- Joined
- Feb 28, 2022
- Messages
- 394


சதீஷ் போனை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தான் அங்கே பவி தரையில் அமர்ந்து கொண்டு அவளைச் சுற்றி புத்தகங்களை வைத்துக் கொண்டு ஒரு புத்தகத்தை படித்தபடி உட்கார்ந்து இருந்தாள்…
"என்ன பவி மா இது?"
"வா சதீஷ்… நான் இப்பிடித்தான் படிப்பேன்…. எனக்கு பழகிடுச்சி… உங்களுக்கு தொந்தரவா இருக்கா?"
"அதெல்லாம் ஒண்ணுமில்லை… நீ படி நான் குளிச்சிட்டு வந்து டீ போட்டுக் கொடுக்கிறேன்…"
"சரி" என்று தலையாட்டியவள் படிப்பில் மூழ்கிவிட்டாள்…
சதீஷ் குளித்துவிட்டு வந்து பவிக்கு டீ கொண்டு வந்து கொடுத்தான்…அதை வாங்கி குடித்தாள்..
…………………………………………………….
காரில் வரும் போது வீராவுக்கு சித்துவைப் பற்றிய சிந்தனைதான்…
"அந்த ராஜசேகர் சொல்றது உண்மையாக இருக்குமா? அப்படினா இவ எங்கிட்ட சொல்லியிருக்கலாமே…"
(மீ-நீ அவ சொல்றதை கேட்கிற நிலமையிலையா இருந்த?)
"நான் இதுவரைக்கும் தப்பு பண்ணாதவுங்களுக்கு தண்டனை கொடுத்ததே இல்லை…ஆனால் கணபதி செய்த தப்புக்கு இவளை எப்பிடி தண்டிச்சன்… அவ நல்லவ என்றதனாலயா என்னால அவளை கொடுமைப்படுத்த முடியாம இருந்தது….
கணபதியோட குடும்ப விபரத்தை பார்த்தப்போவே ஏதோ ஒன்னு தப்பா இருக்குனு மனசு சொல்லிச்சு… நான் கொஞ்சம் யோசிச்சிருக்கலாம்… " என நினைத்துக் கொண்டு மதன் வீட்டிற்கு அருகில் வந்தவனை ஒரு லாரி அடித்து விட்டு வேகமாக சென்றது….
வீரா லாரி தன்னை நோக்கி வருவதை உணர்ந்து காரை திருப்புவதற்குள் எல்லாம் நடந்துவிட்டது… வீராவுக்கு நல்ல அடி காரிலிருந்து வெளியே வர முயற்சிக்க கூட முடியவில்லை…. கொஞ்சம் கொஞ்சமாக மயக்கத்திற்கு சென்று கொண்டு இருந்தான்…
லாரி காரை அடிக்கும் போது ஏற்பட்ட சத்தத்தை கேட்டு வீட்டிற்கு வெளியே வந்த மதன் பார்த்தது வீராவின் கார் நசுங்கி கிடப்பதையே…
உடனே கார் அருகில் ஓடினான்… பக்கத்தில் இருந்தவர்களின் உதவியோடு வீராவை காரிலிருந்து வெளியே எடுத்தான்…
விபத்து நடந்த இடத்தில் இருந்த ஒரு நல்ல உள்ளம் அம்புலன்ஸ்கு அழைக்க சில நிமிடங்களில் வந்தது… மதனும் அம்புலன்ஸ்ஸில் ஏறினான்….
வீரா அருகில் இருந்து "சேர் இங்க பாருங்க" என்று அவன் முகத்தில் தட்டி அவன் மயங்கி விடாமல் இருக்க தட்டிக் கொண்டு இருந்தான்…. அதில் சிறிது நினைவு வந்த வீரா மதனைப் பார்த்து "ச… தீ….ஷ்…" என்றான்.. அவன் கூற வருவதை புரிந்து கொண்ட மதன் "சதீஷ்க்கு போன் பண்றன் சேர்" என்றவன் சதீஷ்க்கு போன் பண்ணினான்..
அப்போதும் வீரா வாயை அசைக்க என்னவென்று அவன் அருகில் வந்து கேட்டான் மதன் "சி.. த்…. தா…..ரா…" என்றான் வீரா..
……………………………………………………
" பவி…. பவி"
" சொல்லுங்க "
" இதை பிடி"
" box ல என்ன? "
"நீயே எடுத்து பாரு"
"சரி " என்றவள் boxஐ வாங்கி பிரித்துப் பார்த்தாள்… அதில் நியூ மாடல் போன் இருந்தது..
