• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வேல்விழியாள் - 16

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
அத்தியாயம் - 16

அதிர்ச்சியில் ஆவென விக்கியை பார்த்த மதி, ' ஹாசினிக்கு என்னை பிடிக்குமா? ' என தன் மனதிற்குள் மனதிற்குள் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான். பிறகு தன்னை சமாளித்துக் கொண்டு, "அப்புறம்?" என அவளை ஆழ்ந்துப் பார்க்க…

' இனி மேல் எதையும் மறைக்க முடியாது' என்பதை உணர்ந்த விக்கி, தான் உட்கார்ந்து இருந்த சோஃபாவில் இருந்து எழுந்தவள், அவன் முகத்தைப் பார்த்து சொல்ல முடியாமல், எங்கோ பார்த்தப் படி , " எஸ்… ஐ லவ் யூ. பட் பார்த்த உடனே எல்லாம் காதலிக்கவில்லை. ஆனால் ஏதோ ஒன்று, நீங்க எது செய்தாலும் உங்கப் பக்கமே என்னை ஈர்த்தது. உங்களோட டைம் ஸ்பென்ட் பண்ண கொஞ்ச நேரத்திலே, உங்களை விரும்ப ஆரம்பித்து விட்டேன். ஆனால் அது சரி வராது என்று என்னை நானே கட்டுப்படுத்திக் கொண்டேன். பட் ஸ்டில் ஐயம் டீப்லி லவ்விங் யூ." என முடிக்க…

அடுத்த நொடி மதியின் இறுக்கமான அணைப்பில் இருந்தாள் அவனது ஹாசினி. அவளும் இவ்வளவு நாள் தனக்குள்ளே அடக்கி வைத்திருந்த காதலை கூறி விட்டு, அதன் அழுத்தம் தாங்காமல் அவனது தோளில் சாய்ந்து அழுதாள். அவளது கண்ணீரை தனது முத்தத்தால் தடை செய்தான் மதியமுதன்.

அவனது செய்கையில், முதலில் மயங்கி நின்றவள், பிறகு சுதாரித்து பட்டென விலகி அவனைப் பார்த்து முறைத்தவள், மீண்டும் சோஃபாவில் சென்று அமர்ந்தாள்.

அவள் கூடவே சென்று, அவளருகில் அமர்ந்த மதி " எதுக்கு முறைக்கிற ஹாசினி… அப்புறம் சாரி எல்லாம் கேட்க மாட்டேன். ஏன்னா நான் எதுவும் தப்பா செய்யவில்லை. நாம இப்போ லவ்வர்ஸ். எனக்கு எல்லா ரைட்ஸூம் இருக்கு. " என மதி, அவளை ரசித்துக் கொண்டே கேலி செய்ய…

முகம் சிவக்க, " ஹலோ… நான் மட்டும் தான் காதலை சொல்லி இருக்கேன். அதனால…" என விகாஷினி இழுக்க...

" அதனால… ம் சொல்லு… ஹாசினி… ஏன் நிறுத்திட்ட" என மதி வினவ…

சொல்ல வந்த வார்த்தைகளை தனக்குள்ளே புதைத்தவள், அவனைப் பார்த்து முறைத்தாள்.

" லுக் ஹனி… என்னப் பார்க்குற டியர். இனி மேல் நாம தனியாக இருக்கும் போது அப்படி தான் கூப்பிடப் போறேன். ஏன்னா நீ ரொம்ப ஸ்வீட்டா இருக்குற என்றவன் அவளது உதட்டைப் பார்த்துக் கொண்டே கண் சிமிட்டி சிரிக்க… "

அவளோ, ' ஐயோ!' என முகத்தை மூடிக் கொண்டாள்.

