• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

திவ்யதுர்ஷி

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 28, 2022
Messages
448
🌺மலர் : 07🌺

அங்கே வீராவின் கைகளிலிருந்து இரத்தம் வடிந்து கொண்டு இருந்தது.. இரத்தத்தை பார்த்தவள் அவனிடம் வர முயற்சித்தாள்.. ஆம் அறை முழுவதும் கண்ணாடித் துண்டுகள் சிதறிக் கிடந்தன.. அறையில் இருந்த அனைத்தையும் உடைத்திருந்தான் வீரா…

மெதுவாக கண்ணாடி இல்லாத பக்கமாக பார்த்து அவனருகில் வந்தாள்…. "ஐயோ இரத்தம்" என்றவள் லயனின் கையைப் பிடித்தாள்.. தனது கையைப் பிடித்தவளை தள்ளி விட்டான் வீரா.

"ஐயோ இரத்தம் வருது கொஞ்சம் கையை குடுங்க கட்டுப் போடணும்" என்றாள்..

"ஏய்… பேசாம போ" என்று கத்தினான்.. அவனது கத்தலில் நடுங்கியது அவளது உடல்… இருந்தாலும் அவனது கைகளில் வடிந்த இரத்தத்தை பார்த்து பாவமாக இருந்தது… அதனால் மீண்டும் அவனருகில் வந்து கைகளை பிடித்தாள்… மீண்டும் வீரா அவளின் கையை தட்டி விட்டான்.

சித்துவுக்கு கோபம் வந்தது" இங்க பாருங்க உங்களோட கையை ஒண்ணும் ஆசையில பிடிக்கலை… இரத்தம் வந்துட்டே இருக்கு கட்டுப் போடணும் கொஞ்சம் இருங்க" என்றவள் மறுபடியும் கைகளை பிடித்தாள்.. வீரா எதுவும் பேசவில்லை…

தனது தாவணியின் நுனிப் பகுதியை கிழித்து இரத்தம் வரும் கையில் கட்டுப் போட்டவள்.. First aid box இருக்கிறதா என்று பார்த்தாள்.. அங்கிருந்த மேசையில் இருந்த first aid boxஐ பார்த்தவள் உடனே அதை எடுத்து வந்து மருந்து போட்டாள்..

பின்னர் அங்கிருந்த அறையை பார்க்க அங்கு கண்ணாடியிலான பொருட்கள் அனைத்தும் கீழே உடைந்து தனது உயிரை விட்டிருந்தன…..

ஒரு பெருமூச்சுடன் தனது தாவணியை இழுத்து இடுப்பில் சுற்றிக் கொண்டு அறையை சுத்தம் செய்தாள்… அப்பிடி சுத்தம் செய்யும் போது ஒரு கண்ணாடித் துண்டு அவளது கையை பதம் பார்த்தது… அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அறை முழுவதும் சுத்தம் செய்து விட்டு அறையை விட்டு வெளியே சென்றுவிட்டாள்….

இங்கே வீரா கோபத்தில் கண்கள் சிவக்க இருந்தான்… வீராவின் கோபத்திற்கான காரணம் என்ன??

வாங்க காலையில் என்ன நடந்தது என்று பார்க்கலாம்……..

காலையில் உடற்பயிற்சி செய்துவிட்டு தனது அறைக்கு வந்த வீராவின் கண்களில் காலண்டர் தென்பட்டது…. அதில் இன்றைய திகதியை பார்த்த வீராவுக்கு பழைய ஞாபகங்கள் வந்தன….

அதே நேரம் போன் வந்தது… எடுத்துப் பார்த்தான் புது நம்பரில் இருந்து வந்தது….

"ஹலோ…"

"என்ன மிஸ்டர் வீரபிரதாபன் நல்லா இருக்கிறீங்களா? "

"நீ எதுக்கு போன் பண்ணின?"

