• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வாழவும் ஆளவும் அவள்(ன்) 32

Aashmi S

Active member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
156
பிரச்சனைகள் அனைத்தும் ஓரளவுக்கு முடிவுக்கு வந்தது! என அனைவரும் நினைத்திருக்க, விசா இன்னும் திருந்தவில்லை என்பதை அவளுடைய முகத்திலிருந்து ஆதர்ஷினி, கார்த்திகா, பவானி மூவரும் கண்டுகொண்டனர்.

மூவரும் அருகருகே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த காரணத்தினால் ஒருவர் ஒருவர் முகத்தை பார்க்க ஆதர்ஷினி மெதுவாக "உன்ன விட்டுட்டு நாங்க இவளுக்கு பூச வச்சோம் அப்படின்னு ரொம்ப வருத்தப்பட்டு தானே! அதுக்காகவே திருந்தாமல் இருக்கா போல எவ்வளவுதான் நீங்க ரெண்டுபேரும் அடிச்சாலும் இவளுக்கு புத்தியே வராது. அப்படி என்ன இவரு மேல இவளுக்கு அவ்வளவு பாசம் இவரை கஷ்டப்பட்டால் இவளுக்கு எங்க வலிக்குது இவளுக்கு நாளைக்கு இல்லன்னு இன்னைக்கு மொத்தமாக ஒரு முடிவு கட்டுவோம், இப்பதான் ஓரளவுக்கு எல்லாரும் அமைதியாக இருக்காங்க உடனே நம்ம பிரச்சினை ஆரம்பிச்சா வேற மாதிரி போயிடும். அதனால அமைதியா சாயங்காலமே ஆரம்பிச்சு இதுக்கு ஒரு முடிவு கொண்டு வருவோம்" என்று மெதுவாக கூறினாள்.
"நீ சொல்றது சரிதான் ஆனா இவ்வளவு விஷயம் நடந்த பிறகும் இவ எதுக்கு இன்னும் திருந்தாமல் இருக்கா? அந்த மனுஷன் கூட கொஞ்சம் யோசிச்சு குற்றவுணர்ச்சி அடைந்திருந்தது மாதிரி தெரியுது. இதுவே அவரு திருந்தி வாழ்வதற்கு போதுமானதா இருக்கும் ஆனா இவ எதுக்கு துள்ளிக்கிட்டு திறியுறா? எப்படியோ நாளைக்கு இந்த வீட்டை விட்டு அவளோட வீட்டுக்கு போய்விடுவா ஆனாலும் அதுக்குள்ள நம்மள ஏதாவது பண்ணனும்னு முடிவு பண்ணி இருப்பா போல, அவளுடைய முகத்தை பார்த்தாலே தெரியுது உன் கிட்ட அடி வாங்கினால்தான் திருந்துவா போல, உன் தங்கச்சி அவ்வளவு பவர் ஃபுல்லா இல்ல போல நானும் அவளும் அடிச்ச பிறகு அடங்கவே இல்ல அப்படின்னு சொன்னா நீ தான் அவளுக்கு கரெக்ட் நீ சொல்ற மாதிரியே எல்லாம் செஞ்சிடலாம்" என்று தன் தோழிக்கு ஆதரவாக கூறினாள்.


"அக்கா ஆனா எனக்கு ஒரு விஷயத்தை சொல்லு நம்ம வீட்டில நம்மளோட தம்பியே தப்பு பண்ணியிருந்தாலும் நம்ம அவனை திருத்த தான் முயற்சி பண்ணுவோம். நமக்கு அவன் மேல மலையளவு பாசம் உண்டு அப்படி என்கிற விஷயமும் எல்லாருக்குமே தெரியும். ஆனால் இவ்வளவு பாசம் இவனுக்கு எப்படி முருகன் மாமா மேல வந்துச்சு அந்த விஷயம் தான் எனக்கு ரொம்பவே இடிக்குது" என்று கார்த்திகா தன் யோசனையை கேள்வியாக கேட்டாள்.


