• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வேல்விழியாள் - 13

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
அத்தியாயம் - 13

உலகத்தையே வென்ற மகிழ்வுடன் இருவரும் ஹாஸ்டலின் தோட்டக் கதவைத் திறந்து உள்ளே நுழைய…
அங்கு வார்டனோ, கைகளை கட்டிக்கொண்டு இருவரையும் கோபத்துடன் உறுத்து விழித்தார்.

ஒரு நொடி அதிர்ந்த விகாஷினி, 'எவ்வளவோ சமாளிச்சிருக்கோம், இது ஒரு பெரிய விஷயமா என்ன? பார்த்துக்கலாம்.' என மனதிற்குள் நினைத்தவள், வெளியேவோ, ஒன்றும் தெரியாத அப்பாவியாக, பயந்து விழித்துக் கொண்டு அமைதியான பதுமைப் போல நின்றிருந்தாள்.

அதுக்கெல்லாம் அசராத வார்டன், "எங்க போயிட்டு வர்றீங்க?" என இருவரையும் பார்த்து வினவ…

" கதவு திறந்து இருந்தது… ஜஸ்ட் வெளியே போனோம் மேம்." என்று விகாஷினியும், " சாரி மேம்… தெரியாமல் படத்துக்கு போயிட்டோம்…" என்று பாவனாவும் ஒரே நேரத்தில் கூற…

விகாஷினியை முறைத்த வார்டன், அவள் ஏதோ சொல்ல வர… சைகையால் அவளை அமைதியாக இருக்கும் படி பணித்து விட்டு, பாவனாவிடம் திரும்பி," சொல்லு…" என…

" சாரி மேம்… தோட்டத்து கதவு திறந்து இருந்தது. ஜஸ்ட் வெளியே போனோம். அப்படியே பக்கத்தில் தியேட்டர் இருக்கவும் போயிட்டோம்… மன்னிச்சிடுங்க மேம்." என மெல்லிய குரலில் கூறினாள் பாவனா.

" லுக் பாவனா அண்ட் விகாஷினி… நீங்க ரெண்டு பேரும் என் கிட்ட பர்மிஷன் வாங்காமல் வெளியே போனது பெரும் தவறு… உங்களோட செக்யூரிட்டிக்கு நாங்க தானே பொறுப்பு… இப்படி ஒரு இர்ரெஸ்பான்ஸிபல் ஸ்டூடென்டா இருக்கீங்க… உங்களைப் பார்த்து இங்க உள்ள ஸ்டூடன்ஸும் கெட்டு போயிடப் போறாங்க… இந்த ஹாஸ்டல்ல டிசிப்ளின் மஸ்ட்…" என்று கூற…

பவியும், விக்கியும்,"மேம்…" என ஏதோ கூற வர…

அவர்கள் இருவரையும் முறைத்த வார்டன், " நோ மோர் டாக்… எதுவாக இருந்தாலும் நாளைக்கு ப்ரின்ஸிபல் மேம் கிட்ட பேசிக்கோங்க‌… நவ் யூ கேன் கோ யுவர் ப்ளேஸ்… " என கடுமையாக கூற...

" சாரி மேம் ஃபர்ஸ்ட் டைம்… எக்ஸ்க்யூஸ் கொடுங்க மேம்… பிரின்ஸிபல் மேம் கிட்ட எல்லாம் சொல்ல வேண்டாம் மேம். ப்ளீஸ்மேம்." என இருவரும் கெஞ்ச…

