• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
அத்தியாயம் 24

அந்த ஹாஸ்பிடலின் கேஷ் கவுண்டரில் சற்று கூட்டமாக இருக்க…

" ப்ளீஸ் சார்… கொஞ்சம் வெயிட் பண்ணுங்க." என கேஷியர் கூற…

ஓகே என்ற மதியமுதன், சற்று தள்ளி இருந்த நாற்காலியில் அமர்ந்தவன், சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் செல்போனை எடுத்து அதில் கவனம் செலுத்தினான்.

விழித்தெழு வேல்விழியாளே.

வணக்கம் தோழிகளே… நான் உங்கள் தோழி மகிழ்விழி… முதல்ல உங்க எல்லோர்கிட்டேயும் மன்னிப்பு கேட்டுக்கிறேன்.தாமதமாக வந்ததற்காக… காரணம் கடைசியா சொல்றேன். நான் இன்னைக்கு எதைப் பற்றி சொல்ல வந்திருக்கிறேனோ, அதற்கும் நான் தாமதமாக வந்ததற்கும் சம்பந்தம் இருக்கிறது.

போன நியூஸ் பீட்ல நம்மளோட சின்னச் சின்ன ஆசையை நிறைவேற்றுவது பற்றி சொன்னேன். அது நமக்கு கொடுக்கும் ஃபீல் இருக்கே அது வேற லெவல். இப்போ அதை விட ஒரு பெரிய ஆசை. நம்முடைய சொந்த ஊருக்கு பயணம் செய்கிறது பற்றிப் பார்க்கலாம்.

பெண்கள் படித்து முடித்து விட்டு, வேலைக்காகவோ, இல்லை திருமணமாகி அதன் காரணத்தாலோ வேறு ஊருக்கு சென்று வசிக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கலாம். உலகின் எந்த மூலைக்குச் சென்று இருந்தாலும், வருடத்திற்கு ஒரு முறையாவது தாங்கள் பிறந்து வளர்ந்த ஊரை பார்த்தோம் என்றால் அப்படி ஒரு சந்தோஷம் உண்டாகும். எவ்வளவு பெரிய கஷ்டங்கள் இருந்தாலும் அது மறைந்து விடும் . நம் சொந்த ஊர் தான் நம்முடைய வேர். அங்கு போனால் நம் மனது சிறகடிக்கும்… வருடம் முழுவதும் வேலை செய்து ஓடிக்கொண்டே இருக்கும் நாம் ஒரு முறையாவது அங்கு சென்று கொஞ்சம் எனர்ஜியை ஏற்றுக் கொண்டு, நம்முடைய லட்சியப் பாதையில் முன்னேறேலாமே வேல் விழியாளே…

இப்படிக்கு எனர்ஜியை ஏற்றிக்கொண்டு வந்த உங்களில் ஒருத்தி. "

அதைப் படித்தவனின் புருவங்கள் நெறித்தன‌. அவன் ஏதோ யோசனையில் இருப்பதை அவன் முகமே கூறியது‌.

இந்த நியூஸ் ஃபீடை எழுதிய மகிழ்விழியை நினைக்கும் போதெல்லாம், விகாஷினியின் முகமே கண்ணுக்குள் மின்னி மறைகிறது.

'அதுவும் காலேஜில் பாவானாவும், விகாஷினியும் செய்த அலப்பறைகளையெல்லாம் சந்தீப்பிடம் இருந்து ஒரு வழியாக கேட்டு தெரிந்துக் கொண்டிருந்தான். சந்தீப்பும் கேட்ட உடனேவேவா சொன்னான். பாதி சொல்லிக் கொண்டிருக்கும் போதே வேலை வந்து விட்டது என்று போய் விட்டான். மீதியை இன்னொரு நாள் அல்லவா கூறினான்.
முழுவதும் தெரிந்த பின்பு அவனுக்கு ரொம்ப சந்தேகம் வருகிறது. பாவனா வேறு இன்னமும் பிடி கொடுக்காமல் இருப்பது வேறு சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்துகிறது.

நைன்டி பர்சன்ட், விகாஷினியும், மகிழ்விழியும் ஒருவர் என்று தான் தோன்றுகிறது. பார்த்துக்கலாம்.' என்று யோசித்துக் கொண்டிருக்க அவனது யோசனையை தடை செய்வதுப் போல்
"சார்… சார்… " என்ற கேஷியரின் குரல் கேட்டது.

