• வைகையின் முதலாம் ஆண்டு கொண்டாட்டம் ஆரம்பம்..

  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வேல்விழியாள் - 29.1

Viswadevi

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
90
அத்தியாயம் 29

விகாஷினியை கட்டுப் படுத்தியவன், காலையில் நடந்ததை நினைத்துப் பார்த்தான்.

' வழக்கம் போல மதியமுதன் மாடியில் எக்சர்சைஸ் செய்துக் கொண்டே கீழே நடப்பதை கவனித்துக் கொண்டிருந்தான்.

தினம் தனது தந்தை மற்றும் மாமாவுடன் வாக்கிங் செல்லும் சங்கர் அங்கிளை இன்று காணவில்லை‌. அதைக் கவனித்தவன், தனதறையில் ரெப்ரெஷ் செய்துக் கொண்டு கீழே இறங்கிச் சென்றான்.

முகம் துடைத்தவன், துண்டை தனது தோளில் போட்டுக் கொண்டு தோட்டத்திற்குச் சென்றான்.

" எங்கப்பா சங்கர் அங்கிளை காணோம்." என்று தனது தந்தையிடம் வினவ…

" வீட்ல தான் இருக்கான். இன்னிக்கு வாக்கிங்கு வரல‌." என அவனது மாமா ராஜன் பதிலளித்தார்.

" ஏன் மாமா வரல… அங்கிளுக்கு உடம்பு ஏதும் சரியில்லையா."

" அதெல்லாம் ஒன்னும் இல்லை. இன்னைக்கு விதுனோட பிறந்தநாள். அதான் கொஞ்சம் டல்லா இருக்கான்."

" சரி மாமா… நான் போய் அங்கிளைப் பார்த்துட்டு வரேன்." என்றவன், தன் தந்தையிடம் கண்களாலேயே கூறி விட்டு, மாடிக்கு ஏறினான்.

ஹாலில் கண்களை மூடி அமர்ந்து கொண்டு இருந்த சங்கரின் எதிரில் அமர்ந்த மதி, அவரது கையை ஆறுதலாக பற்ற… திடுக்கிட்டு விழித்த சங்கர்," வாங்க மாப்பிள்ளை." என.

" அங்கிள் உடம்பு ஏதும் சரியில்லையா? ஏன் வாக்கிங் போகலை?"

" எனக்கு ஒன்னும் இல்ல பா. கொஞ்சம் டயர்டா இருந்துச்சு. அதான் வாக்கிங்கு வரலை." என்ற சங்கர் மீண்டும் அமைதியை தத்தெடுக்க…

" ஓ…" என்ற மதியமுதன், " நீங்களே இப்படி இருந்தா, அப்புறம் விகாஷினிக்கு யாரு ஆறுதல் சொல்வா அங்கிள்?" என்று வினவிய படியே அந்த வீட்டைச் சுற்றி பார்வையிட.

" விக்கியை நினைச்சு தான் கவலைப்படுறேன். அவ நைட்லாம் அழுதுக்கிட்டே இருந்தா, தூங்கவும் இல்லை மாப்பிள்ளை." என வேதனையான குரலில் சங்கர் கூறினார்.

"அங்கிள் நீங்க கவலைப்படாதீங்க… விகாஷினியை நான் பார்த்துக்கிறேன். இப்ப எங்க இருக்கா? ரூம்ல தானே…" என்று வினவியவாறு எழுந்தவன் விகாஷினியின் அறைக்கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான்.

அவளோ உறங்காமல் கட்டிலில் படுத்துக் கொண்டு, பார்வையை எங்கோ பதித்து இருந்தாள்.

இரவு உடையில், களைத்து, களையிழந்து புகைப்படிந்த ஓவியமாக இருந்தாள். ஆனால் அவனுக்கு பேரழகியாக தான் தெரிந்தாள்.

" ஹாசினி…" என்ற மதியின் குரலில் பார்வையை திருப்பியவள், மதியைக் கண்டவுடன் வேகமாக எழுந்து உட்கார்ந்தாள். தன்னை ஒரு முறை சரி பார்க்க… அவளது செயலில் மதியமுதனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
ஆனால் அதை வெளிக்காட்டாமல் அவளது அருகில் வந்தவன், தலையிலே ஒரு குட்டு வைத்து, " ஓய் ஹனி… என்னைப் பார்த்தா எப்படி தெரியுது." என்றவாறே புருவத்தை உயர்த்த…

" ஹாங்… ஒன்னுமில்லை…. திடீர்னு வரவும் பயந்துட்டேன் மதி."

