அத்தியாயம் 44
அந்நாளின் நினைவில் சித்து மூழ்கியிருக்க, "என்ன உங்களுக்கு அப்பவே தெரியுமா?. நான் எவ்வளவு பெரிய துரதிஷ்டசாலி. அடிபட்டு தான் உங்ககிட்ட வரனும்னு இருந்துருக்கு போல" என்றாள் கலங்கிய விழிகளோடு. ஒருபக்கம் சந்தோஷமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் எத்தனை கஷ்டங்களுக்கு பின் அவனிடம் வந்து சேர்ந்ததை நினைத்து வருந்தினாள்.
"அப்போ அது காதலா என்னனு கூட தெரியல அமுதி. உன் கண்ணீர் என்னமோ பண்ணுச்சு. அதுக்கப்புறம் உன்னை இங்க தான் பார்த்தேன். உன் வெறுமை உன் தனிமையை பார்க்கும் போது கூட பேசலாமானு நெனைப்பேன். ஆனா.. தயக்கத்துலே பேசாம விட்டுட்டேன்"
"ரொம்ப பீல் பண்ணீங்களா"
"ம் கொஞ்சம் ரொம்பவே. ஐஸ்க்ரீம் மிஸ்ஸாயிடுச்சேனு ரொம்ப பீல் பண்ணேன்" என்று முகத்தை பொய்யாய் சோகமாக வைக்க,
"அச்சோ" என்றவள் சிறிதுநேரம் கழித்தே அவன் எதைக் கூறுகிறான் என்று புரிய, "அடப்பாவி.. நான் எவ்வளவு பீல் பண்ணி சொல்லிட்டு இருக்கேன். நீங்க என்னாடானா ஐஸ்கீர்ம் மிஸ் ஆகிடுச்சேனு பீல் பண்ணிங்கேளா. ம் ம் போங்க நான் கோவமா போறேன்" என்று அவனிடமிருந்து விலகியவளை திரும்புவும் இழுத்து அணைத்துக் கொண்டு, "ஏய் சும்மா சொன்னேன் அமுதி.. உனக்குத் தெரியாதா நான் எதுக்கு பீல் பண்ணிருப்பேனு" என்று சிரித்தான்.
அவளும் அவனை சீண்ட எண்ணி, "இது தெரிஞ்சுருந்தா அன்னைக்கே அந்த ஐஸ்கிரீமை உங்ககிட்ட தந்துருப்பேன். இப்டி வந்து மாட்டிருக்க மாட்டேன்"
"அடிப்பாவி நான் சொன்னதை எனக்கே திருப்பி அனுப்புறியா?. நல்லா தேறிட்ட போ" என்றதும், "எல்லாம் உங்க கூட சேர்ந்ததால தான்" என்று சிரித்தாள்.
"ஏய் நான் ரொம்ப சமத்துப் பையன்டி.. எங்க அம்மாட்ட கேட்டுப் பாரு"
"யாரு நீங்க சமத்தா?.. உங்க அம்மாட்ட கேட்டா அப்படிதான் சொல்லுவாங்க. உங்கத்தை கிட்ட கேட்டா ஒருநாள் முழுக்க சொல்லுவாங்க நீங்க ஊர்ல பண்ண அராத்துலாம்"
"கொஞ்ச நேரம் தான பேசிட்டு இருந்தேங்க. அதுக்கே எல்லாத்தையும் ஒப்பிச்சுட்டாங்களா.. அவங்க வரட்டும் பார்த்துக்கிறேன்"
"ஆமா ஆமா அய்யாவை பத்தி எல்லா டீடெய்ல்ஸ்ம் குடுத்துட்டாங்க. இனிமேலாம் நல்ல பையனாட்டம் நடிக்க முடியாது. ஆனா அவங்க பேசும் போது உங்கள்மேல இருக்குற பாசம் அப்டியே கண்ணுல தெரிஞ்சது. அதுனால தான் அவங்ககிட்ட உங்களை பேச சொன்னேன் அன்னைக்கு"
"ம் ஆமா அமுதி.. அம்மாட்ட இருந்ததை விட அத்தை கிட்ட தான் அதிகமா இருப்பேன். என்னை இடுப்புல சுமந்துட்டே அலைவாங்க சின்ன வயசுல. அவங்ககிட்ட பேசனும். அனுவுக்கு ஏதாவது ட்ரீட்மெண்ட் பண்ணனும்னா இங்க வர சொல்லனும்"
"ம் பேசுங்க. ஊர்ல இருந்து வந்ததுக்கப்புறம் பேசவே இல்லை"
"ம் பேசுறேன்.."
"சரி அப்படியே பேச்சை மாத்தாதிங்க. சொல்லுங்க.."
