• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வேல்விழியாள் -18

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
அத்தியாயம் - 18

மதியமுதன் சில நொடிகள் யோசனையில் இருந்தான். அதற்குள் மனதிற்குள்ளே பல திட்டங்களைத் தீட்டி விட்டான்.

பில் எடுத்து வந்த சர்வரிடம், பணத்தைக் குடுத்து விட்டு, விகாஷினியையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றான்.

விகாஷினியோ, 'அந்த சிம் கார்டு எங்கே போயிருக்கும்? 'என்ற குழப்பத்தில் இருந்தாள்.

மதியமுதன் காரை ஓட்டிக் கொண்டே, சந்தீப்பிற்கு அழைத்து, வீட்டிற்கு வர சொல்லியிருந்தான்.

சந்தீப்போ, மதியின் குரலிலே, சீரியஸ்னஸை உணர்ந்தவன், உடனடியாக கிளம்பி,அவர்கள் வருவதற்கு முன்பே வந்து அவர்களுக்காக காத்திருந்தான்.

மல்லிகா கொடுத்த ஜுஸை பருகியவன், மதியும், விக்கியும் வருவதற்காக காத்திருந்தான்.

மதியும், விக்கியும் நேராக மதியின் வீட்டிற்கே வந்தனர்.

" சாப்பிடுமா… " என்ற மல்லிகாவிடம், பசி இல்லை ஆன்ட்டி… அதுவும் இல்லாமல் அப்பா வெயிட் பண்ணுவாரு… " என்றவள் மதியையும், சந்தீப்பையும் தேட…

" இரண்டு பேரும் மாடிக்கு போயிட்டாங்க மா… " மல்லிகா கூற…

" ஓ…" என்றவள், " ஆன்ட்டி… நான்… மதி… " என்று உளற…

" மதிக் கிட்ட பேசணும்னா போடா… ஏன் தயக்கம்? இந்த வீட்ல உனக்கு எல்லா ரைட்ஸும் இருக்கு. எப்ப வேணும்னாலும், எங்க வேணும்னாலும் போடா…" என்றவர் புன்னகையுடன் உள்ளே சென்று விட்டார்.

அவரின் புன்னகை அவளுக்கும் தொற்ற, இளம் புன்னகையுடன் மேலேறி செல்ல… முல்லை பந்தலின் அடியில், நின்று இருவரும் விவாதம் செய்துக் கொண்டிருந்தனர்.

விக்கியிடமிருந்து விதுனின் புது நம்பரை வாங்கி தனது செல்லில் பதிவு செய்து வைத்திருந்ததை, சந்தீப்பிடம் காண்பித்த மதி, " இது விதுனோட புது நம்பர் உனக்கு தெரியுமா சந்தீப்?"

"இல்லை" என தலையசைத்த சந்தீப், "இந்த நம்பரில் இருந்து எனக்கு எந்த காலும் வரலை. ஐயம் ஸ்யூர்…"

" ஓ… இது விதுனோட புது நம்பர் என்று ஹாஸினி சொன்னா…" என்ற மதி, திரும்பி அவள் எங்கே என பார்க்க… அப்பொழுது தான் அங்கே வந்தவள், அவர்கள் அருகே சென்று, "ஆமாம் சந்து… லாஸ்ட் டைம் அண்ணா இந்த நம்பரில் இருந்து தான் கால் பண்ணினார்." விக்கி கூற.‌‌..

" ஓகே சந்தீப் … இது தான் நமக்கு கிடைச்சிருக்க ஒரு ஹோப்… நீ ஃபர்ஸ்ட் இந்த நம்பர் ஆக்டிவ்வா இருக்கா என்றுப் பாரு… இல்லை என்றால்,லாஸ்டா எந்த ஏரியால ஆக்டிவா இருந்துச்சுன்னு பாரு சந்தீப். நம்பிக்கையான ஆளை வச்சு இந்த டீடெயில் கலெக்ட் பண்ணு. இதுல நமக்கான க்ளூ கிடைச்சாலும் கிடைக்கலாம். சோ இந்த நம்பரைப் பற்றின டீடெயில்ஸ் வெளியே யாருக்கும் தெரியக் கூடாது." மதி கூற...

