• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வேவாள் :அத்தியாயம் 7(இறுதி )

மோகனா

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
87
அவர்களிடம் மாட்டிக்கொண்ட சஜன் செய்வது அறியாது நின்று விட்டான்...

முதலில் அவன் கையிலிருந்த பேசிய கைப்பற்றினர்…

கழுத்தில் தொங்கிக்கொண்டு இருந்த அடையாள அட்டையை பார்த்ததும் ஒரு நிமிடம் பயந்து பின் அவனை கொல்லும் வெறி வந்தது அவர்களுக்கு…

"டேய் டிவில வேலை செய்ற உனக்கு எதுக்கு இத்தனை வீர சாகசம்?" ரகுமான்

"ஹேய் உங்களை எல்லாம் சும்மா விட மாட்டேன் டா… போலீஸ் கிட்ட சொல்லி என்ன செய்றேன் பாரு…"சஜன் கொஞ்சம் உள்ளே சென்ற குரலில் கூறினான்..

"ஹாஹாஹா டேய் என்னடா இவன் இந்த நிலமைல காமெடி பண்ணிட்டு இருக்கான்…" ரகுமானுக்கு சிரிப்பு வந்துவிட்டது..

"அதான் நானும் யோசிச்சிட்டு இருக்கேன் பாஸ்…." கூட இருந்த ஒரு கைத்தடி

"பாஸ் இவனை பாக்க கொஞ்சம் மாக்கான் மாதிரி இருக்கான்… விட்டுடுவோமா?" இன்னொருவன்

"என்னடா பேசுற இவ்ளோ தொலைவு பாலோ பண்ணிட்டு வந்து இருக்கான் எப்டி விடறது….

ஏதாவது ஹை வே ல வச்சி முடிச்சிடுங்க….அவன் போனையும் அவனோட விட்டுடுங்க அப்போதான் சந்தேகம் வராது… அதுல இருக்க வீடியோவ டெலீட் பண்ணிடுங்க…"

"இது என்னோட முடிஞ்சிடாது டா….கண்டிப்பா நீ யார்கிட்டயாச்சும் மாட்டுவ… நல்ல சாவே வராது டா உனக்கு…"

"ஹாஹா சாபம் விட்றான்டா ஹாஹாஹா…
கூட்டிட்டு போங்க டா…"

"எஸ் பாஸ்…"

அதன் பின் அதே லாரியில் கூட்டிக்கொண்டு போய் ஹை வேயில் நிற்க வைத்து கொடூரமாக லாரி ஏற்றி கொன்றனர்….

இவை எதுவும் மமதிக்கு தெரியாது ஆனால் இவர்களால் தான் சஜன் கொல்லப்பட்டான் என்பது மட்டும் வெளிச்சம்…

கடைசியாக சஜனை பிணமாக அரசு பொது மருத்துவமனையில் தான் கண்டாள்….

மான்விழிக்கு விஷயம் தெரிவிக்க பட்டு வந்து சேர்வதற்குள் அனைத்தும் முடிந்து போய் இருந்தது….

அவளுக்கு தன் அண்ணனை தன் கையால் கொல்லும் அளவுக்கு ஆத்திரம் இருந்தது…ஆம் மமதி அவளிடம் எல்லா உண்மைகளையும் கூறி இருந்தாள்… மேலும் சஜனுக்கு ரகுமான் உன் அண்ணன் என்பது தெரியாதா என கேட்டு தெரிந்து கொண்டாள்…

மமதி உட்கார்ந்து அழுதது எல்லாம் சிறிது நேரம் தான்… எங்கள் குடும்பம் இப்படி தான் இருக்க வேண்டும் என இருந்தால் அப்படியே இருக்கட்டும்…

இனி எனக்கும் எதுவும் தேவை இல்லை என்பதை முடிவு செய்து கொண்டு வேலை வேலை என தன் வாழ்வை அமைத்து கொண்டாள்...

