• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வேல்விழியாள் - 15

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
அத்தியாயம் - 15

ஒரு நிமிடம் உதட்டைக் கடித்துக் கொண்டு அமைதியாக இருந்த விக்கி பிறகு அவனை நேராகப் பார்த்து, " மதி… உண்மையிலேயே ஸ்கூலுக்கு நேரமாகுது. இன்றைக்கு எனது வகுப்பு மாணவர்களுக்கு சிறியதாக தேர்வு வைக்கிறேன் என்று சொல்லி இருக்கிறேன். ஈவினிங் பேசலாமா? இல்லை நாளைக்கு லீவ் போடட்டுமா? " என வினவ…

" ஓஹோ… பெரிய ஐஏஎஸ் தேர்வு நடத்தப் போறீங்க… இன்னைக்கே அவசியம் போகணும் பாரு…" என கிண்டலடிக்க‌…

அவனை முறைத்துப் பார்த்த விக்கி, " நான் சொல்லித் தருவது ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்காக இருந்தாலும், எனக்கு அவர்கள் முக்கியம். நான் நடத்தியதை அவர்கள் எப்படி புரிஞ்சுக்கிட்டாங்க என்று தெரிந்துக் கொள்வதற்கு, இந்த தேர்வு எனக்கு ஐஏஎஸ் எக்ஸாம விட ரொம்ப இம்பார்ட்டெண்ட் தான். அப்புறம் நாம செய்யுற வேலையில் முழு ஈடுபாட்டுடன் செய்யணும். அதைத் தான் நான் செய்கிறேன்.அதை கிண்டல் செய்ய வேண்டாம்." என்றுக் கூற…

" ஹா… ஹா…" என்று சிரித்த மதி, விக்கியின் முறைப்பில், சிரிப்பை அடக்கிக் கொண்டு, " ஓவரா பண்ணாத ஹாசினி… நீ எப்படி நடத்தின என்பதை நாளைக்கு டெஸ்ட் வைத்து கண்டு பிடியேன். இப்போ ஏதாவது சாக்கு போக்கு செல்லாதே…" என மீண்டும், மீண்டும் வலியுறுத்த...

மதியின் கட்டளையை மறுக்க முடியாமல், விக்கி ஸ்கூலுக்கு போன் செய்தாள். அங்கு மேனேஜ்மென்ட்டில் கால் எடுக்கவே இல்லை. வேலைக்கு சேர்ந்த ஒரு வாரத்திலே லீவு எப்படி எடுப்பது என்று குழப்பத்திலே இருந்தவளுக்கு, அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை.

அவளது குழப்பத்தை பார்த்த மதி, " ஏன் போன் எடுக்கலையா ஹாசினி… அப்படினா ஒண்ணு பண்ணு… நீ உங்க கரஸ்பாண்டன்டுக்கே கால் பண்ணி லீவு கேளு…"

" வாட் ரூபக் சாருக்கா கால் பண்ண? ஆர் யூ கிட்டிங்…"

" யா… ரூபக்குகே கால் பண்ணி, சிபிஐயிலிருந்து என்கொயரிக்கு வந்து இருக்காங்க‌ என்று சொல்லு…"

மதி கூறியதைக் கேட்ட விக்கி, ஒரு நிமிடம் யோசித்து விட்டு, "அவசியம் அவரிடம் சொல்லணுமா மதி… அவரிடம் ஏதோ ஒன்று தவறாக இருக்கிறது…" என்று தயங்க…

விகாஷினி கூறியதைக் கேட்ட மதியமுதனின் கண்கள் பளிச்சென்று மின்னியது. " வெரிகுட்… குட் அனாலிசிஸ்… எனக்கு அவன் மேல சந்தேகமெல்லாம் இல்லை. விதுனோட சாவுக்கு ஏதோ ஒரு விதத்தில் அவன் தான் காரணமாக இருப்பான். அது கன்ஃபார்ம். பட் ஏன்? எதற்கு? என்ற கேள்விக்கு தான் பதில் என் கிட்ட இல்லை. அதுக்காகத் தான் உன்னை அங்கே வேலைக்குப் போக சொன்னேன்."