சுய உணர்வுக்கு வந்த மதியமுதன், இப்படி சுற்றுப்புறத்தில் கவனம் இல்லாமல், யோசனையில் மூழ்கியிருந்ததை எண்ணி தனக்குள் நொந்தவன், வெளியே அதைக் காட்டிக் கொள்ளாமல், வழக்கம் போல கம்பீரமாக நடந்து சென்று, பணம் கட்டி விட்டு பாவனா இருந்த அறைக்குள் நுழைந்தான்.

ராஜனிடம் சென்று, " மாமா பில் கட்டியாச்சு. நாம கிளம்ப வேண்டியது தான்." என…

"சரிப்பா " என்றவர், பரிமளாவிடம் திரும்பி, " எல்லாம் எடுத்து வச்சிட்டீயா பரிமளா ? பாப்பாவை எழுப்பு." என ராஜன் கூற…

" ரெடியாத் தான் இருக்கிறாள்." என்றவர், கட்டிலில் படுத்திருந்த பாவனாவிடம் சென்று, " அம்மாடி… எழுந்திரிடா…" என
கண்களை மூடியிருந்தவளின் தலையை வருடி எழுப்ப…

தாயின் வருடலில் மெல்ல கண் விழித்தாள் பாவனா. ஒரு நாளிலே வாடிப் போய் விட்டாள்.

நேற்று மாலை தான் அலுவலகத்திலிருந்து மயக்கம் போட்டு விட்டதாக போன் வந்திருந்தது. உடனே ஹாஸ்பிடலில் சேர்த்து இருந்தனர்.

மல்லிகாவும் உடனடியாக மதியமுதனுக்கு தகவல் தெரிவிக்க… இரவு கிளம்புவதாக இருந்தவர்கள் உடனே கிளம்பி, அதிகாலையில் நேராக ஹாஸ்பிட்டலுக்கே வந்து விட்டார்கள்.

மற்றவர்களையெல்லாம் வீட்டிற்கு அனுப்பி விட்டு, மதியமுதன் மட்டும், தனது அத்தை, மாமாவுடன் துணைக்கு இருந்துக் கொண்டான்.

அனிமீக்காக இருக்கிறாள், என்று ஒரு நாள் அப்சர்வேஷனில் வைத்திருந்து அனுப்புவதாக டாக்டர் கூறியிருந்தார்.

இதோ இன்று டிஸ்சார்ஜ்… வீட்டிற்கு அழைத்து போக வேண்டும். பாவனாவிற்கு ட்ரீப்ஸ் ஏறிக் கொண்டிருந்ததால், பெரும்பாலும் உறங்கிக் கொண்டிருந்தாள்.

உண்மையாகவே உறங்கினாளா, இல்லை உறங்குவதாக பாவனை செய்தாளா அவளுக்கே வெளிச்சம்.

ஊரிலிருந்து வந்தவர்கள் கூறிய தகவலை கேட்டதும், அதிர்ந்து அமைதியானவள் தான் அதற்கு பிறகு யாரிடமும் பேசவில்லை.

தனக்குள்ளே ஓய்ந்துப் போனாள். அவளுக்கு சற்று தனிமை தேவையாக இருந்தது. ஆனால் ஹாஸ்பிடலில் அது கிடைக்கவில்லை. வீட்டிலிருந்து யாராவது வந்து வந்துப் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். சந்தீப் கூட இரண்டு முறை வந்து விட்டான்.

இல்லையென்றால் அந்த டெஸ்ட் எடுக்க வேண்டும், இந்த டெஸ்ட் எடுக்க வேண்டும் , ஊசி போட வேண்டும் என்று நர்ஸ், டாக்டர் யாராவது வந்து கொண்டே இருக்க…

யோசிக்க முயன்ற பாவனாவிற்க்கு தலைவலி வந்தது தான் மிச்சம். வீட்டில் போய் பார்த்துக் கொள்ளலாம். முதலில் உடம்பு சீக்கிரம் சரியானால் தான் யோசிக்கக் கூட முடியும் என்று அமைதி காத்தாள் பாவனா‌‌.

**************************

வீட்டிற்கு வந்த பாவனாவை, வெளியே நிற்க வைத்து, திருஷ்டி கழித்து விட்டே உள்ள நுழைய விட்டார் மல்லிகா.