" போன் நல்லா இருக்கு… ஆமா யாருக்கு போன்?"
"உனக்குதான்"
"எனக்கா? எனக்கு எதுக்கு போன்? "
" உனக்கு யார்கூடவும் பேசணும்னா பேசு… உன்னோட studies கு தேவையான விசயங்களை பாரு"
" ஆனால் நான் யாருக்கு போன் பண்றது? எனக்கு யார் கூடவும் பேச பிடிக்கலை.."
"சரி பவி… நான் வீட்டுக்கு வர லேட்டானா உங்கிட்ட சொல்லலாம்ல… உனக்கு ஏதும் ப்ராப்ளம்னா எங்கிட்ட சொல்ல இது யூஸ்ஸாகும்தானே… வச்சிக்கோ "
" ஆனால்… "
" ஆனாவும் இல்லை ஆவன்னாவும் இல்லை… இதில என்னோட நம்பரை சேவ் பண்ணியிருக்கிறன்… சரியா? "
" சரி… வாங்க புது போன்ல ஒரு செல்ஃபி எடுக்கலாம்"
" ம்" என்றான்.
இருவரும் அருகருகே நிற்று அழகான செல்ஃபி எடுத்தனர்….
அப்போது சதீஷ்ஷூன் போன் அடித்தது..
" சரி நீ போய் படி நான் போன் பேசிட்டு வர்றன்"
" சரி "
……………………………………..
மதன் "இவரு எதுக்கு இப்போ விசாரிக்க சொன்ன பொண்ணோட பேரை சொல்றாரு" என்று யோசிக்கும் போது அந்தப் பக்கம் சதீஷ் போனை எடுத்தான்..
"ஹலோ"
"ஹலோ சதீஷ் நான் மதன் பேசுறன்"
"சொல்லுங்க மதன்… என்ன இந்த நேரத்தில கால் பண்ணியிருக்கிறீங்க? ஏதாவது முக்கியமான விசயமா?"
"ஆமா சதீஷ் வீரா சேருக்கு "
" சேருக்கு என்ன? "
" என்ன பார்க்க வீட்டுக்கு வரேன்னு சொன்னாரு… இங்க பக்கத்தில வரும் போது accident ஆகிடுச்சி…. நான் சேரோட ஹாஸ்பிட்டலுக்கு அவரை கூட்டிட்டு போறன்… நீங்க வந்திடுறீங்களா… சேர் உங்களோட பெயரை சொல்லிட்டு இருக்கிறாரு.. அதுமட்டுமல்ல சித்தாரா னு சொல்லிட்டு இருக்கிறாரு"
" மதன் சேருக்கு பெரிசா ஒண்ணுமில்லைதானே"
" அப்பிடி சொல்ல முடியாது சதீஷ் பார்க்க… ரொம்ப அடிபட்டிருக்கு…"
" கொஞ்சம் சேரை பார்த்துக்கோங்க நான் உடனே வர்றன்…. "
" சரி" என்றவன் போனை அணைத்தான்..
………………………………………………….
" பவி ஒரு முக்கியமான வேலை நான் போயிட்டு வந்திடுறன்.. பார்த்து பத்திரமா இரு சரியா?"
" சரி நீங்களும் கவனமா போயிட்டு வாங்க"
" சரி " என்றவன் வேகமாக பைக்கை எடுத்துக் கொண்டு சித்துவிடம் சென்றான்…
அங்கே வாசலிலே உட்கார்ந்து இருந்தாள் சித்து… இவனைப் பார்த்தும்…எழுந்து நின்றாள்..
"என்ன சித்து வெளியிலே நிற்கிற? "
" ஒண்ணுமில்லை அண்ணா…மனசுக்கு ஒரு மாதிரி படபடப்பா இருக்கு அதுதான் வெளியில இருந்தன்… நீங்க என்ன அண்ணா இந்த நேரத்தில இங்க வந்திருக்கிறீங்க? அவங்க எங்க?"
"சித்து என்கூட வாம்மா"
"எங்க அண்ணா?"
"வாம்மா சொல்றன்"
"அண்ணா அவங்களுக்கு தெரிஞ்சா? "
" சேர் எதுவும் சொல்ல மாட்டாரு மா வா பிளீஸ் டைம் இல்லை… "
" சரி அண்ணா "என்றவள் அவனுடன் சென்றாள்…
………………………………………
மதன் வீராவின் கன்னங்களை தட்டிக்கொண்டே இருந்தான்… வீரா கஸ்ரப்பட்டு கொஞ்சம் பேசும் நிலைக்கு வந்தவன் மதனிடம் "சி… த்… தா… ரா… பற்…றி…. தெ…ரி…ஞ்சிதா…?"
