• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

விலகாதே என்னுயிரே 15

fajeeha mumthaj

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 14, 2023
Messages
80
நந்தனுக்காக காத்திருந்தவள் முன் வந்து பைக்கை நிறுத்தினான் ஆத்ரேயன் ஹெல்மெட் போட்டு முகத்தை மறைத்து இருந்தான் "நந்தன் இதுலே எதுக்கு போகனும் வண்டி எடுத்திட்டு வரேன்னு தானே சொன்னீங்க.." என்றவளிடம் நந்தன் வாய்சில் சிறிது தொண்டையை செருமி பேசலானான்‌ ஆத்ரேயன்.


"அப்பா வண்டியே எடுத்திட்டு போய்ட்டாரு நாமே இதுலே போய்ட்டு வரலாம்..." என்றவனிடம் சரி என ஏறி அமர்ந்தவளுக்கு மனதிற்கு ஏதோ தோன்ற எதையும் யோசிக்காமல் அவன் அணிந்து இருந்த ஹெல்மெட்யை பின்னால் இருந்தபடியே கலட்ட திருட்டு பூனை மாட்டிக்கொண்டது யூ சீட்... என கத்தி கொண்டு இறங்க போனவளின் ஒரு கையை அவசரமாக ஒரு கையால் பற்றி முன்னால் இழுத்து வைத்து கொண்டு ஒரு கையால் பைக் எடுக்க சற்று தள்ளி ஜீப்பில் இருந்து பார்த்திருந்தவளுக்கு அதை கண்டதும் தான் நிம்மதி பெருமூச்சு வந்தது
"என் அண்ணன் உசாரான ஆளு தான்.." என அவர்களையே வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி வந்தவளை சுவாரஸ்யமாக பார்த்தான் நந்தன்...



"ஆத்ரேயன் என் கையை விடுங்க..." என திமிற பைக் ஆட்டம் காண "அமைதியா வாடி இல்லன்னா ரெண்டு பேரும் பள்ளத்தாக்கிலே தான் இருக்கனும்.." என்றதும் அமைதியானவள் கையை விடுங்க... என பற்களை கடித்து கொண்டு பேச அவளின் கையை விட்டவனுக்கு அப்போதைக்கு எதுவும் பேச தோன்றவில்லை அமைதியாக அவளுடனான இந்த பயணத்தை அனுபவித்தான்.




ஷைந்தவி முன்னால் செல்லும் அவர்களை கவனித்தப்படி வரும் நந்தனை கண்டு குழம்பினாள் அவளோ அமைதியான ஆள் இவரு இல்லையே என தோன்ற கேட்டே விட்டாள்....

"காதலிச்ச பொண்ணை இன்னொருத்தன் கூட்டிட்டு போறதை பார்த்திட்டு எப்பிடி
அமைதியா வரீங்க நெஜமா உங்களுக்கு ஹேட் ஆகலையா?" என்றவளிடம்...


"அவங்க ரெண்டு பேரும் லவ் பண்ண விஷயம் எனக்கு தெரியும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்த காதல் அது அதை அவளோ சீக்கிரம் யாராலயும் உடைக்க முடியாது என்கிட்ட மெஹ்ரா அவளோட காதலை பத்தி சொல்லிட்டா..." என்றவனை தன்னை மீறி தோன்றிய சந்தோஷத்தில் பார்த்தவள்...


