• வைகையின் முதலாம் ஆண்டு கொண்டாட்டம் ஆரம்பம்..

 • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
 • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வைகை சித்திரைக் கதைத் திருவிழா முடிவுகள்

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
465
தோழமைகளே..
வந்துவிட்டோம் வந்துவிட்டோம் போட்டியின் முடிவுகளை அறிவிக்க வந்துவிட்டோம்... ☺️😊

🥳 பதினேழு பேரில் ஐந்து பேர் முதல் மூன்று இடங்களை பிடித்திருக்க அந்த ஐந்தில் வரிசை படி யார் முதல் முதல் கடை வரை வரிசை பிடித்துள்ளனர் என்பதனை தெரிந்துகொள்வதற்கு முன்பு... 😃

மீண்டும் ஒரு நினைவூட்டல்... 😇 போட்டி ஆரம்பிக்கும் முதலே... முதல் பத்து வரிசை பிடிக்கும் நாவல்களை புத்தகமாக (ஆசிரியர்களின் விருப்பம் இருக்கும் பட்சத்தில்) குழுக்கள் முறையில் தேர்வு செய்து வெளியிடுவோம் என்று குறிப்பிட்டு இருந்தோம். 😃 எனவே இப்போது நான்கு முதல் பத்து தரவரிசை பிடித்திருக்கும் நாவல்களையும் குறிப்பிடும் நேரம் வந்துவிட்டது. 🥳

04.ஹில்மா தாவுஸ் - வண்ணமலரே வாசம் தருவாயா.?

05. தேவி கண்மணி - வைகைக் கரை காற்றே

06. லட்சுமி பாலா - திருவெண்பா

07. வித்யா வெங்கடேஷ் - நிறையும் நெஞ்சில் உறையும் வைராக்கியம்

08. மோஹனா - தேனியாத்தன் கரையினிலே

09. சங்கரி அப்பன் - இரண்டு நதிகள்

10. மகேஸ்வரி மணி - மீட்டாத வீணையின் இசை

😌 மீண்டும் கூறுகிறோம்... புள்ளி வித்தியாசங்களில், வரிசையில் முதல் ~ இறுதி என்று மாறி இருக்கலாம். ஆனால், எழுதிருக்கும் அனைத்து கதைகளும் சால சிறந்த வாசகர்களை கவரும் கதைகளே...

சரி... உங்கள் பொறுமையை சோதிக்க விரும்பாது... 😅

இதோ...

போட்டியின் வெற்றியாளர்கள்...🎉🎉🎉

🥳🎉 மூன்றாவது இடத்தை பிடித்திருக்கும் கதைகள்... 🎉🥳

(இருவருக்கும் தலா ஆயிரத்தி ஐநூறு இந்திய ரூபாய்)

🖤🤩 பாலதர்ஷா - எனக்குள் நீ இருந்தால் தவறே இல்லை... 🤩🖤

கதை குறிப்பு 🤗 ~ ராதா கிரிஷ்ணன் காதல் எந்தளவிற்கு புணிதமானதோ அதே அளவிற்கு புணிதமானது ஆண்டாள் பெருமாள் மேல் கொண்டிருந்த காதல்.

ஆம் அதே காதல் தான் நம் நாயகி நாயகன் மேல் கொண்டிருந்த காதலும்.. ஆள், உயரம், நிறம், குணம் பாராது.. தன் முதலாளி மேல் தந்தை கொண்டுள்ள மரியாதை தான்.. நாயகியின் மனதில் காதலாக மாறுகின்றது.

உயிராக நினைக்கும் தந்தையின் மரணத்தின் பின் அவளது வாழ்வே முற்றுலுமாக மாறிப்போகிறது.

சுயநினைவை இழந்தவள் போல் நடிப்பவள் வாழ்வில் அவள் நேசித்த காதல் கை கூடுமா..? அவளை அவன் ஏற்றுக் க்கொள்வானா.?

மற்றும்,

🖤🤩விஸ்வதேவி - கடம்பவனதில் ஒரு காரிகை 🤩🖤

கதை குறிப்பு 🤗 ~ தமிழ் மேல் தீராத காதல் கொண்ட கதாநாயகியும், குறும்புத்தனம் கொண்ட கதாநாயகனும் எதிர்பாராத விதமாக சந்தித்தால், அவர்கள் வாழ்க்கைப் பயணம் எப்படி மாறுமோ? இந்த பயணத்தில் இவர்கள் எதிர்க்கொள்ள போகும் ஜாதி வெறி, அரசியல் அதிகாரம், இவற்றையெல்லாம் கடந்து , தமிழையும் தமிழரின் வரலாற்று பெருமையையும், வைகையையும் காப்பாற்றி, வாழ்க்கையில் இணைய போகிறார்களா? இல்லை எதிரெதிர் திசையில் அவர்கள் பயணம் அமைய போகிறதா? என்பதை பற்றிய கதை தான் கடம்பவனத்தில் ஒர் காரிகை.