"அடப்பாவி" என்று மெதுவாக முணுமுணுத்தவள், " அவர் தான் குற்றவாளியாக இருக்கக் கூடும் என்று தெரிந்தே என்னை அங்கே அனுப்பினீங்களா? என் மேல அப்படி என்ன உங்களுக்கு கோபம்? " என வினவ…

" ஹலோ மேடம்… உன்னோட பாதுகாப்பு நான் கேரண்டி மா… நீ போல்டான பொண்ணுன்னு தெரிந்ததுக்கு அப்புறம் தான் நான் உன்னை, அங்கு வேலைக்கு அனுப்பினேன். இல்லை என்றால் உன் பயமே காட்டிக் கொடுத்து விடுமல்லவா‌… அதுவும் இல்லாமல் நீ ஒரு ஜர்னலிஸ்ட்‌. உன் மூளைக்கு எதாவது தவறு நடந்தாலும் கண்ல படும் அதற்காகத் தான் அனுப்பினேன். நீ மொதல்ல ரூபக்கு கால் பண்ணி நான் சொன்னதை சொல்லு."

" இருந்தாலும் எனக்கு இது சரியாப்படலை மதி. இதுல அவர் அலர்ட் ஆகிட்டா, நாம எப்படி மூவ் பண்ணுவது?"

" அல்ரெடி அவன் அலர்ட்டாகி விட்டான் என்று தான் தோன்றுகிறது. விதுனோட பி.ஏவை நம்ம கஸ்டடிக்கு கொண்டு வந்தாச்சு. அதனால சிபிஐ முழு மூச்சாக இறங்கி விட்ட விஷயம் அவன் காதுக்கு போயிருக்கும். எவ்வளவு பிரிப்பேரா தயாரானாலும், குற்றவாளி ஏதாவது ஒரு இடத்தில் மாட்டிப்பாங்க. சோ நீ கவலைப்படாதே… " என்றவன், அவள் ஃபோன் செய்து வரும் வரை காத்திருந்தான்.

மதி சொன்னபடி ரூபக்கிற்கு தகவல் சொல்லி விட்டு வந்த விகாஷினி " ரிதன்யாவுக்கும், அண்ணா கொலைக்கும் சம்பந்தம் இருக்கா? சொல்லுங்க மதி…" என கவலையுடன் வினவ…

" ஆமாம்." என ஒரே வார்த்தையில் மதி முடித்துக் கொண்டான்.

" ச்சே… அந்த ரிதன்யா மேல அண்ணா எவ்வளவு பெரிய நம்பிக்கை வைச்சிருந்தாரு… இப்படி ஒரு துரோகம் செய்ய அவளுக்கு எப்படி தான் மனசு வந்துச்சோ‌… அப்படி எங்க அண்ணன் என்ன தான் அவளுக்கு செய்தாரோ? தெரியவில்லையே? எல்லோருக்கும் நல்லது தான் செய்தான். அவனுக்கு போய் இந்த முடிவு." என்றுக் கூறியவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிய…

அதை மௌனமாக பார்த்துக் கொண்டிருந்த மதியமுதன், மெல்ல எழுந்து வந்து அவள் அமர்ந்து இருந்த சோஃபாவில் அமர்ந்து, முதல்முறையாக அவளை மென்மையாக அணைத்து‍, அவளது கண்களை துடைத்து விட்டான்.

தோளில் அவன் கைகள் பட்டவுடன், உடல் சிலிர்க்க நெளிந்தாள். அவளது செயலில் நன்றாக சிரித்த மதி, " சாரி… ஹாசினி‌… நீ அழவும் கஷ்டமாக இருந்தது. அதான் சமாதானம் செய்ய பக்கத்தில் வந்தேன். லீவ் இட்." என்றவன் இரு கைகளையும் உயர்த்தி விட்டு, பழையபடியே அவளுக்கு எதிரே இருந்த சோஃபாவில் அமர்ந்தான்.

