• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

விலகாதே என்னுயிரே 16

fajeeha mumthaj

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 14, 2023
Messages
80
வேகமான காற்றில் திறந்திருந்த ஜன்னல் வந்து அடைக்க அந்த சத்ததில் ஒருவருக்கு ஒருவர் விலகி கொண்டனர்
அப்போது தான் யோசனை வந்தவளாக "ஆமா எப்பிடி வீட்டுக்குள்ள வந்தீங்க" என்று கேட்க.....



"ரொம்ப சீக்கிரம் கேட்டுட்டே போ கதவு லாக் பண்ணி கூட இல்லை லேசா தள்ளி பார்த்தேன் திறந்திடிச்சு...."


"ஓஹ் யோசனையிலே அதை கவனிக்கலே சரி விடிய போகுது கிளம்புங்க..." என்று எழுந்து‌ கொண்டவளை ‌பின்னால் இருந்து அணைத்து கொண்டவன் பசிக்கிது ரதி... என்றவனை திரும்பி பார்த்தவள் "இவளோ நேரம் சாப்பிடாம என்ன பண்ணிட்டு இருந்தீங்க வாங்க..." என அழைத்து கொண்டு போனவள் இருவருக்கும்‌ தோசை ஊற்றி
சாப்பிட‌ வைக்க
"நீ கெடச்சது என்னோட லக்கி
தெரியுமா ரதி.... நான் உனக்கு எவ்ளோ பெரிய மனகஷ்டத்தை கொடுத்திருக்கேன் அதுமட்டுமில்ல எப்பவுமே ரெண்டு பேரும் சண்டை போட்டா நீதான் முதல்லே இறங்கி வருவே இப்போவும் அதே தான் ஏன்டி உன்னை கஷ்டப்படுத்தின என்னை அழைய விடனும்னு கூடவா தோனலே...."
என்றவனுக்கு சிறுபுன்னகையை சிந்தியவள்...



"எனக்கு நீ ஒரு மேஜிக்டா ஆல்ரெடி உன்கிட்ட நான் சொல்றிக்கேன்லே எனக்கு உன் மேல கோவத்தை மூணு நாளைக்கு மேல இழுத்து வெச்சிட்டு இருக்க முடியாதுன்னு ஆனா உன்னை கல்யாண கோலத்துலே வேறொருத்தி பக்கத்துலே பார்க்கும் போது ரொம்ப வலிச்சது அந்த வலி என்னாலே சத்தியமா தாங்கிக்க முடியலே ஆனா நீயும் அந்த வாழ்க்கையிலே சந்தோஷமா இல்லாதப்போ உனக்கு தண்டனை குடுத்து நான் என்ன செய்ய..." என்றவள் சாப்பிட்ட தட்டை கழுவி எடுத்து வைக்க
"இன்னைக்கு ஈவினிங் கிளம்பனும் முக்கியமான மீட்டிங் இருக்கு நான்
கண்டிப்பா அங்கே இருந்ததாகனும்..." என்றவன் தயக்கமாக சொல்ல அவன் சொன்ன விஷயத்தை கேட்டதும் கண்கள் கலங்கி விட்டது...


அவன்‌ முகம் பாராமலே அறைக்குள் நுழைய அவள் பின் வந்தவன் "ஏதாவது பேசு ஏன் சைலென்ட் ஆகிட்ட ரதி..."


"ம்ம்... இன்னும் எத்தனை வருசம் வெயிட் பண்ணனும் ரேயன்..." என்றவளின்
குரல் உடைந்து வர....


