• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வாழவும் ஆளவும் அவள்(ன்) 27

Aashmi S

Active member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
156
ஏனோ எப்பொழுதும் இருக்கும் இறுக்கம் இல்லாமல் அனைவருக்கும் மனதில் ஒரு தெளிவு பிறந்திருந்தது அவ்வீட்டில். பவானி வந்திருந்த காரணத்தினால் அனைவரும் உற்சாகமாக அந்த நாளைக் கடத்திக் கொண்டிருக்க மாலையில் பவானியும் வீடு திரும்பி விட்டாள்.

அனைவரும் சாப்பிட்டு முடித்த நேரம் சமர் வராமல் இருப்பதை கவனித்தனர். விஜயா ஆதுவிடம் "சமர் எங்க இன்னும் வரல? எப்போ என்ன வேலையா இருந்தாலும் சாப்பிடுவதற்கு வீட்டுக்கு வந்துடுவான் தானே! இன்னைக்கு என்ன ஆச்சு இவ்வளவு நேரம் ஆனபிறகும் வீட்டுக்கு இன்னும் வரல" என்று கேட்டார்.


"அவரு ஒரு முக்கியமான வேலையா வெளிய போய் இருக்காரு அத்த ஆதவன் அண்ணா கூட தான் போயிருக்கு, எப்படியும் வரதுக்கு இன்னும் 2 மணி நேரமாவது ஆகும். நீங்க எல்லாரும் ஏதாவது வேலை இருந்தா பாருங்க இல்லன்னா தூங்குங்க நான் அவருக்கு சாப்பாடு கொடுக்கிறேன்" என்று பதில் கூறினாள்.


இனி அவள் பார்த்துக்கொள்வாள் என்ற எண்ணத்தில் அனைவரும் தூங்க சென்று விட 'காலைல நீ உன்னோட காதல என் கிட்ட சொன்ன அதுக்கு உனக்கு ஏதாவது ஒரு சர்ப்ரைஸ் தரணுமே! எவ்வளவு நாள் உன்னோட மனசு புல்லா காதல வச்சுட்டு பூட்டி வைத்திருந்த நானாவது உன்கிட்ட வெளிப்படையாக சொல்லிட்டேன், ஒரு விஷயத்தை வெளிப்படையாக சொல்வதைவிட மனசுக்குள்ளேயே வைத்து அழுத்தும்போது எவ்வளவு பாரம் ஏறும் அப்படின்னு எனக்கே தெரியும். இன்னைக்கு உன்னோட பாரம் காதல் எல்லாம் வெளியே வந்து இருக்கு, உன்னோட மனசு லேசா இருக்கும் இன்னைக்கு உனக்கு ஏதாவது ஒரு சர்ப்ரைஸ் செஞ்சே ஆகணும்! ஆனா நம்மளோட வாழ்க்கையோட அடுத்தகட்டம் கிடையாது நீ என்னைக்குமே சந்தோஷமா அந்த விஷயத்தை நினைச்சா மகிழ்ச்சியாய் இருக்கிற மாதிரி கொண்டாட்டமாய் ஏற்பாடு பண்ணனும்! இன்னும் ரெண்டு மணி நேரத்துக்குள்ள உனக்காக ஒரு சூப்பர் சர்ப்ரைஸ் ரெடி பண்றேன்' என்று மனதுக்குள் கூறிக்கொண்டே அதற்கான வேலைகளில் இறங்கினாள்.


அவர்களின் அறை முழுவதும் சமர் உண்மையாக மனநிறைவாக சிரித்த நிமிடங்களை அவனுக்கே தெரியாமல் போட்டோ பிடித்து வைத்திருந்தாள். அதை மொத்தமாக எங்கெங்கு வைக்க வேண்டுமோ அங்கே அழகாக வைத்தாள்.

