• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 19

அடுத்த நாள் மாலை கல்யாணி வீட்டினருடன் சொந்தங்கள் என சிலரும் வந்திருக்க, நேரம் நொடியாய் பறந்தது.

அன்னம், ராணி, கல்யாணி என பேசியபடியே சமையலை கவனித்துக் கொண்டிருந்தனர்.

அன்று இரவு இருவருக்குள்ளும் முட்டிக் கொண்டதோடு சரி இருவரும் இன்னும் நேருக்கு நெற் பார்த்து பேசிக் கொள்ளவே இல்லை.

ப்ரணித் அளவில் கோபம் சற்று குறைந்து அன்னை கூறிய வழியில் சிந்திக்க ஆரம்பித்து இருந்தான் என்றால் கல்யாணி என்ன நினைக்கின்றாள் என்றே தெரியாமல் இருந்தான்.

வடிவும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் முகத்தைக் கூட பார்க்காமல் இருப்பதை கவனித்து விட,

"என்னத்தா! பரணி கல்யாணத்துக்கு முந்தி பேசுனா மாதி பேசி தெரியல.. கல்யாணிகிட்டயும் பேசுனா மாதி நான் பாக்கலய" என ராணியிடம் கேட்க,

"வந்த ரெண்டு நாளும் பிரிச்சு வச்சுட்டு கேட்குற கேள்வியை பாரு.. இருந்தாலும் உங்களுக்கு குசும்பு அதிகம் தான் பியூட்டி" என்றான் ஸ்ரேயாஸ்.

"எங்கருந்து நீ என்னத்த பேசுனாலும் ஒட்டு கேட்டு வந்துடுத.. உன்னைய வச்சுட்டு கல்யாணமான சின்ன பிள்ளையல இந்த வீட்டுல வைக்கது கஷ்டந்தேன்" என்று வடிவு கூற,

"பெரியவங்க கிட்ட பார்த்து பேசணும் ஸ்ரே!" என்று கண்டித்த ராணி,

"நாம தானே ம்மா ரெண்டு நாள் நாள் நல்லா இல்லைனு சொன்னோம்.. அதனால இருக்கும்.. புதுசா கல்யாணம் ஆனவன் நம்மகிட்ட பேசவும் கூச்சப்படுறானோ என்னவோ" என்றார்.

"உனக்கு இப்படி ஒரு பிள்ள.. அப்படியும் ஒரு பிள்ள!" என்று ஸ்ரேயாஸை வாரினார் வடிவு.

"சரி தான்.. நான் வேணா என் கல்யாணத்தன்னைக்கு உங்க பக்கத்துலயே இருந்து என் வைஃப்கிட்ட பேசுறேன்.. நீங்க கேட்டுட்டே இருங்க பியூட்டி" என்று ஸ்ரேயாஸும் விடாமல் பேச,

"நீ பேசுதத எவன் கேக்க! கேக்குத மாதியா பேசுவ! அன்னைக்கு உன் பக்கத்துலயே வந்துரமாட்டேம்ல!" என்றார் வடிவும்.

"உன் வீட்டாளுவ கூட நீ சேந்தியோ இல்லயோ உன் அப்பத்தா நல்லா கொட்டம் அடிக்குது போல!" என்று அன்னம் மகளிடம் கூற,

"அப்பத்தா பாவம் ஆத்தா! என்னைய விட்டு இருக்கனும்ன்னு மருவிக்கிட்டு வெளிய காட்டிகிடாம இருக்கு.." என்று கவலை கொண்டாள் கல்யாணியும்.

"ஏன் வேணுமுன்னா கூடயே வச்சிக்க.. நானாச்சு நிம்மதியா இருப்பேம்ல" என்றார் அன்னமும்.

"எனக்கும் நல்லாருக்குமுன்னு தான் தோணுனுது.. இங்கன எல்லாரும் என்ன சொல்லுதாவளோன்னு தான் கேக்கல" என்றாள்.

"அப்படி எந்த கிறுக்குத் தனமும் பண்ணி வைக்காத டி.. உன் அப்பத்தா எல்லாம் அதுக்கு சரிபட்டு வர மாட்டவ.. நீயே இருக்க சொன்னாலும் ஆடுன காலும் பாடுன வாயும்னு என்னைய நாலு வார்த்த பேசாம இங்கன இருந்திருமாக்கும்.."

