• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை 20

ரமா

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 11, 2023
Messages
25
விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை 20
மருத்துவமனைக்கே உண்டான நெடியை உணர்ந்ததாலோ என்னவோ நாசியில் மருந்து வாடை நுழைய முகத்தை சுருக்கி தன் இமையை மெல்லத் திறந்தாள் மாயா.. அவள் கண்விழித்ததும் பார்த்தது அவளின் பெற்றோரைத் தான்.. அவளின் அருகிலே இருந்த நாற்காலியில் அமர்ந்து அவள் கண்விழிப்பதற்காக காத்திருந்தனர்.. வேதனை தாங்கி கலையிழந்த முகத்துடனும் கலைந்த தலையுடன் உயிர்ப்பில்லாத கண்களை கொண்டு தன் ஒற்றைப் புதல்வி கண் விழிப்பதற்காய் தவமிருந்தனர் அந்த பெற்றோர்.
அவர்களை பார்த்தவள் டாட் மாம் என்று அழைத்தாள்.. ஆனால் அவள் அழைத்தது காற்றோடு போனது.. கண்ணங்களில் அடிபட்ட இடத்தில் வலி உயிர்வரை தாக்கியது.. மெதுவாய் தன் கைகளை தூக்க முயற்சித்தாள்.. சுத்தமாய் கையை அசைக்க முடியவில்லை.. வலி தாங்க முடியாமல் கண்களில் கண்ணீர் அருவியாய் பொழிந்தது.
அடிபட்ட இடமெல்லாம் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் வலி எடுத்தது.. காலை நகர்த்த முயன்றாள்.. அதுவும் வெறும் முயற்சியாகித் தான் போனது.. அவளால் சுத்தமாய் அசைய முடியவில்லை.. பார்வையில் வலியை கொண்டு தன்னை பெற்றவர்களை பார்த்தாள்.
அவளின் வலியை கண்டவர்கள் எதுவும் செய்ய முடியாமல் தங்களால் அந்த வலியை வாங்கி கொள்ள முடியாமல் வேதனையுடன் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது அவர்களால்.
கை கால்களை சிறிது நகர்த்தினாலே வலி கண்டு கண்ணீர் வந்தது.
கண்ணீர் நிரம்பிய விழிகளுடன் தன் பெற்றோரை பார்த்தாள்.. அவளுக்கு என்ன நடந்தது என்றே முதலில் புரியவில்லை.. கண் இமைக்கும் நொடியில் அத்தனையும் நிகழ்ந்து விட்டது.. எப்படி இந்த ஆக்ஸிடென்ட் ஆனது என்றே அவளுக்கு தெரியவில்லை..
அவளின் அருகே வந்த வாசுதேவன் மாயா என அவளின் கையில் அடிபடாத இடத்தில் கை வைத்தார்.. ஆனால் அதிலும் அவள் உணர்ந்தது வலியைத் தான்.
அவள் கண் விழித்ததுமே தாதி ஒருத்தி மருத்துவரை அழைக்க சென்றாள்.. சிறிது நேரத்திலே அங்கே வந்த மருத்துவர்கள் அவளின் பெற்றோரை வெளியே அனுப்பி விட்டு அவளை பரிசோதித்தனர்.
இங்கே வெளியில் இருந்த அவளின் பெற்றோர்களுக்கு சிறிது ஆசுவாசமாய் இருந்தது.. தங்களின் மகள் கண் விழித்து விட்டாள்.. போதும் அவளை மீட்டு விடலாம் என்ற எண்ணமே அவர்களின் முகத்தில் சற்று தெளிவை தந்தது.
அவளை பரிசோதித்து விட்டு வெளியே வந்த மருத்துவர்களை சூழ்ந்து விட்டார்கள் அவளின் பெற்றோர்.. வாசுதேவனோ, "டாக்டர் என்ன பொண்ணு எப்படி இருக்கா.. அவளுக்கு சீக்கிரம் சரியாகிடும் இல்லைங்களா.. அவளுக்கு எப்போ கை கால் குணமாகும் டாக்டர்.." என்று கேள்வி மேலாக கேள்வி கேட்டார்கள்..
