• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

விலகாதே என்னுயிரே 08

fajeeha mumthaj

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 14, 2023
Messages
80
அங்கு வந்து நின்ற நந்தனை எல்லாம் அவள் கண்டுகொள்ளவில்லை
அதை கவனித்தும் கவனிக்காதது போல் இருந்து கொண்டாள்‌....


"ஹேய் இங்கவா..." என பைக்கில் இருந்து இறங்காமல் அதிகாரமாக அழைக்க
அவனை கண்டுகொள்ளாமல் இருவரும்
பேசிக் கொண்டிருக்க கடுப்பானவன்
"ஷைந்தவி கூப்பிடுறேன் காது கேக்கலே உனக்கு வா இங்கே..." என்று அழைக்க பொறுமையிழந்து
"என்னை நிம்மதியா இருக்க விடுங்களே
எதுக்கு டார்ச்சர் பண்ணுறீங்க அதான் உங்க வேலை சரி ஆகிடுச்சுல்லே அப்பறம் எதுக்கு என்ன‌ கூப்பிடுறீங்க‌ எனக்கு ஒன்னும் உங்களுக்கு வேலை பார்க்கனும்ன்னு தலையெழுத்தில்லே.... வா ஆத்ரேயா போலாம் இங்கே இருந்தா இரிடேட் ஆகுது‌..." என அவன்‌ கைப்பற்றி எழுந்து செல்ல போகும் அவளை தான்
பார்த்து கொண்டிருந்தான் இப்போ எதுக்கு இப்படி கோவப்படுது‌... என புரியாமல் பார்த்துக்
கொண்டிருந்தான் அவன்....



"அய்யோ ஷைந்தவி அழாம இருந்தாளாவது உன்னோட முகத்தை கொஞ்சம் பாக்குறே மாதிரி இருக்கும் இப்போ....." என நிறுத்தியவனை முறைப்பாக பார்த்தபடி இப்போ.... என அவன் கேள்வியாக முடித்ததை தொடர "சத்தியமா சொல்றேன்
இப்போ இப்படி பார்க்கவே முடியலே அய்யோ சரியான அழு மூஞ்சி..." என்றவனை துரத்தி கொண்டு ஓடினாள்
"என்னையே கிண்டல் பண்ணுறீயா?..." என அவள் கைக்கு அகப்படாமல் போக்கு காட்டி ஓடியவனை ஒரு வழியாக பிடித்து அவனை அடி பின்னி எடுத்தவளை கண்டு "இப்போ ஃபீலிங் மூட் சேன்ஜ் ஆகிடுச்சா?..." என கேட்டவனிடம் புன்னகையுடன் தலையாட்ட " சரி அடுத்தை யோசிக்கலாமா?.." என கேட்டவனை புரியாமல் பார்க்க.‌....


"நீ சொன்னதை வெச்சி பார்த்தா அந்த பொண்ணுக்கு கல்யாணம் பண்ண விருப்பமே இல்லை போல‌ இவன் தான் கம்பெல் பண்ணிட்டு இருக்கான் இங்கே அந்த பொண்ணை விடு இவனை தான் மாத்தனும் ஆமா அந்த பொண்ணு யாரு??..." என அவளை பற்றி கேட்டவனிடம்....



"அவங்க பேர் தவிர்த்து அவங்க யாருன்னு எல்லாம் எங்களுக்கு தெரியாது கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி தான் இந்த ஊருக்கு வந்தாங்க யார் கூடவும் மிச்சமா பேசவும் மாட்டாங்க அமைதியா அவங்க உண்டு அவங்க வேலை உண்டுன்னு இருப்பாங்க
படிச்சு இருப்பாங்க போல இங்க ஸ்கூல் வசதி எல்லாம் இல்ல பிள்ளைங்க படிப்புலே வீக் ஆஹ் இருக்கிறதை பார்த்து அவங்க டுவிசன் எடுப்பாங்க அஞ்சாங் க்ளாஸ்யோட நிக்கிற புள்ளங்கே எல்லாம் காலேஜ் வரைக்கும் படிக்க போகுதுன்னா அது இவங்களாளே தான் அந்த அளவுக்கு மோடிவ் பண்ணி படிக்க வைப்பாங்க எல்லாரோடயும் நல்லா பழகுவாங்க ஆனா மனுஷங்க குணம் தான் பலவிதமே அந்த அக்கா கல்யாணம் ஆகாம இவளோ‌ வயசு வரைக்கும் இருக்குதுன்னு அவங்களே நல்ல காரியங்கள் நடக்கும் போது நிற்க வைக்க மாட்டாங்க அவங்களுக்கு ஏதோ குறைன்னு ஒதுக்கி தான் வைப்பாங்க அது தெரிஞ்சாலும் அந்த அக்கா சிரிச்சிட்டே ஒதுங்கிடுவாங்க‌...." என கூறியதை கேட்டு இவனின் மனம் அவனை அறியாமலே அவளை தேட தொடங்கியது....



