• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

திவ்யதுர்ஷி

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 28, 2022
Messages
448
🌺மலர் : 04🌺

கோயிலில் இருந்து வெளியே வந்த சித்துவின் கரத்தை பிடித்து இழுத்து அவளை கோயிலின் குளத்தின் அருகே அழைத்து வந்தாள் அவளின் அன்புத் தங்கை பவி….. அந்த இடத்தில் பவியைப் பார்த்த சித்து

"என்ன பவி? எதுக்கு இப்பிடி என்னை பிடிச்சி இழுத்துட்டு வர்ற?"

"அக்கா உனக்கு ஒரு விசயம் தெரியுமா?"

"சொன்னா தானே தெரியும் பவி"

"சரி நான் சொல்லுறதை நல்லா கேளு…" என்றவள் அவள் கேட்ட விசயத்தை சித்துவிடம் சொல்ல ஆரம்பித்தாள். பவி அறையில் இருக்கும் போது பிருந்தா கணபதி வேதா இவங்க மூன்று பேரும் சேர்ந்து பேசிக்கிட்டு இருந்ததை சித்துவை காணவில்லை என்று பார்க்க வந்த பவி கேட்டாள்…

" அம்மா அப்பா எல்லாம் நம்ம பிளான்படி நடக்கணும்"

"சரி பிருந்தா… ஆனால் பவியை நெனச்சாதான்.."

"அவ சின்னப் பொண்ணு.. அவளை விடுங்க.. எந்த காரணம் கொண்டும் சித்துவை நம்ம கூட கூட்டிட்டு போகக் கூடாது…"

"அதெல்லாம் சரிதான்… ஆனால் அவளோட ஐந்து இலட்சம் ரூபா சொத்து வீணா போகுதே… "

" நீ வேற உங்கிட்ட சொல்லிட்டன்… அவளோடது வெறும் ஐந்து லட்சம் ஆனால் நம்ம பிருந்தா எவ்வளவு பெரிய பணக்கார இடத்தை பிடிச்சிருக்கா தெரியுமா? "

" சரி சரி நாம அங்க எந்த பிரச்சினையும் இல்லாம போயிடலாம்தானே.. "

" அம்மா ஒரு பிரச்சனையும் வராது.. கிரண் நம்மளை பார்த்துப்பான். "

" ஆனாலும் நம்ம வீராவோட டென்டர் amount கிரண்கிட்ட சொன்னதுக்கு நிச்சயமா அந்த வீரா இங்க நாம இருந்தா கொண்ணுடுவான்.. அதனால அவனோட ஆளுங்க வர முதல்ல நாம போயிடணும் . "

" ஏங்க உங்களுக்கும் அவனை பார்த்தா பயமா? "

" ஏய் அவனோட பெயரை சொன்னா இந்த பிஸ்னஸ் உலகமே பயப்படும் அப்படிப்பட்டவன்…அந்த வீரா… அவனுக்கு துரோகம் பண்றாங்கன்னு தெரிஞ்சிது அவங்களை கொன்னுட்டுதான் மற்ற வேலை பார்ப்பான்… ரொம்ப கோவக்காரன்.. "

" ஏன் அப்பா அந்த வீராவோட ஆளுங்க இங்க வாரதுக்கு முன்னாடியே நம்ம போயிடுவம்.. ஆனால் இங்க இருக்கிற சித்துவோட நிலைய யோசிச்சு பாருங்க.. அவன் அவளை கொன்னுடுவான்.. அதுக்குப் பிறகு அவளோட சொத்தும் நமக்குதான்… " என்று சிரித்தாள் பிருந்தா.. அவளுடன் சேர்ந்து கணபதியும் வேதாவும் சிரித்தனர்..

இதை வெளியே இருந்து கேட்ட பவிக்கு அவர்களை கொன்று போடும் அளவிற்கு கோபம் வந்தது.. இருந்தாலும் இப்போ சித்துவை எப்பிடியாவது காப்பாற்றியாகணும் என நினைத்தவள் அவர்களுக்கு தெரியாமல் அங்கிருந்து சித்து சென்றிருந்த கோயிலுக்கு வந்தாள்…

நடந்ததை சொல்லி முடித்ததும் தனது அக்காவை பார்த்தாள். அவள் எதுவும் பேசவில்லை…. அமைதியாக இருந்தாள். அவளைப் பார்த்த பவி "அக்கா" என்றாள்.

"சொல்லு பவி"

"என்ன அக்கா.. நான் இவ்வளவு பெரிய விசயம் சொல்லிட்டிருக்கிறன் நீ பேசாம இருக்கிற?"

"நான் என்ன சொல்லணும்னு நீ எதிர்பார்க்கிற?"

"அக்கா.."

