• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை 23

ரமா

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 11, 2023
Messages
25
"ஏன் டாட்... அன்னைக்கே நார்மல் போர்ட்ல விடுறான்னு சொல்லிட்டாங்களே! அப்புறம் ஏன் இன்னும் ஐசிலே வச்சுட்டு இருக்காங்க...?

நீங்க ஏன்னு கேக்கலயா டாட்.?" என அங்கலாந்தவளுக்கு, என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் வாசுதேவ்வும், அவர் மனைவியும் முழித்திருந்த இருந்த வேை, கதவு திறப்படும் சத்தம் கேட்டு திரும்பினர் மூவரும்.

அது வேறு யாருமில்லை வர்ஷனின் தந்தை சிவராமன் தான்.

"வாங்க அங்கிள்....!" ஏனோ சிவராமனை கண்டதும் தன் சினத்தை அடக்கியவளாய், உதடுகளில் புன்னகையை தவளவிட்டு, வரவேற்ற மாயாவை பார்த்த பெற்றவர்களுக்கு, ஏனோ அந்த சமயம் சிவராமன் தெய்வமாகத் தெரிந்தார்.

பின்னே அவர் மட்டும் தற்சமயம் அங்கு வரவில்லை என்றால் என்னவாகி இருக்குமோ!

"வா சிவராமா....!' அழைத்தவர் குரலில் உயிரில்லை.

"இப்போ வீட்டுக்கு தான் போனேன். அப்ப தான் விஷயமே தெரிய வந்திச்சு. இப்போ பரவாயில்லயாம்மா....?" அக்கறையாக வினவியவருக்கு, தான் கொண்டுவந்த தகவலை இந்த நிலையில் இருப்பவளிடம் எப்படி சொல்லதென்ற தயக்கம் இல்லாமல் இல்லை. அவ்வளவு ஏன்? இப்போது இதை கூறித்தான் ஆகவேண்டுமா.. நாள் பட பேசலாமே என்று கூட தோன்றிற்று.

ஆனால் வீட்டினரது பாரா முகம் அவரை நொருங்கவல்லவா செய்கிறது.

"இப்போ பரவாயில்ல அங்கிள். நார்மல் போட்ல மாத்திடுறோம்ன்னு சொல்லிருக்காங்க. குணமாகி வந்ததும் கல்யாணம் தான்." பொய்யாக பூசிக்காெண்ட வெட்கத்துடன் தலை குனிந்தவளை காண சங்கடமானது அவருக்கு.

க்ஹூம்.... தொண்டையை செருமிக்காெண்டவர்.
"நான் கொஞ்சம் முக்கியமா பேசணும்ன்னு தான் வீடு தேடி போனேன். இந்த நிலையில இத பேசலாமா என்கிறது கூட தெரியல. ஆனா என்னோட சிச்சுவேஷன் பேசித்தான் தீரணும்...." திக்கித்திணறி ஆரம்பித்தவர் விழிகளோ மூவரையுமே ஆராய்ந்தது.

புருவங்கள் முடிச்சிட அவரது தடுமாற்றத்தை அளந்தவள் எதுவும் கேட்கவில்லை.

"என்ன சிவராமா... எதுன்னாலும் தயங்காம சொல்லு... பேசுறதுன்னு முடிவாகிடிச்சு... எப்போ பேசினா என்ன...? நமக்குள்ள தானே!" இயல்பாக ஆரம்பித்தவருக்கு எதிராளியின் தடுமாற்றம் ஏனோ கருத்தில் பதியாமல் போனது.


"அது... நான்... என் பையன்.... அவனுக்கு மாயாவ கட்டிக்கிறதில இஷ்டமில்ல வாசு. அவனுக்கு மட்டுமில்ல... என் பொண்ணு பொண்டாட்டி உற்பட எல்லாருமே எதிரா நிக்கிறாங்க." சொல்லவேண்டியதை உடைத்து விட்டு, வாசுதேவ்வை ஆராய்ந்தார்.