"இல்லை இன்னைக்கு என்ன நாள்னு ஞாபகப்படுத்தலாம்னு போன் பண்ணன்…. எப்பிடி உன்னால மறக்க முடியும்??? ஒரு விசயம் கேள்விப் பட்டேன்… தோல்வியையே சந்திக்காத த க்ரேட் வீரா மூணு கோடி ரூபாய் டென்டரை விட்டுட்டாருனு ஒரே பேச்சா இருக்கு….நான் தான் சொன்னேனே உன்னால எதுவும் முடியாது….. ஏதோ கொஞ்ச நாள் அதிர்ஷ்டம் உன் பக்கம் இருந்திச்சு அதுதான் முன்னாடி இருந்த… இதுக்குப் பிறகு பாரு உன்னால எழுந்திருக்கவே முடியாத அளவுக்கு அடி விழும்…. உன்னை அழிச்சிக் காட்டுறன்… "

" முடிஞ்சா பண்ணிப் பாரு… ஒரே ஒரு சத்தியத்துக்காக உன்னை உயிரோட விட்டிருக்கின்றன்… எதுக்கும் ஒரு எல்லை இருக்கு… என்னோட எல்லையை நான் மீற வச்சிடாத.. அந்த எல்லையை நான் எப்போ மீறுறனோ அன்னைக்கு தான் உன்னோட சாவு…. "

" போடா போடா அதையும் பார்க்கலாம்" என்றவர் போனை வைத்து விட வீரா கோபத்தில் தனது அறையில் இருந்த பொருட்களை எல்லாம் அடித்து உடைத்தான்… அதனால் தான் அவனது கையில் அடிபட்டு இரத்தம் வந்தது….

சித்து சென்ற பின் சிறிது நேரம் இருந்தவன் சதீஷை அழைத்தான்..

" ஹலோ"

" ஹலோ சொல்லுங்க சேர்… "

" இன்னைக்கு இருக்கிற எல்லா மீட்டிங்கையும் கேன்சல் பண்ணு… என்ன வேலை இருக்குனு மெயில் பண்ணு…"

"சரி சேர்"

"ம்.. அந்த கிரணோட நடவடிக்கைகளை வாட்ச் பண்ணிட்டே இருக்க சொல்லிங்க"

"ok sir"

"ம்.." என்றவன் தனது போனை அணைத்தான்…

……………………………………………

காலையிலே ரெடியாகி கீழே வந்தாள் பவி…

"எங்க போற பவி"

"வேற எங்க போறது காலேஜ்க்குதான்"

"நீ கொஞ்ச நாளைக்கு காலேஜ் போக வேண்டாம்"

"ஏன்?"

"சொன்னா கேளு…"

" அது எப்பிடி நான் போகணும் அப்பா பாருங்க அக்காவை"

"ஏன் பிருந்தா அவளை காலேஜ் போக வேண்டாம் என்று சொல்ற?"

"அப்பா அந்த வீரானால ஏதும் பிரச்சனை வந்திடுமோனு பயமா இருக்கு அதுதான்… "

" அதுதான் அவன் அந்த சித்துவை கடத்தி வச்சிருக்கிறான்ல…. அப்புறம் எப்பிடி நம்மளை தொல்லை பண்ணுவான்? " என்றார் வேதா..

"என்ன அம்மா சொல்றீங்க? சித்து அக்காவை கடத்திட்டாங்களா??? "

" ஆமா அதுக்கு இப்போ என்ன? "

" ஏன்மா இப்பிடி பண்றீங்க? அவ ரொம்ப பாவம் அம்மா… வாங்கம்மா அக்காவை கூட்டிட்டு வரலாம் " என்றாள் பவி…

" யாரை பவி கூட்டிட்டு வரப் போற? " என்றபடி வந்தான் கிரண்…

"என்னோட அக்காவை.. "

" உன்னோட அக்காதான் இங்க இருக்கால்ல"

" இல்லை நான் பிருந்தா அக்காவை சொல்லலை… சித்து அக்காவை சொன்னன்… "

