• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

விலகாதே என்னுயிரே 09

fajeeha mumthaj

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 14, 2023
Messages
80
"நீ காதலிச்சிருக்கியா?..." என கேட்டவனிடம் ம்ம்‌... ஒரு பெருமூச்சை‌ வெளியேற்றி "ஆமா அம்மா அப்பா யாருன்னு கூட தெரியாம வளர்ந்த எனக்கு‌ நான் இருக்கேன்னு என்னை தாங்கினவன் தான் என்னோட ரேயன் ஆத்ரேயன்‌...." அந்த பெயரை சொல்லும் போதே அவள் உதட்டில் அப்படி ஒரு புன்னகை...


அவளோடு நாமும் கதைக்குள் பயனிக்கலாம்...


அன்பு இல்லம் அது தான் அவளின் வீடு அவளின் உலகம் எல்லாம் அப்படி இருந்தவளுக்கு தனது பத்தாவது வயதில் கிடைத்த புதிதான சொந்தங்கள் தான் அந்த வானர கூட்டம் அதில் அனைவருடன் சகஜமாக பழகினாலும் ஆத்ரேயனின் சிறு அதட்டல் கூட கண்ணீரை வர வைத்திடும் அவளுக்கு
அவர்களின் வீட்டில் இருந்து கொண்டு வரும் உணவுகளை பகிர்ந்து சாப்பிட்டு ஒன்றாக சேட்டை பண்ணி சுற்றி கொண்டிருக்க மாதங்களும் வருடங்களாக மாறியது.....


அன்று பத்தாங் க்ளாஸ்யை தொட்ட வயது அது அவள் பருவ வயதையும் அடைந்து ஒரு வாரம் முடிய வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தவளுக்கு மருந்தடுத்து கொடுத்து தனியாக படுக்க வைத்திருந்தனர் அது மற்றவர்களுக்கு
தொற்றி விடும் என்று கவனிப்பார் யாருமின்றி தனியாக ஒரு மூலையில்
கிடக்க மனம் அக்கணம் தாய் மடிக்காக ஏங்கியது அதை எண்ணி கண்ணீர் விட்டு
காய்ச்சலின் வீரியத்தில் அப்படியே உறங்கி போய் விட சிறிது நேரத்திலே அன்பாய் தலையை வருடிடும் அந்த கரங்களில் தூக்கம் களைந்து கண்களை திறக்க முடியாமல் கடினப்பட்டு திறக்க
அங்கு அவளின் அருகே அவளையே
கவலையாக பார்த்தபடி அமர்ந்திருந்தான்
ஆத்ரேயன்.....



"ரே...‌ தள்....ளி போ... உன...க்..கும் காச்...ச...ல்.. வ..ந்தி..டும்..." என வார்த்தையை கடினப்பட்டு பேச அவனுக்கு தான் அது புரியாமல் போனது
"எந்திரி வா ரதி‌ நாம ஹாஸ்பிடல்
போலாம்.." என அவள் மறுக்க மறுக்க ஆட்டோ பிடித்து அழைத்து கொண்டு போனான் ஹாஸ்பிடலில் அட்மிட்
பண்ண சொல்ல
சிறுவன் என்பதால் யாராவது அவளின் உறவை அழைத்து வர சொல்ல இவனோ
அவளுக்கு "நான் தான் இருக்கேன் நான் அவளை பார்த்துக்குவேன்னு..." பிடிவாதமாக நிற்க இவனின் பிடிவாதத்தில் அந்த டாக்டருக்கு முழி பிதுங்கி வெளியே வந்து விட்டது அந்த நேரம் அந்த பக்கமாக அவர் வார்ட்க்கு ரவுன்சில் வந்த கமலின் தந்தை தான் இவனை கண்டு விஷயத்தை கேட்டு அவனை‌ வியப்பாக பார்த்தவர்
அங்கு நின்ற டாக்கரிடம் திரும்பி நான் பார்த்துக்கிறேன் "இது நமக்கு தெரிஞ்ச பையன் ரொம்ப புத்திசாலி..." என்றதும் "ஓகே டாக்டர்
அந்த பொண்ணுக்கு ட்ரீட்மெண்ட் போய்ட்டு இருக்கு ஏதாவதுன்னா கூப்பிடுங்க..." என்றவர் கிளம்பி விட....




"அன்கிள் நான் அவளை பார்த்துக்குவேன்
இந்த டாக்டர் ஏன் புரிஞ்சிக்க மாட்டாங்க.."
என கோபமாக பேசியவனை
புன்னகையுடன் பார்த்தவர் "நம்ம மெஹ்ராக்கு ட்ரீமென்ட் போய்ட்டு இருக்கு
அவளுக்கு சில தேவைகள் வரும் போது உனக்கிட்ட கேக்குறத்துக்கு கூச்சப்படுவா அதான் அவங்க யாராவது பெரியவங்களை கூட்டிட்டு வர சொல்றாங்க சரி நர்ஸ் வெச்சு பார்த்துக்கலாம்‌.. " என்றவரிடம் புரிந்தும் புரியாமலும் தலையாட்டி வைத்தான்....