அவர்களின் கேள்விக்கு மௌனமாய் புன்னகை சிந்தியபடியே, "இனி உங்க டாட்டர்க்கு ப்ராப்ளம் இல்லை சார்.. அவங்களை நல்லா பாத்துக்கோங்க.. நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும்.. கை கால் குணமாக மூனு நாலு மாசம் ஆகும்.. இப்போ நார்மல் ரூமுக்கு மாத்திடுவாங்க.. ஏதாவது தேவைப்பட்டுச்சுன்னா நர்ஸ் கூப்பிட்டுக்கோங்க.. ஒன் வீக்ல வீட்டுக்கு போயிடலாம்..டேக் கேர் சார்..." என்று விட்டு அந்த மருத்துவர் சென்று விட்டார்.
தங்கள் மகள் தங்கியிருந்த அறைக்கு செல்லப் போகும் போது அங்கே அமுதாவும் கவிநிலாவும் வந்தார்கள்.
அவர்களை கண்ட பெரியவர்கள் இருவரும் மென்னகை புரிந்தனர்.
"சார் இப்போ உங்க பொண்ணுக்கு எப்படி இருக்கு.." என்ற கேள்வியுடன் இருந்தனர்.
"பரவாயில்லை மா இப்போ நல்லாருக்கா.. நாங்களும் அவளை தான் பாக்க போறோம் வாங்க மா.." என்று இருவரையும் அழைத்துக் கொண்டு மாயா இருக்கும் அறைக்குள் நுழைந்தனர்.
அங்கே கண் விழித்த மாயா இருவரையும் கண்டு வெறித்தாள்.. இவர்களை கொல்ல நினைத்து நான் இங்கே கட்டிலோடு கிடக்கிறேனே என்ற சுய பச்சாதாபம் அவளை கொன்றது..
அங்கே வந்த தாதி ஒருத்தி கவிநிலாவையும் அமுதாவையும் கண்டு மாயாவிடம் திரும்பி, "மேடம் இவங்க மட்டும் இல்லைன்னா நீங்க உயிரோடவே இருந்துருக்க முடியாது.. உங்களை சரியான நேரத்துல ஹாஸ்பிடல்ல கொண்டு வந்து சேர்த்ததும் இல்லாம இதோ இவங்களோட ரத்தத்தையும் உங்களுக்கு கொடுத்து தான் உங்க உயிர காப்பாத்தினாங்க.." என்று விட்டு ஏதோ தான் வந்த வேலை முடிந்தது போல சென்று விட்டாள்.
ஆனால் அதை கேட்டவள் தான் தன் காதில் விழுந்தது உண்மையா..? தன்னை காப்பாற்றியது தான் கொல்ல இருப்பவளா..? அவளின் உயிரை எடுக்க நான் திட்டம் தீட்டினாள் என் உயிரை அவள் கையால் காப்பாற்றினாளா.. இது உண்மையா என்று தன் பெற்றோரை பார்த்தாள்.. அவளின் தந்தையும் அவளின் பார்வைக்கு ஆமாம் என்று தலையசைத்தார்.
அதற்கு மேல் அவளால் பேச முடியவில்லை.. அவளறியாமல் கண்ணீர் பொழிந்து கொண்டிருந்தது.. இது அவளின் மனம் மாறிவாட்டாளா.. அவளின் எண்ணம் அவளோடு தானே.. பொறுத்திருந்து தான் பார்ப்போமே..
இங்கே ஆராதனா தன்னிடம் காட்டிய மோதிரமும் அதை அவன் எடுத்த சூழ்நிலையும் அவனின் மனக் கண்ணில் ஓடியது.. அவன் என்ன விருப்பப்பட்டா அவளுக்கு வாங்கி கொடுத்தான்.. அதை அவள் அவனிடம் வாங்கிய தருணம் அவனின் மனதில் வந்து போனது..
அவனின் தாயானவளின் பிறந்த தினத்திற்கு எதாவது பரிசு வாங்கி தர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் சிறுக சிறுக சேமித்த பணத்தை எடுத்துக் கொண்டு கடைக்கு சென்றான்.
