• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

திவ்யதுர்ஷி

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 28, 2022
Messages
448
🌺மலர் : 05🌺

மயக்கத்தில் இருந்து விழித்த சித்து மெல்ல அறையை விட்டு வெளியே வந்தாள். அவள் யாராவது இருக்கிறார்களா? என்று பார்க்க அவளுக்கு லயனின் குரல் கேட்டது. அதை கேட்ட சித்து மெல்ல மெல்ல வீராவின் அறைக்குள் வந்தாள்.

அறைக்கதவு திறக்கும் சத்தம் கேட்டு சதீஷீன் போனை கட் பண்ணி விட்டு அறைக்குள் வந்தான் வீரா.

வீராவைப் பார்த்த சித்து " நீங்க ஏன் என்னை காப்பாற்றினீங்க?" என கேட்டாள்.

அவள் கேட்ட கேள்வியில் அதிர்ச்சியடைந்த வீரா. "என்ன கேட்ட உன்னை காப்பாற்றினதா?" என கேட்டவன் சத்தமிட்டு சிரிக்க அதில் பயந்த சித்து " நீங்க யாரு? நான் எப்பிடி இங்க வந்தன்?" எனக் கேட்டாள்..

"நான் யாரா? நான் யார்னு உனக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை. உன்னை எதுக்கு இங்க கடத்திட்டு வந்திருக்கன் தெரியுமா? ."

" என்ன கடத்திட்டு வந்திருக்கிறீர்கள்? என்ன எதுக்கு கடத்தியிருக்கிறீங்க?"

"உன்னை வச்சு உன் அப்பாவை பழி வாங்க.. " என்றான்.

அப்போதுதான் பவி சொன்னது சித்துவுக்கு ஞாபகம் வந்தது.

" அப்போ நீங்கதான் வீராவா? "

" ஓ.. என்ன பற்றி தெரியுமா? "

தன்னை அவர்கள் இத்தனை நாள் பார்த்துக் கொண்டதற்கு பிராயச்சித்தம் பண்ண விரும்பிய சித்து வீராவிடம் " பவி சொல்லிருக்கிறா. அப்பா தெரியாம தப்பு பண்ணிட்டாரு பிளீஸ் அவங்களை ஒன்னும் பண்ணிடாதீங்க பிளீஸ்.. " என்றாறள்

"அப்பிடி விட முடியாது.. அவங்க பார்த்த வேலையால என்னோட மூணு கோடி ரூபாய் நஷ்டம் தெரியுமா? அதுமட்டுமல்ல எனக்கு நம்பிக்கை துரோகம் பிடிக்காத ஒரு விசயம் அதை பண்ண உன்னோட அப்பாவை சும்மா விட்டுடுவனா? அந்த கணபதிக்கு அவனோட பொண்ணு அழுதா தாங்கிக்க முடியாது என்று எனக்கு தெரியும். அதுதான் உன்னை வச்சு அவன பழி வாங்க போறன்.. இந்த வீராவோட தண்டனையே வேற மாதிரி இருக்கும். இங்க நீ அனுபவிக்க போற வேதனையில அந்த கணபதி கஸ்ரப்படணும். " என்றான் கண்கள் சிவக்க….

அவனைப் பார்த்து பயம் வந்தாலும் தன்னை திடப்படுத்திக் கொண்டு" பிளீஸ் அவங்களை ஒண்ணும் பண்ணிடாதீங்க.. அவங்க செய்த தப்பை இந்த ஒரு தடவை மன்னிச்சிடுங்க. அவங்க பண்ணின தப்புக்கு என்ன தண்டனை வேணுமானாலும் எனக்கு கொடுங்க.. அவங்களை விட்டுடுங்க"

"தண்டனை கொடுக்க எனக்கு தெரியும் அதை நீ சொல்ல தேவையில்லை..நீ எங்கிட்ட இருக்கிற விசயத்தை கணபதிக்கு சொல்லி அவனை கஸ்ரப்படுத்தணும்ல " என்றவன் கணபதிக்கு போன் பண்ணினான்.

………………………………………………..

இது அம்பானி
பரம்பர அஞ்சாறு
தலமுறை ஆனந்தம்
வளர்பிறைதான்
நம்ம கொட்டுன்னு
ஒரு முறை சொன்னாக்க
பலமுறை கொட்டாதோ
பண மழைதான்

நாம முன்னேறும்
படிக்கட்டு என்றாச்சு நம்
வாழ்வு கிரிக்கெட்டு இப்போ
ஒன்பது கிரகமும் ஒன்னாக
இருக்கு ஓஹோன்னு நம் ஜாதகம்

ஆடாம ஜெயிச்சோமடா
நம் மேனி வாடாம ஜெயிச்சோமடா
ஓடாம ரன் எடுத்தோம் சும்மாவே
உட்காந்து வின் எடுத்தோம்….

