• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

விதையாய் விழுந்து மரமாய் எழுந்த மலரே 2

Pandiselvi

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 30, 2021
Messages
33
அத்தியாயம் 2

சித்தார்த்தும் சரணும் ஐசியூ அறைக்கு வெளியே அமுதினி கண் விழிக்கும் நேரத்திற்காகக் காத்திருந்தார்கள்.

நர்ஸ் வந்து மருந்து சீட்டைக் கொடுத்து இந்த மருந்து வாங்கிட்டு வாங்க டிரிப்ஸ் போடனும் என்றார்.

அதை சரண் வாங்கி ஓகே வாங்கிட்டு வந்துருறேன் என்று கிளம்பவும் சரண் இந்தா எடிஎம் கார்டு என்று சித்தார்த் நீட்டவும் என்கிட்ட மணி இருக்கு எங்கம்மாவ பாத்துக்க என்னால முடியும்..

என்ன பேசுற சரண். உன் அம்மாவா.. அப்போ நான் யாரு என்றார் முகத்தில் சினமேற..

உங்க பணம் எனக்குத் தேவையில்லை என்று வெடுக்கென்று சொல்லி விட்டு கிளம்பி விட்டான்.

இவன் ஏன் இப்படி பேசுறான். பொறுப்பானவன். எல்லாத்தையும் புரிந்து கொள்பவன் என்று நினைத்தால் இவனே இப்படி இருந்தால் ஆதிஷ் க்கு எவ்வாறு சொல்லி புரிய வைப்பது. ஒரு நாளில் என்னை வெறுக்கும் அளவிற்கு நான் என்ன பண்ணேன் என்று உள்ளுக்குள் தனியாக பேசிக் கொண்டிருந்தார். கண்ணாடி வழியே தன் மனைவியைப் பார்த்து உன் கிட்ட எனக்கு எந்த உரிமையும் இல்லனு உன் பையன் சொல்லிட்டு போறான். என் மேல் என்ன தவறு இருக்கிறது. நீ சீக்கிரம் எழுந்து வா அம்முமா. என்னோட ஒரே ஆறுதல் நீ மட்டும் தான் என்று அவர் கண்ணாடி வழியாக தன் மனைவியிடம் பேசிக் கொண்டிருக்கையிலே சரண் மருந்து வாங்கி வந்து நர்ஸிடம் கொடுத்து விட்டு சித்தார்த்தைக் கண்டு கொள்ளாமல் சேரில் அமர்ந்தான்.

அதற்கு மேல் அவன் ஒதுக்கலைத் தாங்காதவர் அம்மாவை பாத்துக்கோ நான் கிளம்புறேன் என்று கிளம்பி விட்டார்.

அங்கிருந்து கிளம்பி நேராக சென்றது திருவான்மியூர் போலீஸ் கமிஷ்னர் அலுவலகம்,சென்னை. அந்த நேரத்தில் அவரை அங்கு எதிர்பாராத காவலாளி ஏதாவது முக்கியமான விஷயமா சார் என்று ஓடி வந்தான். ஆமா என்று விட்டு என்னை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். ஒரு கேஸ் விஷயமா சில பைல்ஸ் லாம் பார்க்க வேண்டியிருக்கு என்று உள்ளே சென்றார்.

அங்கு சென்று சித்தார்த் கிருஷ்ணா, ஐஜி என்று பொறிக்கப்பட்ட அறைக்குள் நுழைந்து சேரில் அமர்ந்து தலையை டேபிளில் சாய்த்து கண்ணை மூடிக் கொண்டார். மூடியக் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. அமுதினி தன் வாழ்வில் வந்ததிலிருந்து ஒரு நாள் கூட ஸ்டேஷனில் இருந்ததில்லை. எவ்வளவு வேலை என்றாலும் எவ்வளவு நேரமானாலும் வீட்டிற்குச் சென்று விடுவார்‌. இன்றோ அவள் இல்லாமல் எதுவும் இல்லாதது போல் அலுவலகத்தில் அமர்ந்து விட்டார்.

