அத்தியாயம் 45
"பரவாயில்ல" என்று திரும்பியவளின் கண்ணில் கவிதாவும் அகிலனும் பட்டனர். சில நொடிகள் பிரேக் அடித்தது போல் நின்றாள்.
அவளிடம் இருந்து பறித்த வாழ்க்கையில் தான் இப்போது கவிதா வாழ்ந்து கொண்டு இருக்கிறாள். அவளின் முகமும் முகத்தில் உள்ள பூரிப்புமே சொல்லியது தற்போது அவள் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்று. 'மெலிந்த தேகமும் கவலை தோய்ந்த முகமுமாய் இருந்த அமுதினியா இது?' என்று அவளுக்கு சந்தேகம் கூட வந்துவிட்டது. அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் கவிதா.
அதன்பின்னே சித்துவும் அவர்களைக் காண்கிறான். 'எங்கே அன்று போல் இன்றும் அமுதியிடம் ஏதாவது தவறாக பேசி விடுவானோ?. அமுதியும் பயத்தில் ஓடி விடுவாளோ' என்று அமுதியைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் ஹாசினியை கடத்தி எல்லாரையும் கஷ்டப்படுத்தியதற்கு அவன் சட்டையைப் பிடித்து அறைந்து கேள்வி கேட்க வேண்டும் போல் இருந்தது அமுதிக்கு. இருந்தும் கவிதாவும் குழந்தையும் இருப்பதால் இருக்கும் இடம் கருதி கோவத்தை உள்ளயே அடக்கிக் கொண்டு விட்டு விட்டாள். சிலநொடி தான் அதிர்ந்தது. அதன் பின், "வாங்க படம் ஆரம்பிச்சுருவாங்க டைமாச்சு" என்று இயல்பாக சித்துவின் கையை இழுத்துக் கொண்டு சென்றாள். போகும் போது கவிதாயின் கையில் இருந்த குழந்தையின் மீதும் பார்வை வீசி விட்டுச் சென்றாள்.
அமுதியின் கை கோர்த்துக் கொண்டு முன்னே நடந்தவன் பின்னால் திரும்பி அகிலனைப் பார்த்து நக்கலாக சிரித்தான். அதன் பின் அகிலனின் கோவத்தை வார்த்தையால் சொல்ல வேண்டுமா ?. பூனையும் சீறும் என்று புரிந்திருக்காதா என்ன?.
'அமுதினிக்கு என்ன அடையாளம் தெரியலையா என்ன?. என்ன அடையாளம் தெரிலனாலும் அத்தனை வருஷம் வாழ்ந்த அகிலனையுமா தெரியல' என்று அகிலனைக் காண, அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க நின்றிருந்தான்.
"ஏங்க அமுதினி தான போறது?"
"ஆமா" என்றான் அவர்கள் சென்ற திசையை வெறித்து.
"என்னங்க நம்மளை இதுக்கு முன்னாடி தெரியாத மாதிரி கொஞ்சம் கூட அதிர்ச்சியாகாம போறாங்க"
"அவ தெரிஞ்ச மாதிர காமிச்சு நீ என்ன பண்ண போற?" என்று சிடுசிடுத்தான்.
"ப்பா.. எதுக்கு கத்துறேங்க?. ஓஓ முதல் மனைவி இன்னொருத்தரு கூட உரிமையா கை பிடிச்சுட்டு போறதை பார்த்து சூடாகிட்டேங்களோ" என்று சிரித்தாள்.
"ஏய் ச்சீ.. அவ எவன் கூட போனா எனக்கென்னடி கவலை? இப்போ நீ வரப்போறியா இல்லை இங்கேயே நின்னு அவங்களை பத்தி ஆராய்ச்சி நடத்தப்போறியா?. நான் பாட்டுக்கு விட்டுட்டு வீட்டுக்கு போயிட்டே இருப்பேன்"
"அவளை பார்த்து பொறாமை இல்லனா இப்போ நீ எதுக்கு இவ்வளவு கோவப்படுற? நீயும் தான என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட. அதுனால இந்த சூடாகுற வேலைலாம் வச்சுக்காத. உன்கிட்ட இருந்ததை விட இப்போ நல்லாவே இருக்கா அவ" என்று எரிகிற நெருப்பில் கூடக் கொஞ்சம் எண்ணையை ஊற்றினாள் கவிதா.
