• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வேவாள் :அத்தியாயம் 6

மோகனா

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
87
இன்றுடன் ரகுமான் காணாமல் போய் ஒரு வாரம் ஆகி இருந்தது…

அன்று அவனின் குடும்பத்திடம் பேசியவள் அப்பொழுதே அவ்வீட்டை விட்டு கிளம்பி இருந்தாள்…

மாறனுக்கு தான் என்ன யோசிக்கிறோம் என்ன செய்கிறோம் என தெரியாமல் சுற்றி கொண்டு இருந்தான்…

மான்விழி மீண்டும் தான் படிக்கும் டெல்லி யூனிவர்சிட்டிக்கு சென்று விட்டாள்…

போகும் முன் மமதி யை சந்தித்து பேசிவிட்டே கிளம்பினாள்…

மாதர் சங்கம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக கோஷம் இட்டு கொண்டு இருந்தது ஒரு வாரமாக… இப்பொழுது அது கொஞ்சம் நமத்து போய் இருந்தது…

அதே போல் டிவி நிருபர்களும் சஜனுக்கு ஆதரவாக பேசி பேசி தீர்த்து இருந்தனர்….

ஆம் முடிவாக எந்த முடிவுக்கும் வராமலேயே ரகுமானின் குற்றங்கள் கிடப்பில் கிடந்தது…

குற்றங்கள் வேண்டுமானால் கிடப்பில் இருக்கலாம் ஆனால் மமதியின் கோர்ட் இல் அவள் சட்டப்படி தண்டனைகள் தொடர்ந்து கொண்டு இருந்தது….

ஆம் அவனிடம் ஒட்டு மொத்த உண்மையையும் வாங்கி இருந்தாள்…

அவனும் சீக்கிரத்தில் உண்மையை கூறவில்லை அவன் கண்முன்னாலேயே அவனின் கைத்தடிகள் நால்வரையும் ஒவ்வொரு விதமாக கொன்றிருந்தால்..

எப்பொழுதும் இவனுக்கு உடந்தையாக விபத்துக்குள்ளாகி பலரைக் கொன்று குவித்த அந்த டிரைவரை அதேபோல் வண்டி ஏற்றி நசுக்கி கொன்றாள்...

மற்றொருவனை அடித்தே சாகடித்தால் அதாவது அவன் கடைசி உயிர் மூச்சு விடும் வரை அடித்துக் கொண்டிருந்தாள்...

இன்னொருவனை காலில் தொடங்கி தலைவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றாள்...

கடைசியாக பெண்ணான புவனாவை தன் இரும்புக் கரங்களால் கழுத்தை நெரித்து துடிக்கத் துடிக்கக் கொன்றாள்…

இவை அனைத்தும் அவன் கண்முன் நிலையில் நடந்தேறியது... அவ்வபோது அவனையும் மற்றவர்கள் அடித்துக் கொண்டிருந்தனர்…

அதனால் இதுவரை போதையில் கூட உளறாத சில உண்மைகளை கூறினான்…

அந்த மூன்று பெண்களையும் வாடகைத் தாய்களாக வெளிமாநிலங்களுக்கு கடத்தியதை கூறினான்…

அப்பெண்களின் வீட்டில் இவர்கள் யாருடனோ ஓடி போய் விட்டதாக கதை கட்டி அப்பெண்களுக்கே தெரியாமல் மயக்கம் அடைய செய்து கடத்தி இருந்தான்…

அங்கு அவர்களை கட்டாயமாக கருவுற செய்து பிள்ளை பெற செய்வர்….பிள்ளை பிறந்ததும் அவர்களை வீட்டு வேலைக்கு அமர்த்தி கொள்வார்கள்…

ஏனென்றால் வெளியே விட்டால் ரகசியம் வெளியாகிவிடும் என நினைத்து செய்வர்….

பெரும்பாலும் பிள்ளை பேரு இல்லாத பணம் படைத்த கல்நெஞ்சகாரர்கள் செய்யும் வேலை… இதற்க்கு உடந்தையாக ரகுமானை போன்றவர்கள்….

இப்பொழுது அப்பெண்கள் இருக்கும் இடத்தையும் கூறி விட்டான் ஆனால் அவை அனைத்தும் மமதிக்கே உள் நுழைய முடியாத பெரிய கோட்டைகள் என்பது சவால் தான்…

உடனே ஏதாவது செய்ய வேண்டும் ஆனால் அவன் கூறுவதை வைத்து பார்த்தால் இது காலம் கடந்த நிலைமை தான் ….

ஆனாலும் தெரிந்து கொண்டு எதுவும் செய்யாமல் இருப்பது மனித நேயமற்ற செயல்….