என்று காரில் பாடல் ஒலித்துக் கொண்டு இருந்தது.. இவற்றை எல்லாம் பார்க்க பவிக்கு கோபம் வந்தது. "ஏதோ ட்ரிப் போற மாதிரி இப்பிடி இருக்கிறாங்க.. இவங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா? பவி எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்த குடும்பத்திட்ட இருந்து விலகிடு… முதல்ல காலேஜ் முடிச்சிட்டா சரி" என்று நினைத்தபடி இருந்தாள் பவி..

"என்ன பவி அமைதியா வர்ற? "

" ஒண்ணுமில்லை அக்கா"

" அவளுக்கு அந்த சனியனை விட்டுட்டு வந்திட்டமேனு கோபமா இருக்கும். "

" விடு பிருந்தா கொஞ்ச நாள் போனா சரியாயிடுவா" என்றார் கணபதி.

" அதுவும் சரிதான்"

சிறிது நேரத்தில் பவி சித்துவை நினைத்தபடியே தூங்கிவிட்டாள்.

இவர்கள் சென்று கொண்டிருக்கும் போது கணபதிக்கு போன் வந்தது..

" அப்பா போன் அடிக்குது. உங்களுக்கு கேட்கலையா? "

" அட ஆமா போன் அடிக்குது. எனக்கு பாட்டு சத்தத்தில் எதுவும் கேட்கலை பிருந்தா. "

" சரி எடுத்து யாருனு பாருங்க அப்பா"

"இதோ பார்க்கிறன் மா " என்று தனது போனை எடுத்து பார்த்த கணபதிக்கு கைகால்கள் நடுங்கியது….

"என்னப்பா யாரு போன்ல? "

" வேற யாரு அந்த வீரா தான் போன் பண்றான். "

" அப்பா எடுத்து பேசுங்க"

" பயமா இருக்குமா.. "

" அப்பா அவன் போன் பண்றான்னா அந்த சித்துவை எதாவது பண்ணிருப்பான். ஒண்ணு பண்ணுங்க அப்பா.. அவன் போன் பண்ணா என்னோட பொண்ணை விட்டுடுங்கனு அழுற மாதிரி பேசுங்க"

" ஏன் பிருந்தா அப்பிடி பண்ணச் சொல்ற? அவளுக்கு என்ன நடந்தா நமக்கு என்ன? "

" அம்மா லூசு மாதிரி பேசாத.. நாம அவமேல பாசம் வச்சிருக்கிற மாதிரி பேசினால்தான் அந்த வீரா நம்ம மேல உள்ள கோபத்தை எல்லாம் அந்த சித்து மேல காட்டுவான் புரிஞ்சிதா? அப்பா நான் சொன்ன மாதிரியே பேசுங்க"

" சரி மா.. "

" எப்பிடி பிருந்தா இப்பிடி எல்லாம் யோசிக்கிற? "

"இப்ப அதுவா முக்கியம் நீங்க போனை எடுங்க அப்பா.. "

" ம் சரி பிருந்தா என்றவர் போனை எடுத்தார்.

"என்ன கணபதி போனை எடுக்கலாமா? வேண்டாமானு யோசிக்கிறியா?"

"அப்பிடி இல்லை சேர்"

"எனக்கு உன்னை பற்றி எல்லாம் தெரிஞ்சிடுச்சி.. என்னப் பற்றி நல்லா தெரிஞ்சிருந்தும் நீ இந்த தப்பு பண்ணிட்ட உனக்கான தண்டனையை அனுபவிக்க தயாரா இரு.."

"என்னை மன்னிச்சிடுங்க சேர்"

"மன்னிப்பா? எனக்கு மன்னிப்பு கேட்டும் பழக்கமில்லை. மன்னிப்பு கொடுத்தும் பழக்கமில்லை. இந்த வீரா தப்பு பண்ணமாட்டான். தப்பு பண்ணவங்களை சும்மா விட மாட்டான். அவனோட தண்டனையே வேற மாதிரி இருக்கும்.. "

" சேர் சேர் இந்த ஒரு தடவை மன்னிச்சிடுங்க சேர்… இந்த ஊரை விட்டே போயிடுறன்.."

"அப்பிடியா உனக்கு உன்னோட பொண்ணுங்க அழுதா தாங்க முடியாதுனு சொன்னாங்க உண்மையா?"