"ச்சே ரதி நீ அழுதது‌ போதும் இனி நமக்குள்ள பிரிவே வரக்கூடாது கூடிய சீக்கிரமே முறையா கல்யாணம் பண்ணி என் பொண்டாட்டியா உன்னை கூட்டிட்டு போறேன்.... என்ன சொல்றே இந்த லூசனை கல்யாணம் பண்ணிக்கிறியா? என கண் சிமிட்டி கேட்க,

சம்மதமாக‌ தலையசைத்தவள்
அவனை இறுக்கி கட்டிக் கொள்ள இருவரும் சிறிது நேரத்தில் எதை எதையோ பேசி ஒரு முடிவுக்கு வர அந்த மலை முகட்டில் உற்சாகமாக வந்து நின்றான் கதிரவன்.



கொட்டாவி விட்டபடி வெளியே வந்து நின்ற ஷைந்தவி கண்களில் ஆத்ரேயன் பின் பேசியபடி வந்த‌ மெஹ்திராவை கண்டதும் வந்த கொட்டாவி பாதியிலே நிற்க கண்ணை கசக்கி கொண்டு திரும்பவும் பார்த்தவள் விறு விறு என அவர்கள் அருகே வர....



ஷைந்து.... என அவளருகே வந்தவனிடம் "டேய் ஆத்ரேயா பிரச்சினை முடிஞ்சதா?..." என ரகசியமாக கேட்க "பேசி தீராத பிரச்சினை எங்க இருக்கு சமாதானம் ஆகிட்டோம் நீயும் ரெடியாகி வா இந்த ஊர் தலைவரை பார்த்துட்டு வரலாம் என்று சொல்ல....."


"இப்போ அவரை எதுக்கு பார்க்கனும்.." என்றவளிடம் "அதை அங்கே வந்து தெரிஞ்சிக்கோ இப்போ வரீயா நாங்க போகவா..." என்ற மெஹ்ராவிடம் "இதோ அஞ்சு நிமிஷம்..." என ஓடியவளிடம் "ரெடியாகி என்னோட வீட்டுக்கு வா
அங்கே போய் தான் போவோம்..." என கத்தி சொன்னவனிடம்‌ ஓகே... என்று வீட்டுக்குள் ஓட மெஹ்ரா கைப்பிடித்து
அவன் வீட்டுக்கு அழைத்து வந்தான்
ஆத்ரேயன்‌‌.


"ரொம்ப அழகா இருக்கு ரேயன் என்றவளின் கண்களில் அவர்களின் புகைப்படம் தெரிய கண்கள் லேசாக கலங்க அதை எடுத்து வருடியவள் மறக்க‌ முடியாதே இனிமையான நினைவு வருஷத்துலே ஒருதரம் பார்த்துக்கிறப்போ எடுத்துக்கிறது...." என்றவள் அந்த நாட்களில் லயிக்க "மேடம் பக்கத்துலே என்னை வெச்சிட்டு அதை கொஞ்சுறது தப்பு.." என அவளின் இடையில் விரல்களால் கோலமிட்டு முன்னால் வந்து நின்றவனை புன்னகையுடன் பார்த்தவள் எக்கி அவன் நெற்றியில் முத்தமிட கள்வன் அவன் அவள் இடை சீண்டி அவள் முகமெங்கும் முத்தம் கொடுத்தும் வாங்கியும் கணக்கை தீர்த்தான்.



சிறிது நேரத்திலே மூச்சு வாங்க வந்து நின்ற ஷைந்தவியை அழைத்து கொண்டு மூவரும் செந்தில்நாதன் வீட்டுக்கு சென்றனர்‌ அவர்களை கண்ட நந்தன் சின்ன சிரிப்புடன் வரவேற்க வீட்டுக்குள் செல்ல போன ஆத்ரேயன் கையை இறுக்க பற்றி வேணாம் என மெஹ்ரா தலையசைக்க அதை கண்ட செந்தில்‌ "அவே கெடக்குறா நீவாமா.. என வந்து அழைத்து சென்றவர் தேநீர் கொடுத்து உபசரிக்க‌ ஆத்ரேயன் தான் பேச தொடங்கினான்...


