• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வேல்விழியாள் - 14

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
அத்தியாயம் - 14

இவ்வளவு நேரம் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்த ப்ரின்ஸிபல், விதுன்குமாரிடம் திரும்பி மராத்தியில் பேசினார். ப்ரின்ஸிபல், விதுன்குமார் பன்மொழி வித்தகர் என்பதை நன்கு அறிந்திருந்தார்.

" உள்ள வாங்க விதுன் சார்… உட்கார்ந்து பேசுங்க… நான் ரவுண்ட்ஸ் போயிட்டு வருகிறேன்." என்று கூறி விட்டு ப்ரின்ஸிபல் வெளியே சென்று விட‌…

தனது நிதானமான நடையுடன் மெல்ல அடியெடுத்து வைத்து தனது தங்கையின் அருகில் சென்றான் விதுன்குமார்.

ஒன்றும் பேசாமல் தனது தங்கையை அளவிட்டவாறே, இன்னும் அமைதியாக இருக்க… அதை சகிக்க முடியாமல் அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த விக்கி, "அண்ணா… சாரிணா…" என…

" எதுக்கு மதிக்குட்டி சாரி கேட்குற? தெரியாமல் செஞ்சா தான் சாரி கேக்கணும்... தெரிந்தே செய்யும் போது, சாரி சொல்ல தேவையில்லை டா… அது அவசியமும் இல்லை. இவ்வளவு யோசிக்கிற நீ, எனக்கு பாதுகாப்புக்கு கார்ட்ஸ் வேண்டாம் என்று என்னிடம் தெளிவாகவே சொல்லியிருக்கலாம். அட்லீஸ்ட் உன்ன ஃபாலோ பண்றதை நீ தெரிஞ்சிக்கிட்ட பிறகாவது, என் கிட்டேயே வந்து டைரக்டரா கேட்டிருக்கலாம். ஏன் அண்ணா இப்படி பண்றீங்க என்று கேட்டிருக்கலாம். அந்த அளவுக்கு உனக்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறோம் என்று தான் நானும், அப்பாவும் நினைச்சிட்டு இருக்கிறோம்."

ஏதோ சொல்ல வந்த விக்கியை சைகையால் தடுத்து " இரு டா… நான் சொல்ல வந்தததை சொல்லிடுறேன். அப்புறமா நீ பேசு... அப்புறம் உன்னோட தைரியத்தை நம்பாம ஒன்னும் ஆள் வைக்கவில்லை. ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்தால் உடனடியா உனக்கு உதவிக்கு ஆள் வேண்டும் என்பதற்காக மட்டுமே அவர்களை நான் வைத்தேன். நாங்கள் இருப்பதோ, தமிழ்நாட்டில்… நீ இருப்பதோ மகாராஷ்டிரால… அங்கிருந்து உடனே கிளம்பி வருவதற்கு முதலில் ப்ளைட் கிடைக்க வேண்டும். எப்படியும் இரண்டு மூன்று மணி நேரமாவது ஆகிவிடும். உனக்கு ஒரு சின்ன துன்பம் கூட வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தான் நான் நினைத்தேன். உன் மேல் நம்பிக்கை இல்லாமல் அல்ல… உனக்கு செக்யூரிட்டி அலார்ட் பண்ணுனா, அப்பாவிற்கு ஒரு நிம்மதி. அப்பா எந்த அளவுக்கு பயப்படுவார்கள் என்று உனக்கு தெரியும் தானே... அதற்காகத்தான்… உனக்கு வேண்டாம் என்று தோன்றினால் அவர்களை நான் ரீலிவ் பண்ணிடுறேன்." என்று மரமரத்த குரலில் கூற…

" அண்ணா" என்று கூறிய விக்கி, அவனது தோளில் சாய்ந்து செறுமி செறுமி அழத் தொடங்கி விட.


கலங்கிய கண்களை மெல்ல சிமிட்டு விட்டு, " எதுக்குடா குட்டி… இப்படி அழுகுறீங்க… என்னுடைய சிஸ்டர் ரொம்ப ப்ரேவ் ஆச்சே… இப்படி அழலாமா? " என அவளை சமாதானப்படுத்த…

" அண்ணா… நான் இனிமேல் உங்களை ஹர்ட் பண்ற மாதிரி எதுவும் செய்ய மாட்டேன். என் பின்னாடி ஒரு படையே வேண்டும் என்றாலும் அனுப்புங்க. எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை." என்று அழுகையுடனே கூற…