"அப்போ உங்க லைஃப் லே வன் சைட் லவ் வேற.... என கேட்டவளிடம் ஒரு பெருமூச்சை இழுத்து விட்டவன்‌ "சொல்ல போனா நான் பண்ணத்துக்கு பேர் காதலே இல்லை உண்மையா காதலிச்ச ஒருத்தன் காதலிக்கிற பொண்ணை மிரட்டியோ அவங்களோட மனநிலை புரிஞ்சிக்காம காயப்படுத்தியோ பார்க்க மாட்டான் ஆனா நான் அதை எல்லாம் அவங்களுக்கு கொடுத்தேன் இந்த ஊரை நம்பி எங்கப்பாவை நம்பி வந்த பொண்ணை அவர் செஞ்ச உதவிக்கு பரிகாரமா கூட கேட்டிருக்கேன் ஆனா இப்போ அவங்க மனசுலே இருக்கிறதை சொன்னதுக்கு அப்பறம் அந்த தெளிவு வந்திடுச்சு நல்லவேளை எனக்கும் அவங்களுக்கும் கல்யாணம் ஆகல ஆகிருந்திச்சு கடைஷி வரைக்கும் சந்தோஷம் ஒன்றே இருந்திருக்காது
எனக்காக இனிமேயா ஒருத்தி பொறந்து வரப்போறா ஆல்ரெடி பிறந்திருப்பா அவளை அந்த கடவுள்‌ என் கண்ணுலே காட்ட மாட்டாரா என்ன?..." பாதையில் கண்களை வைத்தப்படி பேசியபடி வர பக்கத்தில் இருந்தவளோ மனதுக்குள் ஒரு குத்தாட்டம் போட்டு விட்டாள் ஆனால் வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருந்து கொண்டாள் சாமர்த்தியமாக...




பக்கத்து ஊர் வர சிறிது தூரத்திற்கு பின் பைக் நிறுத்த சொல்ல சரியாக‌ அவ்விடமே ஜீப்பை கொண்டு நிறுத்தினான் நந்தன் அவனோடு இறங்கிய ஷைந்தவியை கண்டவள் ஆத்ரேயனை அவளையும் மாறி மாறி முறைத்து பார்க்க அவளிடம் வந்த நந்தன் "வாங்க மெஹ்ரா..." என அழைத்து
கொண்டு போனான்
அவர்கள் வந்தது ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ஆர்டர் எடுப்பதற்காக தங்கள் வேலையில் பிஸியாக வெளியே நின்ற ஆத்ரேயனும் ஷைந்துவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே என்ன ப்ளேன் ஓகேயா? என்றவளிடம் "எங்கே அவ அமைதியா வந்ததே பெரிசு நான் செஞ்ச‌ வேலைக்கு பார்க்கலாம்..." என்று குருட்டு தைரியத்தில் சொன்னவனை தேற்றினாள் ஷைந்தவி...



ஷைந்தவி எதார்த்தமாக திரும்ப அவள் கண்ணில் பட்டது மயிலிறகு அவளுக்கு பிடித்த ஒன்று அது உற்சாகமாக விற்பவரிடம்‌ பணம் கொடுத்து வாங்க‌ அதை ஒரு ஜோடி கண்கள் கவனிக்காமல் இல்லை இருவரும்‌ ஒரு நடுத்தர வயதுடையவருடன் பேசியபடி வரவும் ஆத்ரேயனிற்கு அவனது பிஏவிடம் இருந்து கோல் வரவும் சரியாக இருந்தது.



"ஓகே சார் அப்போ நாங்க கிளம்புறோம்
நீங்க‌ கேட்ட நேரத்துக்கு நாங்க அனுப்பிடுறோம் என்றவள் வந்து‌ நந்தனோடு ஜீப்பில் ஏற அவன் வருவதை கண்டதும் பட்டென மயிலிறகை‌ ஒளித்து வைத்து‌ விட்டாள் ஷைந்து...



படு சீரியசாக எதையோ பேசிக் கொண்டு இருந்த ஆத்ரேயனின் முதுகில் அடித்து போகும் அவர்களை காட்ட விடு பார்த்துக்கலாம்... என்றவன் "ஃபோனில் நான் வர ரெண்டு வாரம் ஆகலாம் அதுவரைக்கும் டெய்லி அப்டேட் வந்தாகனும்‌ என்றவன் கட்டளையிட்டு ஷைந்து வந்து ஏறு‌..." என்று அவளை அழைத்து கொண்டு ஜீப் பின்னாடியே வந்தான் அதை கண்ணாடி வழியாக பார்த்த மெஹ்ரா "ஆயிரம் பேர் இவனை நம்பி வேலை பாக்குறப்போ எதுக்காக இங்கே சுத்திட்டு இருக்கான்னு தெரியலே‌..." என வாய் விட்டு புலம்பியவளிடம்,


