• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 17

"அதான! என்னம்போ நீங்க எனக்கு வாழ்க்க குடுத்துட்ட மானிக்கும் இனிமே நான் வானத்துல பறக்க மாதிக்கும்னு.. எல்லாமே உங்களால தான்னு பேசுதீங்கல்ல.. அத தான் சொல்லுதேன்.. உங்கள நீங்க உயத்தி வச்சி என்னைய கீழ நினைக்காதீங்கன்னு சொல்லுதேன்" என்று கல்யாணி கூற,

"என்னால இப்பவும் நீ பேசுறத நம்பவே முடியல.. கல்யாணி! கவுத்துட்ட போ! என்னை நான் எவ்வளவு கெத்தா மைண்டைன் பண்ணிட்டு இருக்கேன் தெரியுமா? ஆஃபீஸ் வந்து பாரு.. ப்ரணின்னா அங்கே சீனே வேற மாறி இருக்கும்.. நீ என்னவோ என்னை ந்தா..ச்சீ.. ப்பே.. அப்டின்ற மாறி ட்ரீட் பண்ற.. நல்லா இல்லை சொல்லிட்டேன்" என்ற ப்ரணித்,

"நானும் ஒன்னும் ரொம்ப ஆசையா எல்லாம் உன்னை கல்யாணம் பண்ணிக்கல.. என் அம்மாக்காக தான்.. அவங்க தான் பேசி பேசி என் மைண்டை மாத்தி உன்னை கட்டிக்க வச்சாங்க.. அதுனால ரொம்ப எல்லாம் நீ நினைச்சுக்காத.." என்று கூறியவன் அவளை பழி வாங்கிவிட்டதை போல நினைக்க,

"அதான் சொன்னிங்களே காதலிச்சு தான் கல்யாணம் பண்ண நினச்சீங்கன்னுட்டு.. அப்படி பண்ணி இருந்தா நானாச்சும் தப்பிச்சு என் ஊர்லயே சந்தோசமா இருந்துருப்பேன்.." என்றாள் அசாராமல்.

"அப்டின்னா?" என்று அவன் கேட்க,

"உங்கள எவ காதலிச்சு கல்யாணம் பண்ண? நீங்க அதுக்குல்லாம் சரிப்பட மாட்டிங்க.. இருந்தாலும் நான் தப்பிச்சு இருப்பேன்.. சிவனேன்னு ஊர்ல இருந்த என்னிய கொண்டாந்து ரொம்ப தான் பேசுதீங்க.. விடியட்டும்.. இருக்கு உங்களுக்கு" என்றவள் போர்வையை இழுத்து மூடி படுத்துக் கொள்ள, மனம் ஆற மறுத்தது ப்ரணித்திற்கு.

இவ்வளவு பேச்சிலும் கல்யாணிக்கு கோபம் வர ஒரே காரணம், அவன் என்னவோ அரசப் பரம்பரையிலும் ஆங்கிலத்திலும் புரண்டவன் போலவும் இவளை அவனுக்கு கீழேயேவும் வைத்து பேசியதிலும் மட்டும் தான்.

ஆனால் அதை மட்டும் ப்ரணித் உணரவே இல்லை. அவன் எண்ணம் முழுதும் அவள் தன்னை நிராகரித்திருக்கிறாள் என்பதிலும் திருமணத்தை நிறுத்த பார்திருக்கிறாள் என்பதிலும் இருக்க, கல்யாணி இப்பொழுது ஏன் கோபமாய் பேசினாள் என்பதை சிந்திக்க மறந்து போனான்.

"அய்யோ! அம்மா என்னை காப்பாத்துங்க" என காலையிலேயே ஸ்ரேயாஸ் அலறிக் கொண்டு இருக்க,

"எடுபட்ட பயலே! என்னைய பேசி பேசி தூங்க வச்சுட்டிய.. என் பேத்தி என்னைய எம்புட்டு தேடி இருப்பா" என விரட்டிக் கொண்டிருந்தார் வடிவு அவனை.

