• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

விலகாதே என்னுயிரே 18 (இறுதி)

fajeeha mumthaj

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 14, 2023
Messages
80
ஆறு வருடங்கள் கழித்து....


நிறைமாத நிலவாய் இறைவனிடம் தொழுது அவன் கொடுத்த வாழ்க்கைக்கு நன்றி சொல்லி கொண்டிருந்தாள் மிஸஸ் மெஹ்திரா ஆத்ரேயன்.


துஆ கேட்டு திரும்ப அவளின்
5 வயது பெண் குழந்தையை மார்பில் போட்டு தட்டி கொடுத்து வேலை பார்த்து கொண்டிருந்தான் ஆத்ரேயன் அவர்களை புன்னகையுடன் பார்த்தவள் "உங்ககிட்ட மட்டும் சமத்தா இருக்கா என்கிட்ட அத்தைகிட்ட எல்லாம் ரொம்ப சேட்டை பண்ணுறா..." என புகார் சொன்னவளை‌ அருகே அழைக்க "நான் உங்ககிட்ட வந்தா உங்க மகளுக்கு மூக்கு வேரூக்கும் இது எனக்கு தேவையா நான் போறேன்பா..." என வயிற்றை பிடித்து கொண்டு அறையில்‌ இருந்து வெளியேறியவளை
கண்டு சிரித்து கொண்டான் ஆத்ரேயனை நெருங்கினாலே ஹிட்லர் கணக்காக முறைத்து கொண்டு வந்து நிற்கு மகளிற்கும் அவளுக்கு பெரிய போர்யே நடக்கும் அதை சமாளித்து முடித்து வைப்பதற்கு ஆத்ரேயன்‌ பாடு திண்டாட்டம் தான்.



"மருமகளை கண்டதும் என்னம்மா ப்ரேயிங் முடிஞ்சதா?.." என்றவரிடம் "ஆமா அத்தை... என தலையசைத்தவளுக்கு அவளுடைய மதத்தின் பழக்க வழக்கங்களை செய்ய அந்த வீட்டில் முழு உரிமை கொடுக்கப்பட்டிருந்தது "அத்தை அவங்க சமைச்சிட்டாங்களா?..." என கிட்ஷனை எட்டிப் பார்க்க "ஆஹ் இப்போ தான் முடிச்சாங்க எல்லாம் நல்லாயிருக்குமா நீ வந்து உக்காரு நான்
ஜுஸ் எடுத்து வரேன்..." என அவளுக்கு சத்தான ஜுஸ் கொண்டு வந்து கொடுக்க மாமியாரும் மருமகளும் சேர்ந்து கதையளக்க தொடங்கினர்....



நேரம் ஆனதை தவிர்த்து அவர்கள் எதிர்பார்த்த ஆட்கள் தான் வரவில்லை
"ரேயன்....." என கீழிருந்து குரல் கொடுக்க பதறியடித்து ஓடி‌ வந்தான் ஆணவன்...
"என்னாச்சு ரதி...." என்று
அவளுக்கு ஏதும் வலி கண்டு விட்டதோ என அவன் பதட்டமாக நிற்க
அவளோ நிதானமாக "என்ன நீங்க பொறுப்பில்லாம அறையிலே உக்கார்ந்திட்டு இருக்கீங்க
சீக்கிரம் கோல்ஃ பண்ணி பாருங்க இன்னும் யாரையும் காணோம்..." என
மூச்சு வாங்க பேசியவளை முறைப்பாக பார்த்தவன் அவள் வாயிலே ஒரு அடியை போட்டு "அதை மெதுவா தான் சொல்லேன்டி இப்பிடி கத்தினா உள்ள இருக்கிற என்னோட சிங்கக்குட்டி பயந்திடப் போறான்..." என அவள் தோள் பற்றி ஷோபாவில் இருக்க வைத்தவன் அவள் வயிற்றை தடவி விட அதோ வந்து நின்றாள் அவள் மகள் ஆதிரா.



டாடி.... என வந்து நின்ற குழந்தையை கண்டு மை பிரின்சஸ் என தூக்கி கொஞ்ச இதை பார்த்து கொண்டிருந்த மெஹ்ரா "அத்தை பாருங்க இவரே குழந்தை வந்ததும் என்னை கண்டுக்கிறாரே இல்லை குழந்தையை பெத்து குடுத்ததும் என்னை கலட்டி விட்டாரு..." என மூக்கை உரிய அய்யோ... என தாயும் மகனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் கர்ப்ப காலத்தில் சிறிய விஷயத்திற்கு குழந்தையாக மாறி கோபபட்டு கொண்டிருப்பாள்
அவனின் ரதி....



அதே சமயம் வெளியே சென்றிருந்த ஆத்ரேயனின் தந்தை அவர்களை அழைத்து கொண்டு வந்தனர் ஆம் இன்று நந்தனும் ஷைந்தவியும் அவர்களின் குழந்தையோடு வர‌ அண்ணா... என வந்து கட்டிக் கொண்டாள் ஷைந்தவி.


பல விசாரிப்புகள் உடன் பேசி கொண்டிருக்க நண்பர்கள் மூவரும் அவரவர் மனைவியுடனும் குழந்தையுடனும் ஆத்ரேயன் வீட்டுக்கு வந்தனர் ஏதாவது ஒரு நாளில் அனைவரும் இப்படி சந்தித்து கொண்டனர்....