"ஆமா சேர்… நீங்க முதல்ல நல்லபடியா வந்தபிறகு சொல்றன் "
" சொ… ல்..லு"
"சேர்…"
"சொ…ல்லு"
"அவங்களோட அப்பா வித்யாபதி… அம்மா கவிதா… வித்யாபதியோட தம்பிதான் கணபதி… சித்தாரா பிறந்ததும் அவங்க அம்மா இறந்திட்டாங்க… மனைவி இறந்த பிறகு வேற கல்யாணம் பண்ணிக்காமல் மகளுக்காகவே வாழ்ந்தாரு வித்யாபதி… அவரோட இறப்பில எனக்கு சந்தேகமா இருக்கு அதை நான் நல்லா விசாரிச்சிட்டு சொல்றன் சேர்" என்றான்.
" ம்.. " என்ற வீராக்கு தான் வீணாக சித்தாராவை கஸ்ரப்படுத்திவிட்டோம் என்று அந்த நேரத்திலும் குற்ற உணர்வாக இருந்தது…
ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்பே சித்துவும் சதீஷ்ஷூம்
Hospitaluku வந்து விட்டனர்..
" சித்து நீ இங்கேயே இரு " என்றவன் உள்ளே சென்று doctors இடம் சென்று நடந்ததைக் கூறி அனைத்துக்கும் தயாராக இருக்கும்படி சொல்லிவிட்டு சித்துவிடம் வந்தான்……
"அண்ணா இங்க எதுக்கு வந்திருக்கிறம்? யாருக்கு என்னாச்சு? சொல்லுங்க அண்ணா" என்று சதீஷ்ஷூடம் கேட்டுக்கொண்டிருக்கும் போது ஆம்புலன்ஸ் வந்துவிட அதிலிருந்து வீராவை ஒரு gurneyல் வைத்து உள்ளே தூக்கி வந்தனர்… அவர்கள் அருகில் மதன் வந்தான்…
"அண்ணா யாருணா இது இவ்வளவு இரத்தம் பார்க்க பாவமா இருக்கு"
" வீராவுக்கு பெரிய அடி என்றாலும் இந்தளவிற்கு இருக்காது என்று நினைத்திருந்தான் சதீஷ்… ஆனால் வீராவைப் பார்த்த சதீஷ்க்கு அழுகை வந்தது…
" சேர் "என்றபடி அருகில் சென்றான்…
" சேரா… அப்போ…. அப்போ… அவரா? " என்று நினைத்த சித்துவுக்கு நெஞ்சடைத்தது… பதற்றத்துடன் அவனருகில் சென்றாள்…
வீரா ஹாஸ்பிடல் வரும் போது மயங்கி விட்டான்.. சதீஷ் "சேர்… சேர்" என்று தட்டினான்… அதில் சற்று கண்களை திறந்த வீரா சதீஷை பார்க்க முயன்றான்… சதீஷ் தெரியவும் அவனிடம்" சி… த்…தா.." என்று கேட்கும் போதே அருகில் அழுதபடி நின்ற சித்துவை வீராவிடம் காட்டினான்…
அவளது அழும் வழிகளைப் பார்த்தான் வீரா …. இந்த விழிகளில் வரும் அழுகையை பார்க்க அவனால் முடியவில்லை… அவளை பார்த்தபடியே முழுவதுமாக மயக்கத்திற்கு சென்றான் வீரா …..
எமர்ஜென்ஸி அறைக்குள் சென்றதும் இவர்கள் மூவரும் வெளியில் நின்றார்கள்…
"மதன் சேர்க்கு எப்பிடி accident நடந்திச்சி?"
"என்ன பார்க்க வரேன்னு சொன்னாரு… அதனால நான் வீட்ல சேருக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தன்… அப்போ திடீரென ஒரு சத்தம் கேட்டது…. நான் சத்தத்தைக் கேட்டு வெளியே வந்து பார்க்கிறன் ஒரு லாரி வேகமாக போகுது… சேரோட கார் accidentaki கிடந்தது… உடனே அவரை வெளியே எடுத்திட்டம்… அங்க இருந்தவங்க ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ண அது வரவும் சேரை கூட்டிட்டு வந்திட்டன்… போலிஸ்கும் தகவல் சொல்லிட்டேன்..