" ஆஹா பயந்துட்டியா… நம்பிட்டேன்…. சரி அதை விடு. நீ ஏன் இன்னும் ஸ்கூலுக்கு கிளம்பலை? " என மதி அவளை ஆழ்ந்துப் பார்த்துக் கொண்டே வினவ.

" ப்ச்… தலை வலிக்குது. போகலை." என…

" ஓஹோ… நீ என்ன சின்ன பிள்ளையா…. இப்படி சில்லி ரீசன் சொல்லிட்டு லீவு போடுவாங்க… இதுக்கு நீ பேசாமல் பாவனா கூடவே ஊருக்கு போயிருக்கலாம். பெருசா இன்வெஸ்டிகேஷன் பண்ண போறேன். ஃபாலோ பண்ண போறேன்னு சொல்லிட்டு இப்படி லீவ் போட்டா ஸ்கூல்ல நடக்கிறது உனக்கு எப்படி தெரியும்." என கேலியாக வினவினான் மதியமுதன்.

அது சரியாக வேலை செய்ய, " எனக்கு உங்களோட ஆர்க்யூ பண்ணலாம் டைம் இல்ல. எனக்கு ஸ்கூலுக்கு டைம் ஆயிடுச்சு நான் கிளம்புறேன்." என்றவள் வேகமாக எழுந்து வெளியே சென்று வேலை செய்யும் அக்காவிடம் அன்றைய மெனுவை கூறி விட்டு‍, திரும்பவும் குளிப்பதற்காக தனது அறைக்குச் சென்றாள்.

அவள் பின்னேயே வெளியே வந்த மதியமுதன் புன்சிரிப்புடன் சங்கரிடம் விடைப்பெற்றுக் கொண்டு தனது வீட்டிற்கு திரும்பினான்.

இந்த சிரிப்பு இன்னும் கொஞ்சம் நேரத்தில் மறையப் போவதை அவன் அப்போது அறியவில்லை‌‌. ஏன் தான் விகாஷினியை மல்லுக்கட்டி ஸ்கூலுக்கு அனுப்பினோம் என்று நொந்துக் கொள்ளப் போவதையும் அப்போது அறியவில்லை. விதியானது விதுன்குமாரின் பிறந்தநாளன்றே, விகாஷினியின் மூலமாகவே உண்மையை எல்லாரும் அறிய வேண்டுமென்று இருக்கையில் யாரால் என்ன செய்ய முடியும்?

****************************

விகாஷினி வழக்கம் போல், ஸ்கூல் முடிந்தவுடன் லைப்ரரிக்கு செல்கிறேன் என்று கூறிய நேரத்தை அந்த பெரிய லைப்ரரியில் செலவழித்தாள். ஒரு. வழியாக ஸ்பெஷல் க்ளாஸ் முடிந்து மாணவர்கள் கிளம்பும் நேரத்தில் டூ வீலர் பார்க்கிங்கில் வந்து ஹெல்மெட் போட்டுக் கொண்டு காத்திருந்தாள்.

அந்த மாணவர்கள், அவர்கள் வீட்டிற்கு கிளம்ப, அவளும் இந்த ஒரு வாரப் பழக்கமாக அவர்களை ஃபாலோ செய்ய. அவர்களோ, எப்போதும் செல்லும் வழியில் செல்லாமல் வேறு வழியில் சென்றனர். அங்கு ஒரு ஆக்சிடென்ட் நடந்தது. அதனால் மாற்று வழியில் செல்கிறார்கள் போல என்று எண்ணிக் கொண்டு அவர்களை ஃபாலோ செய்தாள்.

ஆனால் அவர்களோ, ஒரு பழைய வீட்டிற்கு முன்பு நின்றனர். அரையடி உயர் காம்பவுண்ட் சுவர் இருக்க. முன்புறம் கதவில் நின்றிருந்த வாட்ச்மேனிடம் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.


ஏதோ சம்பவம் நடக்கப் போகிறது என்று மனதில் தோன்ற, மதியமுதனுக்கு ஃபோன் செய்தாள். அவனோ முக்கியமான மீட்டிங்கில் இருந்ததால் ஃபோனை சைலண்டில் போட்டிருந்தான். மதியமுதன் ஃபோனை எடுக்கவில்லை எனவும், எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தவள், தனது வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு, ஷோல்டர் பேகில், ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்து போட்டவள், பிறகு அதை மாட்டிக் கொண்டு, பின் பக்கம் சென்று யாரும் இருக்கிறார்களா என்று பார்த்து விட்டு அந்த காம்பவுண்ட் சுவரில் ஏறிக் குதித்தாள். இவளுடைய நல்ல நேரம் அங்கு காவலுக்கு நின்றிருந்தவன், அப்போது தான் உள்ளே சென்றிருந்தான்‌.