"அவங்களுக்கு ஏதோ காரணம் இருக்கும் போல அதான் இப்படி தனியாளா இருக்காங்க..." என்றவளிடம் "ஹேய் நீதானே இப்போ அவங்க சொன்ன‌தா சொன்ன என்னோட மனசு இன்னொருத்தன் கிட்ட இருக்குன்னு சொன்னாங்கன்னு லவ் பெயிலியர்ன்னு நெனக்கிறேன்...."


"ஆமா அதை மறந்துட்டேன் அப்பிடியும் இருக்குமோ..." என சிந்தித்து கொண்டிருந்தவளை "சரி நீ என்ன பண்ணு வீட்டுக்கு போ கல்யாணம் எப்பிடி நடக்குதுன்னு நானும் பாக்குறேன் அவனோட உனக்கு தான் கல்யாணம் நடக்கும்..." என்றவனை விழி விரித்து "பார்க்க காதலிச்சு தோத்து போற வலி என்னோட போய்றட்டும் வேற யாருக்கும் அந்த வலி வரக்கூடாது நான் பாத்துக்கிறேன்....." என தைரியமூட்டி அனுப்பியவன் நந்தனுடன் பேசனும் என முடிவு எடுத்து வீட்டுக்கு செல்ல அங்கு அவனோ செந்தில்நாதனுடன் வாக்கு வாதத்தில் ஈடுபாட்டு கொண்டிருந்தான்...


அவர்களோடு எதையோ கோபமாக பேசியப்படி நகர்ந்தவனின் அருகே
வந்த ஆத்ரேயன் "உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் மிஸ்டர் நீங்க ஃப்ரீயா?.." என்றவனை‌
புரியாமல் பார்க்க பேஷ்னல்.... என அவனுக்கே உரிய ஆளுமையோடு நின்றவனை கண்டு என்ன நினைத்தானோ "வாங்க... என அழைத்தபடி வீட்டின் பின் பக்கமாக‌
கூட்டி வந்தவன் அங்கிருந்த ஷேரில் இருக்க சொல்லி விட்டு
தானும்‌ உடன் அமர்ந்தான் என்ன விஷயம்? என கேட்டப்படி....



"நான் நேராவே விஷயத்துக்கு வரேன் மிஸ்டர் நீங்க யாரயோ லவ் பண்ணுறதாவும் அவங்களை மிரட்டி கல்யாணத்துக்கு ஒத்துக்க வெச்சதாவும் கேள்வி பட்டேன் உங்களை
லவ் பண்ணாதவங்க பின்னாடி இப்படி அலைஞ்சு வாழ்க்கையே மிரட்டி வாழுறதை விட உங்களுக்காக உங்களை நெனச்சிட்டே வாழுறவளே கல்யாணம் பண்ணிக்கலாமே மிஸ்டர்...." என்றவனை புரியாமல் பார்க்க "எஸ் உங்களை ஒருத்தி காதலிச்சுக்கிட்டு இருக்கா நந்தன்
கூடிய சீக்கிரமே அவளை கண்டுபிடிச்சு லவ் பண்ணுங்க லைஃப் சூப்பரா இருக்கும்..." என புன்னகையுடன் கூறியவனை கண்டு‌ "யாரது??"
என கேட்க
"அதை நீங்க தான் கண்டுபிடிக்கனும்..."
என புன்னகையுடன் எழுந்து கொள்ள "என்ன பாஸ் சும்மா இருந்த என்னை குழப்பி விட்டு போற..." என்றவனுக்கு ஒரு புன்னகையை பதிலாக குடுத்து அமைதியாக கடந்திட யாராக இருக்கும்
என யோசித்து நாட்களை கடத்தியவனுக்கு வேற யோசனையும்
வரவில்லை அறிந்தோ அறியாமளோ செய்த இந்த விடயம் அவனவளுக்கு அது நல்லதாகவே போய் முடிந்தது...




ஐந்து நாட்கள் அங்கிருந்து தோட்ட வேலைகளை எல்லாம் பார்த்து விட்டு அறுவடை ‌முடிந்து அது கம்பனிக்கு
வந்து சேரும் விதமாக
ஏற்ப்பாடுகள் எல்லாம் முடித்தவன்‌
நாளை கிளம்பலாம் என்று இருக்க அவனை தேடி வந்தாள் ஷைந்தவி அவளை கண்டதும் துணிகளை அடுக்கி வைத்து கொண்டிருந்தவன்
"என்ன மேடம் மாமியார் வீட்டுக்கு வந்திருக்கீங்க உங்க ஆளை பார்க்கவா..." என்றவனை முறைத்தவள்....