" எதைப் பற்றியும் கவலைப்படாதே பாவ்பாஜி. அத்தான் இருக்கிறேன்." என்று ஆறுதல் அளித்து விட்டுச் சென்றான் மதியமுதன்‌‌.

அவள் எதிர்பார்த்துக் காத்திருந்த தனிமை, நீண்ட இருபத்தி நான்கு மணி நேரத்திற்கு பிறகு தான் கிடைத்தது.

வந்தவுடன் உணவருந்தி இருந்தவள், தான் தூங்க போவதாகவும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறி விட்டு வந்து விட்டாள். கண்களை மூடியவளின் மனதில் பழைய நினைவுகள் வந்து அலை மோதியது.

மூன்று வருடத்திற்கு முன்பு:

' காலேஜ் முடிந்து, ஹாஸ்டலுக்கு செல்லும் போது, பாவனா சலசலவென பேசிக் கொண்டே வர… விகாஷினியோ, அதை எதையும் காதில் வாங்காமல் அமைதியாகவே வந்துக் கொணாடிருந்தாள்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த பாவனா," அடியே… விக்கி…" எனக் கத்த…

" ஏன் டி இப்படி கத்துற. உன் பக்கத்துல தானே வரேன். மெதுவா பேசுடி.‌"

"என்னது நான் கத்துறேனா. எவ்வளவு நேரமா கூப்பிட்டு இருந்தேன். நீ ஒன்னும் சொல்லாமல் அமைதியா வந்த… அதான் கொஞ்சம் என் வாய்ஸை இன்கீரீஸ் பண்ணேன். அது உனக்கு கத்துறதா? சரி அதை விடு… இப்போ ஏன் இவ்வளவு மூட் அவுட்டா வர்ற? நான் நாளைக்கு ட்ரீட் கேட்டதற்காகவா? என்றவள் விக்கியைப் பார்க்க…

" ப்ச் அதெல்லாம் ஒன்னும் இல்லை டி. நாம எப்படி நாளைக்கு வெளியே போறது. யூ நோ. நான் எங்க அண்ணாக் கிட்ட சமத்து பிள்ளையா இருக்கேன் என்று வாக்கு குடுத்திருக்கேன்‌. அதான் யோசிக்கிறேன் பவி."

" இந்த நடிப்பெல்லாம் என் கிட்ட வேண்டாம் விக்கி செல்லம். நீ யாருனு எனக்கு நல்லா தெரியும். நான் யாருனு உனக்கு நல்லா தெரியும். நாம இரண்டு பேரும் யாருன்னு இந்த ஹோல் காலேஜ் அண்ட் ஹாஸ்டல்ல உள்ள எல்லோருக்கும் தெரியும். இந்த இரண்டு மாசத்தில கொஞ்சமாவது அடங்கியிருக்கியா?" என்றவள் விக்கியைப் பார்த்து முறைக்க முயன்று, பிறகு கலகலவென நகைக்க‌..‌.

அவளோடு சேர்ந்து விகாஷினியும் நகைத்தாள்.

நாளைக்கு விகாஷினிக்கு பிறந்தநாள்‌. அவளோ சுரத்தே இல்லாமல் இருந்தாள். அதான் பாவானா,அவளை வம்பிழுத்துக் கொண்டிருந்தாள்.

இது நாள் வரை, தன் அண்ணன், தந்தையோடு தான் பிறந்தநாள் கொண்டாடியிருக்கிறாள். இது தான் முதல் முறை. தனியாக பிறந்த நாளை கொண்டாடப் போகிறாள். அதான் கவலையோடு சுற்றிக் கொண்டிருக்கிறாள்.

" இப்படியே சிரிச்சுக்கிட்டே இரு விக்கி… சோக கீதம் வாசிக்காதே பார்க்க சகிக்கல…" என்று கூறி முடிக்க... விகாஷினியிடம் இருந்து ஒரு அடியை பரிசாக வாங்கிக் கொண்டாள்.

" சரி விடுடி. அடிக்காதே மீ பாவம். நாளைக்கு உன் பர்த்டேவே வெளியே போய் செலப்பிரேட் பண்ணுறோம். நீ எதைப் பற்றியும் யோசிக்காத. நான் வார்டனிடமும், பிரின்சிபலிடமும் பர்மிஷன் வாங்கி விடுகிறேன். சரியா... " என்றவள் அதற்குப் பிறகு அவளை யோசிக்க விடாமல் அது, இது என உறங்கும் வரை ஏதாவது பேசிக் கொண்டே இருந்தாள்.