மான்விழியும் இனி விளையாட்டு மட்டும் தான் மனதை நெருங்க முடியும் என கூறி சென்று விட்டாள்…

இவை அனைத்தையும் நினைத்து பார்த்து கொண்டு இருந்த மமதி கொஞ்சம் இயல்பு நிலைக்கு மாறி தன் அலுவலகம் கிளம்பினாள்…


சில மாதங்களுக்கு பிறகு :

"மாறா??"

"என்னப்பா?"

"உன் கல்யாணத்தை பத்தி பேசணும் உட்காரு…"

"இப்போ வீடு இருக்கற நிலைமைக்கு இதெல்லாம் தேவையா?"

"இது தான் அவன் செய்த குற்றம்ன்னு முன்னாடியே தெரிஞ்சி இருந்தா நாங்களே சாப்பாட்டுல விஷம் வச்சி கொன்னு இருப்போம் மாறா…"

"இப்போ கூட அவன் போலீஸ் கிட்ட மாட்டாம தப்பிச்சி தலைமறைவு ஆனது தான் ரொம்ப கஷ்டமா இருக்கு…."

"அந்த பொண்ணுங்களுக்கு ஒரு நியாயம் கிடைக்க வேண்டாமா? மனசே ஆரல டா மாறா…."

"ஹ்ம்ம் அதுக்கு ஏன் இப்போ என் கல்யாண பேச்சு?"

"நீதான சொன்ன வீடு இருக்க நிலைமைன்னு… அந்த நிலைமையை மாத்த தான் இப்போ இத பேசுறோம்…"

"எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம் மானுக்கு பாருங்க…"

"என்ன நினைச்சிட்டு இருக்கீங்க ஒவ்வொருத்தரும்? அவ என்னடான்னா இந்த பக்கமே வர மாட்டேன்னு சொல்லிட்டு இருக்குறா? என்ன ரெண்டு பேரும் பேசி வச்சிட்டு இப்டி பண்றிங்களா?

பெத்த ஒன்னு கூட நம்ம பேச்சை கேக்குறது இல்ல…"

"இப்ப என்ன செய்யணும் உங்களுக்கு…."அவனுக்கு எரிச்சலாக இருந்தது…

மனம் முழுதும் மமதி தான் இருந்தாள் ஆனால் இன்னும் அவளிடம் கூட கூற வில்லை…
எப்படி எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவளிடம் பேசுவது என அவனுக்கு புரியவில்லை…

இவர்கள் வேறு கல்யாணம் கச்சேரி என தன்னை பிடித்து வைத்து எரிச்சல் ஊட்டுக்கிறார்கள் என நினைத்து கொண்டான்…

"நல்ல இடம் பொண்ணு வடிவா இருக்கா… ஓரளவுக்கு படிச்சி இருக்கா… நல்ல கலகலப்பான குணம் சொன்னாங்க இந்தா போட்டோ பாத்துட்டு சொன்னினா நாம ஒருமுறை நேர்ல போய்ட்டு வந்துடலாம்…

அப்புறம் இன்னொன்னு அவங்க நம்ம அளவுக்கு வசதி கிடையாது… அத ஒருநாளும் யாரும் சொல்லிகாட்டிட கூடாது… பொண்ணு தர்றதே பெரிய விஷயம்…"

"ஏன்?"

"இப்போ நம்ம குடும்பத்து பேர்ல யாருக்கும் நல்ல அபிப்ராயம் இல்ல.."

"அப்புறம் இவங்க மட்டும் எப்படி பொண்ணு குடுக்க ஒதுக்கிட்டாங்க?"

"உன்ன பத்தி எடுத்து சொல்லி தான் பொண்ணு கேட்டோம்…

கூடவே பொண்ணோட அம்மாவும் இங்க நம்ம கூட இருக்க கேட்டாங்க… அதையும் ஒத்துக்கிட்டோம்…"

"இதெல்லாம் சரி வரும்னு எனக்கு தோணல… கொஞ்சம் பொறுமையா இருங்க பாத்துக்கலாம்…"

"இல்லை மாறா அந்த பொண்ணுக்கு அவங்க அம்மா மட்டும் தான் வேற யாரும் இல்ல….அவங்களும் பொண்ண குடுத்துட்டு தனியா தான இருக்கனும் அதான் ஓகே சொன்னோம்…."