"சார் ரொம்ப நன்றி இவளோ நாளா தங்க இடம் கொடுத்து பத்திரமா பார்த்துக்கிட்டதுக்கு என்னோட உசுரே இவே தான் எங்களுக்குள்ள நடந்த பிரச்சினையிலே நாங்க பிரிஞ்சி ரொம்ப கஷ்டப்பட்டிருக்கோம் இனியாவது நிம்மதியா சந்தோஷமா இருக்க ஆசைபடுறோம் என் தொழில் எல்லாமே அங்கே தான் அதான் இவளை அழைச்சிட்டு போகலாம்ன்னு இருக்கேன் அப்பறம் எஸ்டேட் பார்க்க வரப்போ வந்து போறோம்‌..." என்று சொல்ல அவரோ
மெஹ்ராவை பார்த்தவர் "இவளோ நாளும் கல்யாணம் கட்டிக்க விருப்பம் இல்லாம அந்த பேச்சை எடுத்தா கூட ஒதுங்கி‌போனது இந்த மகாராஜாவை மனசுலே வெச்சி தானா..." என கேட்டவரிடம்‌,

ஆமா... என தலையாட்டி வெட்கத்தில் தலை குனிய "ரொம்ப சந்தோஷம்டா கண்ணு..." என இருவரையும் ஆசிர்வாதம் செய்தவர் "தம்பி இருந்தது இருந்திட்டியே ஒரு இரண்டு நாள் கூட‌ நின்னு போங்க
என் மகன் கல்யாணத்தை பார்த்திட்டு..." என்று ஷைந்தவியை பார்த்தபடி சொல்ல ஆத்ரேயன் ஓரக்கண்ணால் ஷைந்தவியை பார்க்க அவள் அதிர்ச்சியுடன் அழுகை‌யை அடக்குவதை கண்டவன் அவள்‌ கைப்பற்ற
அவள் தலையில் பூவை சூடிய நந்தனின் தாய் "என்ன‌ எம் பையனை கட்டிக்கிற தானே..." என்று கேட்க ஆச்சிரியமாக கண்களை விரித்தவளிடம்....



"இந்த தம்பி சொல்லிருச்சு எம் பையனை விரும்பிறதை எம் பையன்கிட்டயும் கேட்டேன் ஓகேன்னு சொல்லிட்டான் அதான் சூட்டோட சூடா ஏற்ப்பாடு பண்ணிட்டேன் அருவி உம் புருஷனோட வா...." என்று சொல்ல மறைந்து நின்ற இருவரும் வெளியில் வர "இதெல்லாம் உன் வேலையா?..." என ஆத்ரேயனிம் கேட்ட ஷைந்தவிடம் "என் தங்கச்சியே தனியே தவிக்க விட்டிட்டு இந்த அண்ணன் போனா நல்லாயிருக்குமா? அதான் முடிச்சிட்டேன்..." என்றவனின் தோள் சாய்ந்தவளின் பார்வை நந்தனை காண அவனும் புன்சிரிப்புடன் இவளை தான் பார்த்து கொண்டிருந்தான்.


திருமண வேலைகள் சிறப்பாக நடைபெற ஓடி ஆடி எந்தவித குறையும் இன்றி வேலை செய்தான் ஆத்ரேயன் பயணத்தில் சந்தித்தாலும் அவனின் மனம் வாடாது இங்கிருந்தே நாள் முதல் அவனுக்கு நம்பிக்கை ஊட்டி
வாயாடியே ஷைந்தவி அவனின் வாழ்வில் மறக்க முடியாத உறவு கூடப்பிறந்தவர்கள் இல்லாதவனுக்கு
தங்கையாக வந்த வரம் என நினைத்து கொண்டான் ஆத்ரேயன் இவள் இல்லை என்றால் வந்த வேலையை‌ முடித்து கிளம்பி இருப்பான் அவனின் உயிர் இங்க இருப்பது அறியாமல்...



