• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

விலகாதே என்னுயிரே 06

fajeeha mumthaj

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 14, 2023
Messages
80
வந்திறங்கிய ஊர்யை சுற்றி ஒரு பார்வை
பார்த்தவன்‌ "ஆமா உன்னோட வீடு எங்கயிருக்கு அந்த ஊர்லே...." சாதரணமாக விசாரித்தான்.


"அங்கே க்ரீன்‌ எஸ்டேட்ன்னு ஒரு தேயிலை தோட்டம் இருக்கு அதுக்கு பக்கத்துலே‌ தான்
ஆமா அங்கே ஹாட்டல் கூட இல்லை எப்பிடி தங்குவே..." என யோசனை வந்தவளாய் கேட்டவளிடம்....


"ஒரு விஷயமா வந்திருக்கேன் அது சரியானதும் உன்கிட்ட சொல்றேன் அங்கே ஒருத்தர் இருக்காரு அவரை சந்திச்சா தங்குறது எல்லாம் ப்ராப்ளம் இல்லன்னு நினைக்கிறேன்‌...."
என்று சொன்னபடியே இருவரும் நடக்க
தொடங்கினர்‌‌....



அங்கிருந்து ஆட்டோ பிடித்து இருவரும் ஊர் எல்லைக்கு வந்தனர் "இங்கயிருந்தான் ஊருக்குள்ள போகனும் மலை பாதை கொஞ்சம் அப்பிடி இப்பிடி
இருக்கிறதனாலே ஆட்டோ போகாது
வண்டி வரும் அதுலே ஏறி ஊருக்கு போய்றலாம் இப்போ வா வயிறு கத்திக்கிட்டு இருக்கு அதுக்கு எதையாவது போடுவோம்..." என
நடந்தவள் பின்னே நடந்தான் ஆத்ரேயன்
அவனிற்கும் நன்றாக பசி
எடுத்திருந்தது அங்கிருந்த சிறிய
உணவகத்திற்குள் நுழைந்தனர் சுட சுட இட்லியை காரசட்னி சாம்பார் உடன்
ஒரு கட்டு கட்டினர் இருவரும்
அப்போது இவர்களை தாண்டி ஒரு வண்டி போவதை கண்டு "அண்ணே நிறுத்து...."
என கத்தியபடி ஓடினாள் ஷைந்தவி.



"அடே ஷைந்தவி எங்க புள்ள வீட்டுக்கா...." என கேட்ட நபரிடம் "ஆமாண்ணா எங்க‌ ரெண்டு பேரையும் இறக்கி விட்டிடு பின்னாலே ஏறிக்கிறோம்‌
ஆத்ரேயா ம்ம் சீக்கிரம் பின்னாடி வந்து ஏறு..." என அவசரபடுத்த‌ தோளில் இருந்த பையை தூக்கி போட்டு பின்னால் ஏறிக்கொண்டான்
இருவரும் ஏறிக்கொள்ள குட்டியானை முகில் வனத்தை நோக்கி பயனப்பட்டது
உயரம் அதிகரிக்க அதிகரிக்க குளிரும் அதிகமாக தனது ஜெர்க்கினை நன்றாக
இழுத்து விட்டு கொண்டு சுற்றி
இருக்கும் பச்சை பசேல் என கம்பளம் விரித்து நின்ற மலை முகடுகளை பார்த்தபடி வந்தவனை களைத்தது சப்பு கொட்டி சாப்பிடும் சத்தம்‌ என்ன
அது... என புரியாமல் திரும்பி பார்க்க
அங்கு தேன் பாட்டிலை திறந்து கொஞ்சமாக கையில் கொட்டி
சுவைத்து கொண்டிருந்தாள்‌ பெண்ணவள்....



"ஹேய்... இது எப்போ வாங்கினே கொஞ்ச நேரம் அந்த வாய்க்கு‌ ஓய்வு குடுக்க மாட்டியா அரைச்சிக்கிட்ட வரே... "


"எனக்கு தேன்னா ரொம்ப பிடிக்கும் அதான் தூக்கிட்டேன் இதோ இங்கே தான் இருக்கு...." என அங்கிருந்த அட்டை பெட்டி ஒன்றை சுட்டி காட்டியவள் "உனக்கும் வேணும்ன்னா எடுத்துக்கோ சுத்தமான தேன் நல்லாயிருக்கும்..." என்றவளிடம் "இப்ப தானே சாப்டேன் எனக்கு வேணாம்
அவங்க லிஃப்ட் தந்தது போதாதுன்னு இதையும் எடுத்து சாப்பிடுறே ஏதாவது நெனச்சிக்கப் போறாங்க பாரு‌.." என்றவனுக்கு இது எல்லாம் புதிது "எங்கூர்காரங்க அப்பிடி எல்லாம் சொல்ல மாட்டாங்க பார்க்க தானே போறே...." என்றவள் தன் வேலையில் பிஸியாக சிரித்து கொண்டே
திரும்பி கொண்டான் ஆத்ரேயன்...



