• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வேல்விழியாள் -30 இறுதி அத்தியாயம்

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
அத்தியாயம் - 30

விகாஷினியை சமாதானப்படுத்திய மதியமுதன், தனது ஃபோனில் இருந்து வெளியே உள்ளவர்களை, உள்ளே வரச் சொல்லி மெசேஜ் அனுப்பினான்.

தன் பாக்கெட்டில் இருந்த ரிவால்வரை எடுத்துக் கொண்டு வெளியே வந்து ரூபக்கிற்கு முன்பு நீட்டினான். அதிர்ந்து நின்ற ரூபக் சுதாரிப்பதற்குள், விகாஷினி துள்ளியெழுந்து வந்தவள், பளார் பளார் என்று அறைந்தாள். " ச்சீ நீயெல்லாம் மனுஷனாடா… உன்னைக் கொல்லாமல் விட மாட்டேன்." என்று பொங்கி எழ…

அவளை அடக்குவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது மதியமுதனிற்கு . வெளியே இருந்த காவலர்களோடு சந்தீப் உள்ளே வந்தான். அவனைப் பார்த்ததும் தான் மதியமுதன் நிம்மதியானான்.

விகாஷினியை, சந்தீப்பின் பொறுப்பில் வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு கூறி விட்டு, ரூபக்கை தன்னுடைய கஸ்டடியில் வைத்துக் கொண்டான் மதியமுதன்.

சந்தீப்பால் விகாஷினிக்கு ஆறுதல் கூற முடியவில்லை. அவன் குற்ற உணர்ச்சியில் தவித்துக் கொண்டிருக்க, விகாஷினியோ ஓய்ந்து போய் அமர்ந்து இருந்தாள். அந்த கார் பயணம் அமைதியாக சென்றது.

சந்தீப்போ, ' தான் மட்டும் விதுன் கூப்பிட்ட போதே ஏற்காடு சென்று இருந்தால் அவனை உயிரோடு காப்பாற்றியிருக்கலாம்.' என்று தனக்குள்ளே குமைந்துக் கொண்டிருந்தான்.

அவன் ஏற்காட்டிற்கு செல்லாததற்கு காரணமே, எங்கே தான் சென்று அவர்கள் இருவரும் காதலிப்பதைப் பார்த்து, ஏதாவது மனதில் நினைத்து விடுவோமோ! என்று எண்ணி தான் அங்கு செல்வதை தவிர்த்தான்.
அவர்கள் இருவரும் நன்றாக இருக்கவேண்டும். மனதால் கூட அவர்களுக்கு எந்த தீங்கும் நடக்கக் கூடாது என்று எண்ணினான். அவர்கள் இருவரும் பழகுவதை பார்த்து சற்று பொறாமை பட்டால் கூட அது தன் நட்பிற்கு செய்யும் துரோகம் என்று எண்ணினான். அதான் அவன் வேலையிருப்பதை காரணம் காட்டி தவிர்த்தான்.

சிறுவயதிலிருந்து அவர்கள் இருவரும் ஏற்காட்டில் எப்படி கொட்டம் அடித்தார்கள் என்பதை நினைத்துப் பார்த்தான். அவன் சினிமாவிற்காக சென்னைக்கு கிளம்பும் வரையுமே இருவரும் சேர்ந்து சுத்தாத இடமில்லை.

பழைய நினைவுகளில் ஆழ்ந்தவனால் அழக் கூட முடியாமல், அவனுடைய காக்கி யூனிஃபார்ம் தடுக்க, அமைதியாக வந்தான். அருகில் விகாஷினியோ செறுமிக்கொண்டே வந்தாள்.

வீட்டில் எல்லோரும் அவளுக்காக காத்திருக்க… விகாஷினி காரிலிருந்து இறங்கவும் எல்லோரும் அவளைச் சுற்றி நின்று விசாரித்துக் கொண்டே உள்ளே அழைத்துச் சென்றனர்.

அவர்களுடன் உள்ளே செல்ல மனமில்லாமல் தோட்டத்திலே அமர்ந்துக் கொண்டான் சந்தீப்.

உள்ளே விகாஷினியோ அழுதுக் கொண்டே நடந்தவற்றைக் கூற…

பாவனா மட்டும் விதுனின் மரணத்தை பற்றி அவள் கூற ஆரம்பிக்கவுமே, அதைக் கேட்க தைரியமற்று வெளியே வந்தாள்.