மணமேடையில் மணக்கோலத்தில் இருந்த இருவரையும் சந்தோஷமாக பார்த்து கொண்டிருந்தனர் அனைவரும்....


தாலி கட்டும் முன் அவள் சிறு பதட்டத்துடனும் பயத்துடனும் இருக்க அவள் கைப்பற்றியே நந்தன் மயிலிறகை வைக்க விழி விரித்து அவனை பார்த்தவளிடம்
"நீதான் மயிலிறகோட லவ் லெட்டர் வெச்ச கேடின்னு எனக்கு தெரியலே நீ படிக்க போய்ட்டே அதுக்கு பொறவு லெட்டர் இருக்கலையா யாரோ விளையாடுறாங்கன்னு நெனச்சேன் ஆனா நேத்து நீ மயிலிறகு வாங்கினதை பார்த்தேன் அதோட உன் ஃபோன் சைட் லாக்லே என்னோட போட்டோ ஆத்ரேயன் உன் காதல் பத்தி என்கிட்ட சொன்னது எல்லாத்தை கேட்டப்போ உன்னை மிஸ் பண்ண தோனுமா..." என கண் சிமிட்டவும் ஐயர் தாலி எடுத்து கொடுக்கவும் சரியாக இருந்தது.

சுற்றத்தார் ஆசிர்வதிக்க
அவளின் சம்மதத்துடன் தாலியை கட்டினான் நந்தன் இருவருக்குமான‌ சடங்குகள் முடிய திருமண விருந்து உண்டு எழுந்த ஆத்ரேயன் மெஹ்ரா இருவரும் கிளம்ப தயாராகினர்....



ஊரே கூடி நிற்க "அப்போ நாங்க வரோம் சார் எங்க கல்யாணமும் கூடிய சீக்கிரமே நடக்கும் எல்லாரும் வரனும் என்று அன்பு கட்டளை இட்டவனை..." ஷைந்தவி அழுகையுடன் அணைத்து கொள்ள "என்ன வாயாடி அதான் உன் ஆளோட சேர்ந்தாச்சுல்ல அப்பறம் எதுக்கு கண்ணை கசக்குறே..." என்றவனிடம் "கொஞ்ச நாள் பார்த்து பழகினாலும் என்னாலே உன்னை மறக்க முடியாது ரொம்ப மிஸ் பண்ணுவேன் உன் ஆள் பக்கத்துலே இருக்கான்னு என்னை
மறந்திட கூடாது டெய்லி பேசனும் சரியா?‌..." என்றவளிடம் சம்மதமாக தலையசைத்தவன் "நான் யாருன்னு கேட்டலே கோயம்புத்தூர்லே இருக்கிற AR கன்ஷ்ட்ரக்ஷன் கம்பனி அப்பறம் ஸ்மைல் வித் டீ அடம்பிடிக்கிற கம்பனி ஓனர்..." என ரகசியமாக அவள் காதுக்குள் சொல்ல விழி விரித்து ஆச்சிரியமாக
பார்த்தவளுக்கு தெரியாதா? அது ஒரு புகழ்பெற்ற நிறுவனங்கள் என்று
அவளருகே வந்த மெஹ்ரா "நீ இங்க இருக்கிற குழந்தைகளுக்கு சரியான பயிற்சியே குடு படிச்ச பொண்ணு உனக்கு அடுத்து என்ன செய்யனும்னு நான் சொல்ல தேவையில்லன்னு நெனக்கிறேன்...." என்றவளிடம் சம்மதமாக தலையசைத்து இனி இது எல்லாமே என் பொறுப்பு நான் பார்த்துக் கொள்கிறேன்..... என கூற நிம்மதியாக அங்கிருந்து அனைவரிடம் சொல்லி கொண்டு முகில் வனத்தில் இருந்து விடை பெற்று கோவை நோக்கி பயணப்பட்டனர்‌....

தொடரும்.
 
Top