"ஓ… எனக்கு என்ன சொல்லன்னு தெரியல….எனக்கு இன்னைக்கு ஒரு நாள் அவகாசம் குடுங்க நைட் சொல்றேன்…."

"உன் இஷ்டம் மாறா…"

நேராக மமதியை சந்திக்க அவளின் அலுவலகமே சென்றான்…

"வாங்க மிஸ்டர் மாறன்… உங்க தம்பி பத்தி ஏதாவது தகவலா?"

"இல்லங்க அவனை பத்தி எதுவும் தெரியல… ஆனா இது கொஞ்சம் பர்சனல்… இங்க பேசலாமா இல்ல வெளிய எங்கயாவது?"

"ஓ சரி இருங்க நானும் லன்ச்க்கு வெளிய போகணும்….ஒரு ஒர்க் மட்டும் இருக்கு முடிச்சிட்டு வர்றேன்…"

"ஹ்ம்ம்…"

சிறிது நேரத்திற்கு பின் அவள் மீண்டும் அறைக்குள் நுழையும் பொழுது கை விரல் முட்டிகளில் ரத்தமாக இருந்தது…

மாறன் பார்த்ததும் அவசரமாய் அவள் கையை பற்ற சென்றான்… அதற்குள் அவள் குழாயில் கைகளை கழுவி இருந்தாள்…

"என்ன ஆச்சு இவ்ளோ ரத்தம் வாங்க மொதல்ல ஹாஸ்பிடல் போலாம்…"

"இது என்னோட ரத்தம் இல்ல மாறன்… இது ஒரு அக்யூஸ்ட்டோட ரத்தம்….இதோ கழுவியாச்சு…".மெல்ல நகைத்தாள் மமதி…

"ஓ…"

"சரி வாங்க போலாம்… எனக்கு லன்ச் அப்புறம் நிறைய ஒர்க் இருக்கு… சோ சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்…"

இருவரும் கிளம்பி ஒரு நடுத்தர உணவகம் ஒன்றிற்கு சென்றனர்…

"ஹ்ம்ம் இப்போ சொல்லுங்க மாறன் என்ன விஷயம்… ஏதாவது பிரச்னையா?"

"இல்ல மமதி….அது...அப்டி கூப்பிடலாம் ல?"

"யா சுயர் கூப்பிடலாம்…"

"அது எனக்கு உங்களை பிடிச்சி இருக்கு… வீட்ல கல்யாணம் பேசுறாங்க… எனக்கு உங்களை தவிர வேற யாரையும் நினைக்க முடியல… சூழ்நிலை சரி இல்லாம இருந்ததால உங்க கிட்ட சொல்ல முடியல…

ஆனாலும் இனி இத சொல்லாம இருக்க முடியாதுன்னு தான் சொல்லிட்டேன்…

நீங்க இப்பவே பதில் சொல்ல வேண்டாம் கொஞ்சம் யோசிச்சு கூட சொல்லலாம்…"

"எப்போ சொன்னாலும் இதான் என் பதில் மாறன்...எனக்கு கல்யாணம் மேலலாம் எந்த அபிப்ராயமும் இல்ல … அப்டி ஒரு குடும்ப அமைப்புலயும் நான் வளரல …

என்னோட கரியர் மட்டும் தான் என் லைப் மாறன்…"

"நா உங்க கரியர்ல எந்த விதத்திலும் தலை இட மாட்டேன் மமதி… ப்ளீஸ்…"

"எனக்கு இந்த மாதிரி ஒரு சிசுவேஷன் புதுசா இருக்கு மாறன்…

இதுவரைக்கும் என்னை பார்த்து பயந்தோ, மரியாதையிலோ ஒதுங்கி தான் போவாங்க எல்லாரும்…நீங்க தைரியமா அப்பறோச் பண்றீங்க ஆனா
அதுக்காகலாம் இந்த ப்ரபோசல ஆக்ஸ்ப்ட் பண்ண முடியாது மாறன்…"

"ப்ளீஸ் யோசிக்காம சொல்ல வேண்டாம் மமதி…"

"இதுல யோசிக்க ஒன்னுமே இல்ல மாறன்...நா சாப்பிட்டு முடிச்சிட்டேன்…கிளம்பலாமா?"