மமதி ஒரு நிலையில் இல்லை… தன் அண்ணன் இறந்த பொழுது கூட இப்படி ஒரு மனநிலை கிடையாது அவளுக்கு…

இவளுக்கு தெரிந்த பெரிய ஆட்களை எல்லாம் தேட ஆரம்பித்தாள்….

திரும்பி ரகுமானை பார்த்தாள் இவனை கொல்வதா இவ்வளவு சீக்கிரமா… இத்தனை பாதகத்தை செய்தவனை…

கண்டிப்பாக கூடாது என நினைத்தவள்… அவனை காவல் காக்கும் சக ஊழியர்களிடம் என்ன செய்ய வேண்டும் என கூறி மன அமைதிக்காக சஜனின் கல்லறையை நோக்கி சென்றாள்…

டேய் அண்ணா… நினைத்தவுடன் கண்கள் நீரால் நிறைந்தது…

அவளின் எண்ணங்கள் அவர்கள் இருவரும் சென்னை எக்ஸ்பிரஸ் இல் இருந்து இறங்கிய அந்த அதிகாலை பொழுதுக்கு சென்றது….

"மம்மு குட்டி ஏதோ ஒரு ஊருக்கு வந்துட்டோம் டா…"

"ஆமா டா சஜா… எல்லாரும் போற வழில போவோம் வா…"

"எங்க போக போறோம்னு தெரியாம எப்டி போகறது குட்டி…"

இவர்கள் இருவரும் தங்களுக்குள் பேசிக்கொண்டே சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்தனர்….

அதிகாலை பொழுது ஆதலால் பேப்பர் போடும் பிள்ளைகள் மற்றும் அவர்களின் எஜமானர்கள் மும்முறமாய் வேலை செய்து கொண்டு இருந்தனர்…

ஆங்காங்கே டீ கடைகளில் ஓரிருவர் நின்று இருந்தனர்…

மற்றபடி நகரின் ஆர்ப்பாட்டம் தொடங்கி இருக்கவில்லை…

அப்படியே நடந்து கொண்டே வரும் பொழுது நகரின் மிகவும் பிரசித்தி பெற்ற ஆதரவற்றோர் இல்லம் ஒன்று சஜனின் கண்களுக்கு விருந்து ஆனது….

அவனுக்கு மட்டும் தமிழ் எழுத படிக்க தெரியும்… மமதிக்கு பேச மட்டுமே தெரியும்… இருவரின் பெற்றவர்களும் தமிழ் தான்… ஊரில் ஜாதி பிரச்னையில் ஊரை விட்டு ஓடி வந்த காதல் ஜோடிகள் அவர்கள்…

"மம்மு குட்டி நம்ம தங்க சரியான இடம் கிடைச்சிடுச்சு..
உள்ள போய் பேசிக்கலாம்"

" சரி சஜா.."

கேட் உள் பக்கமாய் பூட்டி இருந்தது… இருவரும் ஒருவரை ஒருவர் ஏமாற்றமாய் பார்த்து விட்டு அங்கேயே அமர்ந்து விட்டனர்….

இவர்களின் போராட்டம் போதும் என ஆண்டவன் நினைத்தனோ என்னவோ…

அங்கேயே தூங்கி விட்டு இருந்த இருவரையும் உள் இருந்து வந்த அந்த காப்பக மேலாளர் தட்டி எழுப்பினார்….

அந்த விடியல் அவர்களுக்கான வாழ்க்கையின் விடியல் ஆக இருந்தது…

இவர்களை இல்லத்தில் சேர்த்துக்கொண்டு படிக்க வைத்தார் அவர்….அனைவருக்கும் பாதர்… இவர்களுக்கு காட் பாதர் ஆகி போனார்….

இல்லத்தில் கைக்கு கிடைக்கும் வேலைகளை செய்து கொண்டே படித்தனர் இருவரும்…

மமதிக்கு 10 வயது இருக்கும் தருணம்….பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியுடன் நடந்து கொண்டு இருக்கும் பொழுது இரு ஆண் பிள்ளைகள் அந்த பெண்ணை கையை பிடித்து இழுத்து வம்பு செய்தனர்…

அந்த நேரம் பார்த்து ஒரு பெண் காவலாளர் அந்த பிள்ளைகளை அடித்து பிழிந்து காவல் நிலையம் இழுத்து சென்றார்….

அந்த ஒரு சம்பவம் அவளின் வாழ்க்கையையே மாற்றி விட்டது என கூறலாம்…

அன்றே தன் காட் பாதரிடம் சென்று தனக்கு பெரிய போலீஸ் ஆக வேண்டும் தவறு செய்பவர்களை என் கையால் அடிக்க வேண்டும்… அதற்கு நான் என்னன்ன கற்று கொள்ள வேண்டும் என கேட்டு அவரை ஒருவழி ஆக்கி இலவச தற்காப்பு கலை பயில வழிவகை செய்தாள்…

இதன் காரணமாக அங்கு இருந்த அநேக சிறுவர் சிறுமியர் ஓரளவுக்கு தைரியத்தையும் சிலம்பம் கராத்தே போன்றவற்றையும் கற்று கொண்டனர்….