🥳🎉 இரண்டாவது இடத்தை பிடித்திருக்கும் கதைகள்... 🎉🥳

(இருவருக்கும் தலா இரண்டாயிரத்தி ஐநூறு இந்திய ரூபாய்)

🖤🤩 ஹேமாஶ்ரீ வள்ளி காந்தன் - வையை என்னும் குலகொடி 🤩🖤

கதை குறிப்பு 🤗 ~ஆசிரியரான பால முருகனும், அவனுடன் பணி புரியும் தங்க மீனாவும் ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர்..

பால முருகனின் மீது தன் எதிர் பார்ப்புகள் அற்ற காதலை வைக்கிறாள் நிறை மதி...

சூழ்நிலைகளும் உறவுகளும் இவர்களைச் சூழ்ந்து கொள்கையில்,
கனவுக்கும் நனவுக்கும் இடையில் மாட்டிக் கொள்ளும் இவர்களின் காதல் என்னவாகிறது என்பது தான் கதை..

மற்றும்,

🖤🤩 அதியா - காதல் யுத்தத்தில் வாகை சூடவா 🤩🖤

கதை குறிப்பு 🤗 ~ வெற்றிமாறன் தான் நடத்தும் காதல் யுத்தத்தில்,
தன் எதிரே களத்தில் நிற்கும் சூல் சுமந்த காரிகையாம் உதயாம்பிகையை சிறை எடுத்தான்.

சிறை எடுத்தவளின் உள உறுதியைக் கண்டு தன் உயிர் பூத்தான்.

மதுரையின் சுடு மணலையும், காஷ்மீரின் குளிர்பனியையும் மாங்கல்ய சரடு கட்டி இழுக்க, வலுக்கிறது திருமண பந்தம்.

அன்பிற்காக தன் ஆயுளையே அடமானம் வைத்தவளின் அன்பை வென்று வாகை சூடினானா காதல் யுத்தத்தில்?

🥳🎉 முதல் இடத்தை பிடித்திருக்கும் கதை... 🎉🥳

(தலா நான்காயிரம் இந்திய ரூபாய்)

🖤🤩 நந்தினி சுகுமாரன் - இளவேனில் அதிரல் 🤩🖤

கதை குறிப்பு 🤗 ~ பிடித்தமில்லா திருமணத்தில் இணையும் ஜோடி, விவாகரத்திற்குத் தயாராகும் ஜோடி, இணைந்தே இருந்தாலும் மனதளவில் விலகி இருக்கும் ஜோடி.. மூன்று இணைகளும் தேராட்டத் திருவிழாவிற்கு வருகை தர, அதன்பின்பு அவர்களது வாழ்வில் ஏற்படும் மாற்றமே இளவேனில் அதிரல்!

கலந்துக்கொண்ட, கலந்துக்கொண்டு வைகையின் வெற்றி வாகை சூடிய அனைத்து எழுத்தாளர்களுக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்...

(குறிப்பு:

💫 மூன்று பேர் அல்லாது ஐந்து பேராக முதல் இடத்தை பிடித்திருப்பது நாங்களும் எதிர் பாரா முடிவே! எனவே பரிசு தொகையை சற்று பிரித்து பகிருந்து கூறி இருக்கிறோம்... (இதில் மனவருத்தம் யாருக்கும் இருக்கும் பட்சத்தில் எங்களை தனியாக தொடர்புகொண்டு பேசுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

💫 யாருக்கேனும் தங்கள் கதையை வைகையின் கீழ் பதிக்க எதிர் விருப்பம் இருப்பின் தெரிவிக்கவும்.

💫 வேறேதேனும் சந்தேகம் இருப்பின் எங்களை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்ளவும்)

😊 வாசகர்களே... போட்டி முடிந்தாலும் எழுத்தாளர்களின் முயற்ச்சி முடியவில்லை... எனவே படிக்காதவர்கள் படித்து உங்கள் கருத்துக்களை பகிரவும். வாசகர்களின் கருத்துக்களை விட சிறந்த பரிசு ஒரு எழுத்தாளருக்கு கிடையாது. எனவே, தொடர்ந்து ஆதரவு தாருங்கள்... எழுத்தாளர்களுக்கும் வைகைக்கும்...

நன்றி
வைகை குழு.
 

Attachments

 • WhatsApp Image 2022-09-15 at 11.20.21 AM.jpeg
  WhatsApp Image 2022-09-15 at 11.20.21 AM.jpeg
  85.4 KB · Views: 15
 • WhatsApp Image 2022-09-15 at 11.20.09 AM.jpeg
  WhatsApp Image 2022-09-15 at 11.20.09 AM.jpeg
  87.9 KB · Views: 20
 • WhatsApp Image 2022-09-15 at 11.21.12 AM.jpeg
  WhatsApp Image 2022-09-15 at 11.21.12 AM.jpeg
  87.1 KB · Views: 19
 • WhatsApp Image 2022-09-15 at 11.19.21 AM.jpeg
  WhatsApp Image 2022-09-15 at 11.19.21 AM.jpeg
  88.3 KB · Views: 21
 • WhatsApp Image 2022-09-15 at 11.21.22 AM.jpeg
  WhatsApp Image 2022-09-15 at 11.21.22 AM.jpeg
  90.6 KB · Views: 18
Top