அங்கு தனியாக உட்கார்ந்து, இருளை வெறித்துக் கொண்டிருந்த சந்தீப்பை பார்த்தவுடன் கால்கள் தானாக அங்கு நகர்ந்தது.

அவனோ இவள் வந்ததைக் கூட கவனிக்காமல் எல்லையில்லா சோகத்துடன் இருந்தான்.

" என்னாச்சு சந்து?ஏன் இப்படி இருக்க?" என்று வினவினாள் பாவனா.

" பவி…" என்ற சந்தீப் அவளை பார்த்தவுடன் கட்டுப்பாடின்றி கண்களில் இருந்து நீர் வழிய அவளைப் பார்த்தான்.

"என்னாச்சு சந்து? சொல்லு… எனக்கு உன்னை இப்படி பார்க்க கஷ்டமா இருக்கு. "தன்னுடைய கலக்கத்தை மறைத்துக்கொண்டு அவனுக்கு ஆறுதல் அளித்தாள் பாவனா.

" பவி… நான் மட்டும் ஏற்காடு போயிருந்தால் நம்ம விதுனை காப்பாற்றியிருக்கலாம்." என தொண்டை அடைக்க கூறினான்.

அருவியென பொழியும் கண்களை துடைத்துக் கொண்டே, " விதுனோட விதி அப்படி இருக்கும் போது நாம என்ன பண்ண முடியும் சந்து. ஆமாம் நீ ஏன் வரல?" என வினவினாள்.

எந்த கேள்வி தன்னை நோக்கி வீசப்படுமோ என்று பயந்துக் கொண்டிருந்தானோ அந்த கேள்வியை அவனை நோக்கி வீசினாள் பாவனா.

" அது பவி… உன் பிறந்த நாளில் உனக்கும், விதுனுக்கும் நடுவுல வரக்கூடாது என்று நினைத்தேன்." என்றான் வேதனையான குரலில்…

" ஓ… " என்றவள் சில நொடிகள் அமைதியாக இருந்து விட்டு, பிறகு அவனை நிமிர்ந்து பார்த்தவள், " ஏன் சந்து? ஊர்ல இருந்து வந்தப் பிறகு விதுன் ஏன் உன்னை காண்டாக்ட் பண்ணலை. அவருக்கு இருக்குற இன்புளூயன்ஸ்க்கு, பெரிய இடத்தைக் கூட காண்டாக்ட் பண்ணலாம்ல…"

" ஏற்காட்டில் இருந்து வந்த பிறகு எனக்கு விதுன் ஃபோன் பண்ணான். நான் ஒரு கேஸ் விஷயமா வெளியூர் போயிருந்தேன். வர இரண்டு நாளாகும். என்ன விஷயம் டா என்று கேட்டேன். நத்திங் சும்மா தான்டா என்று சொல்லி வைச்சுட்டான். நானும் அப்போ அதை பெரிய விஷயமா எடுத்துக்கலை. அப்புறம் வேற யார் கிட்டயும் போகாததற்கு காரணம் நம்பிக்கை இல்லாமல் இருந்திருக்கலாம்."

" ஆமாம்… துரோகிகள் சூழ் உலகு. அந்த ரூபக்கை அரஸ்ட் பண்ணியாச்சா?
அத்தான் எங்க சந்து?"

" மதி தான் ரூபக்கை கைது செய்துட்டு போயிருக்கான். நானும் போகணும். சரி வரட்டா பவி. எனக்கு உன்னோட பேசுனது கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கு. நீயும் உள்ளே போ… விகாஷினிக்கு தைரியம் சொல்லு." என்றவன் சென்று விட, பாவனா வீட்டிற்குள் திரும்பினாள்.


**********************

ரூபக்கை கைது செய்து ஒரு வாரம் ஆகிவிட்டது. செய்தித்தாள், தொலைக்காட்சி, வாட்ஸ்அப், ஃபேஸ்புக் என எல்லாவற்றிலும் பிரபல ஆளும்கட்சி அமைச்சரின் மகன் கைதான விஷயம் தான் பேசப்பட்டது. அதுமட்டுமில்லாமல் #ஜஸ்டிஸ் ஃபார் விதுன்குமார் என்று ஒரு பக்கம் விதுன்குமாரின் மரணத்திற்கு நியாயம் பெறுவதற்காக ஒரு கும்பல் பாடுபட்டுக் கொண்டிருந்தது.

பாவனாவும், விகாஷினியும் ஒரு பக்கம் அவர்களுடைய பத்திரிக்கை துறையை பயன்படுத்தி கொண்டிருந்தனர்.