"சரி… " என தலையாட்டியவன், "டீடெயில்ஸோடு வரேன். பை மதி… பை விக்கி… " என்று விட்டு, விதுனைப் பற்றிய குழப்பத்தோடு கீழே இறங்கினான் சந்தீப்.

' பர்சனல் நம்பர் மாற்றினால் நமக்கு தானே முதலில் சொல்லுவான். ஏன் என்னிடம் சொல்லவில்லை? ஊருக்குப் போகும் போது கூட, பழைய நம்பரில் இருந்து தானே கால் வந்தது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஊருக்கு போறேன் வருகிறாயா, என்று கேட்டவனிடம் கூட, ஊருக்கு வரவில்லை என்று சொன்னேனே. ஒருவேளை நான் போய் இருந்தால், விதுன் என்னிடம் ஏதாவது கூறியிருப்பானோ!' என மனதிற்குள் யோசித்துக் கொண்டே வந்த சந்தீப் வேகமாக இறங்க…

பவிக்கோ மனதிற்குள் பல குழப்பங்கள், தடுமாற்றங்கள், தனது மனதில் உள்ளதை யாரிடமாவது கூறுவோம் என்று நினைத்தவள், ஆஃபீஸில் தலைவலி என்று லீவு போட்டு விட்டு வந்தாள்.

மதியை பார்க்க தனது அத்தை வீட்டிற்கு வந்தவள், கீழே ஹாலில் யாருமில்லை எனவும் மாடிக்கு ஏறினாள். அவள் யோசனையில் இருந்ததால் இறங்கி வந்து சந்தீப்பை கவனிக்காமல் அவன் மேல், மோதி கீழே விழ இருந்தாள்.

ஒரு சுற்று சுற்றி, அவளை அணைத்து கீழே விழாமல் தடுத்தான் சந்தீப். இல்லை என்றால் இருவரும் இந்நேரம் படிகட்டில் உருண்டிருக்க வேண்டும். மெல்ல அவளை ஆசுவாசப்படுத்தியவன், அவளைப் பார்த்து புன்னகைக்க…

அவளோ, அவனை தீயென முறைத்து விட்டு, " ச்சே‌‌… " என்று முகத்தை திருப்ப…

" ஏய் பவி… ஓவரா பண்ணாத... போனால் போகட்டும் என்று கீழே விழாமல் காப்பாத்தினதுக்கு ஒரு நன்றி சொல்லவில்லை என்றாலும் பரவாயில்லை… ச்சே என்று சொல்லுற… அப்புறம் பார்க்கிற பார்வையப் பாரு… என்னமோ நான் ரோட் சைட் ரோமியோ மாதிரி, வேணும்னா இடிச்சேன்." என சந்தீப் பொரிய…

" கீழே இறங்கும் போது பார்த்து வர மாட்டீயா" பவி பதிலுக்கு எகிற…

" ஏன் கீழே இறங்கும் போது மட்டும் தான் பார்த்து வரணுமா? ஏன் மேல ஏறி வரும் போது நீ கண்ணை மூடிக் கிட்டா வந்த? ஆள் வருவதைப் பார்த்து ஒதுங்கி போவது தானே‌… ஓ… நேற்று நான் சொன்னதை நினைச்சி ட்ரீம்ஸ்ல இருந்தீயா பவிக் குட்டி."

" ச்சே… உன் கிட்ட வந்து மனுஷங்க பேசுவாங்களா?" என பவி கூற…

" ஆமாம் போடி…" என்றவன் கீழே இறங்க‌‌…

" டேய்…. என்ன டி போட்டு பேசுன… நான் அப்புறம் டா போட்டு தான் கூப்பிடுவேன்‌. சின்ன வயசுல இருந்த அதே பவி தான் நான்…" என்று கீழே செல்லும் சந்தீப்பை பார்த்து கத்த... ‌

அவளின் பதிலால் முகத்தில் மலர்ந்த சிரிப்புடன் திரும்பி பார்த்தவன், " வித் ஃப்ளஷர் டார்லிங்." என்று விட்டு செல்ல…

செல்லும் அவனை ஒன்னும் செய்ய முடியாமல்‍, கண்களில் நீர் வழிய மதியின் அறைக்குச் சென்றவள், பார்த்ததோ, மதியின் கையணைப்பில் குறும்பு புன்னகையுடன் விகாஷினி நின்றிருந்தாள்.