"உனக்கு பேச்சு வாங்காம இருக்க முடியாதுனு சொல்லு த்தா! நீங்க அங்கன என்னைய நினைச்சீப்பாத்திங்களா எப்பமாச்சும்? எனக்கு உங்க நினைப்பாவே இருக்கு.. நான் எப்போ இனிமே ஊருக்கு வர போறேனோ!" என்று கல்யாணி முகத்தில் கவலைபடர அமர்ந்திருக்க,

"உன்னைய நினைக்காம நாங்க யார நினைக்க போறோம் த்தா! ஒத்த புள்ளைய இங்க வுட்டுட்டி உன் அப்பனுக்கு எல்லாம் நேரத்துக்கு கஞ்சியே இறங்க மாட்டுக்கு.. இனிமே உன் அப்பத்தாவ கூட்டிட்டு போனா அதுவும் வேற பொலம்பிகிட்டே கிடக்கும்.." என்றார் அன்னம் கண்ணீரை மறைத்து.

"நீ என்னைய தேடுவியா ஆத்தா?" என்று குரல் கம்ம கல்யாணி கேட்க, அன்னம் எதுவும் கூறவில்லை.

"அப்பாவும் அப்பத்தாவும் சாப்புடலைனா கவனிச்சி பாத்துக்க நீ இருக்க.. உன்னைய யாரு கேப்பா? நீ சாப்பிட்டியா சாப்பிடலையானு கூட அங்கன யாருக்கும் தெரியாது.." என்று அழுதுவிட,

"அம்மாவும் மகளும் கொஞ்ச நேரம் தனியா பேசட்டுமேன்னு அந்த பக்கம் போனா ரெண்டு பேருமா சேர்ந்து அழுதுட்டு இருக்கீங்க.. உங்களை என்ன பண்ணலாம்?" என்று தூரத்தே அவர்களை கவனித்த ராணி வந்துவிட,

"சும்மா தான் பேசிகிட்டு இருந்தோம் அண்ணி.." என்று சமாளித்து எழுந்தார் அன்னம்.

"உங்க பொண்ணை நாங்க தங்கமா பார்த்துக்குவோம்.. அதனால நீங்க அழக் கூடாது.. உனக்கு உங்க அம்மாவை பார்க்கணும்னா ப்ரணிகிட்ட சொல்லு கூட்டிட்டு போவான்.. நீயும் அழக் கூடாது.. இது மாமியாரா என்னோட ஸ்ட்ரிக்ட் ஆர்டர் புரியுதா?" என்று கேட்க, புன்னகையுடன் சம்மதமாய் தலையசைத்தாள் கல்யாணி.

"நாளைக்கு ஃபங்சன்க்கு ப்ரணி அவன் பிரண்ட்ஸ் அப்புறம் ஆபீஸ்ல கூட ஒர்க் பண்ற எல்லாரையும் கூப்பிடனும்னு சொன்னான்.. நீயும் போய்ட்டு அப்படியே உன்னோட மாமா வீட்டுலயும் சொல்லிட்டு வந்துடுறிங்களா?" என்று கல்யாணியிடம் கேட்க,

"ஆமா! நமக்குன்னு இங்க இருக்கது அவங்க மட்டும் தான் போய் நேருல ஒரு வார்த்த சொல்லிட்டு வந்துரு" என்றார் அன்னமும்.

"சரி த்தா!" என்று கல்யாணி கூறவும்,

"ப்ரணி ரூம்ல தான் இருப்பான்.. நீ போய் அவன்கிட்ட சொல்லிட்டு நீயும் கிளம்பி வா.. நேரத்துக்கு போனா தானே சீக்கிரமா திரும்பி வர முடியும்?" என்று ராணி கூறவும்,

"புடவைய கட்டிக்க கல்யாணி!" என்றார் அன்னம்.

"உனக்கு எது வேணுமோ அதை கட்டிக்க டா.. இங்கே அதை எல்லாம் யாரும் ஏன் சாரீ காட்டலனு கேட்க போறதில்ல.. உன் இஷ்டம் தான்" என்றார் ராணி.

அன்னம் கண்டிக்கும் விதமாய் பார்க்க, அதை பார்த்தபடி மேலே சென்றாள் கல்யாணி.