விகாஷினி, மகிழ்விழி என்னும் பெயரில் எழுதிய கட்டுரை தான் ரூபக்கின் தந்தையை, ரூபக்கை வெளியே கொண்டு வர முயற்சிக்காமல் தடுத்து வைத்தது.

அவள் எழுதிய கட்டுரை.
# ஜஸ்டிஸ் ஃபார் விதுன்குமார்.

" அரசியலில் நேர்மையான இவருக்கு போய் இப்படி ஒரு மகன். தன் மகனாக இருந்தாலும் தவறு செய்தால் தண்டனை உண்டு என சொல்லும் மனுநீதி சோழனின் வழி வந்தவர் நம்ம தலைவர். தவறிழைத்தவன் தன் மகன் என்றப் போதிலும், தப்பு செய்ததற்கு தண்டனையை அனுபவித்து தான் ஆகணும் என்று கொள்கையில் வழுவாமல் இருக்கிறார்
இவரைப் போல் அரசியலில் சிலர் நேர்மையாக இருப்பதால் தான் இந்த நாடு இன்னும் உருப்படியாக இருக்கிறது. இதுவே வேறு யாராக இருந்தாலும் தன் மகனை காப்பாற்றுவதற்கு ஆட்களை வைத்து இந்த கேஸை ஒன்றுமில்லாமல் செய்துவிடுவார்கள். ரூபக்கின் வாக்குமூலம் தெளிவாக இருப்பது மட்டுமல்லாமல், அவரது தந்தையின் நேர்மையும் தான் இந்த கேஸை திசை திருப்பாமல் எடுத்து செல்ல உதவுகிறது. ரூபக்கிற்கு கண்டிப்பாக ஆயுள் தண்டனை தான் கிடைக்கும். அது மட்டுமில்லாமல் ட்ரக்ஸ் ட்ராஃபிக்கிங்கில் ஈடுபட்டிருக்கிறார். அதற்குறிய தண்டனையும் கிடைக்கப் போகிறது. " என்று எழுதியவளின் திறமையால், ரூபக்கின் தந்தையை செயல்பட விடாமல் தடுத்து இருந்தது.

சிறையிலோ ரூபக் தன் தந்தை வருவார், தன்னை எப்படியும் காப்பாற்றி அழைத்துச் சென்று விடுவார் என்று உறுதியுடன் காத்திருந்தான்.
இருக்காதா பின்னே… சிறு வயதிலிருந்தே அவன் கேட்பதற்கு முன்பே, அவனுக்குத் தேவைப்படும் என்று நினைத்திருந்த அனைத்தையும் வாங்கித் தந்திருந்தார்.எந்த ஒரு பொருளும் கேட்டு தான் அவனுக்கு கிடைக்கும் என்று நிலை அவனுக்கு இல்லை. எல்லாமேஅவனுக்கு எளிதாக கிடைத்தது. தான் இந்த உலகத்திலேயே என்ன செய்தாலும், தன்னை தன் தந்தை காப்பாற்றிடுவார் என்ற நம்பிக்கை அவனை தவறான பாதைக்கு அழைத்துச் சென்றது. அதனால் தான் தான் செய்யும் செயல், நல்லதா! கெட்டதா ! என்று அதை யோசிக்க கூட மறந்து விட்டான். தான் கெட்டதும் மட்டுமல்லாமல், வளரும் சமுதாயத்தையும் கெடுக்கும் முயற்சியையும் சிறு குற்ற உணர்ச்சி கூட இல்லாமல் செய்து கொண்டிருந்தான். இதற்கெல்லாம் அவனது பெற்றோரின் வளர்ப்பே காரணம். என்ன தவறு செய்தாலும் தன் மகனை கண்டிக்காமல் வளர்த்ததன் பலனை இன்று அவரது பெற்றோர் அனுபவிக்கிறார்கள்.

இதோ வந்து விடுவார்… அதோ வந்துவிடுவார் என்று ரூபக் சிறையில் காத்திருக்க…

ஆனால் அதற்கு தடையாக இருப் பெண்கள், அவர்களால் முடிந்த அளவிற்கு அவனது தந்தையால் எந்த செயலையும் செய்ய முடியாமல், அவர்களது எழுத்து சுதந்திரத்தை வைத்து தடுத்து இருந்தனர்.

கொஞ்சம் கொஞ்சமாக ரூபக்கின் நம்பிக்கை ஆட்டம் காணத் தொடங்கியது. ஃபோனில் வந்துக் கொண்டிருந்த தகவல்கள் அவனுக்கு இன்னும் டென்ஷனை ஏற்படுத்தியது.