தான் அழுததை மறந்துவிட்டு இப்பொழுது அவர்கள் இருவரையும் குறுகுறுவென பார்த்துக் கொண்டு இருந்தாள் பவி.

பாவனாவின் பார்வையில் வெட்கம் பிடுங்கித் திங்க, அப்போது தான் தாங்கள் இருந்த நிலையை உணர்ந்து, இருவரும் விலகி நின்றனர். மதியமுதன் தன் தலையை கோதிக் கொண்டு, வெட்கப்பட்டவன், " ஃப்ரெஷ்ஷப் ஆகிட்டு வர்றேன். " என்று தனது அறைக்கு தப்பித்துச் சென்று விட்டான்‌.

விக்கி தான் பவியிடம் மாட்டிக் கொண்டு முழித்தாள். " என்னடி நடக்குது இங்க?" பவி வினவ…

" அது… அது…" என்று மென்று முழுங்கிய விக்கி, அடுத்து என்ன சொல்வது என தெரியாமல், முகமெல்லாம் சிவக்க அவளை நிமிர்ந்து பார்த்தவள் அப்போது தான் பவியின் கன்னத்தில் வழிந்து இருந்தக் கண்ணீரைப் பார்த்தாள்.

வேகமாக அவளின் அருகில் வந்தவள், அவள் கண்களைத் துடைத்து விட்டு, " நீ ஏன் டி அழுத?" என…

" அது அப்புறம் நான் சொல்றேன். நீ பேச்சை மாத்தாத? இங்கே என்ன நடந்துட்டு இருக்கு, அத முதல்ல நீ சொல்லு‌…" என அழுது சிவந்திருந்த முகத்தில் இப்போது புன்னகை தவழக் கேட்டாள் பாவனா.

அவளது அன்பை பார்த்து நெக்குருகிய விக்கி, மனதுக்குள், ' முதலில் பவிக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு தான் மட்டும் சந்தோஷமான வாழ்க்கை அமைத்துக் கொள்வதா… ' என ஒரு நிமிடம் கழிவிரக்கம் கொண்டவள், அவளைப் பார்த்து, " அது ஒன்னும் இல்ல பவி… அது… அது… " என்று இழுத்தாள்.

" அதை தாண்டி நானும் கேட்கிறேன். எத்தனை நாளா நடக்குது? அதுவும் எனக்கு தெரியாமல்? " என்ற பவி விக்கியைப் பார்த்து புருவத்தை உயர்த்த…

" ம் எத்தனை நாளா? எத்தனை மணி நேரம் என்று கேளு… உங்கத்தான் இன்னைக்கு காலையில வந்து… ஸ்கூலுக்கு லீவ் போடுண்ணாரு… அப்புறம் என்னை பிடிக்கும் என்று சொன்னாரு. வெளியே போகலாம் என்று அவுட்டிங் வேற கூட்டிட்டு போனாரு. எனக்கே என்ன நடக்குதுன்னு ஒன்னுமே புரியலை. இது எல்லாம் கனவா? இல்லை நனவா? என்று புரியாமல் இருக்கிறேன்." என விக்கி கூறிக் கொண்டு இருக்கும் போதே, முகம் துடைத்துக் கொண்டு தனதறையில் இருந்து வெளியே வந்தான் மதியமுதன்.

மதி அதற்குள் தன்னை சமாளித்திருக்க… பவி, விக்கி இருவரும் அமர்ந்து இருந்த சோஃபாவில், இருவருக்கும் நடுவில் சென்று ஸ்வாதினமாக அமர்ந்தவன், பவியைப் பார்த்து, " பாவ்பாஜி.‌.. உனக்கு என்ன தெரியணும்? என் கிட்ட கேளு‌… இங்கே என்ன நடந்தது என்று தானே தெரியணும் ? அதை விட்டுட்டு உன் ஃப்ரெண்ட் தேவையில்லாததைப் பற்றி பேசி, உன்னை டைவர்ட் பண்ணப் பார்க்குறா" என குறும்பாகக் கூற…

" ஓஹோ… இப்போ தெளிஞ்சிட்டீங்க போல… சரி தான் கீழே எங்க அத்தை இருக்கும் போதே, இப்படி தான் நடு ஹால்ல இரண்டு பேரும் கட்டிப் பிடிச்சுட்டு நிற்பீங்களா? என பவி வினவ?