சிறுவயது முதல் அவள் ஆசைப்பட்டு ஏங்கிய சின்னச்சின்ன தின்பண்டங்கள் சாப்பாட்டு விஷயங்களை ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து அவளுடைய அறையில் நிறைத்து விட்டாள். இது மட்டுமல்லாமல் என்னதான் வீட்டில் உள்ளவர்கள் அவனை ஒதுக்கி வைத்தாலும் அனைவருடனும் சேர்ந்து சந்தோஷமான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஏக்கம் அவன் மனதில் இருப்பதை அறிந்து கொண்டு, அனைவரும் ஒன்றாக இருப்பது போல் ஒரு பெரிய போட்டோ ஃப்ரேம் ரெடி செய்ய ஏற்கனவே கொடுத்து இருந்தாள். அதையும் இன்றே வேண்டும் என்று கேட்டு வாங்கி அறையில் நிரப்பிவிட்டு சின்ன சின்ன அலங்காரங்கள் செய்து அவ்வளவு அழகாக அந்த அறையை மாற்றி வைத்திருந்தாள்.


ஏற்கனவே அவன் அறையை பார்த்தவர்களுக்கு இது அவன் அரை தானா என்று சந்தேகம் வரும் அளவிற்கு மொத்தமாகவே மாற்றி வைத்து ஒரு இன்ப கூடமாக அந்த அறை நிலவும் படி செய்தாள், அவன் காதல் மனைவி. இவை அனைத்தையும் செய்து முடித்துவிட்டு வெளியே வந்த நேரம் அவ்வீட்டில் உள்ள வாண்டுகள் அனைத்தும் வாசலில் நின்று அந்த ரூமை வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

"அண்ணி சூப்பரா செஞ்சு இருக்கீங்க.இனி எங்க அண்ணனுக்கு இந்த ரூம் எப்பவுமே சொர்க்கம் தான் எங்க அண்ணனோட சந்தோஷமான நிகழ்வுகள் மட்டும் தான் இந்த ரூம் முழுக்க நிறைந்து இருக்கும். இதுநாள் வரைக்கும் இந்த ரூம்ல எங்களோடு அண்ணன் இருக்கும்போது அதாவது உங்க கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் ஏன்டா இருக்கோம் அப்படின்னு மட்டும் தான் நினைச்சு கிட்டு இருந்துச்சு. இனி இந்த ரூமை பார்க்கும் போது அதனுடைய சந்தோஷமான நிகழ்வுகள் மட்டும் தான் அது முன்னாடி படம்பிடித்து வரும் அவ்வளவு அழகா இருக்கீங்க" என்று கூறி அவளை அணைத்துக்கொண்டான் கணேஷ்.

இப்படியே ஒவ்வொருவராக அவளை வந்து அணைத்துக் கொள்ள அவளும் அவர்களை பாசத்துடன் பார்த்தாள் "உங்க அண்ணனோட வாழ்க்கையில இனி முடிந்த அளவுக்கு நாமே சந்தோஷத்தை மட்டுமே கொடுப்போம். ஆனால் வாழ்க்கையில் எப்பவுமே சந்தோஷமா மட்டும் நிறைந்து இருக்காது தானே சின்ன சின்ன கஷ்டங்கள் வந்தாலும் நம்ம எல்லாரும் அவனுக்கு உறுதுணையாக இருந்தால் அதுவே அவனுக்கு பெரிய வரம் தான். உங்கள மாதிரி தம்பி தங்கச்சி கிடைக்கும்போது யாருக்குமே எந்தவித கஷ்டமும் வராது. அதனால கஷ்டப்படாம சந்தோஷமா இருங்க" என்று கூறி அவர்களையும் தேற்றினாள்.

"அடச்சீ நிப்பாட்டுங்க செண்டிமெண்ட் சீன மாமா வந்த பிறகு அவங்க முகத்துல வர்ற ரியாக்ஷன் பார்க்க நான் ரொம்ப ஆவலா காத்துக்கிட்டு இருக்கேன். நீங்க என்னடான்னா அழுது வடிந்து வேற மாதிரி சீன் கிரியேட் பண்ணிட்டு இருக்கீங்க" என்று கார்த்திகா கத்த அனைவரும் அந்த நிமிஷம் சிரித்துவிட்டனர்.

இவர்கள் சிரித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு போன்கால் அருள் நம்பருக்கு வர அதில் அட்டம் செய்தவன் சிரிப்பு ஸ்விட்ச் ஆஃப் செய்தார் போல் ஆப் ஆனது. அதிலிருந்தே விஷயம் ரொம்ப வீரியமானது என்பதை அங்கிருந்த அனைவரும் உணர்ந்து கொண்டனர்.