" இப்போ ஓகே வா ஹாசினி… " என மதி மீண்டும் வினவ…

"ம்" என்றவள், மீண்டும் ரிதன்யாவை பற்றிய பேச்சையே ஆரம்பித்திருந்தாள். " ஏன் இவ்வளவு நாள் விசாரிக்காமல், இப்போ திடீரென்று கஸ்டடியில் எடுத்து இருக்கீங்க…" என வினவ…

"ஏற்கனவே அவங்க மேல சந்தேகம் இருந்தாலும் ப்ரூஃப் இல்லாததால், நேரடியாக விசாரிக்கவில்லை. பட் மிஸ்‌. ரிதன்யாவை எங்களுடைய கண்காணிப்பிலேயே தான் வைத்திருந்தோம்.

இப்பதான் எங்களுக்கு ஒரு ஸ்ட்ராங் எவிடன்ஸ் கிடைச்சது. சந்தீப் சிசிடிவி கேமரா ரிப்பேர் பண்ண கொடுத்த கடையில விசாரிக்க, முயற்சி செய்தப் போதெல்லாம் அந்த கடையோட ஓனர பிடிக்க முடியலை. அங்கிருந்த ஸ்டாஃப்ஸ் கிட்ட விசாரிச்ச வரைக்கும், சிசிடிவி கேமரா ரிப்பேராகி அங்கு வந்து இருப்பது உண்மை தான், என்பது வரைக்கும் தகவல் கிடைத்தது.

சந்தீப்பும் விதுன் தற்கொலை தான் செய்துக் கொண்டான், என்று உறுதியாக நம்பியதால், அதற்குப் பிறகு பெரியதாக இன்வெஸ்டிகேஷன் பண்ணவில்லை. அப்படியே விட்டு விட்டான்.

இப்போது சந்தேகம் வந்ததும், மீண்டும் அங்கு விசாரிக்கலாம், என்று முயற்சித்தால், அந்த ஓனரை பிடிக்கவே முடியவில்லை.

எப்பொழுது போனாலும் பிசினஸ் விஷயமாக வெளியூருக்கு போய் இருப்பதாக தகவல் மட்டுமே கிடைத்தது. விசாரணைக்கு வராமல் போக்கு காட்டிக் கொண்டே இருந்ததால், அதை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, இரண்டு நாளில் விசாரணைக்கு வரவில்லை எனில் கடையை சீல் வைத்து விடுவோம், என்று நாங்க எச்சரிக்கை விடுத்தோம்.

அடுத்த நாளே அந்தக்கடை ஓனர் வந்துவிட்டார்.

அவரை விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவலும் கிடைத்தது. அதில் முதல் விஷயம் சிசிடிவி கேமரா ரிப்பேர் ஆனது உண்மை தானாம். ஆனால் அது விதுன் ஏற்காடு வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே ரிப்பேர் ஆகிவிட்டது‌‌.

சரி தான் நாமளும் ஊருக்கு தானே போகிறோம்… அதுக்குள்ள சரி ஆயிடுச்சின்னா இதையே போட்டுக்கலாம், இல்லை என்றால் புதுசு வாங்கிக்கலாம் என்று நினைத்து விதுன் ஊருக்கு வந்திருக்கிறார். அதே போல இரண்டு நாட்களிலேயே தயாராகியும் விட்டது.

அந்த கடை ஓனர் ரிதன்யாவிற்கு கால் பண்ணி, கேமரா ரெடியாயிடுச்சு என்று சொல்லியிருக்கிறார். மிஸ் ரிதன்யா, அவளாகவோ, இல்லை யாரும் சொல்லியோ எனத் தெரியவில்லை, ஆனால் அந்த கேமராவை வாங்கிட்டு வந்து பிக்ஸ் பண்ணவில்லை‌.

