• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 13

நாட்கள் கடந்து திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பு தான் கல்யாணியின் கிராமத்திற்கு வந்து சேர்ந்தனர் சரவணன் குடும்பத்தினர்.

அப்போதும் திருமணத்திற்கு பிறகு விடுமுறை தேவை இருக்கும் என கூறி திருமணத்திற்கு முந்தைய நாள் வருவதாக கூறிவிட்டான் ப்ரணித்.

இரு வீட்டின் பக்கமும் கல்யாண வேலைகள் மும்முரமாய் நடைபெற, அரசன் மொத்த செலவையும் அவரே ஏற்றிருந்தார்.

எந்த ஒரு வேலையையும் குறை எதுவும் இல்லாமல் செய்து முடித்திருக்க, சரவணன் வந்த பிறகு அங்கே அவருக்கு வேலை என்பது இல்லாமல் போனது.

இந்த ஒரு வாரத்தில் ராணியும் ஸ்ரேயாஸும் கல்யாணியிடம் நன்றாய் பழகி இருந்தனர்.

"ப்ரணி போன் பண்ணினா டா?" என ராணி கேட்கவும், இல்லை என அவள் தலையசைக்க,

"நீ அவனுக்கு கால் பண்ணினியாமே! அந்த நம்பர்க்கு கூப்பிட போறேன்னு சொன்னானே!" என்றதும் அவளுக்கு வடிவு எண் என்று புரிந்துவிட,

"இல்ல ராணி ம்மா அது அப்பத்தா நம்பர்.. அப்பத்தா அப்டி போன் ஒன்னும் வந்ததா சொல்லலையே" என்று கூற,

"போச்சி! அது பியூட்டி நம்பரா? பியூட்டி அப்ப அண்ணனை கரெக்ட் பண்ணி இருக்கும்" என்று கூறி சிரிக்க, கல்யாணியும் சிரித்தாள்.

"அது சரி! ஆனாலும் அவன் உன்கிட்ட பேவே இல்லையா? நீயாவது அவனுக்கு கூப்பிட்டியா?" என்று ராணி கேட்க, மீண்டும் இல்லை என்று தலையசைக்கவும்,

"உன் அண்ணன் அவ்வளவு நல்லவனா ஸ்ரே! கல்யாணம் முடிஞ்சதும் பேசிக்கலாம்னு இருக்குறான் போல" என்று கூற,

"இருக்கும் இருக்கும் மா.. இல்லைனா பியூட்டி எதுவும் தடா போட்டு வச்சிருக்கும்" என்று கூற,

"விடு டா.. அதான் நாளைக்கு வந்துடுவானே.. நாளன்னைக்கு கல்யாணம்.. அப்புறமா பொறுமையா பேசிகட்டும்" என்றார் கல்யாணி.

"என்னத்த பேசிகிட்டு இருக்கிய மருமவட்ட?" என்று வடிவு வந்துவிட,

"பியூட்டியை தான் கேட்டுட்டு இருந்தோம்.. வந்துட்டீங்க.. என்ன பியூட்டி கல்யாணத்துக்கு ரெடி தானே?" என்று ஸ்ரேயாஸ் கேட்க,

"ஆமா எனக்கு தான உன் அண்ணன்காரன் தாலி கட்ட போறான்.. கேக்குறான் பாரு கேள்விய" என்று வடிவு கிண்டல் செய்ய,

"அப்பத்த்த்தா!" என்று பல்லைக் கடித்தாள் கல்யாணி.

"விடுங்க அண்ணி! பியூட்டி என்ன பேசும்னு தெரியாமலா கேட்டேன்" என்று கூறி மேலும் இரண்டு பேச்சுக்களை வடிவிடம் இருந்து வாங்கிக் கொண்டான்.

சில நிமிடப் பேச்சுக்களின் பின் "ஆத்தி! அப்போ அன்னைக்கு போனப் போட்டது உன் அண்ணே பரணியா? நான் பேங்க்குகாரனுல்ல நினச்சேன்" என்று வடிவு கூற, அங்கிருந்தவர்களின் சிரிப்பு சத்தம் வீட்டை நிறைத்தது.

