• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வேவாள் :அத்தியாயம் 4

மோகனா

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
87
பேண்ட் பாக்கெட்டில் இருந்த போன் அதிர்ந்து தன் இருப்பிடத்தை காட்டியது

சாமி அங்கிள் அவள் உதடுகள் சின்ன சிரிப்பில் விரிந்தது

"சொல்லுங்க அங்கிள்" அவர் எதற்கு அழைத்து இருக்கிறார் என்பது தெரிந்தே ஒரு புன்னகையுடன் கேட்டாள்...

"அம்மா ரொம்ப நேரம் ஆச்சு இன்னும் வீட்டுக்கு வரலையே" நேரம் நள்ளிரவை தாண்டிக்கொண்டு இருப்பதால் தன் மகள் வயது பெண் இருப்பிடம் வரததால் வந்த பயத்திலும், அவளின் உண்மை தெரிந்தவர் என்பதால் உண்டான மரியாதையிலும் எப்படி பேசுவது என தயங்கி தயங்கி கூட்டினார்...

"கிளம்பிட்டேன் சீக்கிரம் வந்துடுவேன் சாமி" அவரின் மனநிலை புரிந்து அவருக்கான பதிலை கூறினாள் மமதி...

" சரி மா மாறன் தம்பி அவுட் ஹவுஸ் வந்திருந்தார்... உன்ன தான் விசாரிச்சாரு நீ குளிக்கிற அப்படின்னு சொல்லிட்டேன்.." இதையும் ஒரு தயக்கந்துடனும் கொஞ்சம் குற்ற உணர்விலும் கூறினார்… எஜமானனுக்கு நம்பகமாக இருக்க முடியவில்லையே என...

" ஓ" அந்த ஒரு ஓ வில் மாறனுக்கு அனைத்தும் தெரிந்து விட்டது என கிரகித்து கொண்டாள்...

"நாளைக்கு உங்கள ரூமுக்கு வந்து பாக்க சொன்னாரு காலைலயே…" மாறன் கூறியதையும் கூறிவிட்டார் சாமி...

…….(மமதியின் மவுனம் )

"அம்மா இருக்கீங்களா? அவருக்கு எதோ டவுட் வந்து இருக்குன்னு நினைக்கிறேன்".... தாம் ஏதாவது தவறு செய்து விட்டோமா என நினைத்து கூறினார்...

" டவுட் இல்ல அங்கிள் கண்டுபிடிச்சி இருப்பார்... பாத்துக்கலாம் விடுங்க நான் வந்துட்டே இருக்கேன்…." இதற்கு மேல் எதையும் யோசிக்க கூடாது ஏனெனில் எல்லாம் ஏற்கனவே யோசித்து வைத்தது தான் இப்பொழுது நடக்கிறது… சரியாக நடக்கிறதா என மட்டும் தான் கவனிக்க வேண்டும் என மனதோடு பேசிக்கொண்டாள்..

"சரிம்மா…" என கூறி செல்பேசியை அனைத்தார்...

வீட்டிற்கு வந்தவள் எதுவும் பேசாமல் கண்மூடி உறங்கி விட்டாள்...சாமிதான் என்ன ஆகுமோ ஏது ஆகுமோ என பயத்தில் உறக்கம் தொலைத்தார்..

மாறனும் தன் அறையில் தூக்கம் என்பதை மறந்து மமதியை பற்றிய பல வண்ண எண்ண கலவையில் சிக்கி இருந்தான்…

கையில் கட்டுடன் இருந்த மாரியை சமையல்கட்டில் கண்டவுடன் தன் சந்தேகத்தை உறுதிபடுத்திக் கொண்டான்…

இப்பொழுது அவனின் எண்ணங்களில் அதிகம் இருப்பது அடுத்து என்ன என்பதே ..

ரகுமானை குறிவைத்தே இவள் தன் வீட்டிற்கு வந்து இருக்கக்கூடும் என அனுமானித்து இருந்தான் .. ஏனென்றால் ரகுமான் உடல் நலக்குறைவுக்கு முன் போலீஸ் கேஸ் என அலைந்து கொண்டிருந்தது தெரியும்…

ஆனால் இவனுக்கு அதிலெல்லாம் தலையிட விருப்பம் கிடையாது…

இப்பொழுது அப்படியே அமைதியாக இருக்க முடியாது தன் வீட்டிற்கே வந்து வேவு பார்க்க ஆள் நுழைந்தது சிறிதும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று…

இதற்கு சாமி அங்கிலும் உடந்தை என்பதை அவனால் நம்பவே முடியவில்லை… ஏனென்றால் அவர் அவ்வீட்டின் முதன் முதல் சமையல்காரர்…

