• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வேவாள் :அத்தியாயம் 5

மோகனா

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
87
அவள் இதுவரை யாருக்கும் எந்த விளக்கமும் அளித்தது இல்லை அதன் காரணமாகவே மாறனிடமும் முழுமையாக எதையும் கூறவில்லை…

மான்விழி பற்றியும் எதுவும் கூறவில்லை…

மாறன் மனைவிழியை அழைத்து கொண்டு இல்லம் நோக்கி சென்றான்... அவன் சென்று சேர்ந்த நேரம் மமதியும் பின் வழியாக வந்து சேர்ந்தாள்….

வீட்டில் இருவரும் ஒன்றாக நுழைந்ததை கண்ட லதாவும் சேதுவும் என்ன என விசாரித்ததற்கு நம்பத்தகுந்த காரணத்தைக் கூறி இருவரும் அவரவர் அறைக்கு சென்றனர்..

தான் இதில் மமதிக்கு உதவுவதா இல்லை தம்பியையும் சித்தப்பாவின் கல்லூரியையும் காப்பாற்றுவதா யோசிக்கலானான்…

ஆனால் தவறு தம்பியின் மேல் இருந்தால் கண்டிப்பாக எதையும் கண்டும் காணாமல் போக வேண்டும் என்று முடிவு செய்துகொண்டான்…

மமதி அவளுக்கு தான் உதவ வேண்டிய அவசியமில்லை ஏனென்றால் அவளை அவளை பார்த்துக் கொள்வாள் என்ற எண்ணம் தானாகவே உருவாகியது... அது அவள் அவனிடம் பேசிய ஒரு சில நிமிடங்களிலேயே புரிந்துகொண்டான்…

அதுவுமின்றி அவள் தன்னை காப்பாற்றியவள்...அவள் தன்னை மட்டுமல்ல ஆபத்தில் உள்ள எவரையும் காப்பாற்ற கூடியவள் என அவளை சரியாக கணித்தான்…

ரகுமான் தன் தந்தையிடம் அறையில் பேசிக் கொண்டிருந்தான்... "எப்படி அப்பா நா கரெக்டா பிளான் பண்ற எல்லாமே இப்ப சமீப காலமாக தோல்வியில் முடிகிறது…"

அவனின் அடுத்த அடுத்த ப்ராஜெக்ட் எல்லாம் செய்ய முடியாமல் ஏதோ ஒரு தடங்கல் அதனால் தகப்பனிடம் புலம்பினான்...

" கரெக்டா ப்ளான் பண்ணா பத்தாது டா சரியானதா பிளான் பண்ணனும் அப்பதான் ஜெயிக்க முடியும்... நீ யோசிக்கிற நடந்துக்கிற எல்லாமே தப்பா இருக்கும்போது அது எப்படி வெற்றி அடையும்" அவர் இதற்கு மேல் இவனை அப்படியே விட முடியாது முடிந்தவரை பேச வேண்டும் என நினைத்து பேசினார்

" நீங்க ஒருத்தர் போதும்பா என்னை ஜெயில்ல கொண்டுபோய் போட…" ரகுமான் அவன் நிலையில் இல்லை கையில் மது பாட்டில் வேறு தஞ்சம் அடைந்து இருந்தது...
அந்த மது பாட்டிலை முறைத்தவாறு
" நான் செய்யலனாளும் கண்டிப்பா போலீஸ் உன்ன சும்மா விடாது…" என கூறினார் நீலன்

"போங்களேன் போய் சொல்லிட்டு வாங்களேன் நான் சரி ஆயிட்டன்னு.." கொலைவெறி ஆகிவிட்டான் அவன்

"நீ எப்படா நல்லா இல்லாம இருந்த இப்ப சரியா ஆகுறதுக்கு…" தன்னிடமே இப்படி பேசுகிறான் என பொங்கிவிட்டார் நீலன்

"இப்ப எதுக்கு இப்படி பேசிட்டு இருக்கீங்க என்கிட்ட…" கொஞ்சம் தழைந்து பேசினான் இப்பொழுது...

" கொஞ்சம் கூட மனசே ஆறலை டா எனக்கு... அந்த பொண்ணுங்க அந்த பொண்ணுங்களோட குடும்பம்,அந்த நிருபர் அவனோட குடும்பம்… இவ்வளவுதான் எனக்கு தெரிந்தது...தெரியாதது இன்னும் எவ்வளவு இருக்கோ தெரியல அதை நீ வாய தொறந்தா மட்டும்தான் தெரிஞ்சுக்க முடியும்…" ரத்தம் கொதித்தது பெண்ணை பெற்ற அப்பாவாக...