" ஏய் வாண்டு எல்லாத்துக்கும் காரணம் உன் ஃப்ரண்டு தான். அநியாயமா என்னை சந்தேகப்படுறா... அவள் சந்தேகத்தை தீர்க்க முயற்சி செய்துட்டு இருந்தேன். நீ வந்துட்ட கரடி மாதிரி… " என பெருமூச்சு விட்டுக் கொண்டே மெதுவாக முனங்கினான்.

" ஹலோ அத்தான்… நான் கரடியா? உங்க லைன் க்ளியர் ஆகவும் என்னை இப்படி கட் பண்ணி விட்டுட்டீங்களே அத்தான். இன்னைக்கு இதுக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகணும். அம்மா, அப்பா, சங்கரப்பா, அத்தை, மாமா எல்லோரையும் கூப்பிடுங்க… நான் கரடியானு கேட்டுடுவோம்." என கலாய்க்க…

" அம்மா‌‌… தாயே தெரியாமல் சொல்லிட்டேன். ஆளை விடு…"

" அது…" என்றவள், விக்கியைப் பார்த்து, "என்னடி பிரச்சனை உனக்கு? எங்க அத்தான் ஸ்ரீ ராமச்சந்திரன் தெரியுமா? அவரை போய் ஏன் சந்தேகப்படுற?" என பவி வினவ?

" ம்கூம்… நீதான் உங்க அத்தானை மெச்சுக்கணும். என்ன நடந்தது தெரியுமா? " என்றவள் சற்று முன் நடந்ததை நினைத்துப் பார்க்க ஆரம்பித்தாள்.


' சந்தீப்பிடம் முக்கியமான பொறுப்பை ஒப்படைத்த மதி, அவன் கிளம்பவும் வேகமாகச் சென்று லேப்டாப்பை ஆன் செய்யவும், ஏதோ இம்பார்டென்ட் ஆபீஷியல் மேட்டர் போல் என்று நினைத்த விகாஷினி அமைதியாக இருந்தாள்‌.

ஆனால் மதியோ, "விழித்தெழு வேல்விழியாளே" தொடரின் அத்தியாயத்தை ரசித்து படித்துக் கொண்டிருந்தான்.

"விழித்தெழு வேல்விழியாளே"

வணக்கம் தோழிகளே…
இன்னைக்கு நான் என்ன சொல்ல போறேன்னா, ஒவ்வொருத்தருக்குள்ளும் ஒரு சின்ன சின்ன ஆசை இருக்கும். அதை நிறைவேற்றிக் கொள்ள தயக்கம் இருக்கும். ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதில், அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்றுக் கூட யோசிக்கலாம். ஆனால், நாம் நமக்காகவே வாழ வேண்டும்‌.

" சின்ன சின்ன ஆசை…
சிறகடிக்க ஆசை… "
இந்த பாடலில் வருகின்ற மாதிரி நாம் நம்முடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். அதுக்காக நாற்று நடவும், மீன் பிடித்து ஆற்றில் விடுவதும் மட்டுமில்லை.

யாரும் இல்லாத நேரத்தில் பாட்டை போட்டுக் கொண்டு டான்ஸ் ஆடலாம்.‌.. மழை பெய்யும் போது மொட்டை மாடியில் சென்று நனையலாம்…
நம் வாழ்க்கை நம் கையில்… அடுத்தவர்களுக்காக பார்த்துக் கொண்டே இருக்காமல், சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றினால், இன்னைக்கு தான் இந்த உலகத்தில் பிறந்தோம் என்பது போல் உற்சாகத்துடன் வலம் வருவீர்கள்… வேல்விழியாளே… செய்து தான் பாருங்களேன்…

ஒரு ரகசியம் சொல்லட்டுமா… யாரிடமும் சொல்லக் கூடாது. நான் கூட என் தோழியோட ஒரு நாள் இரவுப் பொழுதில் சைக்கிளில் ரவுண்ட் அடிச்சிருக்கேன். அது என்னோட நீண்ட நாள் ஆசை. அது நிறைவேறும் போது எப்படி இருந்தது தெரியுமா ? செம்ம ஃபீல்… நீங்களும் முயற்சி செய்து மகிழுங்கள் வேல்விழியாக்களே… "

மகிழ்விழி.