"மெஹ்ரா நம்ம எஸ்டேட் வாங்க வந்ததே இவரு தான் இப்போ இவரோட கைக்கு மாறிடிச்சு இங்கே வேலைக்கு ஒருத்தரை வெச்சிட்டு நாளைக்கு நான் மெயின் ஆபிஸ் போகனும் அப்பிடின்னு சொன்னார்‌ ஆனா இப்போ மனுஷன் இங்கயே டேரா போட்டிருவாறு போல..." என சின்ன சிரிப்போடு சொன்னவுடன் அவளின் முகம் ஒரு மாதிரி ஆகிவிட்டது...


"அய்யோ நந்தன் நீங்க வேற அவனை எப்படியாவது கிளம்பி விடனும் இல்ல நான் எங்காவது போய்டனும் அவன் பொண்டாட்டி காதுக்கு இந்த விஷயம் போனா அவங்களுக்குள்ள சும்மா பிரச்சினை அவன் சந்தோஷமா இருக்கனும்? என்றவளை திரும்பி பார்த்தவன்...


மெஹ்ரா எனக்கு என்னவோ இதுலே வேற ஒன்னு இருக்கிற மாதிரி தோனுது
பொறுமையா இரு பார்க்கலாம் என்றதும் எதையோ யோசித்து சரி என தலையாட்டினாள்.



இருவரும் பேசிக் கொள்வதை அவனோடு இவள் போவதை கண்ட ஆத்ரேயனிற்கு அடி வயிறு எரிய தொடங்கி விட்டது நல்ல காலத்திலே அவளோடு வேறு யாராவது வந்து பேசினாலே பொறுக்காது இப்போ அமைதியா இருந்திடுவானா என்ன அவனின் கோபம் கண்ட ஷைந்தவி நந்தனின் மனமாற்றத்தை சொல்ல கொஞ்சம் நிதானம் அடைந்தான்....



வீட்டிற்கு வந்து அவரர் வேலையில் இறங்க இங்கு தன் வீட்டுக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்தவனுக்கு வயிறு வேறு தான் இருக்கும் இடத்தை காட்ட இப்போது ஏதும் சமைத்து சாப்பிடவும் மனம் வரவில்லை மல்லாக்க படுத்து கிடந்தவனுக்கு ஒரு யோசனை வர
ஒரு புன்னகையுடன் தன் வேலையில்
இறங்கி விட்டான்....



வழமையாக நிலவு மகளிடம் புலம்பிக் கொண்டிருந்தாள் மெஹ்ரா "ஏன் அவனை நான் திரும்ப பார்க்கனும் அவரோட கண்ணுலே எனக்கான அதே காதல் அந்த ஏக்கம் இது எல்லாத்தையும் பாக்குறப்போ என் மனசு ஓடி போய் அந்த கூட்டுக்குள்ள சேருன்னு தவியா தவிக்கிது ஆனா அது தப்பு நான் அவனை நம்பி வந்தவளுக்கு செய்ற துரோகம்...." என கதறியவளை இழுத்து அணைத்தது ஒரு உருவம் வாசனை அதை வைத்தே யார்? என அறிந்து கொண்டவள் சுயம் பெற்று விலக நினைக்க அணைப்பில் இறுக்கத்தை கூட்டினான்...



"ச்சே அப்பிடியே இரு ரதி..." என்று அதட்ட அவனின் அழைப்பிலும் உரிமையான
செயலில் கண்ணீர் தான் கரை புரண்டோடியது ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் அவனை தன் பலம் கொண்டு தள்ளியவள் விட்டால் ஒரு அறை
"இன்னும் எவளோ தான் என்னை அழ வைச்சு காயப்படுத்த நெனக்கிறே.." என்றவளை கண்டு இவனுக்கும் கண்கள் கலங்கியது....