அவளது செயலில் வாய்விட்டு சிரித்த மதி,"ஏய் இங்க பாரு ஹனி…" என்று முகத்தில் இருந்து கையை எடுத்தவன், " நீ இப்படி எல்லாம் பண்ணிட்டு இருந்தா, நான் பேச வந்த விஷயத்தையே மறந்துட்டு, உன்னையே பார்த்திட்டே இருப்பேன் பரவாயில்லையா? " என வினவ…

" ப்ச்… மதி… என்ன விளையாட்டு இது? என்ன சொல்லணுமோ சொல்லுங்க?" என்றவாறு அவனிடம் இருந்து தள்ளி அமர்ந்து கொண்டாள்.

அதை பற்றி பெரிதாக கவலை படாமல் அவளது கண்களைப் பார்த்துக் கொண்டே, " ஹனி… நான் காதலை வாய் விட்டு சொல்லவில்லை தான். ஆனால் எனது செயல் உனக்கு உணர்த்தவில்லையா? ஃபர்ஸ்ட் ஒன்னு தெரிஞ்சுக்கோ ஹனி. நான் ஒரு விஷயத்தை ஒத்துக் கொண்டா, அது எனக்கு பிடிச்சா மட்டும் தான் செய்வேன்‌.இது எங்க அம்மாவுக்கு நல்லா தெரியும்‌. அதனால தான் அவங்க இந்த கல்யாணத்துல முனைப்பா இருக்காங்க. அப்புறம் நீ லவ் சொன்னது சந்தோசம் தான். அதுக்காக கார்த்திக் மாதிரி நடுரோட்டில் எல்லாம் என்னால பாட முடியாது. ஏன்னா நான் ஒரு சிபிஐ ஆபீஸர். அதே மாதிரி எனது காதலை, நம்ம கல்யாணத்துக்கு பிறகான வாழ்க்கையில், அனுதினமும் உனக்கு நான் உணர்த்துவேன் புரியுதா? " என…

" ம்" என தன்னை மறந்து தலையாட்டினாள் விகாஷினி.

முகம் விகசிக்க " ஓகே ஹாசினி‌... அங்கிள் வேற நமக்காக கீழேயே ரொம்ப நேரமாக இருக்காங்க‌. எவ்வளவு நேரம் தான் அங்கேயே இருப்பார். நாம பேச வேண்டியது இன்னும் இருக்கு. வெளியே எங்கேயாவது போய் பேசலாமா? " என மதி கூற…

" உங்களுக்கு வேலை இருக்குமே மதி. இன்னொரு நாள் பேசலாமா? "

" ஓய்… இன்னைக்கு உன்னை நான் விடுவதாயில்லை? எனக்கு எல்லாமே தெரிஞ்சாகணும். நீ ரெடியா தானே இருக்க… நானும் ரெடி தான்… கீழே அங்கிள் கிட்ட சொல்லிட்டு, அப்படியே அம்மா, அப்பா கிட்டேயும் சொல்லிட்டு போகலாம்." என்றவன் உற்சாகமாகக் கீழே இறங்கினான்.

விக்கியும் கிச்சனுக்குச் சென்று, வேலை செய்யும் அக்காவிடம் மதியத்துக்கு என்ன செய்யவேண்டும் என்று கூறிவிட்டு, தனது கைப்பையுடன் வந்தாள்.

கீழே சென்று இருந்த மதி, சங்கரிடம் விஷயத்தை சொல்லி இருக்க… அவரும் தனது மகள் கீழே இறங்கி வரவும்," மாப்பிள்ளையோட போய்ட்டு வாடா. நான் பாத்துக்குறேன்." என்றுக் கூறி வழி அனுப்பினார்.

" சரி" என தனது தந்தையிடம் தலையாட்டி விட்டு, மதியின் பின்னே சென்றாள்.

இருவரும் மல்லிகாவிடமும்‍, சபாபதியிடம் கூறி விட்டு காரில் புறப்பட்டனர்.

காரை ஓட்டிக்கொண்டே, " எங்கே போகலாம் ஹனி? " என மதி வினவ?...

" எங்க வேணாலும் போலாம் மதி. எனக்கு ஓகே தான்."