அதைப் படித்த மதியமுதனின் முகத்திலும் ரகசிய புன்னகை மலர்ந்தது.

அதைப் பார்த்து அவனருகில் வந்த விகாஷினி, லேப்டாப்பை பார்த்து விட்டாள். பிறகென்ன மதியை விட்டு வைக்கவில்லை.

" ஓஹோ ‌… இதைப் பார்த்து சார் இப்படி ரசிச்சு சிரிச்சிட்டு இருக்கீங்களோ, என்னைப் பார்த்து ஒரு புன்னகை சிந்த பஞ்சம். அன்னைக்கு வேற ஐ லைக் யூ… என்று மெசேஜ் பண்ணியிருந்தீங்க தானே. என்னைக் கூட ஏன் என் லாப்டாப்பை பார்த்த என்று திட்டுனீங்களே…"

" நான் எங்கே ஹனி திட்டினேன். அஃபிஸியல் மேட்டர் இருக்கும் பார்க்காத என்று தானே சொன்னேன் ‌ அப்புறம் ஐ லைக் யூனு தான் மெசேஜ் பண்ணேன். ஐ லவ் யூ என்றா சொன்னேன்."

" ஓஹோ… அது வேற ஆசை இருக்கா மதி? அதுக்கு தான் பவிக் கிட்ட, அவங்களைப் பத்தி விசாரிச்சிட்டே இருந்தீங்களா…" என சிரிப்பை அடக்கிக் கொண்டு அவனை வம்பிழுத்தாள் விகாஷினி.

" ஹனி… ஜஸ்ட் ஒரு க்யூரியாசிட்டி… அவ்வளவு தான் டா… என்னை நம்புடா…"

" உங்களை எப்படி நம்புவது?" என்று விகாஷினி மீண்டும் ஆரம்பிக்க…

அப்போது தான் அவளது முகத்தைப் பார்த்த மதி, அவள் வேண்டும் என்று விளையாடுகிறாள் என்பதைப் புரிந்துக் கொண்டான். " ஓகே ஹனி… உன்னை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். வேறு யாரையும் நான் ஏறேடுத்துக் கூட பார்க்க மாட்டான். அதை உனக்கு நிருப்பிக்கிறேன்‌‌." என்றவன் அவளின் இடைவளைத்து அணைக்க…

அப்போது தான் பாவனா உள்ளே நுழைந்திருந்தாள்.'

நடந்ததை கண்ணில் சிரிப்புடன் கூறிய விகாஷினி. தன் தோழியிடம் நியாயம் கேட்டாள்.

" இங்கே பாரு பவி… அவசரமா லேப்டாப்பை ஓபன் பண்ணி பார்க்கிறாரு நினைச்சா, யாரோ ஒரு மகிழ்விழி அவங்களோட கட்டுரையை பாத்துட்டு இருக்காரு. எனக்கு கோபம் வருமா வராதா ?" என்று அவளைப் பார்த்துக் கண்ணடித்துக் கொண்டே வினவ…

அவளும் ரகசியமாக விக்கியைப் பார்த்து புன்னகைத்தப்படியே, " உங்க இரண்டு பேரு சண்டைல என்னைய இழுக்காதீங்க…" என்றுக் கூறினாள் பாவனா.

மதியமுதன் இருவரின் பார்வைப் பரிமாற்றத்தை கவனித்து விட்டான். இவர்கள் இருவருக்கும் மகிழ்விழி யாரேன்று தெரிந்திருக்கும். நம்மிடம் ஏதோ மறைக்கிறார்கள். பார்த்துக்கலாம், ' நான் நினைத்தால் அந்த பத்திரிக்கையோட எடிட்டரிடமே விசாரிக்கலாம். நான் ஒரு சிபிஐ ஆஃபீசர் என்பதையே இவங்க ரெண்டு பேரும் மறந்துட்டாங்க. என்னால் கண்டுப்பிடிக்க முடியாதா? அதையும் தான் பார்த்து விடுவோம்.' என்று எண்ணியவனின் முகத்தில் மந்தகாச புன்னகை மலர்ந்தது.



 
Top