"அவங்க இருக்கட்டும் அங்கிள்... நீங்கள் என்ன சொல்லுறீங்கள்?" மாயாவிடமிருந்து வந்த அழுத்தமான வார்த்தையில் அவளை திரும்பி பார்த்தவர்,

'எனக்கு என் குடும்பத்து சந்தோஷம் தான் முக்கியம்மா.. அதனால...."

"அதனால என்னாகும்ன்னு யோசிச்சு பாத்தியா சிவராமா..?' இம்முறை மிரட்டும் தோரணையில் வாசுதேவ்விடமிருந்து விழுந்தன வார்த்தைகள்.


ம்ம்... மேலும் கீழும் தலையை அசைத்தவர் விழிகள் இம்முறை தரையில் நிலைகுத்தி நின்றது.

"தெரிஞ்சுமா நீயும் அவங்க போக்குக்கு உடன் படுற?" அதே குடையும் பார்வை.


"ம்ம் என் பையன் சந்தோஷத்துக்கு முன்னாடி எதுவும் எனக்கு பெருசில்ல... எனக்கு அவன்ல நம்பிக்கை இருக்கு. அவனுக்கு தெரியும்... அப்பாவை எப்பிடி இந்த சிக்கல்ல இருந்து காப்பாத்துறது என்கிறது. அதனால அவனோட ஆசைக்கு இணங்கிறதுன்னு முடிவு பண்ணிட்டேன்." என்று வாசுதேவ்விடம் கூறியவர்,


மாயாவின் கைகளை பிடித்து.. "என்னை மன்னிச்சிடும்மா... உனக்கு கொடுத்த வார்த்தையை என்னால காப்பாத்த முடியாம போயிடிச்சு... இவன் இல்லன்னா என்ன? உன் மனசுக்கு பிடிச்சது போல ஒருதன் நிச்சயமா கிடைப்பான்." என ஆறுதல் சொன்னவர் கைகளை உதறி விட்டவள்,


"எப்பிடி கிடைப்பான்..? அதான் உன் பொண்ணு தட்டிட்டு போயிட்டாளே!ள என்றாள் பேய் வந்தவள் போல் ஆதங்கமாய் கத்தினாள்.


ஒரு நாெடி அவளது ருத்த தாண்டவத்தில் அவருமே பயந்து விட்டார். பின் தன்னை சரி செய்தவராய்.

"என்னம்மா சொல்லுற...? நீ யாரைப்பத்தி பேசுற...." என்றார் நிறுத்தி நிதானமாக.


"என்னையா சொல்லச் சொல்ற? உனக்கென்ன பத்து பொண்ணுங்களா....? காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் கொண்டு போனவன் கணக்கா... சின்ன வயசிலயிருந்து அவனுக்காக பிறந்தவள் நான் இருக்கையில, நேற்று வந்த உன் பொண்ணு, என் நிக்கில் மனச மாத்திட்டாய்யா... இங்க பாரு.... உன் பையன் எனக்கு கிடைக்கலன்னாலும் எனக்கு கவலையில்ல.. ஆனா அவளுக்கு அவன் கிடைக்க கூடாது." என்றாள் உத்தரவிடும் பாணியில்.

அவள் கூறியவை அதிர்சியாக இருந்தாலும், அவளது நரம்பு புடைத்த பேச்சும், கண்களில் ரத்தத்தையும் கண்டவருக்கு நேற்றைக்கு மதுவர்ஷன் அவளைப்பற்றி கூறியதே நினைவரைகளில் வந்து போனது.

விரக்தியாய் உதடுகள் புன்னகைக்க... இதற்குமேல் பேசுவது பயனற்றது என எண்ணிக்கொண்டவரோ, வாசுதேவ்வின் தோள்களை தட்டிவிட்டு அவ்விடம் விட்டகழ்ந்தார்.