இன்றைய கால கட்டத்தில் படிப்பை விட தேவையானது தைரியமும் அதற்கு தேவையான உடல் மன பலமும் என இவர்களுக்கு தற்காப்பு கலை பயிற்று வித்தவர் அவ்வளவு அழகாக விலக்கினார்…

இவை அனைத்தும் மமதிக்கு கல்லில் வடிக்கபட்ட சிற்பம் போல் மனதில் பதிந்து விட்டது…

பள்ளியில் மற்ற மாணவர்களுக்கு பிரச்சனை என்றாலும் இவளும் இவள் இல்லத்து பிள்ளைகளும் முன் நின்று தங்கள் எதிர்ப்பை காட்டினார்….

முக்கியமாக ஈவ் டீசிங் என்பது அரவே ஒழிந்தது அந்த பள்ளியில்… போகும் வரும் வழியில் எவரேனும் அத்து மீறினால் பேச்சே கிடையாது… கையும் காலும் தான் தனது இருப்பை காட்டும் அவளுக்கு….

பலர் இவள் நடந்து வரும் பாதையில் வரவே அஞ்சும் அளவுக்கு தேறி இருந்தாள்…

சஜன் எல்லாவற்றையும் கற்று இருந்தாலும் மிகவும் சாது ஆகி போய் இருந்தான்…

இவள் தான் அவனுக்கும் சேர்த்து பேசினாள் அனைவரிடமும்…

கல்லூரி படிப்பை முடித்ததும் தான் இவர்களின் சோதனை காலம் மீண்டும் தொடங்கியது….

எங்கு செல்வது என்ன செய்வது என….

வாடகைக்கு வீடு பார்க்கும் அளவுக்கு இவர்களிடம் பெரிய தோகை இல்லை எனவே இருவரும் தனித்தனியாக மேன்ஷன் மற்றும் லேடீஸ் ஹாஸ்டளிலும் தங்கி கொண்டு பகுதி நேர வேலை பார்த்துக்கொண்டே அடுத்து படிக்க வேண்டியதை படித்தனர்….

இந்த சமயத்தில் தான் சஜன் மிகவும் மோசமான தனிமையை உணர்ந்தான்….

இவளாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை அந்த நேரம்…

மமதிக்கு ஐபிஸ் பரீட்சை நெருங்கி இருந்தது படிக்கவும் உடலை பலப்படுத்தவும் மிகவும் மெனக்கெட வேண்டி இருந்தது…

இந்த சமயத்தில் சஜன் செய்த நல்ல காரியம் மான்விழியின் நட்பை பெற்றது தான்…மேலும் ஒரு டிவியில் நிருபர் ஆக பணியில் சேர்ந்தான்...

நட்பு காதலாக மாறியது.. மான்விழி தான் சஜனை ப்ரொபோஸ் செய்தாள்.. இவன் அப்பொழுதும் என் தங்கையிடம் கூற வேண்டும் அப்புறம் தான் உன்னை நேசிக்க முடியும் என்றான்…

அவளுக்கு அழைத்து பேச முடியா நிலையில் இருந்தாள் மமதி… எந்த வெளி உலக தொடர்பும் இன்றி தன் ட்ரைனிங் எடுக்கிறாள்… அவளுக்கு எந்த இடையூறும் பிடிப்பது இல்லை… எனவே இது எதுவும் மமதிக்கு தெரியாது…

மான்விழியின் காதல் இவனை நட்பு எனும் கோடு தாண்டி நேசத்திற்கு அழைத்து சென்றது…

தங்கைக்கு அடுத்து தன் வாழ்வை சிறப்பிக்க வந்த வரமாக தான் மான்விழியை கண்டான் சஜன்…

சஜனும் வாழ்க்கையில் செட்டில் ஆக நினைத்து இருந்தான்...

மமதி அசிஸ்டன்ட் கமிஷனர் பணியில் சேர வாய்ப்பு கிடைத்தும் இவள் சிபிஐ ஐ தான் தேர்ந்து எடுத்தாள்…

இதற்கு சிறப்பு காரணம் எதுவும் கிடையாது அவளிடம்…

தோன்றியதை செய்து முடிப்பவள் அவ்வளவுதான்…

மீண்டும் சென்னை வந்து சேர்ந்ததும் சஜனை தன்னுடன் அழைத்து தனி வீடு பார்த்து தங்கிகொண்டாள்….