" நீ சின்னப் பொண்ணு உனக்கு அந்த வீராவைப் பற்றி தெரியாது… அவன் இடத்துக்கு யாராலும் போக முடியாது… மீறிப் போனா உயிரோட திரும்ப முடியாது….. சொல்லப் போனா உன்னோட அக்கா உயிரோட இருக்கிறாளானு கூட தெரியாது… "

" இல்லை அக்காவுக்கு எதுவும் நடக்காது… "

" சொல்றதை புரிஞ்சிக்கோ… நீ வெளியில போனா உன்னை கடத்தக் கூட சான்ஸ் இருக்கு…. "

" எல்லாம் உங்களாலதான் நீங்க உங்களோட முயற்சியால அவரோட போட்டி போட்டு ஜெயிச்சிருக்கணும்.. அதை விட்டுட்டு குறுக்கு வழியில போறீங்க உங்களுக்கு வெட்கமா இல்லையா? "என்று கிரணை பார்த்து கேட்டவளது கன்னம் எரிந்தது..

ஆம் பிருந்தா அவளை அறைந்திருந்தாள்……

" யாரைப் பார்த்து என்ன பேச்சு பேசுற? கொன்றுவன்… மரியாதையா அவர்கிட்ட சாரி கேளு"

" என்னைய அடிச்சிட்டல நீ…. என்னால மன்னிப்பு கேட்க முடியாது.."

" அம்மா அவர்கிட்ட இப்போ அவள் பேசின பேச்சுக்கு மன்னிப்பு கேட்கணும்.. இல்லை"

"என்னை இல்லை… மன்னிப்பு கேட்கலனா என்ன பண்ணுவ? "

"ஒழுங்கா மன்னிப்பு கேட்டுறு தங்கச்சினு பார்க்கிறன்.. என்னை கோபப்படுத்தாத பவி."

" முடியாது…முடியாது நான் பேசினது சரிதான் என்னால இவன் கிட்ட மன்னிப்பு கேட்க முடியாது"

" என்னடி அவன் இவன்னு மரியாதை இல்லாம பேசுற? "

" அப்பிடித்தான் பேசுவேன் இவனுக்கு என்ன மரியாதை வேண்டி கிடக்கு? "

" அவர் வீட்லயே இருந்திட்டு அவரையே மரியாதை இல்லாம பேசிட்டு இருக்க.. இப்போ நீ மன்னிப்பு கேட்கலனா இந்த வீட்ல உனக்கு இடம் கிடையாது… "

" பேபி கொஞ்சம் அமைதியா இரு"

" இல்லை கிரண் உங்களை எப்பிடி அவ மரியாதை இல்லாம பேசலாம்? நீங்க பேசாம இருங்க"

" பிருந்தா அவ சின்னப் பொண்ணுமா…"

" அவளுக்கு சப்போர்ட் பண்ணி யாரும் பேச வேண்டாம்…"

" ரொம்ப சந்தோசம்… மன்னிப்பு கேட்டால்தான் இந்த வீட்ல இருக்கணும்னா நான் இப்பவே வெளிய போறன்…இங்க இருக்கிறதுக்கு நான் செத்துப் போறதே மேல்"

" பவி நீயாவது விட்டுக் கொடுத்து போ… மன்னிப்புதானே.. கேளுடி"

" முடியாது அம்மா.. நான் பேசினது சரிதான்… என்னால மன்னிப்பு கேட்க முடியாது… நான் போறன்"

" எங்க மா போவ? "

" எங்கேயோ போறன்… சித்து அக்காவுக்கு நீங்க பண்ண பாவத்துக்கு கண்டிப்பா உங்களுக்கு கடவுளால் தண்டனை கிடைக்கும்.. இங்க இருந்து என்னோட certificate மட்டும் எடுத்திட்டு போறன்…இனிமேல் உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது…."