வாசலை அவர் தாண்டவில்லை.

"பாத்தீங்களாப்பா.... நான் பேசிட்டே இருக்கேன்.. மரியாதை இல்லாம அந்தாள் போயிட்டு இருக்காரு... இவங்கள முதல்ல நடு தெருவுக்கு வர வையுங்கப்பா... அப்ப தான் இவங்க நம்ம வழிக்கு வருவாங்க.' ஆதங்கமாம் தந்தையிடம் புகர் செய்தவள் கன்னத்தை பதம் பார்த்தது அவளது அன்னையின் கரம்.

"அவங்கள நடு தெருவுக்கு கொண்டு வரது இருக்கட்டும்டி.. யாரு உதவியும் இல்லாமா உன்னால இனி எந்திரிக்க முடியுமாடி?

ஒரே பொண்ணுன்னு செல்லம் குடுத்து வளர்த்தோம். அதுக்காக எந்த எல்லைக்கும் போவியாடி.. உன்னோட இந்த குணத்தினால தான் எப்பவும் நீ எந்திரிக்கவே கூடாதுன்னு பெட்லயே கடவுள் போட்டுட்டார். இதுக்கு மேலயும் எந்த தண்டனைடி தந்தா நீ திருந்துவ...?" ஆதங்கமாய் ஆரம்பித்தவருக்கு கண்ணீரே எஞ்சியது.

"இத பாருங்க... இதுக்குமேல இவளுக்கு உடந்தையா போகாதிங்க. ஏதோ அந்த பையன உயிரா விரும்புறா... அதனால தான் இந்த மாதிரி நடந்துக்கிறான்னு தான் நினைச்சேன். ஆனா இவ அந்த பொண் பழிவாங்க தான் இப்பிடி பண்ணிருக்க..

இவ பண்ண பாவத்துக்கெல்லாம் இவளோட சேர்ந்து நாங்களும் தான் கஷ்டப்படுறோம். இனிமேலாவது இவளோட ஆட்டத்துக்கு ஆடாம யோசிச்சு முடிவெடுங்க." என்றவர் மகளை முறைத்துவிட்டு வெளியேறினார்,

"அப்பா...." என்றவளை கண்டுகொள்ளாது, அவரும் மனைவியின் பின்னால் சென்றார்.

அவருக்கு தான் தெரியுமே! மகளின் தகாத செயல்களால் தான் இத்தனையும் கடவுள் அவளுக்கு அன்பளிப்பாக கொடு்த்தது.

இங்கோ அகரனின் நினைவில் அடைபட்ட கதவில் சாய்ந்து கண்ணீர் வடித்தவள் கண்கள் தான் ஓய்ந்த பாடில்லை.

"கதவை திறம்மா..... இப்போ நீ கதவை திறக்கலன்னா என்னை ஏதாவது செய்துப்பேன்." உள்ளே இருந்து இதே போல் குரல் கொடுப்பது இத்தோடு பல முறையாயிற்று.

"செய்டி... நல்லா செய்..! நீ செத்தே போனாலும், அந்த அனாதை பயலுக்கு உன்னை கட்டி வைக்க மாட்டேன்." கத்தியவர் குரலை மீறி பல கார்களின் சத்தம் வாசலில் கேட்க.

'இத பாருடி... அவங்க வந்துட்டாங்க போல.. இதுக்கப்புறமும் அடம்புடிக்காம, எடுத்து வைச்ச நகையையும், பட்டு புடவையையும் கட்டிட்டு நல்ல புள்ளையா வெளிய வர, இல்லன்னு வையி... அந்த அனாதை பையன் சாவுக்கு காரணம் நீ ஆகிடுவ..."

"ம்மா... ஏம்மா இந்த மாதரி பண்ற... அவன் ரொம்ப நல்ல பையன்ம்மா... புரிஞ்சுக்கோ..."