"இத நாம எப்படி வேணா எடுத்துக்கலாம் கார்த்தி, அதாவது சராசரியாக ஒரு மனுஷங்களுக்கு ஒரு சிலர் மேல காரணமே இல்லாம அன்பு பாசம் வரும். அது காதலாக மட்டுமே இருக்காது அது இந்த இவள மாதிரி எதிர்பார்ப்பில்லாத வைக்கிற பாசம் கூட இருக்கலாம், இவள நாம ரொம்ப குற்றம் சொல்லவும் கூடாது ஏன் தெரியுமா அவரு அவ அப்பாவோட பிரண்ட் மட்டும் தான்! ஆனால் கிட்டத்தட்ட அவளோட அப்பா அளவுக்கு இவ அவர் மேல பாசம் வச்சு இருக்கா. இது எதனால் அப்படின்னு நம்ம ஆராய்ந்து பார்த்தாலும் நிச்சயமா நமக்கு பதில் கிடைக்காது. ஏதோ ஒரு பிடித்தோம் ஏதோ ஒரு அன்பு அதுக்கு வேற பெயர் சூட்டி நாம அத கொச்சைப்படுத்த வேண்டாம். ஆனாலும் இவர் திரிந்த மனிதன் திருந்தாமல் இருந்தால் ஏதோ பேசி பேசி இந்த மனுஷனை பழையபடி மாற்றுவதற்காக வாய்ப்புகள் இருக்கு, அதுக்காகவே இவளை எப்படி அது திருத்தி காட்டுகிறேன்" என்று தெளிவான விளக்கத்தைக் கூறினாள்.ஏனெனில் கார்த்திகா கூற வருவதன் உள் அர்த்தம் என்னவென ஆதர்சினி உணர்ந்து இருந்தாள்.

அவள் கூறியதை மற்ற இருவரும் ஏற்றுக் கொண்டு புன்னகை செய்தனர். இவர்கள் மூவரும் குசுகுசுவென்று ஏதோ பேசுவதை கவனித்துக்கொண்டிருந்த மற்றவர்கள் இவர்களையே பார்த்தனர். அன்னம் இருந்த பார்த்தவர்கள் அனைவரும் இவர்களையே பார்ப்பதை கவனித்து ஒரு அசட்டுத்தனமான சிரிப்பை உதிர்த்துவிட்டு சாப்பிட்டு எழுந்து சென்றனர்.


சமர் சாப்பிட்டு விட்டு நேராக ஆதவன் எப்பொழுதும் உன் புன்னகை முகம் இல்லாமல் இறுக்கமான முகத்துடன் வலம் வருபவன், இன்று முகத்தில் புன்னகையுடன் கண்ட ஆதவனுக்கு தான் பட்ட அடிகள் அனைத்தும் மறந்து போனது. அதே மகிழ்ச்சியுடன் அவனைப் பார்த்து "இந்த மாதிரி உன்னோட முகத்துல சந்தோஷம் மட்டுமே இருக்கணும்னு நான் ஆசைப்பட்ட நாள்கள் எவ்வளவோ! ஆனா அது எல்லா இன்னைக்கு நடந்து இருக்கு இப்போ நான் கீழே விழுந்து அடிபட்டு இருக்கிறது கூட எனக்கு பெருசா தெரியல! உண்மையாகவே அவ்வளவு சந்தோஷமா இருக்கேன்" என்று நெகழ்ச்சியாக கூறினான்.


"இனி ஒன்னோட ஃப்ரெண்டு முகத்தில் சந்தோஷத்தை மட்டும் தாண்டா நீ பார்ப்ப இவ்வளவு நாள் என்னோட மனசுக்குள்ள நிறையவிஷயங்கள் இருந்து இருக்கு! சின்ன சின்ன விஷயத்தை ரசிச்சு சந்தோஷப்பட முடியாமல் நான் ஏங்குன ஏக்கங்கள் நிறைய! அதை எல்லாத்தையும் உங்க எல்லாருகூடவும் சேர்ந்து அனுபவிக்க போறேன்" என்று ஒரு துள்ளலுடன் கூறி அவனை புன்சிரிப்போடு பார்த்திருந்தனர் ஆதவன் ஆதர்ஷினி பெற்றோரும்.