"ஏன் டா மூஞ்சி இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இருக்கு?" விவேக் ப்ரணித்தை கேட்க,

"உனக்கு என் கஷ்டம் புரியுதா இல்லையா?" என்றான் இன்னும் அவஸ்தையாய்.

"சரி சரி வா! அதான் பக்கத்துல வந்தாச்சே" என்று அருண், விவேக் இருவரும் ப்ரணித்தை அழைத்து வந்த இடம் கல்யாணியின் கிராமத்தில் இருக்கும் அந்த மண்டபத்தின் திருமண மண்டபம்.

"இதெல்லாம் ஒரு மண்டபம்... மனுசனை அவசரத்துக்கு ஓடி வர வச்சுட்டானுங்க.. இருக்கட்டும் பேசிக்குறேன்" வாய்க்கு வந்த வார்த்தைகளால் அர்ச்சித்தபடி ப்ரணித் உள்ளே செல்ல,

"என்னால இன்னும் நம்ப முடியல டா.. இந்த ஊர்ல இருக்க பொண்ணை எப்படி இவன் சம்மதிச்சான்?" என்று அருண் கேட்க,

"எனக்குமே அந்த டவுட் இருக்கு.. வேணாம்னு தான் கேட்காமலே இருக்கேன்.. அங்கிள் ஆண்ட்டி இவன்கிட்ட என்ன குட்டி கரணம் அடிச்சி சம்மதிக்க வச்சாங்களோ! இவன் வேற அந்த ஹரிணினால அப்செட்ல இருந்தான்.. எது எப்படினாலும் அவன் லைஃப் அவன் நினச்ச மாதிரி இருக்கனும் டா.. இல்லைனா என்ன பண்ணுவனோ" என்றான் விவேக்.

திருமணத்தின் முந்தைய நாள் மாப்பிள்ளை அழைப்பிற்கு முன் வந்து சேர்ந்திருந்த ப்ரணித் உடன் நண்பர்களையும் அழைத்து வந்திருந்தான்.

தனிமையைக் கேட்டு அவர்களாய் வாங்கிக் கொண்ட இடம் தான் மண்டபம்.

"என்ன ஊர் டா இது.. ரெஸ்ட் ரூம்க்கு இப்படி ஓடி வர விடுறானுங்க.. இன்னைக்கு முழுக்க இங்க தான் தங்கனுமாம்" ப்ரணித் குறைபட,

"ஏன் டா இது என்ன என் மாமியார் வீடா? உன் மாமனார் ஊரு டா.. இதுக்கே சலிச்சுக்குற.. கல்யாணத்துக்கு அப்புறம் நீ அடிக்கடி வந்து போய் இருக்கனும் தம்பி" என்றான் அருண்.

"அவங்க வீடெல்லாம் நல்லா தான் இருக்குமா இருக்கும்.. கிராமத்துல மண்டபம் இருக்குறதே பெரிய விஷயம்.. நல்லவேளைக்கு ஓரமாவாச்சும் கட்டி வச்சானுங்க பாத்ரூம்னு" என்றபடி உள்ளே நடக்க, வாசல் வழியே வெளியில் கட்டி இருந்த பேனர் கண்களில் படவும் அதைப் பார்த்தபடி அங்கே நகர்ந்தான் ப்ரணித்.

"கல்யாணி ஒருபுறமும் ப்ரணித் மற்றொரு புறமும் என இருக்க நடுவில் திருமண வாழ்த்து.