அவளுக்குத் தெரியாது அகிலன் அமுதியின் வாழ்வில் திரும்பவும் புகுந்து பிரச்சனை செய்வது தெரிந்தால் அவன் நிலைமை அவ்வளவு தான்.
அதன் பின் இரண்டு நாட்கள் எப்படியோ ஓடி விட்டது. சரணும் ஹாசினியுடனும் அடிக்கடி அலைபேசியில் பேசிக் கொண்டனர். இங்கே வீட்டில் அடைந்து கிடப்பதை விட அங்கு அவர்கள் வயதை ஒத்த குழந்தைகளோடு சுதந்திரமாக விளையாடி சந்தோஷமாகவே இருந்தனர் இருவரும்.
வேலை முடித்து வந்த சித்து, சோர்வாக வந்தமர்ந்தான்.
"என்னங்க ரொம்ப சோர்வாக இருக்கேங்க"
அவளிடம் ஒரு கவரைக் கொடுத்தான். "வாவ் உங்களுக்கு அவார்ட் குடுக்க போறாங்களா?. சூப்பர் வாழ்த்துக்கள். இதுக்கு எதுக்கு சோகமாக இருக்கேங்க?"
"டேட் எந்த இடம்னு பாத்தியா?"
"ம் அதுனால என்ன?"
"முன்னாடி சென்னைல தான் அவார்டு பங்ஷன் வைக்குறதா சொன்னாங்க. ஆனா இப்போ டெல்லில தான் ஆல் ஸ்டேட்க்கும் சேர்த்து வைக்குறாங்களாம்.
இல்லை.. உனக்கு உங்க ஊருத் திருவிழா பிடிக்கும்னு சொன்னியே. அதுக்குப் போக முடியாது அதான்.." என்று இழுத்தான்
"இது உங்க உழைப்புக்கு கிடைச்ச பரிசு. இது எவ்வளவு முக்கியம். போயிட்டு வாங்க"
"போயிட்டு வாங்கவா?. நீயும் தான் வர்ற"
"நானுமா?"
"பேமிலியோட தான் போனும். ஆனால் அம்மா பசங்க ஊர்ல இருக்குறதால நாம ரெண்டு பேரும் தான் போனும். அம்மாட்ட சொன்னேன். கல்யாணத்துக்கு அப்புறம் வாங்குற முதல் அவார்டு. அமுதியை கூப்பிட்டு போனு சொன்னாங்க"
ம் சரி போலாம்" என்று இருவரும் டெல்லி கிளம்பினர்.
அவனுடன் நீண்ட தூரப் பயணம் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அவார்ட் வாங்கும் அனைத்து அதிகாரிகளுக்கும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட அறையில் தங்கினர். அன்று இரவு அவார்ட் பங்ஷ்ன் என்பதால் வெளியில் எங்கும் செல்லவில்லை. பயணம் செய்த அலுப்பில் தூங்கி எழுந்தனர். கிளம்பும் போது, "அம்முமா இதுல சேரி இருக்கு உனக்கு தான். இது போட்டா நல்லா இருக்கும்" என்று இதுதான் போட வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை ஆனால் போட்டுக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று சொன்னான்.
அவனுக்கு பிடித்திருந்தால் மறுபேச்சு ஏது அவளுக்கு "ம் ஓகே. புதுசா? எப்போ எடுத்தேங்க எனக்குத் தெரியாம" என்று திறந்து பார்த்தவள் அதிசயித்து போனாள். உள்ளே ரோஸ் வண்ண சேலை அதற்கு மேட்ச்சாக வெள்ளையும் சில்வரும் கலந்த டிசைனர் ஜாக்கெட் இருந்தது.
"வாவ்.. செமயா இருக்குங்க. அப்புறம் அன்னைக்கு கடையில செலக்ட் பண்ண தெரியாதுனு சொன்னேங்க"
"தெரியாதுனு இல்ல. உனக்கு பிடிக்குமானு ஒரு சின்ன சந்தேகம். உனக்கு இது பிடிச்சுருக்கா?" என்றான் ஆசையுடன்.
"ம் ரொம்ப அழகா இருக்கு. நான் போய் கிளம்பிட்டு வர்றேன்".