" வாட்?... பிரின்ஸிபல் மேம் கிட்ட சொல்லக் கூடாதா? எனக்கு இன்ஃபர்மேஷன் கொடுத்ததே அவங்க தான்… எதுவாக இருந்தாலும் அவங்க கிட்டயே பேசிக்கோங்க… காலைல நேரமா ஆபிஸ் ரூம்ல வந்து பார்க்க சொன்னாங்க… " என்று இருவரிடம் கூறிய வார்டன், அவர்களை போகுமாறு சைகை செய்து விட்டு, அங்கு நின்றிருந்த தோட்டத்துக்காரரிடம் திரும்பி, " இங்க பாருங்க ராஜூ... நீங்க இங்க ரொம்ப வருஷமா இருக்கீங்க… இது வரைக்கும் உங்க மேல ஒரு சின்ன பிளாக்மார்க் கூட கிடையாது. இங்கே இருக்கிற பெண்களுக்கும் பாதுகாப்பாய் இருக்கிறீங்க… அதனால தான் இவ்வளவு பொறுமையா உங்கக் கிட்ட பேசிட்டு இருக்கேன்.இது தான் உங்களுக்கு ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் வார்னிங். இந்த மாதிரி இன்னொரு முறை கேட் கதவை திறந்து வச்சுட்டு, நீங்க எங்காவது போனீங்கன்னா, வேறு வேலை தேடுற மாதிரி இருக்கும். இத்தனை வயசுக்கு பிறகு உங்களுக்கு வேற வேலை கிடைப்பதும் சிரமம். புரிந்து கவனமாய் இருங்க…" என்று விட்டு வார்டன் உள்ளே சென்று விட…

இவ்வளவு நேரம் உள்ளே போற மாதிரி போக்கு காட்டி விட்டு, அங்கே மறைந்து இருந்த விக்கி, அவரிடம் வந்து," சாரி தாத்தா…" என்று மன்னிப்பு கேட்க…

" பரவால்ல பாப்பா… என் மேலேயும் தப்பு இருக்கு . இனிமே தனியாக வெளியே போகாதம்மா… வார்டன் சொல்றதும் உங்க நல்லதுக்குத் தான்… சரி பாப்பா… உள்ளே போ…" என்றுக் கூறி விட்டு தனது வேலையை பார்க்க சென்று விட்டார்.

*****************

தனது அறைக்குள் நுழைந்த விக்கி அங்கு விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்த பாவனாவை தான் பார்த்தாள்‌.

அவள் தலையிலே ஒரு அடி அடிக்க… விருட்டென்று எழுந்த பவியோ, " அடியே விக்கி… எதுக்குடி இப்படி தலையிலே அடிக்கிற‌… நான் தான் உன்னை அடிக்கணும். நான் தான் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னேனே... கேட்டியா? இப்ப பாரு ப்ரின்ஸிபல் வரைக்கும் போயிடுச்சு. நாளைக்கு காலேஜ் முழுக்க வேற தெரிஞ்சுடும்‌.என்ன பண்றதுன்னு நானே கவலையில் இருக்கேன். நீ என்னன்னா கூலா இருக்கிற…" என கேட்டவள், மனதிற்குள்ளோ, ' ஐயோ! நைஸா பேசி நம்மளையே ஏமாத்திட்டாரே... சும்மா நீங்க வெளியே போனால், எப்ப வருவீங்க… என்ன செய்யறீங்க என்று எனக்குத் தெரியணும்.அதனால எப்ப வெளியில் போனாலும் எனக்கு இன்ஃபார்ம் பண்ணு அப்படின்னு சொல்லிட்டு‍‍, இப்படி ப்ரின்ஸிபல் கிட்ட போட்டு கொடுத்துட்டாரே. இது மட்டும் விக்கிக்கு தெரிந்தால் அவ்வளவு தான்… என்னை உண்டு இல்லன்னு பண்ணிடுவா... ஓ மை கடவுளே! என்னை காப்பாத்து…' என தனக்குத் தானே பேசிக் கொண்டே, ஆகாயத்தில் ஓவியம் வரைந்து கொண்டிருந்தாள்.