"இதுக்கு மேல என்னால சத்தியமா கேட்காமல் இருக்க முடியாது டா" என விவேக்கிடம் கூறிய அருண்,

"எப்படி ப்ரணி மேரேஜ்க்கு சம்மதம் சொன்ன?" என்று கேட்கவும் பேனரில் இருந்து ப்ரணித் திரும்பி நண்பனைப் பார்க்க,

"நிஜமா இதை கேட்காமல் இருக்க முடியல டா.." என்றவன் அவன் காதருகே குனிந்து,

"நீ ப்ரொபோஸ் பண்ணின பொண்ணுங்கல்ல ஒரு எழேட்டு பேர் எனக்கு தெரியும்.. அவங்களை எல்லாம் கம்பேர் பண்ணினா...." என்று இழுத்தவன் பேனரை திரும்பிப் பார்க்க,

"அழகா இல்லைனு சொல்ற அப்படி தானே?" என்றான் ப்ரணித்,

"அப்படி இல்லை டா.. அந்த பொண்ணுங்கள விட இவங்க கொஞ்சம் கம்மினு பீல் ஆகுறதை தான் அவன் அப்படி சொல்றான்" என்றான் விவேக்.

"ஆமா! நான் அழகான பொண்ணுங்களை தான் பார்த்தேன்.. இல்லைனு சொல்லல.. ஆனா என்ன நடந்துச்சு? உங்களுக்கே தெரியும் இல்ல? எனக்கு புடிக்கல ஆப்போசிட்ல என்னை புடிக்கலனு உங்க பாஷைல செஞ்சுரி அடிச்சேன்.. பட் நோ யூஸ்.. கல்யாணியை உங்களுக்கு நியாபகம் இருக்குதா?" என்று கேட்கவும் நண்பர்கள் விழிக்க,

"மது மேரேஜ்க்கு வந்திருந்தா" என்று கூறி அவர்களுக்கு நியாபகப்படுத்த,

"ஓஹ்! அந்த பொண்ணு தானா?" என்றான் அருண் மட்டும் நியாபகம் வந்தவனாய்.

"லவ் மேரேஜ் தான் பண்ணனும்னு இருந்தேன்.. லைஃப் என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தி இருக்கு.. மாடர்னா எஸ்பெக்ட் பண்ணினேன் தான்.. அதுவும்..." என்றவன்,

"பார்க்கலாம்.. எனக்குன்னு எழுதினது தானே எனக்கு வரும்" என்று கூற,

"என்ன டா இப்படி மாறிட்ட?" என்றான் அருண்.

"பின்ன என்ன பண்ண சொல்ற? அம்மாகிட்ட போயிட்டு எனக்கு இந்த கல்யாணம் வேணாம்ன்னு சொல்லி இருந்தா அவங்களும் சரினு தான் சொல்லி இருப்பாங்க.. நானும் பொண்ணு தேடுறேன்னு எதையாவது புடிச்சி ஐ லவ் யூ சொல்லி அது அந்த ஒட்டட குச்சி மாதிரி இருந்து... உஃப்! நினைச்சு பாரு! என் லைஃப் என்ன ஆகுறது?" என்றவன்,

"இப்ப பாரு நாளைக்கு எனக்கு மேரேஜ்! வில்லேஜ் பொண்ணுனாலும் அழகா தான் இருக்குறா.. நான் சொல்றதை கேட்டுப்பா! சில விஷயங்கள் கத்து கொடுத்துக்கலாம்.. அப்புறம் எனக்கு புடிச்ச மாதிரி நான் வாழ்ந்துட்டு போய்க்குறேன் அவ கூட.. வெரி சிம்பிள்! இதை ஏன் காம்ப்ளீகேட் ஆக்கணும்னு தான் விட்டுட்டேன்" என்றான் தோள்களை உயர்த்தி.

"உனக்கெல்லாம் மாஸ்டர் மைண்டு டா.. என்னமா பிளான் பண்ற.. பொழச்சிக்குவ டா.. நல்லா இரு.." என்ற நண்பர்கள் பேசயபடி மணமகன் அறைக்கு சென்றனர்.

"என்னப்பா இந்த நேரத்துல?" என ப்ரணித் கேட்க,

"ஏன் டா உன்னைப் பார்க்க நான் வர கூடாதா?" என்று சிரித்தார் சரவணன்.

"ப்பா! மணி மிட்நைட் ஒன் ஒ கிளாக்! அதான் கேட்டேன்.. விஷயம் இல்லாமல் இந்த நேரத்துல வர மாட்டிங்களே!" என்று கேட்க,

"சும்மா தான் டா.. உன்கிட்ட பேசணும் தோணுச்சு.. பசங்க எங்க?" என்று அவர் கேட்க,

"ரெண்டும் தூங்குறானுங்க.." என்றான்.