லதாவும் சேதுவும் அவரை அங்கிள் என அழைக்க சொல்லியே இவர்களை வளர்த்தனர்…

அவரும் இவ் வீட்டின் ஒரு உறுப்பினர் என்ற விதத்திலேயே அனைவரும் அவரை பாவித்தனர் அப்படிப்படவர் எப்படி ஏன் இதை செய்ய ஒத்துக்கொண்டார்? பதில் அவரிடம் தான் கேட்க வேண்டும்…

ஒருவேளை மிரட்டி சம்மதிக்க வைத்து இருப்பாளோ? இல்லையே அப்படி எதுவும் தெரியவில்லை இருவரிடத்தும்…

தந்தை மகள் போல் இருவரும் பேசிக்கொண்டதை நானே பார்த்து இருக்கிறனே…

இப்படி இருக்குமோ? அப்படி இருக்குமோ என இரவு முழுதும் தூங்காமல் யோசித்தவாறு இருந்துவிட்டு விடியும் முன் தான் நித்திரை கொண்டான்…

என் விடியல் என்றும் இப்படிதான் என்று இன்றும் அதிகாலை எழுந்து உடற்பயிற்சி செய்து முடித்து சாமியுடன் பணிக்கு கிளம்பினாள்…

இன்றும் சாமி வீட்டில் உள்ள அனைவருக்கும் இவள் தான் அவரவருக்கு காபி டீயை கொடுத்தாள்.…

மாறனின் அறைக்கு சென்று நெடு நேரம் கதவை தட்டியும் அவன் எழும்பாமல் தூங்கிக்கொண்டு இருந்தான்…

இவளே கதவை திறந்து கொண்டு உள் சென்று மாறனை எழுப்பினாள் மமதி…

அவன் இவளை கண்டதும் அவளிடம் கேள்வி கேட்க தொடங்க…

"மிஸ்டர் மாறன் இந்த டீயை குடிச்சிட்டு பிரெஷ் ஆகிட்டு இந்த நம்பர்க்கு கால் செய்ங்க எங்க பேசலாம்னு சொல்றேன்... என கையில் ஒரு சின்ன பேப்பரை கொடுத்தாள் அவனை பேச விடாமல்… மேலும் ஹோப் யூ வெல் நௌ…" என இவளே முழுதாக பேசி முடித்தாள்...

"ஹ்ம்ம்…" அவனுக்கு கடைசியாக கேட்டதுக்கு மட்டும் பதில் கூறினான்..

அவனின் ஹ்ம்ம் அறையின் வாயிலை கடந்தவளுக்கு கேட்டதோ என்னவோ அவளுக்கு தான் தெரியும்… அதாவது பேசி முடித்து அவன் பதில் பேசும் முன் கிளம்பி இருந்தாள்…

மாறனுக்கு என்ன பெண் இவள் என எல்லாம் தோன்றவில்லை…பெண் காவலர்களை கண்டு இருக்கிறான்… ஆனால் இப்படி சீக்ரெட் மிஷனில் எல்லாம் ஈடுபடும் பெண் சிபிஐ ஆபிசரை இப்பொழுது தான் காண்கிரான்...

ரகுமானுக்கு உடல் நிலை சீர் அடைந்ததற்கு வீட்டில் காலை உணவாக ஒரு பெரிய விருந்தே தயார் ஆகி இருந்தது…

அனைவரும் உணவு உண்ண அமர்ந்து இருக்கையில் தன் அறையில் இருந்து வெளியே வந்து அங்கு இருந்தவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்தாள் மான்விழி….

"ஹே மானு", "ஹே குட்டி", என பலவாறு இன்பமாக அழைத்து எப்பொழுது வந்தாள்? படிப்பு, விளையாட்டு பற்றி எல்லாம் விசாரித்து முடித்தனர் அனைவரும் …

மான்விழி அனைவருக்கும் பொறுமையாக பதில் கூறிவிட்டு பின்னர் மாறனின் அருகில் சென்று கைகளை பிடித்து கொண்டு" ரொம்ப பயந்துட்டேன் அண்ணா"… உன் ரூம்க்கு நைட் வந்து பாத்துட்டு தான் அண்ணா போனேன்…

"நீ ஏதோ யோசனையில் இருக்கவும் தொந்தரவு செய்யாமல் கிழ வந்துட்டேன் அண்ணா…"

"ஏன்டா மானு என்கிட்ட பேசிட்டே போய் இருக்கலாம்ல...ஹ்ம்ம் "?என மெதுவான குரலில் அவளின் தலையை தடவி கூறினான்…

அவனின் ஒட்டுமொத்த அன்பும் அவளிடம் தான்… எல்லோரிடமும் பாசமும் அன்பும் இருந்தாலும் இவள் எப்பொழுதும் ஸ்பெஷல் தான்..