அவனின் அம்முவின் பிறந்த நாளை யாரும் எப்பொழுதும் கொண்டாடமாட்டார்கள்.. ஏன் அவளின் பிறப்பே வேண்டாததாய் உள்ள போது அவளின் பிறந்த நாளையா கொண்டாடுவார்கள்.. ஆனால் அகரன் அதை எப்பொழுதும் மறப்பதில்லை.. தாய் பாசம் அறியாதவனுக்கு தாயாய் தோள் தாங்கியவள் இந்த பூமிக்கு வந்த தினத்தை அப்படியே மறந்து விடுவானா என்ன.. அவளுக்கு எதையாவது பரிசு வாங்கி தருவது அவனின் வழக்கம்.. ஆனால் அதை யாருமறியாமல் தான் அவள் போட்டு பாக்க இயலும்.. தெரிந்தால் அவளின் சித்தியான சோபனாவின் வாய்க்கு அவல் கிடைத்தது போல் ஆகிவிடுமே என்ற பயம் தான் அவள் மறைக்க காரணம்.
அகரனுக்கு இதில் சுத்தமாய் உடன்பாடு இல்லையென்றாலும் தன் அம்மு மேலும் வேதனைப்படக் கூடாது அதுவும் தன்னால் என்று அமைதியாகிப் போனான்.
இதோ நகைக்கடைக்கு வந்தவன் எதை எடுப்பது என்று தெரியாமல் முழித்தவன் கடைசியில் ஒரு மோதிரத்தை கையில் எடுத்தான்.. அதை அவன் நன்றாக பார்ப்பதற்குள்ளாகவே அவன் கையிலிருந்து அது பறிக்கப்பட்டிருந்தது.. கோபத்துடன் அதை பறித்தவரை பார்த்து திட்டுவதற்காக வாயைத் திறந்தவன் அங்கே நின்றிருந்தவரை பார்த்து அப்படியே வாயை மூடிக் கொண்டான்..
அங்கே ஆராதனா தான் நின்று கொண்டிருந்தாள்.. அவளின் கையில் அவன் வைத்திருந்த மோதிரத்தை ரசித்தபடி நின்றிருந்தாள்..
கண்களில் ரசனையையும் காதலையும் தேக்கியபடி அகரனை கண்டவளின் விழிகளில் என்னத்தை கண்டானோ அவனின் கோபம் கொஞ்சம் தள்ளிப் போயிற்று.. அவளின் விழிகளில் தான் எத்தனை பரவசம்..
தன் பார்வையும் எண்ணமும் போகும் திசை அறிந்து தன் பார்வையை அவளிடமிருந்து திருப்பிக் கொண்டவன் கைகளை நீட்டி அவளிடம் அந்த மோதிரத்தை தருமாறு செய்கையால் கேட்டான்..
அவனின் கைகள் நீண்டதை அறிந்தும் அவள் அவன் கைகளில் அதை ஒப்படைக்காமல், "கரன் இந்த ரிங் அழகா இருக்கு.. நான் எடுத்துக்கவா ப்ளீஸ்.. "என்று கண்களை சுருக்கி அவள் கேட்ட விதம் அவனின் தலையை அசைக்க வைத்தது.
சிறுபிள்ளையென துள்ளிக் குதித்தவள் அதை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டாள்..
இவனும் வேறு ஒரு மோதிரத்தை எடுத்துக் கொண்டு அதற்கான தொகையை செலுத்த வந்தவனை அதிர்ச்சியில் நிற்க வைத்து விட்டு சென்று விட்டாள் பெண்ணவள்.
அவள் அந்த மோதிரத்தை கேட்டதும் இவன் கொடுத்த காரணம் அவள் பணம் கட்டி எடுத்து கொள்வாள் என்று தான்.. ஆனால் அவளோ அந்த பணத்தையும் இவனையே கட்டும்படி செய்து விட்டாள்.. பல்லைக் கடித்தபடி அவளை திட்டிக் கொண்டே பணத்தை கட்டியவன் மீண்டும் சென்று தன்னிடம் உள்ள பணத்திற்கு தகுந்தபடி வேறு ஒன்றை தேர்வு செய்து எடுத்து சென்றது வேறு கதை.