வீடே கலைகட்ட அரட்டைகளுக்கு மத்தியில் உணவு உண்டு அந்த நாளை சந்தோஷமாக கழித்தனர் முகில்வனத்திற்கு வருடத்தில் ஒரு மாதமாவது சென்று அவர்களின் வீட்டில் தங்கி‌ எஸ்டேட்யையும் பார்த்துவிட்டு வருவதும் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தது....



இரவை ஆளும் நிலவு ராணி முழுமதியா வந்து நிற்க அந்த அறைக்குள் அப்படி ஒரு நிசப்தம் மூச்சு‌ விட சற்று சிரமமாக இருக்க படுத்திருந்தவள் எழ அங்கு மகளை தட்டி கொடுத்து அப்படியே உறங்கி போய்யிருந்த ஆத்ரேயனை கண்டவள் அவர்கள் உறக்கம் களையாத வண்ணம் எழுந்து பால்கனி வந்தவள் நிலவு ராணியை கண்டு புன்னகைத்தாள்
ஒரு காலத்தில் யாருமற்ற தனியுலகில் இருந்தவளுக்கு மனதில் இருப்பதை கொட்ட கிடைத்த தோழியே அவள் காரிருள் அவளை மறைத்து எடுத்துகொண்டு போன நாளில் திரும்ப எப்போது தோன்றுவாள் என காத்திருந்து மனபாரத்தை கொட்டிய நாளும் உண்டல்லவா....


இன்றோ சந்தோஷமாக அதை பார்த்து கொண்டிருக்க அவளை பின்னாலிருந்து அணைத்தான் ஆத்ரேயன் அவன் ஸ்பரிசம் உணர்ந்து அவள் அமைதியாக நிற்க "என் ரதி குட்டிக்கு கோவமா கழுத்தில் மூக்கால் கோலமிட அவனின்‌ தீண்டலில்‌ சிலிர்த்தாலும்
விரைப்பாக "அய்யோ நாங்க யாரு சார் உங்க மேல கோவபபட எதுக்கு இப்போ இங்க வந்திங்களாம் உங்க பொண்ணு தான் அங்க இருக்காளே...". முறுக்கி கொண்டு இருந்தவளை திருப்பி அவள் நெற்றியில் முத்தமிட்டவன் "நீ இல்லாமல் தான் அவ வந்தாளா எனக்கு என்
ரதி தான் ப்ஸ்ட்..." என கன்னம் கிள்ள...


"ஆமா‌ ஆமா இப்பிடி தான் ஐஸ் வைக்க வேண்டியது ஆனா என்கூட இருக்கிறது இல்லை..." என சோகமாக கூறியவளை
கண்டு சிரித்தவன் "இனிமே இருந்திட்டா போச்சு ஆமா எதுக்கு இங்க வந்து நிக்கிற குளிர் காத்து உன் உடம்புக்கு ஒத்துக்காது...." என அழைக்க அவளோ கால் வீங்கி வருவதை கண்டு
அங்கிருந்த‌ சிறிய ஷோபாவில் அமர்ந்து கொள்ள அவளின் காலடியில் மண்டியிட்டு அமர்ந்தவன் தன் தொடை மீது அவள் பாதம் வைத்து மெதுவாக அழுத்தி அழுத்தி பிடிக்க சுகமாக உணர்ந்தாள்...



அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவளை கண்டு "தூக்கம் வரலயாடி..." என கேட்டவனை‌ கைகள் இரண்டையும் விரித்து வர சொல்ல சிரித்தவன் அவளருகே அமர்ந்து அவளை நெஞ்சில் சாய்த்து கொள்ள தன்னிடத்தை அடைந்தவளுக்கு அப்படியொரு நிம்மதி....


சிறிது நேரத்திலே தந்தையின் கத கதப்பு இன்றி கண் விழித்த ஆதிரா அவனை தேடி வந்து அவனின் மறுபக்க தோளில் சாய்ந்து விட்ட உறக்கத்தை தொடர‌ மூவரும் அவணைப்புக்குள் இருக்க ஆணவனுக்கு ஒரு கர்வம் அவன் வாழ்வில் அனைத்தும் பூர்த்தியாகியே திருப்தி...

தொலைந்து போன உறவை தேடி அவள் இணையாக சேர்த்துக் கொண்டவனிடம் சிறு கோபம் கொண்டு அவனை தன்னை கொஞ்ச வைத்து அதிகமாக காதலித்து
கொண்டிருந்தாள் அவனின் ரதி....


15 வருட காதலை ஒருவருக்கொருவர் எந்தவித சூழ்நிலையிலும் கைவிடாது ‌
காத்திருக்க‌ வைத்து இன்று அந்த காதலின் புது அத்தியாயமாக கணவன் மனைவி என உறவெடுத்து அவர்களின் காதல் பரிசாக கிடைத்த குழந்தைகளுடன் இனி விலகாதே உயிராய்... பிணைந்து வாழ்வார்கள் என எண்ணி கொண்டு நாமும் விடைபெறுவோம்.

சுபம்....
 
Top