"ஊஸ்..... அளை மீறி அடக்கும் சத்தத்தை வெளியேற்றியவர், அவங்க உள்ள வராங்க... பேச்ச நிப்பாட்டிட்டு, சொன்னதை செய்!" என்ற குரல் தேய்ந்து மறைய..

"வாங்க வாங்க...' என அன்போடு உபசரிக்கும் அன்னையின் நடிப்பை கேட்டவள் உள்ளம் தான் தவியாய் தவித்தது.
தன் காதல் ஏற்கப்படாமலே புதைக்கப்படுவதை அவளால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.

'இவங்க சொல்லிட்டா நான் ரெடியாகி வந்திடணுமா? அவங்களுக்கே அவ்வளவுன்னா, அவங்களுக்கு பொறந்த எனக்கு எவ்வளவு இருக்கும். அவங்க பேச்சை கேட்டு நடக்க என்னை என்ன அம்முன்னு நினைச்சிட்டாங்களா...? ரெடி ஆகினா தானே உங்க பருப்பு வேகும்... இன்னைக்கு அவங்களா நானான்னு பாக்குறன்." தனக்குள் சபதம் எடுத்தவளாய், இறுமாப்புடன் கட்டிலில் சென்று அமர்ந்து கதவையே வெறித்திருந்தாள்.

நீண்ட நேர உரையாடல் வந்தவர்கள் மத்தியில் அரங்கேறிக்கொண்டிருக்க, வந்திருந்த மாப்பிள்ளைக்கு தான் பொறுமை காற்றில் கரைந்தது.

"ம்மா..." என தலையை சொறிந்தவன் அர்த்தம் புரிந்தவனாய்,
"வந்து ரொம்ப நேரம் ஆயிடிச்சு.. நாங்களே பேசிட்டிருந்தா எப்பிடி..? பொண்ணையும் கூப்பிட்டிங்கன்னா... அவளும் நம்ம கூட சேர்ந்து பேசுவால்ல..." என மாப்பிள்ளையின் அன்னை ஜாடையில் பாெண்ணை பார்க்கவேண்டும் என்று கூற.

"இதோ.. அழைச்சிட்டு வறேன்." புன்னகையுடன் அவர்கள் முன் எழுந்து கொண்டளுக்கு, அவர்களை தாண்டியதும் பீதியாகியது.
அவருக்கு தான் மகளை பற்றி தெரியுமே.. வந்தவரகள் முன் என்ன இளவை இழுத்து வைக்கப்போகிறாளோ என்று பயத்துடனே உள்ளே சென்று கதவை அடைத்தவர்,

"ஏன்டி அவ்வளவு சொல்லியும் ரெடியாகாம இருக்க.. இந்தா முதல்ல இதை உடுத்து." என கட்டிலிருந்த துணியை எடுத்து கொடுத்தவள் முகத்திலே அந்தப்புடவை வீசியடிக்கப்பட, ஆத்திரம் கொண்டவர், ஓங்கி ஒரு அறைவிட்டு,

"இப்ப இதை உடுத்துட்டு வெளிய வரல, வெளிய யாரிருக்கான்னெல்லாம் பாக்க மாட்டேன். நானே உன்னை சாவடிச்சிட்டு போலீஸ்ல போய் சரண்டர் ஆகிடுவன்." கடிபட்ட பற்களிடையே வார்த்தையை துப்பியவர், அடுத்த நொடிே கதவை அறைந்து சாத்திவிட்டு.

"அமுதா... அமுதா....." அவள் கத்திய கத்தலில் கிச்சனில் இருந்தவள் பதறியடித்து ஓடிவந்தாள்.

"ஏன்டி அவளும் நீயுமா சேர்ந்து என் முகத்தில கரியையா பூச பாக்கிறீங்க. என்ன சொய்வியோ ஏது செய்வியோ..! இன்னும் பத்தே நிமிஷத்தில அவ வெளிய வரணும். இல்லன்னா என்னோட சுயரூபத்தை நீ பாப்ப..." என அவளுக்கு மட்டும் கேட்பது போல் மிரட்டிவிட்டு, திரும்பும் போது தான் தன்னையே வந்தவர்கள் பாத்திருப்பது தெரிந்தது.