" ஓகே டா… அப்ப மூணு வருஷமும், எந்த பிரச்சனையும் பண்ணாமல் படிச்சுட்டு வரணும். எந்த வம்பு தும்புக்கும் போக கூடாது." என்று அழுத்திக் கூறிய விதுன், தனக்கு எதிரில் இருந்த பவியைப் பார்த்துக் கொண்டே, விக்கியிடம் மீண்டும் பேசினான். " அண்ணன் அந்தப் பக்கம் போனவுடன், மீண்டும் உனது சேட்டையை ஆரம்பிக்கலாம் என்று நினைக்காதே டா. நீ என்ன தப்பு செய்தாலும் எனக்கு உடனே தகவல் சொல்வதற்கு ஹாஸ்டல்ல, காலேஜ்ல எல்லாம் ரகசிய ஸ்பை இருக்கிறது. எனக்காக எது வேண்டுமென்றாலும் செய்வார்கள். நீ மனசுல நினைச்சா கூட எனக்கு தகவல் வந்துடும். சோ அடக்கி வாசி… " என்றுக் கூறியவன் பவியை குறும்பு புன்னகையுடன் பார்த்து கண்ணடித்தான்.

அவனது செயலில் அதிர்ச்சியாகிய பவி, கதவில் சாய்ந்து தன்னை சமாளித்துக் கொண்டாள்.

*****************

மதியிடம், பவி கூறியவற்றை சொல்லிக் கொண்டிருந்த சந்தீப்பிற்கு வேறு ஒரு ஃபோன் கால் வந்துவிடவே, " ஓகே மதி... இன்னொரு நாள் மீதி கதையை சொல்றேன்… இப்போ ஒரு இம்பார்ட்டண்ட் வொர்க்." என்று கிளம்பப் பார்க்க...

" வாட் சந்தீப்? இப்படி இன்ட்ரஸ்டா போயிட்டு இருக்கும் போது, இப்படி பாதியிலே கிளம்புறீயே… உனக்கே இது நல்லா இருக்கா? அப்புறம் விகாஷினி போல்டான பொண்ணா? அப்போ அவள் எதற்கும் பயப்படமாட்டாளா? " என தொடர்ந்து வினவ…

" விக்கிக்கு பயமா? பயம் என்றால் என்ன விலை என்று கேட்பா மதி? "

" அப்புறம் ஏன் படித்த படிப்பை வீணாக்கிக் கொண்டு வேலைக்கு போகாமல் இருக்கிறாள். அது மட்டும் இல்லாமல் நான் பெண் பார்க்கச் சென்ற போதும், என்னை பார்த்ததும், என்னுடைய ப்ரொபஷனலைப் பார்த்ததும் பயமாக இருக்கிறது என்று சொன்னாளே." என்று யோசனையுடன் சந்தீப்பிடம் வினவ…

"என்னிடம் கேட்டால் எனக்கு எப்படி தெரியும் மதி. நீங்கள் எதுவாக இருந்தாலும் விக்கியிடமே கேட்டுக் கொள்ளுங்கள். இப்போது நான் கிளம்பட்டுமா. விதுன் வீட்டு சிசிடிவி கேமரா ரிப்பேராக இருந்ததுல, அதை சர்வீஸ்க்கு குடுத்து இருந்த கடையில ஒரு சின்ன என்கொயரி இருக்கு… இன்னைக்கு தான் ஆள் சிக்கியிருக்கிறார் என்று கூறிவிட்டு சந்தீப் கிளம்பி விட்டான்.

சந்தீப்பிடம் இருந்து கூட சிசிடிவி கேமரா பற்றிய டீடைல்ஸ் கிடைத்து விட்டது. ஆனால் விக்கியிடம் இருந்து, அந்த கேள்விகளுக்கான பதில் இன்னும் கிடைக்கவில்லை. மதியும்,விக்கிரமாதித்தன் மாதிரி விக்கியிடம் படையெடுத்துக்ர கொண்டே தான் இருக்கிறான். ஆனால் இன்னமும் பதில் தான் கிடைக்கவில்லை. அதற்கு காரணம் சந்தீப் தான் என்பதை மதி அறியவில்லை.

*************

அங்கிருந்து கேஸ் விஷயமாக கிளம்பிய சந்தீப் முதல் வேலையாக விக்கிக்கு தான் ஃபோன் செய்தான்.