"பியூட்டி! சத்தியமா என்னால ஓட முடியல.. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கலாம்" என்று வாசலில் அவன் அமர, அவன் முன் கோபமான கோபமாய் நின்றிருந்தார் வடிவு.

ஜாக்கிங் முடித்து அப்போது தான் வீட்டிற்குள் நுழைந்த ஸ்ரேயாஸை கையும் காலுமாய் பிடித்திருந்தார் வடிவு.

"நீங்க தூங்கினதுக்கு நான் என்ன செய்வேன் பியூட்டி?" என்று ஸ்ரேயாஸ் கேட்க,

"வீடா இது? எதுக்கு எந்த பக்கம் போவணும்னுமுன்னே தெரியல.. முதல்ல என் பேத்தி ரூமக் காட்டு.. பொறவு இருக்கு உனக்கு" என்றார் வடிவு.

'அய்யோ அங்கே அண்ணா இருப்பாங்களே!' என்று ஸ்ரேயாஸ் வடிவை சமாளித்தபடி இருக்க,

"ம்மா! நான் ஆபிஸ் கிளம்புறேன்" என்று தயாராய் கிளம்பி வந்திருந்தான் ப்ரணித்.

"தோ! அண்ணா வந்தாச்சு.. வாங்க பியூட்டி" என்று வடிவோடு உள்ளே வந்தான் ஸ்ரேயாஸ்.

"பரணி! நீ எங்கன தூங்குன?" சந்தேகமாய் வடிவு கேட்க,

"அத பரணிகிட்ட கேளுங்க.. இது ப்ரணி!" என்று ஸ்ரேயாஸ் கூற,

"வாய மூடல.. உன்னைய இங்கனயே பொளந்துருவேன்" என்றவர் மீண்டும் ப்ரணித் பக்கம் திரும்ப,

"எப்ப எழுந்திங்க ம்மா? பூஜைக்கு பூ பறிச்சுட்டு வந்துடலாம்னு வெளில போனேன்" என்று வந்த ராணி, ப்ரணித்தைப் பார்த்து கேள்வியாய் கண்களை சுருக்கினார்.

"அண்ணா ஆபீஸ் கிளம்பியாச்சு" ஸ்ரேயாஸ் கூற,

"ஆபீஸா? என்ன டா விளையாடுறியா?" என்றார் ராணி.

"முதல்ல கல்யாணி எங்கன்னு சொல்லுங்க" என்று வடிவு அதிலேயே நிற்க,

"இங்கன தான் இருக்கேன் அப்பத்தா.." என்று வந்தாள் கல்யாணி.

குளித்து முடித்து தலையில் துண்டைக் கட்டி இருந்தவள் கையில் காபி ட்ரேயுடன் நிற்க, அவளைப் பார்த்ததும் முகத்தை திருப்பிக் கொண்டான் ப்ரணித்.

அதைப் பார்த்த கல்யாணியும் 'இவங்களுக்கு மட்டுந்தேன் திருப்பத் தெரியுமாக்கும்" என்று அவளும் அவனுக்கு எதிராய் முகத்தை திருப்ப, ஸ்ரேயாஸும் ராணியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

"கண்ணு போதல போ த்தா உன்னைய இப்டி பாக்க" கல்யாணி நின்ற விதம் அத்தனை பிடித்து வடிவு கூற, இருவரின் நடவடிக்கையை பாவம் அவர் கவனிக்கவில்லை.

"எதுக்கு வெளியில ரெண்டு பேரும் அடிச்சிக்கிட்டு கிடந்தீங்க?" என்றாள் கல்யாணி வடிவிடம்.

"பியூட்டி தான் அடி வெளுத்திடுச்சி அண்ணி உங்களை எங்கன்னு கேட்டு.." என்றான் ஸ்ரேயாஸும்.