கிளம்பி வெளியே வந்தவளின் அழகில் பிரமித்து நின்றான். "அமுதி உனக்குனே செஞ்ச மாதிரி இருக்கு இந்த சேரி" என்று அவள் கேட்காமலே சொன்னாள் பெண்ணவளுக்கு சொல்லவா வேண்டும் மனம் மகிழ்ந்தாள்.
அவனும் அதே நிறத்தில் சட்டையும் கோட் அணிந்திருக்க இருவரின் ஜோடிப் பொருத்தமும் அம்சமாக இருந்தது.
அத்தனைக் கூட்டத்தின் மத்தியில் அவனோடு அமர்ந்திருப்பது ஒருபுறம் நிமிர்வாக இருந்தாலும் ஒருபுறம் பயமாக இருந்தது. 'எவ்வளவு மதிப்பு மிக்க ஒருவன் அவனுக்கு என்னைப்போல் ஒருத்தி மனைவி என்றால்.. யாருக்காவது தெரிந்து அவனிடம் கேட்டால் அவனுக்கு எத்தனை அசிங்கம்' என்று நேரங்காலம் தெரியாமல் அவள் மனது இதை நினைக்க அவளுக்கே அவளை நினைத்து கலிவிரக்கம் தோன்றியது.
'எந்த இடத்திலும் தன்னை விட்டுக் கொடுக்கத்திற மாட்டான். நான் இவ்வாறு நினைப்பது தெரிந்தால் கூட அவ்வளவு தான். வீணாக அவனின் கோவத்தை கிளப்ப வேண்டாம்' என்று கண்ணில் நீர் துளிர்க்கும் முன்னே அடக்கிக் கொண்டாள்.
இந்தியாவில் இருக்கும் அத்தனை ஸ்டேட் காவல் அதிகாரிகளுக்கும் அங்கு தான் அவார்டு கொடுத்தனர். சித்துவின் முறை வரும் போது அவன் அவார்டு வாங்குவதை ஆசையாய் சந்தோஷமாய் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் வரவும் வாழ்த்துத் தெரிவித்தாள். அதன் பின் பார்ட்டி டின்னர் என்று அன்றைய நிகழ்ச்சி முடியவும் அறைக்குச் சென்றனர்.
"பங்ஷன சூப்பரா இருந்ததுங்க. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்றவளின் வார்த்தை எல்லாம் காதில் விழவில்லை. அவளை இறுக அணைத்துக் கொண்டான். "தேங்க்ஸ் அமுதி. உன்னோடு சேர்ந்து வாங்குற முதல் அவார்டு ரொம்ப சந்தோஷமா இருக்கேன்" என்று இருவரின் சந்தோஷமும் அணைப்பும் கூடலாகிப் போனது. மறுநாள் யமுனை நதிக்கரையில் அமைந்திருந்த தாஜ்மகால் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களை சுற்றி பார்த்தனர்.
உண்மையாய் அன்பு வைத்திருக்கும் அத்தனை காதலர்களுக்கும் அது காதல் பரிசு.. அதை சித்துவுடன் பார்ப்பதில் அத்தனை ஆனந்தம். அவள் இதயம் சிறகாச்சு.. காற்றை பிடித்து வானத்தில் ஏறி நிலவில் பயணித்துக் கொண்டிருந்தாள்..
இறந்தகால
காதலொன்று
நிகழ்காலத்தில்
உயிரூட்டிக்
கொண்டிருக்கும்
வெள்ளை நிறக்
கவிதைகளால்
உருவாக்கிய
அன்பின் காவியம்
தாஜ்மகால்..
அங்கிருந்த நாட்களை இருவருமே பொக்கிஷமாக இதயத்தில் சேமித்து வைத்துக் கொண்டனர்.
சென்னை வந்து வீட்டுக்கு வந்ததுமே சித்தார்த் கண்ணில் முதலில் பட்டது அகிலன் அனுப்பிய நோட்டீஸ். அதில் அமுதி தன்னை ஏமாற்றி விட்டதாகவும், ஹாசினி அவன் மகள் என்றும், அவன் மகள் அவனுக்கு வேண்டும் என்று இருந்தது. சரணை அமுதியே வைத்துக் கொள்ளட்டும் என்று முன்பே கோர்ட்டில் சொன்னதால் ஹாசினியை மட்டும் கேட்டான் அகிலன். 'இப்போதைக்கு அமுதியிடம் எதுவும் சொல்ல வேண்டாம். கடைசியில் சொல்லிக் கொள்ளலாம்' என்று அவன் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்தால் இந்தப் பிரச்சனை தீரும் என்று தீர யோசித்து முடிவெடுத்து விட்டான்.