"எதுக்கு இப்போ உங்களுக்கு இதெல்லாம் நான் எதையாவது மொத்தமா சொல்லப்போய் அதை ரெக்கார்ட் பண்ணி வச்சு நீங்களே கொண்டுபோய் கொடுத்தாலும் குடுப்பீங்க போலீஸ் கிட்ட…. நான் இப்போ உளறுற மாதிரி இல்ல…." அத்தனை போதை ஆகவில்லை இன்னும் என கூறினான் மேலும்

எனக்கு செஞ்சி முடிக்க இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கு... முடிச்சிட்டு ஏதாவது தீவு பார்த்து போய் செட்டில் ஆயிடுவேன் … உங்க காலேஜ் உங்க வீடு உன் அண்ணன் அண்ணன் ஃபேமிலி எல்லாத்தையும் நீயே கட்டி காப்பாற்றிக்கோ….

எனக்கு யாரும் வேண்டாம்... எங்கிட்ட உங்களை விட அதிகமான காசு இருக்கு ... மனி என்னாப் ப்பார் மீ…" என மிகவும் மோசமாக பேசி முடித்தான் ரகுமான்...

"என்ன தாண்டா செஞ்சிட்டு இருந்த எப்படிடா உனக்கு இவ்வளவு காசு கிடைத்தது... அந்த பொண்ணுங்களோட இப்ப நிலைமை என்ன தாண்டா?" இத்தனை நாள் தான் செய்தது தவறு என்பது புத்தியில் உரைத்தது நீலனுக்கு..

"சும்மா போலீஸ் மாதிரி கேள்வி கேட்டுட்டே இருக்காதீங்க... எனக்கு நிறைய வேலை இருக்கு கிளம்புங்க வெளியே…"

"ச்ச உன்ன பெத்ததுக்கு ஒரு கல்ல பெத்துக்கலாம்… இந்த குடும்பத்தில் பிறந்துட்டு இப்படி ஒரு பையனா எனக்கு…"

"போதும் காதுல ரத்தம் வர்ற வரைக்கும் பேசாதீங்க…."

"உன் முகத்தை பாக்குறதே பாவம் நான் கிளம்புறேன்…"

"அதை செய்யுங்க முதல்ல…"

அப்பாவும் மகனும் பேசிக்கொண்டு இருந்ததை கேட்டுக்கொண்டு இருந்த மமதியின் உதடுகள் இன்னும் எத்தனை நாளைக்கு இந்த ஆட்டம் எல்லாம் என நினைத்து ஏளனத்தில் சிறிதாக கீழ் நோக்கி வலைந்தது…

அவள் எதிர் பார்த்த தருணம் இதுதான் என்பது போல் ரகுமான் அடுத்த திட்டத்தை தீட்ட ஆரம்பித்தான்…

"டேய் ராகவா"

"சொல்லுங்க பாஸ்…"

"நாம வழக்கமா சந்திக்கற இடத்துக்கு ராக்கி, செந்தில், புவனா மூனு பேரையும் வர சொல்லிடு… இன்னும் அரை மணி நேரத்துல அங்க இருக்கனும் டா…"

"கண்டிப்பா பாஸ்… ஏதாவது புது ஆசைன்மெண்ட் ஹா பாஸ்?"

"நேர்ல சொல்றேன் டா சீக்கிரம் வந்து சேருங்க…."

"ஓகே பாஸ்…"

செல்பேசியை அணைத்து விட்டு இவனும் கிளம்பினான்…

பல படங்களில் காட்டப்படும் பாழ் அடைந்த பாக்டரி போல ஒரு இடம்…

இவனின் கார் சென்று நிற்கும் பொழுதே கவனித்தான் மற்ற நால்வரும் வந்துவிட்டனரா என… அவர்களின் வண்டிகளை வைத்து வந்துவிட்டனர் என தெரிந்த பின்பே உள் நுழைந்தான்…

அவன் உள் நுழையும் தருவாய்க்காக காத்து கிடந்த கதவு பலத்த சத்தத்துடன் அரைந்து சாத்த பட்டு பூட்டு போட பட்டது…

சத்தம் கேட்டு சுதாரிப்பதற்குள் நடந்து முடிந்து இருந்தது…

நான்கு நாற்காலிகளில் இவனின் கை தடிகள் கட்டி வைக்க பட்டு இருந்தனர்… அவர்களுக்கு பின்னால் நான்கு பேர் நின்று இருந்தனர்…

இவன் தன் கை அடக்க துப்பாக்கியை பேண்ட் இல் இருந்து எடுக்க முற்பட்ட சமயம் பின்னால் இருந்து அவனின் தலையில் ஒரு துப்பாக்கி முனை அழுத்தியது…

அவனால் அது யார் என பார்க்க கூட அசைய முடியவில்லை… அத்தனை அழுத்தம் அந்த துப்பாக்கி முனை கொடுத்தது…

அங்கு இருந்த நால்வரில் இருவர் இவனை இருப்பக்கமும் பிடித்து இழுத்து சென்றனர்….

