• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வேல்விழியாள் - 28

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
அத்தியாயம் - 28

" என்னடா நெனச்சிட்டு இருக்க. இப்படி வந்த கையோடு அந்த புள்ளையயையும் கூட்டிட்டு போகணும்னு ஒத்த கால்ல நின்னுட்டு இருக்க…" என சகுந்தலா தன் மகனிடம் கோபத்தைக் காட்ட.

" மா… புரிஞ்சுக்கோங்க. உங்க மருமகளுக்கு, அர்ஜென்ட் ஒர்க் இருக்குன்னு ஆஃபீஸ்ல இருந்து கால் வந்ததுருக்கு. நான் இரண்டு நாள் தங்குற மாதிரி தான் வந்தேன். ஆனால் பவிக்கு உடனே போயாகணும். அவளை தனியா அனுப்ப முடியாது. இல்லை ஒன்னு பண்ணுங்க, நீங்க வேணா சென்னைக்கு வாங்கம்மா. "

" இல்லப்பா… அப்பா வரமாட்டார். அவரை விட்டுட்டு என்னால வர முடியாது. நீங்க மதியம் சாப்பிட்டாவது போகலாம்ல." என சந்தீப்பை பாவமாக பார்த்தாள் சகுந்தலா.

" அம்மா… அம்மா… மதியம் சாப்பிட்டு போனா, ராத்திரி தான் போய் சேர முடியும். நாங்க உடனே கிளம்பனாத் தான் சரியா இருக்கும். வழியில் பாத்துக்குறேன் மா‌. ப்ளீஸ்…" என கெஞ்ச.

" சரி பார்த்துப் பத்திரமா போயிட்டு வாங்க." என்றாள் சகுந்தலா.

அழுதது தெரியாமல் நன்கு முகம் கழுவிவிட்டு வந்த பாவனா சகுந்தலாவின் அருகில் சென்று அவள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க, அவள் செய்யப் போவதை அறிந்த சந்தீப்பும் வேகமாக ஓடிச்சென்று அவளோடு சேர்ந்து ஆசிர்வாதம் வாங்கினான்.

" இரண்டு பேரும் சீக்கிரமே கல்யாணம் பண்ணி, என்னைக்கும் சந்தோசமா இருக்கணும்." என்றவர், பூஜை அறைக்கு அழைத்துச் சென்று இருவருக்கும் விபூதி‍, குங்குமம் பூசி அனுப்பி வைத்தார்.

போகும் போது இருந்த மனநிலை, வரும் போது சுத்தமாக இல்லை.ஏற்காட்டிற்கு செல்லும் போது, அந்த கிஃப்ட்டில் என்ன இருக்கும் என்ற சிந்தனை மட்டுமே பவியிடம் இருந்தது. ஆனால் திரும்பி வரும் போது, விதுனின் ஆடியோவைக் கேட்டதும், இன்று அவனது பிறந்தநாள் என்ற உணர்வும் அவளது மனதை வருத்தியது.

விதுனுடைய பிறந்தநாளை எப்படியெல்லாம் கொண்டாடலாம் என்று ஏகப்பட்ட கற்பனைகளோடு இருந்தாள். எல்லாம் காணல் நீராகி போய் விட்டது.

'விகாஷினியும், சங்கர் அங்கிளும் பாவம். அவர்கள் கூட இருக்க முடியாமல் போய் விட்டதே.' என்று மனதோடு எண்ணி குழம்பிக் கொண்டிருந்தாள்.

இவள் யாரைப் பற்றி கவலைப்பட்டு கொண்டிருந்தாளோ, அவளோ, இவர்கள் அங்கு செல்லும் நேரத்தில் ஒரு பெரிய கலவரத்தையே உருவாக்கியிருந்தாள்

சந்தீப் வேகமாக காரை ஓட்டிக் கொண்டு போனான். வழியிலும் எங்கும் உணவிற்கு நிறுத்தவில்லை. இருவருக்குமே சாப்பிடும் எண்ணம் இல்லை. இருமுறை காபி வாங்கிக் குடித்தவர்கள், மாலை மயங்கி இரவு உதயமாகும் நேரத்தில் பாவனாவின் வீட்டிற்கு சென்றனர்.

அங்கோ பெரியவர்கள் எல்லோரும் கண்கள் கலங்கி அழுத வண்ணம் இருந்தனர்.

" என்ன அங்கிள்? என்ன ஆச்சு?
ஏன் எல்லோரும் இப்படி இருக்கீங்க? " என சங்கரைப் பார்த்து சந்தீப் வினவ.