"அங்கே ஒருத்திய வெச்சிட்டு இங்கே வந்து என்னை கண்டதும் கொஞ்சுற வெக்கமா இல்லை இல்ல எனக்கு புரியலே என்னை பத்தி என்ன தான் நெனச்சிட்டு இருக்கே ஹா
வீட்டுலே பொண்டாட்டியா ஒருத்திய வெச்சிட்டு பழைய காதலை கண்டதும் இப்போ என்னை அதுக்கு வெச்சிக்க நெனக்கிறியா?‌..." என கேட்டவளின்
வார்த்தையில் துடித்து போனவன் "ரதி‌... ஏன்டி இப்பிடி எல்லாம் பேசுற வலிக்கிதுடி‌..‌"
என அவள் காலடியிலே அமர்ந்தவன் "என்னை சுத்தி நடந்த சூழ்ச்சியாலே தான் உன்னை இழந்து நின்னேன்‌
நான் பிடிச்சு
அந்த வாழ்க்கையே ஏத்துக்கலே
உன்னை என்னையும் பிரிக்க நடந்த சதி அதை தெரியாம பெத்தவங்களுக்காக உன்னை இழந்து என் வாழ்க்கை இழந்து நடை பிணமா சுத்திட்டு இருந்தேன்டி இத்தனை வருஷமா‌? என்றவனை
புரியாது அவள்‌ ஒரு பார்வை பார்க்க
அவனோ தன் பாட்டில்‌ ஆனா உன்னை ரொம்ப கலங்க வெச்சிட்டேன் ரதி அதுக்காக என்னை மன்னிச்சிடு‌‌...." என அவள் காலில் விழ அய்யோ ரேயன்.... என பதறி விலகியவள் அவனருகே அமர்ந்து "என்ன என்னவோ எல்லாம் பேசுற எனக்கு எதுவுமே புரியலே..." என்றவளிடம் கண்களை துடைத்து கொண்டு அவளின் கைப்பற்றியபடி....



