• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வேல்விழியாள் - 19

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
அத்தியாயம் - 19

' தன்னிடம் இருவரும் ஏதோ மறைக்கிறார்கள். கூடிய சீக்கிரம் கண்டு பிடித்து விடுவோம். 'என்று நினைத்தவனின் முகத்தில் மந்தகாசப் புன்னகை தவழ, மீண்டும் இருவரையும் ஆராய்ச்சி செய்தான் மதியமுதன்‌.

அப்பொழுது தான் பாவனாவின் அழுது சிவந்திருந்த முகத்தை கவனித்தான். 'ஷிட்' என்று தன்னையே நொந்து கொண்டவன்." வாட் ப்ராப்ளம் பாவ்பாஜி? உன்னோட முகம் ஏன் இப்படி இருக்கு? அழுதியா என்ன ? " என வினவ…

பவியோ, விக்கியை ஓரப் பார்வை பார்த்தவள், " அது ஒன்னும் இல்லை அத்தான்… கொஞ்சம் தலைவலி‌… அதான் லீவு போட்டுட்டு வந்துட்டேன்." என…

" ஏய் பவி… நீ அழுதுட்டே தானே இப்ப வந்த? என்ன விஷயம் என்று கேட்டதற்கு அப்புறம் சொல்றேன் என்று சொன்ன தானே? இப்பவே சொல்லு? என்ன பிரச்சனை ? அவ்வளவு லேசுல நீ அழறவக் கிடையாது? யாரும் எதாவது வம்பு பண்ணாங்களா? உங்க அத்தான் ஒரு சிபிஐ ஆஃபிஸர், நம்ம ஃப்ரெண்டு ஒரு ஏ‌.சி.பி. அப்புறம் உனக்கு என்ன தயக்கம். எதுவானாலும் சொல்லு…" என விக்கி கூற…

" எல்லாம் அந்த ஏ.சி.பி… அதான் அந்த சந்து குரங்கு தான்…" என பவி கத்த…

அதைக் கேட்டவுடன் மதியமுதன் அடக்கமாட்டாமல் நகைக்கத் தொடங்கினான்.

விக்கியோ, ' லூசுங்க… வழக்கம் போல சண்டை போட்டிருக்குதுங்க‌.' என மனதிற்குள் நினைத்தவள், அதற்கு பிறகு எதுவும் கேட்காமல் அமைதியாக இருக்க…

அதற்கு மாறாக பவி கொந்தளித்தாள். நேற்று நடந்ததைக் கூறினாள்.

' வழக்கம் போல மணியைப் பாராது, சின்ஸியராக வேலைப் பார்த்து முடித்தவள், கைகளை சொடுக்கு எடுத்து விட்டு, தன் செல்ஃபோனை எடுத்துப் பார்த்தவள், அதிர்ச்சியானாள்.

வீட்டிலிருந்து நான்கு, ஐந்து மிஸ்டுகால் வந்திருந்தது. மணியோ ஏழைத் தாண்டியிருந்தது. போன் சைலன்ட்ல இருந்ததால் வீட்டில் இருந்து வந்த அழைப்பை கவனிக்கவில்லை. ' ஓ… காட்… அம்மா வேறே திட்டப் போறாங்க. லேட்டான கால் பண்ணி சொல்லனும் என்று சொல்லியிருக்காங்க.

இந்த ஆர்ட்டிக்களை எழுதி முடிக்கிற ஆர்வத்துல, வீட்டுக்கு கால் பண்றதை மறந்துட்டேனே.' என தனக்குள் சொல்லிக் கொண்டவள், பரிமளாவிற்கு அழைத்து, " இப்ப தான் கிளம்புறேன் அரை மணி நேரத்தில் வந்து விடுவேன்." என்றுக் கூறி விட்டு, பதிலுக்கு காத்திராமல் வைத்து விட்டாள். இல்லை என்றால் ஒரு மண்டகப்படியே நடக்குமே…

'ச்சே… இப்படி டைமைப் பார்க்காமல் இருந்துட்டோமே… கிட்ட தட்ட எல்லோரும் கிளம்பிட்டாங்க போல. கூட வேலைப் பார்க்கிறதுகளாவது என்னன்னு கேட்டாங்களா? அதுவும் இல்லை.' என்று தனக்குள் புலம்பியவள், தண்ணீர் எடுத்து அருந்தி விட்டு, தனது கைப்பை மற்றும் வண்டி சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்‌‌.