"ஏய் லூசு… இப்போ என்னாச்சுணு இப்படி உனக்கு நீயே பேசிட்டு இருக்குற… நாளைக்கு எது நடந்தாலும் பார்த்துக்கலாம். நீ கவலைப்படாதே…" என விக்கி ஆறுதல் அளிக்க‌…

அவளைப் பார்த்து முறைத்த பவி," நான் லூசா… சொல்ல மாட்டியா பின்னே… வம்படியா சினிமாவுக்கு அழைச்சிட்டு போயிட்டு, ஈஸியா வார்டன் கிட்ட பொய் வேற சொல்லுற‌.. நான் தான் லூசு மாதிரி உளறிக் கொட்டிட்டேன். அம்மா தாயே… நீ எது பிளான் பண்ணாலும் முன்னாடியே சொல்லுடி… திடீர்னு கேட்கவும் நான் உண்மையை சொல்லிட்டேன்…" என பரிதாபமாகக் கூற…

"ஹா...ஹா..." என சிரித்தபடியே விக்கி அவளைப் பார்த்து, " பார்த்தியா பவி... நீயே உன்னைய, லூசுணு ஒத்துக்கிட்ட..." என்றவள் பவியின் அனல் பார்வையில் சிரிப்பை அடக்கிக் கொண்டு, " சாரி செல்லம் கோச்சிக்காத‌… சரி நாளைக்கு பிரின்ஸிக் கிட்ட நீ எதுவும் பேச வேண்டாம்.மௌனமாய் இருந்தாலே போதும்… என் கிட்ட ஒரு ஐடியா இருக்கு… அதை ப்ரொஸிட் பண்ணால் நம்ம பிரின்ஸியே கூல் ஆய்டுவாங்க…" என விக்கி கூற…

" என்ன ஐடியா விக்கி… என் கிட்டயும் சொல்லு… நானும் பிரின்ஸிக் கிட்ட சொல்றேனே…" என ஆர்வமாக பவி வினவ…

"அதெல்லாம் ஒரு ஆணியும் நீ புடுங்க வேணாம்… நான் பார்த்துகிறேன். நீ சும்மா இருந்தாலே போதும். இப்போ டென்ஷனாகாமல் போய் தூங்கு.‌." என தனது தோழியை கிண்டல் செய்த விக்கி, நாளைக்கு எப்படி சமாளிக்க வேண்டும் என மனதிற்குள் திட்டமிட்டவளுக்கு தெரியவில்லை, நாளைக்கு அவள், தன் வாழ்நாளில், முதன் முதலாக அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்க போவதை அவள் அறியவில்லை.

***********************

காலையில் சாவகாசமாக தூங்கி கொண்டிருந்தவளை, அடித்து எழுப்பிய பவி," சீக்கிரம் விக்கி... பிரின்ஸி நேரத்தோடு வரச் சொன்னாங்கள்ல… வேக் அப்…" என்று அவளை அவசரப்படுத்தி, ஒரு வழியாக இழுத்துக்கொண்டு கல்லூரிக்குச் சென்றாள்.

" சாப்பிட்டு போகலாம்…" என்று கூறிய விக்கியை முறைத்து, " கேண்டின்ல வாங்கித் தரேன் வா டி." என பல்லைக் கடித்து கூறியவள், அடுத்து நின்றது பிரின்ஸிபல் அறைக்கு முன்பு தான்…

கல்லூரி வளாகமே அமைதியாக இருந்தது. இன்னும் கல்லூரி ஆரம்பிப்பதற்கு நேரம் இருந்ததால் அங்கொன்று இங்கொன்றுமாக மட்டுமே மாணவ, மாணவிகள் இருந்தனர்.

அப்போது தான் உள்ளே நுழைந்த ப்ரின்ஸிபல், இருவரையும் உள்ளே வருமாறு சைகை செய்து விட்டு, தனது நாற்காலியில் அமர்ந்து இருவரையும் பார்வையால் அளவிட்டுக் கொண்டே, "பாவனா அண்ட் விகாஷினி ரைட். ஃப்ரம் தமிழ்நாடு." என…