"ஹ்ம்ம்… அவ்ளோதானா மமதி?"

"எஸ் மாறன் ஆல் தி பெஸ்ட் பார் யுவர் பியூசர்…"

இதற்கு மேல் பேச்சு இல்லை என்பது போல் அவள் கிளம்பி போய்விட்டாள்…

மாறன் தான் அவ்விடம் விட்டு நகராமல் அமைதியாக உட்கார்ந்து இருந்தான்…

சாப்பிட்ட தட்டை எடுக்க வந்த பணியாள் கூட அவனை தொந்தரவு செய்யாமல் போய் விட்டான்….

ஒரு முடிவு எடுத்தவன் போல் வேகமாக எழுந்து வீட்டுக்கு சென்று விட்டான்….

மமதிக்கு இவன் பேசியதை யோசிக்க கூட நேரம் இல்லை…

இன்று மாலை அவளுக்கு மும்பைக்கு பிளைட்…

பல பெரிய ஆட்களிடம் பேசி அந்த மூன்று பெண்களையும் சந்திக்க அனுமதி வாங்கினாள் மமதி …

இத்தனை மாதங்கள் பாடுபட்டு அவர்களை அணுகி இருந்தாள்…அதன் பலனாக இன்று கிளம்புகிறாள்…

இவள் மும்பை விமான நிலையம் சென்று சேர்ந்ததும் முதலாவதாக சந்திக்க போகும் பெண்ணின் சம்பந்தபட்டவர் வந்து அழைத்து சென்றனர்….

அங்கு ஒருவரும் இவளிடம் எதுவும் பேச வில்லை…

அந்த பெண் இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்றனர்… சகல வசதிகளுடன் இருந்தது அந்த அறை…

கட்டிலில் திரும்பி அமர்ந்து இருந்த பெண்ணை
"விமலா…"என அழைத்தாள் மமதி

ஒரு விரக்தி புன்னகையில் "என்னை கண்டுபிடிக்க இவ்ளோ நாள் ஆச்சா உங்களுக்கு?"என கேட்டு இருந்தாள்...

"சாரி டா… அதிகாரம் எதுவும் பணம் கொண்டவர்களை செய்ய முடிவதில்லை மா…"

"அப்புறம் இப்போ மட்டும் எதுக்கு வந்தீங்க?"

"உனக்கு விருப்பம்னா இப்போ கூட நீ என்கூட வந்துடுன்னு கூப்பிட தான் டா வந்து இருக்கேன்… உன்ன பெத்தவங்க பாத்தா எவ்ளோ சந்தோஷ படுவாங்க தெரியுமா?"

"இந்த நிலைமையில என்னை பாத்தா என் அப்பா அம்மா எப்டி சந்தோஷபடுவாங்க மேடம்…" அப்டினு சொல்லிகிட்டே எழுந்து நின்றாள் விமலா …

இன்னும் இரண்டு மாதத்தில் பிள்ளை பெற்று எடுக்க போகும் வயிறு தான் இவள் கண்களுக்கு தெரிந்தது…

தெறிந்தது தான் ஆனாலும் மனம் ஆரவே இல்லை மமதிக்கு…

கடவுளே என மனதில் கூறிக்கொண்டே "இதற்கு அப்புறம் என்ன செய்வ விமலா… அப்பவாச்சும் என்கூட வருவியா? என் நம்பர் இதுல இருக்கு… உனக்கு எப்போ வேணும்னாலும் கூப்பிடு கண்டிப்பா வந்து நிப்பேன் டா..,"

"தேங்க்ஸ் மேடம் … இது என் பிள்ளை இல்லனாலும் என் ரத்தம் எப்படி விட்டு வர்றது…

இங்கயே இருந்தா நானே இந்த பிள்ளையை வளர்க்கலாம் சொன்னாங்க மேடம்…"