"ஏதாவது பிரச்சனையா அண்ணா?" அவனின் முகத்தில் தெளிவு இல்லாததை கண்ட மான்விழி கேட்டு இருந்தாள்..

"ச்ச ச்ச அப்டிலாம் எதுவும் இல்ல டா…" வீட்டில் எவரும் கண்டுபிடிக்காத தன் வதனத்தின் மாறுதலை தங்கை கண்டு கொண்டதில் அவ்வளவு பெருமிதம் இருந்தாலும் சின்ன பெண்ணிடம் எதையும் கூற முடியாமல் சமாளிப்பாக கூறினான்...

"ஹே நாங்களும் இங்க தான் இருக்கோம் டி…" ரகுமான் தான் தன் தங்கையை அழைத்தான்...

"இருந்துட்டு போ… அதுக்கு என்ன இப்போ?" நீ எல்லாம் ஒரு மனுஷ பிறவியே இல்லை எனும் செய்தி அவள் கண்களில் தெரிந்தது...

"அம்மா எப்டி பேசுறா பாருங்க.. அண்ணா கிட்ட இவ்ளோ பேசுறா… என்கிட்ட எப்டி இருக்கன்னு ஒரு வார்த்தை கூட கேட்கல….என்மேல பாசமே இல்ல மா இவளுக்கு…" ரகுமான் மான்விழியின் விழியினை படிக்காமல் பேசிக்கொண்டு இருந்தான் …

அவனின் அம்மா வேறு யாரிடமோ பேசுகிறான் எனும் விதமாய் அமைதியாக உண்டு கொண்டு இருந்தார்…
அதை கண்ட அவனின் பெரியம்மா
"ஆமா டா குட்டி அவனும் இப்போதான் உடம்பு சரி ஆகி வந்து இருக்கான் அவனையும் விசாரிக்கணும் இல்ல? ஹ்ம்ம்…" வாஞ்சையாக மனைவிழியிடம் கூறினார்..

"சாரி பெரிம்மா….அவன் கூட நா சண்டை போட்டுட்டேன் போன முறை வந்தப்போ அதான் பேசல….அதுக்கு இன்னும் அவன் சாரி கூட கேட்கல பெரிம்மா என்கிட்ட…" சிறு பிள்ளை போல் கண்களை உருட்டி உருட்டி பேசினாள்...

பார்த்தவர் அனைவருக்கும் அவள் பெயருக்கு ஏற்றார் போல் மான் விழிகள் கொண்டவளாக தோன்றினாள் மான்விழி..

"இன்னும் சின்ன பிள்ளைங்க மாதிரி சண்ட போடறீங்களா ரெண்டு பேரும்… அண்ணா கிட்ட ஒழுங்கா பேசணும் மானு மா… சரியா?" கொஞ்சம் கண்டிப்புடன் கூட்டினார் சேது...

"சரிங்க பெரியப்பா…" உடனே அவர் வார்த்தைகளை ஒப்புகொண்டாள்...

"உட்கார்ந்து சாப்பிடு குட்டி...அப்புறம் பேசுங்க எல்லாரும் …" சேது சாப்பாடு நேரத்தை பட்டிமன்றம் ஆகாமல் தடுத்தார்...

"மாரி மானுக்கும் பரிமாறு…" லதா மமதியை அழைத்து கூறினார்...

"சரிங்க ம்மா…"

அப்பொழுது தான் மாரியை மான்விழி கண்டாள்… கண்டதும் "நீங்க"... என எழுந்து நின்று இருந்தாள்… அதே நேரம் மாரியும் ரகுமானை கண்களில் காட்டி

"உங்க பேர் அழகா இருக்குங்க… உட்காருங்க சப்பாத்தியும் சாலட் உம் வைக்கவா?" என அவளை மேற்கொண்டு பேச விடாமல் செய்து இருந்தாள்...

"ஹ்ம்ம் வைங்க" என கூறி யாரிடமும் எதுவும் பேசாமல் சாப்பிட்டு முடித்தாள்…

இதை எல்லாம் மவுன படமாக மாறன் பார்த்துக்கொண்டு இருந்தான்….