"ஏன் அப்பத்தா அவன்கூட காலையிலே மல்லுக்கு நிக்க.." என்று கேட்க,

"ராத்திரி இந்த பய தான் என்னம்போ பண்ணிட்டான்.. அம்புட்டு சீக்கிரமா தூக்கத்துக்கு அசருதவளா நானு?" என்று வடிவு கேட்க,

"அய்யோ சரியா சொல்லுங்க பியூட்டி! என்னவோ பண்ணிட்டேன் இல்ல.. நீங்க தான் பேசி பேசி டையார்ட் ஆகி தூங்கிட்டிங்க.." என்றவனை வடிவு முறைக்க,

"அங்க இருந்து இவ்வளவு தூரம் வந்த அலுப்பு இருந்துருக்கும் அப்பத்தா.. அதான் தூங்கி இருப்ப.. இந்தா இந்த காபியை குடிங்க" என்று கொடுக்க,

"நீ குடிச்சியா கல்யாணி?" என்றார் ராணி.

"இனிமே தான் ராணிம்மா.. உங்கள தேடுனேன்.. இல்லனு தான் நானே போட்டுட்டேன்.." என்றாள்.

"நீங்க உள்ள போங்க அம்மா.. கல்யாணி! அப்பத்தாவை உள்ள கூட்டிட்டு போ.. நான் இதோ வர்றேன்" என்று ராணி கூறவும்,

"வா அப்பத்தா!" என்று ஸ்ரேயாஸை முறைத்து நின்ற வடிவை உள்ளே அழைத்து சென்றாள் கல்யாணி.

"ம்மா! பியூட்டி செம்ம ஸ்ட்ரோங்.. என்னா அடி" என்று முதுகினை ஸ்ரேயாஸ் தேய்க்க,

"எங்க டா கிளம்பிட்ட?" என்றார் ராணி ப்ரணித்திடம்.

"ம்மா! எனக்கும் கல்யாணிக்கும் சண்டை.. நான் ஆபிஸ் போக போறேன்" உம்மென முகம் வைத்து ப்ரணித் கூற, ஸ்ரேயாஸ் சிரித்துவிட்டான்.

ராணியும் வந்த சிரிப்பை அடக்கி நிற்க, "என்ன சிரிப்பு உங்களுக்கு? என்னைப் பார்த்தா எல்லாருக்கும் சிரிப்பா இருக்குதா? அவ என்னென்னவோ சொல்றா மா" என்றவன், அவள் பேசியதில் அவனுக்கு புரிந்ததைக் கூற,

"நீ என்ன குழந்தையா ப்ரணி? இது ஒரு விஷயம்னு பேக்'க மாட்டிட்டு கிளம்பிட்ட?" என்றார் ராணி.

"ம்மா! அவ கல்யாணத்தை நிறுத்த தான் கால் பண்ணினேன்னு சொல்றா.. அது மட்டும் இல்லாம முதல்ல இருந்து என்னவெல்லாமோ பண்ணி இருக்கா என்னை புடிக்காம" அவன் கூற,

"கல்யாணத்தை நிறுத்த பார்த்தா சரி! உன்னை புடிக்காமன்னு அவ சொன்னாளா?" என்று ராணி கேட்க,

"பின்ன? அப்புறம் வேற எதுக்கு கல்யாணத்தை நிறுத்த பார்க்கணும்?".