ஒருவேளை ஏற்கனவே கொலை செய்ய பிளான் செய்து இருப்பார்கள்.அந்த கேமரா இருப்பது அவர்களுக்கு ஆபத்தாக முடியும் என்று அங்கேயே இருக்கட்டும் என்று முடிவெடுத்து இருந்திருப்பார்கள்.

அந்த ரிதான்யாவோ,சாரும் ஊரில் இல்லை. நானும் ஊருக்கு போயிருக்கிறேன்... நான் சென்னைக்கு வந்ததும் சொல்றேன். அப்போ வந்து பிக்ஸ் பண்ணுங்க என்று சொல்லியிருந்தாளாம்… அதுக்குப் பிறகு அவரும் அவங்களே ஃபோன் பண்ணுவாங்க என்று இருந்து விட்டார்.

விதுனின் மரணத்திற்கு அப்புறம், ஒரு ஃபோன் கால் வந்ததாம். யார் வந்து கேட்டாலும் சிசிடிவி கேமரா இன்னும் தயாராகவில்லை என்று தான் சொல்ல வேண்டும் என்று மிரட்டி இருக்கிறார்கள். அதில் வேறு எந்தத் தகவலும் பெரியதாக இல்லாததால், அந்த கேமராவிற்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அந்த ஓனரும் அவர்கள் மிரட்டியதற்கு பயந்துக் கொண்டே வெளியூரிலே இருந்திருக்கிறார்."

" ஓ… கேமராவும் தான் கொலை நடக்கும் போது, அண்ணன் வீட்டில் இல்லை. அதிலும் நமக்கு எந்த தகவலும் கிடைக்க வாய்ப்பில்லை‌. அப்புறம் என்ன எவிடன்ஸ் நமக்கு கிடைச்சிருக்கு மதி? " என விக்கி வினவ…

" யெஸ்… இதுல நமக்கு ஒரு முக்கியமான எவிடன்ஸ் கிடைச்சிருக்கு. எவ்ளோ பெரிய புத்திசாலியா இருந்தாலும், ஏதாவது ஒரு இடத்துல கோட்டை விட்டுடுவாங்க… அதே தான் இங்கேயும் நடந்திருக்கு…

ஃபர்ஸ்ட் சந்தீப் விசாரிச்சப்ப, ரிதன்யா சொன்னது என்ன? சார் ஊர்ல இருந்து வந்ததுல இருந்தே ரொம்ப டல்லா தான் இருந்தாங்க… அப்புறம் அவரா லவ் ஃபெய்லியர் என்று சொன்னாரு, நான் அதற்கு பிறகு எங்க அம்மாக்கு உடம்பு சரியில்லைன்னு ஊருக்கு போயிட்டேன் என்று சொல்லியிருந்தாங்க… ஆனால் இப்போ சிசிடிவி ரிப்பேர் செய்த கடையில,என்ன சொல்லிக்காங்க நானும் ஊருல இல்லை, சாரும் ஊருல இல்லை என்று பொய் சொல்லியிருக்காங்க. இங்கே இருந்துக் கிட்டே ஊருக்கு போயிருக்கிறேன். வந்து வாங்கிக்கிறேன் என்று ப்ளான் பண்ணி, சிசிடிவி கடைக்காரரிடம் சொல்லியிருக்கணும்…

அது தான் நமக்கான எவிடன்ஸ். அது மட்டும் இல்லாமல், அவர்கள் கடையோட பழக்கம் கஸ்டமரிடம் ஃபோனில் பேசும் போது, அதை ரெக்கார்ட் செய்வது. அதே மாதிரி ரிதன்யாவிடம் அவர் பேசியது முழுவதும் ஃபோனில் ரெக்கார்டாகியிருக்கிறது.