" ஓஹோ… அப்போ கார்லேயே லாங்ட்ரைவ் போயிட்டே பேசுவோமா?" மதி கூற…

" ஐயோ! ட்ரைவ் பண்ணும் போது, பேசக் கூடாது மதி. ஏதாவது மாலுக்கு போகலாம்." விக்கி கூற…

" ம்" என யோசித்தவன், " அது சரி வராது ஹனி. அங்க ஒரே ரஷ்ஷா இருக்கும். உன்னை இன்னொரு தடவை அங்க கூட்டிட்டு போறேன். இப்போ ஏதாவது ஒரு பார்க்குக்கு போகலாம். கூட்டம் அவ்வளவா இருக்காது." என்ற மதி, அவளைப் பார்க்க…

" இட்ஸ் ஓகே மதி. எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. பார்க்குகே போகலாம் என்றவள், ஜன்னல் வழியே ட்ராஃபிக் மிகுந்த சென்னையை பார்த்துக் கொண்டிருந்தாள். மனமோ, மாசு இல்லாத சுத்தமான காற்றுடன் கூடிய இயற்கை எழில் கொஞ்சும், ஏழைகளின் ஊட்டியான ஏற்காடை சுற்றியது. தன்னை மதி, பெண் பார்க்க வந்த நிகழ்வை எண்ணிப் பார்த்தாள்.

' அழகிய ரம்யமான காலை பொழுதில் அந்த வீட்டை அதகளமாக்கிக் கொண்டிருந்தாள் விகாஷினி‌.

" பா… திஸ் இஸ் டூ மச்‌… உங்க கிட்ட என்ன சொன்னேன். ரெண்டு வருஷமாவது வேலைக்கு போகணும்னு சொன்னேன்ல… சரி…சரிணு தலையாட்டிட்டு இப்ப எதுக்கு பொண்ணு பாக்க வர சொன்னீங்க…" என விக்கி கூற…

" நல்ல இடம் டா… ஜாதகப் பொருத்தமும் அமோகமா இருக்கு. கல்யாணம் ஆனாலும், வேலைக்குப் போகலாம் மா‌.. அதெல்லாம் ஒன்னும் பிரச்சினை கிடையாது. குடும்பம் நல்ல குடும்பம்… அதுவும் இல்லாமல் தெரிஞ்ச குடும்பம். எனக்கு விட மனசில்லை."

" அது யாருப்பா? ... நம்ம ரிலேடிவ்ஸ்ஸா இருந்தா, வரலாம் வேண்டாம். ஒரு பெரிய நோ‌… சொல்லிடுங்க‌."

" ப்ச்… என்ன விக்கி மா… நான் என்ன சொல்ல வரேன் என்று கேட்காமலே, கூடக் கூட பேசிட்டு இருக்க… அவங்க நம்ம சொந்தம் இல்லை. ஆனால் நம்ம பவியோட மாமா வீடு தான்…" என்று ஒரு வழியாக மாப்பிள்ளை வீடுப் பற்றி சொல்லி முடித்தார் சங்கர்.

ஒரு நிமிடம் ஜெர்க்கான விகாஷினி, " யாருப்பா ? என மறுபடியும் வினவினாள்.

" எல்லாம் உன் தோழியோட மாமா பையன் தான் மா, மாப்பிள்ளை. நான் விசாரித்த வரைக்கும் ரொம்ப தங்கமான பையன். க்ரைம் ப்ராஞ்ல சிபிஐ ஆபீசராக இருக்கிறார். உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பார் டா." என்ற சங்கரின் மறுமொழியில், திகைத்த விக்கி, " பா… அண்ணாவுக்கு தெரியுமா? " என தடுமாறிக் கொண்டே வினவினாள்.

" அவனுக்கு ஃபோன் பண்ணிட்டு தான் இருக்கேன் மா… அவனைப் பிடிக்க முடியலை. கொஞ்சம் பிஸியா இருக்கான் போல… அவனே கால் பண்ணுவான். இப்ப பொண்ணு தானே பாக்குறாங்க. அப்புறம் பார்த்துக்கலாம். விடு டா… " சங்கர் கூற…

" அப்பா…" என தயங்கினாள் விகாஷினி.