ஆம்புலன்ஸ்ல வரும் போது சேர் சதீஷ் சித்தாரானு ரெண்டு பெயரையும் தான் சொல்லிட்டு இருந்தாரு" என்றான்..
இவர்கள் பேசுவது எதையும் கேட்காது எமர்ஜென்ஸி அறைக் கதவில் இருந்த சிறிய இடைவெளி மூலம் உள்ளே நடப்பதை பார்த்துக் கொண்டு அழுது கொண்டு இருந்தாள் சித்து…..
" கடவுளே அவரை எப்பிடியாவது காப்பாற்றி கொடுத்திரு" என்று அழுதபடி கடவுளிடம் மானசீகமாக வேண்டிக் கொண்டு நின்றாள் சித்து….
டாக்டர்ஸ் உள்ளே போவதும் வருவதுமாக நின்றனர்.. சிறிது நேரத்தில் ஒரு டாக்டர் வெளியே வந்தார்…
அவரிடம் வந்தவர்கள் " சேருக்கு இப்போ எப்படி இருக்கு? " என்று கேட்டனர்.
"என்ன சொல்றதுனு தெரியல்லை…. அவரோட hospitalla அவருக்கு தேவையான blood இல்லை…. Blood banklaum கேட்டுட்டம் அவங்ககிட்டையும் blood இல்லைனு சொல்லிட்டாங்க…அவரோட நிலமை ரொம்ப மோசமா இருக்கு…. உடனே ஆபரேஷன் பண்ணணும்… பிளட் இல்லாமல் ஆபரேஷன் பண்ண முடியாது…. "
"டாக்டர் என்னோட ரத்தத்தை எவ்வளவு வேணும்னாலும் எடுத்துக்கோங்க…. அவரை எப்படியாவது காப்பாத்துங்க " என்றாள் சித்து…
" அப்பிடி எல்லாம் பண்ண முடியாதுமா… உன்னோட பிளட் அவருக்கு சேருமா னு செக் பண்ண அப்புறம்தான் அவருக்கு கொடுக்க முடியும்"
" அப்போ செக் பண்ணுங்க"
" சரி… நர்ஸ் இவங்களோட பிளட் சேருக்கு சேருமா னு செக் பண்ணுங்க "
" சரி டாக்டர் " என்றவர் சித்துவை அழைத்துச் சென்று பிளட் எடுத்து அதை செக் பண்ணினார்..
சில நிமிடங்களில் டாக்டரிடம் வந்தவர்..
" டாக்டர் இந்த பொண்ணோட பிளட் அவருக்கு பெர்பெக்ட்டா சேருது டாக்டர்"
" தேங்க் காட் … நான் ஆபரேஷனுக்கு ரெடி பண்றன் நீங்க அந்த பொண்ணு கிட்ட பிளட் எடுத்துக்குங்க" என்றவர் உள்ளே சென்றார்…
வீராவுக்கு தேவையான பிளட்டை கொடுத்து விட்டு தள்ளாடியபடி வந்த சித்துவின் அருகில் வந்த சதீஷ் "பார்த்துமா இப்பிடி உட்காரு" என்று அவளை அங்கிருந்த கதிரையில் உட்கார வைத்தான்..
மதன் போய் அவள் குடிப்பதற்கு ஜுஸ் வாங்கி வந்து கொடுத்தான்…
"வேண்டாம் அண்ணா"
"இங்க பாருமா நீ பிளட் கொடுத்திட்டு வந்திருக்க… உனக்கு முடியாம இருக்கு இதை குடி"
"குடி சித்து"
" ம்" என்றவள் அதை வாங்கி குடித்தாள்…..
மூவரும் வீராவுக்கு எதுவும் நடந்திடக் கூடாது என்று கடவுளை வேண்டியபடி இருந்தனர்…..
அதே நேரத்தில் போலிஸ் வந்தனர்… அவர்களிடம் பேசி அனுப்பிவிட்டான் சதீஷ்……
…………………………………………………….
" ஹலோ சேர்"
" சொல்லு அந்த வீராக்கு என்னாச்சி"
" சேர் அந்த வீராவோட காரை அடிச்சி நசுக்கிட்டன் சேர்.. அவன் உயிரோடவே இருக்க மாட்டான்…."
"உண்மையாவா சொல்ற?"