இரவு பன்னிரண்டு மணி இருக்கும் போது விக்கியை வாழ்த்துவோம் என்று பாவனா நினைத்திருக்க…

அவள் வாழ்த்து கூறுவதற்கு முன்பு,விகாஷினியின் ஃபோன் அடித்தது. அவ்வளவு நேரம் தூங்காமல் புரண்டு, புரண்டு படுத்துக் கொண்டிருந்தவள், ' வீட்டில் இருந்தால் எப்படியெல்லாம் கொண்டாடுவோம்.' என மனதிற்குள் நினைத்திருக்க…

அவனது அண்ணன் சரியாக ஃபோன் செய்திருந்தார். அவளுக்கு அவ்வளவு சந்தோசம். ஃபோனில் தன் அண்ணனிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தாள்.
" அண்ணா… தேங்க்யூ அண்ட் மிஸ் யூ ணா."

" மதிக் குட்டி… பர்த்டே அன்னைக்கு கவலைப்படக் கூடாது. சிரிச்சுக்கிட்டே இருக்கணும். அண்ணாவுடைய கிஃப்ட் உன்னோட ரூம் வாசல்ல இருக்கு. போய் எடுத்துக்கோ. காலையில அப்பா ஃபோன் பண்ணுவார். இப்போ நீ போய் தூங்கு." என்று விதுன் ஃபோனை வைத்து விட...

வேகமாக வெளியே சென்றவள், அங்கிருந்த கிப்ட் பாக்ஸ்ஸை எடுத்துக் கொண்டு உள்ளே வந்தாள்.

ஆவலாக பிரித்துப் பார்க்க, அதில் அவள் நீண்ட நாளாக ஆசைப்பட்ட லெஹங்கா… அதைப் பார்க்கவும், உற்சாகம் மேலிட, ஆர்ப்பாட்டமாக பாவனாவிடம் காண்பித்தாள்.

" பாத்தியா டி… எனக்கு புடிச்ச கலர்ல வாங்கியிருக்கிறார். அதுவும் இல்லாமல், கரெக்டா பன்னிரண்டு மணிக்கு விஷ் பண்ணியிருக்கிறார். நீயும் தான் இருக்கியே. பக்கத்திலேயே இருந்துட்டு ஒரு விஷ்ஷாவது பண்ணியா?" என கேட்க…

அவளை முறைத்துப் பார்த்த பாவனா, " அடியே பிறந்தநாள் அதுவுமா திட்டக்கூடாது தான் பார்க்கிறேன். நல்லா வாயில வந்துரும். எப்போ பன்னிரண்டு மணி ஆகும்னு தூங்காமல் காத்திருந்தா, அதுக்குள்ள உங்க அண்ணா ஃபோன் பண்ணிட்டார். நீயும் பேசுற... பேசுற… பேசிக்கிட்டே இருக்க. இங்க ஒருத்தி உட்கார்ந்துக்கிட்டு இருக்காளேனு என்னை ஒரு மனுஷியாவது மதிச்சிய்யா." என முறைக்க.

வேகமாக அவளைக் கட்டிப் பிடித்தவள், "சாரி பவி. "என கெஞ்ச.

அதற்கு பிறகு இருவரும், ஒரு வழியாக சமாதானம் ஆகி படுக்க சென்றனர். தனது அருகில் படுத்திருந்தவளிடம்,
திரும்பி , " பவி… இங்கே ஏற்கனவே நாம பண்ற எல்லா விஷயத்தையும் யாரோ அண்ணா கிட்ட தகவல் சொல்லிட்டு இருக்காங்கனு டவுட்டா இருக்கு. இப்போ பார்த்தா கிஃப்ட் வெளில இருக்கு. கண்டிப்பா யாரோ எங்க அண்ணா கிட்ட இன்ஃபர்மேஷன் கொடுத்துட்டு இருக்காங்க. அது யாருனு ஃபர்ஸ்ட் கண்டு பிடிக்கணும். அது யாரா இருக்கும் டி. உனக்கு ஏதாவது ஐடியா இருக்கா?" என வினவ‌?