" ஏன் டா… விக்கி நெர்வஸாக இருக்க?"

" அதுப்பா… எனக்கு பிடிச்சா தான், நீங்க அடுத்த ஸ்டெப் எடுக்கணும். அதுக்கு முன்னாடி நீங்க எந்த வித வார்த்தையும் விடக்கூடாது." என ஸ்ட்ரிக்டாக விக்கி கூற…

அவரும், "சரி" என தலையாட்டினார்…

" அப்பானா அப்பா." தான் என உற்சாகமாக அவரை அணைத்தவள், "பா… நான் பவியைப் பார்த்துட்டு வரேன்." எனக் கூற…

" ஈவினிங் பொண்ணு பார்க்க வராங்க… சும்மா வெளிய சுத்தாமல் இருக்கலாம்ல. அப்புறம் ரொம்ப டல்லா தெரிவமா..‌. "

" அது பா… பவி வீட்டுக்கு மட்டும் தான் போறேன். பாத்துட்டு சீக்கிரம் வந்துருவேன்" என்றவள், அவரின் பதிலை கூட எதிர்பார்க்காமல் சிட்டென பறந்து விட்டாள்.

***********************
" பவி… பவி‌.‌.. " என மூச்சு வாங்க கத்திக் கொண்டே வந்தாள்.

" விக்கி… ஏன்டா ? இவ்வளவு அவசரம்… மெதுவா வரக்கூடாது. ஆமாம் ஓடி வந்தியா…"

" ஆமாம் பரிமா… பவி எங்க? ஒரு முக்கியமான விஷயம்…"

" எது… உன்னை பொண்ணு பார்க்க வரதை, அவக் கிட்ட தான் முதல்ல சொல்வியாக்கும்‌. என் கிட்ட சொல்ல மாட்டியா? " பரிமளா கேலி செய்ய…

" அது பரிமா… " என தயங்க...

" சரி விடு… ஈவினிங் என்ன புடவை கட்டப் போற? எல்லாம் எடுத்து வைச்சிட்டியா?"

" இல்லை பரிமா. இனி மேல் தான் யோசிக்கணும்."

" நான் வந்து ஹெல்ப் பண்ணலாம்னா, எங்க ரெண்டு வீட்டுக்கும் இடையில் இப்போ கொஞ்சம் சின்ன மிஸ் அன்டர்ஸ்டாண்டிங் இருக்கு. என்னால வர முடியாது. பவிய வேணும்னா கூட்டிட்டு போடா… இரண்டு பேருமா சேர்ந்து என்ன புடவை கட்டலாம் என்று எடுத்து வைங்க... ஆனால் மதியமா அவளை அனுப்பி விட்டுட்டு மா‌.

உனக்கு எல்லாம் நான் பக்கத்துல இருந்து செய்யணும்னு நினைச்சேன், என்னால வர முடியல. ஆனால் உன் கல்யாணத்துல எல்லாத்துக்கும், நான் தான் முன்ன நின்னு செய்வேன். அதை யாராலும் தடுக்க முடியாது. எங்க அண்ணன், அண்ணியா, இல்லை நானா என்று ஒரு கை பார்த்துடலாம். நீ கவலைப்படாத…" என...

" சரி." என்பதை போல் எல்லா பக்கமும் தலையாட்டியவள், ' ஐயோ ! பரிமா கூட கல்யாணம் முடிவானது மாதிரி பேசிக் கொண்டிருக்கிறாரே. அவர் பேசப் பேச, நமக்கு பயம் இன்னும் ஜாஸ்தி ஆகுது. முதல்ல இந்த இடத்தை விட்டு எஸ்கேப் ஆவோம்.' என மனதிற்குள் நினைத்தவள், "சரிம்மா… நான் போய் பவியைப் பார்க்கிறேன்." என்றுக் கூறி விட்டு வேகமாக மாடி ஏறினாள்.