அப்போதுதான் அவர்களும் அங்கே இருப்பதை பார்த்து சிறுபிள்ளை போல் வெட்கம் கொண்டு வெளியே செல்ல முயன்ற, தன் எதிரே வந்து கொண்டிருந்த பவானியை கவனிக்காமல் இருந்துவிட அவர் தடுமாறி ஆதவன் மேலே விழுந்தாள். அதைக் கண்டு புன்னகை செய்தவன் "மச்சான் உடம்பு சரி இல்லாம இருக்கும் போதும் நல்லா என்ஜாய் பண்ணு" என்று நக்கலாக கூறினான்.


"ஏன் அண்ணா உங்க பொண்டாட்டி தான் அப்பப்போ பைத்தியம் மாதிரி இப்படிப் கிளம்புவா, இப்போ என்ன புதுசா நீங்களும் இப்படி ஆரம்பிக்கிறீர்கள் கொஞ்சமாச்சும் என்ன பார்த்தா உங்க யாருக்குமே பாவமா இல்லையா? அதை ஒரு ஃப்ரெண்டா இருந்து நான் பட்டதெல்லாம் போதாதா இப்போ உங்களுக்கு தங்கச்சியா இருந்து இன்னும் என்னென்ன படவேண்டியது இருக்கப் போகுதோ" என்று பவானி கூறினாலும் அவளால் அவன் மேலிருந்து எழ முடியவில்லை.


"என்னமா தங்கச்சி என்கிட்ட இவ்வளவு வாய் பேசுற ஆனா உன்னால என்னுடைய பிரண்டு மேல இருந்து எழும்ப முடியல போல, நான் தெரியாம தான் இருக்கேன் ஆனா நீ எழும்ப முடியாமல் இருக்கிறது காரணம் உன்னோட வருங்கால புருஷன்தான்! என்னன்னு அவன்கிட்டயே கேட்டுக்கோ" என்று தன் நண்பனையும் கோர்த்து விட்டு விட்டு வெளியே சென்றான்.


சமர் செல்லும்போதே பெரியவர்களும் சென்று இருக்க "உடம்பு பூராவும் அடிபட்டு இருக்கு லூசு மாதிரி என்ன பிடிச்சு வச்சு இருக்கீங்க! ஒழுங்கு மரியாதையா விடுங்க. மாத்திரையை போட்டு விட்டு தூங்கி எழும்போது அப்பதான் உடம்பு கொஞ்சம் நல்லா இருக்கும். இந்தமாதிரி சேட்டை எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் பாத்துக்கலாம் அமைதியா உட்காருங்க" என்று அதட்டி அவனிடம் இருந்து திமிறி வெளியே வந்தாள்.