ஆதர்ஷினி மெதுவாக அவள் கை பிடித்து "என்ன ஆச்சு ஏதாவது பிரச்சனையா? நீ குடுக்குற ரியாக்சன் பார்த்தாலே கொஞ்சம் பெரிய பிரச்சனை மாதிரி தெரியுது எதுவா இருந்தாலும் சொல்லிவிடு மறக்க நினைக்காதே" என்று எச்சரிக்கை செய்தாள்.


"அண்ணி அண்ணாவும் ஆதவன் அண்ணாவும் போன வண்டி ஆக்சிடென்ட் ஆகி இருக்கு! இவங்க ஒழுங்கா தான் போய் இருக்காங்க ஆனா ஏதோ ஒரு வண்டிக்காரன் வேணும்னு இடித்து தள்ளிவிட்டு போயிருக்கான். ஆதவன் அண்ணா சமர் அண்ணாக்கு எந்தவித பிரச்சினையும் வரக்கூடாது அப்படின்னு சமர் அண்ணாவ அவர் வண்டியிலிருந்து கீழே தள்ளிவிட்டு இருக்காங்க. அதனால அண்ணனுக்கு ஒரு சில சிராய்ப்பு மட்டும் தான் ஆனா ஆதவன் அண்ணாக்கு கொஞ்சம் அடி பலமா இருக்கும் போல அதனால தான் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி இருக்காங்களாம். அண்ணா தான் போன் பண்ணி சொன்னான்" என்று மெதுவாக கூறி முடித்தான்.

அதைக்கேட்டு கோபத்தில் பற்களை நறநறவென கடித்தவாறு "இந்த வீட்ல இருக்கிறவங்க அடங்கவே மாட்டாங்க அப்படி தானே! இவங்களை எல்லாம் பாவம் பார்த்து விட்டு வைக்கிறது நாம பண்ற பெரிய தவறு. நாளைக்கே இந்த விபத்துக்கு காரணமான இந்த வீட்ல இருக்கிறவர உண்டு இல்லாம ஆக்குறேன் பாரு. இப்பவே கிளம்பி போய் அவங்க ரெண்டு பேரையும் பார்ப்போம்" என்று கூறி விறுவிறுவென வெளியே சென்று விட அவள் பின்னே மற்றவர்களும் சென்றுவிட்டனர்.


பெரியவர்கள் தூங்கி இருந்த காரணத்தினால் இவர்கள் அனைவரும் வெளியே சென்று விஷயம் யாருக்கும் தெரியவில்லை. ஏன் விசாவும் அவளுடன் சேர்ந்து இருப்பவருக்குமே இது தெரியவில்லை சமர் ஆதவன் இருவரையும் சேர்த்தே தீர்த்துக்கட்ட இறுதியாக முடிவெடுத்து இருந்தனர். எப்போதும் இணைபிரியாமல் சிக்குபவர்களை இணைபிரியாமல் அனுப்பி வைத்துவிடலாம் என்று இவர்கள் எண்ணிக்கை விதியோ வேறுவிதமாக திட்டம் தீட்டி அவர்களை காப்பாற்றியும் இருந்தது. நடந்த எதுவும் இவர்களுக்கு தெரியாத காரணத்தினால் அமைதியாக உறங்கிக் கொண்டு தான் இருந்தனர். ஆனால் நாளை காலை அவர்களுக்கு என்ன பெரிய பிரளயமே காத்துக்கொண்டிருந்தது.

அனைவரும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தபோது சமர் வெளியே காயங்களுக்கு மருந்திட்டு விட்டு அமர்ந்திருந்தான். ஆதவனுக்கு ஒரு கை முறிந்து இருந்தது அதற்கான சிகிச்சை நடந்து கொண்டிருக்க கவலையாக வெளியே அமர்ந்திருந்தவன் இவர்கள் அனைவரையும் பார்த்தவுடன் கொஞ்சம் தெம்பு அடைந்தவனாக நிமிர்ந்து அமர்ந்தான்.


