• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

விலகாதே என்னுயிரே 03

fajeeha mumthaj

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 14, 2023
Messages
80
தனிமையோடு கழிந்திடும் பொழுது தலையணைகள் மட்டும் சாட்சி சொல்லும்
இரவில் தொடரும் நினைவின் பக்கங்களை....

இதோ இங்கு வெறுந்தரையில் படுத்திருந்தவனின் போனில் அவளோடு உரையாடிய தருணத்தை பார்த்து கொண்டிருக்கிறான் வருடங்கள் கடந்தும் அதை ஆயிரம் முறை படித்தாலும் திரும்பவும் படிக்க, பார்க்க சலிப்பது இல்லை அவ்வளவு முக்கியமான தருணங்கள் அது
அவனது போனில் கோல் ஹிஸ்ட்ரி முழுக்க அவளது கோல் ஆனால் அவன் அதை எடுக்காமல் அவளை தவிக்க விட்டது ஒரு பக்கம் இருந்தது எல்லாம் ஒரு காலம் அப்போது அதன் அருமை தெரியாமல் இப்போது கவலைபட்டு என்ன பிரயோஜனம் யாரின் போன் கோல் வந்தால் முன் எல்லாம் திட்டி அடித்திருக்கிறானோ இப்போ அவளுடைய அழைப்பை தவிர மற்ற அனைவரது கோல்யும் வரும்
"ஒரு தடவையாவது கோல் பண்ணிடுடி ப்ளீஸ்..."என மனதோடு கெஞ்சாதே நாட்களே இல்லை....




அந்த அறையில் பெரிதாக மாட்டப்பட்டிருந்த புகைபடத்தை பார்த்தான் கன்னத்தில் குழி விழ அவன் தோளில் சாய்ந்தபடி போஸ் குடுத்திருந்தாள் மெஹ்திரா கல்லூரி காலமது அந்த கண்களில் எத்தனை காதல் அந்த உண்மையான காதலுக்கு தானே தூரகம் செய்து விட்டேன் என்றவனுக்கு
அழுகை வர தேம்பி தேம்பி
அழுதான் ரதி.... என்று அவன் போட்ட அழுகையை கண்டு மனமிருந்தால் நான்கு சுவர்களும் கூட கண்ணீர் விட்டிருக்கும்....





வேலைவிட்டு வந்தவளும் கொட்டும் பனியில் வெளியில் வெறித்த பார்வையோடு நின்றிருந்தாள் மெஹ்திரா.


"ரேயன்... இப்போ குடும்பமா வாழ்ந்திட்டிருப்பிங்க ஆனா என்னாலே தான் முடியலே 29 வயசு பொண்ணு தனியா இருக்கேன் கல்யாணம் பண்ணலே.. என்ன குறையோன்னு என் முன்னாடி பேசலன்னாலும் ஒவ்வொருத்தரும் பின்னாடி பேசுறாங்க எப்பிடி உங்களாலே முடிஞ்சது 12 வருட காதல் ஒரு நாளையிலே தூக்கி போட்டீங்க அவளோ தானா? உங்க காதல்... காதலிச்ச ஒருத்தி நீங்கதான் கதின்னு இருந்த ஒருத்திய நடுதெருவுலே விடுறது தான் உங்க ஊர் காதலா ரேயன்?..." என்று மனதோடு உரையாடியவள்
நடந்ததை நினைத்து அழுதவளின் வலியும் வேதனையும் அவளை நத்தையாக சுருட்டி எடுக்க ஒவ்வொரு நாளும் தொடரும் இந்த காதல் வலியோடு அந்த இரவையும் கடத்தினாள் பெண்ணவள்...



எப்போதும் போல் தான் வேலையில் கவனமாக இருந்தவளின் அறைக்குள் அனுமதியின்றி அவசரமாக நுழைந்தான்
நந்தன் செந்தில்நாதனுடைய சொத்திற்கு ஒரே வாரிசு அவன் கொஞ்சம் திமிரு பிடித்தவன்....



ஹேய்... என்றவனின் ஆளுமையில் பதறி எழுந்தாள் எப்போதும் போல்...