அதற்காக வேலையில் முழுமூச்சாய் இறங்கி சிலரை சந்தித்து விட்டு ஒரு கேஸ் விஷயமாக **** ஹாஸ்பிட்டல் சென்று டியூட்டி டாக்டரிடம் பேசி விட்டு வெளியில் வரும் நேரம் தூரத்தில் கொடிமலரைக் கண்டு, 'அத்தை மாதிரி இருக்கு. அவங்க இங்க என்ன பண்றாங்க' என்று நினைத்து அருகில் சென்றான்.
அருகில் வந்து, "அத்தை.." என்று அழைத்தான்.
அவன் அழைப்பில் திரும்பிய கொடிமலர், "சித்து.. இன்னைக்கு தான் உன்னைய இந்த உடுப்புல பாக்குறேன். அப்டியே எங்க அண்ணனை உரிச்சு வச்சுருக்குற" என்றவருக்கு அவனைக் கண்ட ஆனந்தமும் அவர் அண்ணனின் நினைவும் ஒருசேர வந்தது.
"நீ என்ன இங்க?. சென்னை வர்றதா சொல்லவே இல்ல. எனக்கு போன் பண்ணிருக்கலாம்ல"
அவருக்கு அவனைக் கண்டு முகமெல்லாம் பூரிப்பு. "சித்து.. உன்னை இங்க பார்ப்பேனு நினைக்கவே இல்ல. அம்மா அமுதி பசங்களாம் நல்லா இருக்காங்களா. இங்க நல்லா பார்ப்பாங்கனு ஊர்ல யாரோ சொன்னாங்கனு அனுவுக்கு குழந்தைக்காக காண்பிக்க இங்க கூப்பிட்டு வந்துருக்கான் கார்த்தி"
"எல்லாரும் நல்லா இருக்கோம். உன்கிட்ட பேசனும்னு அமுதி கூட சொல்லிக்கிட்டு இருந்தா. அனுவோட ட்ரீட்மெண்ட் பத்தி நானே உன்கிட்ட பேசனும்னு இருந்தேன். எல்லாரும் வர்றதா சொல்லியிருந்தா நம்ம வீட்டுக்கே கூப்டு போயிருப்பேன்ல. எங்க தங்கியிருக்கேங்க. ட்ரீட்மென்ட் எத்தனை நாளைக்கு" என்று விசாரித்தான். அனுவைப் பிடிக்காவிட்டாலும் அத்தையின் மீது பாசமும் மரியாதையும் அதிகமாயிற்றே. அத்தைக்காக அத்தையின் மகளின் மீதும் சிறிது அக்கறை பட்டுக் கொண்டிருக்கிறான்.
"சென்னை கிளம்பும் போதே சித்து வீட்டுக்கு போலாம்னு தான் சொன்னேன். உனக்கு அனுவைப் பத்தியும் தெரியும் அவ புருஷனைப் பத்தியும் தான் தெரியுமே. ரெண்டு பேரும் அங்கலாம் போய் தங்க முடியாதுனு சொல்லிட்டு இங்க பக்கத்துல ஒரு ஹோட்டல்ல ஒரு ரூம் எடுத்து தங்கிருக்கோம். என்னை என்ன பண்ன சொல்ற சித்து. இங்க வரைக்கும் வந்தும் உன் வீட்டுக்கு வர முடியல பாத்தியா" என்று வருந்தினார்.
"என்னத்தை இதுக்கு போய் பீல் பண்ணிட்டு இருக்க. இங்க வரைக்கும் வந்துட்டு வீட்டுக்கு வராம விட்ருவேனா. நீ வா.. அனுகிட்ட நான் பேசுறேன்" என்று அவரை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குள் நுழைந்தனர்.
சித்துவைக் கண்ட அனுஷாவும் கார்த்திகேயனும் "இவன் எப்படி இங்கே? இந்த அம்மா எதுக்கு இவனை இங்க கூப்டு வர்றாங்க" என்று போலீஸ் உடையில் கம்பீரமாய் நடந்து வரும் சித்துவைக் கண்ணிமைக்காமல் பார்த்தனர்..
தொடரும்..