" ஐ டோண்ட் நோ‌. என் கிட்ட கேட்டா, எனக்கு எப்படி தெரியும்டி." என பரிதாபமாக பவிக் கூற…

" அதுவும் சரி தான். உனக்கு மட்டும் எப்படி தெரியும். என்னைக்கா இருந்தாலும் உண்மை ஒரு நாள் வெளி வந்து தானே ஆகணும். அன்னைக்கு இருக்கு. அந்த எட்டப்பிக்கு." என்றவள் ஒரு வழியாக உறங்கினாள்.

'அப்பாடா. நல்ல வேளை தப்பிச்சிட்டோம்.' என்று எண்ணிய பாவனாவும் உறங்க முயன்றாள்.

மறுநாள் காலையில் விகாஷினி, குளித்து விட்டு வர, அவர்களது அறையின் மெத்தையில் அடுத்த பரிசு காத்திருந்தது. அழகிய கைக் கடிகாரம். வீற்றிருந்தது. இப்படியாக அவளது பதினெட்டாவது பிறந்த நாளுக்கு, இரவில் இருந்து, மாலை வரை, பதினேழு சர்ப்ரைஸ் கிஃப்ட், ஹாஸ்டலிலும், கல்லூரியிலும் யாராவது வந்து குடுத்துக் கொண்டே இருந்தார்கள். விகாஷினியை இன்று கையில் பிடிக்க முடியவில்லை. அவ்வளவு மகிழ்ச்சியாக சுத்திக் கொண்டிருந்தாள்.

மாலையில் இருவரும் வெளியே கிளம்ப. இதுவரைக்கும் வெளியே செல்வதில் விருப்பம் இல்லாமல் இருந்த விகாஷினி இப்பொழுது துள்ளலோடு, பாவனா சொன்ன இடத்தை விட்டு, வேற ஒரு ஹோட்டலை சொல்லி அங்க போகலாம், நல்லா இருக்கும் என்று கூற.

"ஐயோ!" என ஒரு நிமிடம் அதிர்ந்த பாவனா, " இன்னிக்கு எனக்கு தானே ட்ரீட் வைக்கிற? எனக்கு புடிச்ச ஹோட்டலுக்கு தான் போகணும்." என வாதாடி, அவள் விருப்பபட்ட ஹோட்டலுக்கே அழைத்துச் சென்றாள் பாவனா.

" பவி… இப்போலாம் உனக்கு பிடிவாதம் ஜாஸ்தியாயிடுச்சு." என்று திட்டிக் கொண்டே அவளுடன் சென்றவள், பவிக்கு பிடித்ததை ஆர்டர் செய்தாள்…

பாவனாவின் போன் அடிக்க… அதை எடுத்துக் கொண்டு, வெளியே செல்ல முயன்றவளை, " எங்கடி போற? இங்கேயே பேசு. நான் மட்டும் தனியா உட்கார்ந்து இருக்க என்னமோ மாதிரி இருக்கு. " என.

" டூ மினிட்ஸ் வந்திடுறேன் டி."

" ப்ளீஸ் பவி. இந்த லெஹங்காவை போட்டுட்டு, இப்படி தனியா இருக்கிறது என்னவோ போல இருக்குடி."

" ஓ…" என்றவள், திருதிருவென விழித்துக் கொண்டே ஃபோனை எடுத்து பேச… அந்தப்பக்கம் என்ன கூறினார்களோ,அதற்கு பதில் சொல்ல முடியாமல் ஒரு நிமிடம் தவிர்த்தவள், பிறகு தனது பதிலுக்காக காத்திருப்பதை உணர்ந்து, மராட்டியில் பேசினாள். " ம்… வந்துட்டோம்… இங்கே தான் இருக்கோம். பக்கத்துல தான் இருக்கா." என்றவள் ஃபோனை வைத்து விட்டு விகாஷினியிடம் திரும்பினாள்.

" என்னடி தோழா பட சர்ப்ரைஸா? எனக்கு தெரியாமல் சர்ப்ரைஸ் பார்ட்டியா? " என்று வினவியபடியே பக்கென சிரித்து விட்டாள் விகாஷினி…

பாவனாவோ திருதிருவென விழித்தப் படியே," எப்புடிடி கண்டுபிடிச்ச?" என வினவ.