ஆனால் அதற்குள் ஆதவன் தன் வருங்கால மனைவி கண்ணத்தில் ஆசை முத்தம் வைத்திருந்தான் விலகி நின்ற அவளைப் பார்த்து சிரித்தவன் "இன்னைக்கு உண்மையாலுமே என்னோட வாழ்க்கையில நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்! இனிமேல் ஆச தீர உண்மையா காதலிக்கவும் போறேன் எத்தனையோ தடவை உன்னை நான் நேர்ல பார்த்து இருந்தாலும் உன் மேல ஆரம்பத்துல ஆசை வந்ததே கிடையாது. என்னோட பிரண்டுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையும் அப்படிங்கற என்ன ஒரு பக்கம் இருந்தாலும் என்னோட தங்கச்சியோட பிரண்டா நீ எங்க வீட்டுக்குள்ள எல்லாம் வரும்போது உன்ன தப்பா பாக்க என்னோட மனசுக்கு கஷ்டமா இருக்கும். அதனாலேயே ஒன்னும் பெருசா கண்டுக்க மாட்டேன், ஆனா சில நேரங்கள்ல எண்ணி என ஒரு இயக்கமாக பார்க்கும் போது என்னை அறியாமல் உன் பக்கம் என்னோட மனசு சாய ஆரம்பித்தது. அப்போ நம்பி வீட்டுக்கு வர்ற பெத்தவங்களுக்கு துரோக செய்ய கூடாது அப்படி என்கிற எண்ணத்திலே அமைதியாக இருந்துவிட்டு என்னோட மனசை உன்னோட மனசும் என்னோட தங்கச்சி சரியா புரிஞ்சு வச்சிருக்கேன்! அதனாலதான் வீட்டில் பேசி கல்யாணத்துக்கு முடிவு பண்ணினா ஆனால் கல்யாணம் முடிவாகி இருந்தாலும் இதுவரைக்கும் உன்கிட்ட நான் சரியா பேசியது கூட கிடையாது. அதற்கு காரணம் சமர் வாழ்க்கை அப்படி என்கிற விஷயம் உனக்கு தெரியும்! இப்ப அவனோட வாழ்க்கை ரொம்ப நல்ல விதமாக அமைந்து விட்டது. இனி நானும் உன்ன ஆச தீர காதலிச்சு என்னுடைய அன்பு எல்லாத்தையும் காட்ட போறேன், அதோட சாம்பிள் தான் இந்த உண்மையான காதலோடு கொடுத்த முத்தம்! எனக்கு அடிபட்டு இருக்கலாம் இருந்தாலும் அந்த அளவுக்கு நான் படுத்த படுக்கையாக இல்லை அதை நியாபகம் வச்சுக்கோ" என்று ஆதவன் காதலாக கூறினான்.

அவன் இவ்வளவு பேசுவான் என்று எதிர்பார்க்காத பவானி அவன் தன்னுடைய காதலை கூறியதையும் கேட்டு வெட்கம் கொண்டு அங்கிருந்து ஒரே ஓட்டமாக ஓடி விட்டாள். ஏற்கனவே இரவில் ஒருவரும் தூங்காமல் இருந்த காரணத்தினால் வேறு எந்தவித சேட்டையும் செய்யாமல் அமைதியாக படுத்து தூங்க ஆரம்பித்து விட்டனர்.


மாலையில் விசாவை ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் அனைவரும் சுற்றிக்கொண்டிருக்க, விசா எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பதே இவர்கள் மூவருக்கும் சற்று குழப்பத்தை தந்தது. அவளோ இவர்கள் மூவரையும் பார்த்துவிட்டு இவர்கள் அருகில் வந்தாள்.