ஆனால் அவளின் மேல் கோபம் அதிகம் ஆனது தான் மிச்சம்.. வாழ்நாளில் தன் அம்முவிற்காக முதலில் எடுக்க ஆசைப்பட்ட நகை அந்த மோதிரம் தான்.. ஆனால் இவளோ அதை அவனிடம் இருந்து கொள்ளையடித்து விட்டாள் அவனின் அனுமதியுடன்.
ஆனால் அவள் இதை இந்த அளவு பாதுகாப்பாள் என்று அவன் அறிவானில்லை.. அவள் ஒன்றும் சாதாரணமானவள் இல்லையே.. செல்வம் கொழிக்கும் வீட்டின் செல்ல மகள் அல்லவா.. அவளுக்கு ஆயிரம் நகைகள் எடுத்து கொடுத்தாலும் அவள் இந்த மோதிரத்தை அல்லவா தன் செயினுடன் கோர்த்து அணிந்திருந்தாள்.. அப்படியானால் அவளின் மனதில் நான் தான் இருக்கிறேனா.. இவளை என்னால் ஏற்றுக் கொள்ள முடியுமா என்ன.. என் அம்மு படும் அனைத்து வேதனைகளுக்கும் இவளும் இவளின் தாயும் அல்லவா காரணம்..? என் அம்முவை வேதனைபடுத்தியவர்களையா நான் என் வாழ்க்கையில் கொண்டு வர வேண்டும் என்ற சிந்தனையில் இருந்தவனை ஆராதனாவின் குரல் கலைத்தது.
கரன் என்னாச்சி ஏதோ சிந்தனையில இருக்கீங்க.. இந்த மோதிரம் என் உயிரைப் போல கரன்.. இது நீங்க வாங்கி கொடுத்த முதல் கிப்ட்.. என்கிட்ட எத்தனை நகைகள் இருந்தாலும் இதை தாலியா நினைச்சி தான் என் செயினோட கோர்த்து போட்டிருக்கேன்.. நீங்க என் கழுத்துல தாலி கட்டுவீங்களா கரன்.." என்று கண்களில் ஏக்கத்துடன் கேட்டாள்.
அவளின் குரலில் இருந்த ஏக்கம் அகரனின் மனதை அசைத்தது.. அவளின் காதலின் ஆழத்தை இதோ இந்த மோதிரத்தை காப்பாற்ற அவள் போராடிய விதமே கூறியது.. ஆனால் இவளை தான் ஏற்றுக் கொண்டாள் அது என் அம்முவிற்கு நான் செய்யும் துரோகம் அல்லவா..? அதை எப்படி என் அம்முவிற்கு நான் செய்வது என்று யோசித்தவனின் மனம் அவளை வேணாம் என்று சொல்லவில்லை.. மாறாக தன் அம்முவின் சம்மதத்துடன் தான் தன் திருமணம் என்று எண்ணத்தில் உழன்றது.
ஏதோ ஒரு இடத்தில் ஆராதனாவை அவன் மனம் ஏற்றுக் கொண்டது.. ஆனால் அவளின் துவேஷம் அமுதாவின் மேல் இருக்கும் வரை அவனால் அவளை ஏற்றுக் கொள்ள முடியாது என்பது தான் உண்மை.