எப்பொழுதும் நாட்கள் ஆகும் போது, மெமரி ஃபுல்லா ஆகி தன்னாலே அதுவே டெலிட் ஆகி விடும். ஆனால் விதுனோட மரணம் அவருக்கு நெருடலாக இருந்ததால, அந்த ஃபோன் கால் ரெகார்டிங்கை, தனியாக சேவ் பண்ணி வைத்திருந்தார்.

அது தான் நமக்கு இந்த கேஸ்ல கிடைத்த ஒரு துருப்புச் சீட்டு. இதை வச்சுக் கிட்டு அந்த குற்றவாளியை கூடிய சீக்கிரம் பிடித்திடுவோம்." என மதி கூற…

" மதி… எனக்கு இதுல ஒரு டவுட் இருக்கு."

"என்னனு கேளு? நான் க்ளியர் பண்றேன். "

" அது வந்து அண்ணா இல்லாத போது, அவங்க பி.ஏ இங்கே இருக்கணும்னு அவசியம் இல்லை அல்லவா. ஒரு வேளை அவளும், அவளோட சொந்த ஊருக்கு போய் இருக்கலாம் அல்லவா? அண்ணன் வந்ததற்கு பிறகு வந்துட்டு, அதற்கு பிறகு அவங்க அம்மாவுக்கு முடியவில்லை எனவும், திரும்பவும் ஊருக்கு சென்று இருக்கலாம் அல்லவா? அவ பொய் தான் சொல்லியிருப்பா என்று எப்படி சொல்றீங்க?" என்று வினவியவாறே, மதியைப் பார்த்தாள்.

" குட் கொஸ்டின்… நீ ஒரு பிரில்லியன்ட் தான்‌… அதுவும் இல்லாமல் பத்திரிகையாளினி என்பதை நிரூபிக்கிற? ரைட்… ஆனால் நீ இவ்வளவு யோசிக்கும் போது, நானும் யோசிப்பேன் அல்லவா? ரிதன்யா இங்க சென்னையில அவங்களோட ஃப்ரண்டோட ஒரு ஃப்ளாட்ல தான் தங்கியிருக்கிறாங்க… அந்த ஃப்ரெண்ட் கிட்ட, நான் ஏற்கனவே விசாரிச்சிட்டேன்.

விதுன் ஏற்காடு போன போது ரிதன்யா சென்னையிலே தான் இருந்தா. ரெண்டு பேருமே அவுட்டிங் போனதால், நன்றாக தெரியும் என்று அந்த ஃபிரெண்ட் சொன்னாங்க. அதற்கு பிறகு தான் அவங்க அம்மாவுக்கும் முடியலன்னு ஃப்ரண்டுக் கிட்டயும், சொல்லிட்டு தான் போய் இருக்கா.

" ஓ" என்ற விகாஷினி, மீண்டும், "அப்போ கூடிய சீக்கிரம் குற்றவாளியை கண்டுபிடித்து விடலாம் என்று சொல்லுங்க. அந்த ரிதன்யா உண்மையெல்லாம் சொல்லிட்டாளா? " என ஆர்வமாக வினவ…

" குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்ற விவரம் இன்னும் தெரியவில்லை. எதற்காக கொலை பண்ணாங்க என்றும் தெரியவில்லை. விசாரணை போயிட்டு இருக்கு. ரிதன்யா எங்க கஸ்டடிக்கு வந்ததும் அவங்க ஃபோன் கால், வாட்ஸ்அப் மெஸேஜ், இமெயில் எல்லாம் செக் பண்ணிட்டு இருக்கோம். இதுக்கு மேல கேஸ் விஷயத்தை சொல்ல முடியாது. லெட் ஃபினிஷ் வித் திஸ் டாஃபிக். டோண்ட் மிஸ்டேக் மீ." என்றவன், அவளை ஆழ்ந்து பார்த்தவாறே, " காலையில் ஒரே ஒரு காஃபி மட்டும் தான் குடிச்சிட்டு வந்தேன். காபி வேணுமா? டீ வேணுமா? எதுவும் கேட்கல‌… இது தான் வீட்டுக்கு வந்த வருங்கால மாப்பிள்ளைக்கு தர கவனிப்பா? "என.