"என்ன சொல்லனும்?. அதான் எல்லாமே சொல்லிட்டேனே"
"எனக்கு டவுட்.. என்னை முன்னாடியே உங்களுக்கு பிடிச்சதால தான் கல்யாணம் பண்டிக்கிட்டேங்களா? இவ்வளவு பாசமா இருக்கேங்களா?" என்றாள்.
"ப்பா இந்த பொண்ணுங்களுக்கு மட்டும் எங்கிட்டு இருந்து தான் சந்தேகம் வருமோ. மனசை தொறந்து காண்பிச்சாலும் நம்புறது கிடையாது. வேற எங்கயாவது ஒழிச்சு வச்சுருக்கியானு கேட்க வேண்டியது"
"அது அப்படித்தான். பேச்சை மாத்தாம சொல்லுங்க"
"ஏன் அமுதி நம்ம கல்யாணம் எந்த சூழ்நிலைல நடந்துச்சுனு உனக்கு மறந்து போச்சா?. உண்மையை சொல்லனும்னா அந்த சூழ்நிலைல எந்தப் பொண்ணா இருந்திருந்தாலும் இந்த முடிவை தான் எடுத்துருப்பேன். நீ கேட்கலாம் அப்போ யாரா இருந்தாலும் இது மாதிரியே சந்தோஷமா தான் இருந்திருப்பியானு. உன்னை பார்த்தது ரசிச்சதுலாம் பாஸ்ட் அமுதி. அது நினைவுகளா மனசுக்குள்ள சாகுற வரைக்கும் இருக்கத்தான் செய்யும். இல்லைங்கல.. அதுக்காக அதை நினைச்சுட்டு என்னை நம்பி வர்ற பொண்ணோட வாழ்க்கையை அழிக்க மாட்டேன். அவளுக்கான இடத்தை என் வாழ்க்கைல குடுத்துருப்பேன். இப்போ நீங்குறதால அந்த நினைவுகளை தூசி தட்டி வெளில எடுத்துருக்கேன் அவ்வளவு தான்" என்று அவன் மனதில் பட்டதை சொல்லி முடித்தான்.
'எவ்வளவு எதார்த்தமா பேசுறாங்க. நிஜமாவே நான் கொடுத்து வைத்தவள் தான்' என்று நினைத்துக் கொண்டாள்.
"அப்படியா.." என்றாள்.
"ஏய் நம்புமா.. ஒருவேளை அதுக்குத்தான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேனா உன்னை பார்த்த அன்னைக்கே சொல்லிருக்க மாட்டேனா.. அண்ணனும் தங்கச்சியும் ஒரே கேள்விய கேளுங்க. வசந்தும் இதே தான் கேட்டான். அந்த இடத்துல அமுதிக்கு பதில் வேறு யாராவது இருந்தா இந்த முடிவை எடுத்திருப்பியானு? அவன்கிட்டயும் இதே பதில் தான் சொன்னேன். நம்பிக்கை இல்லனா வசந்த் கிட்ட கேட்டு பாரு" என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டான்.
அவளுக்குத் தெரியாதா அவன் சிறு பார்வை கூட தவறாக அவள் மேல் படவில்லை என்று. திருமணத்திற்கு பின்கூட என் மனம் ஏற்றுக்கொள்ள எனக்கு இடமளித்து தள்ளி இருந்தவனாயிற்றே. "உங்கமேல நம்பிக்கை இல்லாம அண்ணாகிட்ட கேட்பேனா" என்ற பிறகே அவன் முகத்தில் சிரிப்பு வந்தது.
அதன் பின் ஒரு வாரமாக கொஞ்சம் கவனமாகவே இருந்தான் சித்தார்த். சரண் மற்றும் ஹாசினியின் பள்ளியிலும் சொல்லி வைத்து விட்டான். ஒரு வாரம் மட்டும் பள்ளி விடும் நேரம் நாங்களே வந்து அழைத்துக் கொள்கிறோம் என்று விட்டான். அதன்பின் பள்ளி விடுமுறை வந்துவிடும் என்பதால் வீட்டில் இருப்பார்கள் அதனால் பயப்பட வேண்டாம் என்று நினைத்தான். அகிலனுக்கு தெரியாமல் அவனின் நடவடிக்கைகளை நோட்டமிட ஆள் வைத்திருந்தான். ஆனால் நினைத்தது போல் ஒருவாரம் அகிலன் எந்த பிரச்சனையும் செய்யவில்லை. 'ஒருவேளை அன்னைக்கு பேசனதுல பயந்துட்டானோ?' என்று கூட நினைத்தான் சித்தார்த்.