எதை எதையோ சிந்தித்தவன் ஒரு முடிவுடன் நிமிர்ந்து, "இங்கே பாரு தணு எனக்கு ரொம்ப முக்கியமான உறவுன்னா அது என்னோட அம்மு தான்.. அவ என்னோட தோழி மட்டும் இல்லை.. என்னோட அம்மாவ அவளை பாக்குறேன்.. அவ எந்த பொண்ண கைகாட்டி நான் கட்டிக்னும்னு சொல்றாளோ அந்த பொண்ணு தான் என்னோட மனைவி.. அதுமட்டுமில்லாம அப்பா அம்மா இல்லாத இந்த அனாதையை உங்க வீட்ல ஒத்துக்க மாட்டாங்க.. அதுவும் இல்லாம என் அம்மு மேல உனக்கு எவ்வளவு கோபம் இருக்குன்னு எனக்கு தெரியும்.. நீ எனக்கு மனைவியா ஆனா என் அம்முவ நான் இழக்க நேரிடும்..என் அம்முவ இழந்து தான் நீ கிடைக்கனும்ன்னா அப்படி ஒரு காதலே எனக்கு வேணாம்.." என்று அவளிடம் தீர்க்கமாய் கூறியவனின் இதயம் ஏனோ வலியை உணர்ந்தது.. அவனறியாமல் அவன் கண்களும் கசிந்தது.. அதை அவளறியாமல் துடைத்தவன் வேகமாய் அங்கிருந்து சென்று விட்டான்.
சென்றவனையே பார்த்துக் கொண்டிருந்தவளின் விழிகள் கசிந்தது.. அவளின் மனமோ கதறி அழ துடித்தது.. ஏனோ இத்தனை நாளாக இருந்த திடம் முற்றிலும் உடைந்து போனது.. தன்னவன் சொல்லி சென்ற அழுத்தத்தில் அவனின் பிரிவை ஏற்க முடியாமல் கதறி துடித்தது..
அவளுக்கு அவன் வேண்டும் என்றாள் அமுதாவை அவள் சகோதரியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.. ஆனால் அது தன்னால் முடியுமா என்ற கேள்வி எழுந்தது.. முடியும் என்று மனம் சொன்னது.. முடியாது என்று மூளை சொன்னது.. எதை எடுப்பது எதை விடுவது என்று அவளுக்கு புரியவில்லை.. ஆனால் அவளுக்கு அவளின் அகரன் வேணும்.. அதற்காக யார் காலிலும் விழுந்தாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தில் இருந்தாள் ஆராதனா.
அவளின் மாற்றத்தை அமுதாவும் அகனும் ஏற்றுக் கொள்வார்களா..? அவளின் பெற்றோர் தான் அகரனை மருமகனாக ஏற்றுக் கொள்வார்களா..?
இங்கே வீட்டிற்கு வந்த சிவராம் தன் குடும்பத்தில் உள்ள அனைவரையும் அழைத்தவர் அமைதியாய் சோபாவில் அமர்ந்திருந்தார்..
சில நேரம் பொறுத்திருந்த மது தன் தந்தையை பார்த்து, "அப்பா இப்போ எதுக்கு எங்க எல்லாரையும் கூப்டு வச்சிட்டு அமைதியா இருக்கீங்க.. எனக்கு இம்பார்ட்டன்ட் மீட்டிங் இருக்குப்பா.. கொஞ்சம் சீக்கிரம் சொல்லுங்க என்னன்னு.." என்றவனின் கேள்வி மற்ற இருவரின் முகத்திலும் இருந்தது.
மெதுவாய் நிமிர்ந்தவர் மாயாவை மதுவிற்கு மணப்பெண்ணாய் தேர்ந்தெடுத்த காரணத்தை கூறினார்.. அதை கேட்ட மற்றவர்களின் முகம் சொல்ல முடியா வேதனையில் தவித்தது..ஒவ்வொருவரின் மனமும் ஒரு கேள்வியை கொண்டிருந்தது.. அது
என் மேல இவ்வளவு தான் நீங்க வச்ச நம்பிக்கையா அப்பா என்று மதுவின் மனதிலும்,
பணத்துக்காக என் பையனோட வாழ்க்கையா அடகு வைக்க பாத்தீங்க என்று பார்வதியின் மனதிலும்,
அண்ணா வேற பொண்ண விரும்புறேன்னு சொன்ன போதும் இந்த உண்மையை நீங்க சொல்லலையே அப்பா என்று கவியின் மனது என ஒவ்வொருவரும் வேதனையை தாங்கி இருந்தனர்.
தன் குடும்பத்தாரின் முகத்தை பார்த்த சிவராம் அவர்களின் கேள்வியை புரிந்து அமைதியாய் தலைகுணிந்தார்.
 
Top