சட்டென தன் முக தோறணையை மாற்றிக்காெண்டு, கன்னம் வரை இழுத்து சிரித்தவள்,

'வீட்டுக்கு ஒரே பொண்ணு... செல்லமா வளர்த்துட்டோம். சாறி கட்ட தெரியாததனால ரெடியாகாம அப்பிடியே நிக்கிற.. அதான் இவளை அனுப்பி வைச்சேன்." என சாமாளித்தவறு வந்து அமர்ந்தார்.


எதிர்த்து பேச முடியாது உள்ளே வந்த அம்மு.. புடவையை எடுத்து கொடுத்து, "இதை கட்டிட்டு வா ஆரா." என்றாள்.

'என்னால முடியாது அம்மு. நான் எங்கேயும் வரமாட்டன்." முறுக்கிக்காெண்டு திரும்பி நின்று கொண்டாள்.

"நான் தான் சொல்லுறேன்ல.. முதல்ல இதை கட்டு!"

"என்ன நீ... அவங்களுக்கு பரிஞ்சு பேசிட்டிருக்க.. நீயில்ல யாரு சொன்னாலும் நான் வரமாட்டன்."
"உனக்கு இப்போ அகரன் வேணுமா வேண்டாமா.? அகரன் வேணும்னா, பிரச்சினை பண்ணாம கட்டிட்டு வா! அதுக்குள்ள நான் காபி போட்டு எடுத்துட்டு வரேன்." என வெளியேறி விட்டாள்.

அவளது பேச்சை கேட்டதும் அமைதியாகவே தயாராகி வந்தவள் கைகளில் காப்பியை தந்தவள்,
"எதைபத்தியும் யோசிக்காம இதை கொண்டுபோய் வந்தவங்களுக்கு குடு!" என்று அவள் ஒதுங்கிக்காெள்ள..

கேள்வியாகவே அவளை பார்த்தவாறு தட்டினை வாங்கிக்காெண்டு, வந்தவர்களுக்கு கொடுத்தவள், ஓரமாக நின்று கொண்டாள்.

திடீரென வாசலில் கேட்ட வண்டி சத்தத்தில், கணவனை கேள்வியாய் சோபனா திரும்பி பார்க்க,

அழுத்தமான காலடித்தடத்தின் ஓசையை தொடர்ந்து, புயல் வேகத்தில் உள்ளே நுழைந்து, காலியாய் இருந்த இருக்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தவனையே பீதியாக சோபனாவும், கணவனும் நோக்க, அவன் பின்னால் அமைதியாக வந்து நின்றவனை காதலாய் மேய்ந்தது ஆராதனாவின் விழிகள்.

ஆம் வந்தது யாருமல்ல.. மதுவர்ஷனே தான். கூடவே அகரனும் வந்திருந்தான்.

"அப்புறம் வீட்டில விசேஷம் போல.. இவங்க தான் மாப்பிள்ளை வீட்டு காரங்களா..?

ஏன் அத்த... இவ்ளோ பெரிய ஏற்பாடு நடக்குது. வீட்டுக்கு வரப்போற மருமகனுக்கு இதெல்லாம் சொல்லி அனுப்ப மாட்டீங்களா..? பாருங்க யாரோ மூலம் கேள்வி பட்டு வரவேண்டியதா கிடக்கு." இயல்பாக சோபனாவிடம் கேள்வி எழுப்பியவன் பேச்சில் அவர் முழிக்க,

"அப்புறம் மாப்பிள்ளை! பொண்ணை பிடிச்சிருக்கா....? அது சரி ஆராதனாவ யாருக்கு பிடிக்காம போகும்.? ஆனா அதில ஒரு சிக்கல் இருக்கே மாப்பிள்ளை!" புதிரோடு நிறுத்தினான்.