"அவன் எல்லாம் நான் எதுக்கு தேட நான் எப்பவும் போல உன்ன தான் தேடி வந்தேன் வேலை வேலைன்னு ஓடிடுறே நாளைக்கு எங்க வீட்டுலே மதியம் சாப்பாடு வந்திடு அப்பறம் சாப்பிட்டு எங்கே வேணா போ சரியா..." என்று அன்பு கட்டளை இட்டவளிடம் "வீடு கட்டிட்டு இருக்கேன் ஷைந்து அந்த வேலை இரண்டு‌ நாளையிலே முடிஞ்சிரும் அப்போ பொறுமையா வரேன் இனி டெக்ரேசன் வேலை தான்..." என்றவனிடம் "சரி வேலை முடிஞ்சதும் உனக்கு செட்டாகுற மாதிரி நாள் சொல்லு நான் ஏற்ப்பாடு செய்றேன்..." என அவளும் விடைப்பெற்று நகர செந்தில் நாதனிடம் எஸ்டேட் காண விலையை‌ செக்காகவும் பணமாகவும் கொடுத்து விட்டு அதை வாங்கியவன் ஷைந்தவி விஷயத்தையும் காதில் போட்டு வைக்க அவனை அதிர்ச்சியாக பார்த்தவர் "வந்த கொஞ்ச நாள் அந்த பொண்ணோட தான் உங்களை பார்த்தேன்‌ தம்பி தெரிஞ்ச புள்ளயா... என்ன?" என்று கேட்டவரிடம்
ட்ரெயினில் சந்தித்ததை கூறினான்....



"ஓஹ் சரி தம்பி நான் மெஹ்ரா புள்ள கிட்ட கேட்டு கிட்டு எம் மகன்கிட்ட பேசுறேன்..."
என்றவரிடம் விடைபெற்றவன் எஸ்டேட் அருகே இருந்த ஒரு‌ அறையை அவனால் சிறிய வீடாக மாற்றி அமைக்கப்பட்டு வந்து‌ தங்கி கொண்டான் ஏனோ விருந்தாளியாக இருந்தாலும் அவனுக்கு அங்கு தங்க மனமில்லை அதான் வந்து விட்டான் ஆபிஸ் வேலைகளை இங்கிருந்தே பார்த்துக் கொண்டிருந்தான்.....



ஒருவாரம் முடிய‌ இன்னும்‌ சில மணிநேரம் இருக்க அவள்‌ முன் வந்து‌ நின்றான் நந்தன்....


"முடிவு‌ எடுத்திட்டியா மெஹ்ரா..." என்று வந்தவனை கண்டு பெருமூச்சு விட்டவள்‌ "நான் கொஞ்சம் பேசணும்
அதுக்கப்பறம் உங்க
முடிவு என்னன்னு நீங்க சொல்லுங்க என்ன சரியா?..." என கேட்டவளை புரியாமல் பார்த்து தலையசைத்தவனை வாங்க... என அழைத்துக் கொண்டு உயரமான குன்றின் அருகே‌ வந்தமர்ந்தாள் கீழே அப்படி ஒரு பள்ளம் மேலிருந்து கீழே பார்த்தாள் இவர்களது ஊருக்குள் நுழையும் போது இருக்கும் கிராமமும் அதில் உள்ள வீடுகள் தீப்பெட்டி போல தெரியும் அவளின் கவலை போக்கும் ஒரு இடம் அது பச்சை பசேல் என இருக்கும் அந்த இடத்தை பார்க்கையில் மனதை இதமாக வருடிடும் அந்த ஏகாந்தம்....



எதிர்ப்படும் தென்றலை ரசித்த வண்ணம் "என்ன பத்தி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? நந்தன் முன்னாடி எங்க இருந்தேன் என்ன பண்ணிட்டு இருந்தேன்னு தெரியுமா?.." என கேட்டவளிடம் தெரியாது என்பது போல் தலையசைக்க "அப்போ எந்த நம்பிக்கையிலே என் பின்னாடி
லவ்ன்னு சுத்துறீங்க...." என கேட்டவளிடம்
"பார்க்க அழகாக இருந்த
உன்னோட அமைதியான குணம் இது தான் உங்க மேலே லவ் வர காரணம்..." என்றவனை கண்டு புன்னகைத்தவள்.


"ஆனா நீங்க சொன்ன எதுமே இல்லாம என்னை அம்மாவா தாங்கின ஒருத்தன் மேலே தான் எனக்கு காதல் வந்திச்சுன்னு சொன்னா நம்புவீங்களா???" என்றவளை அதிர்ச்சியாக பார்த்தவன் "நீ ஒருத்தனை லவ் பண்ணியா?.."என கேட்டான் நந்தன்.

தொடரும்.
 
Top