" ஆமா பவி… எனக்கு என்ன சொல்றதுனு தெரியல்லை…. இப்போ அவங்க பேசறதை நீ கேக்கலனா என்ன நடந்திருக்கும்? என்ன விட்டுட்டு போயிருப்பாங்க… அவங்க வந்து என்ன கொன்னுருப்பாங்க… அவ்வளவு தானே…"

" அக்கா லூசா நீ… நான் இதை எவ்வளவு சீரியசாக சொல்றன்… நீ நான் ஏதோ விளையாட்டுக்கு சொல்ற மாதிரி இருக்க? "

" என்னோட மனசு எல்லாம் மறத்துப் போச்சு பவி… "

" அக்கா வேணும்னா நீயும் நானும் எங்கையாவது போயிடலாம் அக்கா.. "

" வேணாம் பவி… நீ அவங்ககூட போ… வர்றவங்களை நான் பார்த்துக்கிறன்… "

" நீ என்ன அக்கா பார்த்துப? அதோட உன்னை தனியா விட்டுட்டு என்னால போக முடியாது…. வா அக்கா இப்பவே வீட்டுக்கு போய் என்னன்னு கேட்ப்போம்" என்ற பவி அவளை பிடித்து இழுத்தாள். பவியின் கைகளை விலக்கிய சித்து..

" பவி நான் சொன்னா கேப்பல… "

" ஆமா அக்கா "

" சரி நீ வீட்ல சண்டை போடக் கூடாது.. அம்மா அப்பாவ நல்லா பார்த்துக்கணும்… "

" அக்கா நான் என்ன சின்னக் குழந்தையா?? காலேஜ் பைனல் இயர்.. நீ இப்பிடி சொல்லிட்டு இருக்கிற?"

"பவி நான் சொல்றன்ல.. அவங்களை நல்லா பார்த்துக்க… பிருந்தாவும் பத்திரம்… "

"எதுக்கு அக்கா இதையெல்லாம் சொல்லிட்டு இருக்க? "

" தெரியல்ல பவி சொல்லணும் போல தோணிச்சு… சரி நீ வீட்டுக்கு போ… நான் கொஞ்ச நேரம் கழித்து வாரன்"

" சரி அக்கா சீக்கிரம் வந்திரு.. "

" சரிடா கண்ணா" என்றவள் பவிக்கு நெற்றியில் முத்தமிட்டு அனுப்பினாள்.

பவி சென்ற பின்னரும் கொஞ்ச நேரம் குளத்தருகே இருந்த சித்து ஒரு முடிவுடன் கோயிலை விட்டு வெளியே வந்தாள்…

வெளியே வந்த சித்து தன்னைச் சுற்றி நடப்பதை அறியவில்லை.. ஒரு வேளை அவள் அறிந்திருந்தாலும் அவளால் எதுவும் செய்ய முடியாது…

சித்துவின் காதுகளில் அருகிலிருந்த டீக்கடையில் இருந்து வந்த பாடல் கேட்டது..

புல்லாங்குழலே! பூங்குழலே!

நீயும் நானும் ஒரு ஜாதி

புல்லாங்குழலே! பூங்குழலே!

நீயும் நானும் ஒரு ஜாதி

என் உள்ளே உறங்கும் ஏக்கத்திலே

உனக்கும் எனக்கும் சரிபாதி…..

என்ற பாடலை கேட்டுக் கொண்டு நின்றவளை மயக்க மருந்தினை முகத்தில் அடித்து ஒரு காரில் கடத்திச் சென்றனர்….

"அம்மா…"

"என்ன பிருந்தா?"

"எல்லாம் ரெடியா? கிரண் கார் அனுப்பிட்டாரு.. கார் வந்துக்கிட்டு இருக்கு கார் வந்ததும் போயிடணும்"

"சரி டி நானும் உங்க அப்பாவும் ரெடி.. பாரு அவரும் வந்திட்டாரு"

"என்ன போலாமா?"

"போலாம் பா கார் வந்திட்டு இருக்கு"

"சரிமா.. ஆமா எங்க பவியை காணவில்லை"

"பவி… பவி… எங்கடி இருக்க அப்பா கூப்பிடிறாரு வா" என்றார் வேதா.

" ஆ.. வந்திட்டன் " என்று வந்தாள் பவி

" பவி எல்லாவற்றையும் எடுத்து வச்சிட்டியா? "

" ஆமா அம்மா… "

"சரி கார் வந்ததும் போயிடலாம்"

" அம்மா சித்து அக்கா கோயிலுக்கு போனா இன்னும் வரலையே அம்மா அவளை விட்டுட்டு எப்பிடி போறது? "

" அவ எதுக்கு உனக்கு.? அதுதான் நாங்க எல்லாம் இருக்கிறம் தானே"

"அதுக்காக அக்காவை மட்டும் எப்பிடி தனியா விட்டுட்டு போறது"

" இங்க பாரு பவி.. உனக்கு உயிரோட இருக்கணும்னா எங்ககூட வா.. இல்லைனா இங்கையே அவகூட இரு.. ஆனால் உயிரோட இருக்க மாட்ட அதை மட்டும் நல்லா ஞாபகம் வச்சிக்கோ " என்றாள் பிருந்தா..