மெல்ல நடந்தவள் அங்கு இருந்த பெரிய தூணிற்கு பின்பு மறைந்துக் கொண்டாள்.

அது ஒரு அரிசி குடோன். அந்த மாணவர்களை விசாரித்து விட்டு, வாட்ச்மேன் அப்போது தான் உள்ளே அழைத்து வந்திருந்தான்.

" சார்…" என அழைத்த வாட்ச்மேன், உள்ளே இருந்து வந்தவரிடம் கஸ்டமர் என அம்மாணவர்களை அறிமுகப் படுத்த…

சரி நான் பார்த்துகிறேன் நீ வெளியே போய் இரு என்றவர்,அவர்களை உள்ளே அழைத்துச் சென்று விட.

வாட்ச்மேன் வெளியே செல்லும் வரை அமைதியாக இருந்தவள், பிறகு மெதுவாக உள்ளே சென்றாள். ஒரு மூட்டை வரிசைக்கு பின்புறமாக நின்று கொண்டு அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கூர்மையாக கவனித்துக் கொண்டிருந்தாள் விகாஷினி.

யார் இந்த ஈனத்தனமான செயலை செய்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்று வெறியோடு இருந்தாள். போயும், போயும் பணத்திற்காக படிக்கும் மாணவர்களிடம் போய் இந்த பழக்கத்தை ஏற்படுத்தியவர்களை சும்மா விடக்கூடாது என்று முடிவெடுத்தவள், அடுத்து என்ன செய்வது என்றும் திட்டமிட்டு விட்டாள்.

சுற்றிலும் கூர்மையாக பார்வையிட்டவள், அங்கு இருவர் மட்டுமே இருப்பதை கவனித்துக் கொண்டாள். ஆக இங்கே இருவர் , வெளியே இருவர்‌. மொத்தம் நான்கு பேர் தான் என தனக்குள் கணக்கிட்டுக் கொண்டவள்‍, அந்த பசங்க வெளியே செல்லும் வரை ஒன்றும் செய்யக் கூடாது என்று எண்ணி அமைதிக் காத்தாள்.

மாணவர்களும் அளவுக்கதிகமாக போதை மருந்து கிடைத்த சந்தோஷத்தில் அதை வாங்கிக் கொண்டு, சென்று விட, அது வரை அமைதியாக இருந்தவள், அங்கு வந்த ஒருவனை முதலில் தாக்கினாள். உள்ளே வரும் போதே அங்கு கிடந்த உருட்டுக்கட்டை ஒன்றை எடுத்து வந்திருந்தாள். அதாலே ஒன்று போட்டாள்.

அவன் போட்ட சத்தத்தில் இன்னொருவன் பதட்டத்துடன் வெளியே உள்ளவர்களுக்கு குரல் கொடுத்துக் கொண்டே வந்தான். அவனது மண்டையிலும் ஒரு போடு போட்டாள். வெளியே இருந்து வந்த இருவரும்
இவள் பெண்தானே அலட்சியமாக வாட்ச்மேன் வர, அவன் மண்டையை உடைப்பதற்காக கட்டையை வேகமாக தூக்க, பின்புற கதவு வழியாக வந்த ஒருவன், பின்னாலிருந்து அவள் கையிலிருந்த கட்டையை பிடுங்கி வீசினான்.

ஒரு நிமிடம் கூட தயங்காமல், வேகமாக பக்கவாட்டில் நகர்த்தவும், தனக்கு தெரிந்த கராத்தே கட்டாஸை பயன்படுத்தி, தன் முன்னாள் இருந்தவனை வீழ்த்தினாள்.

பிறகு தனக்கு பின்னால் இருந்தவனிடம் கவனத்தை செலுத்த… அவனோ, அவள் கழுத்தில் மாட்டி இருந்த ஐடி கார்டை பார்த்து கண்கள் தெறிக்கும் அளவுக்கு விழித்தான்.

அவன் ஐடி கார்டை பார்த்ததை கண்டவள், அதை அவிழ்த்து வைக்காத தன் மடத்தனத்தை நொந்துக் கொண்டவள், அவனையும் தாக்கி விட்டு வேகமாக வெளியேறினாள்.

சற்று தூரம் சென்றவள், பிறகு தனது முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் பின்புற கதவு வழியாக, உள்ளே வந்து அடுக்கி வைத்த அரிசி மூட்டைக்கு பின்புறம் மறைந்துக் கொண்டாள்.