மனதில் அடுத்த கேள்வி… தன் தங்கைக்கு இவளை எப்படி தெரியும்? மமதியின் கண் சொன்ன செய்தியை இவள் அந்த கணமே புரிந்து கொண்டு செயல் புரிகிறாள்…

என்ன நடக்கிறது…..இல்லை இல்லை என்ன நடந்து இருக்கும் என தான் தெரிந்து கொள்ள வேண்டும்… ஏனென்றால் ஏற்கனவே நடந்த செயலுக்கு தான் இப்பொழுது எதிர்வினை நடக்கிறது….

தன் தம்பி தங்கை வாழ்வில் என்ன நடக்கிறது என கூட தெரிந்து கொள்ளாத சுயநல அண்ணன் ஆக இருந்து இருக்கிறனே நான்… இனி அப்படி இருக்க கூடாது…

வேலைகள் என்றும் இருக்கும்… நம் சொந்தங்களை நாம் தான் கவனிக்க வேண்டும் என மனதில் உறுதிமொழியே எடுத்து விட்டான் சிறிது நேரத்தில்…

உணவு வேளைக்கு பின் வெளியே செல்ல கிளம்பி வந்தான் மாறன்…

"என்ன தம்பி இன்னைக்கும் வெளிய கிளம்பிட்ட?" கொஞ்சம் கண்டிப்புடன் சேது கேள்வி எழுப்பினார்..

"இன்னைக்கு என்ன அப்பா? வழக்கம் போல ஆபிஸ் தான் கிளம்பினேன்…" எதற்கு இப்பொழுது விசாரணை செய்கிறார் என கடுப்போடு முகத்தை ஒருவாறு வைத்து கொண்டு கேட்டான்...

"விஷேசம் எதுவும் இல்ல தம்பி… ஒரு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு போகலாம் ல…" இவன் கூறிய பதில் திருப்தி பெறாமல் அவன் கேள்வி எழுப்பியதில் அதிருப்தி அடைந்த சேது பேசாததால் லதா பேசினார்...

"ரெஸ்ட் எடுக்கற அளவுக்கு எனக்கு எதுவும் இல்ல மா … ஈவினிங் சீக்கிரம் வந்துடறேன்…" இப்பொழுது அம்மாவிடம் தன்மையாக பதில் கூறினான் மாறன்...

"நா சொல்றத கேட்க ஒருத்தர் கூட இந்த வீட்ல இல்லை…" கூறிவிட்டு இடத்தை காலி செய்ய எழுந்தார்...

"என்னங்க கிளம்பும் போது எதுவும் பேசாதீங்க… ஈவினிங் தான் சீக்கிரம் வரேன் சொன்னான் ல… அப்போ பேசுங்க… நம்ம பையன் நம்ம பேச்சை கேட்காம போவானா… விடுங்க பாத்துக்கலாம்… நீ கிளம்பு மாறா…." இருவருக்கும் பொதுவாக பேசினார் லதா...

எதுவும் பேசாமல் அப்பாவை ஒரு பார்வை பார்த்து கிளம்பினான்…

கிளம்பி சென்று நின்ற இடம் அவர்கள் வசிக்கும் இடத்தில் இருக்கும் ஒரு பள்ளி மைதானம்…

அவன் வந்து சேர்ந்த நேரம் மான் விழியும் வந்து கொண்டு இருந்தாள்…

அவளை கண்டதும் குழம்ப தயாராக இருந்த மனதை இன்னும் கொஞ்ச நேரத்தில் எல்லாவற்றையும் தெரிந்து கொள்வோம் அமைதியா இரு என்று அடக்கி வைத்தான்…

அவளும் வந்தவள் அண்ணனிடம் எதுவும் பேசாமல் கல் மேடையில் அமர்ந்து விட்டாள்…

வழக்கம் போல் தன்னை மறைத்து ஹூடி டிரஸ் போட்டுக்கொண்டு அவ்விடம் வந்து சேர்ந்தாள் மமதி..

அக்கா என ஓடி சென்று கட்டி பிடித்து கொண்டாள் மான்விழி…

பெரிதாக எந்த எதிர்வினையும் இல்லாமல் " மிஸ் மான்விழி ரிலாக்ஸ் ஹா கொஞ்சம் உட்காருங்க… உங்க கிட்ட அப்புறம் பேசுறேன்… மொதல்ல மிஸ்டர் மாறன் கிட்ட இருக்கற எல்லா கேள்விக்கும் முடிஞ்ச பதில சொல்லிடறேன்…" என அடுத்து இருந்த கல் மேடையில் அமர்ந்தாள் மமதி..