அவனது கேள்வியில் முகம் சிவந்தவள், பார்வையை எங்கோ வைத்துக் கொண்டு, " சாரி… வீட்டுக்கு வந்தவங்களுக்கு எதுவும் குடுக்காதது. என்னோட தப்பு தான். அதுவும் வீட்டு மாப்பிள்ளையை ஒழுங்காக கவனிக்காதது ரொம்ப தப்பு தான். அகெயின் சாரி… டைம் வேற ஆயிடுச்சு… ப்ரேக்பாஸ்ட் சாப்பிடுங்க மதி… அப்புறமா காஃபி குடிக்கலாம் " என்றவள், அவனை டைனிங் டேபிளிற்கு அழைத்து சென்றாள்.

"வாக்கிங் போனவரை வேறு காணும்." என தந்தையை காணாமல் விக்கி புலம்ப…

"அங்கிள் நான் வரும் போதே வந்துட்டாரு… கீழே தான் இருக்காரு…" என மதி கூற…

" ஓ… அப்போ சரி தான். அப்பா, இன்னேரம் டிஃபன் சாப்பிட்டிருப்பாரு… பரிமளா மா (பாவனா அம்மா) சாப்பிடாமல் விட மாட்டாங்க." என்றவள், மதியை அமர வைத்து‍, வேலை செய்யும் அக்கா செய்து வைத்திருந்த வெண்பொங்கலை எடுத்து பிளேட்டில் வைத்தவள், சட்னி-சாம்பாரையும் சேர்த்து பரிமாறினாள். தனக்கும் ஒரு பிளேட்டில் எடுத்து வைத்து சாப்பிட்டவள், மனதிற்குள்ளோ, ' அப்பாடா வந்த விஷயத்தை மதி நல்லவேளையாக மறந்து விட்டார்.' என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தாள்.

ஆனால் மதியைப் பற்றி அவள் முழுவதுமாக அறியவில்லை. சாப்பிட்டு 'முடித்தவுடன் விசாரித்துக் கொள்ளலாம்.' என்று நினைத்தவன், ஹாசினி பரிமாறியதை ரசித்துக் கொண்டே உணவருந்தினான்.

சாப்பிட்டு முடித்ததும் டேபிளை சுத்தம் செய்தவள்,கிச்சனுக்கு சென்று இருவருக்கும் காஃபி போட்டு கொண்டு வந்தாள்.

மீண்டும் சோஃபாவில் போய் அமர்ந்து இருந்த மதியிடம், காஃபி கஃபை நீட்ட, அதை வாங்கியவன், அருந்தியவரே, " அப்புறம் சொல்லு… ஏன் உனக்கு என்னை பிடிக்கவில்லையா? பிடிக்கலன்னா நேரடியா சொல்லலாமே? எதுக்கு அப்படி என்கிட்ட விளையாடுன? டெல் மீ ஹாசினி?" என விடாப்பிடியாக கேட்க…

காஃபியை அருந்தாமல் கையில் வைத்திருந்தவள், எங்கோ பார்த்துக் கொண்டு, "பிடிக்கவில்லை என்றால் நேரடியாக கூறி இருப்பேனே... பிடித்து இருந்ததால் தானே, சுத்தி வளைத்து நீங்களே, என்னை வேண்டாம் என்று சொல்லணும் தான் இப்படியெல்லாம் செய்தேன்…" என மெதுவாக முணுமுணுக்க…

அவள் கூறியதை கேட்டதும், காஃபி அருந்திக் கொண்டிருந்த மதியமுதனுக்கோ புரையேற, அதிர்ச்சியில் ஆவென அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.




 
Top