சற்று தூரம் சென்றதும் அவளது ஸ்கூட்டி நின்று விட… மீண்டும் ஸ்டார்ட் பண்ணிப் பார்த்தவள், ஸ்டார்ட் ஆகாமல் இருக்கவும், சரி தான் யாருக்கு அழைக்கலாம் என யோசனையில் ஆழ்ந்தாள்.

அவளது யோசனையில் குறுக்கிடுவதைப் போல ஒரு போலீஸ் வாகனம் வந்து நின்றது. அதில் இருந்த சந்தீப்பை பார்த்தவள், ' இவன் எதற்கு இப்போ வந்தான்.' என்று மனதுக்குள் நினைத்தவள், அவனைக் கவனிக்காததைப் போலவே தனது வண்டியையே குனிந்து ஆராய்ச்சி செய்துக் கொண்டிருந்தாள்.

அதற்குள் கான்ஸ்டபிள் வந்து, "மேடம்… ஏதாவது பிரச்சனையா? ஹெல்ப் ஏதாவது வேணுமா சார் கேட்குறாங்க?" என…

நிமிர்ந்து அவனைப் பார்க்க… அவனோ என்ன நினைக்கிறான் என்பது கூடத் தெரியவில்லை. கூலிங் கிளாஸ் போட்டு அவனது கண்களை மறைத்து இருக்க... உதட்டை கடித்து யோசித்தாள், " இல்ல நானே பாத்துக்குறேன்‌.ஒன்னும் பிரச்சனை இல்லை என்று சொல்லுங்க." எனக் கூற…

அதை அப்படியே போய் சொல்லிய கான்ஸ்டபிளிடம், " ஓகே நீங்க ஏறுங்க… நான் போய் பார்க்கிறேன்." என்ற சந்தீப் கீழே இறங்கி வந்து, அவள் முன் நின்றவன், " ஏன் பவி இப்படி பண்ற? உனக்கு என்ன ப்ராப்ளம்?"

" அது வண்டி ஸ்டார்ட்டாகலை. அதான் பார்த்துகிட்டு இருக்கேன். நீங்க போங்க…" என பாவனா கூற…

" சரி வா பவி. நான் உன்னை ட்ராப் பண்ணுறேன்."

"இல்ல பரவால்ல… நான் பார்த்துக்குறேன். பக்கத்துல தான் ஆஃபீஸ் அங்கு போய் வண்டியை விட்டுவிட்டு, ஆட்டோ பிடிச்சு போறேன். நீ போ சந்து" என…

" ப்ச்… என் கூட வருவதில் என்ன பிரச்சனை? வா நானே உன்னை ட்ராப் பண்றேன்."

" இல்லை நீ போ சந்து. நான் பார்த்துக்கிறேன்." என பவி மீண்டும் மறுக்க…

" எல்லாரும் பார்க்கிறாங்க பவி. சீன் கிரியேட் பண்ணாத… இந்த சிச்சுவேஷன்ல தெரிஞ்சவங்க, தெரியாதவங்கா யாராக இருந்தாலும் நான் பார்த்துட்டு சும்மா போக மாட்டேன் புரிஞ்சதா? முதலில் வண்டில் வந்து ஏறு." என்று உறும‌…