" ஏன் டி… இங்கே வந்ததும் உனக்கு மேல் மாடி காலியாயிடுச்சா. உன்னோட சேர்ந்து தானே, நானும் மராத்தி கத்துக்கிட்டேன். எனக்கு தெரியக் கூடாதுன்னு, மராத்தியில் பேசுறியே…"

'ச்சே… இதை எப்படி மறந்தோம். 'என்று நினைத்தவள்‍‍, அசடு வழிய விகாஷினியைப் பார்த்து சிரித்தாள். அவளைக் காப்பாற்றுவதுப் போல விதுன், விகாஷினிக்கு வீடியோ காலில் அழைத்தான். அதே நேரத்தில், வெயிட்டர் ப்ளாக் ஃபாராஸ்ட் கேக்கை எடுத்துக் கொண்டு வந்து வைக்க, " மதி குட்டி… எப்படி என்னோட சர்ப்ரைஸ்!" என்று வினவ.

" சூப்பர் அண்ணா. நான் எதிர்பார்க்கவே இல்லை. உண்மையிலே செம்ம சர்ப்ரைஸ்." என்று பாவனாவைப் பார்த்துக் கொண்டே கூற… அருகில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த பாவானாவிற்கு புரை ஏறியது.

தன் அண்ணனிடம் பேசிக் கொண்டிருந்தவள், பவியின் தலையை தட்டி, " பார்த்து டி." என்றாள்.

அதற்கு பிறகு கேக் வெட்டி கொண்டாடி அந்த பிறந்தநாளை இனிதாக முடித்து விட்டு ஹாஸ்டலுக்கு வந்தனர்.

' நல்லவேளை விக்கி என்னிடம் வேறு எதையும் விசாரிக்கவில்லை. இல்லை என்றால் எல்லாவற்றையும் உளறியிருப்பேன். ' என நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டாள் பாவனா. ஆனால் அதற்கு அற்ப ஆயுள் என்பதை அறியவில்லை.

அறைக்குள் வரவும், வேறு உடை மாற்றிக் கொண்டு வந்து படுத்த விகாஷினி, திடீரென எழுந்து அமர்ந்து, " அடிப்பாவி பவி… நீ தான் அந்த எட்டப்பியா? என் அண்ணாக் கிட்ட எவ்வளவு நாளா ஃபோன்ல பேசிட்டு இருக்கிற. பர்த்டேவே சர்ப்பிரைஸா கொணாடாட மட்டும் தான் ஃபோன் பண்ணினாரா. இல்லை இதுக்கு முன்பே பேசிட்டு இருந்திங்களா? அப்போ நாம அவுட்டிங் போனதை நீ தான் சொல்லியிருக்க. அப்பப்ப டவர் கிடைக்கவில்லை என்று தனியாகச் சென்று ஃபோன் பேசியது என் அண்ணனிடம் தானே. இதெல்லாம் சரிடி. ஆனால் அன்னைக்கு பிரின்ஸிபல் ரூம்ல அண்ணனைப் பார்த்தவுடன் பயந்து என் கையை பிடிச்சப்பாரு அதைத் தான் என்னால் தாங்க முடியலைடி. ஐயையோ! என்னா நடிப்பு. துரோகி." என பல்லைக் கடித்துக் கொண்டு வார்த்தைகளை கொட்ட...

"ஏய் நிறுத்து விக்கி… விட்டா ஓவரா திட்டிட்டு இருக்க… எல்லாம் உனக்காகத் தான் செஞ்சேன். நீ படிச்சா பூனேலே தான் படிப்பேன் என்று பிடிவாதமாக இருந்த. உங்க அண்ணன், ரொம்ப யோசிச்சுட்டு, இங்க நடக்கிறது எல்லாம் அவர் கிட்ட சொன்னா தான் அங்கே படிக்க அனுப்புவேன் என்று சொன்னார். எனக்கு வேற வழி தெரியலை. அதுவுமில்லாமல் உங்க அண்ணன், மை ட்ரீம்பாய் முதன் முதலா என் கிட்ட ஒரு ஹெல்ஃப் கேட்டாங்க. என்னால மறுக்க முடியலை."

" என்னது! ட்ரீம் பாயா. இது வேறயா?" என அதிர்ந்து நெஞ்சில் கை வைத்துக் கொண்டாள் விகாஷினி.


 
Top