இதோ அதோ என்று அமுதியின் ஊர்த்திருவிழா தொடங்கும் நாளும் அருகில் வந்துவிட்டது. அவர்கள் ஊருக்குச் சொல்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தான் சித்.
"சித்து உனக்கு லீவ் இருக்குமா? திருவிழாவுல கலந்துக்க முடியுமா?" என்றார் சந்திரமதி.
"இல்லைமா என்னால இப்போ நாலு நாளுலாம் லீவ் போட முடியாது. உங்களுக்கு மட்டும் டிக்கெட் போட போறேன். நீங்க போயிட்டு வாங்க. நான் ஒருநாள் மெயின் பங்ஷனுக்கு வர்ற முடிஞ்சா வர்றேன். நான் மாமாகிட்ட சொல்லிக்கிறேன்"
"ஓ சரி.. அப்போ நாங்க ரெண்டு மூனு நாள் திருவிழாவுக்கு முன்னாடியே ஊருக்கு கெளம்பனும். பசங்களும் அங்க கொஞ்சம் நாள் ஜாலியா இருப்பாங்கள. அவங்களுக்கும் லீவு தான இப்போ. எனக்கும் அங்க போனா பொழுது போகும். இங்க வீட்லயே அடைஞ்சு கெடக்கேன்".
"ம் ஓகே மா"
"அப்போ நீ மட்டும் தான் வீட்ல இருப்ப" என்று அவனை விட்டு செல்ல கொஞ்சம் வருந்தினார். 'என்ன செய்ய அவன் வேலையும் அப்டி' என்று நினைத்துக் கொண்டார்.
'ஓ ஆமால' என்று அதன் பின்னே சித்துவின் கண்கள் அமுதியை நோக்கியது. அவளும் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அதுவரை அவனும் வருவான் என்று நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு அதன் பின்னே உரைத்தது அவள் கடமைகளை பற்றி.
'நீயும் போறியா.. ஒரு வாரம் தனியாவா' என்று அவன் கண்களில் அத்தனை ஏக்கம்.
"அதுக்கென்னமா நீங்க மட்டும் போயிட்டு வாங்க. நான் என்ன சின்ன குழந்தையா இருந்துப்பேன்" என்று மனசேயில்லாமல் சொன்னான்.
சந்திரமதிக்கும் இருவரின் ஏக்கமும் புரிந்தது. 'அமுதியை இருக்கச் சொல்லலாமா?' என்று கூட யோசித்தார். 'பாவம் அவளுக்கும் திருவிழாவில் கலந்து கொள்ள ஆசையிருக்குமே. என்ன செய்யலாம்' என்று யோசித்தார்
எப்போதும் ஊர்த்திருவிழாவில் மட்டும் கலந்து கொள்ளாமல் இருக்காதவள் இன்று அவனுக்காக, "அவங்க மட்டும் தனியாக இருக்கனும் அத்தை. அதுனால நீங்க முதல்ல கிளம்புங்க. அவருக்கு லீவ் என்னைக்கு இருக்கோ நாங்கள் ரெண்டு பேரும் வர்றோம்" என்றாள் அமுதி.
அவளின் புரிதலை மெச்சிக் கொண்டார் சந்திரமதி.
சித்துவுக்கு அப்போது தான் கண்ணில் ஒளி வந்தது. ஒருபுறம் சந்தோஷமாக இருந்தாலும் மறுபுறம் தனக்காக அவளின் சந்தோஷத்தை இழக்க வேண்டுமா என்று, "அமுதி எனக்காக எதுக்கு அமுதி. நீயும் போயிட்டு வா. அப்புறம் பசங்க தேட ஆரம்பிச்சுருவாங்க. அழ ஆரம்பிச்சுட்டா பாவம்.. படக்குனு இங்கிருந்து கெளம்ப முடியாது"
"ரெண்டு ஆச்சிகளும் பக்கத்துல இருக்கும் போது என்னை எங்க தேடப் போறாங்க. அதுவும் ஊருக்குப் போயிட்டா சரண்லாம் வீட்ல தங்க கூட மாட்டான்"
"சரி சித்து எங்களுக்கு மட்டும் போடு. ரெண்டு பேரையும் நான் கூப்டு போயிடுவேன். நைட்டு தூங்குனா காலையில ஊருக்கு போயிடுவோம். நான் தனியா போயிடுவேன்" என்றார்.