" ஹலோ விக்கி… நான் சந்தீப் பேசுறேன்." என…
அந்தப்பக்கம் இருந்து ஒரு ரெஸ்பான்ஸூம் வரவில்லை எனவும் மீண்டும், " ஹலோ… ஹலோ… லைன்ல இருக்கியா? இல்லையா?" என சந்தீப் படபடக்க…

" இருக்கேன்… சொல்லுங்க… சார் எதற்காக இப்போ ஃபோன் பண்ணியிருக்கீங்க…" என விகாஷினி வினவ…

" ஒரு சத்தமும் வரவில்லையா‌‌… அதான் நீ இல்லைன்னு நினைச்சுட்டேன். ஆமாம் மேடம் ரொம்ப கோவமா இருக்கீங்கப் போல… சார் என்று கூப்பிடுறீங்களே…" என…

" ஆமாங்க சார். நான் ரொம்ப கோபத்துல இருக்கேன்… நான் சென்னைக்கு வந்து எவ்வளவு நாள் ஆகுது... கண்டுக்கறதே இல்லை. சார் செம பிசி. அதுவுமில்லாமல் ஏசிபி என்று ப்ரூஃப் வேற பண்ணுறார். அதான் அதற்குரிய மரியாதைக் கொடுக்கிறேன்." என விக்கி கூற…

" ஹேய் விக்கி… இந்த கேஸ்ஸை லேட் பண்ணாமல் கண்டு பிடிக்க வேண்டாமா? மதி என் கிட்ட தான் முக்கியமான பொறுப்பை எல்லாம் ஒப்படைச்சிருக்கிறார். அது விஷயமா அலைய வேண்டிருக்கிறது. இப்போ கூட ஒரு முக்கியமான இன்வேஸ்டிகேஷன் இருக்கு. அதுக்கு முன்னாடி உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். அதுக்காகத் தான் ஃபோன் பண்ணேன். லூசு… அதை சொல்ல விடாமல் ஏதேதோ பேசிட்டு இருக்க…" என கடிந்துக் கொள்ள…

" ஆமாம் நாங்க லூசு… நீங்க புத்திசாலி தான்… என்னை டென்ஷனாக்காமல் சொல்ல வந்தததை சீக்கிரம் சொல்லு சந்து…"

"ம்… நீயும், பவியும் பூனேல பண்ண சேட்டையெல்லாம் கேஸ் இன்வெஸ்டிகேஷனுக்காக பவியிடம் விசாரிச்சேன். அப்புறம் மதியிடம் ரிப்போர்ட் பண்ணிட்டேன். " என்றவன் அப்புறம் மதியிடம் பேசிய அனைத்தையும் கூறியவன், இறுதியாக மதி விக்கியைப் பற்றி கேட்ட கேள்வியையும் கூறினான்.

அதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த விக்கியோ, ஒரு கையை தலையில் வைத்துக் கொண்டாள்.

" நீ எதுக்காக பெண் பார்க்க வந்தப்ப அப்படி நடந்துக்கிட்ட என்ற விஷயத்தை என் கிட்ட சொல்ல வேண்டாம்.அது எனக்கு தேவையும் இல்லை‌. நான் உங்களுக்கு யாரோ தானே. அதான் என் கிட்ட எதையும் ஷேர் பண்ணலை. சரி அதை விடு… ஆனால் மதி எப்படியும் உன்னிடம் விசாரிக்க வருவார். நீ உஷாரா இருந்துக்கோ… " என சந்தீப் கூற…

விக்கியோ, " சந்து‌…" என சமாதானம் படுத்த வர…

" விக்கி… எதையும் கேட்கற மூட்ல நான் இப்போ இல்லை. இப்ப எனக்கு அவசர வேலை இருக்கு… அப்புறமா பேசறேன். பை…" என்று அவளை பேச விடாமல் வைத்து விட…

ஊப் என்று பெருமூச்சு விட்டுக் கொண்ட விக்கி, மதியை எப்படி ஹேண்டில் பண்ணுவது என்று கண நேரத்தில் முடிவெடுத்துக் கொண்டாள்.

அதே போல மதி வந்து பேசும் போதும், அதையும், இதையும் கூறி போக்கு காண்பித்துக் கொண்டியிருந்தாள்.
அவளால் அவனது கேள்விக்கு தான் பதில் சொல்ல முடியவில்லை. ஆனால் வீட்டில் சும்மா இருக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்த மதி, அவளது தந்தையின் மூலம் அவளை வேலைக்கு அனுப்பி வைத்து விட்டான். தயங்கிய சங்கரை, " எதுக்கு அங்கிள் பயப்படுறீங்க?
ஹாசினியை வெளியே கூட வேலைக்குப் அனுப்பப் போறதில்லை. உங்க பையனோட ஸ்கூலுக்கு தான் போகப் போறா… விதுனும், ரூபக்கும் சேர்ந்து ரன் பண்ண ஸ்கூல்… இப்போ விதுனுக்கு பதிலாக விகாஷினிய அனுப்ப போறீங்க‌… முதலில் சின்ன குழந்தைகளுக்கு டீச் பண்ணட்டும்... அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கட்டும். பின்னாடி இந்த ஸ்கூல் மேனேஜ்மென்ட்ல கூட பொறுப்பு எடுத்துக் கொள்ளலாம் அங்கிள்." என்று வற்புறுத்தி அவளை அனுப்பி வைத்தான்.