"சிக்கலா...? என்ன?
ஆமா நீங்க யாரு? இவங்களுக்கு ஒரே பாெண்ணு தானே! நீங்க மருமகன்னு ஏதோ சொல்லுறீங்க.'

"அப்பிடியா சொன்னாங்க...? இதோ இந்த அம்மாக்கு ஒரு பொண்ணுதான். ஆனா இவங்க புருஷனுக்கு ரெண்டு..."

"மரியாதையா வெளிய போடா...." என அவனை முந்திக்காெண்டு குரல் கொடுத்த சோபனா,
"என்னங்க இவனை பேசவிட்டு வேடிக்கை பாக்குறீங்க? கதவு திறந்திருந்தா யார் வேணும்னாலும் வந்து என்னவும் பேசலாமா? முதல்ல இதுங்க ரெண்டையும் கழுத்தை பிடிச்சு வெளிய தள்ளுங்க.." ஆதங்கமாய் கத்தியவர் குரலை மீறி,

"எதுக்கு கத்துறீங்க? நான் என்ன நடக்காததையா சொன்னன்? அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். என் முன்னாடி யாரும் கத்திப் பேசக்கூடாது. அதையும் மீறி கத்தி பேசினா, அப்புறம் அவங்க பேசுற கடைசி வார்த்தை அதுவா தான் இருக்கணும். என்ன மாதிரி? உங்களோட கடைசி வார்த்தை இதுவா இருக்கணும்ன்னு விரும்புறீங்களா?" அமைதியாக கேட்டு விட்டு அவரை நோக்க. பயத்தில் கச்சிப்பாகிப்போனார் சோபனா.

ஏற்கனவே ஒருமுறை அவன் சீற்றத்தை பார்த்தவரால் மீறி பேசிட முடியுமா?


"ஆமா மாப்பிள்ளை! சிக்கல் தான்... அது என்னன்னா உங்களுக்கு பொண்ணை பிடிச்சிருக்கு, ஆனா பொண்ணுக்கு வேற ஒருதனை பிடிச்சிருக்கே!" என்றவனை வந்தவர்கள் புரியாது பார்க்க.

"அகரா இங்க வா!" என பின்னே நின்றவனை முன்னே அழைத்தவன், "இவனை தான் பொண்ணு விரும்புறா.." என்றான்.

"சார் என்ன பேசுறீங்க...?" என அவனை கண்டிப்பது போல் கூறியவன்,

மாப்பிள்ளை தரப்பினரை பார்த்து. "தப்பா எடுத்துக்காதிங்க.. அவரு புரியாம பேசுறாரு. எனக்கு இதில எல்லாம் உடன்பாடில்லை. நான் இவங்கள விரும்பவும் இல்லை." என்றவன்.
"சார் இதுக்காக தான் அழைச்சிட்டு வந்திங்கன்னா, தயவுசெய்து கிளம்புங்க." என்றான் உறுதியாக.

"பொய் சொல்லாத அகர்... உன் மனசில நான் இருக்கேன். அதை உன் கண்ணே காட்டிக்கொடுத்தும் ஏதோ காரணத்துக்காக மறுக்கிற.." என்று ஓடிவந்தாள் ஆராதனா.

"எப்பிடி எப்பிடி...? என் மனசில நீ இருக்கியா? எப்பிடி உன்னால இந்த வார்த்தைய சொல்ல முடியுது.? என் அம்முவ தினம் தினம் கொடுமை படுத்தின உன்னை, நான் விரும்பினேன்னா, என் அம்முக்கு இதை விட பெரிய துரோகம் எதுவுமே இருக்க முடியாது." உதட்டை சுழித்து கூறிவிட்டு, திரும்பி நின்றவனை கண்ணீர் கண்ட விழிகளுடன் நோக்கி நின்றவளை, கதவின் ஓரத்தில் மறைந்திருந்து பார்த்திருந்த அமுதாவால் இதற்குமேல் வேடிக்கை பார்க்க முடியவில்லை.