"அதான் அவளே சொல்லி இருக்கால்ல டா.. அவளுக்கு அவ பிறந்து வளர்ந்த ஊரை விட்டு வர விருப்பம் இல்ல.. அதனால சின்ன பொண்ணு அவளுக்கு தெரிஞ்சதை செஞ்சிருக்கா.. அதுக்காக கோச்சிப்பியா? நீ தான டா நாம எல்லாம் அவளுக்கு இருக்கோம்னு சமாதானம் பேசணும்?" என்று கூற,

"எது அவ சின்ன பொண்ணா? என்னப் பேச்சு பேசுறா தெரியுமா? என்னவெல்லாமோ சொல்றா மா.." என்று ப்ரணித் சிணுங்க,

"அவளை இவ்ளோ சொல்ற நீ.. நீ செஞ்சதை எல்லாம் அவகிட்ட சொன்னியா? எத்தனை பொண்ணுங்ககிட்ட பேசி மேரேஜ் பண்ணிக்க சொல்லி ஐ லவ் யூ சொல்லி இருப்ப? அதை எல்லாம் சொன்னியா அவகிட்ட?" என்று கேட்க,

"ஓஹ் சொன்னேன்னே!" என்று சத்தமாய் கூறியவன்,

"கொஞ்சம் அப்படி இப்படி சொன்னேன்.. முழுசா சொல்ல டைம் வரணும்ல?" என்று கூற,

"உனக்கு ஒரு நியாயம் அவளுக்கு ஒரு நியாயமா? அவளே அம்மா அப்பாவை விட்டுட்டு எப்படி இருக்க போறோமோன்னு பயந்துட்டு இருக்குறா.. இவன் வேற" என்றார் ராணி.

"ம்மா! என் போட்டோ பார்த்தும் வேண்டாம்னு சொல்ற அளவுக்கா நான் இருக்கேன்?" ப்ரணித் கேட்க, அவன் பிரச்சனையை புரிந்து கொண்டார் அன்னை.

"இதென்ன டா புதுசா ஒரு அடம் உன்கிட்ட.. அவ உன்கிட்ட அப்படி சொன்னாளா?" என்று கேட்க,

"ஆமா! போட்டோ எல்லாம் பார்த்த அப்புறமும் மேரேஜ் வேண்டாம்னு ஸ்டாப் பண்ண ட்ரை பண்ணி இருக்கா"

"கல்யாணி சொன்னதை நீ இன்னும் சரியா புரிஞ்சிக்கலையோன்னு தோணுது ப்ரணி.. அவ சொல்றதை முழுசா கேட்காம பேசுறனு நினைக்குறேன்.. அவளுக்கு ஊரை விட்டு வர இஷ்டம் இல்ல.. அந்த எண்ணத்துல இருந்தவளுக்கு உன் போட்டோ பார்த்தும் மனசுல பதியாம போயிருக்கலாம் இல்லையா?" என்று ராணி கூற,

"ஓஹ்! அப்படியும் இருக்குமா?" என்றான் ப்ரணித்.

"அப்படி தான் டா இருக்கும்.. இனி நீ தான் அவளைப் பார்த்துக்கணும்.. இப்படி முதல் நாளே சண்டை போட்டு பாக் தூக்கிட்டு வந்தன்னா அவ என்ன பண்ணுவா? இன்னும் வீட்டு நியாபகம் தான் அதிகம் ஆகும் அவளுக்கு" என்றார் ராணி.

தொடரும்..
 

Apsareezbeena loganathan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
466
காதலர் தினம் special எங்கடா????
காதல் என்றால் என்ன என்று
கூட தெரியாத மாப்பிள்ளைக்கு
கோவம் வருதோ.....
சின்ன பிள்ளை போல
அம்மாவிடம் புகார் வாசிக்கும்
ப்ரணி...... அழகன் டா.....
 

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
காதலர் தினம் special எங்கடா????
காதல் என்றால் என்ன என்று
கூட தெரியாத மாப்பிள்ளைக்கு
கோவம் வருதோ.....
சின்ன பிள்ளை போல
அம்மாவிடம் புகார் வாசிக்கும்
ப்ரணி...... அழகன் டா.....
நமக்கு காதலர்களை பிரிச்சு தானே டா பழக்கம்.. அதான் ஸ்பெஷல் எபி இது 😍
 
Top