" பவி சொன்னா கேளு அக்கா ஏதோ கோபத்தில பேசுறா "

" விடுங்கம்மா ரெண்டு நாள்ல திரும்பி வந்திடுவா எங்க போகப்போறா? "

" உயிரே போற நிலை வந்தாலும் இங்க வரமாட்டன். " என்றவள் வீட்டை விட்டு வெளியே சென்றாள்……

" அம்மா அப்பா விடுங்க அவளே வருவாள்… "

" பேபி ஆபிஸூக்கு போலாமா?டைம் ஆச்சு "

" சரி அம்மா நாங்க போயிட்டு வர்றம்"

" சரி பார்த்து போங்க"

" அங்கிள் வெளியே எங்கேயும் போக வேண்டாம் "

" சரி தம்பி"

……………………………………………….

வீராவின் அறையை தட்டி விட்டு உள்ளே வந்த சித்து" சாப்பாடு செய்தாச்சு "

" நீ போ வர்றன்"

" சரி " என்றவள் கீழே வந்தாள்…

சிறிது நேரத்தில் வீரா கீழே வர சித்து சாப்பாடு எடுத்து வைத்தாள்… எதுவும் பேசாமல் சாப்பிட்டான்… பின் ஹோலில் இருந்து தனது வேலையை செய்து கொண்டு இருந்தான்.. சித்து மதியத்துக்கான சாப்பாடு சமைக்க வேலைகளை செய்து கொண்டு இருந்தாள்…

அதே நேரத்தில் சதீஷ் வீராவின் வீட்டிற்கு வந்தான்..

"sir"

"வாங்க சதீஷ்.. எனிதிங் ப்ராப்ளம்?"

"ஆமா sir…"

"What?"

"sir… அதுவந்து"

"look சதீஷ்… எனக்கு சுற்றி வளைச்சி பேச பிடிக்காது… நேரடியா விசயத்துக்கு வாங்க"

"sir நம்மளோட பில்டிங் கம்பனிக்கு ப்ராஜக்ட் குடுத்த ரெண்டு கம்பனி அவங்க ப்ராஜக்ட்ட கேன்சல் பண்ணிட்டாங்க"

"why the reason?"

"அவங்க சொன்ன காரணம்… உங்களோட மூணு கோடி ரூபாய் கவர்மென்ட் ப்ராஜக்ட் உங்களுக்கு கிடைக்கலை அதனால நாங்களும் எங்களோட ப்ராஜக்ட்ட கேன்சல் பண்றம்னு சொன்னாங்க…"

"அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?"

"கேட்டன் sir.. கவர்மென்ட் ப்ராஜக்ட் கிடைக்கலனா ஏதோ காரணம் இருக்கும் சோ நாங்க எங்களோட ப்ராஜெக்ட்ட கேன்சல் பண்றம்னு சொல்லிட்டாங்க" என்றான்..

"ம்.. அப்பிடியா? "

" sir அவங்களோட ப்ராஜெக்ட்ட நாம ஸ்டார்ட் பண்ணிட்டம் இப்போ அதை கேன்சல் பண்ணா நமக்குதான் பெரிய லாஸ்ட் சேர் "

சதீஷ் வந்திருப்பதை சமையலறையில் இருந்து வெளியே வந்த சித்து பார்த்தாள்.. யாரோ வந்திருக்கிறாங்க… அவங்களுக்கு குடிக்க டீ கொடுப்பம்னு நினைத்த சித்து சதீஷ்க்கு டீ எடுத்து வந்தாள்.

" இந்த டென்டர் நம்மளோட கம்பனிக்கு கிடைக்காதனால தான் சேர் அவங்க அவங்களோட ப்ராஜெக்ட்ட கேன்சல் பண்ண சொல்றாங்க" என்றான்..

வீராவுக்கு கிரண் மீதும் கணபதி மீதும் கட்டுக்கடங்காமல் கோபம் வந்தது… அதே நேரத்தில் சித்துவும் சதீஷ்க்கு டீ எடுத்து வந்தாள்.. அவளைப் பார்த்தும் அவர்கள் மீதான அவனது கோபம் அவள் மீது திரும்பியது…..

