• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வைகை நவராத்திரி கொலு வைபவம்

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
வணக்கம் நண்பர்களே 🤩

IMG-20211008-WA0010.jpg


உமையவளை வணங்கும் உன்னத விழாவான
நவராத்திரி வைபவம் இனிதே தொடங்கியிருக்கிறது.

கொலு வைத்து வழிபட்டு, ஒன்பது நாளும் விதவிதமான அலங்காரத்துடன் காட்சியளிப்பவளை கண் குளிர நாம் காண்போம்.

இதோ அதை இன்னுமே சிறப்பிக்கும் வகையில் நம் வைகை தளம் நடத்தும் 'நம்ம வீட்டு கொலு' போட்டியை இந்த நன்னாளில் ஆரம்பிக்கிறோம்.

நவராத்திரி போட்டிகள் பல நாம் கேட்டிருக்கிறோம், கலந்தும் இருப்போம். இது சற்று மாறுபட்ட ஒன்று.

ஒன்றிலிருந்து ஒன்பது நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் உங்கள் வீட்டில் அமைந்திருக்கும் கொலுவை புகைப்படங்கள் எடுத்து, அதில் இடம்பெற்றிருக்கும் உங்கள் மனதிற்கு பிடித்த பொம்மை, இந்த வருடத்திற்காக உங்களின் 'கொலு theme', அலங்காரங்கள், பிரசாதங்கள் என என்னென்ன நீங்கள் சொல்ல விரும்புகின்றீரோ அதை எழுதி உடன் அவற்றின் புகைப்படத்தையும் இணைத்து நம் வைகை தளத்தில் 'நம்ம வீட்டு கொலு' தலைப்பில் போஸ்ட் செய்யவும்.

சிறந்த புகைப்படம், கருத்து, தீம் போன்றவற்றிக்கு சிறப்பு பரிசு வைகை தளத்தில் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்‌.

உங்கள் படைப்புகளை போஸ்ட் செய்ய வேண்டிய கடைசி நாள் 16-10-2021 (சனிக்கிழமை).

முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும்.

முழு மனதுடன், அம்பாளை வணங்கி நவராத்திரியைக் கொண்டாடுவோம்.

வழிமுறை:

* வைகை தளத்தில் லாகின் செய்து கொள்ளவும். லாகின் இல்லாத பட்சத்தில் தளத்தில் register செய்த பின்னர் நீங்கள் கீழ் கண்டவற்றை செய்யலாம்.

* 'வாகை' பக்கத்திற்கு சென்று அங்கு 'நம்ம வீட்டு கொலு' தலைப்பின் கீழே post thread என்ற பிங்க் நிற பட்டனை கிளிக் செய்து உங்களின் படைப்பை பதிவேற்றம் செய்யவும்.

* பின் படைப்பின் கடைசியில் நீல நிறத்தில் இருக்கும் 'post thread' பட்டனை கிளிக் செய்தால் உங்கள் படைப்பு வெற்றிகரமாக பதிவேற்றம் ஆகியிருக்கும்.

நன்றி,

வைகை - குழு.
 
Top