அவரோ கலக்கத்துடன் சந்தீப்பை பார்த்து, " சந்தீப்… விகாஷினி இன்னும் ஸ்கூலில் இருந்து வரல. என்ன ஆச்சுன்னு தெரியலை? எப்பவும் அஞ்சு மணிக்குள்ள வந்துருவா. இப்போ ஒரு வாரமா, ஏதோ லைப்ரரில வேலை இருக்குன்னு ஆறு மணிக்கு வந்துட்டு இருந்தா. இன்னைக்கு இன்னும் வரவே இல்லை. ஃபோன் பண்ணாலும் எடுக்கலை. மாப்பிள்ளைக்கும் ஃபோன் பண்ணேன் அவரும் எடுக்கவே இல்ல. இப்ப தான் வந்தார். விகாஷினி வீட்டுக்கு வராததை சொன்னேன். அவரோ யார் யாருக்கோ ஃபோன் போட்டு பேசினார். அப்புறம் கவலைப்படாதீங்க அங்கிள்… விகாஷினியோட தான் வருவேன்
என்று சொல்லிட்டு போயிருக்கிறார். ஆனால் எனக்கு பயமாயிருக்கு பா."

" ஐயோ! அங்கிள்… பயப்படாதீங்க … மதி விக்கிக்கு செக்யூரிட்டி போட்டுருக்கிறார். சோ… அவங்க விக்கியை ஃபாலோ பண்ணிட்டு தான் போயிருப்பாங்க." என்றவன் பாவனாவிடம், சங்கரைப் பார்த்துக் கொள்ளுமாறு கூறி விட்டு, அவனும் கிளம்பினான்.

கடந்த ஒரு வாரமாக மதியமுதன் எதற்காக அலைந்து கொண்டிருக்கிறான் என்பது சந்தீப்புக்கு நன்றாக தெரியுமே.

விதுனின் ஸ்கூலில் போதை மருந்து விற்பனை செய்வதை தெரிந்ததும், முதலில் அதிர்ந்தாலும் அடுத்து என்ன செய்வது என்று மதியமுதனும், சந்தீப்பும் திட்டமிட்டு விட்டனர்.

மதியமுதன் அவனது ஹையர் அஃபிஷியல்ஸுடம் இதைப் பற்றி பேசினான்.
அதோட விகாஷினிக்கும், டைட் செக்யூரிட்டி அரேன்ஜ் செய்து விட்டார்கள். விகாஷினியிடமும் எங்க போனாலும் சொல்லிட்டு தான் போகணும் என்று சொல்லி இருந்தார்கள். ' அவள் ஏன் இப்படி சொல்லாமல் சென்றாள் என்று தெரியவில்லை.' அவளைப் பற்றி யோசித்துக் கொண்டே, காரை ஓட்டிக் கொண்டு சென்றான்.

ரூபக்கை கைது செய்வதற்கு ஆதாரம் கிடைத்தால்‍, உடனே செய்து விடலாம் என இவர்கள் இருவரும் அலைந்து கொண்டிருக்க… அதற்கான ஆதாரம் இப்பொழுது அவன் கையில் இருக்கிறது. ஏற்காட்டில் அந்த மெமரி கார்டில் இருந்த வீடியோவில் சகல விவரங்களும் இருக்கிறது.

'ஆடியோவை கேட்டு அதிர்ச்சியடைந்த சந்தீப், அழுதுக் கொண்டிருந்த பாவனாவை சமாதானம் செய்து அமரச் செய்தான்.

பிறகு அதில் இருந்த வீடியோவை ஆன் செய்து பார்த்தான்.

அந்த வீடியோ விதுனின் பண்ணை வீட்டில் நடந்த பார்ட்டியை காண்பித்தது.

ஆரம்பத்தில் வழக்கமான எல்லா பார்ட்டியும் போலவே இருந்தது. அங்கே மியூசிக் ப்ளேயரில் சாங் ஓடிக் கொண்டிருக்க, அதற்கு ஏற்ற மாதிரி டான்ஸ் ஆடி கொண்டு என்ஜாய் பண்ணி கொண்டு இருந்தனர். ரூபக் புதுப்படமொன்று தயாரிப்பதை கொண்டாடுவதற்காக ஏற்பாடான பார்ட்டி.

அந்த வீடியோவில் விதுனின் முகம் தெரியவில்லை. ஆனால் அவனது குரல் கேட்டது.

அவனது பி.ஏ ரிதன்யா, ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் எடுத்து வந்து கொடுக்க…

எனக்கு கொஞ்சம் தலைவலிக்கிறது. எதுவும் வேண்டாம் என்ற விதுனின் குரல் தான் கேட்டது.

