• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

விலகாதே என்னுயிரே 04

fajeeha mumthaj

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 14, 2023
Messages
80
இரண்டு நாட்களுடைய வேலைகளை முன் கூட்டியே செய்து முடித்த ஆத்ரேயன்
அவனின் பிஏவிடம் முகில் வனம் பற்றி டீடெயில் எல்லாம் எடுத்துக் கொண்டு அவனுக்கு வேலைகளை பிரித்து கொடுத்துவிட்டு கிளம்பினான் சாதாரண மனிதனாக முகம் தெரியாதவாறு சில அடையாளங்களை மாற்றி விட்டு அந்த ரயில்வே ஸ்டேஷனில் காத்திருந்தான்‌ அவனுக்கான அழைப்பு வரும் வரைக்கும்.

ஒவ்வொன்றாக அடுத்தடுத்து வந்து நின்ற ட்ரெயினை கண்டதும்‌ அவள் அன்று பேசிய நினைவுகள் தென்றலாய் வந்து போனது "ரேயன் நாம எல்லாரும் ஊட்டி போகும் போது என்னையே ட்ரெயின்லே கூட்டி போ நம்ம‌ கமல் இருக்கானே... அவன்‌ அதுலே போறது சேப் இல்லைன்னு வேணாம்னு சொல்லி கத்துறான்... தடிமாடு மாதிரி நீங்க வளர்ந்திருக்கும் போதுஉங்களே தாண்டி
எங்க மேலே ஒருத்தன் கை வெச்சிருவானா ஹா சொல்லு கையைவெச்சிடுவானுங்களா.?.. அவனை சமாதானபடுத்தி கூட்டிட்டு போடா?....." என்று கெஞ்சியவளை கமல்
இழுத்து காருக்குள் தள்ளி ஊட்டிக்கு கொண்டு போய்‌ நிறுத்திட சோகமாக உட்கார்ந்திருந்தவள் யாருடனும்
முகம் கொடுத்து பேசாமல் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு வந்தவளின்
காதிற்குள் எதையோ சொல்லி
சிவக்க வைத்து சிரிக்க வைத்து சகஜமாக மாற்றியதை நினைத்து
இப்போதும் அவன்‌ உதடுகளில்‌
மெல்லிய புன்னகை‌ இப்படி அவள் நினைவுகளில் இருந்தவனை நினைவூட்டியது‌ அந்த ஒலிபெருக்கி
அதன்படி அவனுக்கான சீட்டில் போய் அமர்ந்து கொண்டான்.

புதுவித மனிதர்கள் இயற்கையுடன் கூடிய
சூழல் என ஒவ்வொன்றையும்
பார்த்து பயணித்தால் ஆவது காயம் பட்ட மனதிற்கு இதமாக இருக்கும் என நம்பி
ரயில் பயணத்தை தெரிவு செய்தான்.

இவனின் இருக்கைக்கு எதிரே ஒரு சிறு பெண் ஒருத்தி வந்தமர்ந்தாள் "ஹப்பாடி வின்டோவ் சைட் சீட்
கிடைச்சிருச்சு..." என குதூகலமாக
வாய் விட்டு சொல்லியபடி அமர்ந்தவளை
நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு
திரும்பி கொண்டான் ஆத்ரேயன்.

சிறிது‌ நேரத்தின் பின் அவளாகவே "ஹாய்.... நீங்க எங்கே சார் போறீங்க.." என்றவளின் குரலில் திரும்பி அவளை வித்தியாசமாக பார்த்தவனுக்கு கள்ளங்கபடம் இன்றி
சிரித்தபடி கேட்டவளை அவமதிக்க தோன்றாமல் "முகில்வனம்..." என்றதும்

"அடே அது‌ நம்ம‌ ஊரு தான் சார் ஆனால் அங்கே உங்களைப் பார்த்ததே இல்லையே ஆமா நீங்க யாரு சொந்தம்?..." என விசாரிக்க...

"இல்ல அது‌ வந்து நான் சுத்தி பார்க்க போறேன் ஜஸ்ட் ஒரு ட்ரிப் மாதிரி...."

"ஓஹ் நைஸ் நைஸ் ஆமா உங்க பேரு என்ன? சார் சார்ன்னு கூப்பிடும்போது எனக்கு என் ப்ரொபஸர்மார் தான் ஞாபகத்துக்கு வராங்க இனியாவது அவங்க ஞாபகம் வராம இருக்கட்டுமே..." என்று சலிப்பாக சொன்னவளை கண்டு
புன்னகைத்தவன்.