"ம் ஓகே மா" என்று அடுத்த இரண்டு நாட்களில் அவர்கள் ஊருக்குச் செல்ல அந்த வீடே வெறிச்சோடி இருந்தது. அமுதிக்கு பகலைப் போக்கவே பெரும்பாடாக இருந்தது. வீட்டில் தற்போது இருவர் மட்டுமே என்பதால் சாந்தியையும் வேலைக்கு வர வேண்டாம் ரெஸ்ட் எடுங்கக்கா என்று விட்டாள். சித்து காலையில் செல்பவன் இரவு தான் வீடு வந்து சேர்வான். அதுவும் இரண்டு நாட்களாக நள்ளிரவுக்கு மேல் தான் வரவும் அவளுக்கும் சலிக்க ஆரம்பித்து விட்டது. டிவி மட்டுமே துணையாக இருந்தது.
அன்று இரவும் நள்ளிரவுக்கு மேல் வர, "உங்கள நம்பி நான் இங்க இருந்ததுக்கு ஊருக்கே போயிருக்கலாம் போல. வீட்ல ஒருத்தி தனியா இருப்பாளேனு கொஞ்சமாவது நெனப்பு இருக்கா சார்க்கு"
"சாரி.. சாரி அம்முமா.. உன்கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு எல்லா வேலையும் இன்னைக்கு முடிச்சுட்டா நாளைக்கு உன்கூட வெளில எங்கயாவது போலாம்னு நெனச்சேன்"
"அது நாளைக்கு பார்க்கலாம். இப்போ வந்து சாப்பிடுங்க" என்று அவனுக்கு உணவு பரிமாறினாள்.
முன்னாடியெல்லாம் வயிறு ஒன்று இருப்பதையே மறந்து ஏனோ தானோவென்று உண்பவன், இன்று இரவு எவ்வளவு நேரமானாலும் அருகில் நின்று உணவு பறிமாறினால் வயிற்றைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்க முடியுமா அவனால்?.
குளிர்தென்றல் காற்றில் நிலவு இளைப்பார, அவளுடன் அவனுணர்வுகள் இளைப்பாறிக் கொண்டிருந்தது.. கூடலும் கூடலுக்குப் பின் அவனுடன் கதைப்பதும் அவ்விரவை இன்னும் அழகாக்கியது. "உங்ககிட்ட முன்னாடியே கேட்கனும்னு இருந்தேன். அதென்ன புதுசா அம்முமானு கூப்புடுறேங்க. அதுவும் என்கூட இருக்குற நேரம் மட்டும். ஹாசனியையும் அம்முனு தான் கூப்புடுறேங்க"
"பெரிய விளக்கம்லாம் ஒன்னுமில்ல. அம்முவோட அம்மா அம்முமா அவ்வளவு தான். நம்ம ரூம்க்குள்ள மட்டும்" என்று கண் சிமிட்ட, "நல்ல விளக்கம்" என்று சிரித்தாள்.
மறுநாள் மதியமே அவன் வேலையை முடித்து வந்து சினிமாவிற்கு கிளம்பினார்கள்.
"அம்முமா பைக்ல போலாமா" என்று ஆசையாக கேட்க, "ம் போலாமே" என்று அவளும் ஏறிக் கொண்டாள். பார்த்த முதல் நாளே பாட்டு ஒன்று தான் இல்லை இருவரும் ஒருவரை ஒருவர் ரசித்துக் கொண்டும் பேசிக் கொண்டும் வந்தனர்.
அதே மாலில் அகிலனும் வந்திருந்தான். "சே உனக்கென்ன வார வாரம் மாலுக்கு வரனுமா?. இவனை வேற வச்சுட்டு வீட்ல இருக்க வேண்டியது தான" என்று கவிதாவிடம் கத்தி விட்டு எரிச்சலோடு திரும்பியவன் கண்ணில் அமுதியும் சித்துவும் பட்டனர். இதற்கு முன் பார்த்த போது இல்லாத நெருக்கம் இப்போது இருந்தது போல் தெரிந்தது அவனுக்கு. ஏற்கனவே எரிச்சலில் இருந்தவனுக்கு இப்போது கோவம் பன்மடங்காக உயர்ந்தது.
"நீங்க தான் தினமும் ப்ரண்ட்ஸ்ஸோட வெளில சுத்துறேங்கள. வாரம் ஒருநாள் கூப்டு போக உங்களுக்கு வலிக்குதா. உங்களை போய் நான் கல்யாணம் பண்ணேன் பாருங்க என் புத்திய.." என்று அவன் மனைவி கவிதா அகிலனை திட்டிக் கொண்டே நகர்ந்தவள் எதிரில் வந்த அமுதியை தெரியாமல் இடித்து விட்டாள்.
"அய்யோ சாரிங்க.." என்று திரும்பும்
போது தான் அமுதியை கண்டு சங்கடத்தில் நெளிந்தாள்.
"பரவாயில்லை" என்று திரும்பியவளின் கண்ணில் அகிலனும் கவிதாவும் பட பிரேக் அடித்தாற் போல் நின்றாள் அமுதி..
தொடரும்.