"ஹ்ம்!" என்றபடி அமைதியாய் இருந்தார் சரவணன்.

"சும்மா சொல்லுங்க பா.. என்னவோ பேச வந்துருக்கீங்க தெரியுது.. ஆனா என்னனு தான் தெரிய மாட்டுது" என்றான் ப்ரணித்.

"ம்ம் டா!" என்றவர்,

"ப்ரணி! உனக்கு நிஜமா கல்யாணியை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் தானே? உன் அம்மாக்காகன்னு எதுவும் நீ சம்மதம் சொல்லலையே?" என கேட்டார்.

"ப்பா! இந்த சந்தேகம் வர்ற நேரமா இது உங்களுக்கு?" என அவன் சிரிக்க,

"இல்ல டா! நீ ரொம்ப விளையாட்டுத் தனமா இருக்குறனு தான் அம்மா உனக்கு பொண்ணு பார்த்ததே! சரியான திசையை பெத்தவங்க கை தான் காட்டணும்.. புள்ளைங்க தானே முடிவு பண்ணனும்.. அதான் கேட்குறேன்.. உனக்கு இதுல முழு சம்மதம் தானே?" என்றார்.

"அம்மா சரியா தான் நினைச்சிருக்காங்க பா.. மே பீ அவங்க பயந்திருக்கலாம் என்னை நினச்சு.. இல்லைனா என்னை கேட்காம எதுவும் செய்யாதவங்க கல்யாண விஷயத்துல கேட்காமலே பொண்ணு பார்திருப்பாங்களா? எனக்குமே நிறைய கன்பியூஷன் இருந்திச்சு.. பை நொவ் ஐம் ஓகே.. நான் ரெடியா தான் இருக்கேன்" என்றான் தெளிவாய்.

"நீ தெளிவா இருந்தா சரி தான் ப்ரணி.. என்னவோ மனசுக்கு உன்கிட்ட பேசிட்டா நல்லதுன்னு தோணிச்சு.. அதான் உன் அம்மாகிட்ட கூட சொல்லாம வந்துட்டேன்.. ஆனா சென்னைல பொறந்து வளந்தவன் நீ.. கல்யாணி அப்படி இல்ல.. சோ கொஞ்சம் புரிஞ்சி லைஃப் லீட் பண்ணனும் ஓகே" என்று சரவணன் கூற,

"கண்டிப்பா ப்பா! ஐ கேன் மனேஜ்" என்றான் அவனும்.

அடுத்த நாள் காலை பரபரப்பான ஆரம்பமாய் ஆரம்பித்து அடுத்தடுத்து என ஒவ்வொருவராய் கிளம்பி மணமகளுடன் மண்டபம் வந்து சேர,

ப்ரணித் நண்பர்களுடன் அங்கே தயாராய் நின்றான் மாப்பிள்ளை கோலத்தில்.

நல்ல நேரத்தில் கை வந்து சேர்ந்த மங்கள நாண் கல்யாணியின் கழுத்தினில் இடம் பெற, ப்ரணித் கல்யாணியை அளவீடும் பார்வை பார்த்ததும் அந்த நொடி தான்.

"என்னைய விட்டுட்டு வந்துட்டீங்களே நீங்க எல்லாம் பிரண்ட்ஸ்ஸா டா?" என்றபடி சரியாய் முஹூர்த்த நேரத்திற்கு வந்து சேர்ந்திருந்தாள் மதுவும்.

வடிவின் பல அந்த கால வழக்கங்கள் படியும் சிறியவர்களின் விருப்பங்கள் சிலவும் என திருமணம் நடந்தேறி இருக்க, இரண்டாம் நாள் தனது பிறந்த வீட்டில் இருந்து கண்ணீருடன் கிளம்பி இருந்தாள் கல்யாணி புகுந்த வீட்டை நோக்கி.

தொடரும்..
 
Top