"எப்படி அண்ணா இருக்கீங்க? இந்த ஆக்சிடெண்ட் எப்படி ஆச்சு உங்களை எடுக்க வந்தவர்கள் யார் அப்படின்னு கண்டுபிடித்தீர்களா? போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்தாச்சா?" என்று வரிசையாக கேள்விகளை அடுக்கினான் சரண்


ஆனால் அவன் பேச்சிற்கு பதில் சொல்லாமல் தன் எதிரே தன் முகத்தையே பார்த்தபடி நின்று கொண்டிருந்த தன் தம்பி அருள் முகத்தை பார்த்து கோபமாக "ஏன்டா இந்த ராத்திரி நேரத்துல பொம்பள பிள்ளைங்க எல்லாரையும் கூட்டிட்டு வரணுமா? நீயும் கணேஷ் மட்டும் வந்தா போதாதா? எல்லாரையும் ஒட்டுமொத்தமாக கூட்டிட்டு வந்திருக்க சரி என்னோட பொண்டாட்டி உன்னோட பொண்டாட்டி தான் கேட்க மாட்டாங்க அவங்களையும் நீங்க ரெண்டு பசங்க மட்டும் வந்து இருக்கலாம் இல்ல. நிலா சரண்யா எல்லாரையும் கூட்டிட்டு வரணுமா? ராத்திரி நேரம் பொம்பளைங்களுக்கு எவ்வளவு ஆபத்து இருக்கு உனக்கு தெரியும் தானே இருந்தும் இப்படி செய்யலாமா?" என்று கேட்டான்.


"அதெல்லாம் யாருக்கும் எதுவும் ஆகல பத்திரமா எல்லாரும் இங்க வந்து சேர்ந்தாச்சு. அதேமாதிரி பத்திரமா வீட்டுக்கு போய் சேர்ந்துட்டா போச்சு. இப்போ அத பத்தி பேச வேண்டிய அவசியம் கிடையாது. நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு யாருங்க இடிச்சது அப்படின்னு தெரிஞ்சுதா?" என்று ஆதர்ஷினி கேட்க


"யார் இடிச்சாங்க அப்படிங்கறது கரெக்டா தெரியல ஆனா எங்களை இடிச்சிப் கீழே தள்ளிவிட்டு அவங்க நிக்காம போய்க்கிட்டே இருக்காங்க. போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்தாச்சு அவங்க விசாரிச்சுட்டு ஏதாவது சொன்னா உண்டு" என்று அவனும் கூற


யாருக்கோ போன் செய்த கார்த்திகா ஒரு சில விஷயங்களை கேட்டுவிட்டு ஆதர்ஷினி கையில் போனை கொடுத்தாள். அவளும் அனைத்தையும் கேட்டு முடித்துவிட்டு ஒரு தெளிவான முகத்துடன் தன் அண்ணன் அனுமதிக்கப்பட்டிருக்கும் அறைக்கு சென்றாள்.


அப்போதுதான் ஆதவன் மயக்கத்திலிருந்து கண்விழித்து இருக்க தன் முன்னே கவலையான முகத்துடன் நின்று கொண்டிருந்த தன் நண்பனையும், கவலை இருந்தாலும் அதை வெளிக்காட்டினால் இன்னும் கஷ்டப்பட்டுவானோ என்று எண்ணி கவலைப்படாதது போல் அமைதியாக நின்று கொண்டிருந்த தன் தங்கைகளையும் பார்த்து மெல்லிய புன்னகை செய்து "எனக்கு எதுவும் பிரச்சனை இல்ல கை மட்டும் தான் பிராக்சர் ஆகி இருக்கு, அதுவும் சீக்கிரம் சரியாகும் என்ன நினைத்து ரொம்ப கவலைப் படாத! சீக்கிரமே பழைய மாதிரி நடமாட ஆரம்பித்து விடுவேன்" என்று அவர்களுக்கு ஆறுதல் கூறினான்.