அப்பொழுதும் அசையாமல் பவி நிற்க‌…

" என்ன நீயா வரியா? இல்லை… " என்றவன் அவளை ஆழ்ந்து பார்க்க…

" வண்டி" என அவளை அம்போனு கைவிட்ட ஸ்கூட்டியை காண்பிக்க…

" அது உன் ஆஃபிஸ் பக்கத்துல தானே இருக்கு என்று சொன்னே… வா அங்க போய் கொடுத்துட்டு போகலாம்." என்றவன் கேஷுவலாக அந்த வண்டியை தள்ளிக் கொண்டே வந்தவன், தனது டிரைவரிடம் அந்த பத்திரிக்கை ஆபிஸிற்கு வரச் சொல்லி விட்டான்.

வாட்ச்மேனிடம் விவரம் சொல்லி விட்டு, ஆஃபிஸில் வண்டியை நிறுத்தியவன், காலையில் மெக்கானிக் வருவார் என்ற தகவலையும் சொல்லி விட்டு ஒரு வழியாக இருவரும் அந்த போலிஸ் வாகனத்தில் ஏறினர்.

வண்டியில் ஏறியவள் வழியில் ஒன்றும் கூறவில்லை. இரண்டு கான்ஸ்டபிள்கள் கூடவே இருக்க, அமைதியாக வந்தாள். வீடு இருக்கும் வழியில் செல்லாமல், வேறு வழியில் செல்லவே அதிர்ந்து பார்த்தாள்.

அவனோ திரும்பி பார்க்காமல், ஜன்னல் வழியே வெளியே கவனித்துக் கொண்டு வந்தான். அவன் திரும்பப் போவதில்லை என்பதை உணர்ந்தவள், முன்னால் அமர்ந்து இருந்த இருவரையும் கவராத வண்ணம் மெதுவாக, " சந்து…" என அழைத்தாள்.

அவளது அழைப்பை, அவன் அலட்சியப்படுத்த… கோபம் கட்டுக்கடங்காமல் பெருக, " சார்…" என சத்தமாக அழைத்தாள்.

சந்தீப் என்ன என்பது போல் திரும்பி பார்க்க...

அவனது அலட்சியத்தில் கோபம் பெருகியது, ஆனால் அவன் அணிந்திருந்த உடைக்கு மரியாதை கொடுத்து, கோபத்தை பல்லைக் கடித்து கட்டுப்படித்தியவள், " சார்… இது எங்க வீட்டுக்கு போற வழி இல்லை."

" ஷ்…" என்றவன், அவளை அமைதியாக இருக்கும் படி சைகை செய்ய … அந்த போலீஸ் வாகனமோ, போலீஸ் குவார்ட்ஸுக்குள் சென்றது‌.

திக்கென்று அதிர்ந்த பவி சந்தீப்பை பார்க்க … அவன் திரும்பவே இல்லை. அங்கே வண்டி அவனது வீட்டு வாசலில் நிற்க… கீழே இறங்கிய சந்தீப், கான்ஸ்டபிளிடம், " நீங்க கிளம்புங்க..‌" என…

அவ்விருவரும் சல்யூட் அடித்து விட்டு கிளம்பினார்.

" உள்ளே வா பவி… " என்றவன் தன்னிடமிருந்த சாவியைக் கொண்டு கதவைத் திறந்து, உள்ளே நுழைந்தான்.

பவியோ, அசையாமல் அப்படியே நின்றவள், " எதுக்கு சந்து என்னை இங்க கூட்டிட்டு வந்திருக்க? நான் வீட்டுக்கு போகணும்… டைம் ஆயிடுச்சு… " என…

"நானும் அங்க தான் வரணும் பவி. போலீஸ் வண்டியை எல்லா இடத்துக்கும் எடுத்துட்டு போக முடியாது. அதான் இங்க வந்தேன். நீ உள்ள வந்து ஃபைவ் மினிட்ஸ் உட்காரு. நான் ஃப்ரெஷ்ஷப்பாகி விட்டு வந்துடுறேன்." என சந்தீப் கூற…