"தயவுசெஞ்சு என்ன மன்னிச்சிடுங்க நேத்து வரைக்கும் எனக்கு முழுசா மனசு மாறல, ஏன் இன்னைக்கு காலைல சாப்பாடு சாப்பிட்டுட்டு இருக்குற வரைக்கும் எல்லாரையும் எப்படி பழி வாங்கலாம் அப்படின்னு சொல்லி தான் யோசிச்சுக்கிட்டு இருந்தேன். ஆனால் சாப்பிட்டு ரூமுக்கு போகும்போது நீங்க மூணு பேரும் என்ன பத்தி பேசுறதே கேட்டுட்டு அங்கேயே ஓரத்திலிருந்து நீங்க பேசுறது கவனிக்க ஆரம்பிச்சேன், அப்ப கடைசியா ஆதர்ஷினி முருகன் அங்கிள் மேல வச்சிருக்கிற பாசத்தோட விளக்கத்தை கொடுக்கும் போது நிச்சயமா என நினைத்து எனக்கே கஷ்டமாக இருந்தது. ஏன் தெரியுமா இந்த மாதிரி யார் மேலயாவது காரணமில்லாமல் பாசம் வைச்சா அதற்கு எவ்வளவு கொச்சையான பேரு எல்லாரும் வைப்பாங்க அப்படின்னு எனக்கு தெரியும்! ஆனால் எந்த ரிலீசுக்காக பாசம் வச்சு இருக்கேன் அப்படின்னு எனக்கு இதுவரைக்கும் தெரியாது. ஆனாலும் அவர்களைப் பார்க்கும்போது எனக்கு ரொம்ப பிடிக்கும் ஒரு அப்பா ஸ்தானத்துல ஒரு ஃப்ரெண்ட் ஸ்தானத்தில் தான் வச்சிருக்கேன். அந்த விஷயத்தை என்ன காரணம்னு யாருக்கும் தெரியாமல் இருந்தாலும் அதுல ஒரு உன்னதமான அன்பு இருக்கும் அப்படிங்கிற விஷயத்தை அழகா தர்சினி சொல்லும் போதுதான் என்ன நெனச்சு எனக்கே கேவலமா இருந்துச்சு. நான் இவ்வளவு நாள் படுத்தின கொடுமை எல்லாத்தையும் யோசிச்சு அவன் எனக்கு வேற ஏதாவது ஒரு பெயர் கொண்டு வந்திருக்கலாம். இத வச்சி என்ன அசிங்கப்படுத்தி கூட இருக்கலாம். ஆனால் உண்மையான அன்புக்கு தப்பான பெயர் வரக் கூடாதுனு அவ எனக்கு புரிய வச்சிட்டா. இவ்வளவு நாள் நாம பண்ணியது எல்லாமே தப்புதாண்டா தப்பித்தவறி கூட இந்த மாதிரி தப்பு பண்ண மாட்டேன். அதே மாதிரி பண்ண ஒரு சில வேலைகளுக்கு ஆரம்பப் புள்ளியில் இருந்தே அவரை கஷ்டப் படுவதை பொறுக்க முடியாமல் இந்த மாதிரி பண்ணலாம், அந்த மாதிரி பண்ணலாம், அப்படின்னு நான் சொல்ல அவரும் இந்த மாதிரி செஞ்சா நல்லா இருக்கும் அந்த மாதிரி செஞ்சு அவன் கஷ்டப்படுவான் அப்படின்னு செஞ்சிட்டாரு, தயவு செய்து அவரை கொஞ்சம் மனுஷனா நடத்த பாருங்க. எல்லாருமே அவர் மேல கோவத்துல ஒதுங்கிப்போன கொஞ்சம் கொஞ்சம் அந்த குற்ற உணர்ச்சியே அவரை கொன்றுவிடும் உங்க யாருக்குமே அவரது விருப்பமில்லை அப்படிங்கற விஷயமே எனக்கு தெளிவா தெரியுது! மன்னிப்பு அப்படிங்கிறது பெரிய விஷயம் தான் ஆனால் அதற்காக உடனே மன்னிச்சுக்கோங்க அப்படின்னு நான் சொல்லல, அதே மாதிரி மன்னிக்காமல் இங்கே அப்படின்னு சொல்லல உலகத்திலேயே மிகப் பெரிய கொடிய நோய் குற்ற உணர்ச்சி தான் அது ஏதாவது ஒரு மனுஷனா தாக்கினா வரிசையாய் எல்லா நோயுமே தாக்க ஆரம்பித்து அவர் மரணப்படுக்கையில் கொண்டு விட்டுரும். இது என்ன விட உங்க எல்லாருக்குமே ரொம்பவே தெரியும் அப்படின்னு எனக்கு தெரியும். அதனால கொஞ்சம் யோசிச்சு பாருங்க என்னோட அப்பா அம்மா என்னை கூட்டிட்டு போறது வந்துகிட்டு இருக்காங்க நான் கெளம்புறேன்" என்று கூறி அவர்கள் பதிலை எதிர்பார்க்காமல் சென்றுவிட்டாள்.