அவள் அருகில் வந்ததும் அவளது கையிலிருந்த தட்டை தட்டி விட்டவன் அவள் என்ன என்று உணர்வதற்குள் அவளை இழுத்து கன்னத்தில் மாறி மாறி அறைந்தான்…

சதீஷ்க்கு அவளைப் பார்க்க பாவமாக இருந்தது… அவனால் என்ன செய்ய முடியும்? பார்த்துக் கொண்டு நின்றான்..வீரா விடுவதாக இல்லை… அவளை அறைந்து கொண்டு இருந்தான்.. ஒரு கட்டத்தில் சதீஷ் அவனது கையைப் பிடித்தான்…

சதீஷை தள்ளிவிட்டு மீண்டும் சித்துவுக்கு அறைந்தான்.. அவள் அவனை தடுக்கவில்லை… அவனது கோபத்தை அடித்து தீர்த்துக் கொள்கிறான்.. தனது குடும்பம் செய்த துரோகத்திற்கு இது வேண்டும்தான் என்று நினைத்தவள் அடியை வாங்கிக் கொண்டு நின்றாள்… கண்களில் இருந்து கண்ணீர் வரவேயில்லை… சதீஷ் அவளைப் பார்த்து அதிர்ச்சியாக இருந்தான்… என்ன இந்தப் பொண்ணு இப்பிடி அடி வாங்கிட்டு இருக்கிறா…. என நினைத்தபடி நின்றிருந்தான்…

சித்துவை அறைந்து கொண்டிருந்த வீரா திடீரென மயங்கி கீழே விழுந்தான்…. சதீஷ்க்கு ஒன்றும் புரியவில்லை.. சித்து பயந்து விட்டாள்.
"என்ன என்னை அடிச்சிட்டு அவரு மயங்கி விழுந்திட்டாரு" என்று நினைத்தவள் அவனருகில் வந்து அவனது கன்னத்தை மெதுவாக தட்டினாள்...

"எழுந்திருங்க சேர்" என்று தட்டினாள் வீரா அசையவில்லை..

"சேர்.... சேர்" என்று சதீஷூம் வீராவை எழுப்ப முயன்றான்...

"அண்ணா கொஞ்சம் தண்ணீர் எடுத்து வாங்க" என்றாள் சதீஷூடம் சித்து..

"சரிமா" என்றவன் தண்ணீர் எடுத்து வந்து வீராவின் முகத்தில் தெளித்தான்.. வீராவுக்கு மயக்கம் தெளியவில்லை...

"அண்ணா மருத்துவமனைக்கு கூட்டிட்டு போகலாம் வாங்க"

"சரிமா" என்றவன் சித்துவோட அவனும் சேர்ந்து வீராவைத் தூக்கி வந்து காரின் பின் சீட்டில் படுக்க வைத்தான்..

"அண்ணா நானும் வர்றன்"

"சரிமா" கார்ல ஏறு என்றான்…

சித்து காரின் பின்னால் ஏறி வீராவின் தலையை எடுத்து தனது மடியில் வைத்தாள்...

கார் வீராவின் மருத்துவமனைக்கு வந்தது.....

வீராவின் காரைப் பார்த்த மருத்துவர் வேகமாக வந்தார்..

"என்னாச்சி சேர்?"

"தெரியல்லை மயக்கம் போட்டு விழுந்திட்டாரு" என்றான் சதீஷ்..

" சரி எமர்ஜென்சி வார்ட்டுக்கு கொண்டு வாங்க" என்றார்..

வீராவை அட்மிட் பண்ணி doctor செக் பண்ணினார்… சிறிது நேரத்தில் doctor வெளியே வந்தார்…

"என்னாச்சி doctor?" என்றான் சதீஷ்.