"நாம காதலிச்ச‌ விஷயம் அவங்க காதுக்கு போய்யிருக்கு காலேஜ்‌ டேஸ்லே இருந்து கவனிக்க எங்கப்பா ஆள் போட்டு இருக்காரு அவரோட ஒரே வாரிசான நான் வசதியில்லாத யாருமேயில்லாத மாற்று மதத்து பொண்ணை லவ் பண்ணுறது அவருக்கு ஸ்டேஸஸ் பிரச்சினையை கொண்டு வந்து விட்டிருக்கு இது தெரியாம நானும் பாரின் போய் படிச்சிட்டு வந்து அவர் தொழிலை கவனிக்காம சொந்தமா தொழில் ஆரம்பிச்சது ஒரு பக்கம் கோவத்தை வர வெச்சி இதை எல்லாம் நீ சொல்லி தான் நான் செய்றேன்னும்‌ நெனச்சிட்டு இருந்திருக்காரு அப்பறம் அவரோட கம்பனி நஷ்டத்துலே போக அதுக்கு அவரோட ப்ரென்ட் பணம் குடுத்து ஹெல்ப் பண்ணிருக்காரு நானும் எனக்கு நம்பிக்கை இல்லாம அவரோட பிஸ்னஸ் அப்டேட் எல்லாம் பார்த்தேன்‌ அது லாஸ்லே தான்‌ இருந்திச்சு ஆனா எனக்கு அவரோட ப்ரென்ட் தான் ராஜன்ங்கிறது தெரியாது ரதி.... அவங்க கடனை திருப்பி கேக்கறாருன்னு.... என‌ வீட்டில் நடந்ததை அவளிடம்‌ தெளிவாக சொல்லி முடிக்க
"அப்போதும் என் மனசு கேக்கலடி உன்னை விடுறத்துக்கு அம்மாவை அந்த நிலையிலே பார்த்ததும் ஒரு மகனா அங்கே நடக்க வெச்சிருச்சு ஆனா இது எல்லாம் நாடகம்டி எங்கப்பாக்கு அந்த பொண்ணை எனக்கு கட்டி வைக்கனும்ன்னு நெனச்சி இப்பிடி‌ எல்லாம் பண்ணி இருக்காரு கல்யாணம் ஆகி உன்னையும் மறக்க முடியாம புதுசா‌ ஒரு வாழ்க்கையே ஏத்துக்கவும் முடியாம ரொம்ப தவிச்சு போய்ட்டேன் இதுக்கு‌ இடையிலே ரெயில் வே ட்ரேக்லே ஒரு‌ பொண்ணு செத்து இருக்க அது நீதான்னு நீ போட்டிருந்த பேர்ஸ்லைட் வெச்சி அடையாளம் காட்டி நம்ம ப்ரென்ட்ஸ் எல்லாம் அது நீதான்னு காரியம்
எல்லாம் முடிச்சிட்டாங்க
ஆனா எனக்கு நம்பிக்கை இருந்துச்சு
கண்டிப்பா அது நீயா இருக்க வாய்ப்பு இல்லைன்னு ஏன்னா எனக்கு சத்தியம் பண்ணின அதை என்னைக்கும் நீ மீற மாட்டேன்னும் தெரியும் இப்போவும் அதே காதலோடு வேறொருத்தன் நிழல் கூட படாம இருக்க பாரு உன்னை நினைச்சா என் மனசு ஏதோ பண்ணுதுடி உனக்கு செஞ்ச துரோகத்திற்கு தான் என் வாழ்க்கையிலே வந்தவள் எல்லார் முன்னாடியும் ஆண்மையில்லாதவன்னு சொல்லி அசிங்கப்படுத்தி ஒரு வாரத்துலே அவன் அப்பன் வீட்டுக்கு போனவ பணத்தையும் அதிகாரத்தையும் வெச்சி டிவோர்ஸ் வாங்கினா விட்டது சனியன்னு எனக்கு அப்பிடி ஒரு நிம்மதி
ஆனா என் அப்பனுக்கு அப்போ தான்
புத்தி வந்திச்சு ஆனா நான் கண்டுக்கலே எங்க தாத்தா உசுரு போற நேரம் தாண்டி நான் தனிக்கட்டையா நிக்கேன்னு எங்கப்பா அம்மா ரெண்டும் இந்த விஷயம் எல்லாம் பேசினதை கேட்டு என்கிட்ட விஷயத்தை சொல்லிட்டு போனாரு அவருக்கு நீன்னா அவளோ பிடிக்கும் கடைஷியா என் கையை பிடிச்சு‌
உன்னை கல்யாணம் பண்ணி நாம ரெண்டு பேரும் சந்தோஷமா வாழ்றதை பார்த்தா என் ஆத்மா சாந்தி அடையும்னு சொன்னது என் கண்ணுக்குள்ள அப்பிடியே நிக்கிது...க்ஷ" என்றவனுக்கு தாத்தாவின் நினைவில் கண்களில் கண்ணீர் கொட்டியது அதை துடைத்து விட்டவளுக்கு தெரியாதா? அவன் தாத்தா என்றால் அவனுக்கு உயிர் என்று....



"தன்னை நிலைப்படுத்தியவன் அப்பறம் எனக்கு அங்கே இருக்க கொஞ்சம் கூட புடிக்கலே நான் என் ஆபிஸ்லே இருக்கிற வீட்டுலே போய் தங்கிட்டேன்டி அங்கே தான் இப்போ வரைக்கும் இருக்கேன் உன் நினைவுகளோடு வாழ பழகிட்டேன்...." என்றவனின் கண்களையே பார்த்து கொண்டிருந்தவள்‌ ரேயன்... என அழைத்து தன் இரு கைகளையும் விரித்து வா என்பது போல் தலையசைக்க தாய் கண்ட பிள்ளை போல் அவள் கழுத்தை கட்டிக் கொண்டு முகம் புதைக்க பிரிவின் வலியும் விதியின் விளையாட்டிலும் புயல் அடித்து ஒதுங்கி தனியாக‌ நின்று தவித்த இரு உயிரும்‌ ஓர் உயிராய் இன்று ஒருவருக்குள் ஒருவர் பிணைந்து முத்தத்திலும் அணைப்பிலும் தங்களை மறந்து ஒரு உலகில் சஞ்சரித்தனர்.

தொடரும்.
 
Last edited:
Top