" ஆமா சேர்… அதுக்காக தான் சேர் அந்த தப்பை பண்ணன். என் பொண்ணை எதுவும் பண்ணிடாதீங்க சேர்.. அவளை விட்டுடுங்க… "

" கணபதி உன்னோட மூத்த பொண்ணு இப்ப எங்கிட்ட அவள் அனுபவிக்கிற கஸ்ரத்தை பார்த்து நீ தினம் தினம் துடிக்கணும்.. "

" ஐயோ சேர் என் பொண்ணு அப்பாவி சேர் அவளுக்கு எதுவும் தெரியாது.. பிளீஸ் சேர் அவளை விட்டுடுங்க.."

" அவ எங்கிட்ட இருந்து எப்பவும் தப்பிக்க முடியாது.. அதுதான் உனக்கு நான் கொடுக்கிற தண்டனை" என்றவன் போனை கட் பண்ணினான்.

" அப்பா என்னப்பா சொன்னான்? "

" அந்த சனியனை கடத்திட்டானாம். அவளை கொடுமைப்படுத்த போறானாம்.. அதை நினைச்சி நினைச்சி நான் வருத்தப்படணுமாம்.. நானாவது வருத்தப்படுறதாவது" என்ற சிரித்தார்.

" அதுதான் அப்பா… எப்படியோ அவன்கிட்ட இருந்து நாம தப்பிச்சமே அதுவே போதும்…"

" சரியா சொன்ன பிருந்தா"

…………………………………………………

" கேட்டியா உன்னோட அப்பா சொன்னதை உன்னை கஸ்ரப்படுத்தினா அவரால தாங்கிக்க முடியாதாம்.. அதனால உன்னை விட்டுடணுமாம்.. "

"இல்லை அப்பிடி சொல்லியிருக்க மாட்டாங்க.. "

" ஏய் அந்த கணபதிதான் சொன்னான்.. கஸ்ரத்தை அனுபவிக்க தயாரா இரு… "

வீரா சொன்னதை கேட்ட சித்துவுக்கு சிரிப்பு வந்தது…" எவ்வளவோ கஸ்ரத்தை அனுபவிச்சிட்டன்.. அதுக்கு மேலேயா கஸ்ரம் வரப் போகுது "என மனதுக்குள் நினைத்தவளுக்கு சிரிப்பு வந்தது.. அவள் சிரிப்பைப் பார்த்த வீரா "என்ன என்னால என்ன கஸ்ரம் கொடுக்க முடியும்னு நினைக்கிறாயா?

இனிமேல் இந்த வீட்ல இருக்கிற அத்தனை வேலையையும் நீதான் பண்ணும் வீட்ட கிளீன் பண்றது சமைக்கிறது தோட்டத்தை பார்த்துக்கிறதுனு எல்லாம் நீதான் பண்ணணும்… அப்பா அம்மா கூட எந்த வேலையும் செய்யாம சுகமா வாழ்ந்திருப்பல்ல.. வேலை செய்றது எல்லாம் கஸ்ரமா தான் இருக்கும்.. சமையலறைக்கு பக்கத்தில இருக்கிற அறையில நீ தங்கிக்க… போ.. வேலை ஒழுங்கா செய்யலை அதுக்குப் பிறகு நடக்கிறதே வேற.. என்ன புரிஞ்சிதா? " என அழுத்தமாக கூறினான். அவனது அழுத்தமான குரலில் சித்துவுக்கு குளிர்பரவியது..

" ம்… "என்றாள்.

" இப்போ நீ போகலாம்.. "என்றதும் அந்த அறைக்குள் வேகமாக சென்று கதவை அடைத்துக் கொண்டாள்..

அவள் சென்றதை பார்த்தவன் தனது அறைக்குள் சென்றான்.. அங்கே தனது மினி பாரில் உள்ள மது போத்தல் ஒன்றை எடுத்து வந்து பால்கனியில் வைத்துக் குடித்தான்…

குடித்து முடித்தும் கண்கள் சொக்க தனது கட்டிலில் விழுந்து தூங்கினான்.. வீராவுக்கு மது இல்லாவிட்டால் பல நினைவுகள் அவனை சூழ்ந்து கொள்ளும் தூக்கம் வராது.. அதனால் தங்குவதற்காக மதுவை எடுத்துப்பான்…

……………………………………………………….

ஒரு வழியாக கணபதியோட குடும்பம் கிரணின் வீட்டிற்கு வந்தது. கிரண் வாசலிலே நின்று இவர்களை வீட்டிற்குள் அழைத்துச் சென்றான்..

" வரும் போது அந்த வீரனால ஏதும் பிரச்சனை இல்லையே"

"இல்லை கிரண் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை..."