"ஆமா உன்னோட அப்பா அம்மா தேட மாட்டாங்களா? நீ மெஹ்ராக்காக இங்க இருக்கேன்னு‌ சொன்னா கோபபடுவாங்களே..." என்றவரிடம்,


"அவங்க பிஸ்னஸ் ட்ரிப் போய் இருக்காங்க வர வன் வீக் ஆகும் இப்போ தான் வீட்டுக்கு பணம் எடுக்க போனப்போ சமையல் பண்ணுற ஆன்டி சொன்னாங்க..." என்றவன் மெஹ்ரா அருகில் அமர்ந்து அவளின் கையை பற்றி கொண்டவன் அவளருகே தலை வைத்து படுத்து கொள்ள மற்ற‌ கையில் ட்ரிஇப்ஸ் ஏறிக்கொண்டு இருந்தது...


இவர்களின் பிணைப்பை கண்டு‌ அவருக்கே கண்கள் கலங்கியது அப்போது தான் ஞாபகம் வர "ஏப்பா அவ தங்கி இருக்கிற ஆச்சிரமத்துலே சொல்லிட்டா கூட்டி வந்த இங்கே‌...." என்றவரிடம் கோபமாக "அன்கிள் அவங்களை பத்தி பேசாதீங்க ஏதோ சின்ன க்ளினிக்லே மருந்தெடுத்து கொடுத்து ஒரு மூலையிலே படுக்க வெச்சிருக்காங்க.... என் ரதியே கூட்டிட்டு வர நான் ஏன் கேக்கனும் இனி என் தாத்தா வீட்டுலே இவளை கொண்டு போய் விட போறேன் அவங்க சரியில்லை அன்கிள்...." என முறுக்கி கொண்டு நின்றவனை கண்டு "அய்யோ இவன் எதுக்கு இவளோ கோபபடுறான் சொன்னியான்னு தானே கேட்டேன்..." என்றவர் "சரிப்பா நீ அமைதியா இரு
அவ நல்ல தூக்கத்துலே இருக்கா டிஸ்டர்ப் ஆகும் இல்லையா?
அதோ அந்த ட்ரிஇப்ஸ் முடிஞ்சா அடுத்த ரூம்லே நர்ஸ் இருப்பாங்க அவங்களே கூப்பிட்டு சொல்லு நான் டியூட்டி முடிஞ்சதும் வந்து பாக்குறேன்...." என அவர் சென்று விட அவளையும் அந்த சேலைன் பாட்டிலையும் பார்த்தபடி அமர்ந்திருந்தான் அவன்.....



மருந்தின் வீரியத்தில் உறக்கத்தில் அவளிருக்க அவளையே பார்த்த வண்ணம் விழித்திருந்தான் இடையில்
ட்ரிஇப்ஸ் முடிய நர்ஸ்யை அழைத்து கொண்டு வர...


"தம்பி நானும் வந்ததுலே இருந்து பாக்குறேன் இங்கயே இருக்கே சாப்பாடு ஏதும் சாப்பிட்டியா‌?..."

"பசிக்கலே இவே எந்திரிச்சதும் சாப்பிட்டுக்கிறேன்.... என்றவனை பார்த்து இந்த பொண்ணு உனக்கு என்ன வேணும்?..." என்றவரிடம் ப்ரென்ட்... என்று கூற "ஓஹ் ப்ரென்ட் ஆஹ் அதுசரி ரொம்ப பிடிக்குமா இவளை..."


"ஆமா ரொம்ப சேட்டை பண்ணுவா வாலு..." என புன்னகையுடன் கூறியவனை கண்டு‌ சிரித்து கொண்டவர் "சரிப்பா நீயும் பக்கத்திலே இருக்கிற பெட்லே தூங்கிக்கோ அவே இடையிலே எந்திரிக்க மாட்டா..." என்றதும் சரியென தலையசைத்தவன் அவளருகே தான் படுத்து கொண்டான் அவள் கைப்பற்றியே படி இரண்டு நாட்கள் ஹாஸ்பிடலில் எந்த வித முகசுளிப்பும் இல்லாமல் அவள் வாந்தி எடுத்ததை கூட சுத்தப்படுத்தி விட்டவனை கண்டு இவள் தான் மெய் மறந்து நின்றாள்....