அங்கு பவியோ, எழுந்து இருக்காமல் ஆனந்த சயனத்தில் தான் இருந்தாள்‌. வேலைக்கு சென்றிருந்தவள், இரண்டு நாள் விடுமுறையில் சென்னையிலிருந்து வந்திருக்கிறாள்.

" அடியே இங்கே ஒருத்தி எவ்வளவு கவலையா இருக்கேன். நீ மட்டும் நிம்மதியா தூங்குறீயா?" என்றுக் கூறியவள், அருகில் இருந்த ஜக்கை எடுத்து தண்ணீரை அவள் மேல் ஊற்றினாள் .

"ஐயோ! வெள்ளம்… வாங்க வி.கே ஓடிப் போகலாம். " என தூக்கத்தில் உளற…

"அடிப்பாவி…" என தன் வாயைப் பொத்தியவள்‍, வேகமாக பவியை உலுக்க…

" வி.கே நாம எங்கே இருக்கோம்."

" ம்... நாம ரெண்டு பேரும் சுவிட்சர்லாந்தில் இருக்கோம்…"

" ஏய் விக்கி… நீ எப்ப வந்த?"

" பிச்சுடுவேன்டி… நானே ஏகப்பட்ட குழப்பத்துல இருக்கேன். நீ என்னனா ஜாலியா கனவு கண்டுட்டு இருக்கீயா?"

" விக்கி… உனக்கு என்ன தான் பிரச்சினை? காலங்காத்தால வந்து ஏன் என் இப்படி உயிர வாங்குற? நல்ல கனவுல இருந்தேன். இப்படி தண்ணி ஊத்தி எழுப்பிட்டியேடி ." பவி கடுப்படிக்க…

" ப்ச்… பவி பீ சீரியஸ். நானே எவ்வளவு டென்ஷனாக இருக்கேன் தெரியுமா? உங்க அத்தான் இன்னைக்கு என்னை பொண்ணு பாக்க வரார்."

" அதுக்கென்னடி… அவர் ரொம்ப நல்லவர்." பவி கூற…

"அடியே நானே உனக்காக தான் பார்த்தேன். நீ. என்னவென்றால் லூசு மாதிரி உளறிட்டு இருக்க…" என்றவள் அவளின் காதை கடிக்க…

" ஏய் விக்கி… இதுல இப்படி ஒரு விஷயம் இருக்கா? இப்போ என்னடி பண்ணுறது?" பவி கவலையாக வினவ…

" எனக்கும் அது தான் தெரியலை டி." விக்கி கூற…

" சரி நீ வேற, கவலைப்படாத பவி. நான் பார்த்துக்கிறேன். எப்படியும் உங்க அத்தானோட தனியாக பேச சந்தர்ப்பம் கிடைக்கும். அப்போ உங்களை பிடிக்கலை என்று பளிச்சினு சொல்லிடுறேன்."

" பாவம்டி… எங்க அத்தான்… அவருக்கு உன்ன மாதிரி தைரியமா இருக்குற பொண்ணை தான் பிடிக்கும். என்னைய கேட்டாங்க, நான் தான் ஏதேதோ சொல்லி வேணாம்னு சொல்லிட்டேன். அதனால தான் இப்ப எங்க ரெண்டு வீட்டுக்கும் சண்டை. இப்போ நீயும் மறுத்தனா, ரொம்ப வருத்தப்படுவார்," என்ற பவி கண் கலங்கினாள்.

" விடுடி… நமக்கு வேற ஆஃப்ஷனே இல்லை‌. நீ எதுவும் குழப்பிக்காதே‌. நான் பார்த்துக்கிறேன். வரேன் டி … அப்புறமா ஃபோன் பண்ணுறேன்." என்றவள் தனது வீட்டிற்கு கிளம்பிச் சென்றாள்.

*********************
மாலையில் எல்லோரையும் பரபரப்பாக விரட்டிக் கொண்டிருந்தார் சங்கர். எல்லாம் தயாராக இருக்க, விக்கி மட்டும் இன்னும் தயாராகவில்லை. கதவை சாத்திக் கொண்டு தயாராகுறேன் என்ற பெயரில், மாப்பிள்ளை வீடு வரும் வரை வெளியே வரவில்லை.