பவிக்கு சித்து கோயிலில் வச்சு சொன்னது ஞாபகம் வந்தது.. அதனால்" சரி நான் உங்ககூட வர்றன்"

" சரியான முடிவு எடுத்திருக்க.. இனிமேல் உன்னோட வாழ்க்கை எப்பிடி இருக்கப்போகுதுனு பாரு"

" அதையும் பார்க்கலாம்" என்றாள். சிறிது நேரத்தில் கிரண் அனுப்பிய கார் வந்தது.. அதில் அவர்களது பொருட்களை ஏற்றிவிட்டு அவர்களும் உள்ளே அமர்ந்ததும் கார் சென்றது…

………………………………………………….

" ஐயோ அம்மா…. தலைவலி உயிர் போகுதே… கண்ணை வேற திறக்க முடியலையே " என்று சொன்னபடி தனது கருவிழிகளை மெதுவாக திறந்தாள் சித்து..

அங்கே அவள் இருந்த நிலையை பார்த்து பயந்து விட்டாள். வாங்க அவள் இருந்த நிலையை பார்க்கலாம்..

முத்துவும் அவனது ஆட்களும் சித்து வீதியில் நின்றிருந்த நேரத்தில் மயக்க மருந்து கொடுத்து அவளை கடத்திக் கொண்டு வீரா சொன்ன மாதிரி அவனது பீச் ஹவுஸ்க்கு கொண்டு வந்தனர்.

அவர்கள் அங்கு வரும் போதே ஹாலில் வீரா உட்கார்ந்து தனது வேலையை செய்து கொண்டு இருந்தான். இவர்கள் இந்த நேரத்தில் அங்கு லயனை எதிர்பார்க்கவில்லை..

"பாஸ் அந்த பொண்ணை எந்த அறையில கட்டிப் போட?"

"அந்த பொண்ணு எங்க?"

"கார்ல படுக்க வச்சிருக்கிறம் பாஸ். தூக்கிட்டு வரவா? "

"இல்லை வாங்க…" என்றவன் அவர்களுடன் சித்து படுக்க வைக்கப்பட்டிருந்த கார் அருகே வந்தான். முத்துவைப் பார்க்க முத்து கார் கதவை திறந்தான்.

கார் சீட்டில் மயக்கத்தில் இருந்த சித்துவைத் மெல்லத் தூக்கிக் கொண்டு வீட்டினுள் சென்றான்.

நடப்பதைப் பார்த்து வியந்து நின்றான். அப்போது முத்து அருகில் நின்ற அவனது நண்பன் "மச்சான் என்னடா நடக்குது இங்க? பொண்ணுங்க என்றாலே பத்தடி தள்ளி நிற்கிறவரு நம்ம பாஸ் ஆனால் இப்போ ஒரு பொண்ணை தன்னோட கையால் தூக்கிட்டு போறாரு"

"ஆமாடா நானும் அதைத்தான் பார்த்திட்டு இருக்கிறன்…"

"நான் ஒண்ணு சொல்லவாடா?"

"என்னடா?"

"நம்ம பாஸ் அந்த பொண்ணை தூக்கிட்டு போறதை பார்த்தா ஒரு பாட்டு ஞாபகத்துக்கு வருது மச்சான்"

" என்ன பாட்டுடா? "

" கனவா... இல்லை காற்றா...

கனவா.. இல்லை காற்றா...

கையில் மிதக்கும் கனவா நீ...

கை கால் முளைத்த காற்றா நீ

கையில் ஏந்தியும் கனக்கவில்லையே...

நுரையால் செய்த சிலையா நீ...

இப்படி உன்னை ஏந்திக் கொண்டு..

இந்திர லோகம் போய் விடவா...

இடையில் கொஞ்சம் வலி எடுத்தாலும்..

சந்திர தரையில் பாயிடவா?........"

" டேய் இதை நம்ம பாஸ் மட்டும் கேட்டாரு உன்னோட சேர்த்து என்னையும் கொன்னுடுவாரு. வாடா உள்ள போகலாம்"

" சரி டா"

அங்கே உள்ளே சோபாவில் சித்துவை படுக்க வைத்து விட்டு மீண்டும் தனது வேலையை செய்து கொண்டிருந்தான் வீரா. இவர்கள் மெதுவாக அவன் அருகில் வந்தனர்.