அன்று கோர்ட்டில் அவனை ஒப்படைக்க போகும் நாள்…. ஒரு காவல் அதிகாரி ஃபோனை வாங்கி தனது தந்தையின் பர்சனல் நம்பருக்கு ஃபோன் செய்ய…

அவரோ, யாராவது இதைக் கேட்டால் தனது அரசியல் வாழ்க்கை என்னாவது என்று எண்ணி, " நீ என் மகனே கிடையாது. ஃபோனை வைடா…" என்று திட்டி ஃபோனை வைத்துவிட…

அஸ்திவாரமே உடைந்து போக, ரூபக் திகைத்து நின்றான். கோர்ட்டுக்கு போனதோ, அங்கு அவனுக்கும், அவனோடு விதுனின் கொலைக்கு உதவி புரிந்த, விதுனின் பி.ஏ, ரிதன்யா, மேனேஜர், கார் ட்ரைவர், ஃபார்ம் ஹவுஸ் மேனேஜர் எல்லோருக்கும் தண்டனை வழங்கப்பட்டதோ, எதுவும் அவனது கவனத்தில் இல்லை. ஒரு வேளை கோர்ட்டுக்கு வக்கீல் யாரையாவது தன் தந்தை அனுப்புவார் என்று நினைத்திருக்க… அதுவும் பொய்யாக, அன்று இரவு சிறையில் தற்கொலை செய்துக் கொண்டான்.


" வினை விதைத்தவன் வினை அறுப்பான்." அது தான் நடந்தது. விதுனை கொன்று விட்டு, அவனுக்கு இறுதி முடிவாக எதைக் கூறினானோ, அதுவே அவனது இறுதி முடிவானது.

எல்லா ஃபார்மலிட்டிஸும் முடித்து விட்டு மதி, தாமதமாக வீட்டிற்கு வர… எல்லோரும் ரூபக்கின் தற்கொலையைப் பற்றியே விசாரித்தனர். எல்லோருக்கும் பதிலைக் கூறியவன், அமைதியாக இருந்த சந்தீப்பை பார்த்து கண்ணடித்தான்‌.

சந்தீப்பும், கண் சிமிட்டி புன்னகைத்தான். பின்னே அவர்களுக்கு மட்டும் தானே தெரியும். அது தற்கொலை அல்ல என்று…

*********************
" அங்கிள்… எதுக்கு இப்போ ஏற்காட்டிற்கு போகுறீங்க? இங்கேயே இருக்கலாம்ல." மதி வினவ.

" இல்லைப்பா எஸ்டேட்டையும் பார்க்கணும்ல. கேஸ் முடிஞ்சு ஒரு மாசம் ஆகிடுச்சு. எல்லா பார்மலிட்டிஸும் முடிஞ்சு, விதுனோட ப்ராப்பர்ட்டில ஒரு ட்ரஸ்ட் ஆரம்பிச்சாச்சு. நீ, பவி, சந்தீப் எல்லோரும் இருக்கீங்க பார்த்துக்க… அப்புறம் என்ன? நானும்,விகாஷினியும் ஊருக்கு போறோம்."என.

அவன் பாவமாக விகாஷினியைப் பார்க்க, அவளோ சிரித்துக்கொண்டே திரும்பிக் கொண்டாள்.

அவள் எந்த உதவியும் செய்ய மாட்டாள் என்பதை புரிந்து கொண்டு, அவளை முறைத்துக் கொண்டே சங்கரிடம் திரும்பி, " அங்கிள்… விகாஷினோட படிப்பை வீணாக்காதீங்க. வேலைக்கு போகட்டும்." என்று அவளை பிரிய மனமில்லாமல் ஏதேதோ காரணம் கூறிக் கொண்டிருந்தான்.

"இல்லையேப்பா… என் பொண்ணு தான் புத்திசாலியாச்சே… அவ படிச்ச படிப்பை வீணாக்காமல், மகிழ்விழி என்ற பெயரில் எழுதிட்டு தானே இருக்கா. அப்படியே வேலைக்கு போகணும்னு ஆசைப்பட்டாலும், கல்யாணம் முடியவும் போகட்டும். நாங்க தான் கல்யாணத்துக்கு நாள் பாக்கட்டுமா என்று கேட்டா கொஞ்சம் நாள் போகட்டும் என்று சொல்றீங்க. அப்புறம் வேற என்ன மாப்பிள்ளை பண்ண முடியும்." என சங்கர் கூற...

