பேச பேச அவனோட பொண்டாட்டியை விவாகரத்து பண்ணிட்டு தனியா தான் இருப்பான். அவனுடைய பெரிய பலமே அவன் பொண்டாட்டி தான் அவ அவன் கூட இல்ல அப்படினா ஈசியா அவனை சாத்திட்டு போகலாம் இன்னைக்கு சாயங்காலமே அதற்கான பிளான் எல்லாத்தையும் எக்ஸிக்யூடிவ் பண்றேன் நீங்க கவலைப்படாம யார் கண்ணிலும் படாமல் உங்க ரூமுக்கு போய்டுங்க" என்று கூறி அனுப்பி வைத்தாள்.




அந்த உருவம் அவள் கூறியபடி அறைக்கே சென்று விட அவள் கொண்டு வந்த சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு கீழே கொண்டு வந்து வைத்துவிட்டு மறுபடியும் தன் அறையில் மூழ்கி கொண்டாள்.




விசாலினி பக்காவாக பிளான் பண்ணி அனைத்தையும் யோசித்து வைத்திருக்க சமர் அனைத்து வேலைகளையும் முடித்து மாலை 4 மணி போல் தான் வீட்டிற்கு வந்தான். அப்போது அவன் தம்பி தங்கைகள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து இருந்து மாலை சிற்றுண்டி சாப்பிட்டு கொண்டிருக்க அவனும் அவர்களோடு ஐக்கியமாகி விட்டான்.



வழக்கம்போல பள்ளியில் கல்லூரியில் வேலை செய்யும் இடத்தில் நடந்த சுவாரசிய நிகழ்வுகளை ஒருவர் மாற்றி ஒருவர் கூறிக்கொண்டிருக்க அதைக்கேட்டு சிரிப்பும் கிண்டலடித்து மக்களும் தங்களுடைய நேரத்தை இன்பமாக கழித்துக் கொண்டிருந்தனர். அனைவரின் சிரித்த முகத்தை பார்த்தபடியே இறங்கி வந்த விசாலினி முகத்தில் குரூரமாக ஒரு புன்னகை மலர்ந்தது. அதை கண்டு கொண்ட ஆதர்ஷினி 'இந்த பிசாசு அடுத்து என்ன திட்டம் தீட்டி இருக்குன்னு தெரியலையே' என்று எண்ணிக்கொண்டாள்.



சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்த ஷாலினி அனைவரும் கலைந்து செல்வதைப் பார்த்து இறுதியாக சென்ற சாமரை தடுத்தாள் அவன் என்னவென்று அவள் முகத்தை கேள்வியாக பார்க்க "உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும்" என்று கூற அவனும் இன்று உள்ள பிரச்சனையை முடித்து விடுவோம் என்று எண்ணி சரி என்று தலை அசைத்து அவளுடன் சென்றான்.



விஷாலினி அவனை தனியாக அழைத்துச் செல்வதை சரண்யா பார்த்துவிட அனைவரிடமும் இச்செய்தியை கூறி விட்டாள். அதனால் அவர்களும் யாருக்கும் தெரியாமல் அவர்கள் பின்னே சென்று விஷாலினி சமர் இருவரும் பேசுவதை கேட்க ஆரம்பித்தனர்.




விசாலினி பேச பேச சமர் உணர்ச்சிகளை துடைத்துக்கொண்டு வருவதை பார்த்த பெற்றவர்களுக்கு மனது கொதித்துப் போனது. ஆனால் ஆதர்ஷினி நிதானமாக தன் கணவன் முகத்தையே ஏறெடுத்து பார்த்துக் கொண்டிருந்தா.ள் இங்கு இருந்தவர்களோ கோபத்தில் கொந்தளித்து அங்கே செல்வதற்கு தயாராக அவர்கள் அனைவரையும் தடுத்து நிறுத்தி விட்டாள் ஆதர்ஷினி.



விசாலினி பேசுவது அனைத்தையும் பொறுமையாக கேட்ட சமர் இறுதியாக தன்னுடைய முடிவுகளையும் மிகத் தெளிவாக கூறினான். அதைக்கேட்ட ஒவ்வொருவரின் முகமும் ஒவ்வொரு விதமாக உணர்ச்சி குவியலாக பிரதிபலித்தது.



விஷாலினி பேசியது என்ன அதற்கு என்ன பதில் கூறினான் என்பதனை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் தங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தோழி என்னுடைய பதிவுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.
 
Top