"ஏன் படிக்க பிடிக்காதா?..." என்றவனிடம்
"அப்பிடி‌ பிடிச்சு தான் காலேஜ் போனதே ஆனா அவங்க எக்ஸாம் பிராக்டிகல்
செமஸ்டர் அசைன்மென்ட்ன்னு படுத்துறே பாட்டுலே அய்யோ
கடவுளேன்னு இருக்கு..." என்று சோகமாக சொன்னவளை கண்டு‌
"நல்லா தான்‌ பேசுற...." என்று திரும்பிக்கொண்டவனிடம்...

"வாய் இல்லன்னா இந்த உலகத்திலே வாழ‌ முடியாதே...."


"அது தெரியிற அளவுக்கு மூளையும் வேலை செய்யனும் இப்பிடி யாருன்னு
தெரியாத ஒருத்தன்கிட்ட‌ பேசிட்டு வரியே அதுவும்‌ தனியா வரும்‌ போது அவன்‌ நல்லவனா‌? கெட்டவனான்னு? தெரியாது
உன்னையே ஏதாவது பண்ணிட்டா என்ன பண்ணுவே..." என்றவனுக்கு தோன்றியதை கேட்டு விட்டான் நாட்டில் நடப்பது தானே...
அதற்கு சிரித்தபடியே "அது எல்லாம் பார்த்ததுமே கண்டுபிடிச்சிடுவேன் யாரு? எப்பிடி பட்டவங்கன்னு‌ உங்களோட‌ பார்வை என்னை நேருக்கு நேர் பார்த்து பேசுறதுலே தெரிஞ்சது நல்லவருன்னு‌.." என்றவள் சிப்ஸ் பாக்கெட் ஒன்றை பிரித்து ஒவ்வொன்றாக வாயில் போட்டு மென்றபடி வர "உசார் தான்.." என்றவன்
வெளியில் பார்வையை செலுத்தியவனின் முன்....


"ம்ம்... எடுத்துக்கோங்க.." என்று நீட்‌டினாள்.....

"இல்ல எனக்கு இது எல்லாம் சாப்பிடுற பழக்கமில்ல நீ சாப்பிடு...." என‌ மறுத்தவனை
பார்த்து "வித்தியாசமான ஆள் தான் நீங்க‌ ஆமா நான் கேட்டதுக்கு பதில் சொல்லலே ஒரு வேளை சொல்ல விருப்பமில்லயா?‌...." என்றவள் எதை கேட்க வருகிறாள் என புரிந்ததும்.

"ஆத்ரேயன் உன்னோட
பேரு?..."

"ஓஹ் நைஸ் என்னோடது
ஷைந்தவி சரி‌ எனக்கு
தூக்கம் வருது யாரும் நெருங்காம
பார்த்துக்கோங்க..." என்றவள்‌ கண் சிமிட்டி விட்டு ‌‌படுத்து‌கொள்ள,

"அடிப்பாவி இவளோ நேரம் நீ
பேசினது உனக்கு
செக்கியூரிட்டி வேலை பார்க்க தானா..."
என்றவனை திரும்பி பார்த்தவள்.

"ஆத்ரேயன் அவசரப்பட்டு இப்பிடி முடிவு எடுத்துக்காதீங்க ஏன்னா‌ என்னோட உதவி சில நேரம் தேவைப்படலாம்‌..."
என்று சொன்னவளை கண்டு

"ம்ம்‌.... படலாம் படலாம்‌‌..." என சிரித்து கொண்டே வேடிக்கை பார்க்க தொடங்கி விட்டான் இரவின் தென்றல் காற்றில்‌ இறுகிய மனம் லேசாக இந்த புதியவளின்‌ பேச்சிலும்‌ இயல்பாக மாறியவன்.....
தனது ஃபோனில் இருந்த புகைப்படத்தை எடுத்து பார்த்து அதை ஆசையாக வருடியவன் "எங்கயாச்சும் ஏதாச்சும் ஒரு மூலையிலே நீ இருக்கனும் உன்னை ஒரு தடவை பார்த்துடா.... போதும் உன்னை அப்படியே தூக்கிட்டு வந்திடுவேன்‌டி..." என மனதோடு பேசியவனின் எண்ணவோட்டம் அப்படியே நின்றது என்ன லவ்வா?? திடீர் என்று கேட்ட அவளின் கேள்வியில் பதறி திரும்பினான் ஆத்ரேயன்..........

தொடரும்.
 
Last edited:

fajeeha mumthaj

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 14, 2023
Messages
80
ஷைந்தவி கலகலப்பு சூப்பர், ஆத்ரேயன் ஷைந்தவி உதவியில் தன் காதலியை பார்ப்பனோ 🤔🤔🤔🤔🤔🤔
மிக்க மகிழ்ச்சி நன்றி மா
 
Top