"அகர்...." என அவன் முன் வந்து நின்றவள்,
"என்னடா பேசுற... அவ எவ்வளவு கெஞ்சுற... நெருப்பு மேல நிக்கிறவள்கிட்ட காட்டுற இறுமாப்பாடா இது?
வேண்டாம்டா... எதுவுமே வேண்டாம்... உனக்கும் எனக்குமான நட்ப இன்னையோட முடிச்சிடலாம்." இத்தனை நாள் அந்த வீட்டில் ஒலித்திராத குரல் இன்று ஆதங்கமாகவே ஒலித்தது.

"உன்னோட ஆசைகளுக்கும் சந்தோஷங்களுக்கும் என்னோட நட்புத்தான் தடையா நிக்குதுன்னா, எனக்கு உன் நட்பு வேண்டாம். நானும் இனி உன்னை தேடமாட்டேன்." என்றாள் அம்மு.

'அம்மு புரியாம பேசாத... உனக்கு இவ என்னெல்லாம் பண்ணினா என்கிறத மறந்திட்டியா? இதோ இந்த கண்ணீர் கூட நடிப்பு தான். உன்னையும் என்னையும் ஏமாத்திறதுக்காக போடுற நாடகம்."

"இருக்கட்டுமே...! இதெல்லாம் அவ எதுக்காக பண்றா... நீ வேணும் என்கிறதுக்காக தானே!

புரிஞ்சுக்கோ அகர். இத்தனை நாள் அவ நடிச்சிருக்கலாம்.. ஆனா இன்னைக்கு அவ நடிக்கலடா.. நடிக்கிறவ மூணாவது மனுஷங்க மத்தியில நடிக்க மாட்டா... அவ உன்னை உயிரா விரும்புறாடா.. ப்ளீஸ் ஏத்துக்கோ.."
"அம்மு அவ உன்னை கஷ்டப்படுத்தினவடா! எப்பிடி என்னால அவளை..."

"இப்போ நான் தான் சொல்லுறேன் அகர். அவளை ஏத்துக்கோ. அவ இனிமே எந்த தப்பும் பண்ண மாட்டா. உன்னை நம்பி நானும் ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கிறேன்னு வாக்கு குடுத்திட்டேன். உன் ஃப்ரெண்டு வாக்க காப்பாத்த மாட்டியாடா..." கண்ணீரோடி பிச்சை கேட்பவளை போல் கையேந்துபவளிடம் இதற்குமேல் முறுக்கி கொள்வானா...?

அவள் கைகளை தன் கைகளுக்குள் பத்திரப் படுத்தி கொண்டவன்,
"இந்த மாதிரி கெஞ்சாதடி. இதை செய்னு உத்தரவு போடு! நான் செய்யறேன்.. ஆனா இப்படி நீ என்கிட்ட கேட்குறது கஷ்டமா இருக்கு அம்மு.." என்றான் வேதனையுடனே.

" அப்போ ஆராவ ஏத்துக்குறியா..?" என்று சந்தோஷத்துடனே கேட்டாள்.

தன்னை தாயாய் தாங்கியவளுக்காக அவள் கேட்டதை கொடுத்தான் அகரன்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஆராதனாவுக்கு தான் அவமானம் கொன்றது.

தான் யார் நன்றாக இருக்கக்கூடாது என்று நினைத்தோமோ, இன்று அவள் தன் வாழ்க்கைக்காக ஒருவனின் முன்பு கையேந்தி நிற்கிறாள்.. யாருக்காக எனக்காக என் மேல் அவள் வைத்த பாசத்திற்காக.. அவளுக்கு தீங்கு நினைத்த எனக்கும் நன்மை மட்டுமே செய்ய அவளால் மட்டுமே முடியும்.. ஆம் அம்மு அவளால் மட்டுமே முடியும் தூரோகத்திற்கும் மன்னிப்பை பரிசாக்க..