ஆசிரமத்திற்கு அழைத்து வந்தவன் அவனின் தந்தை வழி தாத்தாவிற்கு அழைத்து இவளை அழைத்து செல்லும் படி கூற அவரோ இவளின் படிப்பை காரணம் காட்ட வேறு வழியின்றி அமைதியாகினான் வீட்டில் அவளுக்கு பிடித்த விதமாக‌ சமைக்க சொல்லி எடுத்து வந்து ஊட்டி விட்டான் நாளுக்கு நாள் அவனின் கவனிப்பில் தேறி வந்தவளின் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருந்தான் ஆத்ரேயன்.


ஸ்கூல் வந்தாலும் தன் கைக்குள் அவளை வைத்து கொள்ளாத‌ குறை‌ அவளுடனே போய் வந்து கொண்டு இருந்தான்.


நாளாக ஆக இவனது நடவடிக்கைகளை கண்ட கிருபன் அவனை தனியாக அழைத்து என்ன? ஏது? என விசாரிக்க "அவ என் ப்ரென்ட் அவளை நான் பார்த்துகாம யாரு பார்ப்பா..." என இடக்காக கேட்டவனை நல்லா ஒன்று போட தோன்றியது
"ஓஹோ அப்படியா? அதோ இருக்காளே ரிதன்யா அவளுக்கு ஹெட் பெயின்னு சொல்லிட்டு இருந்தா போ போய் மசாஜ் பண்ணி விடு" என கூற....


"டேய் நான் எப்பிடிடா ஆயிரம் தான் ப்ரென்ட் ஆஹ் இருந்தாலும் தொட்டு பேசுறது எல்லாம் தப்பு..." என்றவனை மடக்கி பிடித்தவன் "அப்போ நம்ம மெஹ்ரா மட்டும் பையனா என்ன?
அவளுக்காக ஹாஸ்பிடலே எல்லாம் இருந்து இருக்கீங்க நைட்டான‌ ஆசிரமத்து காம்பெளன்ட் எகிறி குதித்து போறீயாமே இது எல்லாம் எதுலே‌ சேர்க்கிறது....."


"மச்சி அவே பாவம்டா என்னன்னு எனக்கு சொல்ல தெரியலே ஆனா அவளை என் கூடவே வெச்சிக்கனும் போல இருக்கு...."
என்றவனின் தோள் மேல் கைப்போட்டவன் "என்ன மச்சான் உனக்குள்ள வந்திட்டா?..." என புன்னகையுடன் கேட்க அவனை புரியாமல் பார்த்தான்
ஆத்ரேயன் "மச்சான் ச்சே அதான்டா லவ்வூ.... நமக்குள்ளே வந்தா அது பப்பி லவ்ன்னு சொல்லுவாங்க..."


"இதெல்லாம் உனக்கு எப்பிடி தெரியும்? என்றவனிடம் "அது ஒன்னுமில்லடா வன் வீக் நீ கிரிக்கெட் விளையாட வரலையா?
அதனாலே சோகமா உக்கார்ந்து இருந்தேன் பக்கத்து வீட்டு அக்கா
என்ன ஏதுன்னு கேட்டிச்சு நானும்
என் ப்ரென்ட் இப்பிடி இருக்கான் அவனுக்கு ஏதோ ஆச்சின்னு உன்னோட நடவடிக்கை எல்லாம் சொன்னேன்
அதுக்கு அவங்க இதான்னு க்ளாஸ் எடுத்தாங்க சிம்பிள்..." என்றதும் அப்பிடியும் இருக்குமோ.... யோசிக்க தொடங்கியவனுக்கு அவளின்‌ மேல் தன் பார்வை வேறு விதமாக உரிமையாக படிவதை அப்போது தான் கொஞ்சமாக புரிந்து கொண்டான் 10th எக்ஸாம் முடி 11-12th ஒரே சப்ஜெக்ட் எடுத்து படிக்க
அன்று ஸ்கூலில் பொங்கல் விழா என்பதால் ரிதன்யா உடன்‌ தாவணி கட்டிக்‌ கொண்டு அன்னநடை நடந்து வந்தவளை கண்டு‌ விழுந்து விட்டான்
அரும்பு மீசை முளைத்த இளைஞன் அன்று தான் முடிவு செய்தான் இனி தன் காதலை அவளிடம் சொல்லி விட வேண்டும் என்று ஏனென்றால் இது தான் அவர்களுடைய கடைஷி ஸ்கூல் நாளாக கூட இருந்தது....



முதலில் தான் சேர்த்து வைத்ததில் கண்ணாடி வளையல்கள் வாங்கி வந்தவன்‌ கிருபனை விட்டு அவளை தனியா அழைத்து வர சொல்லி காத்திருந்தான் ஆத்ரேயன்...

தொடரும்.
 
Top