அப்பொழுது தான் சஜன் மான்விழியை பற்றி கூறினான்…

அவனும் தன் பணியில் நல்ல பெயர் எடுத்து இருந்தான் அதனால் இன்னும் சிறிது காலத்தில் திருமணம் குறித்து முடுவு செய்யலாம் என கூறினாள்… இவனும் ஆம் விழிக்கு அதெலேட்ஸ் இல் ஏதாவது சாதிக்க வேண்டும் என கூறியதாக சொன்னான்…

அதற்கு பிறகு அடிக்கடி மான்விழியை பற்றி பேசுவான்… வாழ்க்கை இனிதாக செல்வதாக நினைத்து இருந்தனர்….அச் சம்பவம் நடக்கும் வரை...

அடுத்து இருவரும் அவரவர் வேளைகளில் தீவிரம் ஆகிவிட்டனர்….

இவள் கையில் எடுத்த அனைத்து கேஸ்களையும் படு வேகமாக முடித்து கொடுத்தாள்… சில என்கவுண்டர்களும் நடக்கும் ஆனால் அது எதுவும் சிபிஐ கணக்கில் வராது….

சஜன் ஒரு நாள் மாலை ஸ்கூட்டர்ல் வந்து கொண்டு இருக்கும் பொழுது முன்னால் சென்று கொண்டு இருந்த ஒரு பெண்ணின் ஸ்கூட்டரை லாரி ஒன்று அடித்து இழுத்துச் சென்றது…

அந்தப் பெண் அதே இடத்திலேயே இறந்து விட்டு இருந்தாள்…

இந்த விபத்தை கண்டவன் கை கால்கள் உதறல் எடுக்க அந்த லாரியின் பின்னாலேயே சென்றான்…

அந்த லாரி எங்கெங்கோ சுற்றிவிட்டு கடைசியாக சென்று சேர்ந்த இடம் அந்தப் பழைய பேக்டரி…

இவன் அங்கு யாருக்கும் தெரியாமல் உள் நுழைந்து விட்டான்…

அங்கு ஏற்கனவே கூடியிருந்த சிலரையும் கண்டான் மேலும் அவர்கள் பேசிக்கொண்டதை தன் செல்பேசியில் ஒளிப்பதிவு செய்து கொண்டான்….

யாருக்கும் தெரியாதவாறு உள் நுழைந்தது போல் வெளியே வரமுடியவில்லை…

ஏனென்றால் அவன் கேட்ட கண்ட செய்தி அத்தனை பதட்டத்தை கொடுத்து இருந்தது… அதே பதட்டத்தில் ஓடி வந்ததால் ஒரு இடத்தில் இடித்துக்கொண்டான் அதில் பலமான சத்தம் உண்டாயிற்று…

அந்த சத்தம் அங்கு இருந்தவர்களை உஷார் அடைய செய்தது…

ரகுமானும் ரகுமானின் கைத்தடிகளும் இவனைக் கண்டு விட்டு ஓடி வந்தனர்…

அதற்குள்ளாகவே சஜன் தன் பேசியில் உள்ள ரெக்கார்டை மமதிக்கு அனுப்பியிருந்தான் .. மேலும் தன் உயிருக்கு ஆபத்து நேர விற்பதையும் கூறினான்…

'மமதி ஏற்கனவே கூறி இருந்த சாட்சிகள் இந்த ரெகார்டிங் தான்… அவளுக்கு இந்த சாட்சிகள் வைத்து பெரிதாக ஒன்றும் செய்ய முடியும் என தோன்றவில்லை…

ஏனென்றால் அதில் அன்று லாரி ஏற்றி கொல்லப்பட்ட பெண்ணினை பற்றி மட்டுமே பேசிக்கொண்டது பதிவு ஆகி இருந்தது….

அந்த பெண்ணுக்கு இவர்களின் ரகசியங்கள் ஓரளவுக்கு தெரிந்து விட்டதாகவும் இதற்கு மேல் அவளை விட கூடாது என்பதற்காகவும் கொன்றதாக பேசிக்கொண்டனர்…

இது போதாது அவளுக்கு அந்த ரகசியம் என்ன என கண்டு பிடிக்கவே இத்தனை மாதங்கள் ஆகி விட்டது…'

அந்த நேரம் மமதியால் அவளது செல்பேசியை எடுக்க முடியவில்லை ஆனால் சஜன் அனுப்பிய அனைத்து ஒளியும் ஒலியும் அவளது செல்பேசிக்கு வந்து சேர்ந்து இருந்தது…

மாட்டிக் கொள்ளப் போகிறோம் எனும் கடைசி தருவாயில் மான் விழியின் ஞாபகம் வந்தது…

ஆனால் அவளிடம் இப்பொழுது பேச முடியாது…

இவ்வாறு எண்ணிக்கொண்டு ஓடிக் கொண்டிருக்கும்போதே அவன் கயவர்களால் பிடிபட்டான்….

தொடரும்....
 
Top