" பாஸ்"

" ம்"

" பாஸ் இந்த பொண்ணை எங்க கட்டிப் போட? "

" அதெல்லாம் நான் பார்த்துக்கிறன் நீங்க போங்க"

இருவரும் போகாமல் அமைதியாக நின்றனர்.

"உங்களை போக சொன்னன்" என்றான். அவ்வளவுதான் இருவரும் நொடியில் அந்த இடத்தை காலி செய்தனர்.

தனது வேலையை முடித்து விட்டு சித்துவைப் பார்த்தான். அப்போதும் சித்து மயக்கம் தெளிந்து எழும்பவில்லை.." இவனுங்க ஓவர் டோஸ் கொடுத்திட்டானுங்க போல" என நினைத்த வீரா அவளை மீண்டும் தூக்கிச் சென்று அவனது அறைக்கு பக்கத்து அறையிலுள்ள கட்டிலில் படுக்க வைத்தான். பின் சிறிது நேரம் அவளைப் பார்த்துக் கொண்டு நின்றவன் தனது அறைக்கு திரும்பி விட்டான்.

சதீஷ் வீராவுக்கு போன் பண்ணினான்.

" சேர் "

" சொல்லுங்க சதீஷ் "

"இப்போ நைன் தேட்டிக்கு அமெரிக்க கம்பனி கூட உங்களுக்கு ஆன்லைனில் மீட்டிங் இருக்கு…"

"இப்போ டைம் என்ன?"

"இப்போ நைன் சேர்"

"சரி மீட்டிங்கு எல்லாம் ரெடி பண்ணிடுங்க…"

"சரி சேர்"

"ம்…" என்றவன் போனை கட் பண்ணி விட்டு மீட்டிங்கு ரெடியாகினான். சரியாக நைன் தேட்டிக்கு மீட்டிங் ஆரம்பித்தது…

அப்போதுதான் சித்து மயக்கத்தில் இருந்து விழித்தாள். எழுந்தவள் அதிர்ச்சியடையக் காரணம் அவள் ஒரு மெத்தையில் படுத்திருந்தாள்... ஆம் அவள் சிறுவயதில் தாய் தந்தையோடு இருக்கும் போது மெத்தையில் படுத்திருந்தாள்... அதன் பிறகு அவள் மெத்தையில் தூங்கியது இல்லை.. அதுதான் அவள் அதிர்ச்சியடைந்தாள்.

"நான் இப்ப எங்க இருக்கேன்? நான் கோயில்ல இருந்து சாகத்தானே போனன்.. இங்க எப்பிடி வந்தேன்? யாரும் சாகப் போன என்னை காப்பாத்தியிருப்பாங்களோ?" என நினைத்தவள் மெதுவாக கட்டிலை விட்டு இறங்கி அறைக்கு வெளியே வந்தாள்..

பக்கத்து அறையில் வீரா தனது மீட்டிங்கை முடிந்தது சதீஷ்க்கு போன் பண்ணி அவன் செய்ய வேண்டிய வேலைகளை கூறிக் கொண்டு இருந்தான். அவனது சத்தம் சித்துக்கு கேட்டது. சித்துவும்" உள்ள யாரோ இருக்கிறாங்க. அவங்ககிட்ட என்ன நடந்திச்சினு கேட்கலாம்" என நினைத்தவள் அவனது அறைக்குள் கதவைத் திறந்து கொண்டு சென்றாள்..

(ரொம்ப பெரியாள் சித்து நீ... அவனைப் பார்க்க அவனவன் ரெண்டு மூணு மாசம் வெயிட் பண்ணுவான். நீ இப்பிடி பொசுக்குனு உள்ள போயிட்ட.. என்ன பண்ணப் போறான்னு தெரியலையே??")

வீரா பால்கனியில் நின்று சதீஷ் உடன் பேசிக் கொண்டிருக்கும் போது தனது அறைக் கதவு திறபடும் சத்தம் கேட்டது.. சதீஷிடம் போனை வைக்குமாறு கூறிவிட்டு அறைக்குள் வந்தான்..

அவனைப் பார்த்து சித்து கேட்ட கேள்வியில் வீரா அதிர்ச்சியடைந்தான்.

சித்து என்ன கேட்டாள்??

மலரும்……….....................
 
பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,976
சித்து என்ன கேட்டிருப்பா, என்ன இன்னும் கொல்லாம இருக்கீங்க ன்னு கேட்டிருப்பா 🙄🙄🙄🙄🙄
 
Malarthiru

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 15, 2023
Messages
80

என்னம்மா ஒரே கேள்வியில எங்க லயன்க்கு shock குடுத்துட்ட
என்ன ஏன் காப்பாத்தனிங்கனு கேட்டு இருப்பாளா
 
😂😂
 
Top