அதற்கு முன்னரே அவனின் துப்பாக்கி பின்னால் நின்றப்படியே இருந்தவளால் பறிக்க பட்டது…

ஆம் மமதி தான் நின்று இருந்தாள்…

ஒரே அழுத்து அந்த துப்பாக்கியை அழுத்தி இருந்தால் அனைத்தும் முடிந்து போய் இருக்கும்… ஆனால் அவள் செய்ய போவதில்லை….

ரகுமானை அதே போன்றதொரு நாற்காலியில் கட்டும் பொழுதே தன் தலையில் துப்பாக்கி வைத்தவர் யார் என கண்டான்…

"ஹேய் நீயா?" உச்சபட்ச அதிர்ச்சி அவனிடத்தில்...

அவன் அப்படி சொன்னதும் அவன் பின்னால் நின்று இருந்தவன் துப்பாக்கியை திருப்பி அவன் தலையில் ஒரு அடி அடித்தான்…பின் "மரியாதை மரியாதை முக்கியம் டா பிளடி கல்ப்ரிட்…" என மிரட்டினார் அந்த சிபிஐ ஆபிசர்...

அந்த அடியில் முகம் சுளித்து "பின் நீங்க எங்க வீட்ல சமையல் தான செஞ்சிட்டு இருந்தீங்க? நீங்க எப்டி?

ஓ மாஸ்டர் பிளான் ஹா? ஆனாலும் ரொம்ப லேட் தான் நீங்க…

இங்க எதுக்கு கட்டி வைக்கறீங்க? ஓ போலீஸ்க்கு தெரியாமல் உங்க சிபிஐக்கும் தெரியாம நா காணாம போய்ட்டதா பிளே பண்ண போறிங்களா? ரைட்டு நடத்துங்க… எனக்கு எப்டி வெளிய வரணும்னு தெரியும்…" முதற்கட்ட அதிர்ச்சி விலகி அடுத்தடுத்த விஷயங்களை நொடி நேரத்தில் கணித்து கூறி இருந்தான் ரகுமான்...

"பேசி முடிச்சிட்டியா டா? எப்பா எப்டிலாம் யோசிக்கறான்யா… சொல்ல போனா அவன் சொல்ற மாதிரி நாம லேட் தான் இல்லியா அதனால அவன் சொன்னத அப்டியே செய்வோம் கொஞ்சம் நம்ம ஆட்டத்தையும் ஆடிடுவோம் ஓகேயா ஜோசப் சாப்…" அவனிடம் ஆரம்பித்து
அவன் அருகில் இருந்த ஆபிசரிடம் பேசி முடித்தாள்...

"சூர் மேம் இவனை நாங்க பாத்துக்கறோம் நீங்க அடுத்தத மூவ் பண்ணுங்க…"

ரகுமானின் அத்தனை கெட்டவைகளுக்கும் இன்று முடிவு கட்ட தீர்மானம் செய்து இருந்தனர்...

"ஓகே… நீங்களும் சேப் ஹா இருங்க…" செல்லும் போது ரகுமானின் செல்பேசியை கைப்பற்றி ரகுமானை பார்த்து ஒரு புன்னகை சிந்தி விட்டு சென்றாள்…

அந்த புன்னகை ரகுமானை கூட ரசிக்க சொல்லியது….

அவளின் அசைன்மெண்ட் முடியப்போகும் தருணத்தை ரசிக்கவே அந்த புன்னகை அவளிடம்…

நேராக வீட்டிற்கு தான் சென்றாள்… வழக்கம் போல வேளைகளில் ஈடுபட்டாள்…

சிறிது நேரத்திற்கு பின் டிவியில் சற்று முன் செய்தி என ரகுமானின் வண்டவாளங்கள் அனைத்தும் ஒளிபரப்பு செய்யப்பட்டது…

அதுவும் அவன் வாயாலேயே ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பது போல் இருந்தது…

உற்று கவனித்தால் மட்டுமே அவன் போதையில் இருப்பது தெரியும்.. அதையும் ஒரு சில செய்தி சேனல்கள் குறிப்பிட்டு இருந்தன…

வீட்டில் இருந்த அனைவருக்கும் தெரிந்து இருந்தது இது இந்த வீடியோ எதுவும் இப்பொழுது எடுத்தது இல்லை என….

ஒருத்தர் கூட அழவில்லை... எதுவும் யாரும் யாரிடமும் பேச கூட இல்லை… வீடு அத்தனை அமைதியாக இருந்தது….