"அட ஆமா சேர் உண்மையாகதான் சொல்றன்… அவன் உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லை"
"சரி நீ கேட்ட பணம் உனக்கு வந்து சேரும்"
"நன்றி சேர்" என்றவன் போனை வைத்துவிட்டான்…
" பேபி" என்று அருகில் நின்ற பிருந்தாவை தூக்கிச் சுற்றினான் கிரண்…
" பேபி ரொம்ப சந்தோசமா இருக்க போல என்னனு சொன்னா நானும் சந்தோசப்படுவன்ல"
" சொல்றன் ஆனால் இப்போ இல்லை வீட்டுக்கு போயிட்டு… வா போகலாம் "
" சொல்லு பேபி "
" வா பேபி… வீட்ல போயிட்டு சொல்றன் " என்று அவளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தான்…
"அப்பா… அம்மா… எங்க இருக்கிறீங்க?"
" வா கிரண் என்ன ரொம்ப சந்தோசமா இருக்க? "
" அம்மா நான் இன்னைக்கு ரொம்ப சந்தோசமா இருக்கிறன் "
" உன்னோட சந்தோசம்தான் எங்களுக்கு முக்கியம் கிரண்"
" சொல்லுங்க பேபி எதுக்கு இப்படி குதிக்கிறீங்க?"
"சொன்னா நீயும் சேர்ந்து குதிப்ப பேபி.. "
" முதல்ல சொல்லுடா"
" நம்மளோட ஆளுங்க அந்த வீராவை அவனோட கார்ல வச்சி அடிச்சித் தூக்கிட்டாங்க…. அவன் உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லைனு சொல்றாங்க "
" உண்மையாவா பேபி"
" ஆமா பேபி"
" அப்போ இனிமேல் நம்மதான் முதலிடம்… சூப்பர் பேபி" என்று குதித்தாள்.
(ஒருவருடைய விபத்தில் அனைவரும் மகிழ்ந்திருக்கின்றனர்… இறைவன் இவர்களுக்கு என்ன வைத்திருக்கிறானோ……..)
…………………………………………………
" என்ன மணி பன்னிரெண்டாயிடுச்சி ஆனால் இன்னும் சதீஷ் வரலை… போன் பண்ணிப் பார்க்கலாம்… " என நினைத்தவள் சதீஷ்க்கு போன் பண்ணினாள்…
பவியிடம் இருந்து போன் வந்ததும் போனை எடுத்துக் கொண்டு சித்துவிடம் இருந்து தள்ளி நின்று பேசினான்..
"ஹலோ"
"பவி சொல்லுமா"
"எங்க இருக்கிறீங்க? மணி பன்னிரெண்டாயிடுச்சி நீங்க ஏன் இன்னும் வரலை" என்று மனைவியைப் போல கேள்வி கேட்டாள்..
"பவி நான் வேலை பார்க்கிற முதலாளிக்கு accident ஆகிடுச்சி அவர hospitalla அட்மிட் பண்ணியிருக்கு… அவருக்கு யாரும் இல்லை…. அதுதான் அவர்கூட நிற்கிறேன்… "
" ஐயையோ accident ஆ? உயிருக்கு ஒரு ஆபத்தும் இல்லைல? "
" ஆபரேஷன் நடந்துக்கிட்டு இருக்கு அது முடிஞ்சதும்தான் என்னனு தெரியும்…"
" அப்பிடியா சரி நீங்க அவர்கூடவே இருந்து பார்துதுக்கங்க சதீஷ்… அவருக்கு எதுவும் நடக்காது…. நான் கடவுள்கிட்ட வேண்டிக்கிறேன்… உதவி ஏதும் தேவையா இருந்தா என்கிட்ட சொல்லுங்க "
" சரி மா நீ பத்திரமா இரு… நான் காலைல வர்றன்"
" சரி"
…………………………………………………….
ஒரு மணி நேரத்தின் பின்பே டாக்டர் வெளியே வந்தார்..
" டாக்டர் சேருக்கு இப்போ எப்படி இருக்கு? "
" ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சிடுச்சி. கொஞ்ச நேரத்தில் அறைக்கு மாத்திடுவாங்க அப்புறம் போய் பார்க்கலாம்…. முக்கியமான ஒரு விசயம் அவருக்கு கால்ல ரொம்ப பெரிய அடிபட்டிருக்கு அதனால அவரால நடக்க முடியாது"
"என்ன டாக்டர் சொல்றீங்க? "
" ஆமா அவரால நடக்க முடியாது…. நீங்கதான் எப்படியாவது அவர்கிட்ட பக்குவமா எடுத்து சொல்லணும்"
" டாக்டர் சேரை பழையபடி நடக்க வைக்க முடியாதா? "
" முடியாது சதீஷ் அதற்கு 80% வாய்ப்பு இல்லை…. நீங்க அவரைப் போய் பாருங்க நான் அப்புறம் வந்து பார்க்கிறன் " என்றுவிட்டு சென்றுவிட்டார்..