'நீ சொல்லுவ அண்ணா கவலைப்படாமல் இருக்க சொல்லி ஆனால் நான் எவ்வளவு கவனமாக இருந்த பிறகும் இன்னைக்கு நீங்க ரெண்டு பேரும் அடிபட்டு இருக்கிறதுக்கு என்னோட சிறு கவனக் குறைவும் ஒரு காரணம் தான். எக்காரணம் கொண்டும் மறுபடியும் நடக்க விடமாட்டேன். இந்த அளவுக்கு நீங்க வலி வேதனை அனுபவித்துக் கொண்டிருக்கும் போது அங்கு நிம்மதியாக உறங்கி விட்டு இருக்காரே அந்த மனுஷன் அவர நாளைக்கே துடிக்க வைக்கல உனக்கு நான் தங்கச்சியும் இல்லை இவனுக்கு நான் பொண்டாட்டியும் இல்லை' என்று மனதில் முடிவெடுத்துக் கொண்டு அமைதியாக தலையாட்டி வைத்தாள்.

அதன் பிறகு இரவு முழுவதும் அங்கிருந்த ஒருவர் கூட தூங்கவில்லை மாறி மாறி இருவரையும் கவனித்துக் கொண்டவர்கள், விடியும் நேரத்தில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டனர்.

ஏற்கனவே அருள் புனிதாவிற்கு அழைத்து "அம்மா நேற்று ஒரு சின்ன பிரச்சனை அதனால நாங்க யாருமே வீட்ல இல்ல. எல்லாரும் இப்போ வீட்டுக்கு கிளம்பி வந்து கொண்டே இருக்கோம் முடிஞ்சா எல்லாரையும் எழுப்பி ஹாலுக்கு கூட்டிட்டு வாங்க இன்னைக்கு என்னமோ நடக்கப் போகுதுன்னு என்னோட உள்மனசு சொல்லிக்கிட்டே இருக்கு" என்று கூற


"டேய் என்னடா சொல்ற அப்ப நீங்க யாருமே வீட்ல இல்லையா? என்ன பிரச்சனை யாருக்கு என்னாச்சு எல்லாரும் நல்லா தானே இருக்கீங்க?" என்று தாய்க்கே உரிய படபடப்பில் கேட்டவர் பின்பு நிதானமாக "நீ சொல்ற மாதிரி என்னமோ இந்த வீட்டில் நடக்க போகுதுன்னு என்னோட உள்மனசு சொல்லிக்கிட்டே தான் இருக்குது! முடிஞ்சா எல்லாரையும் எழுப்பி வர வைக்கிறேன் இல்லனா வாங்க பார்த்துக்கலாம்" என்று கூறி அவர்களுக்கு காலையில் குடிப்பதற்கு காபி தயாரிக்க சென்றார்.


சிறிது நேரத்தில் வெளியே ஏதோ சத்தம் கேட்க 'அதுக்குள்ளவா பிள்ளைங்க எல்லாரும் வந்துட்டாங்க, இப்பதானே அருள் போன் பண்ணி சொன்னான் எப்படியும் வரதுக்கு இன்னும் கொஞ்ச நேரமாவது ஆகுமே இல்ல வேற யார் வந்து இருப்பா?' என்று எண்ணிக்கொண்டு அவர் வாசலுக்கு செல்ல ஏற்கனவே அந்த சத்தத்தில் கண்விழித்த மற்ற பெண்களும் வெளியே வந்திருந்தனர். யாரும் எதிர்பார்க்காத விதமாக ஆதர்ஷினி ஆதவன் பவானி குடும்பம் மொத்தமாக வீட்டுவாசலில் நின்று கொண்டிருக்க


"வாங்க வாங்க சொல்லாம வந்து இருக்கீங்க? ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்து இருக்கலாம் தானே பிள்ளைங்க எல்லாரும் ஏதோ வேலையா வெளிய போயிருக்காங்க. வாங்க வீட்டுக்கு வாங்க காபி குடிக்கிறீங்களா?" என்று தன் சம்பந்தி வீட்டுக்காரர்களை அன்போடு உபசரிக்க "இல்லமா எதுவும் வேணாம் காலையில கார்த்திகா போன் பண்ணி எங்க எல்லாரையும் இங்க வர சொன்னா, அதனால் தான் நாங்களும் இங்க வந்துட்டோம். என்னமோ ஒரு விஷயத்தை எல்லார்கிட்டயும் சொல்லணும் அப்படின்னு சொன்னாங்க எதுவா இருந்தாலும் அவங்க வரட்டும்னு நாங்களும் அமைதியாய் இருக்கோம், இப்போதைக்கு எதுவும் வேணாம்மா நீங்களும் வந்து உட்காருங்க" என்று கூற அவர்களும் அமைதியாக அனைவருக்கும் காபி மட்டும் மறுக்க மறுக்க கொடுத்துவிட்டு தாங்களும் குடித்துவிட்டு வந்து அமர்ந்தனர்.