"சரிங்க கா…" அவள் கூறியதில் முகம் மாறினாலும் உடனே ஒப்புகொண்டாள் மான்விழி

அதுவரை இவர்கள் இருவரையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டு இருந்த மாறனை "உட்காருங்க மாறன்…" என கூறினாள் மமதி

"இட்ஸ் ஓகே… நீங்க சொல்லுங்க எங்க வீட்ல ஏதாவது கேட்கணும் இல்ல தெரியப்படுத்தனும்னா எங்க கிட்ட நேரடியா பேசி இருக்கலாமே எதுக்கு இந்த வேவு பாக்குற வேலை…" அவனால் இந்த செய்கையை ஜீரணிக்க முடியாமல் முதல் கேள்வியாக கேட்டு இருந்தான்...

"நல்ல வார்த்தை பிரயோகம் மிஸ்டர் மாறன்… வேவு பாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு போச்சு… ஹ்ம்ம் உங்க கிட்ட சொல்லி இருக்கலாம் ஆனா பெருசா என்ன நடந்து இருக்க போகுது… தம்பிக்கு தான் சப்போர்ட் பண்ணுவீங்க…" அவனை வெறுப்பேற்றும் விதமாய் கூறினாள்

"நா அப்டி பட்டவன் இல்ல சிபிஐ ஆபிசர் மிஸ். மமதி…" உன்னை நான் அறிவேன் என குத்தி காட்டி பேசினான் மாறன்...

"ஹ்ம்ம் பேர் வரைக்கும் கண்டு பிடிச்சு வச்சி இருக்கீங்க…" ஒரு சின்ன மெச்சுதல் பார்வையுடன் கூறினாள் மமதி..

"நேத்து நைட் தான் தெரிஞ்சிக்க முடிஞ்சது…" ஒரு சின்ன ஏமாற்றத்துடன் கூறினான்

"ஹ்ம்ம் நாட் பேட்… நீங்க நல்லவங்களாவே இருந்துட்டு போங்க மாறன் ஆனா நீங்க சொல்றத வீட்ல ஒத்துகிட்டு அவனை...அந்த ரகுமானை…. பிளடி கல்ப்ரிட்… போலீஸ்ல ஒப்படைப்பிங்களா?" இதை கொஞ்சம் நக்கல் கலந்து கூறினாள்...

பதில் கூற முடியாமல் நின்றான் மாறன்…

"நா என்ன செய்ய போறேன் எப்டி செய்ய போறேன்றதெல்லாம் உங்களுக்கு தேவையில்லாதது… உங்களுக்கு தேவையானதை மட்டும் கேட்டுக்கோங்க மாறன்…" நீ இதுக்கு மேல் கேட்டாலும் கூற மாட்டேன் என்பதாக இருந்தது பேச்சு

"ஹ்ம்ம் சொல்லுங்க…" வேறு வழி இல்லாமல் அமைதி ஆகி போனான் மாறன்...

"3 பொண்ணுங்க உங்க பெரியப்பா காலேஜ்ல படிச்சவங்க… இப்போ உயிரோட இல்ல…

காரணம் உங்க தம்பி… அத கண்டுபிடிச்ச ஒரு பத்திரிகை நிருபரையும் கொன்னுட்டான்…

எங்க கிட்ட இப்போ எதுக்கும் ஆதாரம்ன்னு எதுவும் இல்ல

அதுக்காக தான் இந்த வேவு பாக்குறது எல்லாம்…

இந்த டீடெயில்ஸ் போதும்னு நினைக்கிறன்…" சுருக்கமாக கூறி விட்டாள் ஆனால் அதன் பின் இருக்கும் வலி அவளுக்கு மட்டுமே தெரியும்...

அவன் இப்பொழுது மான்விழியை கண்டான்… அவள் அழுது கொண்டு இருந்தாள்… ஒருவேளை அந்த பெண்கள் இவளின் தோழிகளோ என நினைத்துக்கொண்டான்..

வெளிப்படையாக கேட்டு தெரிந்து கொண்டு இருக்கலாம்…

"இனியும் எங்க வீட்ல தான் இருப்பீங்களா?" இவளை இனி வீட்டில் எப்படி விட முடியும்… ஒருவர் தங்களை எப்பொழுதும் வேவு பார்த்து கொண்டு இருப்பது தெரிந்து எப்படி இயல்பாக இருக்க முடியும்… இவள் யார் என தெரியாத போது ஒன்றும் இல்லை...என நினைத்து கேட்டு இருந்தான்...

"என் வேலை இன்னும் முடியலையே மாறன் எப்படி போக முடியும்… எதையும் பாதில விடறவ இல்ல இந்த மமதி…" இதையும் அவனை வெறுப்பேத்த கூறினாளே தவிர அவளுக்கே நிச்சயம் தெரியுமே வெகு சீக்கிரம் அங்கு இருந்து கிளம்ப போவது...

தொடரும்....
 
Top