வீராவால் நடக்க முடியாது என்பதைக் கேட்ட சதீஷ் மற்றும் சித்துவால் தாங்கிக்க முடியவில்லை….
"இங்க பாருங்க நீங்க ரெண்டு பேரும் இப்படி அழுதுட்டு இருந்தா சேரை யாரு பார்த்துக்கிறது? அவரு எவ்வளவோ பேருக்கு நல்லது பண்ணியிருக்கிறாரு அவரு சீக்கிரமே நடப்பாரு…. சேருக்கு தன்னம்பிக்கை அதிகம் அவரால எதுவும் முடியும்… அவரோட இந்த நிலைக்கு காரணம் யார்னு கண்டுபிடிக்கணும்"
"மதன் சேரை இந்த நிலமைக்கு ஆளாக்கினது நிச்சயமா அந்த தரணிதரனோட வேலையாகத்தான் இருக்கும்"
" எதை வச்சி அப்பிடி சொல்றீங்க? "
" எனக்கு தெரிஞ்சி அவங்கதான் சேரோட ஒரே எதிரி "
" சரி ஆனால் அவங்கதான் இதை பண்ணியிருக்கணும்னு இல்லையே…. வேவேற யாராவது பண்ணி இருந்தா? நான் இதை யாரு பண்ணினாங்கனு கண்டுபிடிக்கிறன் "
" சரி சீக்கிரமா கண்டு பிடிங்க மதன்"
" நிச்சயமா "
அப்போது நர்ஸ் வந்து" நீங்க சேரைப் போய் பார்க்கலாம்" என்றார்.. அவர் சொன்னதும் மதனும் சதீஷ்ஷூம் உள்ளே சென்றனர்..
" சித்து நீ வரலை"
" நீங்க போயிட்டு வாங்க அண்ணா நான் அப்புறம் போய்ப் பார்க்கிறன்"
"சரி" என்றவர்கள் உள்ளே சென்றனர்…
அங்கே உடலெங்கும் கட்டுக்களுடன் படுத்திருந்தான் அனைவரும் அஞ்சி நடுங்கும் வீரா …..
அவனருகில் இவர்கள் செல்லும் போதே வீரா விழித்திருந்தான்..
" சேர் இப்போ எப்பிடி இருக்கு? "
" பரவாயில்லை சதீஷ்… மதன் சரியான நேரத்தில கொண்டு வந்து என்னோட உயிரை காப்பாத்திட்டீங்க…. Thanks"
"சேர் எனக்கு போய் thanks சொல்லிட்டு நீங்க எனக்கு எவ்வளவோ பண்ணியிருக்கிறீங்க… அதுக்கு முன்னாடி இதெல்லாம் பெரிய விசயமே இல்லை…."
"சேர்"
"சொல்லு சதீஷ்"
"சேர் நான் ரொம்ப பயந்திட்டன்…. உங்களுக்கு ஏதாச்சும் நடந்திடுமோனு…" என்றான் கண்களில் கண்ணீருடன்…
" சதீஷ் அதுதான் எனக்கு இல்லைல… சின்னப் பிள்ளை மாதிரி அழுதிட்டு இருக்க.. அழாத. "
" சேர் உங்களை அடிச்ச லாரியை நீங்க பார்த்தீங்களா? அது எதேர்ச்சியா நடந்ததா இல்லை கொலை முயற்சியா சேர்? "
" ஆமா மதன்… என்னை கொலை பண்ணத்தான் வந்தது மதன்… "
" சரி சேர் இதை யாரு பண்ணியிருப்பாங்கனு கண்டுபிடிக்கிறன்"
" சரி மதன் சீக்கிரமா கண்டுபிடிங்க"
" சரி சேர்… வீட்ல அம்மா மட்டும் தனியாக இருக்கிறாங்க நான் போயிட்டு காலைல வர்றன் சேர் "
" சரி… சரி நீங்க போங்க"
சதீஷூடம் சொல்லிவிட்டு வெளியே வந்து சித்துவிடமும் சொல்லிவிட்டு சென்றான் மதன்….