மாறன் தான் வேகமாக கீழ் இறங்கி வந்தான்…

"அப்பா சித்தப்பா நியூஸ் பாத்திங்களா?" அதிர்ச்சி விலகாமல் கூகுறளிட்டான்

"அங்க பாரு மாறா நியூஸ் தான் ஓடுது நீ ஏன் இவ்ளோ உணர்ச்சி வச படுற?" இதற்கு இவ்ளோ அதிர்ச்சி தேவை இல்லை என்பது போல் பேசினார் சேது…

அவருக்கு பிள்ளைகளின் படிப்பு வேலை சம்பளம் இதெல்லாம் விட நல் ஒழுக்கம் தான் ரொம்ப முக்கியம்...

"எப்பயோ நடக்க வேண்டியது இப்போ நடக்குது விடு…" நீலன் மனம் விட்டு போயிற்று...

"சித்தப்பா…"

"நானும் அவனை திருத்திடலாம் காப்பாத்திடலாம்னு தான் நினச்சேன் டா மாறா… ஆனா அவன் நம்ம கை மீறி போய் ரொம்ப நாள் ஆச்சு டா …" விரக்தியில் பேசினார் நீலன்

யாரும் எதுவும் பதில் கூற முடியவில்லை… மேலும் அவரே பேசினார்…

"நீ ஒருத்தன் போதும் டா எங்களுக்கு…. எங்க பையனாவும் இருப்ப தான…"

"சித்தப்பா...என்ன இப்டிலாம் பேசுறீங்க? நா உங்க பையன் தான் சித்தப்பா… மனச போட்டு குழப்பிகாதிங்க…."

"இல்ல மாறா நா ரொம்ப தெளிவா தான் இருக்கேன்…"

"ஹ்ம்ம்…அப்புறம் அப்பா சித்தப்பா…."

"என்ன மாறா? இன்னும் என்ன இருக்கு?" சேது தான் கேட்டு இருந்தார்...

"அது….அது வந்து நம்ம வீட்ல சமையல் செய்ற மாரி வேற யாரும் இல்ல…"

என கூறிக்கொண்டு இருக்கும் பொழுதே மாரி ஆகிய மமதி அவ்விடம் வந்து சேர்ந்தாள்…

"என்னம்மா சொல்றான் இவன்…"

"சர் நா ஒரு சிபிஐ ஆஃபீசர்… எங்க கிட்ட ஆதாரம் இருந்தது ஆனாலும் உங்க பையன ஒன்னும் செய்ய முடியல அந்த மாதிரி அவன் உடம்பு சரி இல்லாத மாதிரி நடிச்சி உங்களையும் கோர்ட்டையும் ஏமாத்திகிட்டு இருந்தான்…

மிஸ்டர் நீலன்க்கும் அவர் மனைவிக்கும் இது தெரியும்…"

இப்பொழுது அனைவரும் நீலனை தான் நீயுமா எனும் வகையில் பார்த்தனர்….அந்நேரமே அவர் மிகவும் உடைந்த தருணம்…

"அவங்கள ஒன்னும் சொல்ல முடியாது… அவங்களுக்கும் அவன் செஞ்சது முழுசா தெரியாது…

தெரிஞ்சி இருந்தா அவங்களே அவனை கொன்று இருப்பாங்க…"

"ரொம்ப நன்றிம்மா நீயாவது எங்களை புரிஞ்சிக்கிட்டியே… "கண்ணீர் மல்க நீலன் கூறினார்…

"டேய் நீலா உன்ன புரிஞ்சிக்காம உன்ன பாக்கலடா… நீ கூட எங்க கிட்ட பொய் சொல்லி இத்தனை நாள் அவனை ரூம்ல வச்சி இருந்தியே அதுக்கு தான் பாத்தோம்…."

"சரி உங்க பேச்சை அப்புறம் பேசுங்க….உங்க பையன் அந்த கலப்ரிட் எங்கன்னு கொஞ்சம் சொன்னா நல்லா இருக்கும்…"

"என்னது அவனை நீங்க இன்னும் அரேஸ்ட் பண்ணலியா?"

"இல்ல… நியூஸ் வர போகுதுன்னு அவனுக்கு தெரிஞ்சி இருக்கும் அதான் தலைமறைவு ஆகிட்டான்… அப்படித்தானா இல்ல இப்பவும் அவனை எங்கயாவது ஒளிச்சி வச்சி இருக்கீங்களா?"

ஒவ்வொருவரும் மற்றொருவர் முகத்தை பார்த்துக்கொண்டு நின்று இருந்தனர்...

தொடரும் ....
 
Top