வேண்டா வெறுப்பாக ஸ்கூலுக்கு செல்வதாக காட்டிக் கொண்டாலும், மனதிற்குள் அவ்வளவு சந்தோஷத்தோடு தான் இருந்தாள் விகாஷினி.

******************
' இதோ இன்றும் கூட, தன்னிடம் ஏன் பொய் சொன்னால் என்ற கேள்விக்கு விடையைத் தெரிந்து கொள்வதற்காக, இந்த காலைப் பொழுதிலே வந்து அவளுக்காக காத்து கொண்டிருந்தான் மதியமுதன்.' பழைய நினைவுகளில் ஆழ்ந்து இருந்தவனை, " ம்கூம்…" என்ற சத்தத்தில் வெளிக் கொணர்ந்திருந்தாள் விக்கி.

மதியோ, விக்கியை ஆழ்ந்து பார்த்தான்.பள்ளிக்கூடத்துக்கு போவதற்காக அழகிய நீல நிற காட்டன் புடவை கட்டிக்கொண்டு வந்தவளை பார்த்து, தான் பேச வந்தததை மறந்து நின்றிருந்தான்.

அவன் எதுவும் பேசப் போவதில்லை என்பதை உணர்ந்த விக்கி, " என்ன விஷயம் மதி? எனிதிங் இம்பார்ட்டண்ட்… இல்லை என்றால் எனக்கு ஸ்கூலுக்கு டைம் ஆச்சு. ஈவினிங் பேசலாமா?" என்று வினவியவாறே தனது கையில் இருந்த அழகிய ரோலக்ஸ் வாட்சில் மணியை பார்த்தவளின் கண்கள், ஒரு நிமிடம் அதை வாங்கித் தந்த அவளது அண்ணனை நினைத்து கலங்கியது. பிறகு சமாளித்துக் கொண்டு அவனைப் பார்த்தாள்‌.

நேரமில்லை என்று அவள் குறிப்பாக கூறியதை அலட்சியப்படுத்தி விட்டு, " லுக் ஹாசினி… நானும் ஒரு வாரமாக உன்னிடம் பேச வேண்டும் என்று முயற்சி செய்துக் கொண்டே இருக்கிறேன். நீயும் அவாய்ட் செய்துக் கொண்டே இருக்குற‌… அப்படி என் கிட்ட பேசுறதுக்கு உனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கா? நான் ஏதாவது பேசலாம் என்று இங்கே வந்தால், ஒன்று அங்கிளோட போய் நின்னுக்குற… இல்லை நைசா கீழ் வீட்டுக்கு போய், அந்த பாவ்பாஜியோட யெஸ்ஸாகுற… நாம இரண்டு பேரும், இனி மேல் எதிர்காலத்துல ஒன்னா பயணிக்க போறதால தான் நான் திரும்பத், திரும்ப வந்து நிக்குறேன்… நீ எதுவாக இருந்தாலும் ப்ராங்கா சொல்லிடு… உனக்கு ஏன் என்னை பிடிக்கவில்லை? எதற்காக நான் பொண்ணுப் பார்க்க வந்த போது பயந்த சுபாவம் மாதிரி நடிச்ச? இந்த இரண்டு கேள்விக்கும் பதில் சொல்லு…

நானும் எதை எதையோ யோசிக்கிறேன். எங்கேயோ இடிக்குதே… அப்படி உனக்கு பிடிக்கலைணா நேரடியாகவே மூஞ்சுல அடிச்ச மாதிரி பிடிக்கலை என்று சொல்லியிருக்கலாமே… நாம ஒன்னும் தினமும் சந்திச்சிட்டு இருக்கப் போறதில்லையே. அவங்கவங்க வேலையைப் பார்த்திட்டு போயிட்டே இருந்திருக்கலாம். ஆனால் அதெல்லாம் விட்டுட்டு என்னை முட்டாளாக்க முயற்சித்திருக்க வேண்டாம். அட்லீஸ்ட் இப்பாவது உண்மையான பதிலை சொல்லு." என்றவன் நன்றாக சோஃபாவில் சாய்ந்து கால் மேல் கால் போட்டுக் கொண்டு, உன்னை விட போவதில்லை என்பதைப் போல அவளைப் பார்த்தான்.
 
Top