" இவங்க யாரு?" என்றார் doctor சித்துவைக் காட்டி..

" நான் அவங்க வீட்ல வேலை செய்றன் doctor "

" ஓ.. அப்டியா? " என்றவர் அவளது கன்னங்களை பார்த்தார்.. வீராவின் கைவிரல்களின் உபயத்தினால் கன்னம் இரண்டும் வீங்கி இருந்தது… நர்ஸை அழைத்தவர் அவளுக்கு மருந்து போடுமாறு கூறினார்..

அதற்கு சித்து " ஐயோ அது பரவாயில்லை doctor.. அவங்களுக்கு என்னாச்சினு சொல்லுங்க " என்றாள்.

" சரி மா.. ஆனால் நான் சொன்னதுக்கு அப்புறம் மருந்து போடணும்"

"சரி doctor"

"வீராவுக்கு ஒரு பிரச்சனை இருக்கு.."

"என்ன டாக்டர்?" என்றான் சதீஷ்…

"அவருக்கு ஆரம்பத்தில மன அழுத்தம் இருந்திருக்கு... அதாவது அவரு அவரோட மனசுக்குள்ள நிறைய விசயத்தை போட்டு அழுத்திட்டு இருக்காரு... அதை மனசுக்குள்ளே வச்சிருக்கிறதால அவருக்கு சாதாரண மனுசங்களுக்கு வர்ற கோபத்தை விட இவருக்கு கோபம் அதிகமாக வரும்....

அப்பிடி அளவுக்கு அதிகமாக கோபம் வரும் போது அவரையே அவரு மறந்திடுவாரு… அவரோட உச்சகட்டமான கோபம் அவரை மயக்கமடையச் செய்யும்…. அதனாலதான் இவரு மயக்கம் போட்டு விழுந்திருக்கிறாரு"

"இது சர்க்கு தெரியுமா டாக்டர்?"

"தெரியாது ஆனால் அதிகமாக கோபப்படுவது உங்களோட ஹெல்த்க்கு கூடாதுனு சொல்லியிருந்தேன்.."

" doctor இந்த பிரச்சனையை குணப்படுத்த முடியாதா?"

"அவரு அவரோட மனசில இருக்கிற விசயங்களை வெளிய சொன்னா இவ்வளவு கோபம் வராது...கோபம் அதிகமாக வரலனா மயக்கம் வராது.."

"டாக்டர் சார் தான் யார்கிட்டயும் எதுவும் சொல்ல மாட்டாரே"

" வேற வழி இல்லையா doctor?"

" வேற ஒரு வழி இருக்கு"

"என்னது டாக்டர்?"

"டாக்டர் சொன்னதை கேட்ட சதீஷ்க்கும் சித்துக்கும் பயம் வந்தது....

doctor என்ன சொன்னார்???

மலரும்………………………………
 
பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,971
டாக்டர் என்ன சொல்லிருப்பாரு 🤔🤔🤔🤔🤔ம்ம்ம் அவனோட மன அழுத்தத்தை சரிப்பண்ண கல்யாணம் பண்ணினா சரியாகும்னு சொல்லிருப்பாரு (இதுல சீக்ரட் இருக்கு 😃😃😃😃😃)
 
திவ்யதுர்ஷி

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 28, 2022
Messages
448
டாக்டர் என்ன சொல்லிருப்பாரு 🤔🤔🤔🤔🤔ம்ம்ம் அவனோட மன அழுத்தத்தை சரிப்பண்ண கல்யாணம் பண்ணினா சரியாகும்னு சொல்லிருப்பாரு (இதுல சீக்ரட் இருக்கு 😃😃😃😃😃)
இன்னைக்கு ஈவ்னிங் யூடி வந்திடும் சகி😍😍 எதிர்பாராததை எதிர்பாருங்கள் சகி😂😂
 
Malarthiru

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 15, 2023
Messages
80

Anything like love 💛 😻 and wife or marriage?
 
Top