சிறிது நேரத்தில் அவ்வீட்டில் உள்ள ஆண்களும் விஷாலினியும் கீழே இறங்கி வர வீட்டில் இருக்கும் இத்தனை பேரை கேள்வியாக தான் பார்த்தனர். ஆனாலும் மரியாதை நிமித்தமாக அனைவரையும் வரவேற்றனர்.

அந்த நேரத்தில்தான் சமர் ஆதவன் அனைவரும் வீடு வந்து சேர அவர்கள் இருவரின் மேலிருந்த காயங்களும் அதற்கு மருந்திட்டு இருப்பதை பார்த்த பெற்றவர்களுக்கு மனது பதறியது.


ஆனால் அனைவரையும் நிதானமாக ஒருவர் பார்வை பார்த்துக் கொண்டு வீட்டின் உள்ளே வந்த ஆதர்ஷினி ஆதவன் சமர் இருவரையும் அங்கிருந்த ஒரு இருக்கையில் அமர வைத்துவிட்டு யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அங்கே நின்று கொண்டிருந்த முருகனின் சட்டையை கொத்தாக பற்றினாள்.

அதில் முருகன் சிறு அதிர்ச்சி அடைந்து விட்டார். ஆனால் யாரும் அவளை தடுக்காமல் இருந்தது தான் அவருக்கு கூடுதல் அதிர்ச்சியாக இருந்தது.


அவருடைய காலரை பற்றியபடி "ஏன்யா உனக்கு எல்லாம் மனசாட்சி கொஞ்சம் கூட கிடையாதா? உன்னோட சுயநலத்திற்காகவும் உனக்குக் கிடைக்காத ஆசைக்காகவும் ஒரு சின்ன பிள்ளையா அதோட பிஞ்சு வயசுல இருந்தே கஷ்டப்படுத்தி வந்திருக்க! அப்படி அவன் கஷ்டப்பட்டாலும் போது உனக்கு என்ன தான் கிடைத்தது வீட்ல இருக்குற ஒவ்வொருத்தர் கிட்டயும் நீ நல்லவன் வேஷம் போட்டு ஏமாத்திட்டு மொத்தமா அவனை நரகத்தில் வாழ வச்சிருக்க! எங்க மொத்தமாவே நல்லவன் வேஷம் போட்டா மாட்டிக் கொள்வோமோ அப்படின்னு அவனை பிடிக்காத மாதிரி இருந்து வெளிய தெரியாம எவ்வளவு கேடுகெட்ட வேலையும் பண்ணி இருக்க! இன்னைக்கு அவனையும் என்னோட அண்ணனையும் கொல்றதுக்கு கூட தயங்கல அந்த அளவுக்கு என் புருஷன் மேல உனக்கு வன்மம் வர காரணம் என்ன? எல்லாரும் சொல்ற மாதிரி அந்த சொத்து கைக்கு கிடைக்காத நிலை தான் நான் இப்படி எல்லாம் பண்ணிட்டேன் அப்படின்னு பொய் சொல்லி என்னை ஏமாத்த நினைக்காத! நீ எதுக்காக இப்படி எல்லாம் பண்ண அப்படிங்கிற காரணம் எல்லாமே எனக்கு தெளிவா தெரியும். எல்லாத்துக்கும் ஆதாரம் வச்சிருக்கேன் மொத்தமா இந்த வீட்ல எல்லார்கிட்டயும் போட்டு காமிச்சேனே உன்னை எல்லாரும் நார் நாரா கிழிச்சுருவாங்க. நான் சொல்வதற்கும் நீ சொல்றதுக்கும் ஆயிரம் வித்தியாசம் இருக்கு, அதனால ஒழுங்கு மரியாதையா நீ எதுக்காக இந்த மாதிரியெல்லாம் அப்படி பண்ண என்கிற விஷயத்தை சொல்லிடு!