பதினைந்து நிமிடத்தில் அவள்‌ வீட்டுக்கு செல்லும் வழியில் வண்டி நிற்க
"தாங்க்ஸ்ண்ணே...." என இறங்கியவளுக்கு
விடை கொடுத்து அவர் சென்று விட
"ஊர் வரைக்கும்‌ கூட்டிட்டு வந்திட்டேன் எங்க‌ தங்க போறேன்னு கேட்டாலும் சொல்ல மாட்டேங்கிற சரி என் வீட்டுக்காவது வா.." என அழைக்க
"இன்னொரு நாள் வரேன் நீ இங்க செந்தில் நாதன் வீடு எங்கயிருக்குன்னு மட்டும் வழியே சொல்லு நான் போய்க்கிறேன்...."


"அவர் வீடா..? என்று யோசனையுடன் கேட்டவள் "சரி இப்பிடியே நேரா போய் ரைட்லே திரும்பினா ஒரு ஒத்தயடி பாதை இருக்கும் அது இரண்டா பிரியிறே எடத்துலே லெஃப்ட்லே திரும்பி நட அடையாளத்துக்கு சொல்றேன் ஞாபகம் வெச்சிக்கோ ஒரு வேப்பமரம் இருக்கும் அதை கண்டா அது வழியா போ ஒரு பெரிய வீடு இருக்கும் அதுதான் அவரோட வீடு அந்த பாதையிலே உனக்கு நடக்க சிரமம் இருக்காது பார்த்து நட
வழி மாறி காட்டுக்கே கீட்டுக்கே போய்டாதே சிறுத்தை‌ புலி கடிச்சி செத்திருவே‌..." என்றவளிடம் "சரிங்க அம்மனி அப்பறம் நான்‌ வரேன்‌..." என்று நகர "பத்திரமா போ அங்கே போனதும் கோல்ஃப் பண்ணு..." என்றவளுக்கு
பயமாக தான் இருந்தது புதிய ஊரில்
தெரியாமல் போய் மாட்டிக் கொள்வானோ என்று‌.‌...




தேன் பேக்டரியில் வேலை பார்த்து கொண்டிருந்தவளுக்கு மனம்‌ அமைதியின்றி தவித்தது நந்தன் ஒரு‌ பக்க பிரச்சினை என்றால் காதலின் தடயங்கள் ஒரு பக்கம் அனைத்தும் ஒன்று சேர்ந்து தலைவலியை கிளப்பி விட
கணக்கு வழக்குகளை குறித்து வைத்த நோட்டை எடுத்து அங்கு வேலைப் பார்க்கும் ஒருவரிடம் கொடுத்து இதை
செந்தில்நாதன் வீட்டில் கொடுக்க சொல்லி விட்டு நடையை‌ கட்டினாள்
மெஹ்திரா....


இங்கு அவள்‌ சொன்ன அடையாளங்களை பார்த்த படி கவனமாக நடந்து வந்தான் ஆத்ரேயன் பாதையின் அருகில் இருந்த காடும் பள்ளங்களையும் கண்டதுமே அவள் எதற்காக அப்படி சொன்னால் என்பது புரிய தான் செய்தது வேப்பமரம் வர‌ "ஓஹ் காட் இன்னும் எவளோ தூரம் தான்
போறது..." என அலுப்பில் கூறியபட நடந்தவனின் பின்னால் இருந்து கழுத்தில் கத்தி ஒன்று வந்து அழுத்த நிதானமாக நின்ற ஆத்ரேயன் கத்தியை பிடித்திருந்த கையை முறுக்கி கத்தியை தன் கைக்கு இடம் மாற்றிக்கொள்ள...


அவனின் எதிர் தாக்குதலில் கீழே விழுந்தவள் வேற யாரும் இல்லை ஷைந்தவியே தான் "ஹேய் பிசாசு ரெஸ்ட் எடுக்காம இங்க என்ன பண்ணுற..." விழுந்தவளை‌ தூக்கி விட்டபடி கேட்டவனிடம்‌.



"அது தனியே அனுப்பி வெச்சிட்டோம்ன்னு மனசுக்கு பயமா இருந்திச்சா அதான் குறுக்கு வழியிலே புகுந்து வந்திட்டேன்
பரவாயில்லை நல்லா தான் ஃபைட் பண்ணுற..." என்றவளின் தலையில் லேசாக தட்டியவன் "லூசு சரி வா
போலாம்..." என நடக்க அவளும் பின்னாடியே நடந்தாள் ஊர் கதை பேசியபடி....



அவனோடு பேசியபடி வந்தவளின் சத்தத்தை காணாமல்‌ திரும்பி பார்க்க அவளின் பார்வை வேறு எங்கோ படியே
கண்களில் அப்படியொரு வலி அந்த வலியை அனுபவித்தவனுக்கு தெரியாமலா? இருக்கும் பார்வை செல்லும் இடத்தைப் பார்க்க அங்கு நந்தன் மெஹ்திராவை பைக்கில் அழைத்துக் கொண்டு சென்று‌ கொண்டிருந்தான்....

தொடரும்.
 
Top