ஓகே சார் அப்போ உங்களுக்கு நான் டீ போட்டு கொண்டு வருகிறேன் என்று அவன் மறுக்க, மறுக்க கேட்காமல், எடுத்து வந்து கொடுத்தாள்.

தேங்க்ஸ் என்று விதுன் அதைக் குடிக்கவில்லை. ஒரு மரத்திற்கு பின்பு அந்த காபியை ஊற்றி விட்டு, அப்படியே ஒரு சேரில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டான்.

சற்று நேரம் கழித்து இன்னொருவருடன் வந்த ரிதன்யா அவனை கைத்தாங்கலாக அவனை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றாள்.

அங்கிருந்த ரூபக்கோ," எனி ப்ராப்ளம் ரிதன்யா … " என வினவ.

" நோ ப்ராப்ளம் சார்." ரிதன்யா கூறினாள்.

அந்த பண்ணை வீட்டின் மேனேஜர் கோபியிடம், " யாரும் இங்கே உள்ள வராம பாத்துக்கோ. அப்புறம் யாருக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை தானே. இன்னும் கொஞ்ச நேரத்திலே பொருள் வந்துரும்." என ரூபக் வினவ…

" இதுவரைக்கும் யாருக்கும் எந்த சந்தேகமும் வரலை. நான் பார்த்துக்கிறேன்." என்ற கோபி வீட்டிற்கு வெளியே சென்று நின்றுக் கொண்டான்.
பார்ட்டி தோட்டத்தில் களைகட்டிக் கொண்டிருந்தது.

சற்று நேரத்தில் இருவர், பின்புற கதவு வழியாக உள்ளே வந்தார்கள். அவர்கள் ஒரு பெட்டியை ரூபக்கிடம் திறந்து காட்டினார்கள். அதில் பாக்கெட் பாக்கெட்டாக போதைப்பொருள் இருந்தது.

அதைப் பார்த்து மகிழ்ந்த ரூபக் அவர்களுக்கு பணத்தை எடுத்து நீட்டியவன்," அடுத்த முறை இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா கொண்டு வாங்க. சரக்கு பத்தலை." என.

" பிரச்சனை ஆயிடப்போது சார்." என்றான் வந்தவர்களின் ஒருவன்.

" அதெல்லாம் ஒன்னும் வராது. எல்லாம் எங்க ஸ்கூல் ஸ்டுடென்ட்ஸுக்கு தான் கொடுக்கிறோம். பட் வீட்ல தான் யூஸ் பண்ணுவாங்க. அதனால ஸ்கூல்லுக்கு எந்த பிரச்சினையும் வந்ததில்லை. நீ எவ்ளோ வேணாலும் கொண்டு வா. அப்புறம் பணத்தைப் பத்தி கவலைப்பட வேண்டாம்."என்றான் ரூபக். இது எல்லாமே விதுனின் சட்டையில் மாட்டிருந்த பட்டன் கேமராவால் பதிவாகிக் கொண்டிருந்தது.

வழக்கம் போல டிரைவர் உதவியுடன் அவனை வீட்டில் கொண்டு வந்து விட்டனர்.

ரூமிற்கு வந்த விதுன் அதிர்ச்சியில் இருந்தான். இந்த ரூபக் இப்படி படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கிக் கொண்டிருக்கிறானே. இவனைப் போய் நண்பன், நல்லவன் என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருந்தோமே. யாரை நம்புவது ஒன்றும் புரியவில்லயே என்று தனக்குள் குழம்பியவன், அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கலானான்.

'முதலில் இந்த வீடியோ ஆதாரத்தைப் பத்திரமாக சேவ் செய்யணும். பவியின் பிறந்த நாளுக்கு ஊருக்கு வேற போகணும். சரி தான் அங்கு போய் யோசித்து கொள்ளலாம்.' என்று முடிவு எடுத்தவன் சந்தீப்பிற்கும் கால் செய்தான். ஆனால் அவன் ஊருக்கு வரவில்லை என்று கூறிவிட்டான் ஃபோனில் காரணத்தை சொல்ல முடியாததால் சந்தீப் ஏமாற்றத்துடன் ஃபோனை வைத்தான்.