கதவை திறந்து உள்ளே வந்தவளை திரும்பிப் பார்த்த ப்ரணித் மீண்டும் லேப்டாப்பில் திரும்பிக் கொள்ள,

"நீங்க இன்னும் கிளம்பலயா?" என்றாள் கல்யாணி.

'என்னையா?' என்பதைப் போல அவன் பார்க்க,

"வெளில போறதுக்கு நீங்க தயாரால?" என்றாள் மீண்டும்.

"அதை ஏன் நீ கேட்குற?" என அவன் சண்டையை இழுத்து பிடித்து வைத்து கேட்க,

"வேற யாரு கேப்பா? உங்களுக்கு என்னைய தான கட்டி வச்சாங்க உங்க வீட்டுல?" என்றாள் கல்யாணியும்.

"ஆனா நீ தான் என் கூட சண்டை போட்டியே! பத்தாதக்கு என்னை புடிக்கலைனு கல்யாணத்தை வேற நிறுத்த பார்த்திருக்க!" அனைவரும் கூறி இவனும் மாறி இருந்தாலும் கல்யாணி வந்து சாதாரணமாய் இருவருக்குள்ளும் எதுவுமே நடக்கவில்லை என்பதை போல பேசவும் இவன் முறுக்கிக் கொள்ள,

"என்னத்த உளறுதிங்க? நான் எங்கன சண்டைய போட்டேன்.. அன்னைக்கு நீங்க கேட்டதுக்கு தான பதில சொன்னேன்?" என்றவள் அவனை இரு நொடிகள் பார்த்துவிட்டு,

"அன்னைக்கு பேசுனதுக்கா இன்னும் கோவமா இருக்கீங்க?" என்றாள் ஆச்சர்யம் காட்டி. அதற்கும் அவன் முறைக்க,

"என்னத்த தான் வளந்தீங்களோ! பேசுனோமா சண்ட போட்டோமா! அதை அப்படியே விட்டோமான்னு இருக்கனும்.. காலையில வாய் வார்த்த கூடுனா மத்தியானம் என்ன சாப்பாடுன்னு நீங்க என்னட்ட தான் வரணும்.. சாப்புட வாங்கன்னு நான் உங்கட்ட தான் வரணும்.. வீம்ப பிடிச்சு பேச மாட்டேன்னு கிடந்து என்ன ஆவ போவுது? இதுவும் உங்க பட்டணத்து பழக்கமா?" என்று கேட்க, பேய் முழி முழிதான் ப்ரணித்.

எத்தனை உண்மையான வார்த்தை? கோபத்தை இழுத்து பிடித்து ஆவது என்ன? அன்றைய பொழுது முடிந்தால் அடுத்த நாளை புதிதாய் துவங்க வேண்டும் என்கிறாள்.. சரி தானே என்று நினைத்த ப்ரணித்திற்கு கல்யாணி ஆச்சர்யத்தை தான் கொடுத்தாள்.

"அப்போ நீ என் மேல கோபமா இல்லையா?" என்று ப்ரணித் கேட்க,

"எதுக்கு? காதலிச்சு கல்யாணம் பண்ண போறேன்னு என்னைய கல்யாணம் பண்ணினதுக்கா? உண்மையா யாரையாது காதலிச்சுட்டு என்னைய கல்யாணம் பண்ணி இருந்தா கோவம் வந்திருக்குமோ என்னமோ! வாயில வட சுடுததுக்குலாம் கோவப்பட முடியுமா?" என்று அவனை வார,

அது சரியாய் புரியாமல் போனது ப்ரணித்திற்கு.

"அன்னைக்கு ஆனா அவ்வளவு பேசினயே?" என்றான் இன்னும் அவள் பேசும் விதத்தில்.

"நீங்க பேசுனீங்க நானும் பதிலுக்கு பேசுனேன்.. ஏன் பேச கூடாதோ? என் ஆத்தா அப்படி தான் என் அப்பாட்ட பேச பயந்து பயந்து இன்னும் பயந்துகிட்டு தான் கிடக்கு.. உண்மைய உள்ளத சொல்லுததுக்கு என்னத்துக்கு பயரனும்?" என்று கூற, தலை சுற்றியது கல்யாணியின் குணம் பிரணித்திற்கு.