மதன் சென்றதும் சதீஷ் வீராவைப் பார்த்தான்…
" என்ன சதீஷ் "
" சேர் உங்களை நான் சேர் சேர் னு கூப்பிட்டாலும் உங்களை மனசார என்னோட அண்ணாவாகதான் பார்க்கிறன்…. உங்களை அந்த நிலமையில பார்த்ததும் என்னால முடியல சேர்…. இன்னும் அதில இருந்து மீள முடியல" என்று கண்ணீருடன் பேசிய சதீஷை பார்த்த வீரா,
"சதீஷ்." என்று அவனது அடிபடாத வலது கையினைக் கொண்டு அவனை அணைத்துக் கொண்டான்… சதீஷ் சிறுபிள்ளை போல அழுதான்…
" சரி எனக்கு ஒண்ணுமில்லை சதீஷ் நீ அழாத.. " என்று கூறி அவனது கண்களை துடைத்துவிட்டான் வீரா…
" சதீஷ் நீ வீட்டுக்குப் போகல"
"இல்லை சேர் நான் உங்கூடவே இருக்கிறன்…"
"நான் நல்லா இருக்கிறன் சதீஷ்…. நீ வீட்டுக்குப் போயிட்டு காலைல வா"
"சேர்…"
"சொல்றதை கேளு சதீஷ் "
" சரி சேர்.. "
" சதீஷ் வெளியே நிற்கிற மேடமை உள்ளே வரச் சொல்லிட்டு போ"
"சரி சேர் "என்றவன் வெளியே வந்தான்…
"அண்ணா அவங்களுக்கு எப்படி இருக்கு? "
" பரவாயில்லை சித்து… "
" அண்ணா டாக்டர் சொன்னதை சொல்லிட்டீங்களா? "
" இல்லை சித்து…அவரு முதல்ல நல்லா குணமாகட்டும் அப்புறம் சொல்லுவம்"
" சரி அண்ணா "
"சித்து என்னை வீட்டுக்கு போயிட்டு காலைல வரச் சொன்னாரு சேர்... நீ உள்ள போய் பாரு"
"அண்ணா பயமா இருக்கு"
" சித்து நீ சேரை லவ் பண்றதானே"
"ஐயோ அண்ணா அப்பிடி எதுவும் இல்லை"
"நீ சேருக்காக தவிச்ச தவிப்பே சொல்லிடுச்சி நீ சேரை எந்தளவுக்கு விரும்புறனு.... உன்னை சுற்றி என்ன நடக்குதுனு அறியாம உட்கார்ந்து இருந்த நீ....உனக்கு ஒண்ணு தெரியுமா? சேரும் உன்மேல ஏதோ இருக்கு"
" என்ன அண்ணா என்னென்னவோ சொல்றீங்க?"
"சேரை ஆம்புலன்ஸ்ல கூட்டிட்டு வரும் போது என்னோட பேரையும் உன்னோட பேரையும் சொல்லிட்டு இருந்தாருனு மதன் சொன்னாரு.... எனக்கு ஒரு ஐந்தாறு வருஷமா தெரியும் அதனால சொல்லியிருக்கலாம்.... ஆனால் உனக்கு ஒரு.. ஒரு வாரமாதான் தெரியும்.... அப்பிடி இருக்க போது உன்னோட பேரை எதுக்கு சொல்லணும்? நீயே யோசிச்சு பாரு....முதல்ல உள்ள உள்ள போய் சேரைப் பாரு" என்றவன் அவளை உள்ளே அனுப்பிவிட்டு வெளியே வந்தான்...
அங்கே மீடியாக்கள் இருந்தன….
"சேர் வீரா சேருக்கு விபத்தாமே... என்ன நடந்திச்சி?"
"சேர் இது விபத்தா இல்லை கொலை முயற்சியா?"
"வீரா சேர் இப்போ எப்படி இருக்கிறாரு?"
"உயிருக்கு ஆபத்து இல்லையே?" என்று கேள்வி மேல் கேள்வி கேட்டனர்...
"இங்க பாருங்க சேருக்கு விபத்து நடந்திருக்கு.... ரீட்மெட்ரீட்மெண்ட் போயிட்டு இருக்கு.... சேர் இப்போ என்கூட பேசினாரு... சீக்கிரமே உங்களோட பேசுவாரு.. நன்றி" என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான்....
சதீஷ் சொன்னது எல்லா நியூஸ் சேனல்களிலும் ஒலிபரப்பானது.......
……………………………………………………….