சந்தீப்பின் சிரிப்பு சத்தம் கேட்டது… திரும்பி பார்க்க, மொத்த குடும்பமும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டிருந்தது. " டேய் சந்தீப்… உனக்காக யோசிச்சு தான் எனக்கு இந்த நிலைமை." என்று பல்லைக் கடித்துக் கொண்டு கூறியவன்,தன் அம்மாவிடம் திரும்பி, " மா… நீயெல்லாம் ஒரு அம்மாவா." என்று பொறும…

மீண்டும் எல்லோரும் சிரித்தனர்.

" ஐயோ! அத்தான்… உங்க லவ்வர் மட்டும் ஊருக்கு போகல... எல்லாருமே தான் ஏற்காட்டுக்கு போறோம். அடுத்த வாரம் ஏற்காட்டில் நமக்கு நிச்சயதார்த்தம். அடுத்த முகூர்த்தத்திலே கல்யாணம் " என்று வெட்கப்பட்டுக் கொண்டே சொல்ல…

பதறிய சந்தீப், "நம்ம நாலு பேருக்கும்." என்று அழுத்தி சொன்னான். இப்போது எல்லோரும் சந்தீப்பை கிண்டல் செய்தனர்.

" தேங்க்ஸ் பாவ்பாஜி." என்று கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவித்ததற்காக அவளை அணைத்தான் மதி… ஆம் அவன் தான் சொல்லியிருந்தானே பவியோடு தான் அவனுடைய கல்யாணம் நடக்கும் என்றும், அப்புறம் அவளை வற்புறுத்த மாட்டேன் என்றும் கூறி இருந்ததால் தான் அவனது திருமணப் பேச்சை தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தான். இப்போ அவள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவும் சந்தோஷப்பட்டுக் கொண்டு அவளைச் செல்லம் கொஞ்சினான்.

வேகமாக வந்த சந்தீப், முதலில் பவியை தன் பக்கம் இழுத்துக் கொண்டு, " ஹலோ பாஸ்… உனக்காக ஒன்றும் அவள் ஒத்துக்கொள்ளவில்லை. எனக்காகத்தான் ஒத்துக்கொண்டாள்." என்று பவியைப் பார்த்து கண்ணடித்துக் கொண்டே அவன் கூற… பவியோ இருவரையும் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

எனக்காகத் தான் ஓத்துக்கொண்டாள் என்று இருவரும் அவளை வைத்துக்கொண்டு இருபக்கமும் போட்டி போட்டுக்கொண்டிருக்க… இதே தொடர்கதையாக இவர்களது குழந்தைகளும் இவளுடைய பாசத்திற்கு போட்டி போடப் போகிறார்கள் என்று அப்போது அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை.

அங்கு சுகமான தென்றல் வீசியது.


ஐந்து வருடங்களுக்கு பிறகு…

சேர்வராயம்மன் கோவில் திருவிழா… வருஷமா வருஷம் தவறாமல் ஆஜாராகிடுவாங்க.மே மாசம் தான் திருவிழா. அதுக்கு வரும் போது, சேர்ந்த மாதிரி பத்து நாள் லீவு போட்டுட்டு எல்லோரும் வந்துடுவாங்க.

சந்தீப் இப்போது சென்னையில் கமிஷனராக பொறுப்பேற்றிருந்தான். மதியமுதனோ டெல்லிக்கு மாற்றலாகி இருந்தான். பவியும், விக்கியும் கடந்த இரண்டு வருடங்களாக சென்னையில் புதிய நம்பிக்கை என்ற பத்திரிகையை ஆரம்பித்து வெற்றிக்கரமாக நடத்திக் கொண்டிருந்தனர். அதனால் மதி கடந்த ஒரு வருடமாக டெல்லியில் தனியாகத் தான் வாசம். விகாஷினி அவளது அத்தை, மாமாவுடன் சென்னையிலிருந்தாள்‌.

ஏற்காட்டிற்கு வந்தால் யார் வீட்டில் தங்கறது என்று முதலில் எல்லாம் சண்டை வந்துக் கொண்டிருந்தது. பிறகு எங்கே இருந்தாலும் எல்லாரும் ஒன்னா இருக்கலாம் என்று முடிவெடுத்தார்கள்.