" நீ போய் ஃப்ரெஷ்ஷாகிட்டு வா… நான் இங்கேயே வெயிட் பண்றேன்." என்ற பவி அந்த காரிடாரிலே நிற்க…

" ப்ச் இப்ப என்ன ? ஆரத்தி எடுத்துட்டு வந்து உன்னை வரவேற்றா தான் உள்ள வருவியா? எல்லாருக்கும் வெளியே நின்று காட்சிப்பொருளா நின்னுட்டு இருப்பியா? இங்கே வரும் போதே, அத்தைக்கு நான் மெசேஜ் போட்டுட்டேன். அதனால அவங்களும் பயப்பட மாட்டாங்க. நீங்களும் என்ன நம்பி வரலாம். வலதுக்காலை எடுத்து வச்சு உள்ள வாங்க மேடம்." என கேலி செய்ய…

அவனை முறைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தாள் பாவனா.

உள்ளே சென்றவன் தனது அறைக்குள் சென்று மறைய‌… பாவனாவோ பயங்கர டென்ஷனோடு இருந்தாள். ' நம்மோடு வந்த கான்ஸ்டபிள் என்ன நினைத்திருப்பார் ! எல்லாம் இந்த சந்து குரங்கால வந்தது ' என்று மனதிற்குள் சந்தீப்பை திட்டிக் கொண்டிருந்தாள்.

"இந்தா பவி‌… இதைக் குடிச்சிக்கிட்டே என்னை திட்டு‌… " என காஃபி கோப்பையை நீட்ட…

" ஹாங்…"என்றவள் திகைத்து விழிக்க…

"அடிப்பாவி… அப்போ உன்மையா என்னை தான் திட்டினியா… சும்மா போட்டு வாங்குவோம் என்று பார்த்தா, என்னை தான் மனசுக்குள்ள தாளிச்சிட்டு இருக்கீயா. நான் என்ன செய்தேன். என்னோட வீட்டுக்கு முதல் முதலாக வந்துருக்கியே என்று என் கையால் காஃபி கொண்டு வந்தேன். அது தப்பா… நான் ஒரு அப்பாவி…" என்றவன், "சரி சீக்கிரம் குடி பவி. காஃபி ஆறிடப் போகுது." என…

காஃபியை அருந்திக் கொண்டே அவளை ஆழ்ந்துப் பார்க்க… அவளோ, அந்த பார்வையை அலட்சியம் செய்து விட்டு, சுற்றிலும் வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள்.

சந்தீப் இன்றைக்கு விடுவதாக இல்லை. அதனால் அவனே பேச்சை ஆரம்பித்தான். " ஏன் பவி? என்னோட வருவதற்கு இவ்வளவு ஆர்க்யூமெண்ட்ஸ். என் மேல் கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லையா? நான் உன் நண்பன் தானே? ஏன் என்னை இப்படி அவாய்ட் செய்யுற? " என்றவன், அவளது பதிலுக்காக அவள் மேல் பார்வையை பதிக்க…

ஒரு நிமிடம் தயங்கியவள் பிறகு தலையை சிலுப்பிக் கொண்டு அவனை நிமிர்ந்து நேராக பார்த்தவள், " நீ என்னுடைய நண்பனாக மட்டுமிருந்தால் நான் ஏன் உன்னை இப்படி அவாய்ட் செய்யப் போறேன். உன்னோட பார்வையிலே சேஞ்ச் தெரியுது. நீ என்னோட சந்து கிடையாது. அதான் ஒதுங்கி போறேன். புரிஞ்சுக்கோ!" என்றவள் கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டாள்.