ஹாசினி மற்றும் ஆதிஷ்யை அழைத்துச் சென்ற வசந்த் நேராக சித்தார்த் வீட்டிற்குச் சென்றனர். ஹாசினி நேராக அவளது அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள். ஆதிஷ்க்கு இன்னும் அழுகை நின்றபாடில்லை.

வசந்த் மற்றும் ஆனந்தி இருவரும் சந்திரமதியிடம் மருத்துவர் சொன்னதை சொல்லவும் அவர் தன் மருமகள் எந்தக் குறையுமில்லாமல் வீடு வந்து சேர வேண்டும் என்று அவசரமாக கடவுளிடம் ஒரு வேண்டுதலை வைத்தார்.

ஹாசினி என்ன நினைக்குறானேத் தெரியலைம்மா. ஆதிஷ் அழுகையை நிறுத்தவே மாட்டேங்குறான் என்றாள் ஆனந்தி வருத்தமாக.

அவனுக்கு எத்தனை வயசானாலும் அவன் அம்மா வேனும். ரெண்டு பேர் கிட்டயும் நான் பேசுறேன். புள்ளைங்க வளர்ந்துட்டாங்க. அவங்களுக்கு உண்மை தெரிய வேண்டிய நேரம் வந்துருச்சு. மத்தவங்க ஒன்னுக்கு ரெண்டா சொல்றதுக்கு முன்னாடி நாமளே பக்குவமா சொல்லி புரிய வைக்கனும். அதான் எல்லாருக்கும் நல்லது என்றார் சந்திரமதி.

ஆமாமா. நீங்க ரெண்டு பேரையும் உட்கார வச்சு பேசுங்க என்றான் வசந்த். நாங்க காலையில் வருகிறோம் என்று வசந்த் குடும்பத்தினர் கிளம்பி விட்டனர்.

ஹாசினி அதுவரை அடக்கி வைத்திருந்த மொத்த அழுகையும் அழுது தலையணையை நனைத்துக் கொண்டிருந்தாள். இத்தனை நாளாக தன் தந்தையின் செல்ல மகள் என்று நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு அவர் உன் தந்தையே இல்லை.. பின் எப்படி செல்ல மகள் என்ற எண்ணமே அவளை ஏதேதோ நினைக்க வைத்தது. ஆனால் அவரோ இதுவரை அது போல் ஒரு செயலில் ஏன் ஒரு வார்த்தையில் கூட காண்பித்தது இல்லை. அதை விட ஒரு இடத்தில் கூட ஏன் விளையாட்டுக் கூட விட்டுக் கொடுக்காத தம்பியே தன்னை நீங்க யாரோ என்றது முகத்தில் அடித்தாற் போல் இன்னும் இன்னும் வலித்தது.

வீட்டில் எல்லாரையும் விட தன் மேல் தான் தந்தைக்கு அதிக பாசம். வரும் போது தான் அவரை அந்நியப் பார்வை பார்த்ததும் அவர் கண்களில் தெரிந்த வலியையும் கண்டவளுக்கு அதில் பொய்யான பாசம் இருப்பது போல் தெரியவில்லை. இவன் கேட்ட கேள்விக்கு அவர் என்ன செய்வார் என்று மனசாட்சிக் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் அவர் என் அப்பா இல்லையா என்று மனம் அதையேப் பிடித்துத் தொங்கிக் கொண்டு இருந்தது. அவர் தன் அப்பா இல்லை என்று நினைக்க நினைக்க அழுகை மேலும் அதிகரித்தது. அழுது கொண்டிருந்தவள் அறைக்கதவு தட்டும் சத்தம் கேட்டு கண்ணீரைத் துடைத்துக் கொண்டு போய் கதவைத் திறந்தாள்.

வெளியே அவள் பாட்டி சந்திரமதி தான் நின்று கொண்டிருந்தார்.