இருவரும், " யெஸ் மேம்." என மெதுவான குரலில் கூற…

"ஓ…" என்றவர் மீண்டும் அவர்களைப் பார்த்து," உங்களுக்கே நீங்க செஞ்சது சரின்னு தோணுதா? நீங்க இரண்டு பேரும் வருங்காலத்தில் ஒரு பொறுப்பான பத்திரிக்கையாளர்களா வர வேண்டியவர்கள். இப்படி பொறுப்பே இல்லாமல் இருக்கலாமா? நாளைய சமுதாயத்தையே மாத்துற சக்தி உங்க கையில இருக்கு, அப்படி இருக்கும் போது, இப்படி நீங்களே ரூல்ஸ்ஸெல்லாம் ப்ரேக் பண்ணலாமா? சொல்லுங்க… ம் இப்படி எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தா என்ன அர்த்தம் விகாஷினி? பாவனா? சொல்லுங்க… " என இருவரிடமும் வினவ…

பவியோ, விக்கி சொன்ன மாதிரி ஒன்றும் கூறாமல் அமைதியாக இருக்க… விகாஷினி அவர்கள் இருவருக்காக பேச ஆரம்பித்திருந்தாள். " மேம்… நாங்க ரெண்டு பேரும் எந்த தப்பும் செய்யலை. நீங்க சொன்னதை செய்வதற்காகத் தான் வெளியே போனோம். நீங்க லாஸ்ட் டே க்ளாஸ்ல என்ன சொன்னீங்க. இன்னைக்கு வரும் போது, நாங்க பார்க்குற விஷயத்தை பத்தி சின்னதா ஒரு டாக்குமென்டரி எழுதிட்டு வரச் சொன்னீங்க… அப்புறம் கிளாஸ்ல நீங்க என்ன சொன்னீங்களோ, அதை தான் மேம் நாங்க ஃபாலோ பண்ணோம். " என…

"வாட் நான்ஸ்ஸென்ஸ்… நான் தான் இப்படி ஹாஸ்டல்ல இருந்து சொல்லாமல் கொள்ளாமல் திருட்டுத்தனமா வெளியே போக சொன்னேனா?" என ப்ரின்ஸிபல் பதட்டப்பட…

" ஐயோ! அந்த அர்த்தத்துல நான் சொல்லலை மேம். எப்படி ஒரு பத்திரிக்கையாளர்களா நாங்க நடந்துக்கணும்… இருக்கிற சிச்சுவேஷனுக்கு தகுந்த மாதிரி பிகேவ் பண்ணும், அப்புறம் நம்ம சுத்தி நடக்குற எல்லாத்தையும் நல்லா கவனிக்கணும், ஒரு சின்ன விஷயத்தையும், நாம வேற கோணத்துல அணுகணும், என்றெல்லாம் சொன்னீங்கல்ல மேம். அதை தான் நாங்க ஃபாலோ பண்ணோம்." என்றுக் கூறியவாறே ப்ரின்ஸிபலைப் பார்க்க…

அவரோ, ' நான் சொன்னதுக்கும், இவர்கள் வெளியே போனதற்கும் என்ன சம்பந்தம்' என மனதிற்குள் குழம்பிக் கொண்டிருந்தார்.

அதைப் பார்த்த விக்கி,' யெஸ் யாஹூ… எனக்கு இது தான் வேண்டும். இந்த குழப்பத்தை தான் நான் எதிர்பார்த்தேன். இனி நான் என்ன சொன்னாலும் நம்பிடுவாங்க…' என மனதிற்குள் குதூகலாலித்தவள், வெளியே அமைதியாக அவரைப் பார்த்து மீண்டும் தொடங்கினாள்.

" மேம்… நாங்க அவ்வளவு தூரத்தில் இருந்து கஷ்டப்பட்டு வந்து, இங்கே படிக்கிறதுக்கு காரணமே நல்ல ஜர்னலிஸ்டா ஆகணும் என்று தான்… அப்படி இருக்கும் போது, நீங்க ஃபர்ஸ்ட் குடுத்த வொர்க்கை எப்படி கம்ப்ளீட் பண்ணாமல் இருப்போம்?