" வெல்…அப்போ நான் சொல்றதுக்கு ஒன்னும் இல்லை. உனக்கே நல்லா தெரியுது இல்ல... இருந்தாலும் இன்னைக்கு இவ்வளவு பேசியாச்சு… ஓகே … என்னோட மனசுல உள்ளதையும் நானே என் வாயாலையும் சொல்லிடுறேன். நான் உன்னை விரும்புகிறேன் ." என ஒருவழியாக சிறு வயதிலிருந்தே அவள் மேல் வைத்திருந்த காதலை இன்று சொல்லி முடித்து இருந்தான் சந்தீப்.

" ப்ளீஸ்! என் கிட்ட இப்படி எல்லாம் சொல்லாத சந்து. கேட்கவே கஷ்டமாக இருக்கு. ஏற்கனவே நான் விதுனை லவ் பண்றது, உனக்கு தெரியும் தானே… ப்ளீஸ் என்னை ஹர்ட் பண்ணாதே…" என்றவள் தேம்பித் தேம்பி அழ...

அவளை இரக்கத்துடன் பார்த்த சந்தீப், "அழுறதை நிறுத்து… நீ அழுதா எனக்கு கஷ்டமா இருக்கு பவி. எனக்கு விவரம் தெரிந்த வயதில் இருந்து உன்னை விரும்ப ஆரம்பித்து விட்டேன். படிக்கிற வயசுல உன்னை தொந்தரவு பண்ண கூடாதுன்னு தான் ஒதுங்கியே இருந்தேன். நீ காலேஜ் முடித்து விட்டு, இங்கே தானே வேலைக்கு சேருவ… அப்போ சொல்லலாம் என்று நான் ஆர்வமாக காத்திருந்தேன்.

விதுன், என் மனதில் உள்ளதை அறிந்துக் கொண்டானோ? என்னவோ? நான் அவனிடம் சொல்வதற்கு முன்பு, முந்திக் கொண்டு நீங்கள் இருவரும் விரும்புவதை தெரிவித்து விட்டான். அதற்கு பிறகு தான் நான் ஒதுங்கி நின்றேன்." என்றவன் தொண்டையை செருமிக்கொண்டு மீண்டும் ஆரம்பித்தான்.

"பட் இப்போ நான், ஒதுங்கி போறதுக்கு எந்த அவசியமும் இல்லை. உன்னை எனக்கு எப்பவுமே பிடிக்கும். உன்னை உனக்காகத் தான் விட்டுக் கொடுத்தேன். இப்பவும் நீ விதுன்ன நினைச்சுட்டே அழுதுட்டு இருக்கிறத பார்க்கற சக்தி எனக்கு இல்லை. என்னைக்கா இருந்தாலும் நீ கல்யாணம் செய்து தான் ஆகணும். அது நானாக இருந்தால் என்ன ? யோசிச்சு பாரு பவி… இப்படியே உன்னால என்னைக்கும் இருக்க முடியாது. உனக்கான வாழ்க்கையை வாழ்ந்து தான் ஆகணும். வீட்ல போய் நல்லா யோசி. இப்ப வா போகலாம். முதல்ல எழுந்துரு… அந்த ரூம்ல போய் பேஷ்வாஷ் பண்ணிட்டு வா‌… இப்படியே வெளியே போனா என்ன தான் எல்லோரும் தப்பா நினைப்பாங்க..." என்றான் சந்தீப் .

ஒன்றும் கூறாமல் முகம் கழுவி விட்டு வந்தவள், வீட்டிற்கு வந்தும் யாரிடமும் பேசாமல் பசியில்லை என்று கூறி விட்டு படுத்து விட்டாள்.

காலையில் எழுந்து வேலைக்கு சென்றவளால், வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை.

'யாரிடமாவது தனது மனதில் உள்ளதை சொல்லுவோம்.' என்று நினைத்தவள் தலைவலி என்றுக் கூறி அரைநாள் விடுப்பு எடுத்துக் கொண்டு வந்தாள்.'