"நன்றி கடவுளே.. சரி வாங்க உள்ள போகலாம்"

"சரி.." என்று அனைவரும் வீட்டிற்கு சென்றனர்...

உங்களுக்கு மேல உள்ள அறையை கிளீன் பண்ணி வச்சிருக்கிறாங்க.. நீங்க அங்க போய் தங்கிக்கோங்க... இது உங்களோட வீடு மாதிரி ஓகே "

"ஓகே ரொம்ப நன்றி கிரண்"

"இதுக்குப் போய் எதுக்கு அங்கிள் நன்றி சொல்லிட்டு.. நீங்க எனக்கு பண்ண உதவியை விடவா நான் பண்ணிட்டன்? சரி பிருந்தா உன்னோட குடும்பத்தில ஐந்து பேருதானே.. இங்க நாலுபேருதான் இருக்கிறீங்க அந்த ஒருத்தர் யாரு? அவங்க வரலையா?"

" அதுவந்து.. பவி நீ றுமுக்கு போ நாங்க வர்றம்.."

"என்னை விட்டுட்டு என்ன பேச போறீங்க?"

"பவி பெரியவங்க விசயத்தில தலையிடாத நீ றுமுகுக்கு போ" என்றார் கணபதி.. பவி எதுவும் பேசாமல் போய் விட்டாள்.

" என்னாச்சு பேபி?"

" அதுவந்து நாங்க நாலுபேருதான்.. மற்றவை சித்து..அந்த லயன் அப்பாவை பழிவாங்க நினைச்சி அந்த சித்துவை கடத்திட்டான்."

"என்ன சொல்ற பிரு?"

"ஆமா அப்பாக்கு நாங்க அழுதா தாங்க முடியாதுனு தெரிஞ்சிக்கிட்ட வீரா அவளை கடத்தி கொடுமைப் படுத்தப் போறானாம்... அதை நினைச்சி நாங்க வருத்தப்படணுமாம் அதுதான் அவன் அப்பாக்கு கொடுக்கிற தண்டனையாம்"

" அப்போ உங்களுக்கு வருத்தமா இல்லையா?"

"இல்ல பேபி.." என்ற பிருந்தா சித்துவோட ரகசியத்தை கூறினாள்.

" அப்போ அவனால உங்களுக்கு எந்த பிரச்சினையும் வராது"

"ஆமா பேபி"

" பிரு நாம அப்பிடியே விட்டா அவனுக்கு சந்தேகம் வந்திடும் சோ.. அங்கிள் நீங்க அவனுக்கு போன் பண்ணி என் பொண்ணை விட்டுடுனு அப்போ அப்போ கேளுங்க"

"சரி தம்பி"

"எனக்காக இவ்வளவு ரிஸ்க் எடுத்த உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு"

"இதுக்கெல்லாம் சர்ப்ரைஸா?"

" பின்னே இது பெரிய விசயம் இல்லையா? தோல்வியையே சந்திக்காத வீராவுக்கு முதல் தோல்வியை கொடுத்திருக்கிறம்.. இதுக்கு அப்புறம் அவனுக்கு எல்லாமே தோல்விதான்... நான் பழையபடி முதல் இடத்துக்கு வந்துடுவன்"

" உங்களுக்கு நாங்க ஹெல்ப் பண்றம் பேபி"

"நன்றி பேபி... சரி உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு அது என்னனு சொல்லு பார்க்கலாம்?"

" எனக்கா சர்ப்ரைஸ்?"

"ஆமா பேபி சொல்லு"

"தெரியலையே பேபி நீய சொல்லிடு"

"சரி ஓகே நானே சொல்லிடுறன் "என்ற கிரண் சொன்ன விசயத்தில் அதிர்ச்சியடைந்தாள் பிருந்தா.....

கிரணின் சர்ப்ரைஸ் என்ன???

மலரும் ……………………
 
பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,972
இவன் என்ன அரண்மனையா எழுதி தரப்போறான், வேலை போட்டு தரேன்னு சொல்லுவான் 😲😲😲😲
 
திவ்யதுர்ஷி

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 28, 2022
Messages
448
இவன் என்ன அரண்மனையா எழுதி தரப்போறான், வேலை போட்டு தரேன்னு சொல்லுவான் 😲😲😲😲
கிரண்னைப் பற்றி நல்லா சொல்றீங்க சகி😂😂
 
Malarthiru

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 15, 2023
Messages
80

அவன் என்ன சொன்னா என்ன?

அடேய் லயன் என்னடா நீ இப்படி சொல்லிட்டு சித்து?
 
Top