சந்தீப்பிடம் தனக்கு ஒரு ஆபத்து என்று சொல்லியிருந்தால் கட்டாயம் வந்திருப்பான். ஆனால் தன் போன் ஒரு வேளை ட்ராக் செய்யப்பட்டால் என்ன செய்வது என்று யோசித்தவன் காரணத்தை கூறாமல் ஊருக்கு போவதாக மட்டுமே கூற, சந்தீப்போ வரவில்லை என்று சொல்லி விட்டான்.

அடுத்து என்ன செய்வது என்று யோசித்தவன், வேறு சிம் வாங்கி மதியமுதனையும், சந்தீப்பையும் காண்டாக்ட் செய்வோம் என்று எண்ணினான். ஆனால் விதியானது, அவன் எண்ணிய காரியத்தையும் விதி செயல்படுத்த விடாமல் தடுத்தது.

விதுன் இருவருக்கும், பல முறை முயற்ச்சிக்க, அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. தனது தங்கையிடம் கூட மதியமுதனை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று வருத்தப்பட்டுக் கூறியிருந்தான்.

ஏற்காட்டிற்கு சென்றவன், பாவனாவின் பிறந்த நாளிற்காக வாங்கியிருந்த செல்போனில் போட்டு வைத்திருந்த அந்த சிம்கார்ட், மெமரிகார்டு, பேட்டரி எல்லாவற்றையும் தனித்தனியாக எடுத்தவன் பேக் செய்து, அவனது கிஃப்டை பவிக்குக் கொடுத்து விட்டான். அவனது பிறந்தநாளில் தான் பார்க்க வேண்டும் என்றும் வாக்குறுதியும் வாங்கிக் கொண்டான்.' அதையெல்லாம் எண்ணிக் கொண்டே வந்த சந்தீப், சரி தான் செக்யூரிட்டிக்கு கால் செய்வோம் என்று செய்ய…

அவர்கள் சொன்ன தகவல் இன்னும் அவனுக்கு அதிர்ச்சியை தந்தது.
ஆம் விகாஷினியை ஃபாலோ செய்ய சொல்லிருந்த செக்யூரிட்டிக்கு தான் சந்தீப் கால் செய்தது.

அவர்களோ, விகாஷினி வெளியே சென்றதை கவனிக்கத் தவறி விட்டனர். இப்போது தான் மதியமுதன் அவர்களை திட்டி விட்டு சென்றிருந்தான்.

சந்தீப்பும் அவன் பங்கிற்கு திட்ட... "இல்ல சார்... திடீர்னு ஒரு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு. வயசான பாட்டி கீழ விழுந்துட்டாங்க. அவங்களுக்கு ஹெல்ப் பண்ண போனேன். மேடம் அப்ப தான் போயிருக்கணும். நான் மேடம் ஸ்கூல் இருக்காங்க என்று வெயிட் பண்ணிட்டு இருந்தேன் சார். மதி சார் ஃபோன் பண்ணதுக்கு அப்பறம் தான், உள்ளே போய் பார்த்தேன். மேடம் அங்கில்லை." எனக் கூற.

ஒன்றும் கூறாமல் ஃபோனை வைத்த சந்தீப் அடுத்து மதியமுதனுக்கு கால் செய்தான். மதியமுதனோ, ஃபோனை சைலன்டில் போட்டிருந்ததால், எடுக்கவில்லை. " ஷிட்." என்று தலையைத் தட்டிக் கொண்ட சந்தீப், அவர்களுடன் இந்த கேஸில் இன்வால்வ் ஆகி இருந்த மற்றொரு அதிகாரிக்கு ஃபோன் செய்ய…

அவரோ, அவர்கள் இருக்குமிடத்தைக் கூறினார். அது ரூபக்கின் தந்தையோட அரிசி குடோன்.

"மதிக்கிட்ட பேசணும்." என சந்தீப் கூற...

" சார் மட்டும் குடோன் உள்ளே போயிருக்கிறார். இன்னும் வரல
அவர் மெசேஜ் செய்யும் வரை, யாரையும் உள்ளே வர வேண்டாம் என்று கூறியிருக்கிறார். நாங்க வெளியில ரவுண்ட்டப் பண்ணியிருக்கிறோம்." என்றார் அந்த அதிகாரி.

" ஓகே‌… நான் உடனே அங்கே வரேன்." என்ற சந்தீப் வேகமாக வண்டியை செலுத்தினான்‌.

அங்கோ விதுனிற்கு நடந்த கொடூரத்தை கேட்டு விகாஷினி கொந்தளித்து, ரூபக்கை கொலைவெறியோடு தாக்க முற்பட்ட… மதி கஷ்டப்பட்டு அவளது வாயைப் பொத்தி அடக்கி வைத்திருந்தான்.



 
Top