"இந்த மாதி கோவத்துல நாள் கணக்கா சுத்துத பழக்கத்த எல்லாம் இன்னையோட வுட்ருங்க.. நீங்க பேசுனா நானும் பேச தான் செய்வேன்.. நான் பேசுனா நீங்களும் பதிலுக்கு பேசுங்க.. ஆனா அத அப்படியே மறந்துரனும்.. காலத்துக்கும் கொண்டுட்டு வர கூடாது.. குடும்பத்துக்கு அதுலாம் சரி வராது.. அப்படி வந்தா உங்க அம்மா அப்பா என் அம்மா அப்பா எல்லாம் இவ்வளவு நாளைக்கு சேந்து குடும்பத்த கொண்டு வந்திருக்க முடியாது" என்று முடித்தாள்.

"மருவடியும் சொல்லுதேன் நல்லா கேட்டுக்கங்க.. உங்கள பிடிக்கலனு கல்யாணத்த நிறுத்த பாக்கல.. எனக்கு காரணமுன்னு ஆயிரம் கிடந்துதுன்னு அப்பமே சொல்லிட்டேன்.. இன்னும் அதையே தொங்கிட்டு இருக்காதீங்க" என்றாள்.

"போதும்! எனக்கு நல்லாவே புரிஞ்சது.. இப்ப என்ன செய்யணும்? அதை மட்டும் சொல்லு!" என்றான் அவளின் பேச்சு புரிந்து அதற்கு மதிப்பும் கொடுத்து.

"நீங்க நாளைக்கு விழாக்கு கூப்பிட போறியலாமே.. என்னையும் உங்களோட ராணி ம்மா போவ சொன்னாங்க.. எங்க மாமா வீட்டுக்கும் போயிட்டு வார சொன்னாங்க" என்றாள்.

"ம்ம் போலாம்!" என அவன் புன்னகைக்க, கள்ளமில்லா புன்னகை அவளிடமும்.

"ஹே! என்ன சொன்ன?உன்னை ஆஃபிஸ்க்கு கூட்டிட்டு போகவா?" அவள் பேச்சில் கட்டுண்டு இருந்தவன் சரி என்று சொல்லி இருக்க, சில நொடிகளில் அவள் கூறியதன் அர்த்தம் புரிந்து கண்களை விரித்து ப்ரணித் கேட்க,

அவனை முறைத்தவள், "உங்க விருப்பம் தேன்! வரணுமுன்னா வாரேன்! இல்லையின்னா நீங்களே போயிட்டு வாங்க" என்றாள் உடனே..

"இல்ல! நீ வரலாம்.. ஓகே தான்.. ஆனா.." என்றவன் சிந்தனை முழுதும் அவள் பேச்சு வழக்கில் தான் இன்னமும் இருந்தது.

"என்ன அன்னா ஆவன்னா! போவணுமுன்னா கிளம்பனும்.. அதுக்கு தான் கேக்குதேம்" என்று கூற,

"சரி கிளம்பு! போகலாம்" என்றான் யோசனையோடே!.

தொடரும்..
 

Apsareezbeena loganathan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
466
கல்யாணி _ அழகு ராணி.....
கருத்துக்களை அழகாக
கச்சிதமாக தெளிவாக
கணவனுக்கு திருமண பந்தத்தின்
கலையை விளக்கி கூறுவது அருமை.... 💐🤩💐💐💐
 

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
கல்யாணி _ அழகு ராணி.....
கருத்துக்களை அழகாக
கச்சிதமாக தெளிவாக
கணவனுக்கு திருமண பந்தத்தின்
கலையை விளக்கி கூறுவது அருமை.... 💐🤩💐💐💐
Thank u sis
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,971
செம செம சகி 😍😍😍😍😍😍😍😍கல்யாணி ஸ்லாங் ஒரு ஈர்ப்புன்னா அவளோட எதார்த்தமான வாழ்வியல் ரெம்ப ஈர்ப்பு 😘😘😘😘😘😘😘😘
 

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
செம செம சகி 😍😍😍😍😍😍😍😍கல்யாணி ஸ்லாங் ஒரு ஈர்ப்புன்னா அவளோட எதார்த்தமான வாழ்வியல் ரெம்ப ஈர்ப்பு 😘😘😘😘😘😘😘😘
Thank u sis
 
Top