அப்பாச்சும் இந்த வீட்ல உன்னோட பேச்சில் உள்ள உண்மைத் தன்மை தெரியாமல் அதை மலைபோல நம்பி உன்னோட குள்ளநரித்தனம் எதுவுமே தெரியாம நீ சொல்ற விஷயங்களை எல்லாம் ஏத்துக்கிட்டு ஒரு பிஞ்ஞை சினிமா இதிலிருந்தே ஒதுக்கி வைத்து நாம எவ்வளவு பெரிய தப்பு பண்ணி இருக்கோம் அப்படி என்கிற விஷயம் எல்லாருக்கும் புரியும். இப்ப நீ சொல்லப் போறியா இல்ல எல்லா உண்மையை நான் சொல்லட்டா? எனக்கு இருக்குற கோவத்துக்கு உன்ன அப்படியே நாலு அரை விடனும்னு தோணுது ஆனா உன்னோட வயசுக்கு மரியாதை கொடுத்து இதே அளவு கூட நீப்பாட்டி இருக்கேன், இதுக்கு மேலயும் யாரையாவது சப்போர்ட்டுக்கு கூப்பிட்டு நல்லவன் வேஷம் போடுனும் அப்படின்னு நெனைச்சே அடிக்க கூட தயங்க மாட்டேன்" என்று ஆக்ரோஷமாக கத்தினாள்.


வீட்டில் யாருமே எதுவுமே பேசாமல் நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்தனர் இதில் கோபமடைந்த விஷாலினி ஆதர்ஷினி பக்கம் திரும்பி "உனக்கு கொஞ்சம் கூட அறிவே கிடையாதா வயசுக்கு மரியாதை கொடுக்கிறேன் அப்படின்னு சொல்ற அப்புறம் எதுக்காக அவரோட சட்டையை பிடித்து வைத்திருக்க கொஞ்சமாவது பொண்ணு மாதிரி நடந்து கொள்" என்று கூறி முடிக்கும் அவளுடைய வலது கன்னத்தில் கார்த்திகா அறைய "நீ மட்டும்தான் அறைவியா நான் அறைய மாட்டேனா" என்று கூறிக்கொண்டே இடது கன்னத்தில் பவானி அறைந்தாள் மறுபடியும் விசாலினி ஏதோ பேச வாய் திறக்க அவளை பேசவிடாமல் மாறி மாறி கண்ணத்தில் இருவரும் அறைந்தனர்.


"வாய மூடிக்கிட்டு அமைதியா இருக்கணும் தேவை இல்லாம பேசின குழி தோண்டி புதைத்து விடுவோம்" என்று இருவரும் கடினமான குரலில் மிரட்ட விசாலினி பயந்து வாயை மூடிக்கொண்டாள்.


ஒரு சிறு பெண் தன்னை அடிப்பதையும் தனக்கு நெருக்கமான விசாலினியை அறைவதையும் பொறுத்துக் கொள்ள முடியாத முருகன் "ஆமா நான் தான் எல்லாத்துக்கும் காரணம் நான் தான் ஒவ்வொரு விஷயத்தையும் பிளான் பண்ணி பண்ணேன். எதுக்காக இதெல்லாம் பண்ண தெரியுமா?" என்று குரூரமாக சிரித்துக்கொண்டே எதற்காக இவர் அனைத்தையும் செய்தார் என்று கூறினார்.


அவர் கூறியதை கேட்க கேட்க அங்குள்ள பலர் நெஞ்சில் ஈட்டி குத்தியது போல் வலித்தது. ஆனால் அனைத்தையும் திடமாக எதிர்கொண்டது என்னவோ அவ்வீட்டின் இளவட்டங்கள் மட்டும்தான் எதிர் கொண்டது மட்டுமல்லாமல் எதிர் கேள்வியும் கேட்டனர் அவர்கள் கேட்ட கேள்வியில் தான் முருகன் கூனிக் குறுகிப் போய் நின்றார்.


அது என்ன என்பதனை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் தங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தோழி என்னுடைய பதிவுகளில் ஏதாவது பிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.
 
Top