அவள் பேச ஆரம்பிக்கும்போதே இன்று என்ன புது பிரச்சினை கிளப்ப போகிறாளோ என்ற எண்ணத்தில் அனைவரும் அங்கே வந்திருக்க, அவள் பேசிய அனைத்து விஷயங்களையும் முழுமையாக கேட்டு அவர்கள் மனதில் "வயசுப் பிள்ளை இனியாச்சும் இதோட வாழ்க்கையில சந்தோசமா இருக்கணும்" என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டனர். அதேசமயம் அவள் கூறிய விஷயத்தை யோசிக்கவும் அவர்கள் மறக்கவில்லை.


ஆனால் காலம் தானே அனைத்துக்கும் மருந்தாக இருக்க முடியும் அதன்பொருட்டு அவர்களும் நடக்கும் அனைத்தையும் காலத்தின் கைகளிலேயே விட்டு விட்டு அமைதி காத்தனர்.

மாலை விசா கூறியது போல அவள் பெற்றோர் வந்து விட அவளும் அவர்களுடன் சென்று விட்டாள் அது போலவே ஆதவன் குடும்பமும் மாலை அவர்கள் வீட்டிற்கு கிளம்பி சென்றுவிட்டனர். போகும் போது அவனை பார்த்து "டேய் கொஞ்ச நாளைக்கு நீ தோட்டத்துக்கு வர வேணாம். கையெல்லாம் ஒருவாரா சரியான பிறகு வந்தா போதும்! அதே மாதிரி அங்க வந்து சும்மாதான் இருக்கணும். நீ எப்போ முழுசா நல்லாயிட்ட அப்படின்னு எனக்கு தோணுதோ, அப்ப நான்தான் உன்னை நான் அங்கு ஏதாவது வேலை செய்ய விடுவேன். அதுவரைக்கும் எந்த வேலையும் செய்ய விடமாட்டேன், ஞாபகம் வச்சுக்கோ" என்று அன்பு கட்டளை இட்டே அனுப்பி வைத்தான்.


அப்படியே நேரங்கள் கடந்து இரவும் வந்து விட அனைவரும் சாப்பிட்டு உறங்க சென்றனர் சமர் மாத்திரைகளை போட்டுவிட்டு ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்று விட்டான். அவன் முகத்தை பார்த்த ஆதர்ஷினி அமைதியாக அவன் நெற்றியில் முத்தம் வைத்து அவனை அணைத்த படி படுத்து விட்டாள்.

இங்கு அருள் தன் அறையில் தன் மனைவி கார்த்திகாவை தன்மடி மீது அமர வைத்து இறுக்கமாக கட்டி பிடித்து இருந்தான். "கார்த்தி எல்லா பிரச்சினையும் முடிஞ்சிடுச்சு தானே! இனி யாரோட வாழ்க்கையிலும் பிரச்சனை வராமல் சந்தோசமா இருப்பாங்க தானே?" என்று கேட்டான்.

அவன் முகத்தை கைகளால் ஏந்திய கார்த்திகா "பிரச்சனை இல்லாத வாழ்க்கையே கிடையாது இருந்தால் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும், அதை எல்லாரும் எப்படி எப்படி கடந்து போறது தான் வாழ்க்கை அதனால பிரச்சனை வரவே செய்யாது, அப்படின்னு நம்பாதே! என்ன பிரச்சனை வந்தாலும் எல்லாரும் ஒற்றுமையா இருந்து அந்த பிரச்சனையை சரி பண்ணுவோம் அப்படிங்கிற நம்பிக்கை மட்டும் வை எல்லாம் சரியா போயிடும். இப்போ உன்னோட மனசுல ஒரு நிம்மதி இருக்கா அதையே நிம்மதியுடன் அந்த நாட்களை கடத்து இன்னும் இந்த வீட்டிலேயே ஒரு சில பிரச்சனைகளை சரியாகாம தான் இருக்கு அதையும் கூடிய சீக்கிரம் அக்கா சரி பண்ணிடுவா! ஏன் நான் என்னதான் இருந்தாலும் நான் வயசுல அவளை விட சின்ன பிள்ளை அப்படி என்கிற விஷயத்தை அடிக்கடி நிரூபித்து காட்டுகிறேன். அளவுக்கு மீறி கோபப்பட்டு ஏதாவது ஒரு பிரச்சினையை எடுத்து வைக்கிறேன் ஆனா அக்கா அப்படி கிடையாது விஷயத்தையும் ரொம்பவே யோசிச்சு பொறுமையா முடிவெடுக்கிறா, அதனாலதான் பிரச்சனை பெருசா காண தடுக்க முடியாது. நீ கவலையே படாதே இனி இந்த வீட்டில் ஏதாவது பிரச்சனைகள் வந்தாலும் அது ரொம்ப நேரம் நீடிக்கவில்லை உடனே சரி பண்ணிடலாம்" என்று தன் கணவனுக்கு ஆறுதல் கூறினாள்.