இவள் மறைந்து நின்ற இடத்திலிருந்து பார்த்தால் அங்கே அந்த ஆட்கள் விழுந்து கிடந்தது நன்கு தெரிந்தது. இங்கிருந்து பார்த்தால் அந்த மொத்த கூடமும் நன்றாக தெரியும். அவர்கள் பேசுவதும் கேட்கும். அந்த மாதிரி இடத்தில் நின்று கொண்டாள்.

ஏனென்றால் இவர்கள் எப்படியும் இவர்களது தலைவனுக்கு ஃபோன் செய்வார்கள்.அவன் யாரென தெரிந்து கொள்ள வேண்டும் என்று காத்திருந்தாள். எதிர்பார்த்த மாதிரியே அடிபட்டவர்களில் ஒருவன் யாருக்கோ ஃபோன் செய்தான்.

*******************************

அந்த நேரத்தில் தான் சங்கர் விகாஷினி இன்னும் ஸ்கூலில் இருந்து வரவில்லை என்று மதியமுதனிடம் கூறிக் கொண்டியிருந்தார்.

மதியமுதனோ, " அங்கிள் கவலைப்படாதீங்க… நான் பார்த்துக்கிறேன்." என்று கூறி விட்டு கிளம்பினான்.

அவளுக்கென ஏற்பாடு செய்திருந்த செக்யூரிட்டிக்கு கால் செய்துக் கொண்டே ஸ்கூலை நோக்கி தனது காரை செலுத்தினான்.

அவரோ, "மேடம் இன்னும் வெளியே வரவில்லை சார்." என்றுக் கூற...

" ஓ… நீங்க எதுக்கும் உள்ளே சென்று வாட்ச்மேனிடம் விசாரிங்க." என மதியமுதன் கட்டளையிட்டான்.


வாட்ச்மேனோ, எல்லோரும் போய்ட்டாங்க. நானும் இப்போ தான் ரவுண்ட்ஸ் எல்லாம் போயிட்டு வந்தேன். யாருமில்லை என்று கூறியிருந்தார்.

இதை ஏற்கனவே எதிர்பார்த்திருந்த மதியமுதனோ அடுத்து செய்ய வேண்டியதை செய்து இருந்தான்.

அவனது டிபார்ட்மெண்ட் ஆட்களுக்கு கால் செய்து விகாஷினியின் செல்ஃபோன் எந்த ஏரியாவில் இருக்கிறது என்பதையும், அவளது ஐடி கார்டில் வைத்திருந்த சி.பி.யூ மூலம், அவள் எங்கே இருக்கிறாள் என்பதை ட்ராக் செய்து கண்டுபிடிக்க சொன்னான்.

இவன் ஸ்கூலுக்கு போவதற்கு முன்பே அவர்களிடம் இருந்து தகவல் வந்து விட்டது. அவர்கள் சொன்ன லொக்கேஷனில் ரூபக்கின் குடோன் இருப்பது தெரிந்து, நேரே அங்கே சென்றான். அவனது நம்பிக்கைக்கு பாத்திரமான நான்கு காவலர்களை மஃப்டியில் வரச் சொல்லி இருந்தான்.

எல்லோரையும் அந்த பில்டிங்கை சுத்தி நிற்க சொன்னவன், அவன் மேசேஜ் அனுப்பவும் தான் உள்ளே வரணும் என சொல்லி இருந்தான்.

பிறகு அவனது காரை ஒரு வீட்டின் முன்பு விட்டுவிட்டு, அந்த குடோனின் பின்புற சுவரில் ஏறிக் குதித்து வந்தவன், அங்கு கதவு திறந்திருக்க, அந்த கதவு வழியாக பாக்கெட்டில் ஒரு கையை விட்டு ரிவால்வரை தயாராக பிடித்துக் கொண்டு கவனமாக உள்ளே நுழைந்தான்.

வேகமாக உள்ளே நுழைந்தவனை, மென்மையான இருகரங்கள் உள்ளே இழுத்தது.

யாரது என்று நிமிர்ந்துப் பார்த்தவன், அங்கு புன்முறுவலுடன் அரிசி மூட்டைகளுக்கு பின்புறம் அமர்ந்து,கடக்முடக்கென அரிசியை மென்றுக் கொண்டிருந்த விகாஷினியைக் கண்டான்.
இவ்வளவு நேரம் இருந்த பதட்டம் மறைய அவளை வேகமாக இழுத்து அணைத்தான். அவனது இதயம் வேகமாக துடிப்பதை உணர்ந்தவள், ஆச்சரியமாக அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.


 
Top