தன் மனமே தன்னை சாடியதில் அதிலிருந்த உண்மை அவளின் நெஞ்சை சுட்டதில் ஓடி வந்து அமுதாவின் காலில் விழுந்தாள் ஆராதனா.

தன் காலில் விழுந்தது ஆராதனா என்றறிந்த அமுதா, அவளை தன் கையால் அரவணைத்து தூக்கினாள்.

" ஆரா என்ன பன்ற நீ.. இப்போ எதுக்கு என் காலில் விழறே.." அதட்டினாள்.

"அம்மு என்னை மன்னிச்சிரு.. உனக்கு நான் எவ்வளவோ துரோகம் பன்னிருக்கேன்.. எவ்வளவோ கஷ்டப்படுத்தியிருக்கேன்.. ஏன் எத்தனையோ முறை உன்னோட கஷ்டத்தையும் கண்ணீரையும் பார்த்து சந்தோஷமா இருந்துருக்கேன்.. ஆனா அப்போல்லாம் நான் செய்யறது தப்புன்னு ஒரு நிமிஷம் கூட உணரலை.. ஏன் கொஞ்ச நேரத்துக்கு முந்தி வரைக்குமே உன் மேல வஞ்சத்தோட தான் இருந்தேன்.. இவ கிட்டலாம் கொஞ்ச வேண்டி இருக்கேன்னு..

ஆனா நீ எனக்காக அகரன்கிட்ட பேசுனதை பாத்ததும் தான், என் புத்திக்கு புரிஞ்சுது நான் பன்ன தப்பு.. சத்தியமா சொல்றேன் அம்மு.. இதோ இந்த நொடியிலேருந்து நான் மாறிட்டேன்.. திருந்திட்டேன் என்னை மன்னிச்சிரு அம்மு.. மனசார மன்னிப்பு கேட்கிறேன் மன்னிச்சிரு.." இருகரத்தையும் ஒன்றிணைத்து அவளிடம் வேண்டினாள்.

" அச்சோ ஆரா விடு! பழசை பேச வேணாம். இந்த நிமிஷம் நீ மாறினே இல்லை அது போதும்.. அதுவும் நீ அகரனுக்காக மாறியிருக்கே.. நான் சந்தோஷம் தான் படறேன் ஆரா.. உன் வாழ்க்கையும் அகரனோட வாழ்க்கையும் சந்தோஷமா இருந்தா போதும்.." மனமெங்கும் பரவிக் கிடக்கும் சந்தோஷத்துடன் கூறினாள்.

"அகரா நான் மாறிட்டேன்.. ப்ளீஸ் என்னை மன்னிச்சி ஏத்துக்கோ.. நான் உன்னை உண்மையா தான் விரும்பறேன் அகரா.. " அகரனிடமும் தன் மனமாற்றத்தை சந்தோஷத்துடன் கூறினாள்.

அவனோ "என் அம்மு சொன்னதுக்காகத் தான் நான் உன்னை கல்யாணம் செய்துக்க ஒப்புதல் தரேன்.. இல்லை என் அம்முவ படுத்தின கஷ்டத்துக்கு உன்னையெல்லாம் நான் ஏன் கட்டிக்க போறேன்.." சற்று காட்டமுடனே கூறினான். எங்கே அவள் மீண்டும் அமமுவிடம் தன் பழைய குணத்தை காட்டிவிடுவாளோ என்ற எண்ணத்தில் அவளை இப்பொழுதே அடக்கினான்.

அவன் கூறியதும் அவள் முகம் சுருங்கி போனது.. அதை அறிந்த அமுதா அவள் கையைப் பிடித்து அழுத்தினாள் ஆறுதலாய். அதில் தெளிந்தவள் அம்முவை பார்த்து அழகாய் புன்னகைத்தாள்.
 
Top