இங்கே வீராவின் அறைக்குள் மெதுவாக வந்தாள் சித்து.. வீரா அவள் வருவதை உணர்ந்து கண்களை மூடிக் கொண்டு படுத்திருந்தான்…. ஒருவழியாக அவன் அருகில் வந்தாள்…
அங்கே கண்களை மூடிக் கொண்டு படுத்திருந்தான்...
"ரொம்ப களைப்பாக இருக்கு போல அதுதான் இப்படி படுத்திருக்கிறாரு" என்று நினைத்தவள் வீராவின் தலையை வருடிக் கொடுக்க நினைத்து கையை கொண்டு சென்றாள்.... அவளது கையினை பிடித்தான் வீரா... சித்து பயந்து விட்டாள்...
"ஏய் என்ன பண்ற?"
"ஒண்ணுமில்லை"
"ஏன் கையை கொண்டு வந்த?சொல்லு."
"நீங்க தூங்கிட்டீங்கனு நினைச்சு தலையை தடவிக் கொடுக்க வந்தன்"
"சரி பண்ணு" என்றான்.
"என்ன?"
"நீ என்ன பண்ண வந்தயோ அதை பண்ணு"
"ம்" என்றவள் தலையை வருடிக் கொடுத்தாள்.. " வீராவுக்கு அவனது அம்மா இருக்கும் போது இப்படித்தான் அவன் மடியில் போட்டு வீராவின் தலையை வருடி விடுவார்.... அது வீராவுக்கு மிகவும் பிடித்த ஒன்று….
"ஏய்" என்றான்... இப்போது அவன் அழைத்த ஏய்யில் ஒருவித பாச அழைப்பாக இருந்தது...
சித்து "சொல்லுங்க ஏதும் வேணுமா? உடம்பு வலிக்குதா? டாக்டரை வரச் சொல்லவா? சதீஷ் அண்ணாவை கூப்பிடட்டுமா?" என்று கேட்டாள்…
"அது எதுவும் வேண்டாம்..."
"அப்போ எதுக்கு கூப்டீங்க?"
"சும்மா" என்றவன் பக்கத்தில் இருந்த இருக்கையை காட்டி அதில் இருக்குமாறு கூறினான்... சித்துவும் எதுவும் பேசாது அமர்ந்தாள்...
அப்போதுதான் அவள் கையில் ஒட்டி இருந்த பிளாஸ்டரைப் பார்த்தான் வீரா…
"ஏய் கையில என்ன பிளாஸ்டர்? என்னாச்சி?"
"அது ஒண்ணுமில்லை"
"ஒண்ணுமில்லாமலா பிளாஸ்டர் போட்டிக்கு சொல்லு"
"அதுவந்து உங்களுக்கு பிளட் தேவைன்னு சொன்னாங்க... இங்க பிளட் இல்லைன்னு சொன்னாங்க..... அதனால நான் கொடுத்தேன்.. அதுக்குதான் கைல பிளாஸ்டர் போட்டிருக்கிறாங்க"
"என்னது பிளட் கொடுத்தியா?"
"ஆமா"
"சரி நீ சாப்டியா?"
"இல்லை"
"அறிவில்லை உனக்கு பிளட் கொடுத்திருக்கிறா அப்போ சாப்பிடணும்னு தெரியாது... போ முதல்ல சாப்பிடு" என்றான் ஆனால் சித்து போகாமல் அங்கேயே தலைகுனிந்தபடி நின்றிருந்தாள்...
வீராக்கு புரிந்தது ஒரு நர்ஸை அழைத்து சித்துக்கு சாப்பாடு வாங்கி வருமாறு கூறினான்... அவர் வாங்கி வந்ததும் அவளிடம் சாப்பிடச் சொன்னான்... சித்துவும் எதுவும் பேசாது சாப்பிட்டாள்...
…………………………………………………….
எல்லாவற்றையும் பார்த்து விட்டு வீட்டிற்குச் சென்றான் சதீஷ்…. அவன் வீட்டிற்கு வரும் போது பவி சோபாவில் உட்கார்ந்து இருந்தாள்….
"என்ன பவி மா தூங்கலையா?"
"இல்லை..."
"ஏன் மா படிச்சிட்டு இருந்தியா?"
"ம்... நீங்க குளிச்சிட்டு வாங்க நான் காப்பி போட்டுட்டு வர்றன்"
"சரி" என்றவன் வந்ததும் காப்பியை கொடுத்தாள் பவி….
வாங்கி குடித்த சதீஷ் பவியிடம் கேட்ட கேள்வியில் பவி அதிர்ச்சி அடைந்தாள்.....
சதீஷ் என்ன கேட்டான்????????
மலரும்…………………….