நடந்தவற்றை எல்லாம் விக்கியிடமும், மதியிடமும் கூறியவளின் கண்களில் இருந்து மீண்டும் கண்ணீர் வடிந்தது.

" எதுக்கு அழற பவி‌… சந்து சொல்றபடி இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கப் போற… நம்ப எல்லோரையும், விட்டுட்டு போனவனை நினைச்சுட்டே இருக்க போறியா? நீ இப்படி இருந்தா எங்க அண்ணனுக்கு முதல்ல சந்தோஷமா இருக்குமா? அண்ணாவோட ஆத்மா நிம்மதியா இருக்குமா? இல்லை, ஆவியா சுத்திக் கிட்டே இருக்கனும்னு நினைக்கிறீயா. நீ நல்லபடியா ஒரு வாழ்க்கைய அமைச்சிக்கிட்டா தான் எங்க அண்ணாவோட ஆத்மா சாந்தி அடையும்.

அவருடைய குணம் , என்னை விட உனக்கு நல்லா தெரியும். ஒரு சின்ன விஷயத்தில் கூட அவரால யாருடைய மனசும் கஷ்டப்படக் கூடாது என்று நினைக்கிறவர். அப்படிப்பட்டவரு, தான் காதலிச்ச பொண்ணு இப்படி கண்ணீர் விட்டு விட்டு இருக்கும் போது எப்படி இருப்பாரு நீயே யோசிச்சுக்கோ… " என்ற விக்கி வேறுபுறம் திரும்பி அழுதுக் கொண்டிருந்தாள்.

" இங்கே பாரு பாவ்பாஜி… நீ என்னைக்கு கல்யாணம் பண்ணிக்கிறீயோ பண்ணிக்கோ… நீ எவ்ளோ நாள் வேண்டுமானாலும் டைம் எடுத்துக்கோ… பட் ஒன்திங்க்… அப்ப தான் நானும் பண்ணிப்பேன். " என்று மதியமுதன் கூற…

" என் மனசு என்ன பாடுபடும் என்று யாருமே நினைக்க மாட்டேன்றீங்களே." என பவி கேவிக் கேவி அழ…

"முதலில் எதற்கெடுத்தாலும் அழுவதை நிறுத்து. யாரும் உன்னை கட்டாயப்படுத்தலை. உன்னை இப்படியே அத்தை மாமா விடமாட்டாங்க... என்னைக்கா இருந்தாலும், உனக்கு ஒருத்தவங்களப் பார்த்து கல்யாணம் பண்ணி வப்பாங்க … அதுக்கு உன்னை நல்லா புரிஞ்சிக்கிட்ட, உன்னோட ஃப்ரெண்ட் சந்தீப்பை கல்யாணம் பண்ணிக்கிட்டா, உன் லைஃப் நல்லா இருக்கும் டா… யாரும் உன்னை கஷ்டப்படுத்தனும் என்று நினைக்கலை. உனக்கு எவ்வளவு டைம் வேணும்னாலும் எடுத்துக்கோ…

இப்போதைக்கு சந்தீப்போட எப்பவும் போல பேசி பழகு. நமக்கு இந்த கேஸ் ஃபர்ஸ்ட் முடியணும். அதுக்கு அப்புறம் பார்த்துக்கலாம் . ஆனா என்னைக்கு இருந்தாலும் ரெண்டு பேருக்கும் ஒன்னா தான் கல்யாணம் நடக்கும். அது எவ்வளவு நாள் ஆனாலும் சரி, வருஷங்களானாலும் சரி, நானும் வெயிட் பண்ணுவேன். விக்கியும் எனக்காக வெயிட் பண்ணுவா?" என மதிக் கூறி முடிக்க…

' தனக்கு ஆதரவாக யாரும் இல்லையே' என பாவனா கலங்கி நின்றாள். அவளுக்காக தான் எல்லோரும் பார்க்கிறார்கள் என்பதை அப்பொழுது அவள் உணரவில்லை.




 
Top