அம்மு வாடா சாப்பிடலாம் என்று அழைத்தார். வீட்டில் எல்லாரும் ஹாசினியை அம்மு என்று தான் அழைப்பர்.

இல்ல பாட்டி வேண்டாம் என்றாள் தலை குனிந்து கொண்டு.

சாப்பிடாம இருந்தா எல்லாம் சரியாகிடுமா. உன் அம்மாவுக்கு ஒன்னும் ஆகாது. இப்போ வா சாப்பிட என்று அழைக்கவும் அவர் மீதுள்ள மரியாதையால் அவர் பேச்சைத் தட்டாமல் அவர் பின்னோடு சென்றாள். அவள் வரும் முன்னே ஆதிஷ்யை சாப்பிட வைத்து ஹாலில் அமர வைத்திருந்தார்.

ஹாசினி சென்று பெயருக்கு கொரித்து விட்டு அங்கிருந்து நகரும் வேளையில் அம்மு இங்க வா வந்து உட்காரு என்று அழைக்கவும் ஆதிஷ் அவரின் இடது புறம் அமர்ந்திருக்க ஹாசினி சென்று அவரின் வலது புறம் அமர்ந்தாள்.

இதுவரைக்கும் அம்மு உன்னை அக்கா மாதிரியா பார்த்துருக்கா. உங்க அம்மாக்கு அடுத்த ஸ்தானத்துல இருந்து உன்மேல அவ்வளவு பாசம் வச்சவள எப்படி உன்னால நீ யாரோனு பேச முடிஞ்சது ஆதிஷ் கண்ணா என்றார்.

அவன் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தான். ஆனால் ஹாசினியால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. சிறுவயதில் இருந்து அவனை தம்பி தம்பி என்று அவன் மேல் பாசம் வைத்ததெல்லாம் ஞாபகம் வந்து அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

அம்மு.. உன் அப்பா உன் மேல எவ்வளவு பாசம் வச்சுருக்கான். மூனு பேர் கிட்டயும் அவன் பாகுபாடு பாத்ததேயில்லை. அம்மா மாதிரி தான இதுவரைக்கும் இவனைப் பார்த்துக்கிட்ட?. அப்போ அவன் தப்பு செய்யும் போது அவனுக்கு சொல்லி திருத்தாம ஒதுங்கிப் போனும்னு நினைக்குறது தப்பில்லையா.

நீங்க எல்லாம் நினைக்கிறது மாதிரியோ இல்லை மத்தவங்க சொல்ற மாதிரியோ உங்க அம்மாவும் அப்பாவும் ஒரு ஆண் துணை வேனும்னோ ஒரு பெண் துணை வேனும்னோ இந்த வாழ்க்கைல நுழையல.

உங்க அப்பா ஒரு பெண்ணுக்குத் தாலி கட்டி கணவனாகும் முன்னே தந்தையானவன். உங்க அம்மா தன் பிள்ளைக்களுக்கு தந்தையானவனை தான் கணவனா ஏத்துக்கிட்டா. உங்க அம்மாவுக்கு மறுமணம். இந்த சமூகத்துல மறுமணம் செஞ்சுக்கிட்டு வாழ்வது எவ்வளவு கஷ்டம் தெரியுமா. எத்தனை பேச்சு வாங்க வேண்டியது வரும். அதுவும் ஒரு பெண்ணுக்கு மறுமணம் என்பது எவ்வளவு பெரிய விஷயம். அந்த வாழ்க்கைக்குள்ள அதுவும் இரண்டு குழந்தைகளோட நுழைஞ்சு இவ்வளவு தூரம் கொண்டு வந்துருக்கானா உங்க அம்மாவும் அப்பாவும் எவ்வளவு தூரம் கஷ்டப் பட்டுருப்பாங்க மனசளவுல. உங்களுக்குலாம் புரியலேல. அவங்க வாழ்க்கைக்கு விதை போட்டதே நீ தான் அம்மு என்று இருபது வருடங்களுக்கு முன் சித்தார்த்-அமுதினி வாழ்க்கையில் அம்மு எனும் விதை விழுந்து அமுதினி எனும் மரமாய் குடும்பமாகிய மலரின் கதையைக் கூற ஆரம்பித்தார் அந்த பெரிய மனிதி.