முதல்ல விகாஷினி வீட்டிலும், அடுத்து சந்தீப் வீட்டிற்கும், அடுத்து பாவானா வீட்டிற்கும் சென்று தங்கி விட்டு, சென்னைக்கு கிளம்புவார்கள்

இன்று பாவனாவின் வீட்டில் தங்கியிருக்க, பிரிந்து இருந்த நாட்களை ஈடு செய்வது போல் , மதியும், அவனது ஹனியும் தங்களுக்குள்ளேயே மூழ்கியிருக்க… அவர்களது நான்கு வயது புதல்வன் விதுரனோ, சமத்துக் குழந்தையாக தன் தாயையும், தந்தையையும் தொந்தரவு செய்யாமல் சட்டமாக சந்தீப்பின் அறையில் நுழைந்து, அவர்களது மகள் சந்தனாவை வம்பிழுத்துக் கொண்டிருந்தான்.
"சனா… பவி மா‌… என் அம்மா." என்றுக் கூறி அவள் மடியில் படுக்க… கட்டிலில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது சந்தனாவிற்கு, என்ன புரிந்ததோ விளையாடிக் கொண்டிருந்தவள் வேகமாக வந்து, " நா அம்மா…" என்று பவியை இறுகக் கட்டிக்கொண்டாள். அப்போது அவளிடம் ஆசையாகப் பேசலாம் என்று வந்திருந்த சந்தீப்பிற்கு தலையை பிய்த்துக் கொள்ளலாம் போலிருந்தது. பொறுத்து, பொறுத்துப் பார்த்த சந்தீப்… வேகமாக மதி… விக்கி ‌… என கத்த…

எல்லோரும் பதறிப் போய் ஓடி வந்தனர். "என்னாச்சு சந்து ‌… " விக்கி வினவ…

" என்ன நொன்னாச்சு சந்து… என்னால முடியலை… நானும், என் பொண்டாட்டியும் தனிக் குடித்தனம் போறோம். எங்களால ஒரு நிமிடம் இங்கே இருக்க முடியாது."

" டேய் சந்தீப் ‌… காம் டவுன். என்ன ப்ராப்ளம். எதுவாக இருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம். நீங்க பாட்டுக்கும் கிளம்பி போயிட்டா இந்த இரண்டு குழந்தைகளும் ஏங்கி போயிடும்." என்றான் மதி.

" என்னது? குழந்தைங்க ஏங்கப் போகுதா?. நாங்க ரெண்டு பேர் மட்டும் தான் தனிக்குடித்தனம் போகப் போறோம். சந்தனா இங்கே தான் இருப்பா. இதுக இரண்டும் பிரியாதுங்க. அதானல இங்கேயே இருக்கட்டும். நீ பார்த்துக்கோ… கொஞ்ச நேரம் கூட என் பொண்டாட்டி கூட பேச விடமாட்டேங்குதுக. அப்போ என் பவிக்குட்டி என்று நீ தொந்தரவு பண்ண... இப்போ உன் மகனும், என் மகளும் என் அம்மா, என் அம்மா என்று என்னை பக்கத்துல கூட விடமாட்டேங்குதுங்க. அதனால நாங்க எங்க வீட்டுக்குப் போறோம். நாளைக்கு நேராக கோவிலுக்கு வந்துடுறோம்.சோறு கொண்டு வரோம், இட்லி வாங்கிட்டு வரோம் என்று யாரும் போன் பண்ணாதீங்க‌. நாங்க யார் ஃபோன் போட்டாலும் எடுக்க மாட்டோம்." என்று கத்தியவன் தன் அம்மாவைப் பார்த்து, அம்மா உனக்கும் சேர்த்து தான் என்று கூறியவாறே பவியை இழுத்துக்கொண்டு சென்றான்.

அவள், "என்ன சந்து…" என்று சிணுங்கிக்கொண்டே சென்றாள்.

" அவன் மட்டும் என்ன தனி குடித்தனம் போறது. நானும் போறேன் என் பொண்டாட்டியோட‌… நீங்க எல்லாம் குட்டிஸைப் பார்த்துட்டு இங்கேயே இருங்க… நாங்க எங்க மாமா வீட்டுக்கு போறோம் என்ற விகாஷினியை அழைத்துக் கொண்டு அவளது வீட்டிற்குச் சென்றான். பெரியவர்கள் எல்லோரும் சிரித்துக் கொண்டே வழியனுப்பினர்.அவர்களுக்கு வேண்டியது அதுதானே… அவர்கள் குழந்தைகளோட மகிழ்ச்சி தானே எல்லாம்… அவர்கள் என்றும் இதே மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்… நாமும் விடைப் பெறுவோம்.

முற்றும்.

 
Top