அவள் நெற்றியில் முத்தம் வைத்த அருள் "நிச்சயமா உன்ன மாதிரி ஒரு பொண்டாட்டியும் இந்த மாதிரி ஒரு குடும்பம் இருக்கும் போது எந்த பிரச்சனையும் வராது. அப்படியே வந்தாலும் அது பனி போல விலகி விடும் அப்படிங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு! இவ்வளவு நாள் என்ன தான் வேலைகளை பார்த்து இருந்தாலும் அண்ணனை நினைச்சு தான் கவலையா இருந்துகிட்டு இருந்துச்சு. இனி அந்த கவலை பெருசா இருக்காது, ஆனாலும் அண்ணனும் ஆதவன் அண்ணனும் தனியா எல்லாத்தையும் சமாளிக்கிறது கஷ்டம் அவங்களுக்கும் கொஞ்ச நாள் கூட மாட உதவி பண்ணனும்" என்று கூறி இன்னும் இருக்கமாக அவளை அணைத்துக்கொண்டான்.

"உன்னோட நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதாக நடக்கும் கவலை படாம நிம்மதியா தூங்கு நான் எப்பவுமே உன் கூடவே இருப்பேன்" என்று அவனுக்கு அனைத்து விஷயத்தையும் கூறியவள், அவனை தூங்குவதற்கு தயார் படுத்தினால் அவனும் அவளை அணைத்தபடியே தூங்கிவிட கார்த்தி மனதில்தான் 'மாமாவும் தாத்தாவும் எதுவுமே பேசாம அமைதியா இருக்கிற குற்றவுணர்ச்சி அப்படின்னு எடுத்துக்கவா இல்ல புதுசா ஏதாவது கிளப்ப போறாங்க அப்படினு யோசிக்கவே இல்லையே! இந்த சந்தேகமும் எனக்குள்ள இருந்துக்கிட்டே இருக்குது ஆனா இதைப்பத்தி அக்கா கிட்ட கேட்கும்போது அக்கா ஒரு மார்க்கமா சிரிக்க மட்டும் செஞ்சு அதுல இருந்தே இன்னும் ஏதோ ஒரு விஷயம் இருக்குன்னு எனக்கு புரிஞ்சிடுச்சு அருள். ஆனா அத இப்பவே உன் கிட்ட சொன்னா நிச்சயமா இன்னைக்கு நைட்டு நீ தூங்க மாட்டேன் நடக்கும்போது நீயே பார்த்துக்கோ' என்று எண்ணிக்கொண்டு அவளும் கண்ணை மூடி தூங்க ஆரம்பித்தாள்.


கார்த்தி நினைத்தது போலவே மறுநாள் தாத்தாவும் தந்தையும் ஒரு சில விஷயங்களை அனைவரின் முன்பும் கூறினார்கள் அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த சிலர் என்றால் கோபம் அடைந்த சிலர் அப்படி என்னதான் அவர்கள் செய்தார்கள் என்பதனை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் தங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தோழி என்னுடைய பதிவுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.
 
Top