இவர் கூற ஆரம்பித்த அதே நேரம் சித்தார்த்தும் சரணும் தாங்கள் கடந்து வந்த வாழ்க்கையின் நினைவுகளில் மூழ்கினர்.


மறுமணப் பேச்சு..!
ஆணுக்கு அது அவசியம்
ஆனால் பெண்ணுக்கு
ஆண் ஆசையா?..

ஒரு ஆணின் முயற்சியில்
மறுமணம் நடந்து
அவன் வாழ்வில் நுழைந்த
பெண்ணின் மூலம்
பிறக்கும் குழந்தை
மட்டும் தான்
அவன் வாரிசா?..

ஏன் குழந்தைகள் வைத்துள்ள
ஒரு கைம்பெண் அல்லது
விவாகரத்தான பெண்
ஒரு ஆணை மறுமணம்
செய்தால் அவள்
குழந்தைகள் அவன்
வாரிசாகாதா?..

ஒரு ஆணின் முயற்சியில்
நடைபெறும் மறுமணத்தில்
நியாயமாகவும் இயல்பாகவும்
இருக்கிறது என்று சொல்லும்
சமூகம்
ஒரு பெண்ணின் முயற்சியில்
நடைபெறும் மறுமணத்தில்
உள்ள நியாயத்தை
ஏற்றுக்கொள்ள மறுப்பதேனோ?..

ஆண்டவன் தோற்றம் கொண்ட
சில ஆண்கள் மறுமணம்
செய்ய முன் வந்தாலும்
இந்த சமூகம் அவர்களை
நிம்மதியாக வாழ விடுவதில்லை
தோற்றாவிடிலும் பரவாயில்லை
தூற்றாமல் கடந்தாலே போதும்
அவர்கள் வாழ்வதற்கு..

கழுத்தில் தாலி வாங்கி
தாரமாகும் முன்னே
தன் பிள்ளைக்குத் தந்தையாகி
தனக்கும் பிள்ளைகளுக்கும்
தாயுமானவனாய் மாறியவனிடம்
உள்ளம் பறி கொடுத்து
இரு உள்ளங்கள் இணைந்து
குடும்பமாகி தனிமரமாய்
நின்றவளை தோப்பாக்கிய
ஆண்டவனின் தோற்றமானவன்
சித்தார்த் கிருஷ்ணா..

தாலி கட்டி கணவன் எனும்
ஸ்தானம் வரும் முன்னே
தகப்பன் எனும் ஸ்தானம் தந்து
தன் வாழ்வில் ஒரு வண்ணத்தில்
இருந்த வானவில்லை
ஏழு வண்ணங்களாய் மாற்றி
வண்ணமயமாக்கி
சிறு விதையாய் விழுந்து
மரமாய் எழுந்த
மலரினும் மென்மையானவள்
அமுதினும் இனிமையானவள்
அமுதினியாழ்..

இது சித்தார்த்-அமுதினியாழின்
மறுமண வாழ்க்கைக் கதை..

மறுமணம் மாபெரும் தப்பல்ல
மாற்றான் கைபட்டதால்
பெண் ஒன்றும் இழிவல்ல..
திருமணம் தோற்பதால் வாழ்க்கை
ஒன்னும் இருளல்ல
மறுமணத்தைத் தேடும் பெண்
மட்டமான பொருளல்ல..

இது பெண்ணியமல்ல
ஒரு பெண்ணின்
உணர்வுகளின் போராட்டம்..



தொடரும்..


இந்தக் கதை முக்கால்வாசி பிளாஷ்பேக்ல தான் போகும். அடுத்த அத்தியாயத்தில் இருந்து பிளாஷ்பேக் ஆரம்பம்..
 

Attachments

  • 1635771027189.jpg
    1635771027189.jpg
    235.9 KB · Views: 28
Top