அவர்களும் சரியான நேரத்திற்கு வந்து விட, சங்கர் அவர்களை வரவேற்று பேசிக் கொண்டிருந்தார். வீட்டில் வேலை செய்யும் செல்லியை அழைத்து, எல்லோருக்கும் ஸ்வீட், காரத்தை கொண்டு வர சொன்னவர், அப்படியே விக்கியையும் அழைத்து வர சொன்னார்‌

சற்று நேரத்தில் வந்த விக்கியைப் பார்த்த, மதியமுதனின் குடும்பத்தினர் அனைவருக்கும் திருப்தி தான்.

மல்லிகா விகாஷினியை தனது பக்கத்தில் அழைத்து அமர வைத்து பேசிக் கொண்டிருந்தார். அவளும் கேஷுவலாக இருந்தாள். செல்லி கொண்டு வந்த காஃபியை, எழுந்து வாங்கியவள், அனைவருக்கும் கொடுத்தாள்.

மல்லிகாவும், ரத்னசபாபதியும் மெல்லிய புன்னகையுடன் வாங்கிக் கொள்ள… மதியமுதன் அவளை, கூர்மையாக அளவிட்டவாறோ வாங்கிக் கொண்டான். சங்கர் மட்டும் அவளை முறைத்துக் கொண்டிருந்தார்.

ஏனென்றால் இன்று அவளை புடவை கட்ட சொல்லியிருக்க… அவளோ வழக்கம் போல் ஒரு டாப்பையும் ஜீன்ஸ் பேண்டையும் அணிந்து இருந்தாள்.


ஆனால் அந்தத் தோற்றமே மாப்பிள்ளை வீட்டிற்கு பிடித்து விட்டது. மதியமுதனின் அழுத்தமான பார்வை, விக்கியின் மனதில் ஆழ்ந்து பதிந்து விட்டது. ' ஐயோ! நம்ம ட்ரீம்பாய்க்கு உள்ள பத்து பொருத்தமும், இவரோட பொருந்தியிருக்கே.' என மனதிற்குள் நினைத்துக் கொண்டிருந்தவளை, மல்லிகா அழைத்து இருந்தாள்.

" என்ன மா விகாஷினி… இங்கே ஃபேமசான சேர்வராயன் கோயில் இருக்காமே…. அங்கே போய் இரண்டு பேரும், சாமி கும்பிட்டு, அப்படியே பேசி விட்டு வருகிறீர்களா?" என்று வினவ…

ஒரு நிமிடம் யோசித்தவள், ' மறுத்து சொல்வோமா… அப்பத்தானே அவர்களுக்கும் நம்ம மேல நல்ல அபிப்ராயம் வராமல் போகும்.' என்று நினைத்துக் கொண்டிருக்க…

அதை தடை செய்வது போல்,மதியமுதன் குறுக்கிட்டான். " விகாஷினி‌… உங்களுக்கு எங்க போகணும்னு ஏதாவது ஐடியா இருக்கா? சொல்லுங்க… " என்று அவளின் விருப்பத்தை அறிய முயன்றான்.

அவனது கேள்வியில், அவளது மனமோ, இன்னும், இன்னும் அவனது பக்கம் சாய்ந்தது. இது ஒரு சின்ன விஷயமாக இருந்தாலும், அவளுக்கோ, நம்முடைய விருப்பு, வெறுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரே என்று மனமோ, சந்தோஷத்தில் திக்குமுக்காடியது.

" அது… எங்க காஃபி எஸ்டேட் பக்கத்துல இருக்கு. அங்கப் போகலாமா? " என விகாஷினி வினவ…

'அடக் கடவுளே! ' என்று பெரியவர்கள் மூவரும் தனித் தனியாக மனதிற்குள் நொந்துக் கொண்டனர்.









 
Top