"உன்னை வெளிய விடக்கூடாதுன்னு தான் இது இந்த சலுகை விமலா புரிஞ்சிக்கோ…"

"இதுக்கு மேல எனக்கு புதுசா எந்த லைப்பும் இல்ல மேடம்…"

"இப்போ உன்கிட்ட என்ன பேசினாலும் உனக்கு புரியாது… நம்பர் பத்திரம்… சீக்கிரம் என்னை கூப்பிடுவேன்னு நம்புறேன்…"

மமதி அடுத்து அடுத்து சென்ற இரு பெண்கள் இருக்கும் இடத்திற்கு சென்றாள்… அங்கும் விமலா நிலை தான்…

ஒன்றும் செய்ய முடியா கோவத்தில் சென்னை திரும்பினாள்… முதல் வேலையாக ரகுமான் இருக்கும் இடத்திற்கு சென்றாள்…

அங்கு அவன் முழு பைத்தியமாக இவள் யார் என்பது கூட தெரியாத நிலையில் இருந்தான்…

அதே போல் இவன் அப்பா அம்மா பார்த்தால் கூட கண்டுபிடிக்க முடியாத உருவ மாற்றத்தில் இருந்தான்…

இப்பொழுது அவன் இருக்கும் இடம் சாலை ஓர பிச்சைக்காரர்கள் தங்கும் இடத்தில் இருந்தான்…

அங்கு பிச்சை எடுக்கும் ஒருவனுக்கு மட்டும் மமதி பற்றி தெரியும்… ஆனால் ரகுமான் யார் என தெரியாது…
அவன் வேறு எங்கும் போக முடியாதபடி அந்த பிச்சைகாரனிடம் கூறி இருந்தாள்…மேலும் அவன் சாகவும் கூடாது என்பதையும் சொன்னாள்...

கோவம் அடங்காமல் நான்கு மிதி மிதித்தாள்…அடையாளம் இழந்து தான் யார் என்பதே தெரியாமல் உயிருடன் இருப்பது என்பது தான் பெரிய தண்டனை என நினைத்து அவனை அப்படியே விடுவிட்டாள்...
……
மமதியின் நாட்கள் அவளிடம் கொடுக்கப்பட்ட கேஸ்களுடனும் என்கவுண்டர்களுடனும் சென்றது…அவளின் தனிமையை உணர விடாமல் பார்த்துக்கொண்டாள்...

மாறன் வீட்டில் பார்த்த பெண்ணை மணந்து கொண்டு இனிய இல்லறம் செய்கிறான் … மனதில் ஒரு ஓரமாய் மமதி…

ரகுமானை இழந்து மான்விழியை வீட்டுக்குள் கூட்டி வர முடியாமலும் திண்டாடினர் நீலனும் விஜயாவும் …

பாதிக்கப்பட்ட மூன்று பெண்களும் பிள்ளை பெற்று எடுத்து அவர்களுக்கு தாய் அன்பை காட்ட முடியாமல் பால் மட்டும் கொடுத்து கொண்டு இருந்தனர்…

மூவரும் எப்பொழுது வேண்டுமானாலும் மமதிக்கு அழைத்து பேசலாம் எனும் மனநிலையில் இருந்தனர்...

ஒவ்வொருவரின் காயங்களையும் காலம் ஆற்றலாம்… ஆறிய பின் வாழ்க்கை சிறக்கலாம்…

வேவாள்… வேவு பார்க்க ஆண்கள் மட்டுமே அக்கால அரசர்கள் ஒற்றர்களை நியமிப்பர்…

ஆனால் இன்று எத்தகைய செயலையும் சிறப்பாய் செய்ய பெண்கள் தயாராய் இருக்கிறார்கள்…

சிறிய கதையாக முடிந்து விட்டது… ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றிகள் 😍
 

மோகனா

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
87
மிக அருமையான, சுவாரஸ்யமான கதை சகி, வேவாள் சூப்பர் title ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு மா... நன்றி 🙏
 
Top