நீங்க சொன்ன மாதிரியே சுத்தி நடக்கிறதை வாட்ச் பண்ணதுல, நாங்க ஹாஸ்டல்ல இருந்து வெளியே காலை வச்சதும், எங்களை இரண்டு பேர் ஃபாலோ பண்றதை கவனிச்சோம். எங்க வீட்ல இருந்து பாதுகாப்பிற்காக ஆள் அனுப்பி இருக்காங்க என்பதை புரிந்துக் கொண்டோம்… எனக்கு அது கொஞ்சமும் பிடிக்கவில்லை. என்னவோ எங்க சுதந்திரத்தில் தலையிடுவது மாதிரியே தோணுச்சு…

"பசிக்கிறவனுக்கு மீனைக் கொடுப்பதை விட மீன் பிடிக்கக் கற்றுக்கொடு” என்பது ஒரு சீனப் பழமொழி மேம்… கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அது மாதிரி தான் நடந்துக்கணும்‌. பாதுகாப்பு பத்தி பயமா இருந்தா, எல்லா தற்காப்பு கலைகளையும் கற்றுக் கொடுத்து, அந்த சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது என்பது அவர்களுக்கு அறிவுறுத்தணும் அதை விட்டுவிட்டு, அவர்கள் எப்போதும் எங்களை புரோடக்ட் பண்ணிக் கொண்டே இருக்கக் கூடாது‌… அந்த கான்செப்ட்டை தான் நான் எடுத்துருக்கிறேன்.

எங்க வீட்ல போட்ட பாதுகாப்பை உடைத்து வெளியே வந்து இயற்கையை ரசித்தேன். சுற்றி நடந்தவற்றை கவனித்து, பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருப்பது என்ற கான்செப்டை வைத்து எங்களோட ப்ராஜெக்டை ரெடி பண்ணியிருக்கோம். பாருங்க மேம்." என்ற விக்கி தனது ஷோல்டர் பேகிலிருந்து ஒரு ஃபைலை நீட்டினாள்.


அதைப் புரட்டிப் பார்த்த ப்ரின்ஸிபல், "சூப்பர்… பட் … இப்படி பர்மிஷன் இல்லாமல் வெளியே போற அதிகபிரசங்கித்தனத்தை இனி மேல் செய்யாதீங்க… வேற மாநிலத்தில் இருந்து இங்கே வந்து இருக்கிறீங்க... உங்களோட பாதுகாப்பிற்கு நாங்கள் தான் பொறுப்பு‌… அது மட்டுமில்லாமல் ஹாஸ்டல்லோட பேர் கெடுவது எங்களுக்கு உடன்பாடு இல்லை. இன்னொரு முறை இந்த மாதிரி ஏதாவது செய்தால் கல்லூரியிலிருந்து டீசி வாங்கி கொண்டு செல்ல வேண்டியது தான்... இப்பொழுது உங்களை பார்ப்பதற்காக ஒரு விசிட்டர் ரொம்ப நேரமாக காத்திருக்கிறார். அவரைப் போய் பாருங்கள்…" என்றவர் வாயிற்புறம் கையை நீட்ட‌‌...‌

' யாருடா… அந்த அப்பாடக்கர்…' என நினைத்த விக்கி சாவகாசமாக திரும்ப…
அங்கோ முகத்தில் எந்த உணர்வுகளையும் காட்டாமல் கைகளைக் கட்டிக் கொண்டு விதுன்குமார் நின்றிருந்தான். இவ்வளவு நேரம் இவள் பேசிய அனைத்தையும் ஆதி முதல் அந்தம் வரை கேட்டு விட்டான் என்பதை அவனது முகமே உணர்த்தியது.

பயமே அறியாத விக்கி முதன் முறையாக பயந்தது மட்டும் அல்லாமல், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து, தனது அருகில் நின்றிருந்த பவியின் கையை அழுத்தமாக பிடித்துக் கொண்டாள். பவியும், அவளுக்கு குறையாமல் பயத்தில் திகைத்து நின்றிருந்தாள்.



 
Top