அவளின் மருண்ட விழியை கண்டு தன் புருவத்தை நீவி விட்டு "எதுக்கு பயப்புடுற என்ன பார்த்து நான் என்ன பேயா? பிசாசா? இங்க பாரு மெஹ்ரா எனக்கு உன்னை பிடிச்சதாலே தான் உன் பின்னாடி சுத்திட்டிருக்கேன் எங்கப்பன் இடத்தை விக்கனும்ன்னு சொன்னதும்
உன் மூஞ்சு சந்தோஷத்துலே அப்பிடியே
ஜொலிக்கிது..... அங்கே நான் உன்கூட பேசுறது உன்னை உக்கார்ந்து பார்த்துக்கிறத்துக்கு தானே மிருகங்க பூச்சி தொல்லன்னு கதைவுட்ட
எனக்கு அஞ்சு நிமிஷம் போதும் உனக்கு
தாலி கட்டி குடும்பம் நடாத்த ஆனா எனக்கு உன் விருப்பம் வேணும்.... அதுக்காக தான் நீ இங்க வந்த நாளையிலே கெடந்து காத்துக்கிட்டிருக்கேன் புரிஞ்சிக்க ட்ரை பண்ணு... இன்னும் ஒரு வாரம் டைம் குடுக்குறேன் முடிவு பாசிடிவ் ஆஹ் வரனும் இல்லேன்னு வை என்னோட முடிவு வேற மாதிரி இருக்கும்..." என எச்சரிக்கையோடு கூறி விட்டு போக
தொப்பென ஷேரில் அமர்ந்து விட்டாள்
எப்போதும் பார்வையோடுயும் சிறு வார்த்தையோடு கடப்பவன்
இன்று இப்படி பேசி விட்டு செல்கிறான்
அவன் சொன்னதை செய்யாமல் விடுபவனும் அல்ல நினைக்க நினைக்க
பயம் தொற்றி கொண்டது என் ரேயன் இருந்த மனதில் வேறொரு ஆணா? நினைக்கையிலே ஆயிரம் நெருப்பு துண்டுகளை மேனியில் கொட்டியது போல் இருந்தது பெண்ணவளுக்கு.....



"அம்மாடி பெட்டிலே எல்லாம் அடுக்கி வெச்சிட்டோம் வந்து கணக்கு பார்த்திட்டீங்கன்னா வண்டிலே ஏத்திடலாம்..." என்று ஒருவர் வந்து சொல்ல மற்றயதை ஒதுக்கி வைத்து விட்டு வேலையில் கவனமாகினாள்....



இங்கு தனது ஆபிஸில் பைல்களை புரட்டி கொண்டிருந்த ஆத்ரேயன் "நம்மளோட
கம்பனி ரன் ஆகுறத்துக்கு
ஒரு எஸ்டெட் வேணும்ன்னு சொன்னேன்
நம்ம கேட்ட விலைக்கு கெடச்சதா?..." என தன் பிஏவிடம் கேட்டு கொண்டிருக்க அவனும் பதில் சொல்ல தொடங்கினான்....


"மூணு இடம் நமக்கு ஏத்த மாதிரி தான் சார் இருக்கு இது அதோட ஃபோட்டோ நீங்க பார்த்திட்டு செலக்ட் பண்ணுங்க அதை ஃபைனல் பண்ணிக்கலாம் சார்..." என்றவன் ஐ பேட்யை நீட்ட வாங்கி ஒவ்வொரு போட்டோவையும் பார்த்தவன்
"ஆமா இந்த செகன்ட் ஆஹ் இருக்கிற எஸ்டேட் எங்க இருக்கு..." என்றவனிடம்
"முகில்வனம் சார் ரொம்ப நல்ல விளைச்சல் பார்க்க கூடிய இடம் அவருக்கு அதை மெயின்டென் பண்ண முடியலேன்னு விக்க போறதா சொன்னாரு நம்ம விலைக்கு ஓகே சொல்லிட்டாரு ஆனா அவரு ஒரு கன்டிஷன் போட்டாரு...." என்று தயங்கியவனை கண்டு புருவம் உயர்த்தி பார்த்தவன் "என்ன அது?.." என்று கேட்க....


"அங்க இருக்கிற வேலையாளுங்களை என்னைக்கும் வேலையே விட்டு நீக்க கூடாது அவங்களோட வாழ்வாதாரம் அதுலே தான் இருக்குன்னு சொன்னாரு சார் அதோட அங்கே ஒரு பொண்ணு டுவிசன் எடுக்குறாளாம்... அதுவும் அங்க எப்பவும் போல
நடக்கனுமாம் அதுக்கு ஒத்துகிட்டா எடத்தை தரேன்னு சொல்றாரு சார்?...." என்றவன் சொன்னதை கேட்டவன்
"இன்ரெஸ்டிங் ஓகே அந்த இடத்தையே பிக்ஸ் பண்ணிடு போய் அதுக்கான வேலையே பாரு..." என்று விட்ட வேலையை தொடர்ந்தான் ஆத்ரேயன்.....

தொடரும்.
 
Top